சனி, 24 ஏப்ரல், 2021

இலக்கியங்களில் இளமை நிலையாமை கருத்தியல்கள்

ஆ. இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



மனிதனின் வாழ்க்கையில் நிலையில்லாதது என்பதனை மூன்று பிரிவுகளாக   கூறுகின்றனர். அதில் “இளமை நிலையாமை” என்பதும் ஒன்று. இந்த இளமை நிலையில்லாதது என்பதனை ஒரு மனிதன் தன் வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து தெரிந்துக்கொண்டு இவ்வுலகம் பொருள்கள் மீதும் மற்றும் உடலின் மீதும் பற்று இல்;லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருதி ஆசையை விட்டுவிட்டு அற வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். என வாழ்வதே சிறந்த நிலை  என்று கூறலாம்.

இளமை நில்லாது:

“நரை வரும்! என்று எண்ணி, நல் அறிவாளர்

குழவியிடத்தே துறந்தார் புரை தீரா

மன்னா இளமை மகிழ்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப்பார்”   

நல்ல அறிவை உடையவர்கள் முதுமையில் நரையும் மூப்பும் வரும் என்பதை முன்பே உணர்ந்து பருவத்திலேயே துறவியாகி விடுவர். குற்றங்களை விலக்காத நிலைக்காத இளமையை நம்பித் துறவு நோற்காமல் காம வெகுளி மயக்கங்களில் மூழ்கிக் கிடந்தவர் முதுமையுற்றக் கொம்பு ஊன்றித் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.

 

கிழப்பருவம் எய்திப் பேச்சுத் தடுமாறிக் கொம்பு ஊன்றி தளர்ந்த நடை நடந்து பற்கள் விழ, பொக்கை வாய் ஆகி உடல் பழி சுமக்கும் அளவு இல்லத்தில் ஈடுபட்டுக் காம வழிகளில் செல்லும் கருத்துடையவர்க்குத் துறவற வழியில் செல்லும் ஏமநெறி இல்லை.

இல்லறத்தில் ஈடுபடுபவர்க்கு உயிர் காக்கும் துறவுநெறி வாய்க்காது.

எல்லாரும் போயினர்:

“நட்புநார் அற்றன, நல்லாரும் அஃகினார்

அற்புதத் தளையும் அவிழ்ந்தன உள் காணாய்

வாழ்தலின் ஊதியம் என் உண்டாம்? வந்ததே

ஆம் கலத்து அன்ன கலழ்!”  

நட்;பு என்னும் நார் அற்றுப் போயிற்று. அன்பு காட்டிய மகளிரும் அன்பு குறைவர் ஆயினர். அன்பு என்ற கட்டுகளும் நெகிழத் தொடங்கி விட்டன. உனக்கு உள்ளேயே ஆராய்வாயாக வாழ்வதால் என்ன பயன் உண்டாயிற்று? வாழ்க்கைக் கடலில் மூழ்கிப்போகும் கப்பல் ஆயிற்று. கூன் உற்று தளர்ந்து, தலை நடுங்கி, கொம்பு ஊன்றி விழுந்தும் எழுந்தும் செல்லும் கிழப்பருவம் எய்திய மனைவி மாட்டு முதிர்ச்சி இல்லாத காமத்தைக் கொள்ளுகின்ற கணவமாருக்குத்தான் ஊன்றி வரும் கைக்கோல் தன் மனைவிக்கும் ஊன்றுகோல் ஆயிற்றே என்று எண்ணத்தகும். முதுமை, துன்பம் தருவதாகும். முதுமையின் மோகம் பழக்கத்தக்கது.

 

“எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு

தனக்குத் தாய் நாடியே சென்றாள், தனக்குத் தாய்

ஆகியவளும் அது ஆனாள், தாய்த் தாய்க்கொண்டு

ஏகும் அளித்து, இவ் உலகு”  

என்னைப் பெற்றெடுத்ததாய் என்னை இங்கு விட்டுவிட்டுத் தன்னைப் பெற்றெடுத்த தாய் சென்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள் (இறந்து விட்டாள்). என் தாய்க்குத் தாயானவரும் என் தாயை விட்டுவிட்டுத் தன் தாயை நாடிச் சென்றுவிட்டாள். இவ்வுலகம் இப்படி நிலையாமை உடையது. பெற்ற தாயாக இருந்தாலும் செத்தே தீரவேண்டும் எனும் நிலையாமை உடையது இவ்வுலகம். வெறியாட்டுக் களத்தில் வெறியாடுபவன் கையில் இளம் தளிர்கள் மாலையின் ஊடே இருக்கும். வெறி ஆட்டத்தின் முடிவில் வெட்டப்பட இருக்கும் ஆடு ஆங்கே இருக்கும் தளிரை  இடைஇடையே அது உண்டு மகிழும். முடிவில் தான் பலியிடப்படுவோம் என்பதை ஆடு அறியாது. இத்தகு அறியாமை நல்ல அறிவுடையோர் இடத்துக் காணப்படாது.

(இளம்பருவ மகிழ்ச்சி ஆட்டிற்குக் கிடைக்கும் தளிரைப் போன்றது)


பெண்ணின் அழகும், போரும்:

“பனிபடு சோலைப் பயன் மரம் எல்லாம்

கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை நனி பெரிதும்

வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்

கோல் கண்ணள் ஆகும் குனிந்து.”  

குளிர்ச்சியான சோலையில் காய்ந்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்துவிடும். இளமையும் அதுபோல உதிரும் தன்மையதே வேலைப் போன்ற கூரிய விழிகளை உடையவள் என்று ஒரு பெண்ணை விரும்பிட வேண்டாம். இவளும் கூனள் முதுகுடையவளாகிக் கொம்பு ஊன்றி நடைதடுமாறும் முதுமைப் பருவம் வந்து அடைவள். 

பெண்ணின் இளமை அழகும், முதுமையில் அழிந்துப்போகும்


வயது எத்தனை ஆகிறது பற்கள் விழுந்தவை எத்தனை? எஞ்சியிருப்பவை எத்தனை? எல்லா வேளைகளிலும் முழு உணவு உண்டீர்களா? என வயது ஏறத் தமக்குள் வினவப்படும் தகையது. உடல்நிலை உடலின் இளமை, நிற்பது இல்லை. எனவெ அறிஞர் இளமையை ஒரு பொருளாகக் கருதார். வயது ஏற ஏறப் பற்கள் விழுவதும் உணவின் அளவு குறைவதும் இளமை நிலைப்பதில்லை என்பதைக் காட்டும். எனவே அறிஞர் இளமையைப் பொருட்டாகக் கருதுவதும் இல்லை

இன்றே இயன்றன செய்க:

“மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது

கைத்து உண்டாம் போழ்தே, கரவாது அறம் செய்ம்மின்

முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியாய்

நல்காய் உதிர்தலும் உண்டு.”  

மரங்களில் கனிந்த பழங்கள் உதிர்வதற்குப் பதிலாகத் தீமைதரும் புயற்காற்றால் நல்ல காய்களும் உதிர்ந்து விடுவது உண்டு. அதைப் போல இளைய மனிதர்க்கு இறப்பு நிகழ்தலும் உண்டு. எனவே செய்ய வேண்டிய அறச் செயல்களை இப்போது இளமையாகத் தானே உள்ளோம் நன்கு ஆராய்ந்து பின்னாளில் செய்வோம் என்று தள்ளி வைக்க வேண்டாம். கையில் காசு இருக்கும் போதே மறக்காமல் அறம் செய்தல் வேண்டும்.

(கையில் காசு உள்ள இளமைப் பருவத்திலேயே தள்ளிப்போடாமல் தர்மம் செய்தல் வேண்டும்)

கருணை இல்லாத எமன் காலம் முடியும் மனிதரைத் தேடிப் பார்த்துக் கொண்டே இருப்பான். இளம் கருவினின்றும், வெளிப்படுத்தி தாய் பெற்ற பிள்ளையின் உயிரைக்கூட அப்பிள்ளையின் வாழுங்காலம் முடிந்து விடுமானால் தாய் கதறக் கதற எமன் கொண்டு சென்று விடுவான். எமனின் வஞ்சச் செயலை அறிந்திருத்தல் நல்லது. எனவே மறுமை உலகிற்கு உணவுபோல்வதாகிய அறத்தை இளமைக் காலத்திலும் செய்தல் வேண்டும்.

(இறத்தல் உறுதி எனவே இளமையிலேயே அறம் செய்க)

திருவருட்பா மனிதனின் வாழ்நாளை அவனது இளமையின் கால அளவினை உதாரணங்கள் காட்டி விளக்குகிறார். இதனை

“………………………….பருவம் நேர்

கண்டொழியும்  இளமைதான் பகல்வேளை”  

என்ற அடிகளின் மூலம் இளமை, இன்பம் இவை நிலையற்றவை என அறிய முடிகிறது.

இளமை நிலையாமை:

செல்வம் இருப்பினும் அதன் பயனை அனுபவிப்பதற்கு இளமை வேண்டும். ஆனால் இளமையும் செல்வத்தைப்போல நிலையற்றதாகும்.

காலையில் கிழக்கே உதிக்கின்ற சூரியன் பகலில் உச்சிக்கு வந்து மாலையில் மறைவதைக் காண்கிறோம். இளமை நலம் பொருந்திய கன்று பெரியதாய் முத்து மடிவதையும் காண்கிறோம். அவ்வாறுள்ளபோது மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடி இளமையோடு இருக்க முடியும்? அறிவில்லாதவர் இவ்வுண்மையை உணரவில்லையே என இரங்குகிறார் திருமூலர்.

“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

விழக்கண்டும் தேறார் வியனுல கோரே”  

இளமை கழிந்து போகுமுன் அருமையான செயலைச் செய்துவிட வேண்டும். முதுமையில் எண்ணினாலும் அருஞ்செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும்.

ஆடவரை இளமையில் அழகிய மாதர் விரும்பிப் பயனைப் பெறுவர். ஆனால் இளமை நலத்தை நுகர்ந்த பின்னர் கரும்பின் சாற்றைப் பெற்றுச் சக்கையை ஒதுக்குவது போல வெறுத்து ஒதுக்குவர் என்று உவமையோடு ஆசிரியர் கூறும் விளக்கம் நகைச்சுவையாக உள்ளது.

கசப்பினை நல்கும் காஞ்சிரங்காயைச் சொல்லும்போது வெறுப்பின் எல்லையைக் காட்டுகிறார் ஆசிரியர். பின் மனிதன் பாலனாக, இளைஞனாக வித்தனாக இருந்து மறைவதைக் காட்டி அவர் இளமை நிலையாமையை விளக்குகிறார்.

“பாலனாய்க் கழிந்தாளும் பனிமலர்க்கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்தாளும் மெலிவோடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்தாளும் குறிக்கோளி லாதுகெட்டேன்

சேலுமாம் பழனவேலித் திருக்கொண்டீர் சரத்துளானே  

என்ற திருநாவுக்கரசரின் வாக்கினையும் ஒப்பு நோக்கலாம்.

சூரியன் நாளாகிய வாளைக் கொண்டு மனித ஆயுளை அறுக்கிறான் என்று உணர்ந்து இளமை கழியா முன்னர் இறைவனது திருவடியை ஏத்தி அறவாழ்வு வாழ வேண்டும் என்பது அவரது அறவுரை.

இறப்பை நழுவவிட்டால் மீண்டும் எப்பிறப்பு வாய்க்குமோ அறியோம். ஆகவே வாய்க்கப் பெற்ற இவ்வரிய மானுடப் பிறப்பை நழுவவிடாமல் தக்கவாறு பயன்படுத்தி பிறப்புப் துன்பத்திலிருந்து விடுபட்டு முக்தி இன்பத்தை அடைந்திட வேண்டும் என்பதைத் திருமந்திரம் மூலம் திருமூலர் எடுத்துக் காட்டுகிறார்.

மானுட வாழ்க்கையில் எவரும் இளமை பருவத்துடன் என்றும் நிலைத்து இருப்பதில்லை. இளமை இறந்து முதுமை வரும் என்பது உலகில் தெளிவு. ஆதலால் இளமையிலேயே அறம் செய்ய வேண்டும். இல்லையெனில் யாதொரும் மறுமைப் பயனையும் அடைய முடியாது.

“பனிபடு சோலைப் பயன் மரமெல்லாம்

கனியுதிர்ந்து வீழ்ந்தற்றிளமை நனி பெரிதும்

வேல் கண்ணன் என்றிவளை வெஃகமின் மற்றிவரும்

கோல் கண்ணனாரும் குணாந்து”  

என்ற பாடல் தெளிவுப்படுத்துகின்றன. கனிகள் உதிர்ந்து மரம் விரும்பத்தக்கதாகக் கருதுவது இல்லை. அதுபோன்று இளமை கழிந்த உடலும் விரும்பப்படுவது இல்லை. எனவே இளமையிலேயே அறம் செய்திடல் வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றன. இளமையில் அறவழியில் செல்லாமல் சுகபோகம் அனுபவித்தவர்கள் முதுமையில் வருந்துவர்.

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை”  

என்ற குறளில் நிலையில்லாதவையை என்றும் விரும்பக் கூடாது. அது போன்றும் இளமையும் நிலைத்திருப்பதில்லை என்று கூறுகிறார்.

அறிவில்லாதவர்களே இளமை இன்பங்களை விரும்பி இருப்பர். அறிவுடையோர் இளமையை ஒரு பொருட்டாக நினைத்திருப்பதில்லை என்பதை

“வெறி அயர் வெம்களத்து வேல்மகன்பாணி

முறிஆர் நறும் கண்ணி முன்னர்தயங்க

மறிகுளகு உண்டு அன்ன மன்னா மகிழ்ச்சி

அறிவுடையாளர் கண் இல்.”  

என்ற பாடலில் இளமையை அறிவுடையோர் விரும்பமாட்டார் என்ற கருத்தை நாலடியார் பாடல் தெரிவிக்கிறது.

இளமை, இன்பம் நிலையான பயனதை; தருவதில்லை. இந்த இன்பத்தைக் கல்வி அறிவில்லாதவர்கள் அறிவுடையவர்கள் இளமை இன்பம் ஆகியவற்றை விரும்பமாட்டார்கள். அவர்கள் அறச்செயல் செய்வதையே தன் பயனாகக் கொள்ளுவர் என்பதை நாலடியாரின் பாடல்கள் வழி அறிய முடிகின்றது. நேற்று உயிரோடு ஒருவன் உரையாடி உறவாடிக் கொண்டிருந்தவன் இன்று இறந்துப் போய் விட்டான் என்றும் நெடும் கணக்கை உடையது இந்த உலகம்.

இளமை அறம்:

“என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்

பின்ஆவது என்று பிடித்து இரார், முன்னே

கொடுத்தார் உயப் போவர் - கோடுஇல் தீக்கூற்றம்

தொடுத்து ஆறு செல்லும் சுரம்” 12  

  புதிய வரவு நம் கைக்குக் கிடைத்தால் வயதான காலத்தில் அது பயன்படும் என்று இறுகப் பிடித்து வைத்துக் கொள்ளல் கூடாது.-

அதனை வந்த போதே வறியவர்க்கும், கொடுத்து விடுதல் வேண்டும். அவ்வாறு கொடுத்தவர் பிறழ்தல் இல்லாத அருளில்லாத எமன் பாசக் கயிற்றால் கட்டி நரகத்திற்கு இட்டுச் செல்லுதலிலிருந்து தப்பிச் சுவர்க்கம் சென்று அடைவர்.

நல்ல அறிவை உடையவர்கள் முதுமையில் நரையும், மூப்பும் வரும் என்பதை முன்பே உணர்ந்து இளமைப் பருவத்திலேயே துறவியாகி விடுவர். குற்றங்களை விலக்காத இளமையை நம்பித் துறவு நோற்காமல் காம வெகுளி மயக்கங்களில் மூழ்கிக் கிடந்தவர் முதுமையுற்றுக் கம்பு ஊன்றித் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.

“நட்புநார் அற்றன, நல்லாரும் அஃகினார்

அற்புதத் தளையும் அவிழ்ந்தன, உள்காணாய் 

வாழ்தலின் ஊதியம் மகிழ்ந்தாரே, கோல் ஊன்றி 

ஆழ் கலத்து அன்ன கலுழ்”  

நட்பு என்னும் நார் அற்றுப் போயிற்று. அன்பு காட்டிய மகளிரும் அன்பு குறைவர் ஆயினர். அன்பு என்ற கட்டுகளும், நெகிழத் தொடங்கி விட்டன. உனக்கு உள்ளேயே ஆராய்வாயாக வாழ்வதால் என்ன பயன் உண்டாயிற்று? வாழ்க்;கைக் கடலில் மூழ்கிப்போகும் கப்பல் ஆயிற்று.

கிழப்பருவம் எய்திப் பேச்சுத் தடுமாறிக் கொம்பு ஊன்றித் தளர்ந்த நடை நடந்து பற்கள் விழ, பொக்கை வாய் ஆகி உடல் பழி சுமக்கும் அளவு இல்லறத்தில் ஈடுபட்டுக் காம வழிகளில் செல்லும் கருத்துடையவர்க்குத் துறவற வழியில் செல்லும் ஏமநெறி இல்லை.

 

கூன் உற்று, உடல் தளர்ந்து, தலை நடுங்கி, கொம்பு ஊன்றி விழுந்தும் எழுந்தும் செல்லும் கிழப்பருவம் எய்திய மனைவி மாட்டு முதிர்ச்சியில்லாத காமத்தைக் கொள்ளுகின்ற கணவர்மாருக்குத் தான் ஊன்றி வரும் வைக்கோல் தன் மனைவிக்கும் ஊன்றுகோல் ஆயிற்றே என்று எண்ணத்தகும். முதுமை, துன்பம் தருவதாகும்.

என்னைப் பெற்றெடுத்த தாய் என்னை இங்கு விட்டுவிட்டுத் தன்னை பெற்றெடுத்த தாய் சென்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள் (இறந்து விட்டாள்). என் தாய்க்குத் தாயானவரும் என் தாயை விட்டுவிட்டுத் தன் தாயை நாடிச் சென்றுவிட்டாள். இவ்வுலகம் இப்படி நிலையாமை உடையது.

வெறியாட்டுக் களத்தில் வெறியாடுபவன் கையில் இளம் தளிர்கள் மாலையின் ஊடே இருக்கும். வெறி ஆட்டத்தின் முடிவில் வெட்டப்பட இருக்கும் ஆடு ஆங்கே இருக்கும் தளிரை  இடைஇடையே அது உண்டு மகிழும். முடிவில் தான் பலியிடப்படுவோம் என்பதை ஆடு அறியாது. இத்தகு அறியாமை நல்ல அறிவுடையோர் இடத்துக் காணப்படாது.








பெண்ணின் அழகும், போரும்:

“பனிபடு சோலைப் பயன் மரம் எல்லாம்

கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை நனி பெரிதும்

வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்

கோல் கண்ணள் ஆகும் குனிந்து.”  

குளிர்ச்சியான சோலையில் காய்ந்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்துவிடும். இளமையும் அதுபோல உதிரும் தன்மையதே. வேலைப் போன்ற கூரிய விழிகளை உடையவள் என்று ஒரு பெண்ணை விரும்பிட வேண்டாம். இவளும் கூனள் முதுகுடையவளாகிக் கொம்பு ஊன்றி நடைதடுமாறும் முதுமைப் பருவம் வந்து அடைவள். 

வயது எத்தனை ஆகிறது? பற்கள் விழுந்தவை எத்தனை? எஞ்சியிருப்பவை எத்தனை? எல்லா வேளைகளிலும் முழு உணவு உண்டீர்களா? என வயது ஏற ஏறத் தமக்குள் வினவப்படும் தகையது. உடல்நிலை உடலின் இளமை, நிற்பது இல்லை. எனவெ அறிஞர் இளமையை ஒரு பொருளாகக் கருதார்.

மரங்களில் கனிந்த பழங்கள் உதிர்வதற்குப் பதிலாகத் தீமைதரும் புயற்காற்றால் நல்ல காய்களும் உதிர்ந்து விடுவது உண்டு. அதைப் போல இளைய மனிதர்க்கு இறப்பு நிகழ்தலும் உண்டு. எனவே செய்ய வேண்டிய அறச் செயல்களை இப்போது இளமையாகத் தானே உள்ளோம் நன்கு ஆராய்ந்து பின்னாளில் செய்வோம் என்று தள்ளி வைக்க வேண்டாம். கையில் காசு இருக்கும் போதே மறக்காமல் அறம் செய்தல் வேண்டும்.

கருணை இல்லாத எமன் காலம் முடியும் மனிதரைத் தேடிப் பார்த்துக் கொண்டே இருப்பான். இளம் கருவினின்றும், வெளிப்படுத்தி தாய் பெற்ற பிள்ளையின் உயிரைக்கூட அப்பிள்ளையின் வாழுங்காலம் முடிந்து விடுமானால் தாய் கதறக் கதற எமன் கொண்டு சென்று விடுவான். எமனின் வஞ்சச் செயலை அறிந்திருத்தல் நல்லது. எனவே மறுமை உலகிற்கு உணவுபோல்வதாகிய அறத்தை இளமைக் காலத்திலும் செய்தல் வேண்டும்.

“மூத்தல் இறுவாய்த்து, இளநலம், தூக்கு இல்”  

முதுமை உடலில் தோன்றின் அது இளமைக்கு இறுவாய்.

“இளமை இயைந்தாரும் இல்லை”  

இளமை முதுமை அடையாது இருப்பதில்லை. பாலைப் போன்ற மென்மையான சொல்லுடைய பெண்ணே! இளமைப் பருவம் நில்லாது போய்விடும். நோயும், மூப்பு வந்து சேரும். இருக்கும் செல்வமும் இன்னபிற வலிமைகளும் குன்றிப் போகும். எஞ்சி இருக்கும் நாட்கள் குறைவு. எனவே முன்பு செய்த துன்பம் தரும் செயல்களைத் தொடராதே வீடு பேற்றிற்குரிய வினைகளை விரும்பிச் செய்வாயாக.

தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் செல்லல் நல்லதன்று. இளமை நிலையில்லை. பொருளீட்டலை விட தலைவியோடு இணைந்து பிரியாது வாழும் வாழ்வே நல்வாழ்வு என்கிறாள் தோழி.

“இளமையும் காமமும் நின் பாணி நில்லா…..

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு

மாற்றுமை கொண்ட வழி”  

கூற்றமும் மூப்பும் உளவென்ற உண்மையை மறந்தவரோடு ஒன்றாகக் கூடிப் பொருள் தேடிப் போக எண்ணுகிறாய். அது நன் மக்கள் செல்லும் வழியன்று. அறநெறிக்கு மாறான பாதை எனக் கூறி தலைவனின் பிரிவைத் தடுத்து நிறுத்துகிறாள் தோழி.

பொருளின் மீதுள்ள அவாவைக் கைவிடுவாயாக.அதனைக் கைவிட்டு தலைவியுடன் பிரியாமல் கூடியிருப்பதே நிலையான உண்மைச் செல்வம் என்கிறாள் தோழி.

“செம்மையின் இகந்து ஓரீஇப் பொருள் செய்வார்க்கு, அப்பொருள்

இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? (18)

செம்மையான வழிகளிலிருந்து மாறுபட்டுச் சென்று பொருள் தேடுவோர்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாக விளங்கும் என உரைக்கிறாள் தோழி. நல்வழியில் பணம் ஈட்டல் வேண்டும் என்ற சிறந்த நீதியை இப்பாடல் சுட்டுகிறது.

“இளமையும் தருவதோ, இறந்த பின்னே?” (பாடல் : 14)

இளமை நிலையில்லை என்பதைக் கூறுகிறது இப்பாடல்.  ஆக வாழ்வு தான் புறவாழ்வான பொருள்.  கல்வி, தொடர்பு ஆகியவற்றினுள் சிறந்தது என்கிறது.

'பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து நீ 

பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப்படர்ந்து நீ   

என்கிறாள் தோழி.

‘ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிசு ஆரோ

சென்ற இளமை தரற்கு'  

‘காஞ்சி தானே பெருந்திணைப் புளுனே

மாங்கரும் சிறப்பிற் பல்லாற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே”  


வீடுபேறு நிமித்தமாக பல்வேறு நிலையாமைகளைச் சான்றோர் சாற்றும் குறிப்பினது காஞ்சித்திணை ‘பெருந்திணை நிலமில்லாத திணை.  ஆறம், பொருள், இன்பம் பற்றி யன்றி வேறு வேறு நிலையாமை என்பதொரு பொருளின்றாதல் ஒப்புமையான், காஞ்சி பெருந்திணைக்குப் புறன்' என நச்சினார்க்கினியார் உரைப்பர்.

 

இந்த வாழ்வு என்றும் நிலைக்குமா என எண்ண வேண்டும்.  காலத்தின் மாற்த்தால் முதுமைக்கு உன்னை இழுத்துச் செல்கிறது.  இறுதியில் இறப்பு வெற்றி கொள்கிறது.  சங்கு ஐழங்குகிறது.  இதுதான் மனிதனின் வாழக்கை முதலில் இளமை வளர்பிறை பின் தேய்பிறை முடிவு இருள்நிறை அமாவாசையாய் முடிகின்றது.

தன் தாயை இழந்தவன்  தாயை நினைத்து பயன் இல்லை என்று எண்ணி ஆறதல் அடைகிறான்.  நிலையாமை எது என்று அந்த இளமையை உணர்கிறான். தம்பி காற்றடித்தால் பழம் மட்டும் உதிர்வது இல்லை.  செங்காயும் சிதைகிறது. உதிர்கிறது.  நீண்ட நாள் வாழ்வது உறுதி இல்லை.  ஆதனால் முடிந்த, வாய்ப்புள்ள நாள்களில் அறம் செய்ய வேண்டும்.

“குணத்தழகு இன்றேல் குவிந்த அழகு எல்லாம்

பிணத்தழகு ஆகு''  

குணம் உயிரின் மணமாய் ஒளிர்கின்றது. அழகு உடலில் இனிதாய் மிளிர்கின்றது.  குணம் இல்லையேல் உயிர் அற்ற உடல்போல் அழகு பழிவுற்று இழிவாக காணப்படும்.  உள்ளே குண நலம் இல்லாத மனிதன் வெளியே ஓர் அழகானாய்த் தலைநீட்டி வருவது உயிர் நீங்கிய வசத்தை நீராட்டி அலங்கரித்து வைத்ததுப் போல இருக்கும்.  ஆரிய குண நலங்கள் மருவிய பொழுதுதான் உயிர் பெற்ற உடலாய் அழகு ஒளிபெற்று விளங்கும் எனலாம்.  இனிய நீர்மையே புனித அழகு.

“மேனி மினுக்காய் வெளிப்பகட்டாய் மேவிவிரல்

ஆனஅழ கெல்லாம் அழகல்ல''  

உடல்களை மினுக்கி ஆரவாரமா அலங்கரித்து வெளியே வருவன அழகல்ல.  உணர்வு சுரந்து அருள் நலம் கனிந்து தனது ஆம்ம நிலையை ஆராய்ந்து வருவதே மனிதனுக்கு இனிய அழகு. கண்டவர் உள்ளங்களைக் கவரத்தக்க கட்டழகும், காணாத வரும் கருதி மகிழ்கின்ற குணநலனும் பெரிய அரசுரிமையும் இவ்வுலகில் உயர்ந்த பாக்கியங்களாய்ச் சிறந்து அமையும்.  கட்டழகு என்பது அதிசயமான பேரெழிலை கொண்டதாகும்.

‘இளமையெழில் என்றும் இனிதாய் இசைந்து

வளமை புதமை மலிந்து'  

இளமையும் எழிலும் இனிமையாய் இசைந்து, புதமையும் வளமையும் நாளும் பொழிந்து விழுமிய நிலைமை ஒருபோதும் குன்றாமல் ஒளி வளர்ந்து உள்ளமையால் முரகன் என்றும் ஒரு நிலையே பெருமிதமாய் நின்று விளங்குகிறது. இளமையும் அழகும் மனித நிலையில் மிகவும் இனிமையானது. 

 முடிவுரை

உலகப் பொருள்கள் அனைத்திற்கும் இளமைக்கு ஒரு இனிமையான இத்தமைகய இளமை விரைவில் மாறுகின்றது.  முருகு என்னும் மொழி அழகு இளமை இனிமை மணம் தெய்வத்தன்மை முதலிய விழுமிய பல பொருள்களை உடையது. மேற்கண்ட செய்திகளின் வழி இளமை நிலையில்லை என்று பல்வேறு அறிஞர்களும் விளக்கியுள்ளதை அறியமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக