திங்கள், 26 ஏப்ரல், 2021

பாம்பாட்டிச் சித்தர் வரலாறு

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



அந்தணர் குலத்தில் பிறந்தவர் பாம்பாட்டிச்சித்தர் என்பர். கொங்கு நாட்டில் மருத மலையில் தவம் செய்தார். இன்றும் பாம்பாட்டிச் சித்தர் குகை என்று இவர் பெயரில் ஒரு குகை அங்கு உண்டு. இவர் திருக்கோகர்ணத்தில் பிறந்தவர் என்ற கருத்தும் உள்ளது.

 இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு முறை நவரத்தின் பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டைமுனி அங்குவர அவரிடம் தீட்சைப் பெற்றுச் சமாதியிலிருந்து மீண்டு எழுந்து பல சித்துக்களைச் செய்தார். செத்த பாம்புதனை ஆட்டியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.


குண்டலினி 


மூலதாரமாகிய பாம்பினை யோகப் பயிற்சியினால் எழுப்பி மேலேற்றும் திறம் பற்றிய பாடியதால் இவர் பாம்பாட்டிப் எனப் பெயற்பெற்றார். மனத்தைப் பாம்பாக உருவகம் செய்து அடக்குவாதகப் பாடியதால் இப்பெயர் பெற்றார் எனக் கூறுவர்.


இவருடைய காலம் பதினைந்தாம் நூற்றாண்டுச் சித்தராவார். இறைவனின் தன்மையை அவன் எங்கும் நிறைந்திருக்கும் என்று அழகாகப் மிகவும் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர். பொன்னின் ஒளி பொன்னைவிட்டு பிரியாமல் இருப்பதுபோல இந்த உலகைவிட்டு இறைவன் பிரியமாட்டான்.


இவன் சட்டைமுனியின் சீடர் ஆவார். பல வகையான பாம்புகள் நிறைந்த புதர்க்காடுகளை கொண்ட ஊரில் பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து வந்தார். பாம்புகளைக் கண்டு ஊர் மக்கள் நடுங்கினர். ஆனால் பாம்பாட்டிச் சித்தர் மட்டும் அவைகளைக் கண்டு நடுங்கவில்லை. அதற்கு மாறாக அவற்றோடு விளையாடி அவர் தனது பொழுதை போக்கி வந்தார்.


“பொன்னின் ஒளி போல எங்கும் பூரணமதாய்ப்

  பூவின்மணம் போலத்தங்கும் பொற்புடையமாய்

  மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும் 

வள்ளலடி வணங்கிநின்று ஆடுபாம்பே”.


என்று இறைவனின் தன்மையை அவன் எங்கும் நிறைந்திருக்கும் அழகை மிகவும் அழகாகப் பாடியவர் பாம்பாட்டிச் சித்தர்.


தோளில் சாதாரணமாக இவர் பாம்புகளைத் தூக்கி போட்டு திரிவதைக் கண்ட ஊர் மக்கள் நடுங்கினார்கள் நாளடைவில் பாம்புகளோஒட்டி உறவாடியதால் ‘பாம்பாட்டிச்சித்தர்’ என்ற பெயர் பெற்றார். இது காரணப்பெயரே அன்றி. இயற்பெயர் அல்ல.


ஒரு சமயம், ஊரில் உள்ள நாட்டு வைத்தியர்கள் சிலர் இவரைத் தேடி வந்து இலரைப் பார்த்து. “சித்தர் பெருமானே! நாங்கள் மேற்கொள்ளும் மருத்துவ ஆய்வுக்கு மலைக் காடுகளில் ஆபூர்வமாகத் தெண்படும் ‘நாகமாணிக்கம்’ என்ற பாம்பு தேவை. தலையில் மாணிக்க மகுடம் மின்னும் அந்த நாகத்தை எங்களுக்கு உயிருடன் பிடித்து வரவேண்டும்” என்று அன்புடன் கேட்டனர்.


“உறுதியாக நாக மாணிக்கத்துடன் வருகிறோன் என்று கூறிய பாம்பாட்டிச்சித்தர், மலைக் காட்டுக்குள் நுழைந்தார். காட்டுக்குள் அவர் பல நாள்கள் இரவு, பகலாக அலைந்து திரிந்தார் எனினம் அவருடைய கண்ணில் மாணிக்க ஒளி வீசும் நாக மாணிக்கம் என்கிற பாம்பு தென்படவே இல்லை. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அலைந்து திரிந்து பாம்பாட்டிச்சித்தருக்கு, ஒரு நாள் நள்ளிரவு ஒர் அதிர்ச்சியான அனுபவம் ஏற்ப்பட்டது. காடே அதிரம்படியான சிரிப்பொலி அந்தக்காட்டில் கேட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாம்பாட்டி சித்தர். அனைத்துப்பக்கமும் பதட்டதுடன் பார்வையைத் திருப்பினார். அங்கே ஒளிவடிவில் தோன்றினர் சட்டைமுனி என்கிற சித்தர்.


அவரைக் கண்ட பாம்பாட்டிச்சித்தர், “நள்ளிரவில் ஏன் இப்படி அர்த்தமற்ற சிரிப்பு சிரிக்கிறீர்?” என்று சற்றே உரத்த குரலில் கேட்டார்.


உடனே சட்டைமுனி அவரைப் பார்த்து, “ஒரு பித்தனைப் போல் நீ செய்யும் செயலைப் பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்வது?” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.


உடனே பாம்பாட்டிச் சித்தர் சட்டைமுனி சித்தரைப் பார்த்து.


“எனக்கா பித்தம் என்கிறீர்? உலகுக்கு அரிய மருத்துவப் பயன்னாடு கொண்ட நாக மாணிக்கத்தைத்தேடி அலைவது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறதா?” என்று கேட்டார்.


உடனே சட்டைமுனி சித்தர், பாம்பாட்டிச் சித்தரைப் பார்த்து, “பாம்பாட்டி! உலகின் அனைத்து வகை பாம்பாட்டி பாடல்கள் எளியநடை, சொல், நயம், தெளிந்த உவமை கொண்டன. சம்பிரதாயக் கருத்துக்களைக் கூறுவது போலத் தோன்றினாலும் அடிப்படையில் ஆழ்ந்த தத்துவம் கொண்டவை. பாம்வு வடிவமாக மண்லத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதன் மூலம் ஆன்ம தரிசனம் செய்வதை இவரது பாடல்கள் எடுத்துரைக்கின்றன. தசறாடி, தசவாயு பற்றி தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதனைப் பாம்பாட்டி, இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புரடன், காந்தாரி, அக்கினி, அலம்புடை, சுங்கிணி, குணா, என்பன பத்தும் நாடிகளாகும்.


தியான யோகம் செய்பவர்கள் அழியாமல் இருக்கலாம் என்பது பாம்பாட்டிச் சித்தரின் அசையாத நம்பிக்கை ஆகும் இதற்கு இறப்பு இல்லாத வாழ்க்கை வாழலாம் என்பது பொருள் இதனை விளக்குவதாக.


பாம்பாட்டிச் சித்தர் மனத்தைக் குதிரைக்கு உருவகப்படுத்துகிறார் மாமென்னும் புரவியை வாகனமாக்கி மதியென்னும் கடிவாளத்தை பாம்புகளையும் பிடித்து ஆட்டுவிக்கும் ஆற்றல் உள்ளவன் நீ என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உலகிலேயே அதிஅற்புத ஆற்றல் வாய்ந்த பாம்பு ஒன்று உனது உடலுக்குள்ளேயே. ஒளிந்திருக்கிறதே! அதனை நீ இன்னும் அறியவில்லையே! அந்தப் பாம்பை அடக்கி, உன் விருப்படி ஆட்டுவித்தால் நீ சித்தன். வெளியில் திரியும் பாம்புகளை நீ தேடியலைந்து, அவைகளைப் பிடித்து வருந்தும் வரை நீ பித்தன்தான் என்கிறார்.


மேலும் சட்டைமுனி அளித்த பல மெய்ஞ்ஞான விளங்கங்களுக்குப் பிறகு. தனது அறியாமையும் உடம்கினுள் மறைந்திருக்கும் நாகமான குண்டலினி சக்கியையும் கண்டுணர்ந்தார் பாம்பாட்டிச்சித்தர். இவர் இறுதியில் மருதமலையில் சமாதி அடைந்தார்.


பாம்பாட்டிச் சித்தர் இயற்றிய பாடல்களில் பெரும்பகுதி யோகமே ஆகும். இவர் இயற்றிய பாடல்கள் ‘பாம்பாட்டிச்சித்தா பாடல்கள்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இவை மொத்தம் 129 பாடல்கள் ஆகும்.


வாயில் புட்டிச் சினமென்பதன் மேல் அதை ஒறுக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார் இது சிவ யோகத்தைக் குறிப்பதாகும். மூலக்கனலைமூக்கு நுனிமேல் உள்ள நெற்றி புரவ நடுவில் சேர்க் வேண்டும் எனக் குண்டலினி யோகத்தை விளக்கியுள்ளார். பாம்பாட்டிச் சித்தர். இவர் பல்வேறு சித்திகளையும் தம்பாடல்களில் விளக்கியுள்ளார். எட்டு மலைகளையும் பந்தாக எடுத்து எறிவோம் என்றும், ஏழ் கடலையும் குடித்து ஏப்பம் விடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மண்டலத்தைக் கையால் மறைத்து விடுவோம் என்றும் வானத்தைக் கையால் வில்லாக வளைத்து என்றும் சித்திகளின் சிறப்புகளைக் கூறுகின்றார். ஊசித் துளைக்குடத்தினுள் பாம்பை அடைத்தல், உலகைச் சுற்றி உலா வருதல், குற்றமுள்ள பிறவியை மறைத்தல் மறுபிறப்பு இல்லாமல் செய்தல் போன்றவற்றையும் பாடியுள்ளார்.









 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக