புதன், 28 ஏப்ரல், 2021

சிலப்பதிகாரத்தில் பரத்தையர் நிலை

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் 

உருவமற்ற காமனின் பெரும்படையினராகிய இளம் பெண்கள் தமது கண் அம்புகளால் இளைய ஆடவர்களுக்கு எதிராய் போர் தொகுத்து வென்று அவர்கள் புறமுதுகிட்டு ஓடாதபடிக்கு அவர்களைத் தடுத்துத் தம்மிடத்தில் மயக்கச் செய்து, தமது மார்பிலும் தோளிலும் எழுதிய தொய்யில் வரிப் புனைவுகளையெல்லாம் அவர்கள் தம் உடலில் அழுந்துமாறு பதிவு செய்து அவர்களைளப் புதிய கோலத்தோடும் தளர்ந்த நடையோடும் அவர்களைத் தம் இல்லத்திற்கு அனுப்பிவைத்;தார்கள்  பரத்தைகளோ. அவ்வாறு கலந்து இன்பம் துய்த்து வந்த ஆடவர்களை வடமீன் போன்ற கற்பினை உடைய அவர்கள்தம் கற்புடைய மனைவியர் கோபங்கொண்டு ஊடல் கொண்டனர்.  

ஆவ்வேளையில் அவர்கள் வீட்டிற்க்கு விருந்தினர் சிலர் வந்திருந்தார்கள் அதுபோன்று விருந்தினர் வந்துள்ள நிலையிலும் கோபத்தால் சிவந்த குவளை மலர் போன்ற அவர்களின் கண்களிலிருந்து செம்மை மாறவில்லை.  ஆதனால் இருந்த வருத்தமும் கோபமும் தீர மாபெரும் நிலவுலகில் மருந்து ஏதும் இல்லையா? ஏன்று கூறிச் செயலற்று நடுங்கி நின்றார்கள் என்றச் செய்தியினை (சிலம்பு வரிகள் 224-234) குறிப்பிடுகிறது.

“உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த

வடமீன் கற்பின் மனையுறை மகளிர்”

என்றுரைக்கிறார் இளங்கோவடிகள்.

ஆகப்பாடல்களில் காட்டும் திருமணத்தால் புணர்ச்சிச் சுதந்திரம் பெண்களிடமிருந்து பறிக்கப்படுகின்றதே தவிர ஆண்களிடமிருந்து பறிக்கப்படுவதில்லை.  திருமணச் சடங்கின் போது கூட

“கற்பின் வழாஅ நற்பல உதவி

பேற்றோர் பெட்கும் பிணையை அகுக”  (அகம் - 86)

ஏனப் பெண்ணுக்குத்தான் கற்பு வழுவாநிலை வற்புறுத்தப்பபடுகிறதேயன்றி ஆணுக்கன்று

“தமர் நமக்கீந்த தலைநாள் இரவின்

ஊவர் நீங்க கற்பின்எம் உயிருடம்பு”  (அகம் - 136)

ஏன்ற பாடல்வரின் மூலம் தலைவி என்பவள் வெறுப்பு நீங்கிய கற்பினையுடையவள் என்கின்றனர்.

பேண்ணிடம் மட்டும் எதிர்ப்பார்க்கப்படும் இப்பண்பு குறித்து பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவனை அவன் மனைவி கடிந்து கொள்ளும் நேரத்தில் அவள் பேசுவதிலிருந்தும் அறிய முடிகிறது.  புரத்தையிடம் போய் வந்த கணவன் மனைவியை நோக்கி “மாசில் கற்பின் புதல்வன் தாயே” என விளிக்கிறாள்.  அவளே நீ இவ்வாறு பொய்மொழி கூறி எனது முதுமையைக் குறித்து ஏளனம் செய்யாதே என்கிறாள்.

பேண்ணிற்குக் கொடுக்கக்கூடிய உயர்ந்த அடைமொழியான “குற்றமற்ற கற்பினையுடைய என்புதல்வன் தாயே”; தன் மனைவியை மதியாது பரத்தையிடம் சென்று வந்த கணவனின் கூற்றாக அமைவது அக்காலத்தில் பெண்களிடம் எதிர்பார்க்கப்பட்ட பொறையைத்தான்.


“கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் 

துறைகேழ் ஊரன் கொடுமைம நாணி 

நுல்லவன் என்னும் யாமே

ஆல்லன் என்னும் என்தடமென்தோளே”

இதனுள் “நீர் நிலைகளில் கரைகளில் இருக்கும் இழிந்த பேய்க்கரும்பு உயர்ந்த கரும்பு போலவே பூக்கின்ற துறைகளை உடைய ஊரினைச சார்ந்தவனே.

ஆஅப்பேய்க் கரும்பின் தன்மையைப் போலது பரத்தையின பண்பை நீ விரும்பி அவருடன் ஊடல் கொள்வது.  ஊயர்ந்த கரும்பினை போன்றவன் எமது தலைவியின் பண்பு நலன்களாகும்.  (ஐங்குறு - 12)


“ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்துப் 

பொருகளிறு மிதித்த நெரிதான் வேங்கை 

குறவர் மகளிர் கூந்தாற் பெய்ம்மார்

நுpன்றுகொய மலரும் நாடனொடு 

ஓன்றேன் தோழி ஒன்றிசினானே.”

யுhனையால் மிதிப்பட்டு காயும் வேங்கைப் பூக்களைக குரவர் நாடன் நநின்று மரத்திலிருந்த பறிக்கும் தன்மை இழுப்பட்ட போனது.  அது போல பரத்தையின் பண்பை நாடிச் சென்ற தலைவனின் செய்கையால் ஊரார் தூற்றும் அலரால் தலைவியின் மனமானத மிதிப்பட்டு பேனாது என்கிறார்.  (குறுந்தொகை– 208)

“வண்ண வொண்தாழை நுடங்க வாலிழை

ஓண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் 

குண்ணுறுங் குவளை நாறித் 

துண்ணென் றிசினே பெருந்துறைப் புனைவே”

துலைவி புனாலடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனல் எண்ணென்றது என்பதினை இச்செய்திக் குறிப்பிடுகிறது.  (ஐங்குறு– 73)

இதன் மூலம் பரத்தையின் செயல்களில் ஒழுக்கம் சிறப்புற்று இல்லை தலைவியே சிறந்தவள் என தோழி எடுத்துரைக்கிறாள்.


“பரத்தை மறுத்தல் வேண்டியும் கிளவி 

முடத்தகு கிழமை உடைமை யானும் 

ஆன்பிலை கொடிய என்றாலும் உரியள்.”

துலைவன் தலைவியை நீங்கிப் பரத்தையின் பால் நாட முற்படும் போது தலைவனை நோக்கிப் பரத்தையின் பால் செல்லுதலை மறுத்த வகையில் அன்பில்லாமல் கொடியவன் என்று தோழி தலைவனைக் கூறியதாகும்.  (தொல் - 156)

துலைவன் பரத்தையரை நாடிச சென்றப் பிறகும் அவனை தக்கவாறு ஃஆற்றுப்படுத்தி அவனை நல்வழியில் கொண்டு வருவது தலைவிக்கே உரியதாகும் என்கின்றனர்.


“தாய்போல் கழறித் தழீஇக் கோடல்

ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப

கவலொடு மயங்கிய காலை யான.  (தொல் - 171)

தலைவன் பரத்தையரை புனலாடிய பிறகு தலைவியிடம் வருகிறார்.  இச்செய்தியினை அறிந்த தலைவி தலைவனுக்கு வாயில் மறுக்கிறார்.


“பங்கயப் பூம்புன னாடன் பராங்குசன் பாழியொன்னார்

முங்கையர்க் கல்லல்கண் டான்மணி நீர்வையை லார்துறைவா

வேங்கையைத் தீம்புன லாட்டிய வீரம் புலர்த்திவந்து 

முங்கையிற் சீரடி தீண்டிச் செய்யீர் செய்யு மாரருளே”  (இறை. ஆக – 282)

தலைவனே நீ உன் காதலியாகிய காதல் பரத்தையுடன் நீரில் நெருநல் உற்று புனலாட்டிய ஈரம் இன்னும் உலரவில்லை எமக்கு இச்செய்தி அறியாத வண்ணம்; எம்முடன் இணைய வந்துள்ளாய் என தலைவனை சினம் கொண்டு தலைவி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்.

இச்செய்திகளின்  மூலம் சங்க காலத்தில் இருந்த பரத்தையின் நிலைப்பாட்டினை எடுத்துரைக்கின்றன.


ஐமஎழில் உண்கண் மடந்மையொடு வையை 

ஏர்தரு புதுப்புனல் உரிதினின் நுகர்ந்து,

புரத்தை ஆயம் துரப்பவும், ஒல்லாது 

குவ்வை ஆகின்றால், பெரிதே காண்தகத்

தோல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்,


கரும்புஅமல் படப்பை, பெரும்பெயர்க் கள்ளுர்த்,

திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய 

அறினிலாளன்,‘அறியேன்’ என்ற 

திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,

முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி.  (அகம்; -256)


 அழகு விளங்கத் தொன்மையான பூக்கள் நிரம்பிய வயல்களையும், கரும்பு நிறைந்த கழனிகளையும் உடைய சிறப்புமிக்க ஊர் கள்ளுர் அங்கு அழகிய நெற்றியையுடைய இளையவன் ஒருத்தியின் அழகிய நலத்தினைக் களவிலே உண்டவன் ஒருவன்பின் அவளைக் கைவிட்டான் அத்தோடு மட்டுமல்லாது அந்த ஒழுக்கமிலான் “இவளை யான் பார்த்தும் அறியேன்” என்று  நீதியில்லாத கொடிய சூளினையும் ஊர் மன்றத்திலே உரைத்தான் அவையத்தார் சாட்சிகளை வினவி அவன் பொய்யன் என்பதை நன்கு உணர்ந்தான்  தளிர் அடர்ந்த பெருமரத்தின் கிளையில் அவனை இறுகக் கட்டிவைத்து அவன் தலையில் தண்ணீர் ஊற்றித் தீர்ப்பு வழங்கினர் இது இவர்களின் ஒழுக்கக் கோட்பாட்டின் மீறலினை எடுத்துரைக்கிறது.  (அகம் - 256)


“பெருநீர் வையை அவளொடு வூடி,

புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்

குரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் 

புல்மீன் கொள்பவர் முகந்த இப்பி 

நூர்வுரி நறவின் மகிழிநொடைக் கூட்டும்”


“பேர்இசைக் கொற்கைப் பொருநன், வென்வேல்

கடும்பகட்டு மானை நெடுந்தேர்ச் செழியன்,

மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய

மலிதரு கம்பலை போல,

அலர்வூ கின்று, அது பலர்வாய்ப் பட்டே.

தலைவனே நேற்றைய தினம் நீ கூடக்காஞ்சி மரத்;தின் மகரந்தப் பொடியைத் தன் கூந்தலில் அணிந்த செவ்வரி படர்ந்த குளிர்ந்த கண்களை உடைய பரத்தையோடு சோலையி;ல் விளையாடினாய்.  அதோடு பெருகி வரும்.  ஐவகை பேராற்றில் நீர் விளையாட்டு நிகழ்த்தினாய்.  அவளோடு நீ இணையும் போது பூசிக் கொண்ட சந்தனம் இன்னும் உலர்ந்த தன்மையில் இருந்து மாறவில்லை இந்த கோலத்தோட நீ இங்கு வந்து நிற்கிறாய் இச்செயலை எங்களிடம் நீ மறைக்க முயல்கிறத அது முடியாது.

புhண்டியன் நெடுஞ்செழியன் தனது துறைமுகமான கொற்கை துறைமுகத்தில் இருந்துபரதவர் மீனுக்கு அலையினைப் போடுவர் அவ்வேளையில் முத்து சிற்பிகளும் அகப்படும்.  ஆத்தகைய நேரடியான கள்ளுக் கடைக்குச் சென்று விலையாகக் கொடுப்பர்.  

ஆத்தகைய செல்வம் நிறைந்த துறைமுகத்தைக் கொண்டிருக்கும் நெடுஞ்செழியன்.  அவனது போர்படையாக பெரிய யானைகளையும் எயர்ந்த தேர்ப்படைகளையும் கொண்டு இருப்பர்.  இவர் பகைவர் நாட்டுடன் போர்புரிந்து வெற்றிப் பெற்று அப்போது எடுப்பப்பட்ட ஆரவார பேரொலியைக் காட்டிலும் நீ பரத்தையை நாடிச்சென்று அவளுடன் இணைந்து விளையாடியச் செய்தி ஊர் முழுவதும் பல ஆரவார செய்திகளை ஏற்படுத்தியுள்ளது.  

இச்செய்தியானது தலைவிக்கு மிகவும் துன்பத்தையும் மன உடைச்சலையும் தரும் விதத்தில் நீ அவளை ஆட்படுத்தி உள்ளாய் இக்காரணங்களால் தலைவி உனக்கு வாயில் மறுக்கிறாள் என தோழி எடுத்துரைக்கிறார்.  (அகம் - 296)


“பரத்தமை  தாங்கலோ இவன் என வறிதுநீ

புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை

அது புலந்து உறைதல் வல்லியோரே

செய்யோள் நீங்க சில்பதம் கொழித்து 

தாம் அட்டு உண்டு தமியர் ஆகி 

தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப

வைகுநர் ஆகுறல் அறிந்தும்

அறியார் அம்ம அஃது உடலுமோரே!”

மீன்கள் இயங்கும் நீர்நிறைந்த பொய்கையில் ஆம்பல் மலரை முறுக்குண்ட கொம்புகளுடன் மேய்ந்த எருமைக்கடா சகதியில் கிடந்து இரவெல்லாம் தூங்கியது.  குத்தகைய பண்பினைக் கொண்டவன் தலைவன் இருப்பினும் பரத்தையரை நாடிச் செல்லும் தலைவனைத் தலைவி கண்டிக்கக் கூடாது.  ஆப்படிக் கண்டித்தால் என்ன நேரும் என்பதை ஒரு தோழி தலைவனிடம் எச்சரிக்கிறாள்.  துலைவன் நிரந்தரமாகத் தலைவியை விட்டுப்பிரிய தலைவி தம்மிடமிருந்து சிறிதளவு வரிசியைப் புடைத்துத் தாமே சமைத்துண்டு தனியாளாய் ஆகிமெலிந்து வருந்தும் நிலை ஏற்படும்.  ஆப்போது தேன்போலும் இனிய மொழியினையுடைய குழந்தைகள் பால் இன்றி வற்றிய முலையினைச் சுவைத்துப் பார்த்து ஏக்கம் கொள்வர் என கூறிகின்றனர்.  (அகம் - 316)


“மதிஏர் ஒள்ஙதல் வயங்குஇழை ஒருத்தி

ஆகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த 

ஆய்இதழ் மழைக்கண் நோய்உற நோக்கித்,

துண்நறுங் கமழ்தார் பரீஇயினன், நும்யொடு

ஊடினள் - சிறுதுணி செய்துஎம்

முணல்மலி மறுகன் இறந்திசி னோனே.”

மதிபோன்ற ஒளிபொருந்திய நெற்றியையும் அணிகலன் களையும் உடைய உனக்குரிய பரத்தை, உன்னை இகழ்ந்து சொல்லி , இதழ் போன்று குளிர்ந்த கண்ணால் வருத்தம் தோன்றப் பார்த்து உன் மார்பில் அணிந்த மாலையை அறுத்து உன்னோடு ஊடல் கொண்டு சண்டையிட்ட எமது மணல் நிறைந்த வீதியின் வழி சென்றால் அல்லவா? இது தான் உம்முடைய தலைமைப் பண்போ? ஏம்மைப் போற்றாது அகன்றது நீ செல்க.  (அகம்-306)


“ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்,

பேர் அமர் மழைக்கண் பெருந்தோள் சிறுநுதல்,

நுல்லள் அம்ம, குறுமகள் - செல்வர்

கடுந்தேர் குழித்த ஞௌ;ளல் ஆங்கண்,

நெடுங்கொடி நுடங்கும் மட்ட வாயில்,


“இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன,

நுலம்பா ராட்டி நடைஎழில் பொலிந்து,

வுpழவில் செலீஇயர் வேண்டும் - வென்வேல் 

இழைஅணி யானைச் சோழர் மறவன்.”

