திங்கள், 26 ஏப்ரல், 2021

இலக்கியங்கள் காட்டும் நிலையற்ற உடலியல் கருத்தமைகள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


  

இலக்கியங்கள் காலகண்ணாடியாக இருந்து மனிதனின் உள்உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் ஆயுதமாகும், சில செய்திகளை நமது உறவினர்களிடையே, அல்லது மற்றவர்களிடையே நம்மாள் கூறயியலாத நிலையில் தான் இருந்து வருகிறோம், இந்த குறைகளை இலக்கியத்தின் வழி தம் படைப்புகளின் வழி வெளிபடுத்தமுடியும் அவ்வகையில் இலக்கியல் காட்டபட்டுள்ள யாக்கை நிலையாமை கருத்துக்களை இங்கு காண்போம்.

இறப்பும் பிறப்பும்:

“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்

குடதிசைச் சென்ற ஞாயிறு போல

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்

தணியா மன்னுயிர் தாங்கும் கருத்தொடு

சாவகம் ஆளும் தலைத்தாழ் வேந்தன்

ஆவயிற்று உதித்தனன் ஆங்கவன் தானென்”

கீழ்த்திசையிலே காலையிலே தோன்றி உலகத்தின் இருளைப் போக்கி ஒளிபரப்பிய ஞாயிறானது, மாலையிலே மேலைத் திசையிலே சென்றுவிட்டதைப் போல மணிபல்லவத் தீவிலே தன்னுடைய மனித உடலைக் கைவிட்ட ஆபுத்திரன் மன்னுயிர்களைக் காக்கும் தணியாத கருத்தோடு சாவக நாட்டினை ஆளும் மிக்க முயற்சியை உடைய வேந்தனாகிய பூமிச்சந்திரனது பசுவின் வயிற்றிடத்தே சென்று, மீண்டும் மானிட மகவாகிப் பிறந்தான் எனலாம்.

உயிர்களின் தோற்றத்திற்கு ஏதுவாக, அதனோடும் சேரப்பெற்ற உணர்வுடைய பூதக்கூறும், உடம்பின் அமைவிற்கேதுவாக அதனோடும் கூடிப்பெற்ற உயிரில்லாத உணர்வற்ற பூதக்கூறும், அவ்வப்பூதங்களின் வழியாக அவையவை பிறப்பனவாம். உண்மை நெறியாவது இதுவே. இவற்றின் வேறாகக் கூறப்படும் விகற்பமும், உண்மைப் பொருளும், உலோகயதனின் உணர்வுகளாம். காட்சியளவை அல்லாது வேறு கருத்து முதலியன நிலைப்பெறாமையாற் கொள்வதில்லேம். இம்மையும் இம்மைப் பயனும் ஆகிய எல்லாம் இப்பிறப்புடனேயே கழிவனவாகும். ‘மறுபிறப்பு’ என்ற ஒன்று அமைந்து, வினைப்பயனை அனுபவித்தல் என்று சொல்லுதலும் பொய்யேயாகும்.” இவ்வாறு பூத தத்துவவாதி தன் கொள்கையைச் சொன்னான்.

மாதவியின் தாய் சித்ராபதியின் தூண்டுதலால் உதயகுமாரன் காமம் மீதூரப் பெற்று மணிமேகலையைக் காண அம்பலம் செல்கிறான். மணிமேகலையைக் கண்டு, ‘நங்கையே’ நீ நற்றவம் மேற்கொண்டதற்குரிய காரணம் தான் யாதோ? என்று துணிந்து கேட்கிறான். அதற்கு அவள் பிறத்தலும், முதுமை அடைதலும், நோயுற்று வருந்துதலும், பின் இறத்தலும் உடையது இவ்வுடல். மேலும் இது துன்பங்களுக்கொரு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் நிலையாமையை மணிமேகலை உதயகுமாரனுக்கு உணர்த்தித் தன்னை பின்தொடர வேண்டாமென அறிவுரை கூறுகிறார். அத்துடன் யாக்கையின் இத்தன்மையை நன்று உணர்ந்தால்தான் நல்ல தவத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறாள். அதைக் கீழ்வரும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

“பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்”

மேலும் மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து, உதயகுமாரனுக்கு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றையும் அறிவுறுத்துகிறாள். நிலையாமை மிக விரிவாகப் பேசப்படுகின்ற இடங்களில் இது ஒன்றாகும்.


நிலைத்ததும் நிலையாததும்:

நிலையாமை பற்றிப் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழி விளக்கிச் செல்லும் சாத்தனார் நிலைத்து நிற்பது எதுவென்றும் கூறுகிறார்.

“இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது

வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணையாவது”

நிலையாமைக் கோட்பாட்டை மிகவும் வற்புறுத்துவதாலேயே வாழ்க்கையை மறுத்துரைக்கிறது பௌத்த சமயம் என எண்ண இயலாது. அதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டும் அறங்களை மேற்கொண்டும் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஏனென்றால் அவரவர் செய்த வினைக்கு ஏற்ப பிறவிகள் தொடரும். அதனைத்; தவிர்க்க வேண்டுமாயின் நிலையாமையை மனத்தில் பதித்து அறத்தை இடையறாது மேற்கொள்ள வேண்டும்.

வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும் காயமே பொய், உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனாவ் சித்தர்.

“………………………… உடம்பொடு

செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்”

திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர்முரணான மெய்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை.

“உடம்பார் அழியல் உயிரார் அழிவர்”

திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை ‘தந்திரம்’ என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலேயே தொன்றுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை.

“உறுதுணையாவது உயிரும் உடம்பும்”

இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன

“உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்”

கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை - மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள்.

“என்பமைந்த யாக்கை எடுத்துவந்த திங்குநாம்

அன்பமைந் துய்ய அறிமினோ - என்புடலை

முன்னம் இருவர் முதலன்பைப் பேணவிடுத்

தென்ன பயனடைந்தார் எண்”

இங்கே சிறந்த மனித உடம்பில் நாம் பிறந்து வந்தது எவ்வுயிர்க்கும் அன்பு புரிந்து உய்தி பெறவேயாம். தாம் எய்தியிருக்கும் உடம்புகளை விடுத்து அன்பு ஆற்றி முன்னம் இருவர் பெற்ற இன்ப நிலையை உணர்ந்து உய்ய வேண்டும் என்றவாறு, இது அன்பு புரிவதே அரிய பிறவிப் பேறு என்கின்றது.

என்பு அமைந்த யாக்கை என்றது அன்பு அமைய வந்த இந்தப் பிறவியின் அருமை அரிய வந்தது. என்பு இல்லாத புழுபூச்சி முதலிய இழிந்த பிராணிகளாய்ப் பிறந்து கழிந்து படாமல் உயர்ந்த உணர்வு நலம் கனிந்த சிறந்த மனித உருவில் தோன்றியதைச் சிந்தித்து நோக்கின் இத்தோற்றத்தின் ஏற்றமும் ஊற்றமும் உணரலாம். தோன்றிய பயனைத் தோய்ந்து கொள்ள வேண்டும்.

“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆரூயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு”

அருவமான அரிய உயிர் உருவமான இந்த உடலில் புகுந்து இங்கே வந்தது அன்பு செய்யவேயாம் என்றமையால், அது செய்யாவழி இத்தோற்றம் வெய்யதாய் வீணே இழிந்துப்படும்.

உடம்போடு கூடி அல்லது அன்பு செய்ய முடியாது ஆதலால் அதற்குத் தகுதியான வடிவை அது தாங்க நேர்ந்தது.

மாடு ஆடு முதலிய வேறு உடம்புகளை மருவின் அறிவோடு அன்பு செய்ய இயலாது.ஆதலின் மனித உடம்பை உரிமையாகத் தழுவிக் கொண்டது. தழுவியது பழுதாகாமல் விழுமியது கெழுமியது. உய்தி உறவே உயர் மெய் எய்தியது.

இங்ஙனம் உயர்ந்த பிறப்பை அடைந்து நிற்கின்ற உயிர் தகுந்த அன்பைச் செய்து கொள்ளின் பின்பு வேறே பிறந்துபடாமல் சிறந்த பேரின்ப நிலையை விரைந்து பெற்றுக் கொள்ளுகின்றது. பாலால் பசுவும் மணத்தால் மலரும் மாண்புறுதல் போல் அன்பால் உயிர் மகிமையுறுகின்றது 

என இது உணர்த்தியுள்ளது. அன்பு இல்லாத மனிதன் மணம் அற்ற மலராய்க் குணம்கெட்ட மலட்டுப் பசுவாய் இழிக்கப்படுவான் என்பது பெறப்பட்டது.

“அன்பு உயிரின் சாரம்; அஃது இன்றேல் சக்கை”

என்றது அன்புக்கும் உயிர்க்கும் உள்ள உறவுரிமையை ஊன்றி நோக்கி உணர வந்தது. கரும்புக்குச் சாரமும் கனிக்குச் சுவையும் போல் உயிர்க்கு அன்பு இனிமை சுரந்துள்ளது. அந்தச் சாரங்கள் நிறைந்து நிற்கும் அளவே அவை சிறந்து மதிக்கப்படுகின்றன. சுவைகள் குறைந்த பொழுது அசாரங்களாய் அவலமடைகின்றன. அவ்வாறே அன்பின் உண்மை இன்மைகளால் உயிர்கள் முறையே உயர்வு தாழ்வுகளை பெறுகின்றன.

“என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்”

எலும்பு இல்லாத புழு வெயிலில் எரிந்து துடித்தல்போல் அன்பு இல்லாத உயிர் தரும் தேவதை முன் பரிந்து பதைக்கும் எனத் தேவர் இங்ஙனம் உணர்த்தியிருக்கிறார். அன்பு இன்மை எவ்வளவு பாவம்! எவ்வளவு துன்பம்! எவ்வளவு கேடு! என்பதை இதனால் நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

பயிர்க்கு நீர்போல் உயிர்க்கு அன்பு உறுதி புரிகின்றது. அன்பின் அளவே உயிர் இன்ப நலநன மருவுகின்றது என்றதனால் அன்பு இல்வழி அது துன்ப நிலையில் சுழன்று உழலும் என்பது தெளிவாய் நின்றது. அன்பு பிறப்பே இன்பப் பிறப்பு அல்லாதது துன்பப் பிறப்பு ஆதலின் அது தொல்லை என நல்லோர் எல்லாராலும் சொல்ல நேர்ந்தது. அன்பு உயிரின் இன்ப ஊற்று. அதனை மருவியுள்ள அளவே மனம் மணம் பெறகின்றது. குணம் பெறுகின்றது. புனிதன் இனியன் புண்ணியன் கண்ணியன் தண்ணளியாளன் என மனிதனை அது மாண்புறுத்தியருள்கின்றது.

“யுள அரளா டழஎநஇ ளுழ அரஉh  அiனெ”

அன்பு எவ்வளவோ அவ்வளவே மனம்” என இத்தாலிய நாட்டுத் தத்துவஞானி ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அன்பு இல்லையானால் முரடுபட்டு மாட்டு மதியாய் மனம் மடிந்துபோம் என்பது இதனால் முடிந்து நின்றது. அன்பு சீவ அமுதம். அதனை மேவியுள்ள அளவே மனிதன் தேவியல்பமைந்து திவ்விய மகிமை பெறுகின்றான். அன்பை மருவிய அளவுதான் மனம் புனித உருவமாய் இனிது திகழ்கின்றது. அது குறையின் சிறுமையுற்றுச் சீரழிகின்றது. நிறையின் பெருமைப் பெற்றுப் பேரின்பம் நுகர்கின்றது. மனிதனது மாட்சி எல்லாம் அன்பின் அவ்வுண்மையை ஓர்ந்து உரிமை செய்து கொள்ளுக.

 

“என்பு தோல்உடை யார்க்கும் இல்லார்க்கும்தம்

வன்ப கைப்புலன் மாசற மாய்ப்பது என்?

முன்பு பின்பின்றி மூவுல கத்தினும்

அன்பின் அல்லதுஓர் ஆக்கம் உண்டாகுமோ? (43)

தம் புலன்களை அடக்கிக் கடவுளரை நோக்கிக் கடுந்தவங்கள் புரிவதினும் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்தவரின் அதனால் எல்லா இன்ப நலங்களும் எளிதே வந்து சேருமே! என மக்களுக்கு இதமான ஓர் ஞான உபதேசமாய் இது இசைந்திருக்கிறது.

அன்பு அல்லது வேறு ஓர் ஆக்கம் இல்லை என்றதனால் அது அவ்வளவு பெரிய பாக்கியம்! என்பதை எளிதின் உணர்ந்து கொள்ளலாம். உயிர்க்கு எவ்வழியும உய்வைத் தருதலால் இத தெய்வத் திரு என நின்றது. பிற உயிர்களுக்கு இரங்கி அருளும் இயல்பினையுடையவர் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் உதவ நேர்கின்றது.

“அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”(44)

என அன்பாளரது பண்பாட்டினைத் தேவர் இவ்வாறு கண் காட்டியுள்ளார். ததீசி முனிவரிடம் இந்திரன் ஒருமுறை வந்து குரையிரந்து நின்றான். தமது உடலிலுள்ள ஓர் எலும்பால் அவனது குறை நீங்கும் என்று தெரிந்ததும் உடனே யோக சித்தியால் தமது இனிய உயிரை நீக்கி முனிவர் உதவி புரிந்தார். அந்தப் பேரன்பாளர் புரிந்த ஆருயிர் உதவியை வியந்து யாவரும் புகழ்ந்தனர்.

“குன்றடையும் அளவுநாம் உயிர் வாழ்வது

அரிது: அதன்முன் குறுகும் கூற்றம்

என்றச்சத் துடன்மனமே மறவாமல்

அறவழியின் எதுவாயே” (45)

கழிந்து போகின்ற நாள்களின் நிலைகளை உளம் தெரிய விளக்கி உறுதி நலநன ஓர்ந்து கொள்ளும்படி இவை உணர்த்தியுள்ளன. முன் செய்த புண்ணியப் பலத்தினால் இந்த அரிய பிறவியை அடைந்து வந்திருக்கிறீர். அங்ஙனம் வந்துள்ள நீர் இங்கே செய்து கொண்ட உய்தி நலம் என்ன? அதனை உணர்ந்து சிந்தித்து விரைந்துப் பயனைப் பெறுக” என இது வேண்டி நின்றது.

“எடுத்த உடம்பழயு முன்னே இவணீ

அடுத்த பயனை அடைக - விடுத்திருந்தால்

பாழாக் கழித்த பழிநாள ணாய்த்துயரில்

ஆழி அழிவை அறி.”(46)

உடல் அழிந்து படுமுன் உயிர்க்கு உரிய பயனை அடைந்து கொள்க: அடையாயேல் பாழான பழியாளனாய் இழிந்து அழிதுயரில் ஆழ்ந்து ஒழிவாய் என்பதாம் இது உயிர்நலம் காண்க என்கின்றது.

எடுத்த உடம்பு என்றது இந்தப் பிறவியில் வினை வயத்தால் மருவி வந்துள்ள மனித தேகத்தை, சரீரம் நிலையில்லாதது அழியும் காலம் அறிய முடியாதது. ஆதலால் அது நல்ல நிலையில் உள்ளப் போதே உயிர்க்கு உறுதிச் செய்துக் கொள்வது உயர் ஞானமாம். அரிய மனித உடம்பை எடுத்து வந்த ஒருவன் அதனால் அடைய உரிய உயர்பயன் யாது? எனின் வேறு ஓர் பிறவியைப் அடையாமையேயாம். பிறவி துன்பமுடையது: பிறவாமை இன்பமானது ஆதலின் அது வெறுக்க நேர்ந்தது. இது வேண்ட நின்றது. எவ்வளவு உயர்ந்த வாழ்வில் பிறந்திருந்தாலும் அல்லல்களும் கவலைகளும் அவலங்களுமே நிறைந்துள்ளமையால் யாண்டும் ஆண்டவனை நோக்கி வேண்டி நிற்கின்றனர். மனிதனுக்கு பூரணமான வயது நூறு. அது முழுவதும் கிடைப்பது அரிது. கோடியில் ஒருவனுக்கும் கூடாத அது ஒரு வேளை கூடினாலும் உறக்கம் முதலியவற்றால் முக்கால் பாகத்திற்கும் மேல் வீணே ஒழிந்து போகும். மனித வாழ்வு எவ்வழியும் துயரங்கள் அடர்ந்த தொல்லைகள் தொடர்ந்திருத்தலால் யாண்டும் எள்ளி இகழ நேர்ந்தது.

“ழுரச னயலள டிநபin றiவா வசழரடிடந hநசந

ழுரச டகைந ளை டிரவ ய ளியn

யுனெ உசரநட னநயவா ளை யடறயலள நெயச

ளுழ கசயடை ய வாiபெ ளை அயn”(47) 

நமது வாழ்நாள் துயரங்களில் தோன்றியது. உயிர் வாழ்வு மிகவும் குறுகியது. கொடிய மரணம் எப்பொழுதும் கை நீட்டியுள்ளது. மனிதநிலை மிகவும் பரிதாபமானது” என மேல்நாட்டுக் கவிஞரும் இவ்வாறு பாடியிருக்கிறார்.


உடல்நிலை:

இஃது இந்த உடம்பினது நிலைமையை உணர்த்துகின்றது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அரிய பொருள்களை உயிர் அடைவதற்கு உரிய துணையாய் உடனின்று உதவி வருகின்றமையால் மனிதனிலையின் பின் இது வைக்கப்பட்டது.

“ஆவிக் கினிய அழகிய ஆலயமாய்

மேவி யிருக்குமிம் மெய்ந்நிலையில் - நாவினால்

சொல்லற் கரிய தொழிலுயர் நுட்பங்கள்

எல்லை யிலகாண் இசைந்து”(48)

உயிர்க்கு அழகிய இனிய கோயிலாய் அமைந்திருக்கின்ற இந்த விழுமிய உடலில் அளவிடலரிய அற்புத நிலைகள் அடங்கி உள்ளன என்பதாம். கடவுட் கூறாகிய ஆன்மாவுக்கு நிலையமாய் நிற்றலின் உடல் ஆலயம் என வந்தது. மேவி இருக்கும் என்றது அரிதாக அமைந்துள்ள அருமை தெரிய என்க. இம்மெய் என்னும் அண்மைச் சுட்டு உரிமை தோன்றவுற்றது. மெய்யான உயிர்க்கு மெய்யாயிருத்தலின் தேகம் மெய் என நின்றது. மெய் - உடல், உண்மை. தொழில் நுட்பங்கள் என்றது நாவில் நீர் ஊறல், உதிரம், உலாவல், நாடி துடித்தல் முதலிய வினை நலன்களையும் உணவையும் நீரையும் உள்ளே கொண்டுபோய்த் தக்க இடங்களில் பிரித்துச் சேர்த்துப் பக்குவப்படுத்திப் பதனுறுத்துத் திறன் அதிசய எந்திரங்கள் எதனினும் மிஞ்சியுள்ளது. உடல் நிலையமான இந்த உடலில் அமைந்துள்ள கருவித் திரள்களின் அருமைப்பாடுகளை உரைகளால் உரைக்க இயலா: தெய்வசிருட்டியின் அற்புத நிலையில் இது தலை சிறந்துள்ளது.

‘அண்ட நிலையை அறிந்தள விடினும்

பிண்டநிலை யறிதல் பெரிதும் அரிதாம்.”(49)

என்பதனால் இவ்வுடம்பின் அமைதியும் அருமையும் உணரலாகும்.

“எண்ணரிய தோற்றத்துள் இம்மா னுடம்பெறுதல்

நண்ணரிய புண்ணியத்தின் நற்பயனே - விண்ணரிய

பேறெல்லாம் பெற்றுப் பெருமையுற வுற்றவிதன்

சீரெல்லை யில்லை தெளி” (50)

அளவிடலரியப் பல பிறவிகளையும் தப்பி இந்த மானுட யாக்கையைப் பெற்றது பெரிய புண்ணியத்தின் பயனாம். அரிய பேறுகள் பல அடையும்படி உயிர்க்கு உறுதியாய் வந்துள்ள இவ்வுடலின் பெருமை உரையிடலரிது என்பதாம்.


உடல்:

ஒரு வீட்டில் பல வாயிற் கதவுகள் வைத்து கதவைப் பூட்டாமலே திறந்து வைத்து இருந்தால் கழுதை, நாய் கூட நுழைந்து விடும். இந்த உடலாகிய ஆகிய வீட்டில் ஐந்து புலன்களாகிய ஐந்து வாசற் கதவுகள் இருக்கின்றன. இந்த ஐந்து புலன்களாகிய கதவுகள் எப்போதும் பூட்டாமல் திறந்தேதான் இருக்கின்றன.

“ஐந்து கதவுகளும் எப்போதும் பூட்டாமல்ஸ

இந்த உடலில் இருப்பதனால் - வந்துவந்து

போகின்றது நல்ல குணம் பொல்லாக் குணங்களெல்லாம்

ஆகிறது சொந்தமெனக் கொண்.”(51)

இதனால் என்ன ஆகிறது? மனிதனிடம் உள்ள சத்தியம், நேர்மை, அகிம்சைப் போன்ற அக்;குணங்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருக்கின்றன. திறந்தே கிடக்கும் வீட்டில் ஒரு நாய் எப்படிப் பார்த்துவிட்டு வெளியே போய்விடும். பாம்பு, பூரான் அப்படிப் போகுமா? குடியிருந்துக் கொண்டு கும்மாளம் போடும். ஐம்புலன்களாகிய கதவுகள் திறந்தே இருப்பதால் பொல்லாதக் குணங்கள் என்னும் தேளும், பாம்பும், பூராணும் உடம்பைச் சொந்த வீடாக்கி குடியிருந்து வருகின்றன.

முடிவுரை:

உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் நிலையுடையது என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோல் நம் உடலை வைத்து பெரிய நன்மைகளை செய்தாலும் நம் உடல் எப்பொழுதும் நிலையில்லாத ஒன்றாகவே உள்ளது. அதனால் உடலின் மேல் அதிக பற்றுக்கொண்டு வாழ வேண்டாம் என்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக