திங்கள், 26 ஏப்ரல், 2021

சித்தர்களின் வரலாறு

  

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



‘சித்’ என்ற அடிச் சொல்லிலிருந்து சித்தன் என்ற சொல் பிறக்கும். ‘சித்’ என்பதற்குப் பேரறிவு என்பது பொருள். பேரறிவு பெற்றவர்கள் சித்தர்கள். “சித்தர்கள்” என்றால் அறிவு படைத்தவர்கள் மற்றும் அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானிகள் என்று பொருள் சொல்லுவதே பொருத்தமாகும் என்பர். ‘சித்து’ என்னும் சொல்லைக் ‘மிஸ்டிசிஸம்’ எனவும் சித்தர்களைக் ‘மிஸ்டிhக்ஸ்’ எனவும் ஆங்கிலத்தில் கூறுவர்.  


உலகில் சிறந்தவர்கள் உலகியல் நடப்புக்கு மாறானவர்கள், சித்துக்கள் செய்வதில் வல்லவர்கள், அலைபாயும் சித்தத்தை அடக்கியவர்கள் சித்தம் - சித் - சித்தர் எனவும் சித்தம், மனம், புத்தி, அகங்காரம், ஆகிய நான்கும் அந்த கரணங்கள் என்பர். இவற்றுள் மனம் நினைக்கும் புத்தி விசாரிக்கும், அகங்காரம் எழுப்பி வைக்கும், சித்த் முடிவு செய்யும், இவை இனைத்தும் சேர்ந்த தொகுப்பி;னைச் சித்தம் என்பர். இத்தகைய நிலையனைப் பெற்றுவர்கள் சித்தர் ஆவர்.


நன்னெறியில் ஒழுகும் மேலோரைச் சான்றோர் எனவும் பேரறிவாளர் என்றும் இரு பிரிவினராக்குவர். அறவோரும், அந்தணரும் முதல் பிரிவைச் சார்ந்தவர்கள். ரிஷ, முனி, சித்தர் ஆகிய மூவர் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவர்கள். சித்தத்தின் சலனம் மற்றும் தத்துவங்களின் தோற்றம் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள், இவர்களாது தன்மை.


சீரிலுயரட்; சித்தயார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி

(சித்தப் ஞானக்கோவை கடுவெளிச் சித்தர் ப – 268

பாடல் - 18)


சித்தி, சிவன் சித்திக்கும் என்பர். இதில் சித்திக்கும் என்பதற்கும் ‘கிடைக்கப்பெறுதல்’ அல்லது ‘அடையப்பெறுதல்’ எனப் பொருளாகிறது. இதனைப் பெறத்தக்கபேறு எனக் கருதப்படுகின்ற எல்லாம் அறிந்த நிலை கைவரப்பெறுதல் சித்தி எனவும் அதனை அடைந்தவர் சித்தர் எனபதும் கருதப்பட்டமை விளங்கும்.


இறைவனைச் சத், சித், ஆனந்தம் எனக் குறிப்பர் ‘சத்’ என்பது உள்ளது. ‘சித்’ என்பது பேரறிவு. ஆனந்தம் என்பது பேரின்பம், பேரறிவுப் பொருளான இறைவனை உணர்த்தும் ‘சித்’ என்ற சொல்லை அடிச் சொல்லாகக் கொண்டு சித்து – சித்தன் எனக் கருதுவர்.


சிவனைச் சித்தனாகக் கொண்டு சமயச் சார்பற்ற நிலையில் பாடிய யோகியர் ‘சித்தர்கள்’ எனக் சுட்டப்படுகின்றன. ‘சித்தி’ என்ற சொல்லுக்குப் பேறு என்று பொருளும் உண்டு. ‘பேறு’ என்பது இறை இணைவுக்குப் பின்பாகிய வாய்ப்பினைக் குறிக்கும். இப்பேற்றை அடைந்தவர் சித்தர்.


நான்கு வகை முத்திகள் சாலோகம், சாம்பம், சாருபம், சாயுச்சியம் இறைவன் உலகில் இருக்கும் பேறு சாலோகம், இறைவன் அருகில் இருக்கும் பேறு சாமீபம் இறைவன் ருபம் அடையும் பேறு சாருபம் இறைவனோடு ஒன்றும் பேறு சாயுச்சியம் முதல் மூன்றும், பதமுத்தி எனப்படும். இறுதியாகிய சாயுச்சியம் ‘சித்தி’ எனப்படும் இதனை அடைந்தவர்கள்  சித்தர்கள் ஆவர் இவர்கள் இறைவனோடு ஒன்றும் பேறு பெற்றவர்கள் என்பது இதனால் விளக்கும் சட்டைமுன்சித்தர்.


ஏகாமல் வாசனையை யறிந்தோன் சித்தன்

- சித்தர் ஞானக்கோவை – பா 156


என்று கூறுவர். இங்கு வாசனை என்பது கர்ம வினையாகும். பிறவி தோறும் தொடர்வது இதன் இயல்பு இதனை எழும்பாமல் தடுப்பவன் ‘ஞானி’ எனவும் ஏறாமலேயே தடுப்பவன் சித்தன் எனவும் கருதப்படுகின்றனர். கர்ம வினையை அடியோடு அழிப்பவன் சித்தன் என்பது இதனால் விளங்கும் கொங்கணர், கருவூரார், சட்டைமுனி இராமதேவர் முதலியோர் விலையைப் பூசிப்பவன் சித்தன் எனவும் குண்டலினியை யோக மார்க்கத்தின் மூலம் மேலே கொண்டு வருபவன் சித்தன் எனவும் விளக்கம் தருகின்றனர்


தமிழகத்தில் சித்தர் மரபு :


தமிழகத்தில் தொன்று தொட்டுச் சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் தொல்காப்பியர்,


“மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன்”.


அறிவினை சித்தராகக் கொள்ள இடம் உண்டு அறிவினை விளக்கும் இளம்பூரணர், வானியலோடு கலந்து  வருங்காலம் உணர்த்தூகின்ற ‘கணியன்’ என்று கூறுகிறார். நச்சினார்க்கினியர், காமம் வெகுளி, மயக்கமில்லாத ஒழுகலாற்றினன் இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்யுவடையோன், என்றும் விளக்குகிறார். சித்தர் என்ற சொல்லூக்கு சொல்லுக்கு பொருளாக அமைகிறது. அகத்தியர் ஒர் அறிவர் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

“நிலமிசை வாழ்நிர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கினலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரோடு கொட்கும்

அவிர்சடை முனிவர்”.

புறம்  


என்று இப்புறநானூற்றில் குறிப்படுகிறது இடைக்காடர் கதையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த பூமியில் உள்ள மாந்தர்களின் துயரங்கள் சூரியன் முதலிய கோள்களின் வெப்பத்தை அமைதிப்படுத்திக் காற்றையே உணவாக எடுத்துக் கொண்டனர். சித்தர் எனக் குறிக்கப் பெறுகின்றனர்.


சித்தர்கள் காலம் : -


சித்தர்கள் வாழ்ந்த காலத்தை வரையறை செய்தல் இயவாது தமிழகத்தில் பல பகுதி வெவ்வேறு காலங்களில் பல பகுதிகளில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘சித்தர்காலம்’ கி. பி 14 ஆம் நூhற்றாண்டின் தொடக்க முதல்  கி. பி 16 ஆம் நூற்றாண்டின் இறுதி  வரையான காலத்தை வரையறுக்கின்றனர். இக்கால் கட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் ‘பதினென் சித்தர் என்று குறிப்பிடுகின்றனர்.


பதினென் சித்தர்கள் : -


கி. பி 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சித்தர் பாடல்களில்தான் சித்தர் பதினெண்மர் என்று வரையறுக்கின்றது கருவூரார்.


திட்தாய்ப் பாணம் வைத்துத் தேவி பூசை

சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே

(கருவூரார் பூசை விதி – பாடல் - 23)


என்ற குறிப்பிடுகிறார். திருமூலம் திருமந்திரத்திலோ, ஒருவற்றான் சித்தர் எனப் போற்றப் பெறும் சைவசமய குரவர் நால்வர் பாடல்களிலோ அவர்களைத் தொடந்து தோன்றிய நூல்களிலோ இல்லை.