அழகு பெற்ற தேமலையும், குளிர்ச்சிப் பொருந்திய கண்களையும், சிறிய நெற்றியையும், பெரிய தோளையும், உடைய இளைய பரத்தை அழகில் சிறந்தவள்.  வேற்றி தரும் வேலினையும், அணிபூண்ட யானைகளையும், உடைய சோழ மன்னனின் படைத்தலைவனும் ஒடக்கோலால் அளந்தறிய முடியாத, காவிரியினைச் சார்ந்த தோட்டங்களையும், மதகுகளையும் உடைய போர் என்னும் ஊரின் தலைவனாகிய பழையன் என்பவன்.   புபைவர் மீது செலுத்திய வேல் தப்பாது போல, அப்பரத்தையால் பார்க்கப் பெற்ற ஆடவர் எவரும் தப்பமாட்டார்.  (அகம் - 326)

“நரைமூ தாளர் கைபிணி விடுத்து

நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் 

பொலன்பூண் எல்வி நீழல் அன்ன,

நலம்பெறு பணைத்தோள் நல்நுதல் அரிவையொடு,


மணம்கமழ் தண்பொழில். ஆல்கி, நெருநை

நீதற் பிழைத்தமை அறிந்து

கலழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே.

மருத நிலத்தைச் சேர்ந்த முதியவர் சண்டை செய்கின்றவர்களின் கைகளைப் பிடித்து விலக்கி கள்ளின் தெளிவைப் பரதவர்க்கு அளித்து அவரை அமைதிப் படுத்தினார்.  போன் அணிகள் அணிந்த எவ்வி என்பவனது நீழல் என்னும் வளமான ஊரினைப் போன்ற அழகுடைய மூங்கில் போன்ற தோரும் நல்ல நெற்றியும் உடைய பரத்தையுடன் மணம் கமழும் சோலையில் தங்கி நேற்று நீ செய்ததை உணர்ந்து எம் தெய்வக் கற்பினாவாகிய தலைவி அழுத கண்ணுடன் உள்ளாள்.  இது முறையாகுமா?  (அகம் - 366)


அடிக்குறிப்புகள்

1. திருக்குறள் பக்-234 குறள் எண் - 1141, 1145, 1147

2. சிலப்பதிகாரம் பக்-50 பாடல் வரிகள் - 224-234

3. அகநானூறு பக்-114 பாடல் - 86, 136

4. ஐங்குறுநூறு பக்-34 பாடல் - 12

5. குறுநதொகை பக்-249 பாடல் - 208

6. ஐங்குறுநூறு பக்-101 பாடல் - 73

7. தோல்காப்பியம் பக்-202 பாடல் - 282

8. மேலது பக்-210 பாடல் - 171


தமிழரின் மரபில் அகத்தினை வாயிலர் மரபுகள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


தமிழ்மொழியின் சிறப்புகளில் முதன்மையானதாக சுட்டபடுவது இல்வாழ்க்கை எனும் அகத்திணை மரபு, சங்க இலக்கியத்தில் 1800 பாடல்களுக்கு மேல் அகத்திணை தான், தலைவன் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டபின், தலைவியை சாமளிக்கும் நிகழ்வே வாயில். இங்கு வாயில்களின் இலக்கணங்களை காண்போம்.

வாயில் இலக்கணமாக தொல்காப்பியர்,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்களென்ப.” ஆகிய 12 பேரும் வாயில்கள் என்று சொல்லுவார்.  அகவொழுக்கம் நிகழ்தற்கு வாயில்கள் போன்று விளங்குவதால் வாயில்கள் எனப்பட்டனர்.

“எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சி பொருளவென்ப”

மேற்சொன்ன 12 வாயில்களும் தலைவனும் தலைவியும் இன்பமாக வாழும் வாழ்க்கைக்கு உதவுவர்.  புதல்வனும் தலைவனுக்கு வாயிலாவதைக் காட்டும் பாடலும் பழந்தமிழில் உள்ளது. 

வாயில் மறுத்தல் துறை

வாயில் மறுத்தலின் துறையாக தொல்காப்பியர் நான்கினை சுட்டுகிறார். அவை 

1. வாயில் வேண்டல்

2. வாயில் மறுத்தல்

3. வாயில் நேர்வித்தல் 

4. வாயில் நேர்தல் எனும் நான்கும் அகத்துiறைகளை உள்ளடக்கியது.

பரத்தையிற் பிரிவு  பற்றி கூறும் நம்பியகப் பொருள்,

“வாயில் வேண்டல் வாயில் மறுத்தல் 

வாயில் வேண்டல் வாயில் நேர்தல்என் 

றாய பரத்தையின் அகற்சிசால் வகைத்தே”

என நான்கு வகையை பற்றி கூறுகின்றது.  எனவே இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என அறியலாம்.

வாயில் மறுக்கும் சூழல்

வாயில் மறுக்கும் சூழலில் பெரிதும் பங்கு கொள்பவர்கள் தோழியே, அவள் தலைவன் தலைவி இருவரின் களவு கற்பு ஆகிய இரு காலகட்டத்திலும் உடனிருந்து தலைவனின் தீய செயலை இடித்துரைக்கக் கொண்டே இருப்பாள்.  துலைவியின் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டவளாய், தலைவனை உரிமையயோடு கண்டித்தாள்.  துலைவன் பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கிப் பின்னர் தலைவியை காண வரும்போது அவன் உள்ளுர அஞ்சினான்.  இதனால் வீட்டினுள் புக அஞ்சினான்.  ஆகத்தினுள் புகுவதற்குத் தலைவன் பாணனை முதலில் வாயில் வேண்டும் பொருட்டு அனுப்பினான்.

சில சமயம் தலைவனே வாயில் வேண்டுவது பொல பாடல்களும் உள்ளன.  அப்படி வாயில் வேண்டும் போது தலைவியின் சார்பாகத் தோழி வாயில் மறுப்பாள்.

வாயில் மறுத்தலில் தோழி

களவுக் காலத்தில் தோழி பெரும்பான்மையான சந்தர்பங்களில் தலைவன் தலைவியைக் காண வரும்போது திருமணம் செய்து கொண்டு இந்த ஊர் தூற்றுவதை நீக்கிப் பின் தலைவியை அழைத்து செல்லுமாறு கூறுவாள்.  கற்புக் காலத்தில் தலைவன் குறிப்பறிந்து வாயில் மறுப்பதுண்டு தலைவனுக்கு தலைவி வாயில் மறுப்பதும் உண்டு.  தலைவன் தலைவியை இணைத்து வைப்பது தோழி நோக்கமாக இருந்தது.  களவுக் காலத்தில் தலைவன் தலைவியிடம் கொண்ட அன்பு கற்புக் காலத்தில் குறைகிறது.  இதனை உரைத்தும் தோழி வாயில் மறுக்கிறாள்.

தலைவனின் கொடுமை கூறல்

“பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி

மடத்தகு கிழமையுடைமையும்

அன்பலை கொடிய என்றலு முரியன்” (தொல்)

என்ற தொல்காப்பிய நூற்பாவில் பரத்தையொழுக்கத்தைப் போக்குதல்  வேண்டியும் தலைவன் கூறியதை உண்மை என கொள்ளும் மடைமைக் கணம்; கொண்ட தலைவிக்குத் தன் தோழி தலைவனனின் கொடுமையை எடுத்துக் கூறுவாள் எனக்கிறார்;.

தலைவன் தான் பரத்தையிடம் இருந்து வந்ததை தலைவியிடம் மறுக்கிறான்.  தலைவியும் தன் பேதமையால் அதனை அறியாது கற்பு வாழ்வின் தொடக்கத்தில் தலைவன் கூறுவதை நம்பிவிடுகிறாள்.  பின் தலைவன் பரத்தையோடு புனலாடியதை தோழி பார்த்து தலைவியிடம் கூற தலைவி தலைவனுடன் ஊடல் கொள்கிறான்.

தலைவியின் இல்லற மாண்பு

தலைமகன் தலைவியை பிரிந்து பரத்தையுடன் தங்கி வரும்போது அவனுக்கு தோழி தலைவியின் இல்லறமாண்புகளையெல்லாம் அவனிடம் எடுத்துக் கூறி அதாவது அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், அரசர் முதலானாரே வழிபடுக என கணவன் கற்பித்தவற்றால் அவளும் அதன்படியே வழிபடுகின்றாள்.  இல்லத்தில் இருப்பவர்களுக்கும், உறவினர்களாக வருபவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதும் இரவலர்க்கு பொன் முதலான கொடுத்தும் அறச்செயல்களுடன் இருக்கும் தலைவியை விடுத்து பரத்தையை நாடிச் செல்கின்றாலே என தோழி கடிந்துரைக்கிறாள்.

வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்

1. அலராதல்

2. புனலாடல் 

3. பரத்தமை ஒழுக்கம்

4. நலனழிதல் 

5. ஈன்;றணிமை

6. முதுமை  

7. சூழ் வாய்த்தமை

ஆகிய காரணங்களை கூறி வாயில் மறுக்கின்றனர்.

சங்க கால வாயில்கள்

சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களின் அகத்திணைச் சார்ந்த பாடல்களில் தலைமக்களின் வாழ்வியல் சூழலை மையமிட்ட சில உவமைகள் காணக்கிடக்கின்றன. 

அது தலைமக்களது களவு, கற்பு  ஆகிய இரு நிலைகளில் ஏற்படும் நிகழ்வுகளை மையமிட்டதாக அமைந்துள்ளன.  அவை

1. பொது நிலை உவமை 

2. பிரிவு வழி உவமை

பரத்தையர் பிரிவால் தலைவி ஊகடல் கொண்டிருப்பதை அறிந்த தலைவன் அவளது நிலையை அறிய தூதுவரை அனுப்புகிறான்.  தலைவனுகாக வாயில் வேண்டி வந்தோரிடம் கடுகைப் போன்ற சிறிய பூக்களை உடைய ஞாழல் மரம் மருத மரத்தின் மலர்களோடு சேர்ந்து நீர்த்துறையை அழகு செய்தது அதுபோல் தலைவனும் பலரும் காணுமாறு நீராடு துறையில் பரத்தையருடன் சேர்ந்து ஆடினான் என்பதைத் தலைவி நயம்படக்கூறி வாயில் மறுப்பதைக் கூறியுள்ளனர்.

“ஐயயவி யன்ன சிறுவீ ஞாழல்

செய்வீ மருதின் செம்மலோடு தாஅய்த்

துறையணிந் தன்றவ ருரே”

என்ற பாடல் வரிகள் மூலம் குறிப்பிடப்படுகின்றன.

சங்க காலத்தில் தலைவன், தலைவியை விட்டு பிரிந்து சென்று பரத்தையுடன் இருப்பான் இந்த நிலையினை வெளிப்படையாக கூறாமல் கருப்பொருள்களில் மூலம் கூறுவர்.

தலைவன் தலைவி காதல் வாழ்க்கையை உள்ளுறை உவமம் மூலம் அமைத்துக் கூறப்படும். 

“உள்ளுறை தெய்வம் ஒழிந்தனை நிலன எனத்

கொள்ளும் என்ப குறியறிந்தோரே”  (தொ.அ. 993)

என்ற நூற்பாவில் மூலம் உள்ளுறை உவமம் கருப்பொருளில் தெய்வம் நீங்கலாக ஏனைய பொருள்களில் வரும் என புலனாகிறது.

“உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் 

புள்ளொடும் விலங்கோடும் பிறவோடும் புலப்படும்”   (ந.அ.ஒ.238) 

“மாலை வெண்காழ் காவலர் வீச 

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் 

புள்பல நாடன் மடமகள் 

நலங்கிளர் பணைத்தோள் விலக்கின செலவே”  (ஐங்குறு. 421)

என்ற பாடலின் மூலம் தடி வீழ்ந்த ஒலியை குறுமுயல் இரியல் போனாற் போன்று தலைவியைப் பிரிவால் வருத்தப்பாடுவாள் என்பது உள்ளுறையாக இதில் அமைந்துள்ளது..  சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் அளவுக்கதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.

பரத்தையர் ஒழுக்கம் நிலவிய காலத்தில் அதை வெறுத்துப் பாடிய மன்னர்களும் இருந்தனர்.

“தீதில் நெஞ்சத்து காதல் கொள்ளாய்

புல்லிருங் கூந்தல் மகளி;ர் 

ஓல்லா முயக்கிடைக் குழைக என்தாரே”

எனும் பாடல் வரிகளின் மூலம் நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் கூறும் வஞ்சினப்பாட்டில் பரத்தையர் உறவை இழிவானது  என்று சுட்டுகிறான்.  நெஞ்சில் அன்பில்லாமல்  தழுவும் பரத்தையைத் தொழுது இழிவு என்று கருதியிருக்கிறார்.

ஓளவையின் தனிமனித அறம்

சங்க காலத்திலேயே ஒரு தனிமனிதனின் என்பவன் எவ்வாறு வாழவேண்டும் அவன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கூறுகள் யாவற்றையும் ஒரே வரியில் ஒளவைப் பிராட்டியால் கூறப்பட்டுள்ளது.

‘சீர்மை  மறவேல்’ அனைத்துவிதச் சிறப்புகளையும் தரும் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் மறத்தல் கூடாது.  ஓளவையாரின் ஒழுக்கம் என்பது ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாடே’ ஆகும்.  ஆதனை மறுத்து பரத்தையரை நாடிச் செல்வதால் ஒழுக்கத்திற்கு உரிய நிலைப்பாட்டில் இருந்து மனிதன் தவறு புரியும் நிலையான தீயநிலைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்வதாகும் என்கிறார்.  இது தனிமனித அறத்தின் ஓழுக்க நிலையினை எடுத்துரைக்கிறது.

முடிவுரை

தமிழர்களின் அக வாழ்க்கை முறை பெரும் பிரமிப்பை ஏற்படுத்தவல்லது, தலைவன் திருமனத்திற்கு பிறகு பரத்தை பெண்களை நாடிச்செல்கின்றான், மீண்டுவரும்போது தலைவி வாயில் மறுக்கிறாள். தலைவன், தலைவியிடையே ஏற்படும் சிறு ஊடல்களின் வெளிப்பாடாகவே வாயில் மறுத்தல், நிகழ்வுகள் நடைப்பெறுகிறது. இங்கு தலைவன், தலைவியிடையே காணப்படும் கோபம், வருத்தம், கலந்த அன்பினை காணமுடிகிறது. 

 

  


சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கும் ஊரும்; மக்களும்

  ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


தமிழ் இலக்ண மரபில் நிலங்களை ஐந்தாக பிரித்து முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை  என்றனர். நிலம் சார்ந்த இராயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஊர்களின் வளங்களையும்  சிறப்புகளையும்; சிறுபாணாற்றுபடை  வழி நின்று காண்போம்


எயில் பட்டணத்தின் சிறப்பு


ஒய்மாண் நாடு துறைமுக நகரம் ஆகும். இது மதிலோடு பெயர் பெற்ற பட்டினம் என்பதை,


“மணிநீர் வைப்பு மதிலோடு பெயரிய

பணிநீர்ப் படுவின், பட்டினம் படரின்”

(151 – 152)


என்ற சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இதனை மதிற்பட்டினம், சோப்பட்டினம், எயிற்பட்டினம் என்றே தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்தைப் பற்ற எழுதியுள்ள பெரிபுஸ் எனும் அறிஞர் எயிற்பட்டினத்தைச் சேர்ப்பட்டினம் என்றும் துறைமுக நகரம் என்றும் கூறியுள்ளார்.


முதற்குலொத்துங்கனது 35 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று “ ஒய்மானாட்டுப் பட்டின நாட்டுப் பிரமதேயான எயிற்ப்பட்டினம் சபையார் பூமிசுவரர் கோவிலுக்கு ஒரு நந்தவனம் வைக்கவும் வழிபாட்டுக்கும் விளக்குகள் எரிக்கவும் குறிப்பிட்ட ஒரு நிலத்தை விற்றனர்” என்னும் செய்தியைத் தெரிவிக்கிறது.


“கழிசூழ்ந்த ஊர்களையுடைய பட்டினம்” என்ற சிறுபாணன் எயிற்பட்டினத்தைத் துறைமுக நகரம் என்று கூறவில்லை ஆயின், “எயிற்பட்டினத்தில் நுளைமகள் (பரநவர் மகள்) ஆடுப்பெரிக்கக் கடல் வழியே வந்த மணம் மிகுந்த கட்டைகளைப் பயன்படுத்துவான்” என்று கூறியுள்ளான்.


ஓங்கு நிலை ஒட்டகம் துயில்மடித் தன்ன

வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகு”

(சிறு – 155 – 156)


“தரை கொணர்ந்த விரைமாவிற்கு” என்பதற்குத் “திரை கொண்டு வந்த மணத்தையுடைய அகிலாகியவிறகால் எரித்தாள்” என்று நச்சினார்க்கினியர் உரை 

கூறியுள்ளார்.






வேலூரின் சிறப்பு


வேலூர் என்பது சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் இணை;டாவது ஊர் ஆகும். அது எயிற்பட்டினத்தழிலிருந்து கிடங்கிலுக்குச் செல்லும் வழியில் முல்லை நிலத்திற்கு அப்பால் அமைந்ததாக சிறுபாணாற்றுப்படை பதிவு செய்கிறது. இவ்வூரில் உள்ள அகழியில் பூத்திருந்த பூவினை எடுத்து தன் பகைவர்களை எதிர்த்து வெற்றியடைய வேண்டும் என்று நல்லியக்கோடன் முரகளை வணங்கியதாக செய்தி அமைந்து வருகின்றது. அதனை,


“திறல் வேல் நுதியின் பூத்த கேனி

விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்

உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை”

சிறு (172 – 174)


என்ற அடிகளால் இதனை அறியலாம். இவ்வூரில் வேட்டுவரும் வாழ்ந்துள்ளனர் “நல்லியக்கோடன் தன் பகைவருக்கு அஞ்சி முரகப் பெருமானை வழிபட்டான். அவ்விடத்தில் ஒரு கேணி இருந்தது. அக்கேணியில் பூத்த மலர் ஒன்றியைப் பறித்துப் பகைவரை வெல்லும்படி முருகன் நல்லியக்கோடனது கனவில் கூறினான். நல்லியக்கோடன் அக்கோணியிலிருந்நு எடுத்த மலர் வேலாக மாறியது. அவன் அதனைக்கொண்டு பகைவரை வென்றான் என்பதும் வேல் தோன்றிய ஊர், வேலூர் என்பது நச்சினார்க்கினியர் கூறும் கருத்தாகும். இச்செய்தி சிறுபாணாற்றுப்படையில், வேட்டுவர் மக்களின் பாழ்வினை அறியலாம்.


வேலூர் மரக்காணத்திற்குத் தென்மேநற்கில் இருக்கின்றது, இஃது “உப்பு வேலூர்” எனப்படுகிறது. வேலூரில் “திருஅக்கீசுவரம்” என்னும் சிவன் கோவிலும், “திருவீற்றிருந்த பெருமானின் கோவிலும்” சமணர் கோவில் ஒன்றும் உள்ளன. இம்மூன்றிலும் சோழர் விசயநகர அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இருபத்தைந்து உள்ளன என்பதை அறியமுடிகிறது.


சிவன் கோவில் கல்வெட்டு ஒன்று முதலாம் இராசேந்திரன் காலத்தது. இதில் வேலூரை ஒய்மானாட்டு மணிநாட்டு வேலூர் என்று குறித்துள்ளது. சோழர் காலத்தில் அதாவது கி.பி. 10 – 13 ஆம் நூற்றாண்டுகளில் வேலூரை அடுத்து காடுகள் இருந்தன என்றும், அக்காடுகளில் வேட்டையாடப்பட்டது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.


பவளத்தைக் கோர்த்து வைத்ததுபோல் அவரை பூக்களை மலரச் செய்கின்றது. மயில்களின் கழுத்தைப் போன்று நீல நிறத்தில் காயாம் பூக்கள் மலர்ந்துள்ளன. வளமான கொடியினை உடைய முசுண்டை சிறு சிறு பெட்டிகள் போன்று கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கின்றன. காந்தள் மலர்கள் செழிப்புற்றுக் கைவிரல்கள் போல் பூத்திருக்கின்றது.


கொல்லை நிலத்தில் கிடந்த பாதைகளில் இந்திரகோபப் பூச்சிகள் ஊறித்திரிகின்றது. முல்லைக் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது முல்லை நில ஒழுகாலாறுகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய காட்டிடில் மலையின் பின் சூரியன் மறைந்து அதன் ஒளியும் மங்கிப்போன மாலை வேளையை நோக்கி வேலின் நுனிபோன்று அரும்பியிருக்கும்.


கேணிகளை உடைய வேலினால் வெற்றிமிகும் வேலூரைச் சென்று அடைந்தீர்கள் எனில் அங்கு வாழ்வோர்கள் வருத்தம் கொள்கின்றனர். வெப்பம் மிகுந்த குடிசையில் வாழும் எயினர் குலத்தில் பிறந்த பெண்கள் சமைத்த இனிமை பொருந்திய புளிக்கறி இட்ட சோற்றினை இறைச்சியுடன் பசி நீங்கும் அளவு நிறையப் பெறுவீர்கள் என பரிசில் பெற்றப்பாணன் பரிசு பெறவிறுக்கும் மற்றொரு பாணனிடம் வேலூhர் நிலவும் வறுமைப்பற்றி கூறினார்.


ஆமூரின் சிறப்பு


ஆமூர் என்னும் ஊரானது மருத நிலத்தின் நடுவில் அமைந்திருந்தது. அவ்வூரில் அந்தணர் மிகுதியாய் இருந்தனர், அவ்வூரைச் சுற்றிலும் மதில் இருந்தது. அரிய காவலை உடையது. மதிலைச் சுற்றிலும் அகிழ இருந்தது.


வேலூரிலிருந்து கிடங்கிலை நோக்கிச் செல்லும் வழியில் ஆமூர் இருப்பதாகச் சிறுபாணன் குறித்துள்ளான். ஆயினும் ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர் திண்டிவனம் வட்டத்தில் இல்லை எனினும் வேலூருக்கு வடமேற்கில் ஏற்த்தாழ நான்கரைக்கால் தொலைவில் கொண்டாமூர் என்றும், அதற்கு வடமேற்கில் மூன்றரைக்கல் தொலைவில் ‘சிற்றாமூர்’ என்றும் அதற்கு வடமேற்கில் மூன்று கல் தொலைவில் ‘நல்லாமூர் என்றும் மூன்று ஊர்கள் அமைந்துள்ளன.


நல்லாமூருக்குச் சிறிது வடகிழக்கில் ஆறு கல் தொலைவில் கிடங்கில் அமைந்துள்ளதாகவும், ‘ஆமூர்’ என்னும் பெயருடன் ஊர் இல்லாமையாலும் சிறுபாணன் கூறியுள்ளபடி இந்த நல்லமூரே கிடங்குலக்கு அண்மையில் இருப்பதாலும். அப்பாணன் கூற்றுப்படி வேலூருக்கும் இந்த நல்லா மூருக்கும் இடையில் மருதவளம் காணப்படுதலாலும் இந்த நல்லாமூரே சங்ககால ஆமூராய் இருந்திருக்கும் என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.


மணமுல்ல மலர்களை மாலை கட்டினால் போல, நாள்தோறும் மலரும் மரம் காஞ்சி, அக்காஞ்சி மரம் குறகிய அடியினையும் பல கிளைகளையும் உடையது. அம்மரத்தின் பெரிய கொம்பில் பொன் போன்ற நிறமுடைய வாயினையும், நீலமணி போன்ற நிறத்தினையும் உடைய சிச்சிலிப் பறவை (மீன்கொத்திப்பறவை) ஊறி, அருகிலுள்ள நிலைத்தற்கரிய ஆழமான குளத்தில் திரியும் மீன்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்தது.


வாய்ப்பு வந்த போது புலால் நாற்றத்தையுடைய கயல்மீனைக் கவ்விச்சென்று. தண்ணீரில் பறவை பாய்ந்த போது அதன் கூர்மையான நகங்கள் குளத்திலிருந்து பசிய தாமரை இலையைக் கிழித்து, வகுப்படுத்தின. முன் தண்டிளையுடைய தாமரையில் முழு நிலாப் போன்ற வெண்தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அதிலுள்ள தேனை உண்ண நீலநிறமுள்ள சிவந்த கண்களையுடைய ஆண்வண்டுகள் கூட்டமாகக் குவிந்திருந்தன அந்தோற்றம் மதியைச் சேர்ந்த கரும்பாம்பினைப் போன்று காட்சியளித்தது. அத்தகைய நீர் வளமுடைய மருத நிலம்.


ஊடலும் கூடலும் நிகழ்கின்ற மருத ஒழுக்கமுடைய அந்நிலத்தில் குளிர்ச்சி பொருந்திய வயல்கள் இருந்தன. அரிய காவலை உடைய பெரிய நகராக ஆமூர் இருந்தது. அதைச்சுற்றிலும் குளிர்ச்சியுடைய நீர்நிலை கொண்ட அகழி இருந்தது செந்தண்மை பூண்ட அந்தணர் சுரங்காத நகரம் ஆமூர். வெற்றிப் பெருமிதததோடு நடக்கும் வலிமை பொருந்திய எருதுகள் பல இருந்தன. அவ்வெருதுகளைக் கொண்ட ஆற்றலுடைய உழவர் பலர் இருந்தனர்.


அவ்வுழவரின் தங்கை, பிடிக்கை போன்ற தலைப்பின்னலை யுடையவள் அப்பின்னல் அலள் முதகை மறைத்திருந்தது. அவள் கையில் வளையல் அணிந்திருந்தாள் அவள் தன் பிள்ளைகளைக் கொண்டு நும் போன்றறோரைத் தடுத்து வீட்டிற்கு அழைத்து, கரிய வயிரம் பாய்ந்த உலக்கைப் பூண் தேயக்குற்றிய அரிசியால் அமைந்த வெண்சோற்றை பிளவுபட்டநண்டு, (பீர்க்கங்காய்) கலவையுடன் (கறியுடன்) தருவாள், அதை நீங்கள் பெறுவீர் என்றாள்.


நல்லியக்கோடனின் ஊர் அருகில் உள்ளது


எரிமறிந் தன்ன நாவின் இலங்குஎயிற்று

கருமறிக் காதின் கவைஅடிப் பேய்மகள்

(196 – 202)


தீப்பிழம்பு சாய்ந்தால் ஒத்த நாவினையும் விளங்குகின்ற பற்களையும், வெள்ளாட்டுக் குட்டிகளைக் காதணியாக அணிந்துள்ள காதுகளையும், பிளவு பெற்ற கால்களையும் உடைய பேய்மகள், நிணத்தை உண்டு சிரித்த தோற்றமளித்தது. போர்க்களத்தில் யானைகள் கிளப்பிய புழுதியை யானைகளின் மதகீர் அருவிகள் அவித்தன அதனால் புழுதியடங்கிய தெருக்களையுடையதாயிருந்தது அவன் திருவிழாக்கள் எடுக்கும் ஊர், அது தூரத்தில் இல்லை அருகில்தான் உள்ளது.


அரண்மனைச் சிறப்பு


பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்

அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்

(203 – 206)


என்ற கிணைப் பொருநர்க்கு ஆயினும், அறிவுடையோர்க்கு ஆயினும் அரிய மறைகளைக் கற்றுணந்த நாவினையுடைய அந்தணர்க்கு ஆயினும் அடையாது திறந்தே இருக்கும் அவன் அரண்மனைக் கதவுகள் அவன் அரண்மனை வாயில் கடவுளர் வீற்றிருக்கும் மேரு மலையின் கண் போன்றது ஏனையோர், புகுதற்கரிய வாயில். அங்கு சென்றால் பாணர்களின் வறுமை தீர வழிபிறக்கும்.


சாண்றோர் ஏத்துக் பண்புகள்


செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்

இண்முகம் உடைமையும் இனியன் ஆதலும்


பிறர் தனக்குச் செய்த உதவியைப் போற்றி அவர்க்கு நண்மை செய்தல், அறிவும் ஒழுக்கமும் இல்லாத மாக்கள் இனம் தனக்கு இன்மை நோக்கினார்க்கு எல்லாக் காலத்தும் இனிய முகமுடையவனாய் இருத்தல் அகமும் புறமும் இனியனாக இருத்தல் ஆகிய பண்புகளை எப்போதும் நெருங்கி இருக்கின்ற சிறப்பினையுடைய அவனை அறிந்தோர் புகழ்வர்.


மறவர் ஏத்தும் மாண்புகள்


தன் வீரத்தைக் கண்டு அஞ்சி வந்தவர்க்கு அருள் செய்வான கொடிய கோபம் அவனிடம் இல்லை மறவர் நின்ற அணியில் புகந்து அதனைக் குலைப்பான். அழிந்த படையில் சென்று பகைவரைப் பொறுத்துக் கொள்வான் இவ்வாறு வாள் வலிமையுடைய மறவர் அவனைப் புகழ்வர்.


அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்

……………………………………………………….




அரிவையர் ஏத்தும் குணங்கள்


தன்நெஞ்சு கருதியதைத் தான் முடிந்தலும் தான் விரும்பும் மகளிர் தன்னை விரும்பும் நிலையிலும் மகளிர் வயத்தனால் ஒரு வழிப்படாது, தன் வழிப்படுதலும், மகளிர் நெஞ்சில் நினைப்பதை உணரும் நிலையிலும் உள்ளவன் எனச்செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய அரிவைப் பெண்டிர் புகழ்வர்.


பரிசிலர் பாராட்டும் பண்புகள்


அறியாமையுடையாரிடத்துத் தானும் அறியாமையுடையான் போன்றிருத்தலும், அறிவுடையாரிடத்துத் தனது அறிவு நன்குடைமையைக் காட்டலும், வருவோர்  தகுதியைத் தெளிவாக அறிதலும் சிறப்பில்லாதோருக்குக் கொடேன்  என்று வரைந்து கொள்ளது வந்தோர்க்குத்தக ஈதலும் ஆகிய நிலைகளைப் பாராட்டிப்பரிசில் வாழ்க்கையுடையோர் புகழ்வர்.


“அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்

(216 – 218)


இருத்தல் சிறப்பு


பல வீண்மீன்களின் நடுவே இருக்கும் முழு மதி போன்று, முத்தமிழ் கற்ற அறிவோரிடையே இனிய மகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தோடு அமர்ந்து இருக்கிறான் நல்லியக்கோடன்.


“பல்மீன் நடுவண் பாலமதி போல

இன்னகை ஆயமொடு இருந்தோற் குறுஇ”


யாழின் தன்மை – புகழும் முறை


பசிய கண்களையுடைய கருங்குரங்கு பாம்புத்தலையைப் பிடித்தபோது பாம்பு குரங்கின் கையை ஒருபக்கம் இறுக்கியும், ஒருபக்கம் நெகிழ்த்துப் பிடிக்கும். அதுபோன்று யாழின் தண்டில் அமைந்துள்ள வார்க்கட்டு தேவைப்பட்ட இடத்தில் இறுகப் பிணித்தும், நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இருந்தது. இரண்டு விளிம்பும் சேரத்தைத்து அடிக்கப்பெற்ற ஆணிகளின் தலைப்படுதி, மணிகளை வரிசைப்படுத்தி வைத்தது போன்றிருந்தது.


வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட தொழில் வகை அமைந்த பத்தரைக் கொண்டிருந்தது அவ்யாழ். அதில் தேன் ஒழுகின்ற தன்மையையும், அமிழ்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கிய நரம்பிளையும் கொண்டிருந்தது, பாடுகின்ற துறைகளிலெல்லாம் முழவதும் பாடுதற்கமைந்த  பயன் விளங்குகின்ற கூடுதல் இசைகளைக் கொண்டிருந்தது. அவ்யாழ், இசைநூல்கள் கூறுகின்ற மரபில் குரல் குரலாகச் செம்பாலைப் பண்ணைப்பாடி அவனைப் போற்றிப் பாடினர்.


அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தன்முன் ஆகிய முதியோர்க்குப் பல காலுங்குவித்த கையுடையன், என்றும் வீரர் ஏறிதற்கும், மகளிர்க்கும் மலர்ந்த மார்கினன் என்றும் ஏரினையுடைய  உழவர்க்கு, நிழல் தருகின்ற செங்கோலையுடையவன் என்றும், நேரினையுடையவன் என்றும், அவளைப்புகழ்ந்து பேசிப்முடிக்காத அளவிற்கு அளவுக்கு அதிகமான பொருள்களை பரிசாகக்கொடுத்தான். குற்றமற்ற மூங்கியை உரித்தாற் போன்ற மென்மையான, தூய்மையான ஆடையை முதலில் உடுக்கச் செய்வான், இவ்வாறு செய்வது ஒத்த தன்மையை உருவாக்குவதற்கு. பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான். காண்டவ வனத்தை  எரித்த பிளந்த அம்பையுடைய அம்பநாத் தூணியையும். பூந்தொழில் விரிந்து கச்சையையும் அணிந்த மார்பையுடையவன். அவன் எழுதிய நுண்மையயான சமையல் சாந்திரத்தின் அடிப்படையில் அதனின்னு விழுவாமல் செய்த பல்வேறு உணவு வகைகளை உங்களை உண்ணச் செய்வான். ஒளி பொருந்திய வானத்தில் கோள் மீன்கள் சூழ்ந்த, உதய சூரியனை இகழும் தோற்றத்தையுடைய பொன்கலத்தில் நீர் விரும்பும் உணவை, குறையாத விருப்புடன் தானே நின்று ஊட்டுவான்.





முடிவுரை

மனிதர்களுக்கு எப்போதும் இரண்டு நிகழ்வுகளின் மீது பற்று அதிகம். அவைகள் வரலாறு,  எதிர்காலம். மேற்கண்ட செய்திகளின் வழி ஆமூர், எயில்பட்டிணம்,வேலூர் போன்ற ஊர்களி; வளங்கள் அதன் சிறப்புகளையும் உணரமுடிகிறது.


இலக்கியங்களில் செல்வம் நிலையாமை கருத்தியல்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


 


மனிதர்கள் எப்பொழுதும் செல்வத்தின் மீது மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். அவர்கள் வாழும்போது பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் செல்வத்தினை சேர்பபதிலேயே தன்னை முழுமையாக செல்வத்தினை சேர்ப்பதிலேயே தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள். நிலையில்லை என்பதனை அவர்கள் அறியும்பொழுது உலகினைப் புரிந்துக் கொள்வார்கள்.

செல்வ நிலையாமை

ஒரு காலத்தில் மனைவியால் அறுசுவையை உடைய உணவை உண்டவன் பின்னொரு காலத்தில் ஏழையாகி உணவக்காகப் பிச்சையெடுக்கும் நிலைமை கூட வரலாம் செல்வம் பெருகப்பொருக அவற்றை சேர்த்து வைத்தல் கூடாது. பிறருக்கு கொடுத்து உதவுதல் வேண்டும். பலரோடும் பகிர்ந்து மகிழ்ச்சியோடு உண்ணுதல் வேண்டும்.

யானையின் பிடர் அழகுற அமர்ந்து கொற்றக்குடை நிழலற்ற உலா வந்த படைத் தலைவர் தீவினையால் துன்புற்றுச் செல்வத்தை இழந்து தம் மனைவியையும் பகைவன் பறித்துச் செல்ல துன்பம் நேரிடும்.

“நின்றன நின்றன் நில்லா என உணர்ந்து 

ஒன்றின ஒன்றின வல்வேல,செயின் செயிக-

சென்றன சென்றன,வாழ்நாள்,செறத்து உடன்

வந்தது வந்தது கூற்று!  (1)

ஒவ்வொரு நாளும் வாழும் நாள் விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கிறது. நாள்விடைபெற்றுச் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வாழும்காலம் குறைந்து கொண்டிருக்கிறது. உயிரைக்கொண்டு செல்லும் காலனும் நெருங்கி வந்து கொண்டே இருக்கின்றான். எனவேச் சேர்த்துவைத்தவை நிலையாக இருக்காது  என்பதை முன் உணர்ந்துப் பொருத்தமான அறங்களை வேகமாக செய்தல் வேண்டும்.

ஏதேனும் புதிய வரவு நம் கைக்குக் கிடைத்தால் வயதான காலத்தில் அது பயன்படும் என்று இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளல் கூடாது. அதனை வந்தப் போதே வறியவர்க்குக் கொடுத்து விடுதல் வேண்டும். அவ்வாறு கொடுத்தவர் பிறழ்தல் இல்லாத அருளில்லாத எமன் பாசக் கயிற்றால் கட்டி நரகத்திற்கு இட்டுச் செல்லுதலில் இருந்து தப்பிச் சொர்கம் சென்று அடைவர் இல்லை. மிகுதியான பொருளை நாளும் சேர்த்து வரும் பணக்காரர்களே தானமாக அவற்றை வழங்கி விடுங்கள். நாளை மரணப்பறை கொட்டுவதற்கு முன்பே கொடுத்து விடுங்கள்.


“தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து,நும் நாள் உண்ணும்,ஆற்ற

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்

பிறந்தும், பிறவாதா ரில்” (2)

எமன் சூரியனை அளக்கும் கருவியாகக் கொண்டு உம்முடைய வாழ்நாள் அகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணும், உலகில் பிறந்தவர் அனைவரும் அறம் செய்தல் வேண்டும். அல்லாதோர் பிறவாதவரே, ஆகையால் உரிய அறங்கள் மிகுதியாகச் செய்து அருள் உடையவர் ஆகுங்கள்.

செல்வம் அழியும்: 

தாய் மரணமுற்று ஒருநாள் அழியப் போகிறோம் என்பதை எண்ணாத சிற்றறிவு உடையவர்,யாம் பெரிய பணக்காரர் என்று செருக்கித் திரிவர், அவருடைய பெரும்செல்வம், இரவில் கருமேகக் கூட்டத்தின் இடையில் திடும் என்று தோன்றிச் சிறிது நேரத்தில் மறைந்து விடும், மின்னலைப்போல இருந்தே இடம் தெரியாமல் எல்லாம் அழிந்து போகும்.

“உண்ணான்,ஒளிநிறான்,ஒங்க புகழ் செய்யான்

துன்ன அருங் கேளிர் துயர் களையான்,கொன்னே

வழங்கான், பொருள் காத்து இருப்பானேல்,அஆ!

இழந்தான் என்று எண்ணப்படும்” (3)

தான் ஈட்டியப் பொருளைக் கொண்டு வயிறார் உண்ணாதவனாயும்,மதிக்கப்டும் செயல்களைச் செய்யாதவனாயும், உயர்ந்த புகழுக்குரிய நல்லவற்றைப் புரியாதவனாயும் தம் நெருங்கிய உறவினர்களின் துன்பத்தை நீக்காதவனாயும் யாருக்கும் எதுவும் கொடுக்காதவனாயும் தம் பொருளைக் காத்திருக்கும் கருமியாய் ஒருவன் இருப்பானயின் ஒருநாள் ஐயோ!தம் பொருளை எல்லாம் இழந்துவிட்டானே என்று எண்ணும் நிலை ஏற்படும்.

யாருக்கும் எதுவும் கொடுக்காமலும் நல்ல உடை உடுக்காமலும்,நல்ல உணவு உண்ணாமலும்,தம் உடம்பை மிக வருத்தியும் அழியாத நல்ல அறங்களைச் செய்யாமலும் பொருளை ஈட்டிக் காத்து வருபவர் தம் செல்வத்தை ஒருநாள் இழந்து விடுவர். அரும்பாடுப்பட்டு நாள்தோறும் சேர்க்கும் தேனை ஒருநாள் முற்றுமாக இழந்து விடும் தேனீ இதற்குச் சரியான சாட்சியாகும்,

நிலையற்ற பொருள்களை நிலை நிற்பன என்று கருதும் அறியாமையானது இழிவுடையது ஆகும்.

“கூத்தாட் அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 

 போக்கும் அதுவிளிந் தற்று” (4)


ஒருவரிடம் பெருஞ்செல்வம் குவிவது நாடக  அரங்கிற்கு மக்கள் வருவது போன்றும் அச்செல்வம் குறைவது நாடக அரங்கிலிருந்து மக்கள் போவது போலவும் ஆகும். செல்வம் நிலையற்றது: அது வந்து சேர்ந்த நாளில் நிலையான அறச்செயல்களைச் செய்துவிட வேண்டும்.திருவருட்பா செலவ நிலையாமையைப் பல உதாரணங்களை காட்டி விள்க்குகிறது. உயிரற்றாகி இன்பம் தராமல் சஞ்சலத்திற்கே இருப்பிடமாகிச் சிறிதே தோற்றமுடையதாகி வெளிஉலகில் மயக்கத்தை உண்டாக்கி விட்டு, ஒடும் இயல்புடைய செல்வமானது நஞ்சு போன்றும் ஏமாற்று நாடகமாகவும்,வெள்ளமாகவும்,கடலில் தோன்றும் அலையாகவும், வலையாகவும் முதுவேனிற்காலத்து முகிலாகவும், உடம்பாகிய வண்டி இயங்குவதற்கானச் சக்கரமாகவும் நீண்ட வாய்க்காலில் ஒடும் நீராகவும்,கற்பு என்னும் உறுதியைப் பெறாத பெண்களைப்போல ஒரு நிலையில் நில்லாமல் உழல்கின்றது என்று கூறிய செல்வ நிலையாமையைச் சுட்டுகிறது.

“கூத்தாட்வைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற

சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே” (5)

என செல்வம் வெகுவிரைவில் அழியும் என்பதனை வள்ளுவர் (332) திருவருட்பா விளக்குகிறது.செல்வம் என்பது என்றுமே ஒருவனிடம் நிலையில்லாதது அது வந்துகொண்டும் போய்க்கொண்டும்தான் இருக்கும். திருவள்ளுவர் கூறுவது போல அது வரும்போது ஒவ்வொன்றாய் வரும். ஆனால் போகும்போது விரைவில் எல்லாமேப் போய்விடும்.

“கூத்தாட் பகைவ்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 

 போக்கும் அதுவிளிந் தற்று (6)

நிலையில்லாதச் செல்வம் உள்ளபோதே நிலையான அறத்தைச் செய்து ஞானமாகிய செல்வத்தைப் பெற்றுவிட வேண்டும். அவ்வாறு பெறாவிடில் ஈட்டிய செல்வத்தைப் பிறர் கொண்டு செல்வர். தேனீக்கள் பல மலர்களிலிருந்தும் நெடுநாள் சேகரித்து வைத்திருந்த தேனை எவ்வாறு ஒருநாள் தீயார் எடுத்துக் கொண்டு செல்வார்களோ அவ்வாறு ஈயார் ஈட்டிய செல்வத்தை வலியார் எடுத்துக்கொள்வார் தீயார் தேனைக் கொள்ளும் போது ஈயார் மடியவும் செய்வர்.


“ஈட்டிய தேன்பூ மணங்கண் பிரதமும்

கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்

ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொள்ளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே” (7)


 செல்வம் உள்ளபொழுது அதன்பால் பற்றுக் கொள்ளாது வறியார்க்கு ஈந்த இன்பம் பெற வேண்டும் என்பது திருமூலர் திருவுள்ளம்.

“அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட 

மறுசினை நீக்கி உண்டாகும்-விறிஞராய்க்

 சென்று இரப்பர் இடத்தக் கூடி எனின் செல்வமென்று

உண்டாக வைக்கப்பாற்று அன்று” (8) 

என்ற பாடலில் செல்வம் என்பது நிலையில்லாத ஒன்று.இது ஒருவரிடம் மட்டும் நிற்பது கிடையாது. செல்வம் பெற்று வாழ்பவர் ஒருநாள் ஏழ்ம்மை நிலை பெறலாம். ஏழ்ம்மை நிலையில் உள்ளவன் ஒருநாள் செல்வனும் ஆகலாம் என்று கூறுகிறது. இதனை வள்ளுவர்

“கூத்தாட் அவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் 

  போக்கும் அது விளத்தற்று” (9)

ஒருவனிடம் பெருஞ்செல்வம் சேர்ந்தது என்பது கூத்தாடுமிடத்தில் கூட்டம் வந்து எவ்வாறு சேருமோ அது போன்று செல்வம் வரும். பின்பு கூத்தாடும் இடத்தை விட்டுக் கூட்டம் கலைவது போன்று செல்வம் ஒருவனிடம் இருந்து சென்று விடும் என்று வள்ளுவர் கூறுகிறார். 

செல்வம் என்பது நிலையில்லாதது மனிதனின் வாழ்நாட்கள் கழிந்து போகின்றன கூற்றுவன் விரைந்து வருகின்றன இறப்பு என்பது உறுதி என்பதை நினைத்து வாழும் நாட்களிலேயே அறங்களை விரைந்து செய்ய வேண்டும் என்றன.

“அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்

அதற்கு ஆங்கே செயல்” (10)

என்ற குறட்பாவில் செல்வம் நிலைத்து நிற்காது அவற்றை மறந்து அறங்களைச் செய்க என்றும் வீணாகக் கழிந்து கொண்டிருக்கும் வாழ்நாட்களில் நிலையில்லாதத் தன்மையைக் கொண்ட செல்வத்தை மனிதர்கள் சேர்த்துப் பாதுகாப்பது பயனற்ற செயல் என்பதை தெரிய முடிகிறது.

நிலையில்லாதச் செல்வத்தை நிலைபேறுடையது எனப் பற்றிப் பிடித்துப் பாதுகாவாமல் பலருக்கும் கொடு எனக் கூறியதால் இது பெருங்காஞ்சி ஆயிற்று பிறருக்குக் கொடுத்து வாழிகின்ற வாழ்வே பொருள் பொதிந்த வாழ்வாகும். நிலையில்லாத அப்பொருளைக் கொண்டு நிலைத்து புகழைப் பெறுதலே சிறந்த செயலாகும். ஒருவரது செல்வங்களை சூறையாடலாம் அணிந்து கொண்டிருக்கிற ஆடை அணிகலன்களைச் சூறையாடலாம். மிகப்பெரிய பாறைகளையும் மரங்களையும் கூட வெட்டி வீழ்த்தலாம். ஆனால் ஒருவர் பெற்ற கல்வியைச் சூறையாடவோ, வெட்டி வீழ்த்தவோ முடியாது. செல்வத்தை பெற்றோரிடமிருந்து ஏமாற்றிப் பெற முடியும். செல்வந்தர்களைக் கொலை செய்து பெறமுடியும்.


ஆட்சி அதிகாரங்களில் கபளீகரம் செய்து பெறமுடியும். செல்வந்தர்கள் ஏழைகளை உழைக்கச் செய்து, தான் உழைக்காமல் பெற முடியும். ஆனால் கல்விச் செல்வத்தை உழைக்காமல் வஞ்சித்து,கொலை செய்து பெற முடியாது. கடினப்பட்டு உழைத்துத் தான் பெறமுடியும்.ஆகவே கல்விச் செல்வம் மட்டுமே மற்ற எல்லாச் செல்வங்களை விடவும் குற்றமற்ற உண்மையான,அழிவில்லாத செல்வமாகும் என்கிறார் வள்ளுவர்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை” (11)

கல்விச் செல்வத்தை அரசனானாலும் ஏழையானாலும், பணக்காரனானாலும், உழைத்துத் தான் பெறமுடியும். கல்வியை கற்றவர்களுக்கு வேலையில்லை என்பதோ,செல்வம் இல்லை என்பதோ தோன்றுவதில்லை. செல்வந்தர்கள் புகழை நாடியே செல்ல வேண்டும்.ஆனால் கற்றவர்களைத் தேடியே செல்வம் வரும். கல்வியறிவில்லாத செல்வந்தர்கள் நிறைந்த நாட்டில் அடிமை நிலை, ஏற்றத்தாழ்வு, போட்டி, பொறாமை காணப்படும். இருக்கின்ற பொருளை பிற உயிர்களுக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்துக் கொடுத்து வாழும் அருளானது அறநூல்களில் கூறப்பட்டுள்ள நெறிகளில் மேலானதாகப் போற்றப்படும். 

நிலையில்லாதப் பெருமையினை உடைய செல்வ வாழ்க்ககையினைப் பெறுகின்ற ஒவ்வொருவரும் அத்தகைய சிறப்பான வாழ்வு நிலை பெற்ற இருக்கவேண்டுமெனில் நல்ல பண்பகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும். உண்ணுகின்ற உணவுக்குச் சுவையினைத் தரக் கூடியத உப்பம் பலவகைப் பொடிகளும் ஆகும். ஆனால் அந்த உப்பும், பல்வகைப் பொடிகளும் உணவாக முடியாது. அதுப் போலவேத் தான் மனித வாழ்க்கைக்குச் செல்வம் தேவை. அந்தச் செல்வமே வாழ்க்கையாகிவிட்டது. செல்வமும் ஒரே இடத்தில் தங்காமல் பலரிடமும் சென்ற கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் வறுமை நீங்கி செழுமை தோன்றும்.

நெருப்பினில் நெய்யைப் பெய்தாற் போன்று பொன் பொருள் என்னும் ஆசையை மேன்மேலும் பெருக்கிக் கொண்டாய்! பொன்னாசையால் யாவற்றையும் இழந்து மண்ணுலகில் துன்புற்றவர்களைக் கண்டிலையே? பொன்னாசையுடையவர் துன்பக்கடலை அன்றி வேற எதனைக் கண்டார்கள்? பொன் இருந்தால் அதை பாதுகாப்பாக வைப்பதற்குத் தாயாலும் அறிந்துக் கொள்ளாத வகையில் ஓர் இடம் வேண்டும். அவ்வாற வைத்தாலும் அந்த இடத்தை தெரியவொட்டாது ஏய்த்தால் என் செய்வாய்? ஐவத்த இடத்தில் அப்பொருள் கரியாகிப் பாழடைந்தால் என் செய்வாய்! பெருஞ்சினத்தல் மாற்றார் அச்செல்வத்தைப் பறிக்க முனைந்தால் என்செய்வாய்! அவ்வாறு காவல் செய்யும் போது ஆணவமாய் கொடியக் கூளி முன் நின்று நினதலையில் ஏறும்! அதற்கு என்ன செய்வாய்?அப்போது உன் ஆன்ம நேயம் வேண்டி உலோபம் என்னும் குறும்பன் உன் முன்னே வருவான். 

  பொன்னும் பொருளும் எத்தனையோ பேர்களை விட்டு அகலுதலை நீ  கண்டதில்லையோ! கூத்தாட்டும் அவைக் கூடத்திலிருந்துக்கூத்து முடிந்ததும் அந்த அவைக் கலைந்து வெற்றிட மாதலைப் போன்று செல்வமானது பறிபோதலை நீ பார்த்தது இல்லையோ! இந்நிலவுலகத்தில் நீண்ட மயக்கத்தைத் தருவது பொன் பொருளே எனத் தெளிந்து அத்தகைய வீண் மயக்கத்தை விட்டிலையே! சிற்றுயிர்கள் இத்தகையச் செல்வத்தைக் கொண்டு உயிர்வாழ்வதில்லை என்கிற இயல்பினையும் எண்ணிப் பார்க்கவில்லையே! எனவே நெஞ்சை! இத்தகைய பொன்னாசையின் மீது ஆசை வைக்காதே.

பணக்காரர்கள் செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்தால் திருப்பிக் கொடுக்க மாட்டார்களோ என்ற எண்ணத்தில் பிறருக்கு உதவியும் செய்யாமல், செல்வத்தைத் தனது வங்கிக் கணக்கிலோ,தன்னிடமோ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அச்செல்வம் ஒரே இடத்தில் தேங்குவதால் பணப்பற்றாக்குறை தொழில் துறையில் பெருக்கமின்மை ஏற்பட்டு வேலையில்லாத திண்டாட்டம், உணவுத் திண்டாட்டம் போன்றவை ஏற்படுகிறது. இச்செயல்களைத் தவிர்த்து கடமையுணர்ந்து செயல்பட்டால் நாடு வளம் பெறும். மேலும் இவர்களைச் சமுதாயம் பழிக்கும்.ஆகவே நீடித்த இன்பத்தைத் தரக்கூடியது ஒழுக்கம். அத்தகைய ஒழுக்கமான வாழ்வினை வாழ்ந்தால் வாழ்வும் செழிக்கும் வரலாறும் தழைக்கும் என்கிறார் வள்ளுவர்.

“அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்யே செயல்” (12)

பக்தப் பிரகலாதனைப் போன்றத் தெய்வபக்தியும், மன்மதனைப் போன்ற ஏகபத்தினி விரதமும் ஒருவர் கைக்nhணடிருந்தால் அவரது ஜீவன் இந்த உலகத்திலேயே முக்தி அடைந்து எல்லா அம்சங்களிலும தேவ பதவி அடைந்து மகிழ்ச்சி கொண்டிருக்கும் என்கிறார் பாரதி. ஒருவர் எந்தப் பொருளின் மீதும் பற்றில்லாத தன்மையுடன் இந்த மண்ணுலகில் வாழ்கின்ற வரையிலும் உறுதி கொண்டிருக்க வேண்டும். அந்தப் பற்றற்றத் தன்மை வெற்றியடைய ஞான நிலையில் தவம் மேற்கொள்ள வேண்டும். உடலை விட்ட உயிர் நீங்குகின்ற வரை பற்றில்லாமல் வாழ்ந்தால் அந்த உயிர்க்கு மறு பிறவி கிடையாது. பற்றுக்களை முற்றிலும் துறப்பது கடினம். அந்தச் செயலில் வெற்றி பெற்றவிட்டால் பிறவித் துன்பம் நீங்கும். இல்லையேல் அது தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்” (13)

என்று கூறுகிறார். மாணிக்கத்தால் ஆகிய மணிமுடி,தோள் வளையம் மார்பில் தொங்கும், பதக்கங்கள் மற்றும் வேறு வகைகள் தூய்மையான பொன்னால் ஆகிய முத்துமாலை, கையில் அணியும் பொற்கடகம் ஆகிய இவை அனைத்தும் அழியும் பொருள்கள் தான்.


மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும் வண்ண மண்டபம்,மதில் சுற்றிய அரண்மணை மற்றும் உள்ள செல்வங்கள் எல்லாம் நம் கூடவே வருவதில்லை. கானல் நீரை உண்மையான நீர் என்று எண்ணி மான்கள் அதன் அருகில் சென்று ஏமாறுவது போல் உலகில் வாழும் மக்கள் (மூடர்கள்) தம் கண்ணால் காணும் செல்வங்கள் நிலையானவை என எண்ணி மகிழ்வர்.ஆனால் அவை எல்லாம் அழியும் தன்மை கொண்டது. ஆனால் மெய்யறிவு பெற்ற ஞானிகளோ இவைகளைக் குறித்த வீம்பு என்னும் நூலைக் கட்டி திரைக்குள்ளே இருந்து ஆட்டுபவன் (இறைவன்) அவ்வுயிரை இயக்க மறுத்தால், உடலும் கீழே விழுந்து அழியும் தன்மை உடையது.


செல்வ வாழ்க்கை


அன்பு மனைவி ஊட்டுகிறாள் அறு சுவை  உணவு அவன் அறிகிறான்   வயிறு நிறைகிறது. மனம் குளிர்கிறது, வாழ்க்கை தளிர்கிறது. எதுவும் இனிக்கிறது,   இன்று செல்வம் அழிந்தது, அது அவனை விட்டு ஒழிகிறது, வறியவன் என்று அவனை வாழ்வார் உணர்கின்றனர், கூழுக்காக கையேந்தி நிற்கிறான், பிறர் வீட்டுப் படிக்கட்டு ஏறும்போது எல்லாம் அந்த வீட்டு மகள் அவனுக்குத் தாயாகிறாள், அம்மா தாயே என்று அழைக்கிறான், அவள் உனக்கு என்ன வேண்டும் என்றாள்.முன்பு உணவு சுவைத்தது, இன்று கை விரல் சுவைக்கின்றன.


ஒரு குழந்தையாகிக் கைவிரல்களைக் சுவைக்கிறான் அவன் காலம் பார்த்தாயா! எப்படி இருந்தவன் எப்படி ஆகிவிட்டான்? சேல்வ வாழ்க்கை முன்பு, அல்லல் சேர்க்கை இன்று செல்வம் நிலைக்கும் என்றும் செருக்குக் கொள்ளாதே ஒரு பருக்கைக் சோற்றுக்கு தெருத் தெருவாக அலையும் நேரம் வரும். பணம்!அதனை அடக்கி ஆளவில்லை என்றால், பின்னால் வருந்துவாய், மதம் கொண்ட யானை! அது இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது. தினமும் அறம் செய்து வாழ்ந்திருந்தால் அழிந்து இருக்க மாட்டான். அறம் அவனுக்கு கைக்கொடுத்து இருக்கும் துணை நின்றிருக்கும். அறத்திற்கு இணை வேறு எதும் இல்லை. 

அறம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும் நீ செய்த தவறு என்ன? நீயும் உன் மனைவியும் மட்டும் மகிழ்ந்து உண்மீர் அரிச்சோறுதான், வரிசைப்படுத்திச் சுற்றத்தவரோடு அதனைச் சேர்ந்து உண்ண வேண்டும். அந்த மகிழ்ச்சி உனக்குப் புகழ்ச்சி, செல்வம் தட்டை அன்று, உருளை அது ஊருண்டு கொண்டே செல்லும். வண்டியின் சக்கரமாய் இடம் மாறு, உள்ளபோது உவந்து உண்ணுதல் வேண்டும். உறவினரோடு சேர்ந்து உண்ணுதல் வேண்டும்.

செல்வன் ஏழையாவான்;:

அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? பட்டத்து யானைமீது பகட்டாகச் செல்வன், சேனைத் தலைவன்” என்று ஏனையோரை மிரட்டினான் இன்று அவன் பகைவரிடம் சிறைப்பட்டுவிட்டான். நிறையுடைய அவன் பத்தினி பகைவன் கைப்பட்டு விட்டாள்.


“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

 செல்வத்துள் எல்லாம் தலை” (14)

ஒருவன் எப்படிப்பட்டச் செல்வனாக இருந்தாலும் அவன் என்றாவது ஒருநாளைக்கு ஏழையாவான். 

கட்டியவளை இழந்து, ஒட்டி உறவாட உறவினரும் இன்றி இன்று ஆடி அடைந்து நாடி தளர்ந்து உலவுகின்றான். இவன் ஒரு காலத்துப் பேரரசன் என்றுச் சொல்ல தோற்றுமா அன்று இவன் நாட்டை ஆண்டான்;; ,இன்றோ அவனை வறுமை ஆள்கிறது அன்று காலாட்டினான், இன்றோ காலம் அவனை ஆட்டி வைக்கிறத, காரணம் செல்வம் இழந்தான். ஏன ஆசிரியர் கூறுகிறார். அதோ அவனைப் பார், கஞ்சப்பயல்! காசு கொடுத்து எதையும் அவன் வாங்கி உண்ணமாட்டான், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பான், பில்பணம் கொடுக்கும் போத மெதுவாகக் கை கழுவச் சென்றுவிடுவான். பணம் தருவதிலிருந்து இடம் நழுவி விடுவான்.

“நாலு நல்ல காரியம் செய்ய வா” என்றால் அது”நமக்கு ஆகாது” என்றும் “ஒத்துக்காது என்று சொல்வான். ஒளிதரும் செயல்களைச் செய்யமாட்டான். புகழ்அடைய செயல்படுக, இல்லாவிட்டால் நின்ற பிறப்பே தேவை இல்லை” என்று வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை

வாழ்க்கையில்  ஒரு மனிதன் பெற்றவை இப்பிறவிகள் அந்தப் பிறவியின் பயனாக அவன் நன்மையை செய்தல் வேண்டும். அதனை விடுத்து செல்வம் ஒன்றே தனது நோக்கமாக உள்ளன அந்த செல்வமானது நிலையில்லாதது என்பதை அறிதல் அவசியமாகின்றது.


சிறுபாணாற்றுப்படையில் வெளிப்படும் பாணர் வாழ்வியல்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக்கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர் நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம்கலைகளால் மக்களை மகிழ்விப்பர்.


இக்கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்  


பழங்காலத்தில் பாணர்கள் என்னும் குடியினர் இருந்தனர் பாணர் குடியிருக்கும் பகுதி பாண்சேரி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பாடல் பாடுவதுஇ நடனம் ஆடுவது போன்றவற்றைச் செய்வார்கள். அவர்களைப் பல மன்னர்கள் இ குறநில மன்னர்கள், செல்வர்கள் முதலியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை ‘விறலியர்’ என்பார்கள் பாணர்களின் முக்கிய இசைக்கருவி யாழ் என்பது அதிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தன. சகோடயாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவை ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கிறது.


பாணர்களில் சிலர் மன்னர்களுக்காக தூதுகூட சென்றியிருக்கிறார்கள். சங்ககாலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரைக்கும் காணர் குடி இருந்திருக்கிறது.

நம்பியாண்டர் நம்பியைக் கொண்டு ராஜராஜசோழர் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப்பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை (மதங்கசூயாமணி) வைத்துப்பண்முறை வகுத்தனர்.


மாறவர்மன் சுந்தர பாண்டியர் சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழனுடைய திருமுடி ஆகியவற்றைப் பாணனுக்குப் பரிசிலாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது.


பாணர்க்கு வழங்கும் தொழிற்பெயர்கள் : -


இசைக்கருவியில் பண்ணப்படுவது பண்.

பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்

பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.

கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.


அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்துநூல்கள்;.


சிறுபாண் : -


ஏழு நரம்புகள் கொண்ட சீறியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள்.


பெரும்பாண் : - 


21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீடடிக்கொண்டு பாடுபவர்கள்.


பாணர் பிரிவுகள் : -


அக்காலத்தில் இவர்கள் இசைப்பாணர்கள், யாழ்ப்பாணர்கள், மண்டைப்பாணர்கள், பொரும்பாணர், சிறும்பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இக்காலத்தில் பாணான், மேஸ்திரி, தையல்காரர்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள். சமூக அந்தஸ்திற்காக சிலர் பாண்டிய வேளாளர் என்று கூறி வருகின்றனர்.


திருமண உறவுகள் : -


பாணர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே அததை மகள், மாமன் மகள்களை திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


இலக்கியங்களில் பாணர் : -


சங்க இலக்கியங்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பாணர்களைக் குறித்த பல செய்திகள் காணப்படுகின்றன.


பக்தி இலக்கியத்தில் பாணர் : -


அக்காலத்தில் பகதி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதேபோல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறுப்படுகிறது.


பாணர்களின் சிறப்பு : -


யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே யாழ்ப்பாணர் என்றழைக்கப்பட்டனர். பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம் தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊரக்கே யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது.


பாணர்கள் வீழ்ச்சி  : -


சங்காலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப்பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனத். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப்பரிசில் பெற்று வந்தனர். பொரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழுவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பரறுவதைப் பார்க்கின்றோம்.

ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையி;ன் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மி அதிகமாக பிற்காலச் கமணம் வலியுறுத்தத் தொடங்கியது. iஇச என்கிற கலை மேன்மையான விடயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாகஈ மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விடயமாகவே சமண இறையியலில் கூறப் பட்டது. அதனால் களப்பிhர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை “இழிசினர்” என்ற கீழ்ச்சாதியின்ருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.


காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்ர் ஏறக்குறைய இழிந்தே போகும் தறுவாயிலிருந்தவர்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் “பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ்இசைப்பவர்கள் இல்லையே” என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம். “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது இஸ்லாமியக் கொடுங்கோலன் ஒளரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான்.


பொருளாதார நிலை : -


திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, நாகர்கோயில், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடும் வயல்களுமாக சிறப்போடு பாணர் வாழ்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சொத்துகளையும் இழந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதாரம் முதலியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் நிலை காணப்படுகிறது.


முடிவுரை

முற்காலத்தில் யாழ் இசைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது, காலப்போக்கில் விழாக்காலங்களில் தேர் அலங்கார வேலைகள், அலங்காரக் கடைகள், ஆண்டவனுக்குரிய ஆடைகள் தைத்தல், பந்தல் போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


அரசாங்க மாற்றத்தால் கோயில்கள் மூலம் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. தையல் தொழில், பந்தல் தொழில், கூலித் தொழில் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். மற்ற சழுதாய மக்கள் இறந்தால் அவர்களின் சடலங்களைக் கொண்டு செல்லும் பாடைகட்டிக் கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பெண்கள் பீடி சுற்றுதல், தீப்பொட்டி ஒட்டுதல் போன்ற தொழிலைச் செய்து கொண்டுள்ளனர். இச்சமூகத்தைச்  சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சட்மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகரமன்ர, பஞ்சாயத்து உறுப்பினர் என்று யாரும் கிடையாது. இச்சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர்களும் இல்லை.


சங்ககால சிறுபாணர்கள் வாழ்வியல்

  ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி  



சிறிய யாழினை (வாசிப்பவர் பாணர்) உடையவர் சிறுபாணர் என்று அழைக்கப்படுகின்றனர்.


“இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ

-(சிறுபா – (35) )- 1


இவ்வரியின் மூலம் சிறிய யாழைக் கையில் வைத்து யாழ் இசைக்கும் பாணர்யின் சிறுபாணர்கள் என சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடுவதைக் காணலாம்.


பாணர்களின் இசைக்கருவிகள் : -


பெரிய யாழ், சிறியயாழ் மற்றும் யாழினைத் தவிர தாடாரி, முழவு, ஆகுளி, பாண்டில், கொம்பு, நெடுவாங்கியம், தூம்பு, சூழல், தட்டை, எல்லரி, பதலை, பறை, துடி ஆகிய இசைக்கருவிகளையும் பாணர்கள் பெற்றிருந்தனர்.


இந்த இசைகருவிகளை நிகழ்த்து கலையில் ஈடுபட்ட பாணர்களே கைக்கொண்டிருந்தனர். கலைகளை நிகழ்த்தும் போது அவ்விசைக் கருவிகளை அவர்கள் இசைத்துள்ளனர்.


இந்த இசைக்கருவிகளை எவ்வாறு இசைத்தார்கள் என்பதையும் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.


பெரு – (11, 19)  - 2


     சிறு – 30    - 3


பாணர்களின் வகைகள் : -


பாணர்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்படுகின்றனர் இசைக்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என குறிப்பிடுவர். வாய்ப்பாட்டுப் பாடி இசையை வளர்த்தவர்கள் யாழ்ப்பாணர்கள் என்றும், யாழின் மூலமாக இசையைப் பாதுகாத்தவர்கள் இசைப்பாணர்கள் என்றும், (மண்டை எனப்படும் திருவோடு கையில் ஏந்தி இசையை வளர்த்தவர்கள் மண்டைப்பாணர் எனவும் குறிப்பிடுகின்றனர்.


பாணனின் நிலை : -


பொன்னால் செய்யப்பட்ட நீண்ட கம்பியைப் போன்று குற்றம் தீர்ந்த நரம்பிலிருந்து இனிய ஓசையை எழுப்பும் சிறிய யாழை தனது இடப்புறமாக வைத்துக் கொண்டுள்ளான பாலையில் இசைக்கும் பண்ணாகிய நைவளம் எனப்படும். நட்டபாடை பண்ணைப் பாடி இசைக்கும் முறையறிந்து இசைத்தான். அவனது இசைகேட்டுப் பரிசு வழங்கக் கூடிய வள்ளல்கள் எவரும் அப்பாலை லழியில் இன்மையால் வறுமை தீராத வருத்தம் அடைந்தான்.


பரிசு கொடுப்பவரைத் தேடி வழி நடதந்து வந்த வருத்தம் அவனுது இசையால் தீர நிறைந்த அறிவுடைய இரவலனாக அவன் விளஙிகினான். அத்தகைய வறுமைப் பாணனை வளம் பெற்று வந்த பாணன் ஆற்றுப்படுத்துவதாகச் சிறுபாணாற்றுப்படை பாடுகிறது. வளம் பெற்று வந்த பாணன் நல்லியக்கோடனின் ஒய்மான் நாட்டின் வளத்தையும் சிறப்பையும் சேரபாண்டிய சோழ நாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறாள். மூவேந்தர் ஆளும் அம்மூன்று நாடுகளை விடவும் வளமிக்கது நல்லியக்கோடனின் நாடு என்றாள் பாணன்.





பாணர் பாடினியர் காலம் : -


பல்வேறு சமூகங்களிலும் தொடக்க நிலைக் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் பாணர்கள் கருதப்பபடுகின்றனர். சடங்குகளில் இருந்து பிரிந்த கலைஇலக்கிய வளர்ச்சியின் முதல் நிலையாக அமைந்த இக்காலத்தைப் பாணர்தம் பெயராலேயே ‘பாணர் - பாடினியர்காலம்’ என்று கூறுவர்.


இப்பாணர் பாடினியர் மரபுக் கலைஞர்களாவர் இவர்கள் வழிவழியே வந்த கலையறிவால் மக்களை மகிழ்வித்து வந்தனர். இவர்கள் வாய்வழியே பாடும் மரபைப் பெற்றிருந்தன் அப்பாடல்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்படாமல் பாடுபவர் உணர்ச்சிக்கு ஏற்ப அமைந்துள்ளன.


பாணர் - பாடினியர் காலம் என்பது தொல் பழங்கால மக்கள் சமுதாயத்தில் முதன் முதல் இலக்கியம் தோன்றிய காலகட்டமாகும் அக்காலத்தில் பாணனே மூதறிஞனாகக் கருதப்பெற்றான். அவனுக்குச் சமுதாயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பாணா. ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தாள் எங்கு (அ) எந்த இடத்தில் இன்ப நிகழ்ச்சிகள் நடந்தாலும். (அ) துன்ப நிகழ்ச்சிகள் நடந்தாலும் இங்கு இவன் முன்னின்று அவற்றை நடத்தி வைத்தான். அச்சமயங்களில் அவன் உணர்ச்சித் துடிப்புடன் வீரர்களின் அரும்பெருஞ் செயல்களைப் போற்றிப் பாடினான். அப்பொழுது தான் பாடும் பாடலுக்குகேற்ப தாளமிட்டு ஆடினான். அவ்வாறு அவன் ஆடலோடு பாடலையும் சேர்த்துப் பாடிய பொழுது அவனைச் சார்ந்த ஆடவர்களும் மகளிரும் அவனோடு சேர்ந்து ஆடிப் பாடிப் பார்வையாளரை மகிழ்வித்தனர் எனலாம். பாணர்களைப் பற்றிய குறிப்புகள் பல காணப்பெறுகின்றன. பாணர்கள் ஒரு நிலையான வாழ்க்கை முறையைக் கொண்டிராமல் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான்.


பாண்கடன் சமூகக் கடமை : -


பொதுமக்களை மகிழ்வித்தல் பாணர்களின் பணியாக இருந்துள்ளது. பாணர்கள் கலைத்தொழிலையே தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அதனால் பாணர்கள் பிறரைச் சார்ந்த வாழ்ந்தனர் பாணர்கள் அரசரைப் புகழ்வதோடு தொழில் செயல்பவர்களையும் தமது பாடலால் மகிழ்வித்தனர். இதன் மூலம் தொழில் செய்பவருக்குத் தொழிலில் சலிப்பு ஏற்படாமல் இருக்கவும் உற்பத்தி பெருகவும் பாணர்கள் உதவினர். 


குறிப்பாக அரசுர்களையும் நிலவுடைமையாளர்பளையும் வணிகர்களையும் சார்ந்திருந்தனர். பெரும்பாலும் இனக்குழத் தலைவர்களின் வீரத்தையும் கொடைத்தன்மையையும் புகழ்ந்துபாடினர். அடிக்கடி ஏற்பட்ட போர் நிகழ்வால் போரைப்பற்றியும் வீரத்தைப் பற்றியும் பாட வேண்டியதேவை மிகுதியாயிருந்தது.


அரசனது ஆட்சியும் சீரானமுறையில் இருந்தது தனது ஆட்சி நிலைநிறுத்தத்திற்கும் காரணமான பாணர் கூட்டத்தினர் அரசனால் பாதுக்கப்பெற்றுள்ளனர். அவ்வாறு பாணர்களைப் பாதுகாத்தல் அரசனின் தலைவனின் கடமையாகக் கருதப் பெற்றதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.


ஆண்கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!        (4)

புறம் - (201 : 14, 15)


பாரி மகளிரை இளங்கோவேளிடம் அழைத்துச் சென்ற கபிலர், அவனுடைய புகழைப்பாடும் போது இவ்வாறு கூறுகிறார். ஆண்மக்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்தவன் என்பதனால் நீ பாண்கடன் ஆற்றுகின்றாய் என்ற கருத்து, பாணர்களைக் காப்பது சமூகக் கடமையாகக் கொள்ளப்பட்டமையைக் காட்டுகின்றது.


இதே போல் மற்றொரு பாடல், “பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்”


“பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!     (5)

புறம் (203 : 11)


என்ற பாணர்களைத் தாங்குவதை ஒரு கடமையாகச் சுட்டுகின்றன.


பொன்னால் செய்த தாமரைப் புpவை வெள்ளிய நூலியே கோத்துத் தலையிலே அழகாகக் சூடி இருக்கின்ற பாணர் சுற்றம் நின் நாள் மகிழ் இருக்கையைச் சூழ்வதாக, பாணர் போன பின்னர் உனது மார்பகம் மகளிரைத் தழுவட்டும்.


பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை

பாண் முற்று ஒழ்ந்த பின்றை, மகளிர்

தோள் முற்றுக, நின் சாந்துபலர் அகலம்! ஆங்க   (6)

(புறம் : 29 : 5 )


எனப் பகையரசரின்பட்டத்து யானையின் முகப்படாமில் இருந்த பொன்னை எடுத்து. பாணர்களது தலையணியாகப் பொற்றாமரைச் செங்தளித்தவனே.


ஒன்னார் யானை ஒடைப்பொன் கொண்டு,

பாணர் சென்னி பொலியத் தைஇ,

வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்,

ஒடாப் பூட்கை உரவோன் மருன!      (7)

(புறம் 126 – 1 – 4)


எனப் இலவமரம் வளர்ந்துள்ள மன்றத்தில் கவடற்ற உள்ளமுடைய பாணர் நினைத்ததெல்லாம் பேசி மகிழ்ந்து சோற்றை உண்யர் பாணர்களுக்கு அழியாத செல்வங்கள் பல அளித்த வளவன் வாழ்க.


இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,

கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்று,

அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு

அகலாச் செல்வம் முழவதும் செய்தோன்,

எய்கோன் வளவன் வாழ்க! என்று, நின்          (8)

(புறம், 34: 12 – 16)


எனப் அரசர்கள் பாணர்களுக்கு உதவுவதால் புகழ்ப்பெறுகின்றனர் இவற்றால் பாணர்களுக்குப் பொருள் வழங்குதல் அரசர்களின் உயர்ந்த செயல்களில் ஒன்றாகக் கருதப்பெற்றமையை உணரலாம்.


இசைவளர்ச்சியும் பாண்மன்மையும் : -


சங்க காலத்தில் தோல் துளை, நரம்புக்கருவிகள் வழக்கில் இருந்தன. இக்கருவிகளின் வளர்ச்சி இசையின் வளர்;ச்சி நிலையைத் தொவிப்பனவாகும்.


இசைக் கருவிகளில் முதலில் தோன்றியவை தோல் கருவிகள்

பின்னர்த் தோன்றிய துளைக் கருவிகள் அதன் பின்னரே

நரம்புக் கருவிகள் தோன்றின சங்க இலக்கியங்களில்

மிகவும் வளர்ச்சி பெற்ற யாழ் வகைகள் பல சொல்லப்பட்டிருக்கின்றன

(நா. வானமலை 1990 : 83, 84)


என்பர் சங்க காலத்தில் காணப்பட்ட நரம்புக் கருவிகளின் வளர்ச்சி, செவ்வியல் தன்மை பெற்ற இசை மரபு இருந்தமையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். எனினும் பாணர்கள் தொடக்க காலத் தலைமை வடிவமான இனக்குழு நிலையில் வாழ்ந்தமையால் அவர் தமது கலையைச் செவ்வியல் தன்மையதாகக் கருத இயலவில்லை.


பாணர் தம் கலை நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரிடம் மட்டுமே இருந்தன. பாணர்கள் பழமை வாய்ந்த குடிகளில் ஒன்றாக இருந்தனை.


துடியன் பாணன் பறையன் கடம்பெண்

றிந்நான் கலந்து குடியுமில்லை      (9)

(புறம், 335: 7 – 8)


என்ற பாடல் சுட்டுகின்றது. பாணர்கள் ஒரு தனிக்குடியாக இருந்ததனால் அவர்களிடம் இசையினைத் தனியே பயிற்றுவிக்கின்ற முறைகள் இருந்திருக்க முடியாது. பாணர் குடியின் இளையவர்கள் தமது குடியனருக்குப் பணியாளாக இருந்து உதவுவதன் மூலம் இசைப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். இதனை


பாணர்களின் கலையான பாடுதல், அவிநயத்தல், உணர்ச்சி

யுடன் பேசுதல் ஆகியவை முதியவர்களிடமிருந்து வாய்

வழியாகக் கற்றப்பெற்றன இத்தகு கற்றலின் உட்கூறுகளான

விதிமுறை, உட்கருத்து, மரபுவழி, உள்ளடக்கம் போன்றவை

(க. கைலாசபதி, 2002 – 133)


எனக் கூறுவர்.


இசைப் பயிற்சி ஒரு வகையான கல்வியாக அளிக்கப் பெறாமல், தொழிலறிவாகவே அளிக்கப்பெற்றது. எழுதிப் படித்து அறிதல், ஆசிரியர் கற்பிக்கக் கற்றுக் கொள்ளுதல் என்ற நிலையிலன்றிக் கேள்விக் கல்வியாக, பரம்பரை வழியே கற்றலாகப் பாணரின் இசைக் கலை இருந்துள்ளது.


பாணர் தம் பாடல்கள் வழிவழியாகப் பாடப்பட்டவையாகும் முன்னோர்களின் பாடல்கள் பாடல் நிகழ்த்தப்படும் இடம் சூழலுக்கு ஏற்ப இட்டுக்கட்டும் அடிகளே பாடப்படும் இடத்தில் உள்ள மன்னன் தலைவனை அப்பாடலில் பொருத்தியுள்ளன. இப்படிப் புதியதாக இணைப்பவை ஒரு வாய்பாட்டில் (கழசஅரடய) இயங்கியுள்ளன. சங்க இலக்கியங்களில் வெளிப்படும் இட்டுக்கட்டும் வாய்ப்பாட்டினை அடையாளப்படுத்தி விரிவாக ஆராய இடமுள்ளது.


அரசனுக்கு முன்னர்ப் பாணர் குழப்பாடலையும் ஆடலையும் நிகழ்த்தியமையைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன என்றாலும், அப்பாடல்களில் இருந்த நிகழ்த்துகலை மரபைத் தெளிவாக அறியமுடியவில்லை. பாணர் ஒரியைப் பாடிய புறநானூற்றுப் பாடல் (152: 13 – 22) பண்பாட்லின் வழிவழி வரும் தன்மையை, போக்கை அடையாளப்படுத்துகிறது.


பாடுவல், விறலி ஒர் வண்ணம் நீகும்

மண் முழா அமைமின் பண்யாழ் நிறுமின்

கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்

எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்              (10)

(புறம் 152 : 13 – 22)


எனும் அப்பாடல் விறலியை அழைத்து, பலவிதமான இசைக்கருவிகளையும் இசைக்கச் சொல்லி மதலை மாக்கோலை கையிலே எடுத்துக்கொண்டு, தான் (பாணர்களின்) தலைவனாக இருப்பதனாலே இருபத்தொடு பாடல் துறைகளையும் முறையாகப் பாடி முடிந்து இறுதியில் கோவேயென்று அவன் பெயர் கூறிய காலத்து, அந்த இடத்தில் அது தன் பொய் அதனால் (ஒரி) நாணினான் என்கிறது.


பாணர் தலைவன் பாடிய பாடல்கள் வழிவழி பாடிய பாடல்கள் அவற்றைக் கேட்கும் மன்னன். கலைஞர்களின் நிகழ்த்து கலை மரபில் பாணர்கள் எல்லா இடங்களிலும் ஒரே தன்மையில் பாடியதை இப்பாடல் தெரிலிக்கின்றது.


பாணர்களின் பாடல்கள் நிகழ்த்துவோனின் சொந்தப்பமைப்பாக அன்றிசத் தமது முன்னோர்களின் படைப்பாக இருந்தமையை அறியமுடிகிறது பாண் பர்ல்களின் தன்மையை வெளிப்படுத்தும் சி. எம். பௌரா செண்பகம் ராமசாமி 39).


ஒரு பாணன் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் பழம்

பாடல்களைப் பாடவல்லவன் என்றுதான் அவன் குறிக்கப்

படுவானே தவிர அவனை ஒரு படைப்பாசிரியன் என்று

அக்காலச் சமுதாயம் கருதவில்லை


என்கிறார். இதனாலேயே பாணர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்தி அறியும்படிப் புலவர்கள் வலியுறுத்துகின்றனர். தமது முன்னோர்களின் பாடல்களைப் பாடுதல் என்கிற நிலையில் பாண்பாடல்கள் வாய்மொழித் தன்மை பெற்றுக்காணப்பட்டன.


திரும்பத் திரும்ப வரும் சொற்களினாலும் ஒலிள் குறிப்புகளினாலும் பாடல்கள் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுப் பாடப்பெற்றுள்ளன. இதனால் வாய்மொழித் தன்மையுடனேயே பாண்பாடல்கள் இருந்துள்ளன.


பண்பாடல்களின் குறிப்பிடத் தகுந்த தன்மை அவை எழுதி

வாசிக்கப் பிறந்தவை அல்ல; பாடவும் கேட்கவும் பிறந்தவை

யாகும் அவை முன்னிருப்பவரை அடிக்கடி விளித்துச்

சொல்லும் பெரும் பாலும் பெயரையும் வினையையும் மூன்று

முறை நான்குமறை கூறுவது அவற்றின் இயல்பு

(தொ. பரமசிவன், 38)


எனப் பாண்பாடலின் தன்மையைத் தொ. பரமசிவன் கட்டுகின்றார் திரும்ப கூறும் சொற்களைக் கொண்டு பொது விதி ஒன்றைத் தமிழவன் கூறுகின்றார்(தமிழவன், (53 -71)


1. திரும்ப திரும்ப வரலில், வரும் சொல் விளியாக வருதல்

2. திரும்ப வரலில், சொல் பொருளற்ற ஒசைக்குதவும் சொல்லாக வருதல்.

3. விளியாகவோ ஒசைக்குதவும் சொல்லாகவோ அன்றி வேறு விதமான சொல்லாக இருத்தல்

4. திரம்ப வரலில் வரும் சொல் அடிக்கொரு முறையோ, நான்கு அடிக்கொரு முறையோ, ஐந்து அடிக்கொரு முறையே அமைதல்

இந்த வாய்மொழிப் பாடல் மரபுகள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப்பெறுகின்றன. வாய்மொழி பாடலுக்குரியதான இந்த அலகுகள் பாண் பர்ல்களிலும் அமைந்திருக்கலாம். சங்க இலக்கியங்களில் காணப்படும் வாய்மொழித் தன்மைகள் குறித்துப் பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களில் சி. எம். பௌரா, ஜேஆர், மார் போன்றோரின் கருத்துகளை அரணாகக் கொண்டு, சங்க இவக்கியம் வாய்மொழித் தன்மையை மிகுதியாகக் கொண்டிருக்கிறது என விளக்கிய க. கைலாவபதியின் ஆய்வு முதன்மையானதாகத் திகழ்கிறது.


சங்க இலக்கியத்தில் காணப்பெறும் வாய்மொழித் தன்மைகள் பாண்பாடல் மரபுகளால் உருவானவையாக இருக்கலாம். வாய்மொழிப் பாடல் வடிவங்கள் பாணர்களுக்கு மட்டும் உரிமையுடையன அல்ல பாணர்கள் மட்டுமே வாய்மொழிப் பாடல்களைத் தொழில்முறையில் பாடியுள்ளனர். பிறர் எவரும் தொழில் முறையாகப் பாடததால் இப்பாடல்கள் பாண்பாடல்களாகக் குறிக்குப் பெறுகின்றன.


பாண்பாடலும் இலக்கிச் செழுமையும் : -


சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறப் பாடல் விடிவம் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினாலும் அடிப்படையில் அவை நன்கு மெருகூட்டப்பட்ட இலக்கிய வடிவங்களாகவே காணப்படுகின்றன அகம் புறம் என்னும் இருபெரிய விதிகளுடன் தெளிவான வரையறைகளுக்குள் சங்க இலக்கியம் இயங்குகின்றது. சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் இவ்விலக்கிய மரபுகளில் நாட்டுப்புறப்பாடல் தன்மையும் காணப்படுவது சங்க இலக்கியத்தின் பரந்த காலத்திட்டத்தின் வெளிப்பாடே எனலாம். சங்க இலக்கியம் 450 ஆண்டு கால எல்லையைக் கொண்டது என்ற கருத்தின் அடிப்படையில் இல்வேறுப்பட்ட கவிதை நிலைகளைப் புரிந்து கொள்ளலாம்; எஸ் வையாபுரிப்பிள்ளை.


முதசங்க இலக்கியம் பிற்சங்க இலக்கியம் என்று இரண்டு

கூறுகளாக இந்த (சங்க) இலக்கியங்களைப் பகுத்துக்கொளவது

நலம் இவற்றுள் முற்சங்க இலக்கியங்கள்; நற்றினை

குறுந்தொகை ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு

(வையாபுரிப்பிள்ளை, 5)


என்று சங்க இலக்கியங்களைப் பிரித்துக்கொள்கிறார். இது ஒரு காலத்தை நிர்ணயித்து அதற்கு முன் பின்னாகப் பிரிக்கப்படுவதன்று இலக்கியப் பரிணாமத்தின் அடிப்படையிலும் கையாலும் கருத்துக்களின் அடிப்படையிலுமே பிரிக்கப்படுகிறது. எளிமையான வடிவத்திலிருந்து சிக்கலான வடிவம் தோன்றுவதே இயற்கை சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக் கரதப்படும் கலித்தொகை, திருமுருகாற்றுப்படை பரிபாடல் ஆகியன நெடும்பாடல் வடிவின. இவை சிக்கலுக்குரிய கவிதை வடிவத்தையுடையவை என்பதைப் பரிபாடல் கலித்தொகையின் செய்யுள் உறுப்புகளாலும் அறியலாம்.


முற்சங்க இலக்கியங்களிலேயே வாய்மொழித் தாக்கங்கள் மிகுதியாக இருப்பதனை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இவவிலக்கியங்களில் செழுமையான தமிழும் இன்மையும் அழகும் நிரம்பிய கவித்துவழும் காணப்பொறுகின்றன. இந்தக் கவித்துவம் புதிதாக உருவாகின்ற இலக்கியங்களில் இடம்பெறமுடியாது.


சங்க இலக்கியங்களுக்கு முன்பும் தமிழில் இலக்கியவளம் இருந்தமையை இவை காட்டுகின்றன. இச்சொழுமைக்கு அடிப்படையாக மறைந்து போன தமிழ் நூல்களும் இருந்திருக்கலாம்.


பாணர் இசைக்கருவியுடையோர் : -


சங்க இலக்கியங்களில் தடாரி, முழவு, பறை, துடி, ஆகுளி, எல்லரி, hதலை, ஆகிய தோற்கருவிகளும் குழல், கொம்பு, தூம்பு, நெடுவாக்கியம் ஆகிய துளைக்கருவிகளும் சீறியாழ், பேரியாழ் எனும் நரம்புக் கருவிகளும் காணப்பெறுகின்றன. இசை இசைக்கருவி நிகழ்த்து கலையில் ஈடுபட்ட பாணர்களே கைக்கொண்டிருந்தனர்  கலைகளை நிகழ்த்தும் போது அவ்விசைக் கருவிகளை அவர்கள் இசைத்துள்ளனர்.


இந்த இசைக்கருவிகளை எவ்வாறு இசைத்தார்கள் என்பதையும் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.         (11)

(பொரு, 11, 19 : சிறு, 30)


கைக்சடுடு இருந்த என் கண் அகன் தடாரி

இருசீர்ப்பாணிக்கு ஏற்ப       (12)

(பொரு, 70, 71)


எனத் தடாரிப்பறையில் இரண்டு விதமான இசைகள் இசைக்கப்பட்டமையையும் முழவன் ஓசைக்குப் பண்ணோசை இயைந்து போலதையும் இந்த இசைகளுக்கு ஏற்ப விறலியர் ஆடுவதையும் பெரும்பாணாற்றுப்படை  (109, 110) காட்டுகின்றது.


இசைக் கருவிகளுடன் இணைந்த பாண்பாடல் பற்றிய செய்திகள் பாண்பாடல்கள் நிகழ்த்துகலைகளாக இசைக்கப்பட்டமையைக் காட்டுகின்றன. இப்பாடல் மரபே புலவர்களிடமிருந்து பாண்மரபினரை வேறுபடுத்தும் கூறாகக் காணப்படுகின்றது.


சங்க இலக்கியத்தில் பாணர்கள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



சங்க இலக்கியம் பாணர், பொருநர், கூத்தர், விறலியர் எனப் பல்வகைக் கலைஞர்களைப் பற்றிப் பேசுகிறது. இவர்கள் ஆடல் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். பாணர் எனும் சொல் பண் பாடுவோர் எனும் அடிப்படையில் தோன்றியுள்ளது. சங்க இலக்கியம், இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பாணர்களைச் சுட்டுகிறது.


ஏழு நரம்புகளும் இயல்வது பண் என்றும், நரம்புகள் குறைந்து இயல்வது திறம் என்றும் கூறப்படும். திறங்களுள், ஆறு நரம்புடையது பண்ணியல் என்றும், ஐந்து நரம்புடையது திறம் என்றும், நான்கு நரம்புடையது திறத்திறம் என்றும் பெயர்பெறும், நிறை நரம்புடையவை, குறை நரம்புடையவை எல்லாவற்றையுமே பண் என்று குறிப்பதுமுண்டு.


ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டளவில் இயற்றப்பெற்ற தேவாலங்களில் எல்லாப்பண்களும் கையாளப்பட்டிருக்கலாம். ஆனால் தேவாரப்பாடல்கள் பலகாலம் மறைந்துகிடநது, பின்னால் நம்பியாண்டார் நம்பி காலத்தில் இப்பண்களை ஆராய்ந்து திட்டம் செய்தபோது தேவாரப்பாடல்கள் இருபத்துமூன்று பண்களிலேயே இசை வகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. தேவாரங்களில் காணப்பெறாத நான்கு, ஐந்து பண்கள் ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ளன.


பாணர்மாலையர் - பாண்குல மகளிர்


பாணன் - பாண்சாதியிணன், வீணன், சிவப்பத்தனான ஒர் அசுரன்


பாணாற்றுப்படை - ஒரு வள்ளலிடத்தில் பரிசு பெற்று வரும் பாணனொருவன் மற்றொரு பாணணை அவ்வள்ளலிடம் பரிசு பெறுதற்கு வழிச் செலுத்துவதைக் கூறும் புறத்துறை


பாணாறு - பாணாற்றுப்படை


பாணான் - தையற்காரச் சாதியான்


பாணு - பாட்டு


பாண் - பாட்டு, பாணாற்றுப்படை, பாணர்சாதி, புகழ், வார்த்தை, தாழ்ச்சி


- செந்தமிழ் அகராதி


ந.சி. கந்தையா


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்


பாணர்கள் : -


இசைக் கலைஞர்கள் பற்றிப் பல செல்திகளை அறிய முடிகிறது. இவர்கள் பாணர் எனப்பட்டனர் “பண்” என்பதனடியாகப் பிறந்தது இச்சொல்லாகும் மன்னர்களும் வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாராட்டிப் பரிசளித்தனர். “பாண்பசிப் பகைஞர்” என்று வள்ளல்கள் பாராட்டப்பட்டனர்.


சில வள்ளல்களைச் சார்ந்து பாணர்கள் இருந்துள்ளனர் “பாணர் பெருமகன்” என அவர்கள் புகழ்ப்படுவர். பாணர்கட்குப் பொற்றாமலரையையும், பாடினிகட்குப் பொன்னிரி மாலைகளையும் வள்ளல்கள் கொடுத்தனர். (பொரு. 159 – 162)

பாணர்கள் பழுமரம் நாடும் பறவைகள் போல வள்ளல்களை நாடிச்சென்றனர்.

மலைபடு – 369 - 570

அழல் புரிந்த அடர் தாமரை. (புறம் 29 : 1 – 5)

ஐது அடாடந்த நூல் பெய்து, (புறம் 109 – 17 – 18)

புனவைனைப் பொலிந்த பொலன்நறுற் தெரியல் (புறம் 221 – (1 – 10)

பானுமயிர் இருநடதலை பொலியச் சூடிப், 239 : 17

பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 398 : 18 – 29


இவர்கள் பரிசு பெற்று வருகையில் எதிர்வரும் தம்மினத்தவர்களை அவ்வள்ளல்கள்பால் ஆற்றுப்படுத்தினர். பெருநகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன் இவர்களில் சிலர் மீன் பிடித்தலும் உண்டு. பாணர்கட்கு நிலமளித்தலுமுண்டு பிற்காலத்தில் இது “பாணப்பேறு” எனப்பட்டது. இவர்கள் அனைத்து மக்களாலும் எதிர்கொள்ளப்பட்டுப் பேணப்பட்டனர் என ஆற்றுப்படை நூல்கள் கூறுகின்றன.


பண் : -


இனிமை பயக்கும் இசை தோன்றும்படியாகச் சுரங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்குவதாற் பிறப்பது பண் எனப்படும். இதுவே வடமொழியில் இராகம் என்று கூறப்படும்.


நெஞ்சு, மிடறு, நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை, ஆகிய ஸ்தானங்களில் ஏழிசைகள் தோன்றும் என்றும், இவ்வேழிசைகளில் எடுத்தல், படுத்தல், நலிதல் என்றும், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு ஆகிய கிரியைகளைப் பண்ணுவதால் பண் பிறக்கும் என்றும் இசையிலக்கணம் கூறும், முதல், முறையை, முடிவு, நிறைவு, குறைவு, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினெரு பாகுபாடுகள் பண்ணிற்கு இலக்கணமாகும்.


109 – (17 – 18)

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே


221 – (1 – 10)

பாடுநாக்கு ஈந்த பல்புக ழன்னே;

ஆடுநர்க்கு ஈத்தபேரன் பினனே;

அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;

திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;

மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;


இசைக் கவிஞர்கள் பற்றியப் பல செய்திகளை அறியமுடிகிறது இவர்கள் பாணர் எனப்பட்டனர். “பண்” என்பதனடியாகப் பிறந்தது இச்சொல்லாகும் மன்னர்களும் வள்ளல்களும் இவர்களைப் பெரிதும் பாரட்டிப் பரிசளித்தனர். “பண் பசிப் பகைஞர்” என்று வள்ளல்கள் பாராட்டப்பட்டனர் சில வள்ளல்களைச் சார்ந்து பாணர்கள் இருந்துள்ளனர்.


பாணர் பெருமக்கள் என அவர்கள் புகழ்ப்படுவர் பாணர்கட்குப் பொற்றாமரையையும், பாடினிகட்குப் பொன்னி மாலைகளையும் வள்ளல்கள் கொடுத்தனர்.


பண் உனும் இவ்வரிய தத்துவம் சங்க காலத்திலேNயு மிகவும் வளர்ச்சியுற்றிருந்தது என்பதற்குப் பல சான்றுகள் சங்க நூல்களில் உள்ளன. பரிபாடலில் பாக்களை இயற்றியவர் பெயரும் அவற்றிற்குப் பண் அமைத்தவர் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன.


புறநானூற்றுச் செய்யுள் ஒன்றால் (149) பண்களுக்குரிய பொழுது இன்னாது என்ற மரபு இருந்ததாகவும் அறிகின்றோம். அரங்கேற்று காதை பல பண்களுடைய பண்டைய வடிவம் இலக்கணத்தோடு கிடைக்கின்றது.


பண்களின் மொத்தத் தொகை நூற்றமூன்று (103) இவற்றுள் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், நெய்தல்யாழ் என்பவை நாற்பெரும் பண்கள். குரல் - இனி உறவு என்னும் இளிக்கிரமமே எல்லாப் பண்ணிற்கும் அடி நிலையாகும்.


சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் ஆகியவையும் புறத்திலும் பதிற்றுப்பத்திலும் வரும் பல பாடல்களும் இவர்களின் வாழ்க்கையின் விளக்கமாக அமையும். இவர்கள் திருவிழாக்களின்போது மக்களை மகிழ்வித்தனர். மன்னரின் அவைக்களத்தில் பாடி மகிழ்வித்தனர்.


மன்னரின் அவைக்களத்தில் பாடி மகிழ்வித்தனர் தலைமக்களிடையே தூதுவர்களாக விளங்கினர். பெருநகரங்களில் பாணர் சேரிகள் இருந்தன. இவர்களில் சிலர் மீன் பிடித்தலும் உண்டு. பாணர்கட்கு நிலமளித்தலுமுண்டு பிற்காலத்தில் இது “பாணப்பேறு” எனப்பட்டது. இவர்கள் அனைத்து மக்களாலும் எதிர்கொள்ளப்பட்டுப் பேண்ப்பட்டனர் என ஆற்றுப்படை நூல்கள் கூறுகின்றன.


சங்க இலக்கியங்கள் வழி தொல்காப்பியத்தில் கோட்பாட்டாக்கம் பெறும். திணை எனும் கருத்து தொன்மையான தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது. இது நிலவுமைக் காலத்துக்கு முந்தைய இனக்குழு சமுதாயத்தின் பங்களிப்பாகும். தமிழ்ச் செவ்வியல் மரபின் தனித்தன்னையை அடையாளப்படுத்தும் முக்கியக் காரணியாகவும் இது வியங்குகிறது. வடபுலத்துச் சமய மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும் இடம்பெறச் தொடங்கிவிட்ட சங்க மரபில் திணைக் கருத்தின் தொடர்ச்சியும் செல்வாக்கும் அதன் சிறப்பைப் புலப்படுத்துகின்றன. சிலம்பிலும் பக்தி இலக்கியங்களிலும் காப்பியக் கட்டமைப்பிலும் தணைக் கருத்து தொடர்ந்து செல்வாக்கு பெற்று விளங்குகிறது. இனக்குழு சமுதாயத்தின் தகவுகள் சிதைந்து நிலவுமைச் சமுதாயத்தில் வேந்தர்களும் கடவுளரும் ஏற்றம் பெற்ற காலத்திலும் திணை மரபு போற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. திணை என்பது பாவியல் சார்ந்த கோட்பாடாக வளர்ச்சி பெறுவதற்கு முன்னர் இயற்கையோடு இயைந்த வாழ்வியல் கூறுகளையும் அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது இதற்குக் காரணம்.


திணை எனும் சொல் சங்க இலக்கியத்தில் பலவேறு பொருள்களில் வழங்கப் பட்டிருப்பினும் குடி பொருளில் (புறம் 24, 27,159,373 குறுந். 72, பதிற், 31,72) ஆளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குடி என்பது மக்களை மட்டுமின்றி இயற்கை மற்றும் கடவுளரோடு இணைந்த ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வற்ற பொதுமைக் சூழமைவைக் கட்டுவதாகும். இத்தகைய ஒருங்கிணைந்த குடியைச் சுட்டிய திணை எனும் கருத்தே பின்னர் திணைக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது.


துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை என மாங்குடி கிழார் குறிப்பிடுகிறார் (புறம் 335). சங்க இலக்கியப் பாடுநர் குழாங்களாகப் பாணர், புலவர், கோடியர். வயிரியர், கண்ணுளர், கிணைஞர், பொருநர், அகவுணர் ஆகியோரை அடையாளப்படுத்துகிறார் அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், ப. 191) இத்தகைய குடிகள் குறித்த விரிவான ஆய்வுகள், தமிழ்த் திணைக் கோட்பாட்டிற்கான மூல ஊற்றுக்களைக் கண்டறியத் துணைபுரியும்.


தமிழ்ப் பாணர் பற்றிய வெ. வரதராசன் (தமிழ்ப் பாணர் வாழ்வும் வரலாறும்) கா. சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும்) அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும்), மொதையன் (சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும்), பக்தச்சலபாரதி (சங்க காலப் பாணர்களும் கோண்டு பர்தான்களும்), பிரபஞ்சன் (பசி உருக்குலைந்த பாண் சமுகம்), கமில் சுவலபில், ஜார்ஜ் ஹார்ட், கைலாசபதி போன்றோரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. கவிஞர் இன்குலாப்பின் ‘iஒளவி’ நாடகம், பாணர் குடியிருப்பையும் பாணர் வாழ்வியலையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. இலக்கிய நோக்கு மட்டுமின்றி. வரலாறு, மெய்யியல், சமூகவியல், மானுடவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பார்வை தமிழ்த் தொல்குடியினைரப் பற்றிய தொடராய்விற்கு இன்றியமையாதது.


இனக்குழச் கமுதாயத்தில் பாட்டு என்பது இசையோடும் ஆட்டத்தோடும் இனயந்ததாக வெளிப்படுவது. இதிலிருந்து மாறுபட்டு பாட்டு என்பது புலமைச் செயற்பாடாக எண்ணப்பட்ட நிலையில்தான் செய்யுள் மரபு தொடங்குகிறது. இனக்குழுச் சமுதாயத்தில் பாட்டு என்பது பாணர் குடிகளுக்கு உரியதாக இருந்தது. இந்த மரபு நிலவுடமைக்  காலத்திலும் தவிர்க்க இயலாததாய் ஆதவையான மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வகையில்தான் சங்க இலக்கிய ஆக்கங்கள் பாணர் மரபைத் தழுவியவையாக அமைந்துள்ளன. இதுவே திணைக் கோட்பாட்டின் நிலையேற்றிற்கும் காரணமாக அமைந்தது. பாணர் மரபிலிருந்து விடுபட்டு பாடல் என்பது பிரக்கைஞபூர்வமான ஒரு புலமைத் தொழிற்பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியது என கா. சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும் ப. 34) குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.


புராதன பாடல் வளர்ச்சியல் மூன்று கட்டங்கள் இருப்பதை அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரகும் மாற்றமும், ப. 9, 10) எடுத்துக் காட்டுகிறார். iஅவ 1. நேரடியாகப் பாத்திரங்கள் பாடியவை. 2. பாத்திரங்களாகப் பாணர்கள் பாடியவை 3. பாணர்கள் போலப் புலவர்கள் பாடிவை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாணர் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருப்பினும், சங்க இலக்கியத்தில் பாணர் பாடியதாகக் குறிப்பிடும் எந்தக் பாடலையும் காணமுடியவில்லை. மேலும் கற்பில் கூற்றுக்குரிய வர்களாகவும் (தொல். பொருள். 494) வாயில்களாகவும் (தொல். பொருள் 191) பாணர்களைத் தொல்காப்பிய அகத்திணை சுட்டுகிறது. இதற்குச் சங்கப் பாடல்களும் சான்று பகருகின்றன.


ஐங்குநுறூற்றில் பணான் பத்து எனும் தலைப்பில் பத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் இடம்பெறும் ஆற்றுப்படை எனும் துறை சங்க காலத்திலேயே தனி இலக்கிய வகையாக வளர்ச்சி பெறுவதையும் பத்துப்பாட்டில் காணமுடிகிறது. சங்கப் பாடல்கள் எழுதப்பட்ட காலத்திற்கும். அவை தொகுப்பாக்கம் பெற்ற காலத்திற்கும் திணைறும் கருத்து இலக்கணக் கோட்பாட்டாக்கம் பெற்ற காலத்திற்கும் உள்ள இடைவெளிகள் நன்கு ஆராயப்படாமல் பாணர் மரபின் மூலத்தையும் தொடர்ச்சியையும் நன்கு அறிய இயலும். 

பாணர்களின் வாய்மொழி சார்ந்த இசைப் பாடல்கள் படிப்படியாகப் புறந்தள்ளப் பட்டு புலவர்களின் ஆக்கங்கள் ஏற்றம் பெறுவதைத் தெளிவாகக் காணமுடிகிறது. தொல்காப்பியத்தில் பண்ணத்தி போன்ற இலக்கிய வகைக்கு வழங்கப்பட்டுள்ள இடம் ஒரு வகையில் பாணர் மரபைத் தவிர்க்க முடியாத ஓர் ஏற்பாடாககே கருத வேண்டியுள்ளது.


பாண்களின் பாட்டு மட்டுமின்றி, பாணர் குடியினரும் புறந்தள்ளப்படும் நிலையைக் காணமுடிகிறது. அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும், ப. 192 – 203) குறிப்பிடுவது போல, பாணர்கள் பெரும்பாலும் குறுநிலக் கிழாரோடும் புலவர்கள் வேந்தரோடும் அடையாளப்படுத்தப் படுகின்றனர். பரிசளிப்பு முறையில் பாணர் புலவரிரடயே வேறுபாட்டைக் காணமுடிகிறது. பாணர்கள் கல்லாவாய்ப் பாணர் எனக் குறிக்கப் பெறுவதும், புலவர்கள் செந்நாப்புலவர் என ஏத்தப் பெறுவதும் நிகழ்கிறது.


தனித்தன்மை வாய்ந்த திணைக்கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய பாணர்கள் தமிழகத்தின் தொல்குடியினர். இவர்களின் வசிப்பிடம் பாண்சேரி, பாண. குடி எனப்பட்டது. இவர்கள் இசையை வாழ்வாகக் கொண்டவர்கள்;. கூடி வாழும் இயல்பு கொண்ட குழு மனத்தவார். குழவாகச் சென்று மக்களை மகிழ்வித்தவர்கள். இக்குழவில் பாடினி, விறலி, கூத்தர் இடம் பெறுவதுண்டு. இனக்குழச் சமுதாயத்தின் பொதுமை வாழ்வு இவர்களுக்குரியது. நிலவடமைச் சமுதாயத்தில் வறுமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டவர்கள்.


பண்டை பாணர் மரபு பழங்குடிகளின் மூதறிவாளர்களிடமிருந்து தோன்றுகிறது. மந்திர ஆற்றல், குறி சொல்லுதல், சடங்குகள், நிகழ்த்துதல், மருத்துவம் பார்த்தல் ஆகிய பண்புகளைக் கொண்ட முதுவாய் மக்கள் மரபில் பாணர்களை நோக்க இயலும் புறநானூற்றில் இடம்பெறும் முதுவாய் இரவல் (புறம். 48) ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.


ஆற்றுப்படை நூல்கள் பாணர்களின் கூற்றாகப் புலவர்களால் பாடப்பட்டவை, இப்பாடல்கள் மன்னரைச் சிறப்பிக்கும் நோக்கில் பாடப்பட்டவை. பாணர் வாழ்வியல் ஒரு இலக்கியப் போக்காகவே இவற்றில் அமைகிறது. அரசுகள் நிறுவப்பெற்ற சமுதாயத்தில் பாணர்களின் பங்கு என்ன என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். ஆயினும், ஆற்றுப்படை நூல்கள் சமகாலத்திய பாணர் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கான அடிப்படைகளை வழங்கியுள்ளன.


மயிலை சீனி. வேடங்கடசாமி ‘சிறுபாணன் சென்ற பெருவழி’ என்ற கட்டுரையினை (1961) வரலாற்று நோக்கில் எழுதியுள்ளார். சிறுபாணாற்றுப்படையில் இடம்பெறும் எயிற்பட்டினம். வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களளை இக்கால ஊர்களோடு அடையாளப்படுத்தி, பாணன் சென்ற வழியினைப் படம் வரைந்து விளக்கியுள்ளார். கட்டுரையாளர் இவற்றில் எயிற்பட்டினம் நெற்தல் நிலப்பட்டினம். வேலூர் முல்லை நில குடி, ஆமூர் மருதநில ஊர். மேற்சுட்டிய குடியிருப்புகளின் தன்மை அங்குள்ள மக்களின் இயல்புகள், அவர் தரும் உவ ஆகியவற்றைப் பாணன் விவரிக்கிறான். தாம் சென்ற வழி குறித்துப் பாணர்கள் சுட்டுவதாக அமைந்த செய்திகள். அவர்களுக்கிருந்த நிலவியல், மக்கள் வாழ்வியல் பற்றிய அறிவைத் துல்லியமாக உணர்த்துகின்றன.


பெரும்பாணற்றுப்படையில் உமணர், ஆயர், உழுவார், அந்தணர் அவர்தம் குடியிருப்புகள், தொழில்கள், உணவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. உமணரின் உப்பு வண்டிகள், மிளகுப் பொதி சுமந்த கழுதை சாத்து, விருந்து ஓம்பும் எயினர், மறவர் வீர வாழ்வு, ஆயர் வாழ்வு, உழவர் பெருமை, வலைஞர் வாழ்வு என மக்கள் வாழ்வியலை நுணக்கமாக அறிந்தவராகப் பாணர் படைக்கப்பட்டுள்ளனர் மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியவனாகவும் பாணர் படைக்கப்பட்டுள்ளான். மக்களை மகிழ்விக்கும் கலைஞராகவும். மக்களோடு அணுக்கமாகத் தொடர்பு கொண்ட நாடோடிக் குழவாகவும் பாணர்களின் வாழ்வை ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன.


பாணரின் பன்முகப்பட்ட அறிவுத் திறனும் மக்கள் தொடர்பும் ஆட்சியானர் களுக்குப் பயன்தரத்தக்கவை. நிலவுடைமை சார்ந்த அதிகாரத்திற்கான ஏற்பு மனநிலையைச் சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஆட்சியாளர்களின் பொருமையை மக்களிடையே பரப்பு வதற்குமான தொடர்பாளர் களாகப் பாணர்கள் தேவைப்படுகின்றனர். இதனால்தான் பாணர் மரபுகளும் சங்க காலத்தில் தேவைப்பட்டிருக்கின்றன.


சங்க காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரை பாணர் மரபு பல்வேறு காரணங்களால் பல்வேறு நிலைகளில் போற்றிக் கொள்ளப்பட்ட நிலையும் கவனத்திற்கு உரியது. சிலப்பதிகாரத்தில் பாணர்களின் பெருமைக்குரியமரபு குறிக்கப் படுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில்.


“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழம்


வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்


அரும்பெறன் மரபின் பெரும்பாண் இருக்கையும்”


என பாணர் குடியிருப்பு சுட்டப்படுகின்றது ஆயினும், பதினென்கீழ்க்கணக்கு நூலில் பண் அமைத்துப் பாடுபவர்களும் யாழ் இசைப்பவர்களும் இல்லாத நிலைக்கு வருந்தும் குரலைக் காண முடிகிறது. தேவாரம் எழுந்த காலத்தில் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் சிவனடியார். திருஞான சம்பந்தரோடு பல தலங்களுக்கும் சென்று பாடியைதத் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடுகிறது. இதுபோன்றே, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுவதை வைணவ மரபிலும் காண்கிறோம். நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு ராசராசன் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப் பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை (மதங்கசூளாமணி) வைத்துப் பண்முறை வகுத்த செய்தியும் பாண் மரபின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. பாணர் மரபினர் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சூற்றி, சாக்கை, அறிஞ்சி என்பவராக பணியாற்றியுள்ளதை ராசராசன் கல்வெட்டுகள்வழி அறிய முடிகிறது. தமிழ் இசை குறித்த அண்மை ஆய்வுகளில் பாணர் மரபை மீட்டெடுக்க இயலும்.


பாணர் மரபை இனவரைவியல் தரவுகளை முன்வைத்து பக்தவச்சல பாரதி ஆய்ந்துள்ளார். கோண்டுவானா பகுதியில் வாழும் பர்தார்களின் வாழ்வியலையும். அவர்தம் இசைத் தொடர்பையும் பாணர்களோடு இவர் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளார். இக்காலத்தில் பாணர்கள் தமிழகத்தில் ஒரு சிறுபான்மைச் சாதியினராக அடையாளம் பெறுவதையும். இசையோடு எவ்வகையிலும் தொடர்பற்ற பல்வேறு உதிரித் தொழில்களைச் செய்து கொண்டு அன்றாட வாழ்விற்குப் போராடும் நலிந்த பிரிவினராக வாழ்வதை தர்ஸ்டன், தெயரமசிவம் ஆகியோர் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இனக்குழச் சமுதாயத்தின் தனித்தன்மை வாய்ந்த பாணர் மரபு. நிலவுடைமை சமுதாயத்தில் படிப்படியாகச் சிதைக்கப்படுகிறது. வறுமை வாழ்வுக்கு ஆளான நெருக்கடியான நிலையிலும் இனக்குழவின் பொதுமை மரபுகளையும் வாழ்வியல் அறங்களையும் வற்புறுத்தும் போக்கைப் பாணர் மரபு பேணுவதைக் காணமுடிகிறது. பாணர் மரபுகளை அழித்துக் கொண்டு தமிழகத்தில் எழுச்சி பெற்ற வேந்தர் மரபை அவர்களால் வீழ்த்த இயலவில்லை, தம் திஜணைவாழ்வைப் பாதுகாக்கவும் அவர்களால் முடியவில்லை. ஆpனும் திணைக் கோட்பாட்டின்வழி பாண் மரபின் மேன்மைகளை மீட்டுரவாக்கம் செய்ய இப்போது நாம் முயற்சி செய்யலாம்.