திங்கள், 26 ஏப்ரல், 2021

பாம்பாட்டிச் சித்தரின் பாடுபொருள்கள்

 


ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


 



தமிழ் இலக்கிய வரலாற்றில் அகம், புறம், அற இலக்கியம், பக்தியிலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியம், நாவல், சிறுகதை, புதுகவிதை என பல்வேறு பாடுப்பொருள்களை கெண்டுள்ளது, இலக்கணம் வரலாற்றில் இயல்,இசை, நாடகம் எனும் முத்தமிழ் இலக்கணமாகயிருந்து, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல், பிரபந்தம், புலமை என பல்வெறு வகைமையாக பாடுபொருள்கள் இடம்பெற்றுள்ளன.அவ்வகையில் பாம்பாட்டிச் சித்தரின் பாடுபொருள்களை காண்போம்.




இறைவன் : -




இந்த உலகத்தைப் படைத்தவன் இறைவன் மூன்று உலகத்தையும் படைத்தவன் முழு முதல் கடவுள் எல்லா செயல்களுக்கும் முதல் நிலையில் போற்றப்பெறுவர் கடவுள் இறைவனை வணங்கிய பின்பே எல்லா நிகழ்வுகளையும் தொடங்குவார். மக்கள் கடவுளை நினைத்து வழிபடுவோருக்கு அவர்களின் துன்பத்தை நீக்கி இந்த உலகத்தில் துயரத்தில் இருந்து இன்பமாக வாழ்வார்கள் கடவுளை வழிபடுபவர்கள் தூய எண்ணத்தில் இருந்து அவர்களைப் வணங்குவார்.




“அகர முதல எழுத்து எல்லாம் ஆதி


 பகவன் முதற்றே உலகு”    கு – 1




என்கிற குறளின் வழியாகப் ஒவ்வொரு மொழிக்கும் ‘அ; என்பது முதல் எழுத்தாக அமைகின்றதைப் போலவே இந்த உலகத்தில் மனிதனுக்கு விளங்குபவன் ஆதிபகவனாகிய இறைவனேயாவான்.


 


இறைவன் ஒருவனே




இறைவன் என்பவன் ஒருவனே நமக்கு சொந்தம் என்று பின்வரும் பாடல்களில் கூறுகிறார்.




“நீடுபதம் நமக்கென் றுஞ் சொந்தம் என்றே


நித்தியம்என்றே பெரிய முத்தியென்றே


 பாடுபடும்போதும் ஆதிபாதம் நினைற்தே


பன்னிப்பன்னிப் பரவிநின்று ஆடுபாம்பே.” பா - 2




என்கிற பாடலின் வழியாகப் இறைவனின் நீண்ட திருவடிகள் என்றும் நிலையானது வீடுபேறு அளிப்பன என்பதனை திருவடிகளைக் நமக்காகவே உள்ளன. திருவடிகளைக் போற்றி, வணங்கி, முயற்சி செய்யும்போதே தெளிந்து கொள்ள வேண்டும் ஏனெனில் எப்போதும் ஆதியான அத்திருவடிகளை நினைத்த படியே பலமுறை வாழ்த்தியபடியே பாம்பே நீ ஆடவாயாக என்று கூறுகிறார்.




“அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்


 கருமை செம்மை வெண்மையைக் கடந்த நின்ற காரணம்”




என்றும்,




“தில்லை நாயகன் அவன், திருவரங்கனும் அவன்


 எல்லையான புவனமும் ஏகமுத்தியானவன.”     கு – 31




என்று கூறுகிறார். குதம்பைச் சித்தரும்,




“மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்


பொய்த் தேவைப் போற்றுமடி குதம்பாய்


பொய்த் தேவைப் போற்றுமடி”     (கொ – 13)




என்று கூறுகின்றார். இவரைப் போலவே கொங்கணரும்,




“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு”




எனும் பாடலில் என்பவன் ஒருவனே என்று கூறுகிறார்.




இறைவன் உலகத்தைப் விட்டுப் பிரிய மாட்டான் : -




இறைவன் இந்த உலகைப்விட்டுப் பிரியமாட்டான் என்று பின்வரும் பாடல்களில் விளக்குகிறது.




“பொன்னில்ஒலி போலஎங்கும் பூரணமதாய


பூவின்மணம் போலத் தங்கும் பொற்புடையதாய்


மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்


வள்ளலடி வணங்கிநின்று ஆடுபாம்பே.”        பா. சி.பா. 3




என்கிற பாடலின் வழியாகப் பொன்னின் ஒளி என்பது பொன்னைவிட்டுப் பிரியாமல் இருப்பதுபோல. இந்த உலகத்தைப் விட்டு இறைவன் பிரியமாட்டான். பூவில் மணம் வந்து பொருந்துவதுபோல நம் மனம் பக்குவப்பட்டால் இறைவன் நிலைப்பெற்றுக் வாழ்கிறார். வள்ளலை எல்லோர்க்கும் உதவி செய்யும் எல்லோர்கும் கொடுத்து உதவும் ஈகை குணம் கொண்ட வள்ளலிடம் சென்று நீ வணங்கி பாம்பே நீ ஆடுவாயாக என்று விளக்குகிறார்.




தன்னுள் இருக்கும் இறைவனை உணர்தல் : -




இறைவன் ஜீவனாகிய நமக்குள்ளே இருக்கின்றான். அதை நாம் உணர வேண்டும் இறைவனை தேடிக் அலையவேண்டும் தன்னுள் கடவுள் இருக்கின்றார் மனம் பக்குவப்பட்டால் இறைவனைக் காணஇயலும் என்பதை பின்வரும் பாடலில் விளக்குகிறது.




“எள்ளில எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த


 ஈசன்பத வாசமலர் எண்ணி பெண்ணியே


 உள்ளபடி அன்புகத்தி ஒங்கி நிற்கவே


 ஒடுங்கி அடங்கித் தெளிந்து ஆடுபாம்பே” பாம். சி. பா – 4




என்கிற பாடலின் எள்ளுக்குள் அமைந்திருக்கும் எண்ணெய் பார்த்தால் எந்தப் பகுதியில் அமைந்திருக்கின்றது என்பது தெரியாது அதுபோல இறைவன் நம்மிடமே இருக்கின்றார் இவற்றில் எள்ளுக்குள் நிறைந்திருக்கும் எண்ணெய் போன்று உயிரெங்கும் நிறைந்த ஈசனின் திருவடி மலர்களைப் நினைத்து உண்மையான அன்பும் பக்தியும் நிற்கும்படி அடக்கமுடன் தெளிந்து பாம்பே நீ ஆடவாயாக என்று விளக்குகிறார்.




எள்ளைச் செக்கிலிட்டு ஆட்டினால் எண்ணெய் புலப்படும் அதுபோல, மனம் பக்குப்பட்டால் தான் இறைவனைக் காணமுடியும் என்ற மேற்கூறிய பாடலின் கருத்து ஆகும்.




“எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்தானை


 உள்ளுக்குள் பார்நீ உவந்து”      கு – 1298




என்னும் குறளில் உள்ளத்தில் உள்ள இறையை வணங்க வேண்டும் என்று கோட்பாட்டினை வலியுறுத்துகிறார்.




தனுக்குள் இருக்கும் இறைவன் என்னும் ஜீவன் அதை நாம் உணரவேண்டும் என்பதனை பின்வரும் பாடலில் விளக்குகிறது.




“என்னிலே இருந்த ஒன்றையான அறிந்தது இல்லையே


 என்னிலே இருந்த ஒன்றையான் அறிந்து கொண்டபின்


 என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ?


 என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேன்.”       தி – 3




இவரைப் போலவே திருமூலரும்.




“சீவnனைச் சிவனென வேறில்லை


 சீவனார் சிவனாரை அறிகிலார்


 சீவனார் சிவனாரை அறிந்தபின்


 சீவனார் சிவனாட்டிருப்பாரே”     கு – 17




என்கிற மேற்கூறிய பாடலின் இறைவன் என்று அன்பர் உள்ளத்தில் இருக்கும் உண்மையைச் சுவைப்பட்ப்பாடுகிறார் இவரைப் போலவே குதம்பைச் சித்தரும்.




“எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை


 அங்கத்துள் பார்ப்பாயடி குதம்காய்


 அறுகத்துள் பார்ப்hயடி”      கு – 19




என்று கூறுகின்றார்.




அன்பு நிறைந்த உள்ளம் : -




உள்ளமே இறைவனின் இருப்பிடமாகச் சித்தர்கள் கூறுகின்றனர். எல்லோருடைய உள்ளத்திலேயே இறைவன் தங்கமாட்டான் அன்பானவர்களுடைய உள்ளத்திலேயே இறைவன் தங்குவான். அவர்களால்தான் முக்தியும் அடைய முடியும் என்பதை பின்வரும் பாடலில் காண்போம்.




“எள்ளளவு அன்பகத்தில் இல்லாதோர் முத்தி


 எய்துவது தொல் உலகில் இல்லை எனவே


 கள்ளப்புலன் கட்டறுத்து கால காலனைக்


 கண்டு தொழுது களித்து ஆடாய் பாம்பே.”     பா. சி. பா 




என்கிற பாடலின் வாயிலாகப் உள்ளத்தில் ஒரு எள்ளளவும் கூட அன்பு இல்லாதவர்கள் வீடுபேறு அடைவது இல்லை என்பதனை உணர்ந்து வஞ்சக வழியில் செல்லும் ஐம்புலன்களை அடக்கி இயமனுக்குப் இயமானகத் திகழும் சிவபெருமானை வணங்கி, மகிழ்ந்து பாம்பே நீ ஆடவாயாக என்று கூறுகிறார்.




“அண்ட பிண்டம் தந்த எங்கள் ஆதிதேவனை


 அகலாம வேநினைந் தன்புடன் பணிந்து


 எண்திசையும் புகழ்ந்திட ஏத்தி யேத்தியே


 ஏகமன் மாகநா யாடு பாம்பே”.




என்கிற பாடலின் வாயிலாகப் இந்த உலகத்தைப் படைத்த இறைவன் மனிதனின் உடல் மற்றும் உறுப்புகளைக் படைத்த இறைவன் இரண்டையும் இணைந்து படைத்த எங்கள் ஆதிதேவன் நீங்காமல் நினைத்து அன்புடன் பணிந்து எட்டுத் திசைகளும் புகழும்படி வாழ்த்தி இறைவனை மட்டும் ஒரு மனதாக நினைத்த படியே பாம்பே நீ ஆடுவாயாக என்று கூறுகின்றார்.




“சோதிமய மானபரி சுத்த வஸ்துவைத்


 தொழுது அழுது அரற்றித் தொந்தோந் தோமெனிவே


 நீதிதவ றாவழியில் நின்று நிலையாய்


 நினைந்து நினைந்துரகி யாடு பாம்பே”.




என்கிற பாடலின் வாயிலாகப் சோதி வடிவிலான விளங்கக்கூடிய, மிகவும் தூய்மையான எண்ணத்தில் இறைவனைத் தொழுது, அழுது அரற்றி, நீதியை தவறவடாமல் நின்று ஒழுகி, அப்படியே நிலையாக இருந்து, நினைந்து நினைந்து, உருகி தொந்தோந்தோம் என்று அழகிய ஒலியெழ பாம்பே நீ ஆடுவாயாக என்று விளக்குகிறார்.




எவ்வுயிரும் எவ்வுலகமும் ஈன்று புறம்பாய் இருந்துதிரு விளையாட் டெய்தியும் பின்னம் அவ்வுயிரும் அவ்வுலகமும் ஆகியு நின்ற ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே.




என்கிற பாடலின் வாயிலாகப் அனைத்து உயிர்களையும், உலகங்களையும், படைத்து, அவற்றுக்குப் புறமாக இருந்து படைத்தல், காத்தல், அழ்த்தல், மறைத்தல் அருளல் என்னும் ஐந்து தொழில்களாகிய திருவிளையாட்டை நடத்த, பின்னர் அந்தஉயிரும், அந்தஉலகமும் தானதகவே இருக்கும் ஆனந்த வெள்ளமாகிய இறைவனைக் கண்டு பாம்பே நீ ஆடுவாயாக என்று போற்றுகிறார்.




முயன்று துன்பத்தை போக்க வேண்டும் : -




முயற்சி செய்தால் துன்பததைக் கடந்தும் கூட இன்பமான இறைவன் நிலையைக் அடையலாம்.




“முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று


 தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ? அல்லல்


 இழுகினான் ஆகாப்பது இல்’லையே முன்னம்


 எழுதினான் ஓலை பழுது.”          (பழமொழிநானூறு – 160)




என்கின்ற பாடலின் வாயிலாகப் உலகம் முழமையும் முன்னால் படைத்தவனாகிய இறைவனே தமக்காக் துன்பத்தையும் படைத்துவிட்டான் என்று எண்ணி, அத்துன்பத்தை அவன்தான் போக்க வேண்டும் என்று அவனையே தொழுது கொண்டு தான் ஒரு செயலையும் செய்ய முயலாமல் இருந்தால் அந்தத் துன்பம் நீங்காது கவலையைக் கைவிட்டு பசுவைக் காப்பற்ற முடியாது. ஓலையில் பழுதுபட எழுதியவன் அதனை வருந்துமால் அந்த நிலையைக் மாற்றிக் கொள்ள வேண்டும்.




குரு பற்றிய கொள்கைகள் : -




குருமார்கள் பொய்யான கொள்கையை நாங்களே என்று கடவுளின் உண்மைப் பிரதிநிதிகள் என்றும் நாள்தோறும் அவருடன் கடவுளின் அருளைப் பெறவியலும் என்று கூறி குருமார்கள் நம்பிச் சமூக மக்கள் பகுத்தறிவிழந்து வாழ்வதை இன்று காணலாம் இத்தகைய நிலையை உடைய பொய்யான குருக்களைப் நம்பவேண்டாம் என்று பாம்பாட்டிச்சித்தர் கூறுகிறார்.




“உண்மைக்கு வழிகாட்டும் ஆசானை குரவைத் தேடுங்கள்” என்கிறார் பாம்பாட்டிச் சித்தர் பொய்ப்போதனை புரியும் வஞ்சகரை மாற்றி நன்னெறிப்படுத்தும் உண்மைணைப் போதகர் துன்பத்தில் இருந்து. கவலையிலிருந்து விடுதலையாக்கும் உண்மையான குரக்களைப் தீய வழியில் இல்லாமல் மெய்ப்பொருள் என்பது வேதம் கடந்தது.




“பொயம்மதங்கள் போதனைசெய் பொய்க்குரக்களைப்


புத்திசொல்லி நன்நெறியிற் போக விடுக்கும்


மெய்ம் மதந்தான் இன்னதென்றும் மேவவிளம்பும்


மெய்க்குரவின் புகழ்போற்றி ஆடாய் பாம்பே.” 




என்கிற பாடலின் வாயிலாகப் பொய்யான கொள்கைகளை மக்களிடையே போதனை செய்யும் பொய்க் குரமார்களைப் புத்தி சொல்லி மாற்றி நல்ல வழியில் மாற்றி உண்மையான கொள்கை இதுதான் என்று நாம் விரும்புமாறு சொல்லும் மெயக்குரவின் திருவடிகளைப் போற்றிப் பாம்பே நீ ஆடுவாயாக என்று விளக்குகிறார்.


குருவின் தீய குணங்களைப் நீக்கல் : -




குருவின் தீய குணங்களைப் விலக்கி நல்ல எண்ணத்தைப் பினபற்றுமாறு பின்வரும் பாடலில் கூறுகின்றது.




“உள்ளங்கையில் கனிபோல உள்ள பொருளை


 உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்


 கள்ளமனம் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்


 களித்துக் களித்துநின் றாடாய் பாம்பே.”




என்கிற பாடலின் வாயிலாகப் உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக்கனிபோல உலகில் இருக்கும் உண்மைப் பொருளை உள்ளபடியே காட்டுவதற்கு வல்லஉண்மையான குருவைப் தீயகுணங்களைப் நீக்கி, உள்ளபடியே ஏற்றுக் கொண்டே அன்பினால் மகிழ்ந்து நின்று பாம்பே நீ ஆடுவாயாக என்று விளக்குகிறார்.




“அங்கையிற்கண் ணாடிபோல ஆதிவஸ்துவை


 அறிவிக்கும் எங்களுயி ரான குரவைச்


 சங்கையரச் சந்ததமும் தாழ்ந்து பணிந்தே


 தமனியப் பமமெடுத்து ஆடாய் பாம்பே.”




என்கிற பாடலின் வாயிலாகப் உள்ளங்கையில் உள்ள கண்ணாடி, உருவம் (பிம்பம்) காட்ட உதவுவதுபோல் அனைவருக்கும் மூலமான பொருளை நமக்கு அறிவிக்கும் எங்களின் உயிருக்கும் உயிரான குருவை சந்தேகப்படாமல் எப்பொழுதும் தாழ்ந்து பணிந்து, உன் பொன்னிறப் படமெடுத்து பாம்பே நீ ஆடுவாயாக என்று விளக்குகிறார்.




குருவின் கொள்கைகள் : -




குருவின் கொள்கைகள் உண்மை குருவானவர் இருத்தல் வேண்டும் இவர் இறையனுபவம் உடையவராகச் சீடனுக்கு உண்மைணை உணர்தக் கூடியவராகத் திகழ வேண்டும் என்கிறார். பினவரும் பாடலில் திருமூலர் கூறுகின்றார்.




“கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக


 உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக


 எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று


 தௌ;ளி யறியச் சிவபதங் தானே”.




என்கிற பாடலில் வாயிலாகப் எல்லாத் திறமையும் உள்ளவராக இருக்கவேண்டும் இல்லாவிடில் சீடனையும் கொடுத்துவிடுவார் எனக் குறிப்பால் உணர்த்துகிறார் திருமூலர் குருவை இரண்டு வகையாகப் பிரித்துயள்ளார். அசற்குளு, சற்குரு,




“காயம்நிலை யழிகையைக் கண்டு கொண்டபின்


 கற்புநிலை யுள்ளிற்கொண் டெக்காலமும் வாழும்


 தூயநிலை கண்டபரி சுத்தக் குருவின்


 துணையடி தொழுதுநின் றாடாய் பாம்பே”.




என்கிற பாடலின் வாயிலாகப் இந்த உடல் அழியக் கூடியது என்று கண்டு கொண்டு, நல்லொழுக்க நிலையை மனத்தில் எண்ணிக் கொண்டு, எந்தக்காலமும் தவறினிறி நடக்கும் தூய நிலையுடன் திகழும் பரிசுத்தமான குருவின் இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று பாம்பே நீ ஆடுவாயாக என்று உரைக்கிறார்.




இறைவனை அறிந்துக் கொள்ளுதல் : -




இறைவனை உணருகின்ற வழிமுறைகளை இறைவனை உணர்ந்து கொள்ளுவதற்குச் பற்றிய பின்வரும் பாடலில் கூறுகின்றது.




“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக


 வாய்மைமையே தூய்மையாக மனமணி இலங்கமாக


 நேயமேநெய்யும் பாலாநிறைய நீரமைய ஆட்டிப் 


 பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே”.




என்கிற பாடலில் இறைவனைப் பாடுகிறார் உடல் நிலையற்றது எனும் போக்கு இந்த உடம்பின்மீது பற்று வைக்கக்கூடாது இது அழியக் கூடியது இறைவன் மேல் பற்று வைக்கவேண்டும்.




“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை


 வாய்மையாற் காணப்படும்.”




என்கிற குறளின் வழியாகப் மனதனுக்குப் புறந்தூய்மை மட்டும் பயன் தராது இறைவனை உள்ளத்தில் தூய்மையுடன் நினைக்க வேண்டும் அகந்தூய்மையின்றிப் புறக்கோலம் புணைவர் மூடர்கள் என்பர்.






உடலை வைத்து இறைவனை வழிபடல் : -




இந்த உடலையே ஆதரமாகக் கொண்டு இறைவனை வழிபடல், காணுதல் வேண்டும் என்ற எண்ணிப்போக்கும் சித்தர் பாடல்களில் வெளிப்படுகிறது.




“உளத்தைச் சடலமென் றெண்ணாதே யிதை


 உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே


 பார்த்த பேருக்கே உளத்தையில் லையிதைப்


 பார்த்துக்கொள் உன்றதுனு உலுக்குள்ளே”.     (கொங்) சி; பா – 24)




எனும் பாடலில் கொங்கனச் சித்தர் உன் உடலுக்குள்ளே இருக்கும் கடவுளைபார் எனக் கூறுகிறார்.  இறைவனை தேடி அலைய வெண்டாம் இறைவன் உள்ளத்தில் இருக்கின்றார் மனம் பக்குவபட்டால் இறைவனை அடைய முடியும்.




“ஏட்டுச் சுரைக் காய்கறிக்கு இங்கு எய்தி டாதுபோல்


 எண்திசைதி ரிந்தும்கதி எய்தல் இலையே


 நாட்டுக்குஒரு கோயில்கட்டி நாளும் பூசித்தே


 நாதன்பாதம் காணர்கள் என்று ஆடாய் பாம்பே”.




எனும் பாடலில் ஒரு தாளில் சுவர் ஒவியமாகச் தீட்டப்பட்ட சுரைக்காயின் படமானது. உணவுக்கான கறி சமைப்பதற்கு உதவாவதுபோல் இறைவனை எட்டுத் திசைகளில்தேடி அலைந்தாலும் அவன் அகப்படமாட்டான். அதுமட்டுமன்று நாட்டிற்கு ஒரு கோயில்கட்டி அவனைக் காண முயன்றாலும் அவன் தென்படமாட்டான் என்று கூறி பாம்பே நீ ஆடுவாயாக என்று பகலுகிறார். இறைவனை வெளியே தேடாமல், நம் உள்ளத்தில் தேடி பூசிக்க வேண்டும் என்பது கருத்து ஆகும்.




“உளத்தைச் சடலமென் றெண்ணாதே யிதை


 உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே


 பார்த்த பேருக்கே உளத்தையில் லையிதைப்


 பார்த்துக்கொள் உன்றதுனு உலுக்குள்ளே”.      பா – 96




என்னும் பாடலின் சாதி பேதங்கள் சொல்லுகிறிர்  தெய்வம் தானென் பேதமுண்டோ என்றெல்லாம் பாடுவது உளத்தைக் உடலைத் தெய்வ உடலாக்கிப் பார்ப்பது உயிர் பேதங்களை சாதிய பேதங்களைப் மறுத்துவ எனும் நிலையின் வெளிப்படாக உள்ளது.


 தாவரத்தின் மீது பனிதுணி இருக்கின்றது கதிரவன் உதைந்தால் பனித்துளி மறைந்து விடுகிறது அதுபோல தான் இறைவனை அடைவதும்.




“சூரியனைக் கண்டபனி தூர ஓடல்போல்


 சொந்தபந்தம் சித்தபரி சுத்த தலத்தில்


 ஆரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்


 அகலாமல் பற்றித் தொடர்ந்துஅடாய் பாம்பே”.




என்ற பாடலில் சூரியன் உதிர்வதற்கு முன்னர் புல் நுனிகளில் பனித்துளி சிறிய, சிறிய இருக்கின்றது அது குறிபிட்ட தகுந்த நேரத்தில் இருந்து சூரியன் உதைந்து வரும்போது பனித்துளியின் நீரானது மறைந்து சென்றுவிடுகிறது. உள்ளம் தூய்மையான நிலையில இருந்து தியானம் செய்து உள்ள தூய்மை நிறைந்த கடவுளைக் கண்டு தரிசனம் செய்து அவரைவிட்டு விலகாமல் தொடர்ந்து போற்றுதல் வேண்டும்.




“காந்தம்வலி இரும்புபொல் காசில் மனத்தைக்


 காட்சியஈன வஸ்துவுடன் கலக்கச் சேர்த்துச்


 சாந்தமுடன் தோண்டியும் தாம்புச் போலச்


 சலியாமற் தொடர்ந்துநின் றாடாய் பாம்பே”




என்ற பாடலில் அறியப்படும் செய்திகளைப் இரும்பு என்பதை அதன் பக்கத்தில் இருந்தாலும் காந்தமானது இரும்பிடம் ஒட்டிச் செல்கின்றதைப் போலவே தீய குணங்களைக் கொண்டு இருப்பவர்களைக் தவிர்த்துப் பின்னர் தூய்மையான ஆழ்ந்து தியனாத்தில் ஒரு மனதாக இறைவனைத் தரிசித்து வழிபடுவோருக்கு அவற்றின் ஒரு கிணற்றில் தோண்டிய கட்டிய கயிறு நெடுந்தூரம் வரை பிரிந்து செல்லாமல் இருக்கும் இறைவனைத் தொடந்து போற்றி வணங்குவது இறைவன் ஆகும்.




“தன்னையறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார்


 தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்


 பின்னையொரு கடவுளைப் பேண நினையர்


 பேரொளியைப் பேணுவார்என்று ஆடாய் பாம்பே”.




என்ற பாடலின் வழியாகப் தன்னைப் பற்றிய எதுவும் மற்றவரிடம் புகழ்ந்து சொல்ல வேண்டும். மற்றவர்கள் தான் தன்னைப் பற்றிப் புகழாலம். தன்னைக் அறிந்துக் கொள்ளதாவர் அதிகமாக அவரை பற்றிப் அவர்களையே புகழ்;ந்து பேசுதல் ஆனால் அவர்களில் புகழ்ந்து பேசுவது போல எதுவும் இருக்காது. திறமை உள்ளவர்கள் புகழ்ந்து பேசமாட்டார்கள் திறமை இல்லாதவர்கள் மட்டும் அவர்களைப் பற்றிப் அவரைப் புகழ்ந்து கூறுவார்கள்






முடிவுரை

இலக்கியங்கள் வழி சித்தர்களின் பாடுபொருள்களாக நிலையாமை கருத்துக்களையும், சித்துவிளையாட்டுகளையும், ஒருவனே இறைவன் என்ற கோட்பாட்டை காணமுடிகின்றது.பாம்பாட்டி சித்தரும் தம் பாடல்களில், நிலையாமை கருத்துக்களையும் சித்துவிளையாட்டுகளையும் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டையும், என்வகை சித்திகளையும் பாடுபொருள்களாக கொண்டதை காணமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக