வியாழன், 22 பிப்ரவரி, 2018

தொல்காப்பியம் வெளிப்படுத்தும் தலைவியின் சிறப்பு

 
தொல்காப்பியம் வெளிப்படுத்தும் தலைவியின் சிறப்பு

      தமிழ் மொழியின் அடையாளமாக காலத்தால் முந்தி தோன்றிய நூல்களில்  முழுவதுமாக கிடைக்ககூடிய ஒரே இலக்கண நூல் தொல்காப்பியமாகும். மற்ற எல்லா மொழிகளிலும் தோன்றியுள்ள இலக்கண நூல்களுக்கெல்லாம் இல்லாத சிறப்பு தொல்காப்பித்திற்கு உண்டு. ஏனெனில் பிற மொழிகளெல்லாம் எழுத்துஇ சொல்லுக்கு மட்டும் இலக்கணம் வகுக்க தொல்காப்பியமானது  வாழ்கைக்கு இலக்கணம் கூறுகிறது.   தொல்காப்பியம்  கூறும் தலைவியின் சிறப்பினைக் காண்பதே இவ்வாய்வு
 
தொல்காப்பியம்

தமிழ்  மொழியில் தோன்றிய பழமையான முழுமையான முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியர். இந்நூலை இயற்றியமையால்  தொல்காப்பியன் எனப் பெயர் தோன்றச் செய்தார் என்பதனை  பாயிரம் பின்வருமாறு பகர்கிறது.
                தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி

                                                                                                (தொல். பாயிரம் )
                தொல்காப்பியத்தின் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றி பிற்பட்டதாகாதுஎன  பேரா. வெள்ளைவாரணரும்இ பேரா.சி இலக்குவனாரும் கூறுகிறார். 
                                 
தொல்காப்பியரின் திணை மரபு
                திணை- ஒழுக்கம். அன்பால் ஒத்த தலைவனும் தலைவியும் பாலது (பால்-ஊழ்இ விதி) ஆகையால் ஒன்று கூடுவர். தலைவனும் தலைவியும் உணரும் அகவுணர்வுகள் பிறருக்குப் புலப்படுத்த இயலாத்  தன்மையன இத்தகைய அகவுனர்வுகள் அகப்பாடல்களில் வடிக்கும் பொழுது நுண்ணிய அகப்பொருள் மரபுகள் கடையப்பிடிக்கப்படும்.

                மக்கள் நுதலிய அகனைத் திணையும்

                சுட்டி ஒருவர் பெயர்கொளப் பொறாஅர்

                                                                                                             (தொல். அகத் நூற்பா 57)
என்பது தொல்காப்பியம். இம்மரபுகளின்படி காதல் உணர்வுகள் மனித சமுதாயத்தின் பொதுவான உணர்வுகளாகவே கூறப்படும் தனி மனிதர்களை இனம் காட்டும் பெயர்கள் சுட்டிக் கூறப்படாது
                களவு கற்பு என அகத்திணை இருவகைப்படும் கைக்கிளைஇ பெருந்திணை என  அன்பின் ஐந்திணை முப்பிரிவுகளாக நிகழும் குறிஞ்சிஇ முல்லைஇ மருதம்இ நெய்தல்இ பாலை என்பன ஐந்து  திணைகளாகும்இ ஐந்து திணைகளுக்கு தனித்தனியே நிலங்கள் பகுக்கப்பட்டன.
தலைவியின் இயல்பு
                தொல்காப்பியர் பெண்ணாய் பிறந்தவர்களின் பண்பை

                அச்சமும் நாணும் மடனும் முந்துறதல்

                நிச்சமும் பெண்பாற் குறிய என்ப.”

                                                                                (தொல் களவு 96)
அச்சம் நாணம் மடம் ஆகிய மூன்றும் பெண்டிர்க்கு இன்றியமையாதது. என்கிறார் 
                தலைவி தனது வேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்கும் காலத்துக் கிழத்திக்கு இல்லை அங்கனம் சொல்லாத விடத்தும் புதுக்கலத்தின் கட் பெய்த நீர் போலப் புறம்பொசிந்து காட்டும் உணர்வினையுமுடைத்து அவ்வேட்கை.
                தன்னுறு வேட்கை கிழவன்முற்  கிளத்தல்

                எண்ணுங் காலைத் கிழத்திக் கில்லைப்

                பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

                பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப

                                                                                                                          ( தொல்.களவு 116) 
என்றும்
                பன்னூறு வகையினுந்  தன்வயின் வருஉம்

                நன்னய  மருங்கின் நாட்டம் வேண்டலில்

                துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்

                துணையோர் கரும மாத லான



                                                                (தொல். களவு 121)
பலநூறு வகையானும் தனது ஒழுகலாற்றான் தன்னிடத்தே வரும் நல்ல நயப்பாட்டுப் பகுதிக்கண் நாடுதல் துணையாவாரின் செயல்களாதலின் அத்தது துணையைச் சுட்டிக் கூறுதல் தலைவியின் கடனாகும். கற்புக் காலத்தில் தலைவி
 கொடுப்போ ரின்றியும் கரணம் உண்டே

 புணர்ந்துடன் போகிய காலை யான

                                                                                                                (தொல். கற்பியல் 141)
தலைவியின் தமர் வரைவும் படாதவழி நிகழும் உடன்போக்கின்கண் கொடைக்குரிய மரபினராய்க் கொடுப்போர் இல்லாமலும் கற்பு இல்லாமலும் கற்புக்கடம் புணுதலாகிய  காரணம் நடைபெறுவது உண்டு

தலைவிக்குரிய கூற்று
                ஒல்காப்புகழ் தொல்காப்பியன் தலைவிக் கூற்று நிகழும் இடங்களாக பின்வறுமாறு


மறைந்து அவற் காண்டல்இ தற்காட்டுறுதல்

நிறைந்த காதலில் சொல்லெதிர் மழுங்கல்

வழிப்பாடு மறுத்தல் மறுத்துஎதிர் கோடல்

பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்

கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரின்



இட்டுப்பிரிவு இரங்கினும் அருமை

செய்து அயர்ப்பினும்

வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த்து அழுங்கினும்

நொந்துதொளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும்

பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்

வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும்



கூறிய வாயால் கொள்ளாக் காலையும்

மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு

நினைத்தல் சான்ற அருமை உயிர்த்தலும்

உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல

வேற்றுவரை வரின் அது மாற்றுதற் கண்ணும்



நெறிப்படு நாட்டது நிகழ்வை மறைப்பினும்

பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி

ஒருமைக் கோண்மையின் உறுகுறை தெளிந்தோள்

அருமை சான்ற நாலிரண்டு வகையிற்

பெருமை சான்ற இயல்பின் கண்ணும்

பொய்தலை அடுத்த மடலின் கண்ணும்

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்

வெறியாட்டு இடத்து வெருவன் கண்ணும்

குறியின் ஒப்புமை மருபற் கண்ணும்

வரைவுதலை வரினும் களவறி வறினும்



தமர் தற் காத்த காரண மருங்கினும்

தன்குறி தள்ளிய தெருளாக் காலை

வந்தவன் பெயர்த்த வருங்களம் நோக்கித்

தன்பிழைப் பாகத் தழீஇத் தோறலும்

வருவின்று நிpலைஇய இயற்படு பொருளினும்



பொழுதும் ஆறும் புரைவ தன்மையின்

அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும்

காமம் சிறப்பினும் அவனளி சிறப்பினும்

ஏமம் சான்ற வகைக் கண்ணும்

தன் வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்

அன்ன உளவே ஓரிடத்து ஆன

(தொல். களவு 109)
 என்று உரைக்கிறார். இத்தொல்காப்பிய நூற்பா வாயிலாக தலைவி கூற்று  33   இடங்களில் நிகழும் என்பதையும் தலைவிக்கு 3 இடங்களில்  கூற்று நிகழாது என்பதை தெளிவாக உரைக்கிறது. தன்னைத் தலைவன் காணாமல்இ தான் அவனைக் காணங் காட்சிஇ தன்னை அவன் காணுமாறு நிற்றல் போன்ற இடங்களாகும்.
தலைவி தானே  கூற்று நிகழ்த்துதல் 

                அகத்திணை மாந்தரில் முதன்மையானத் தலைவி சில இடங்களில் தானே கூற்று நிகழ்த்தி தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளாள். இதனை
                வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்

                வரையா நாளிடை வந்தோன் முட்டினும்

                உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும்

                தானே கூறும் காலமும் உளவே

                                                (தொல். களவு 110)

                வரைவை இடையே வைத்து பொருள் ஈட்டுதற் காரணமாகத் தலைவன் பிரிந்து செல்லத் தலைவி பிரிவற்றாமையால் வருந்திய இடத்தும் வரைவை மேற்கொள்ளாது களவு ஒழுக்கத்தில் நிலவும் தலைவன் செவிலி தோழியின் பால் நின்று களவினைக் கூறிய இடத்து தலைவி கூற்று நிகழும்.

 தொகுப்புரை

                பண்டைய தமிழரின் கருவூலமாக விளங்கும் அகவாழ்கையின் மாண்புகள் பற்றியும் தலைவி தலைவனிடத்தில் நிகழ்தும் கூற்றுகளும்இ தோழி இடத்தில் நிகழ்த்தும் கூற்றுகளும்இ செவிலிதாய்யிடத்தில் நிகழ்த்தும் கூற்றுகள் பற்றியும் களவுஇ கற்புகாலத்தில் மற்றவர்களிடத்தில் நிகழ்தும் கூற்றுகளின் தன்மை பற்றியும் மேலும் களவு மற்றும் கற்புக்காலத்தில் தலைவி தன் நெஞ்சோடு கூற்று நிகழ்த்தும் தருணங்களும்; களவு வாழ்கையிலும் கற்பு வாழ்கையிலும் தலைவி கூற்று நிகழ்தா இடங்கள் பற்றி   ஆராயப்பட்டுள்ளது.