பதினென் சித்தர் என்னும் வழக்காறு பிற்காலத்தது என்பது உறுதி. சித்தர் பலர் வாழ்ந்த காலத்தில் இக்கொள்ளை தோன்றியிருக்க வேண்டும் ‘பதினெட்டு’ என்ற நம்பிக்கை காணப்படுகின்றதே கவிர அவர்களைப் பற்றிய பெயர்களை எவரும் சுட்டவில்லை. இதனால் பதினென் சித்ததர் வரிசையில் அடங்குவோர் பற்றிய கருத்து வேறுபாடுகளும் தோன்றலாயின பதினென் சித்தர் வரிசையில் அடங்குவோர் பற்றிய கருத்து வேறுபாடுகளும் தோன்றலாயின. திருமூலர், இராமதேவர்,கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி,கமலமுனி ,போகநாதர், குதம்பைச்சித்தர்,மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி. நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனி, சுந்தரானந்த, கோரக்கர்





திருமூலர்


பன்னிரு திருமுறைகளுள் பத்தாவது திருமுறையாகத் திகழ்வது திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  தமிழ் மூவாயிரம் என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது. இதனை இயற்றியவர் திருமூலர் திருமூலர் திருமந்திரம் எழுதிய இடம் திருவாவடுதுறை. அது இன்றும் சைவ சமயம் செழித்தோங்கும் மடமாக உள்ளது.


திருமூலர் திருவாவடுதுறை என்னும் பகுதியில் காவிரியை நோக்கிக கடந்து சென்று இருந்தார். அங்த பகுதியில் ஆடு மாடுகள் மேய்ப்பவர்   இடையன் மூலன்.  


இடையன் மூலன்  இறந்துவிட்டதால் மாடுகள் கூட்டமாகத் சேர்ந்து கண்ணீர் வடிய அழுந்துக் கொண்டிருந்தது,   அதனைக் கண்ட திருமூலர் பசுக்கூட்டங்களின் துயரத்தைக் போக்குவதற்கு  இடையனின் உடலில் புகந்தார். திருமூலர் உடலைப் ஒரு மரம் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் வந்து பார்க்கின்றபோது அவருடைய உடல் அங்கே இல்லை மூலன் உடலில் இருந்து   கடும், தவம் செய்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருடத்திற்கு ஒரு பாடல் விதமாக மூவாயிரம் பாடல்கள் இயற்றினார். திருமூலர் உடம்பை புகழ்ந்து பாடுகிறார். “சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். உடம்பு நலமாக இருந்தால் தானே இறைவனைக் காண முடியும் என்பது திருமூலரின் கருத்து சிதம்பரத்தில் சமாதியனார்.

இராமதேவர்


இராமதேவர் இசுலாமியரின் புனித இடமான மெக்காவுக்கு சென்ற போது ஞாண வார்த்தைகளில் இசுலாமியர்கள் வெகுவாகக் கவர்ந்தன. இராமதேவர் அல்லாவின் தூதராக சித்தரிக்கப்பட்டு, இசுலாமிய மதச் சடங்கான் ‘சித்தத்’ நிறைவேற்றப்பட்டு, ‘யாகோபு’ சுன்னக் காண்டம் 600 என்ற இவரது பாடல் தொகுப்பில் அமைந்துள்ளது.


இராமதேவர் கடற்கரையில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த வந்தார் இவர் சிறந்த அம்மன் பக்தராவார் அம்மனை நாள்தோறும் பக்தியுடன் வழிபடுவதும், இயற்றுவதும் மனித ஒன்றாகத் வாழவேண்டும் தனது வாழ்க்கை நடத்தி வந்தார்.


இராமதேவர் காசிக்கு புனித்பயணம் மேற்கொண்டார். இராமதேவர் கங்கை நதிக்கரையில் சட்டைநாத சுவாமி திருவுருவச் சிலை புதையல்போல் கிடைத்தது. திருவுருவச் சிலை இருக்க வேண்டிய இடம் நாகப்பட்டினம் என்று ஒருகருத்து அசரீரி ஒலி கேட்டது. நாகப்பட்டினம் கொண்டு வந்து சேர்த்தார்.


சட்டைநாதரை, இராமதேவர் மனம் உருகி பிரார்த்தித்ததின் அதன்மூலம் அவருக்குப் பல சித்திகள் கைகூடின ‘ககனகுளிகை சூட்சமம்’ என்பா சூட்ச இரவமணி சூட்சம் மூலம் முதலில் ஆகாயத்தில் பறந்து எசன்ற இராமதேவர். அவரையே அறியாமல் இசுலாமியரின் புனித நகரமான மெக்காவில் இறங்கினார். மெக்க நகர இவுலாமியர்கள் வியந்துவிட்டார்கள்  புதிய தோற்றம் உள்ள இராமதேவரைப் பார்த்து இந்த கூட்டத்தில் யாரோ ஒருத்தார் என்று நினைத்தனர் இராசமணி சூட்சமத்தின் வான்வழிப்பயணம் சைகையில் கூறியுள்ளார். இராமதேவர் இறைத்தூதர் என்று எண்ணித் இசுலாமியிருக்கு தமச் சடங்கான ‘சுன்னத்’ செய்து ‘யாக்கோப்பு’ எனப் பெயரிட்டார். இராமதேவர் இவை அனைத்தும் சட்டைநாதரின் திருவிளையாடல்கள் அவர் விருப்பம்போல் அங்கே தங்கியனார். இறுதி நாட்களில் இவர் நாகப்பட்டினத்தில் தொடர்ந்து சிவவழிபாட்டில் ஈடுபட்டு சமாதியானார்.

தன் வந்திரி


உலகில் முதல் மருத்துவர் தன் வந்திரி  எனலாம் இறைவன் விஷ்ணு பகவானே மனித உயிர்களைக் காப்பற்றக் தன் வந்திரியாக மனித அவதாரம் எடுத்தார் என்கிறார்கள். சித்தர்கள் பதினெட்டுப் பேரும் தன்வந்திரிக்கு உபதேசித்தார்கள் என்றும், மூன்று இலட்சம் கரந்தங்களையும் உபதேசித்தார்கள் என்றும் தன்வந்திரி சூரியன் போல் பிரகாசித்தார் என்று கூறுகிறார் அகத்தியர். இவர் தான் ஆயர் வேதர்ரின் தந்தை இவரிலிருந்து பிறந்தது தான் ஆயர் வேத வைத்தியம். இவர் தமிழ் நாட்டிலுள்ள வைத்திஸ்வரன் கோயிலில் சில காலம் தனது சீடர்களோடு தவம் புரிந்தார் இவர் நூல்கள் இயற்றியுள்ளார். தன் வந்திரி பகவான் இப்போதும் வைத்திஸ்லரன் கோயிலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இடைக்காட்டுச் சித்தர்


இவர் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்தவர் என்றும் தொண்டைமண்டலத்தில் உள்ள இடையன் மேடு என்ற ஊரில் லாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. எப்பொழுதும்  இடைக்காடர் சிவ சிந்தனையுடனே இருப்பது வழக்கம் ஆடு மேய்க்கும் பொழுதும் இவர் மனமொடுங்கி இவர் நின்ற தோற்றம் கண்டு வான மண்டலத்தில் இருந்து இறங்கி வந்த போகமுனிவர் இடைக்காடருக்கு வைத்திய, வாத, யோக, ஞானங்களைக் கற்றுக் கொடுத்தார். இடைக்காடர் வானசாஸ்திர ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கினார் இவர் எண்ணற்ற நூல்களைப் பாடியுள்ளார்.


வெகுதான்ய வருடத்தில் மழை தாமதமாகப்பெய்யும் பருத்தி விழளச்சல் குறைந்து உப்புவிலை ஏறும் என்று இடைக்காடர் சொன்ன உண்மை இன்றும் பஞ்சாங்கங்களில்  இவரது பாடலாகக் குறிப்பிடுகிறது. இவர் தமது ஜோதிட அறிவால் கொடிய பஞ்சத்தையும் சாதுர்யமாக எதிர்கொண்டு நவக்கிரகங்களையும் இடம் மாற்றம் செய்து வெற்றி கண்டார் என்று வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.

வால்மீகர்


இந்த உலகில் பொய்யாக நடிப்போர் பலர் உண்டு அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளுவார்கள் தெய்வத்தைக் கண்டோம் எனக் கூறுவார்கள். இவர் மக்கள் படிக்கும் நாலு வேதம் ஆறு சாத்திரம் பதினெட்டுப் புராணங்கள் பாடிவைத்தனார். சித்தர் வால்மீகரும் இராமயணம் எழுதிய வால்மூகி முனிவரும் வேறானவர்கள்;. இவர் இராமாயணம் எழுதியதாகப் ‘போகர் 7000’ என்னும் நூலில் அறியப்படுகிறது. ‘வால்மீகி சூத்திரம்’ என்னும் தலைப்பில் 16 பாடல்கள் இடம்பெறுகிறது. மக்களின் அறிவுரை கூறும் பாடல்களாக உள்ளன.


‘போகர் 7000’ என்ற நூல் வால்மீகி எழுநூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்ததாகவும்.  தமிழில் புலமை மிக்கவர் இவர் நீண்டகாலம் வாழ்ந்த அகத்தூய்மை என்னும் தூய்மையோடு வாழ்ந்தவர் ஆவார் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் சன்னிதானத்தில் ஜீவ சமாதியனார்.

மச்சமுணி


மச்சமுணி காகபுசுண்டரின் சீடராவார் சிவபெருமான் ‘காலஞானத்தை’ உமாதேவியருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கிவிட்டாராம் தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.   இவருடைய சமாதி முரணான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

பதஞ்சலி


பதஞ்சலி இன்று உலகமெங்கும் பிரபலமாகப் பின்பற்றும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக உள்ளது.

நந்திதேவர்


சைவ சமயத்தில் முதல் குரலாகவும் சிவனின் வாகனமாகவும்; திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும் நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள் இளமையும் திட்டமும் வாய்ந்தவராக நந்தி தேவர். 

கொங்கணர்


போகரின் சீடரான இவர் கொங்கண தேசத்தைச் சேர்ந்தவர் வேட்டுவகுலத்தில் பிறந்தவர். இவர் நிஷ்டையிலிருந்த போது மரக்கிளையிலிருந்து பறவை ஒன்று இவர் மீது எச்சமிட அதனால் கண் விழித்துக் கொங்கணவர் கோபமாய் அந்தப் பறவையைப் பார்க் - அது எரிந்து சாம்பலானது.


குதம்பைச் சித்தர்


குதம்பை என்பது பெண்கள் காதில் அணியும் ஒர் அணிகலன் சிலம்பணிந்தவளைக் சிலம்பி என்று பெயரிட்டு அழைப்பது போல். குதம்பை அணிந்தவளைக் குதம்பா என்று அழைப்பது ஊர்ப்புற வழக்கு அங்கனம் குதம்பா என்ற மகடுஉ விளியாக காவடிச் சிந்து இராகத்தில் இவர் பாடியுள்ள கருத்து இதன் காரணமாக இவர் குதம்பைச் சித்தர் என்ற காரணப்பெயர் பெற்றார். வடநாட்டு ஆண் சித்தருள் ஒரு பிரிவினர் குதம்பை என்ற காதணி அணியும் வழக்கமுடையோராய் இருந்துள்ளனர். அந்தவழக்கத்தைப் தென்னாட்டில் வாழ்ந்த இச்சித்தரும் காதில் குதம்பை அணியும் பழக்கமுடையவராகத் திகழ்ந்தனர். சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, “குதம்பைச் சித்தர் என்றொருவர் பெண்களை இழிவாக எண்ணிப் பின் திருந்தினர்


கைலாயக் கம்பளிச் சட்டைமுனி : -


கைலாயமுனி, சட்டைமுனி, சட்டைநாதர் என சில பெயர்களில் அழைக்கப்படுகின்றது சட்டைமுனிவேறு, சட்டநாதர்வேறு என்ற கருத்தும் உள. போகர்நூலில், சட்டைமுனி என்பவர் சிங்களத் தேசத்து தேவதாசி ஒருவரின் மைந்தன் என்று கூறுகின்றது. பிழைப்புத் தேடித் தமிழகம் போந்து ஒரு பெண்ணை மணம்புரிந்து வாழ்ந்து வந்தார் என்றும். வடநாட்டு ஞானி ஒருவரைச் சந்தித்தபோது அவரால் ஈர்ப்புண்டு மனைவியை நீங்கித் துறவு பூண்டார் என்றும், போகர், கொங்கணர், திருமூலர், அகத்தியர், காகபுசுண்டர், கருவூரார் முதலான சித்தருடன் இவருக்குத் தொடர்புண்டு என்றும் இவர் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன இவர் தம்மைப் பற்றி


“கைலாய்ப் பரம்பரையாய் வந்தபேர்க்கு

கடைப்பிள்ளை;;;…….”

என்று பாடியுள்ளார்.

போகநாதர்


  போகர் சர்வ சாஸ்திரங்களையும் கற்று துறை போகியவர் என்பதால் என்று அழைக்கப்பட்டார். இவர் காலாங்கி முனிவரின் தலைச் சீடராவார் காய கல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி கயசித்தி செய்து கொண்டார். உலக மொழிகளை பலவற்றை கற்றிருந்த இவர் யோகா முறைகளை ஆயிரத்து ஏழுநூறு பாடல்களில் உலகமெங்கும் பரவியவர். சீன நாட்டிற்குச் சென்று அங்கே பல சீடர்களை உருவாக்கியிருந்தார். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் பழநி மலை முருகன் சிலையை உருவாக்கியவர் இவர்தான். இவருடைய நூல்கள் எல்லாம் மூலிகைகள் இரகசியம் உள்ளடக்கியது. மனிதர்களுக்கு மூப்பு பிணிவராமல் தடுக்கும் மூலிகைகளை சொல்லிருப்பது இவர் சிறப்பு  பழநி மலையில் - முருகன் சன்னதிக்குக் கீழேயும் - மெக்காவிலும் இவரது ஜீவசமாதி இருக்கிறது என்கிறார்கள்.

கோரக்கர்


கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயிலிய நட்சித்திரத்தில் பிறந்தவர். சேணிய வகுப்பைச் சார்ந்தவர் மச்சமுனியின் சீடராவார் காய கல்பத்தை அறிந்து தேகத்தை வச்சிர காயமாக்கி மகிழ்ந்தார். கற்பதேசத்துடன் இவர் வாழ்ந்து வந்தபோது ஓர் இடையன் பாம்பு கடித்து இறந்துவிட கோரக்கர் அந்த இடையனின் உடலில் புகந்து இடையரானார் இடைச்சியோடு வாழ்ந்தார் அப்போது வேட்கைக்கு வந்த மன்னன் மலைக்குகையிலிருந்து கோரக்கரின் உடலைப் பார்த்து அது செயலற்று இருந்தால் பிணம் என நினைத்து எரித்துவிட்டான். அதனால் கோரக்கர் இடையனின் உடலோடு வாழ்ந்தார். இவர் எதிர் காலத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதையும் என்னென்ன ஆட்சிகள் வரும் என்பதையும் மறைமுகமாக இவரது பாடல்களில் குறிபிட்டுள்ளார்


மச்சமுனி


செம்படவர் மரபினைச் சார்ந்த இவர் பிண்ணாகீசரின் சீடர் திராவக முறையில் சிறந்தவர்.

சுந்தரானாந்தர்


சுந்தரானந்தர் 16 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர். கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும் அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார் இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்றும் அறியப்படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதனை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார் இவர் மதுரையில் சமாதியடைந்ததாக என்று அறியப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி  உள்ளது.

பாம்பாட்டிச் சித்தர்


அந்தணர் குலத்தில் பிறந்தவர் பாம்பாட்டிச்சித்தர் என்பர். கொங்கு நாட்டில் மருத மலையில் தவம் செய்தார். இன்றும் பாம்பாட்டிச் சித்தர் குகை என்று இவர் பெயரில் ஒரு குகை அங்கு உண்டு. இவர் திருக்கோகர்ணத்தில் பிறந்தவர் என்ற கருத்தும் உள்ளது.

 இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு முறை நவரத்தின் பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டைமுனி அங்குவர அவரிடம் தீட்சைப் பெற்றுச் சமாதியிலிருந்து மீண்டு எழுந்து பல சித்துக்களைச் செய்தார். செத்த பாம்புதனை ஆட்டியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.


முடிவுரை

தமிழர்களின் சமயமே சித்தர் மரபுதான், சிவபெருமானே முதன்மையான சித்தர் எனும் அளவில் தமிழ் சமூகம்போற்றியுள்ளது. முருகன், அகத்தியர், கணபதி என அனைவரையும் சித்தர்களாகவே தமிழர்கள் போற்றியுள்ளனர். ஆசிவகம் மதமே சித்தர் மதமாக இருந்துள்ளதை தமிழர் வரலாற்றில் அறியமுடிகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக