சனி, 24 ஏப்ரல், 2021

இன்றைய நட்பு_பகை, குறள் காட்டும் நட்பும் பகையும்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



திருக்குறள் வாழ்வுக்கு வழிக்காட்டும் வள்ளுவரின் குறள். வள்ளுவரின் ஒவ்வொரு எழுத்தும் நன்மைகளையே செய்ய வேண்டும் என்ற நாடித்துடிப்பை ஏற்படுத்தும் அதிர்வு நாளங்கள். இன்று வாழ்பவர்களுக்கும் இன்னும் ஆயிரக்கணக்காண ஆண்டுகளில் வாழ இருப்போருக்கும் வாழ கற்றுக்கொடுப்பதே திருக்குறள். உலகில் உள்ள இலக்கியங்களைக் காட்டிலும் வலிமை மிக்கதாகவும் இளமையோடு உலக மக்களுக்கெல்லாம் கலங்கரை விளக்கமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது நம் திருக்குறள். எல்லா சமய மக்களுக்கும் உலக பொது மறையாக ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்த ஒரே மறை நூல் திருக்குறளே என்பதை நாம் எல்லோரும் அறிந்த உண்மை. அந்த வகையில் வள்ளுவத்தில் நட்பும் பகை பற்றியும் காணும்படியாக இக்கட்டுரை அமைகிறது.

நட்பு

தாய், தந்தை, மகன்,மகள், பொன்ற எல்லா உறவுகளும் எதோ ஒரு தொடர்பால் ஏற்ப்பட்டவை: ஆனால் நட்பு எனும் உறவு மட்டும் ஆறுகள் எவ்வாறு  பயனம் செய்யும் போது தன்னுடன் வரும் பொருட்களை தன்னேடு எடுத்துச்சென்று முடிந்தளவில் விடுவதைப்போல தம் வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்படும் ஒரு புனிதமான உறவு. ஒருவன் வெற்றிப்பெற யார் வேண்டுமனாலும் காரணமாக இருக்கலாம் அதில் நண்பன் தரும் உற்சாகமும் ஒன்று.  மற்ற உறவுகள் எல்லாம் ஓரு கட்டத்தில் உண்ணால் முடியாது என்பர்கள்; ஆனால் நண்பன் மட்டும் ; உண்ணால் முடியும் என்று கூறுவான் அந்த கூற்றுதான் ஒருவன் வெற்றிப்பெற காரணமாக இருக்கும். மனித வாழ்வில் முதற்பாதி நாள் பெற்றொர்களுடனும் மீதி பாதி நாள் பெற்றொர்களாக நாம் இருபபோம் இது உலக நீதி. எல்லா காலத்திலும் நம்முடன் அதிகம் இருப்பது நண்பர்கள்தான். ஒருவன் தாய் தந்தையிடம், மணைவி மக்களிடம் சொல்ல முடியாத செய்தியைக்கூட நண்பனிடம் மட்டுமே கூறுவான்.உலகில் மற்ற எல்லா உறவுகளுக்கும் எல்லையுண்டு ஆனால் நட்புக்கு மட்டும் எல்லையே இல்லை.வரலாறிறில் பாரி-கபிலர் நட்பு, பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன், அதியன்-ஒளவையார் நட்புகள் நட்புக்கு சான்றாகமையில் கல்லாக விளங்குகிறது. மனித வாழ்வில் எந்த உறவுகள் இல்லை என்றாலும் வாழ முடியும் ஆனால் நட்பு என்ற புனிதமான உறவு இல்லை என்றால் எக்காரியத்திலும் வெற்றிப்பெறவும் முடியாது வாழவும் முடியாது. எல்லா நேரத்திலும் மற்றவரை சார்ந்தே மனிதன் இயங்குகிறான.;திருவள்ளுவர் நட்பு என்பதை 

“நவில்தொறும் நூல்நயம் போதும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.” 783

படிக்க படிக்க நல்ல நூலின் பொருள் மிகுவதுப்போல பழக பழுக நல்லேர் நட்பு இனிமையாக இருக்கும.; நல்லோர் நட்பு வளர்பிறைப் போன்றது. தீயோர் நட்பு தெய்ப்பிறைப்போன்றது  என்கிறார்.மேலும்

“புணச்சி பழகுதல் வேண்டா: உணர்ச்சிதான்

நட்புஆம் கிழகை தரும”.; 785

நட்பு செய்வதற்கு குலம், நெடுநாள் தொடர்பு வேண்டியதில்லை உணர்ச்சி ஒத்திருந்தாலே போதும.;உண்மையான நண்பர்கள் குலம்,நெடுநாள் தொடர்பு இவற்றை அடிப்படையக கொண்டு பழுகுவதில்லை என்பதனை கண்கூடாக இன்றும் அறியலாம.; என்று நட்பின் சிறப்பையும்வள்ளுவர் கூறுகிறாh.;.

நட்பில் பகை

பகைவன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது நண்பனாக மட்டும் இருக்க கூடாது. உடன் இருப்பவர்களே இயேசுவையும், கட்டபொம்மையும் காட்டிக்கொடுத்தனர் என்பது வரலாறு. எல்லோர் மீதும் ஒரு கண் இருக்கட்டும் என அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. உடன் இருப்பவர் செய்யும்  துரோகத்தை நம்மில் யாராலும் தாங்க முடிவது இல்லை. பாம்புக்கு என்னதான் பால் ஊற்றி வளர்த்தாலும் அதன் விடம் போவதுயில்லை.அதன் வேலையை காட்டதான் செய்கிறது. அத்தகைய தன்மையுடையவர்களும் நம்முடன் நட்பாக இருக்கும் சூழல் அமையத்தான் செய்கிறது. அந்த தருணத்தில் அவர்களின் நட்பைஏதாவாது பொருள் கொடுத்தாவது முறித்து கொள்வதே சிறந்தது. எதிரியின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது.எதிரியின் பகை சிந்திக்க வைக்கும் நண்பனின் பகை சிந்திக்க விடாமல் கொல்லும். நெருங்கியவர்களுக்கும் நண்பர்களுக்கும்தான் தெரியும் எங்கு எப்படி நம்மை விழ்துவது என்று. பெரும்பாலும் நட்பு நட்பாகவே இருக்க வேண்டும் நட்பு பகையாக மாறும்போது அதை முளையிலே கிள்ளி எறிய வேண்டும். இதையே தெய்வப்புலவர் 

“மருவுக் மாசற்றார் கேண்மை;: ஒன்றுஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு”. 800

என்கிற குறளடியில் நல்லேர் நட்பைத் தேடி அடைக: தீயோர் நட்பை ஏதாவது கொடுத்தாயினும் விடுகஎன்றும்.

“நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஓல்லை உணரப் படும”.; 826

நண்பர் போல் நல்லதைச் சொன்னாலும், பகைவர் சொற்கள் வேறென்பதை விரைவாக அறியலாம் என்கிறார்.மேலும்

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.” 819

என்கிற குறளடியில் செந்நாபோதகர். சொல்வது வேறு செய்வது வேறாய் இருப்பாரது நட்பானது கனவிலும் துன்பம் தரும். இப்படிப்பட்ட பகைவரின் நட்பு தீமை தரும் ஆதலால் பொருள் கொடுத்தாவது அந்நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.நல்லோர்க்கு தீயவர்களின் நட்பு ஆபத்து தருவது. அதனால்  அந்நட்பை முறித்துக்கொண்டு வாழ்வதே சிறந்தது என்கிறார்.

பகை

மனிதன் தன் வாழ்நாளில் நண்பர்களாக இருந்ததை விட பலருக்கும் பகைவனாக இருந்ததே அதிகம்.பகை என்பது ஒருவரின் மனநிலையை பொறுத்ததுதான். நெருங்கிய நண்பர்கள் வல்லமையான பகைவர்களாக மாறுகி;ன்றனர்.அல்லது பகைவருக்கு உதவி செய்கின்றனர். பகை பெரும்பாலும் தன் பலத்தை நிறுபிக்கவே உருவாகிறது. சிறிய வயது முதல் ஒருவன் எவ்வாறு வளர்க்கப்படுகிறானோ அதைப்பொருத்தே அவன் வாழ்கை அமைகிறது. சிறிய வயது முதலே ஒருவன் அடங்கி வாழ்ந்தவன் என்றால் அவன் அடங்க மறுப்பதும், அடங்குவதும் அவன் அப்போதைய மன நிலையைப்பொறுத்ததே.சூழ்நிலைகளும் ஒருவரின் மீது பகை உண்டாக காரணமாக உள்ளது.நாடு, பொன், பொருள், பெண் இந்நான்கின் மீதான சுயநலமே பகைக்கு அடிப்படையாக அமைகிறது.முதற்பாவலர் 

“கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்று வதுவே படை”.

இக்குறளடியில் காலனே எதிர்த்து போர் செய்ய வந்தாலும் அவனை எதிர்த்து தாக்கும் வல்லாமையுடையதே படை என்கிறார். பகையாளியாக காலனே தம்முன் வந்தாலும் அவனை எதிர்க்கும் ஆற்றல் ஒருவனுக்கு வேண்டும் என பகையின் உச்சத்தை உலகதாசன் கூறுகிறார்.

உட் பகை 

மனிதர்கள் நம்பிக்கையாலே வாழ்கிறார்கள் நம்பிக்கையாலே வீழ்கிறார்கள் எவ்வளவு நம்பினேன் என்னை ஏமாற்றி விட்டானே என்று புலம்புவார்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்று ஒருவன் மற்றொருவனிடம் நெருங்கி பழுகினால் உள்ளதை எல்லாம் கொட்டி விடுகிறார்கள்: பிறகு ஒரு நாளில் கருத்து வேறுபாடு வரும்போது அவன் கூறியத்தகவல்கள்  அவனுக்கு எதிராகவே பாய்கிறது. சிறிய சிறிய கருத்து முரண்பாடுகளே பகையாக வளர்கிறது. சரியான புரிதல் இல்லாமல் நம்மவர் எனும் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதே பகைக்கு காரணமாக அமைகிறது. பகையிலூம் உட்பகையே ஆபத்தானது.தெய்வப்புலவர் 

“ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை

தான்சாம் துயரம் தரும”. ;792

பல வகையிலும் ஆராய்ந்து நட்பு கொள்ளாதவனுக்கு அந்நட்பு முடிவில் சாகும் துன்பத்தை தரும். ஓருவன் நல்லவனா, நம்  இரகசியங்களை காப்பானா என பல வகையிலும் ஆராய்ந்தறிந்து நண்பனாக்க  வேண்டும் என்கிறார்.மேலும்

“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்

தீங்கு குறித்தமை யான்.” 827

பொய்யா மொழிப்புலவர் வில்லானது வணங்கிருப்பது அம்பினால் கெடுதி விளைவிக்கவே.அதுப்போன்றே பகைவரின் சொல் வணக்கமும் என்று உட்பகையின் ஆழத்தைக் கூறுகிறார்.

“எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாம் கேடு”. 889

எனும் குறள் வெண்பாவில் உட்பகையானது எள்ளின் பிளவு போல சிறியதாக இருப்பினும், அது தன்னுள் அழிவினை உண்டாக்கும். மேலும் உறவு முறையில் உட்பகைவந்தால் அது இறக்குமளவு துன்பங்களைக் கொடுக்கும் என்றுரைக்கிறார்.

பகையில் நட்பு

நம் வாழ்கையில் நிலையான பகைவனும் இல்லை, கடைசிவரை வரும் நண்பர்களும் இல்லை. ஓவ்வொரு காலக்கட்டத்திலும் எல்லா நிலையிகளிலும்; ஒவ்வொரு நண்பன் , ஒவ்வொரு பகைவனஇருப்பான் இதுதான் மனித வாழ்கை. சில நேரங்களில் பகைவர்கள் நண்பர்களாவதும்;: நண்பர்கள் நமக்கு உயிர்க்கொல்லியாவதும் யதார்த்தமாக நடப்பது. அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு என்பார்கள் பாமரமக்கள்.அதுப்பொலதான் நட்பிலும் அளவோடு இருக்க வேண்டும். இரண்டு வலிமையான எதிரிகள் நம் முன்னே இருந்தால் ஒருவனை நண்பனாக கொள்ள வேண்டும். இல்லையெனில் தோல்விதான் கிட்டும். வள்ளுவப்பெருந்தகை

“பகைநட்பாம் காலம் வருங்காலம் முகம்நட்டம்

அகம்நட்பு ஒரிரு விடல்”. 830

என்ற குறளில் பகைவரிடத்தில் நட்பு செய்யும் காலம் வரும் அக்காலத்தில் முகத்தால் மட்டும் நட்பு செய்து, உள்ளத்தால் வெறுத்து பின் அந்த நட்பை விட வேண்டும்.என்றும் பகைவர்கள் எவ்வாறு வெளியில் நட்பு கொண்டு மகிழ்ந்து உள்ளத்தால் இகழ்கிறார்களோ அதுப்போலவே நாமும் செய்ய வேண்டும் என்கிறார்.

பகையுக்திகள் 

பகையில் தன்னைவிட வலிமை குறைந்தவனிடம் போர் n;சய்தால் மட்டுமே நம்மால் வெல்ல முடியும்.அல்லது காலம், இ;டம்,தன்மை எனும் மூன்றும் அறிந்து ஒருவன் செயல் மேற்க்கொண்டால் வெற்றி பெறலாம்.பகைவரை வீழ்த்த  சதி செய்து வெல்பவர்கள் பலர். பகைவரின் அனைத்து n;சய்திகளையும் அறிந்தவாகள் இருப்பார்கள் அவர்களை தம் வசம் செய்து பின் வெல்பவர்களும் உள்ளனர். பகைவரின் பலம் அறிந்து அதற்கேற்ப்ப செயல் மேற்கொள்ள வேண்டும். இவையாவும் இன்றைய யுக்திகள். இதையே திருவள்ளுவர் இராயிரமாண்டுகளுக்கு முன்பே

“வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக:ஓம்பா

மெலியார்மேல் பகை”. 861

எனும் குறள் வெண்பாவின் மூலம் தம்மிலும் வலிமை மிக்கவரை எதிர்க்க வேண்டாம். தம்மில் வலிமை குறைந்தவரை எதிர்த்தலை விரும்புக என்றும்.


“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.” 481

      பெருநாவலர் என்ற குறளில் பகலில் காக்கை கூட கோட்டானை வென்றுவிடும் அதுப்போல நாமும் நேரம் அறிந்து செயல்பட வேண்டும்.தக்க தருணம் பார்த்து வலிமை மிகுந்தவன் மீது வலிமை குறைந்த அரசன் பொர் தொடுத்தால் வெற்றிப்பெறலாம.; முதலில் பகைவரின் பலத்தை குறைக்க வேண்டும் என்கிறார். மேலும் தெய்வப்புலவர்


“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல”.; 489

என்ற குறளில்  பகைவரை வெல்ல கருதுபவன் கிடைப்பதற்கரிய காலம் கிடைக்குமானல் செயற்கரியவற்றை செய்து முடிக்க வேண்டும். என பல யுக்திகளையும் எச்சரிக்கையும் கூறுகிறார். 

முடிவுரை

வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் நட்புதான். வாழ்க்கையில் அதிகமாகநாம் சந்திக்கின்ற இன்னொறுஅங்கம் பகை. இந்த இரண்டும் அனைத்துமனிதர்களும் சந்தித்தேதீரவேண்டும். மனிதனின் மரபனுவிலே சுயநலம் உள்ளது. சில நேரங்களில் பகை நட்பாக மாறலாம் ஆனால் எந்த நேரத்திலும் நட்பு மட்டும் பகையாக மாறக்கூடாது. அவ்வாறு மாறினால் அழிவுதான். எனவே நட்பு பகையாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .சாப்பிடப்போகும் உணவை, அப்படையே சிறிது எடுத்து முதல் நெருப்புக்கும், பறவைகளுக்கும் போட வேண்டும். விடம் கலந்த உணவை நெருப்பில் போட்டதும் படபடவென்று ஓசையோடு நீலநிறமாக எரியும். என உணவு உன்பதைக்கூட எச்சரிக்கை செய்தவர்கள் நம் முன்னோர்கள்;;. தமிழ் இலக்கியத்தில் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் ஒரே இலக்கியம் திருக்குறளே.  பொய்யாமொழிப்புலவரும் நட்பு, பகை பற்றிஎக்காலத்திற்கும் பொருந்தும் விதமாக கூறிச்சென்றுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக