வெள்ளி, 20 ஜூலை, 2018

வெற்றிச் சிறப்பு

 

            வெற்றிச் சிறப்பு

    “காதலும் போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும் விஞ்ஞானமும் மனிதவியலும் இக்கால இலக்கியங்களின் பிரிவாகவும் அமைந்துள்ளன|| என்று பூர்ணலிங்கம் பிள்ளை கூறுவார்.  அவ்வாறு காதலும் போரும் பற்றி கூறிய பழைய பாடல்களை கடல்கோளும் கறையானுக்கும் போக எஞ்சி நின்றவையே சங்க இலக்கியங்கள் என தொகுத்தனர்.  இவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகும்.  இவற்றுள் எட்டுத்தொகை அகம்,புறம், அகப்புறம் என பிரிக்கப்பட்டுள்ளது.  புறப்பொருள் பற்றி கூறுவன புறநானூறும், பதிற்றுப்பத்தும் ஆகும்.  ஆகவே பதிற்றுப்பத்தின் வெற்றிச் சிறப்பினை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையாகும்.

பதிற்றுப்பத்து விளக்கம்

    சேர நாட்டு அரசர் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப்பத்து பாடல்களாக பாடிய 100 பாடல்களின் தொகுப்பு அந்தாதி வகை இலக்கியத்திற்கு வித்திட்ட நூல் இது.  ‘எரிஎள்ளு வன்ன நிறத்தன் எனும் கடவுள் வாழ்தூது அமைந்துள்ளது முதற்பத்தும், இறுதிபத்தும் கிடைக்கப்பெறவில்லை.  எட்டுப்பத்துக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.  எல்லாப் பாடல்களும் பாடாண் திணையில் அமைந்துள்ளன.  வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை பயன்படுத்தியதால் ‘இரும்புக்கடலை|| எனப் போற்றப்படுகிறது ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு பெயர் என்பன குறிக்கப்பட்டுள்ளன.   முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த சேர மன்னர்களைப் பற்றி கூறுவது. 18 வகையான துறை வகைகளை குறிப்பிடுவது.  அவற்றில் 8 துறைகள் பற்றி தொல்காப்பியர் சுட்டாத பதிய துறைகளாகும்.  அனைத்துப் பாடல்களும் பாடாண் திணையிலே அமைந்துள்ளன.
    “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
      நாடுங்காலை நாலிரண் டுடைத்தே||
                    (தொல்.புறத்.78)
எனும் தொல்காப்பிய நூற்பாவின்படி பாடாண் திணைப் பகுதி கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும்.   இவை எட்டு வiயினை உடையது.  கடவுள் வாழ்த்து வகை, வாழ்த்தியல் வகை, மங்கலவகை, செவியறிவுறுத்தல், ஆற்றுப்படைவகை, பரிசிற்றுறை, கைக்கிளை வகை வசைவகை என்பன.  பாட்டுனத் தலைவனைப் புகழ்தலால் இது பாடாண்பாட்டு எனப்படும்.
அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)
 சேரர்கள் இருபிரிவினராக பிரிந்து நாடாண்டு உள்ளதை இலக்கியம் வழி அறிய முடிகிறது. அவை


வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்

 இமையவரம்பன் 58 ஆண்டுகளும், இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் 25 ஆண்டுகளும,; இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 25 ஆண்டுகளும், இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் 55 ஆண்டுகளும்,  இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 38 ஆண்டுகளும் வஞ்சியில் இருந்து ஆண்டுள்ளனர்
கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்.
செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் 25 ஆண்டுகளும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17 ஆண்டுகளும்,  குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை 16 ஆண்டுகளும் கருவூரில் இருந்து நாடாண்டனர்.
வெற்றிச்சிறப்பு:
    தொல்காப்பியர் தனது புறத்திணையியலில் குறிப்பிடுவது.
    “போந்தை வேம்பே யாரென வருஉ
     மாபெரும் தானையர் மலைந்த பூவும்  (தொல்.புறத்.5)
என்பதன் மூலம் சேரர்மாலையாகிய போந்தையை முற்படவைத்து பாண்டியர் மாலையை அதன்பின் வைத்து சோழர் மாலையை இறுதியாக குறிப்பிடுவதன் மூலம் சேரரின் புகழ் வெற்றி பெருமையை அறியலாம். இம் முறையே சங்க நூல்களிலும் காணப்படுகிறது.   புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய சேரராகிய ஐயனாரிதனாரும் தன் நூலின் பொதுவியல் படலத்தில் இம்முறையையே கூறுகின்றனார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வெற்றி:
    இமயவரம்பன் கரூரை தலைநகரமாக கொண்டவன்.  இவரின் பெற்றோர்கள் உதியஞ்சேரலாதன் வேளியன் வேண்மாள்.  இவன் வடவரை வெற்றி கொண்டதால் இமயவரம்பன் என்ற பெயர் பெற்றான்.  குமட்டூர் கண்ணனார் இமயவரம்பனின் வீரம், வெற்றி, புகழ் ஆகியவற்றை சிறப்பாகப் பாடியுள்ளார்.
    “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி||  
                                                        (பதிற்.பதி.2..7)
வடபகுதியில் மிகுந்த புகழோடு வாழ்ந்த ஆரிய மன்னர்களான கனக விசயர்களைத் தன் கீழ் அடிபணிய வைத்தான்.
    “நயனில் வன்செய் யவனர்ப் பிணித்து
       நெய்தலைப் பெய்து கையிற்கொள்இ||  (பதிற்,பதி.2.8)
கடுமையான சொற்கள் கூறிய யவனர்களை சிறைபிடித்து அவர்கள் தலையில் நெய்யை ஊற்றிக் கைகளை பின்புறம் கட்டி அவர்களின் தவறுக்கு இணையாக அரிய விலைமதிப்பற் அணிமணிகளையும் வயிரங்களையும் பெற்றவன்.
    “ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
      தென்அம் குமரியொடு ஆயிடை
      மான் மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே.   
                                                        (பதிற்.11.23-25)
நெடுஞ் சேரலாதன் இமயம் தொடங்கி தென்திசை  குமரி வரை நிகழ்த்திய பல போர்களில் வென்றவன்.  இவனை வெல்வார் இந்நிலப்பரப்பில் யாரும் இல்லை.   என்பதை மேற்கூறிய பாடல்வரி மூலம் அறியலாம்.
    சூரபத்மனை அழிக்க கந்தவேள் யானையின் மீதேறி கடலினுள் மாமரத்தை இரண்டு கூறாக்கியதுப் போல சேரலாதனும் யானைமீது சென்று கடலினுள் இருந்த கடம்பர்களின் கடம்ப மரத்தை அழித்த வெற்றி புகழாளன் ஆவான்.
    சேரலாதனின் எதிர்நின்று போரிடும் பகைமன்னர்களின் புகழு; பெருமையையும் அழிய போரிட்டு வெல்லும் சிறப்புடையவன்.  பகை மன்னர் எழுவருடன் போரிட்டு வென்று.  அவர்களின் தங்கக் கீரிடங்களை அழித்த பொன்னை கொண்டு செய்த பொன் ஆரத்தைத் திருமகள் தங்கும் தன் மார்பில் அணிந்த செய்தியை
    “எழுமு கெழீயை திரு ஞெமர் அகலத்து
     நோன்புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை|| (பதிற்: 14: 11-12)
என்ற பாடல் வரி சுட்டிக் காட்டுகிறது.

பல்யானைச் செல்கெழு குட்டுவன் வெற்றி:

    செல்கெழு குட்டுவன் இமயவரம்பனின் தம்பி.  இவனைப் பற்றி பாலை கௌதமனார் பத்துப்பாடல்கள் பாடியுள்ளார்.  குதிரை, பொன்னலான நெற்றிப் பட்டம் உடைய ஆண்யானைகளும், தேர்ச்சீலைகள் போர்த்தப்பட்ட தேர்களும், போருக்கு தயாராக அணிவகுத்து நிற்கும் சேனை படையும் என்ற நால்வகைப் படையையும் கொண்டு சிறப்பாக வழி நடத்தி. செல்லும் ஆற்றல் படைத்த வெல்கெழு குட்டுவன்.
    அண்ணல் அம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த
    பொன் புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ!
                        (பதிற்:22:24-25 )
கணையமரம் பொருந்திய கோட்டையையும், மதில்களில் கட்டிய பகைவரைத் தானே தாக்கக்கூடிய ஐயவித்துலாம் என்ற மதிற்பொறியையும், காட்டரணையும், ஆழமான அகழிகளையும், உயர்ந்த மாடம் கொண்ட கோட்டையையும் அழித்து வெற்றி கொண்ட சிறப்புடையவன்.  பகையரசர் நாடுகளின் வளம் கெட்டு அழியும் வகையில் போரிட்டு வெல்லக்கூடியவன்.
கடல் பிறகு கோட்டிய செங்குட்டுவன் வெற்றி:
    நெடுங்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த செங்குட்டவனைப்பற்றிய வீரம் புகழினை பரணர் பாடியதே ஐந்தாம் பத்தாக அமைந்துள்ளது.
        “கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டி
          கான் நவில் கானம் கணையின் போகி”
                        (பதிற்:பதி 5 )
பத்தினியாக கண்ணகிக்குச் சிலை செய்ய காட்டுவழியில் சென்று இமயத்தில் வெட்டி எடுத்த கல்லை கங்கையில் நீராட்டி இடும்பாதவனம் எனும் ஊரிலே தங்கி போரிட்ட வெற்றிச் சிறப்புடையவன்.
    புலிப்போல போரிட்ட பகைவீரர்கள் மடிய வியலூரை போரிட்டு வென்ற செய்தியை
    “உறுபுலி அன்ன வயவர் வீழ
    சிறு குரல் நெய்தல் வியலூர் நூறி”
                (பதிற்: பதி - 5)
இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.  வியலூரை அடுத்து  கொடுகூர் என்ற ஊரையும் வெற்றிக்கொண்டான்.
பழையன் என்னும் குறுநில மன்னன் காவல் மரமாகக் காத்து வந்த கருத்த கிளைகளையுடைய மத்தளம் போன்ற அடிமரத்தை வெட்டி வீழ்த்தியவன்.  பழையன் இறந்தப் பின் அவன் மனைவியரின் கூந்தலைக் கயிறாக்கி யானையைப் பூட்டி வெட்டிய வேப்பமரத்தினை ஏற்றிக்கொண்டு வந்த வெற்றியாளன்.
    “ஆராச்செருவின் சோழர் குடிக்கு உரியோர்
    ஒன்பதின்மர் வீழ”
சோழர் குடியில் பிறந்த ஒன்பதுபேர் அழிய நேரிவாயில் எனும் இடத்தில் தங்கி போரிட்டு வென்றான்.  கடலே தனக்கு பின்னால் செல்லும்அளவு முன்னேறிச் செல்லும் படையை உடையவன் செங்குட்டுவன்.
போர்களமும் ஏர்க்களமும்
    போர்க்களத்தை ஏர்க்களத்தோடும் ஒப்பிட்டு கூறுகின்றார்.  அரசன் உழவனாகவும் கூறுகின்றார்.
    செருப்படை பிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
                (புறம் 369:11-12)
    மறவர்களை மின்னலாகவும், முரசினை இடிமுழக்கமாகவும் குதிரைகளை காற்றாகவும், கணைகளை மழைத்துளியாகவும் அரசர்கள் போரிடும் போதும்அங்கு வீழும் குருதியினை சேறாகவும் ஒப்புமைபடுத்தி செங்குட்டுவனின் போர் வெற்றியைச் சிறப்பிக்கிறார்.
செல்வக் கடுங்கோ வாழியாதன் வெற்றி
    செல்வக் கடுங்கோ அந்துவஞ் சேரல் மரபினை சேர்ந்தவன்.  அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் பெருந்தேவிக்கும் பிறந்தவன்.
    “நாடு பதி படுத்து, நண்ணார் ஒட்டி
    வெருவரு தானை கொடு செருப்பல கடந்து”    (பதிற் பதி : 7)
பகைவரை வென்று பல ஊர்களை உண்டாக்கி தன் நாட்டை விரிவு படுத்திக்கொண்டவன்.  பகைவர் அஞ்ச பலபோர்களை செய்து வென்றவன். எதிர் நின்றவரை வெற்றிக்கொல்லும் ஆற்றல் மிக்க படையைத் துணையாக உடையவன்.
        ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
        கடந்து அடு தானைச் சேரலாதனை
                        (புறம் : 8 : 4-5)
எதிர்தவரின் நாட்டை கொண்டு தன்நாட்டை விரிவுபடுத்திய செய்தியை புறநானூற்று பாடல் மூலம் அறியலாம். இளஞ்சேரலரும்பொறையோடு போரிட்டு சோழர்படை தோற்றபோது எறிந்த வேள்விகள்.
    “நனவில் பாடிய நல்லிரசைக் கபிலன்
    பெற்ற ஊரினும்”
என்று பெருங்குன்றூர்கிழார் பாடுகிறார்.

முடிவுரை

    பதிற்றுப்பத்து சேரரின் வரலாறு செப்பும் செந்தழ் களஞ்சியமாகவும், வரலாற்று கரூவூலமாகவும் விளங்குகிறது. இருமுறை இமயத்தை என்ற சிறப்பை கொண்டவர்கள் சேரர்கள். சேரமன்னர் பத்துபேரின் வெற்றிச்சிறப்பை பதிற்றுபத்து வெளிப்படுத்துகிறது. இமயவரம்பன் , செல்கெழு குட்டுவன், செங்குட்டுவன், செல்வக்கடுங்கோ வாழியாதன் போன்றவரின் வெற்றிச் சிறப்பை; இதன் வழி அறியமுடிகிறது.

நாலடியார் இயம்பும் இளமை நிலையாமை

 

                          நாலடியார் இயம்பும் இளமை நிலையாமை

   தீதும் நன்றும் பிறர் தரவாரார் எனும் உயர்ந்த கோட்பாட்டில் வாழ்ந்தவன் தமிழன். யாதும் ஊரே யாவரும் உறவினர் என்ற நிலையில் வாழ்ந்து வழிக்காட்டி சென்றவன் தமிழன். மனித வாழ்க்கையில்  நாலடியார்  கூறும் இளமை நிலையாமையை இங்கு காண்போம்.

அறிவுடையவர் செயல்

    அழகின் அழகாக தம்மை உருவாக்கிக்கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர். அறிவுடையவர்கள் இளமையிலே துறவரம் செய்வார்கள் என்பதனை,
    “நரை வரும்! என்று எண்ணி, நல் அறிவாளர்
    குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
    மன்னா இளமை மகிழ்தாரே கோல் ஊன்றி
    இன்னாங்கு எழுந்திருப்பார்”   
    நல்ல அறிவை உடையவர்கள் முதுமையில் நரையும் மூப்பும் வரும் என்பதை முன்பே உணர்ந்து பருவத்திலேயே துறவியாகி விடுவர். குற்றங்களை விலக்காத நிலைக்காத இளமையை நம்பித் துறவு நோற்காமல் காம வெகுளி மயக்கங்களில் மூழ்கிக் கிடந்தவர் முதுமையுற்றக் கொம்பு ஊன்றித் துன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.

    கிழப்பருவம் எய்திப் பேச்சுத் தடுமாறிக் கொம்பு ஊன்றி தளர்ந்த நடை நடந்து பற்கள் விழ, பொக்கை வாய் ஆகி உடல் பழி சுமக்கும் அளவு இல்லத்தில் ஈடுபட்டுக் காம வழிகளில் செல்லும் கருத்துடையவர்க்குத் துறவற வழியில் செல்லும் ஏமநெறி இல்லை.இல்லறத்தில் ஈடுபடுபவர்க்கு உயிர் காக்கும் துறவுநெறி வாய்க்காது.




உறவுகள் அறுபடும்

    மனிதன் உறவுகளாளே வாழ்கிறான் உறவுகளாளே வீழ்கிறான். மனித வாழ்வில் உறவுகள் எல்லாம் நம் கண்முன்னே அற்றுபோகும் என்பதனை

    “நட்புநார் அற்றன, நல்லாரும் அஃகினார்
    அற்புதத் தளையும் அவிழ்ந்தன உள் காணாய்
    வாழ்தலின் ஊதியம் என் உண்டாம்? வந்ததே
    ஆம் கலத்து அன்ன கலழ்!”   
    நட்;பு என்னும் நார் அற்றுப் போயிற்று. அன்பு காட்டிய மகளிரும் அன்பு குறைவர் ஆயினர். அன்பு என்ற கட்டுகளும் நெகிழத் தொடங்கி விட்டன. உனக்கு உள்ளேயே ஆராய்வாயாக வாழ்வதால் என்ன பயன் உண்டாயிற்று? வாழ்க்கைக் கடலில் மூழ்கிப்போகும் கப்பல் ஆயிற்று. கூன் உற்று தளர்ந்து, தலை நடுங்கி, கொம்பு ஊன்றி விழுந்தும் எழுந்தும் செல்லும் கிழப்பருவம் எய்திய மனைவி மாட்டு முதிர்ச்சி இல்லாத காமத்தைக் கொள்ளுகின்ற கணவமாருக்குத்தான் ஊன்றி வரும் கைக்கோல் தன் மனைவிக்கும் ஊன்றுகோல் ஆயிற்றே என்று எண்ணத்தகும். முதுமை, துன்பம் தருவதாகும். முதுமையின் மோகம் பழக்கத்தக்கது. என்ற பாடலின் மூலம் அறியமுடிகிறது. மேலும்

    “எனக்குத் தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு
    தனக்குத் தாய் நாடியே சென்றாள், தனக்குத் தாய்
    ஆகியவளும் அது ஆனாள், தாய்த் தாய்க்கொண்டு
    ஏகும் அளித்து, இவ் உலகு”   
    என்னைப் பெற்றெடுத்ததாய் என்னை இங்கு விட்டுவிட்டுத் தன்னைப் பெற்றெடுத்த தாய் சென்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள் (இறந்து விட்டாள்). என் தாய்க்குத் தாயானவரும் என் தாயை விட்டுவிட்டுத் தன் தாயை நாடிச் சென்றுவிட்டாள். இவ்வுலகம் இப்படி நிலையாமை உடையது. பெற்ற தாயாக இருந்தாலும் செத்தே தீரவேண்டும் எனும் நிலையாமை உடையது இவ்வுலகம். வெறியாட்டுக் களத்தில் வெறியாடுபவன் கையில் இளம் தளிர்கள் மாலையின் ஊடே இருக்கும். வெறி ஆட்டத்தின் முடிவில் வெட்டப்பட இருக்கும் ஆடு ஆங்கே இருக்கும் தளிரை  இடைஇடையே அது உண்டு மகிழும். முடிவில் தான் பலியிடப்படுவோம் என்பதை ஆடு அறியாது. இத்தகு அறியாமை நல்ல அறிவுடையோர் இடத்துக் காணப்படாது. இளம்பருவ மகிழ்ச்சி ஆட்டிற்குக் கிடைக்கும் தளிரைப் போன்றது.


பெண்ணின் அழகு
    மின்னல் பார்வையும் அள்ளும் சிரிப்பும் பெண்களுக்கே உரியது. ஆண் பெண் இணைந்த வாழ்வே இல்லறம், ஆணை சுற்றியே பெண்வாழ்கையும், பெண்ணை சுற்றியே ஆணின் வாழ்க்கையும் அமைகிறது.இதனை
    “பனிபடு சோலைப் பயன் மரம் எல்லாம்
    கனி உதிர்ந்து வீழ்ந்தற்று, இளமை நனி பெரிதும்
    வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும்
கோல் கண்ணள் ஆகும் குனிந்து.”       
    குளிர்ச்சியான சோலையில் காய்ந்திருக்கும் காய்கள் கனிந்தவுடன் உதிர்ந்துவிடும். இளமையும் அதுபோல உதிரும் தன்மையதே வேலைப் போன்ற கூரிய விழிகளை உடையவள் என்று ஒரு பெண்ணை விரும்பிட வேண்டாம். இவளும் கூனள் முதுகுடையவளாகிக் கொம்பு ஊன்றி நடைதடுமாறும் முதுமைப் பருவம் வந்து அடைவள்.
    பெண்ணின் இளமை அழகும், முதுமையில் அழிந்துப்போகும் வயது எத்தனை ஆகிறது பற்கள் விழுந்தவை எத்தனை? எஞ்சியிருப்பவை எத்தனை? எல்லா வேளைகளிலும் முழு உணவு உண்டீர்களா? என வயது ஏறத் தமக்குள் வினவப்படும் தகையது. உடல்நிலை உடலின் இளமை, நிற்பது இல்லை. எனவெ அறிஞர் இளமையை ஒரு பொருளாகக் கருதார். வயது ஏற ஏறப் பற்கள் விழுவதும் உணவின் அளவு குறைவதும் இளமை நிலைப்பதில்லை என்பதைக் காட்டும். எனவே அறிஞர் இளமையைப் பொருட்டாகக் கருதுவதும் இல்லை.
அறம் செய்தல்
    பிறப்பும் இறப்பும் அவன் கையில் என்பார்கள் பாமரமக்கள் எனவே இறப்பு வரும் முன் அறம் செய்ய வேண்டும் என்பதனை நாலடியார் பின்வருமாறு கூறுகிறார்.
    “மற்று அறிவாம் நல்வினை, யாம் இளையம் என்னாது
    கைத்து உண்டாம் போழ்தே, கரவாது அறம் செய்ம்மின்
    முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியாய்
    நல்காய் உதிர்தலும் உண்டு.”   
    மரங்களில் கனிந்த பழங்கள் உதிர்வதற்குப் பதிலாகத் தீமைதரும் புயற்காற்றால் நல்ல காய்களும் உதிர்ந்து விடுவது உண்டு. அதைப் போல இளைய மனிதர்க்கு இறப்பு நிகழ்தலும் உண்டு. எனவே செய்ய வேண்டிய அறச் செயல்களை இப்போது இளமையாகத் தானே உள்ளோம் நன்கு ஆராய்ந்து பின்னாளில் செய்வோம் என்று தள்ளி வைக்க வேண்டாம். கையில் காசு இருக்கும் போதே மறக்காமல் அறம் செய்தல் வேண்டும். கையில் காசு உள்ள இளமைப் பருவத்திலேயே தள்ளிப்போடாமல் தர்மம் செய்தல் வேண்டும்.
    கருணை இல்லாத எமன் காலம் முடியும் மனிதரைத் தேடிப் பார்த்துக் கொண்டே இருப்பான். இளம் கருவினின்றும், வெளிப்படுத்தி தாய் பெற்ற பிள்ளையின் உயிரைக்கூட அப்பிள்ளையின் வாழுங்காலம் முடிந்து விடுமானால் தாய் கதறக் கதற எமன் கொண்டு சென்று விடுவான். எமனின் வஞ்சச் செயலை அறிந்திருத்தல் நல்லது. எனவே மறுமை உலகிற்கு உணவுபோல்வதாகிய அறத்தை இளமைக் காலத்திலும் செய்தல் வேண்டும். இறத்தல் உறுதி எனவே இளமையிலேயே அறம் செய்க. திருவருட்பா மனிதனின் வாழ்நாளை அவனது இளமையின் கால அளவினை உதாரணங்கள் காட்டி விளக்குகிறார். இதனை
        “………………………….பருவம் நேர்
        கண்டொழியும்  இளமைதான் பகல்வேளை”       
என்ற அடிகளின் மூலம் இளமை, இன்பம் இவை நிலையற்றவை என அறிய முடிகிறது. செல்வம் இருப்பினும் அதன் பயனை அனுபவிப்பதற்கு இளமை வேண்டும். காலையில் கிழக்கே உதிக்கின்ற சூரியன் பகலில் உச்சிக்கு வந்து மாலையில் மறைவதைக் காண்கிறோம். இளமை நலம் பொருந்திய கன்று பெரியதாய் முத்து மடிவதையும் காண்கிறோம். அவ்வாறுள்ளபோது மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடி இளமையோடு இருக்க முடியும்? அறிவில்லாதவர் இவ்வுண்மையை உணரவில்லையே என இரங்குகிறார் திருமூலர்.


“கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
    விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர்
    குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
    விழக்கண்டும் தேறார் வியனுல கோரே”
இளமை கழிந்து போகுமுன் அருமையான செயலைச் செய்துவிட வேண்டும். முதுமையில் எண்ணினாலும் அருஞ்செயலைச் செய்வதற்குரிய ஆற்றல் இல்லாது போய்விடும். ஆடவரை இளமையில் அழகிய மாதர் விரும்பிப் பயனைப் பெறுவர். ஆனால் இளமை நலத்தை நுகர்ந்த பின்னர் கரும்பின் சாற்றைப் பெற்றுச் சக்கையை ஒதுக்குவது போல வெறுத்து ஒதுக்குவர் என்று உவமையோடு ஆசிரியர் கூறும் விளக்கம் நகைச்சுவையாக உள்ளது.
    கசப்பினை நல்கும் காஞ்சிரங்காயைச் சொல்லும்போது வெறுப்பின் எல்லையைக் காட்டுகிறார் ஆசிரியர். பின் மனிதன் பாலனாக, இளைஞனாக வித்தனாக இருந்து மறைவதைக் காட்டி அவர் இளமை நிலையாமையை விளக்குகிறார்.
    “பாலனாய்க் கழிந்தாளும் பனிமலர்க்கோதை மார்தம்
    மேலனாய்க் கழிந்தாளும் மெலிவோடு மூப்பு வந்து
    கோலனாய்க் கழிந்தாளும் குறிக்கோளி லாதுகெட்டேன்
    சேலுமாம் பழனவேலித் திருக்கொண்டீர் சரத்துளானே    “       
என்ற திருநாவுக்கரசரின் வாக்கினையும் ஒப்பு நோக்கலாம். சூரியன் நாளாகிய வாளைக் கொண்டு மனித ஆயுளை அறுக்கிறான் என்று உணர்ந்து இளமை கழியா முன்னர் இறைவனது திருவடியை ஏத்தி அறவாழ்வு வாழ வேண்டும் என்பது அவரது அறவுரை. இறப்பை நழுவவிட்டால் மீண்டும் எப்பிறப்பு வாய்க்குமோ அறியோம். ஆகவே வாய்க்கப் பெற்ற இவ்வரிய மானுடப் பிறப்பை நழுவவிடாமல் தக்கவாறு பயன்படுத்தி பிறப்புப் துன்பத்திலிருந்து விடுபட்டு முக்தி இன்பத்தை அடைந்திட வேண்டும் என்பதைத் திருமந்திரம் மூலம் திருமூலர் எடுத்துக் காட்டுகிறார்.
    மானுட வாழ்க்கையில் எவரும் இளமை பருவத்துடன் என்றும் நிலைத்து இருப்பதில்லை. இளமை இறந்து முதுமை வரும் என்பது உலகில் தெளிவு. ஆதலால் இளமையிலேயே அறம் செய்ய வேண்டும். இல்லையெனில் யாதொரும் மறுமைப் பயனையும் அடைய முடியாது.
    “பனிபடு சோலைப் பயன் மரமெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற்றிளமை நனி பெரிதும்
    வேல் கண்ணன் என்றிவளை வெஃகமின் மற்றிவரும்
கோல் கண்ணனாரும் குணாந்து”       
என்ற பாடல் தெளிவுப்படுத்துகின்றன. கனிகள் உதிர்ந்து மரம் விரும்பத்தக்கதாகக் கருதுவது இல்லை. அதுபோன்று இளமை கழிந்த உடலும் விரும்பப்படுவது இல்லை. எனவே இளமையிலேயே அறம் செய்திடல் வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகின்றன. இளமையில் அறவழியில் செல்லாமல் சுகபோகம் அனுபவித்தவர்கள் முதுமையில் வருந்துவர்.
    பொய் நூல்களாகிய மற்ற எந்த நூல்களைக் கற்பதாலும், கேட்பதாலும் என்ன பயன் மெய்ந்நூலாகிய இந்த அறநெறிச் சாரத்தைக் கற்றும் கேட்டும் அறிந்தவர்கள் உயிருக்கு உறுதியைத் தரும் அடிப்படையை அறிந்து வீடுபேற்றினை அடைவார்கள்.
    “ஆற்றாமை ஊரஅறிவு இன்றியாது என்றும்
    தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
    மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்
    நனையில் உடம்பு இருதல் நன்று”           
    ஒருவன் துன்ப மிகுதியால் அறிவிழந்து ஏதும் தெரியாதவனாக இருக்கிறான் என்று இகழப்படும் நிலையில் வீட்டிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பதைவிட காட்டிற்குச் சென்று தன் உடம்பை அழியச் செய்வது மேலானது என்கிறது அற நூல்கள்.

முடிவுரை

    சமண, பௌத்த சமயங்கள் பொருள் நிலையாமையை விட யாக்கை நிலையாமையே அதிகமாக வலியுறுத்துகின்றன.  காப்பியங்கள் பெரும்பாலும் சமண பௌத்த சமயங்களையே தழுவி எழுதப்பட்டதாகும்.  மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களும் மனித உடலின் நிலையாமை பற்றிக் கூறுகின்றன. மனிதனின் வாழ்க்கையில் நிலையில்லாதது என்பதனை மூன்று பிரிவுகளாக   கூறுகின்றனர். அதில் “இளமை நிலையாமை” என்பதும் ஒன்று.   இளமை நிலையில்லாதது என்பதனை அனுபவத்திலிருந்து தெரிந்துக்கொண்டு இவ்வுலகம் பொருள்கள் மீதும் மற்றும் உடலின் மீதும் பற்று இல்;லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருதி ஆசையை விட்டுவிட்டு அற வழியில் வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். என வாழ்வதே சிறந்த நிலை.   

புறநானூறு காட்டும் பாணர் வாழ்கையில் வறுமை.

 

புறநானூறு காட்டும் பாணர் வாழ்கையில் வறுமை.


    எப்பொருள் யார்வாய் கேட்பினும் அதன் உண்மைத் தன்மையை அறியவேண்டும் என்றும், நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாழ்ந்தவன் தமிழன். அகம் புறம் என்று வாழ்க்கையை அழகாக வகுத்து வாழ்ந்தவன் தமிழன். வான் உயர் இலக்கியங்களை தமிழுக்கு அளித்த பெருமைக் கொண்டவர்கள் பாணர்கள.;  அவர்களின் வாழ்க்கை நிலையை புறநானூறு வழிக் காண்போம்.

பாணர்கள் வறுமை

    பாணர்கள் மிகுந்த வறுமை வயப்பட்டவர்களாக இருந்தமையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பாணர்களைச் சுட்டுமிடங்களியெல்லாம் ‘பசியும்’ இணைத்தே சுட்டப்படுகிறது.

    பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,    
                        புறம் (212: 7, 389: 114)

    பாணர்கள் “உடும்பினை உரித்தார்ப் போன்ற தோற்றத்திiராய் விலா எழும்புகள் வெளித் தெரிய மிகுந்த  பசியையுடையவராகவும். (புறம் - 68) வியர்வையில் நனைந்து கிழிந்த ஆடையையுடையவராகவும். (புறும் - 69) காட்டப்பெறுகின்றனர் தமது வறுமையைப் போக்கிக் கொண்டு வரும் பாணன் ஒருவன் வறுமையில் வாடிவரும் பாணன் ஒருவனைப் பேகனிடம்

    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
    கடாஅம் யானைக் கலிமான் பேகன்
    எத்துணை ஆயினும் ஈதல் நன்று என  
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே   
                            (புறம் - 141)

எனக் கூறி ஆற்றுப்படுத்துகிறான். வள்ளல்கள் கொடையால் பாணர்கள் செல்வச் செழிப்புடையவர்களாக உள்ளனர். பொன்னால் செய்யப் பெற்ற தாமரைப் பூவும் மாலைகளும் சூடியவர்களாகப் பாணர்கள் காட்டப் பெறுகின்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம்

    பாணர் தாமரை மலையவும்ஈ புலவர்
    பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     
                            (புறம் 12, 41, 361)

    பாணர்கள் வறுமை வளமை என்ற இருவித நிலைகளுக்கும் உரியவர்களாக இருந்துள்ளனர்.  தமது வறுமையைத் தீர்க்கும் பொருட்டு மன்னர்களை நாடி வேற்றிடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் பாணர்கள் தம் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். கலைத் தொழிலைச் செய்த அதே நேரம் வாயில்களாகவும் இருந்துள்ளனர் மேலும் மீன் பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

    பாண்மகளின் அண்ணன்மார் நள்ளிரவில் சென்று காவிரி ஆற்றின் மடுவில் வாளை மீனைப் பிடித்துக்கொண்டு மறுநாள் விடியலில் வருவர்.

    வல்லேம் அல்லேம் ஆயினும் வ்லே
    நின்வயிற் கிளக்குவம் ஆயின் கஞகுல்
    துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
    பறை இசை அருவி, முள்ளுர்ப் பொருக,
    தெறலளு மரபின் நின் கிளயொடும் பொலிய,   
                            (புறம் 126 : 5 – 9)

வைகறை வேட்டையில் அகப்பட்ட வரால்மீனின் கொழுத்துண்டத்தினை விற்று விற்று பொருளால் கள்ளுண்டு களித்து, வேட்டைக்குச் செல்வதை மறந்த தன் தணவருக்குப் பாட்டி (பாடின்) அகன்ற ஆம்பல் இலையில் புளியங்கறியுடன் சோற்றினை அளித்தாள் (புறம். 196: 1 – 6) பாண்மகள் சில மீன்களைக் கொடுத்து அவற்றுக்கு ஈடாகப் பல நெற்களைப் பெற்றுச்செல்லும் ஊரக்குத் தலைவனே இனி உன் பாண்மகள் யாருடைய நலனைச் சிதைக்கப் பொய்யுரைப்பாளோ.

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
    ஆள்லினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றாலும், ஒல்லுவது
    இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே;
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்      
                        (புறம்    196: 1 – 6)
எனப் பாணர்கள் மீன் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமையைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இவர்கள் மீன் பிடித்தலை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு இருந்துள்ளனர். மருத நிலத்து நீர் நிலைகளிலேயே இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்துள்ளனர் இவர்கள் தங்கி இருந்த இடம் பாண்சேரி எனப்பட்டது.

    வெண்யெல் அரிநர் தண்னுமை வெர்இ
    கண்மடல் கொண்ட தீம்தேன் இரிய
    கள் அரிக்கும் குயம் சிறுசில்
    மீன் சீவும் பாண்சேரி,
    வாய் மொழித் தழும்பண் ஊணூர் அன்ன   
                            (புறம், 348 : 1 – 5)

    அகல் இரு வானத்து இழிந்து இனிது
    குருகு நரல மனை மரத்தான்
    மீன் சீவும் பாண்சேரியொடு
    மருதம் சான்ற தன்பணை…….         
                        மதுரை (267 – 270)

எனப் பாண்சேரி பற்றிய குறிப்புகள் சில சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவ்வாரு பாடல்களும் மருத நிலத்து வயலின் வளப்பத்தைச் சுட்டுவதானால் பாணர்களில் சிலர் மருதநில வளர்ச்சியில் ஒரு நிலையான இடத்தில் தங்கி விளைவித்துண்டடையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அதே நேரம் “மீன் சீவும் பாண்சேரி” எனப் பாணர்கள் மீனுடன் மட்டும் அணைக்கப்பட்டுகின்றனர் பிடித்து அவற்றை விற்றும், சமைத்தும் உண்கின்ற தற்காலிகச் சேரிகளாக இவை இருந்திருக்கலாம்.

    பாணர்களின் மீன்பிடித்துவாழும் வாழ்வைச் சுட்டும் கா. சிவத்தம்பி   “இவை இவர்களின் வறுமையையும் எழுச்சிபெறும் பொருளாதார நிலைமைக்கேற்பத் தம்மை இணைத்துக் கொள்ள முடியாமையையும் வெளிப்படுத்துகின்றன” எனலாம். நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பரிசிலாக நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன என்றாலும் உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி விளைவிக்கும் தொழில்லைப் பாணர்கள் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர் அதனாலேயே பசித்த வயிற்றுடன் காணப்படுகின்றனர்.

    நெடிய என்னாது வுரம் பல கடந்து
    வடியா நாவின் வல்லாங்குப் பாடி
    பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
    ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை    
                                (புறம்- 47 : 2 – 5)
எனப் பாணர்கள் ஒர் இடத்தில் தங்கி வாழாத நாடோடி வாழ்க்கை நடத்தியமை காட்டப்படுகின்றது. ‘இடர் பல கடந்து வந்த’ பாணர்களின் (புறம் 138) நாடோடி வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பாரிசாக நிலங்கள் தானமாக அளிப்பட்டுள்ளன இதனை

    பசிபடு மருங்குலை கசிவு கைதொழாஅ
    காணலென் கொல் என வினவினை வருஉம்
    பாண கேண்மதி யானரது நிலையே
    புரவுத் தொடுத்து உண்குரவை ஆயினும் இரவு
    எவ்வம் கொள்ளை ஆயினும் இணை;டும்
    கையுள போலும் கடிதுஅண் மையவே.   

எனும் புறப்பாடல் காட்டுகிறது.

    ஆநிரை மீட்டலில் இறந்துபட்ட வீரனின் புகழைப் பாணர்கள் செல்லுமிடங்களை எல்லாம் பரப்ப வேண்டும் என்பதையே இப்பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலங்களைக் கைப்பற்றி வாழும்படி பாணருக்கு அறிவுறுத்துவது. இப்பாடலின் நோக்கமன்று இப்பாடல் சீறூர் தலைவர்களினாலே நிலங்கள் பாணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டுள்ளமையைப் பதிவு செய்கின்றது. இதனால், அடுத்த வளர்ச்சியடைந்த நிலப்பகுதியான மருதத்தில் காணப்படும் பாண்சேரி பற்றிய செய்திகள் ஓரிடத்தில் தங்கி வாழும் பாணர் குடியிருப்புகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றன்.

    கதைத் தொழிலினை மேற்கொண்டு வள்ளல்களைச் சார்ந்து வாழ்ந்தமையால் பாணர்கள் தமக்கான தனித்தொழிலை உருவாக்கிக் கொள்ளாமல் வறுமை நிலையை அடைந்துள்ளனர். நிலங்களைச் சார்ந்து வாழாத நிலையில் பாணர்களின் மீன் பிடித்தல் தொழில், இடம் பெயரும் காலத்தின் இடையில் நிகழ்ந்ததாகவே எண்ணத்தக்கதாக உள்ளது.

    பாணர்கள் தகவல்களையும் கருத்துகளையும் தமிழ்ச் சமூகம் முழமைக்கும் கொண்டுசென்று ஒரு கருத்துக் கட்டமைப்பை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். நிலம் சார்ந்த வாழ்க்கை முறையில்     தலைவர்களின் புகழ்கள் பல்வேறு இடங்களுக்கும் கடத்தும் தன்மை இல்லாமல் போகிறது. பாணரது மரபே இத்தகவல் கடத்தலில்தான் நிலைகொண்டிருக்கிறது. அதனால் தான் நிலங்கள் வாழ்வாதாரமாக மாறும் காலத்தில் அவற்றைக் கைப்பற்றி வாழ்வது இரண்டாம் பட்சமானதாகக் கூறலாம்.

மேலும்,

    சீநூர் மன்னரைப் பற்றிய பாடல்களில் மட்டுமல்ல
    வேந்தர் பற்றிய பாடலிலும் பாணரின் நிலைத்த குடியிருப்பு
    பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. கிள்ளவளவன் பற்றிய
    பாடலில் பாணர்க்கு அவன் நீங்காத செல்வத்தைச் செய்த
    கொடைச் சிறப்பு பாடப்பட்டுள்ளது. (புறம் 34)
இந்தப்பாடல் கூறும் அகலாச் செல்வம் என்பதற்கு நிலத்துடன் கூடிய நிலைத்த குடியிருப்பு செய்து தருதல் எனப்பொருள் கொள்ளலாம். பாணரின் இத்தகைய நிலைத்த குடியிருப்பை மதுரைக் காஞ்சி (332 – 342) காட்டும் பெரும் பாணிருக்கை வழி உறுதிப்படுத்தலாம்.
(பெ. மாதையன், 2005 : 98)

    பெரும் பாணர் வாழும் இருக்கை  
                            (330)

    கலை தாய, உயர் சிமையத்து
    மயில் அகவும், மலி பொங்கிரி,
    மநதி ஆடஈ மா விசும்பு உகந்து
    முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்.     
                                    (342)

எனும் பெ. மாதையன் அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் மாற்றும் பலவேறு சூழலினால் இத்தகு நிலைத்த குடியிருப்புகளே பாணர் மரபின் தோய்வுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம்.   



பாணர் சுற்றமுடையோர்

    சங்க இலக்கியத்தில் பாணர்கள் தனிநிலையில் காட்டப்பெறாமல் ஒரு குழவினராகவே காட்டப் பெறுகின்றனர். “காரென் ஒக்கல் கடும்பசி இரவல” (புறம் 141 : 6) எனப் பாணன் கட்டப் பெறுகிறான்.

    பைதல் சுற்றுத்துப் பசிப்பகை யாகுக்
    கோழியோனே கோப்பெருஞ் சோழன்       
                        (புறம் 212 : 7 – 8)

எனப் பாணர் சமுகத்திற்கு உதவும் வகையில் மன்னன் காட்டப்பெறுகிறான். இதே போன்று

    பசித்த ஒக்கல் பழங்கண் வீட   
                        (புறம் 389 : 14)

    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற    
                        (புறம் 390 : 20)

    கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
    புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாணன்    
                        (பெரும் 21, 22)

எனப் பாணன் சுற்றம் காட்டப்படுகிறது.

    கலைஞர்களாகப் பாணர்கள் இருந்ததனால் குழவாகவே இயங்கவேண்டியிருந்தனர் இருந்தாலும் பலவிதமான இசைக்கருவிகளை இசைக்கவும் பாடவும் ஆடலுமான கலைஞர்கள் இக்குழவில்இடம் பெற்றிருந்தனர், அகவன் மகள், ஆடுமகள், ஆடுகளமகள், கண்ணுளர், கலப்பையர், துணைமகள், துணைமகள், இணையர், கோடியர், சென்னியர், துடியர், பாணர், பாடினி, பாண்மகன், பாடுநர், பாடுமகள், பொருநர், வயிரியர், விறலியர் எனும் பல்வேறு கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

    இவர்கனைப் பாணச் சுற்றத்தினராகப் கருதலாம.; இவர்கள் அனைவரும் இணைந்தே நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். நிகழ்ந்துக்கலை மரபினால் ஒரு குழவாக இயங்க வேண்டிய தேவை பாணர்களுக்கு இருந்துள்ளது.


முடிவுரை

    வான் உயர் இலக்கியங்களை அளித்த பாணர்களின் வாழ்வில் வருமை சூழ்ந்திருந்தது என்பதனை அறிய முடிகிறது. பாணர்கள் வள்ளல்கள், அரசர்களை சார்ந்தே வாழ்ந்துள்ளனர். தலைவன் மீது தலைவி கொண்ட ஊடலை தீர்க்கும் வாயிலாகவும் உள்ளனர். 

போர் மரபுகள்

 
                      போர் மரபுகள்

    உலகம் தோன்றியக் காலம் தொட்டு மனிதன் இயற்கையோடும்இ விலங்குகளோடும்இ நோய்களோடும் போராடி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்துள்ளான். அத்துடன் தன்னையும் தன் இனத்தையும் காக்க வேண்டிய நிலையிலும் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.  போர் பற்றியச் செய்திகளை மிகுதியாக விளக்கும் எட்டுத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.  புறநானூறு பல்பொருட்ச் செய்திகளை ஒருசேரத்  தரும் கருவூலமாக இருந்து வந்தாலும் அதிலும் மேம்பட்டு விளங்குவது போர்ப் பற்றிய செய்திகளே! என்பதைப் புறநானூறு பாடல்கள் புலப்படுத்துகின்றன.  இத்தகைய சிறப்புப்பெற்ற நூலானப் புறநானூற்றில் இடம்பெறும் போர் மரபு பற்றியச் செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக காண்போம்.
அகராதிகள் தரும் விளக்கம்

    போர் என்றாலே நம் நினைவிற்கு வருவது போரினால் ஏற்பட்ட அழிவும் துன்பமுந்தான்.  இந்த கொடிய விளைவை ஏற்படுத்தும் போர் என்பதற்கு அகராதிகள் பல விளக்கங்களைத் தந்துள்ளன. “போர் என்பதற்கு போர்- சதயநாள்இ நெற்போர்இ பொந்துஇ போரென்னேவல்இ யுத்தம்” என்று கடிகத்தமிழ் அகராதி பொருள் தருகின்றது.  இவ்விளக்கத்தையே தமிழ் மொழி அகராதியும் தந்துள்ளது. இதன் மூலம் போர் என்பது மாறுபாடு கொண்ட இருமனிதர்களுக்கிடையே இரு ஊர்களுக்கிடையேஇ இருநாடுகளுக்கிடையேஇ படைகளின் துணையோடு பெருமளவில் நடைபெறுவது தான்   போர் எனக் கருதமுடிகிறது.போர் என்பது பகைமைக் காரணமாக உயிரின் மதிப்பு அறியாது ஒரு குழு மற்றொரு குழுவுடன் சண்டையிட்டு மடிவதே போர் எனபதை அறியமுடிகின்றது.
போரின் பழமை

    எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கேயோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது போரில்லாத உலகம் இல்லை.  போர்ப் பண்பு உயிரிகளின் குணமாக உள்ளது. போராட்டம் என்பது உயிரிகளின் இயற்றையான ஒரு பகுதி போர் புரிவதை உலகத்தின் இயற்கையாகவே சங்கப் புலவர்களும் கருதியுள்ளனர் என்பதனைஇ

     “ஒருவனை ஒருவன் அடுத்தலும் தொலைத்தலும்
   புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை||

என்ற இடைக்குன்றூர் கிழாரின் புறநானூற்றுப் பாடல் மெய்ப்பிக்கின்றது. இவற்றால் பண்டைக் காலம் முதல் இன்று வரை போர் மனித இனத்தின் முக்கியப் பிரச்சனையாக இருந்து வந்திருக்கிறது என்பது தெளிவாக புலனாகிறது.
போரின் தொடக்கம்

    கா.கோவிந்தன் பண்டைத் தமிழர் போர்நெறி குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.  அந்நூலில் மானுட வாழ்வில் போரும் பூசலும் தோன்றியதற்கான காரணங்களைச் குறிப்பிடுவதோடு காலந்தோறும் சில அமைப்புகளுக்குத் தக்கவாறு போர்முறை மாறி வந்துள்ள நிலைகளையும் விளக்கியுள்ளார்  பிறருடைய செல்வத்தைப் பறிக்கும் முகத்தான் தோன்றியதே முதற்போர் நிகழ்ச்சி என்கிறார்.
    வாழ்வில் பயன் காணாத மக்கள் வளமான செல்வம் உடைய மக்களைக் கணூந்தோறம் காழ்ப்புணர்ந்து அப்பெருவாழ்வு தங்களுக்கும் வரவேண்டும் என்ற ஆசை கொண்டனர்.  அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதற்கும் துணிந்து நின்றனர்.  செல்வர் தாம் பெற்ற இன்ப வாழ்வை வறியவர்க்குப் பகிர்ந்து அளிக்கம் விரிந்த உள்ளம் பெறாத நிலையில் அவ்விரு சாராருக்கும் இடையே மன வேறுபாடு ஏற்பட்டது இவ்வாறு தொடக்கத்தில் ஏற்பட்ட மன வேறுபாடு பின்னர் பகையாகவும் அதன் விளைவாகப் போராகவும் மாறியது அமைதி கெட்டது.  மனிதன் நாகரீகம் அடைந்த காலத்தில் குறுங்காடுகளை அழித்துப் புன்செய் நிலமாக்கி வேளாண்மை செய்தான். பின்பு அதே மனிதன் ஆடுஇ மாடுஇ எருமை போன்ற விலங்குகளைப் பேணி வளர்த்துச் செல்வத்தைப் பெருக்கினான்.   இதன்மூலம் படிப்படியாகத் தனியுடைமை நிலைபெறத் தொடங்கிய போது வர்க்கப் போராட்டமும் ஆநிரைகளைப் பகைவர் கொள்ளையிட்டு செல்வதும் அவற்றை விற்ப்பதும்   சங்கிலித் தொடர் போல போர் நிகழ்ச்சிகள் தோன்றியிருக்க வேண்டும்.
சங்க காலப் போர்

உணவுஇ உடைஇ உறையுள் என்பன மனிதனின் அடிப்படைத் தேவைகள். ஒரு மனிதன்   தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.  அவனால் முடியாத போது அவன் சார்ந்துள்ள சமூகமோ அரசோ அத்தேவைகளை நிறைவு செய்ய வேண்டும.; ஒரு மன்னர் தன் நாட்டுத் தேவைகளை நிறைவு செய்ய இயலாத நிலையில் நட்பு நாடுகளின் உதவியை நாடுகிறான்.  அது கிட்டாத நிலையில் ஓர் அரசன் பிற நாடுகளுடன் போரிட்டு அவற்றின் வளம் பறித்துத் தன் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்கிறான் இதனையே பொதுமக்கள் நலங்கருதி போர்முறை எனக் கொள்ளலாம்.
புறநானூறு புலப்படுத்தும் போர்மரபுகள்

    பழந்தமிழர்களின் போர் நெறிகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்போரில் கையாண்ட மரபுகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.  பழந்தமிழர்கள் போரில் கையாண்ட மரபுகளை நான்கு நிலைகளாகப் பிரித்து அறிய முடிகிறது அவைஇ போருக்கு முன்னுள்ள மரபுகள்இ போர் நிகழும் போது மேற்கொள்ளப்படும் மரபுகள்இ போருக்குப் பின்னுள்ள மரபுகள்இ பொதுவான மரபுகள்.
 போருக்கு முன்னுள்ள மரபுகள்
    பண்டைக் காலத்தில் போர் என்றால் உடனே சென்று தாக்குவது இல்லை.  போருக்குப் போவதற்கு முன்பே முரசு அறிவிக்கப்பட்டுஇ வீரர்கள் திரட்டப்பட்டுஇ அவ்வீரர்கள்நீராடி. போர்க்கோலம் கொள்வர். அரசன் அவர்களுக்கான அடையாளம் பூக்களும்இ படைக்கலன்களும் வழங்குவான்.
    போருக்கு செல்கிறோம் என்ற அச்சவுணர்வு இல்லாமல் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் போர்க்களம் சென்றுள்ளனர்.  இவ்வாறு போருக்குச் செல்லும் முன்பு சில மரபுகளைக் கையாண்டுள்ளனர்.  அவைகள்.
    அமைச்சருடன் ஆலோசனைஇ ஒற்று ஆராய்தல்இ முரசு முழக்கி வீரர்களைத் திரட்டுதல்இ நிமித்தம் பார்த்தல்இ வாள்(ம)  நடை மங்கலம் செய்தல்இ ஊர்க்கயத்தில் நீராடுதல்இ அடையாளப் பூச்சூடல்இ வஞ்சினம் உரைத்து நெடுமொழி சவறல்இ மொழிப்பாட்டுன் விடைபெறுதல்.
போன்ற பலவற்றை மரபாகக் கையாண்டுள்ளனர் என்பதை புறநனூற்றுப் பாடல் புலப்படுத்தும். மன்னன் போர் பற்றிய நிகழ்வுகளைத் தன் அமைச்சர் முதலியவர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர் இதனைஇ
     “திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கு||
என்னும் புறநானூறு பாடலில் மாறாத அரசியல் மாற்றம் என்பதில் அமைச்சர் களம் இருந்தனர் என அறிய முடிகிறது. போர்க்குப் புறப்படும் மன்னர்கள் போர்க்களத்திலே  வீரர்கள் எந்த சாரரின் வீரர்கள் என்பதை அறிய அடையாளப் பூக்களை சூடியுள்ளனர் என்பதைஇ சோழன்போராவைக் கோப்பெருநற்கிள்ளிப் போரில் ஈடுபட்டபோது அத்திப்பூ மாலை சூடியதை
       “ஊர்கொள வந்த பொருநனொடு
       ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே||
என்னும் பாடலில் சாத்தந்தையார் பாடியுள்ளதை அறியமுடிகிறது.
போர் நிகழும் பொழுதுள்ள மரபுகள்
    போர்க்கோலம் கொண்டுஇ இறைவனை வணங்கி வழிபட்டு போர்க்களம் செல்வதற்கு சில மரபுகளை கையாண்டார்களோ அதேபோல பகைவரோடு போரிட வந்தவர்கள் போரிலும்இ போர்க்களத்திலும் சில மரபுகளைக் கடைபிடித்துள்ளனர்.   அவைகள்இ
களம் நிறுவிப் போர்இ பகலில் மட்டும் போர்இ ஆநிரைகளைக் கவர்தல்இ ஆநிரைகளை மீட்டல்இ காவல்மரம் கடிதல்இ முரசும் சங்கும் முழுங்கப்படல்இ போர்க்கள ஒற்று ஆராய்தல்இ பூச்சூட அழைத்தலும் பூச்சூடலும்இ பாசறையில் தங்குதல்இ துணைப்படை நாடல் போன்ற அனைத்தையும்.
போர் நிகழும் மரபுகளாக கையாண்டுள்ளதை புறநானூறு பாடல்கள் புலப்படுத்துகின்றன.
     பகற்பொழுது சிறியதாக இருந்தாலும் தன்னை எதிர்த்து வந்தவர் அனைவரையும்இ பகற்பொழுதிலே வென்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதைஇ
     “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
        வம்ப மள்ளரே பலரே”
                எஞ்சுவர் கொல்லோஇ பகல் தவச்சிறிதே?  என்ற இடைக்குன்றூர் கிழாரின் பாடலால் பகலில் மட்டுமே போர் செய்தனர் என்ற குறிப்பு காணப்படுகின்றது.  போன்று மேற்கண்ட நிகழ்ச்சிக்களையும் புறநானூறு பாடல்களில் இடம் பெற்றுள்ளதை காணமுடிகின்றது.
போருக்குப் பின்னுள்ள மரபுகள்
    தாம் மேற்கொண்ட போரில் வெற்றி யாருக்கு என்று முடிவானவுடன் வெற்றி பெற்ற மன்னன் பகைப்புலத்தில் தன் உரிமையை நிலைநாட்டுவான்.  இதன் காரணமாக பகை மன்னனையும்இ பகை நாட்டு வீரர்களையும் சிறைப்பிடிப்பான்.  அதன்பின் அவன் கையாண்ட மரபுகளாகஇ
 .    பகைவர்களைச் சிறைப்பிடித்தல்இ கள்ளுண்டு மகிழ்தல்இ களவேள்வி செய்தல்இ நடுகல் நாட்டல்இ மங்கல நீராட்டி பகை நாட்டு மன்னனாக முடிசூடல் போன்ற செயல்களை புறநானூறு பாடல்களால் உணரமுடிகிறது. போரில் தோற்ற மன்னனின் மணிமுடியைக் கவர்ந்து தன் காலுக்கு வீரக்கழலாக அணிந்தான் என்பதைஇ
        “நீயே பிறர் ஓம்பறு மறமன் எயில்
      அடிபொலியக் கழல் தைஇய
       வல்லாளனை; வய வேந்தே”
என்ற ஆவூர் மூலங்கிழார் பாடலில் பதிவு செய்துள்ளத்தைக் காணமுடிகிறது. பாண்டியன் நெடுஞ்செழியன் தன் போர் வெற்றிக்குப்பின் பகைவர்களின் உடலைச் சமைத்துஇ பேய்களுக்கு உணவளித்தான் என்பதை புறநானூறு (372:5-12) பாடல் மூலமும் தெரிந்து கொள்ள முடிகின்றது. போரில் பகைவீரர்களால் விழுப்புண்பட்டு வீரமரணம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நடும் பழக்கம் இருந்ததைஇ
    “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
      சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்||
புறநானூறு விளக்கும் போர் நிகழ்ச்சிகள்
    “மண்ணாசையால் ஏற்பட்ட புறநானூறு போர் நிகழ்ச்சிகள்|
    மண்ணாசைக் காரணமாக தன்நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டி பல போர்கள் நடைபெற்றன என்பதை புறநானனூற்றில் காண முடிகின்றது.  போர்க்கு அடிப்படைக் காரணமாக துரை அரங்சாமி கூறுவது “அக வாழ்க்கையிலும் புறவாழ்க்கையிலும் அன்பு நெறியையே பின்பற்றி வாழ்ந்தவர் நிலைபெற்றிருந்த தமிழ்நாட்டில் போர் தோன்றக் காரணம் |மண் நசை எஞ்சாமன் நசை| தனக்குள்ளது போதாது என்ற காரணத்தால் ஒரு நாட்டு வேந்தன் மற்றொரு நாட்டு வேந்தன் மீது போர் குறித்து எழுவான் எனவே மண் நசையே போர்க் காரணமாகும்|| என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.
    தன் நாட்டு மக்கள் வளமாக வாழ்வதற்கு இடம் போதாது எனக் கருதி சேரமான் செல்வக் கடுங்கோ வாரியாதன் போர் செய்தான் என்பதைஇ
    “போகம் வேண்டிப் பொதுச்சூசொல் பொறாஅது
      இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப||
 என்று கபிலர் பாடியுள்ளார். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுப் பெருவழுதி வடக்கே இமயமலையும் தெற்கே குமரியும் கிழக்கே நீலக்கடல் வேலியும் மேற்கே ஆழ்கடலும் கொண்ட நிலப்பகுதியை ஆட்சி செய்தான் என்பதைஇ
    “வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
     தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்||
என்று காரிக்கிழார் என்ற புலவர் நான்கு திசைகளிலும் ஆட்சி செலுத்தினான் என்பதைப் பாடியுள்ளார். தமது நாட்டின் எல்லையை விரிவுபடுத்த வேண்டி போர் செய்தல் வேந்தர்க்கு அறம் என்பதைஇ
    “  .............. பிறனாளும்
        நாடூக்கல் மன்னர் தொழில் நலம்||
    மண்ணாசையால் போர் நிகழ்ச்சிகளில் பல அழிகள் நடைபெற்றதையும் புறநானூறு புலப்படுத்துகிறது.

முடிவுரை
    புறநானூற்றில் பல போர்கள் நடைபெற்றாலும் வெற்றி ஒன்றையே கருதிபல போர்கள் செய்துள்ளனர் என அறியமுடிகின்றது.  புறநானூறு புலப்படுத்தும் போர் மரபுகளாக போர் நிகழ்வதற்கு முன்புள்ள மரபு போர் நிகழும் போது கையாளும் மரபுஇ போர் நிகழ்ந்த பின்புள்ள மரபுஇ பொதுவான மரபு போன்றவற்றைக் காணமுடிகின்றது.


பெண்பாற் புலவர்களின் பாடல்களில் பெண்ணிய பார்வை

 

  பெண்பாற் புலவர்களின் பாடல்களில்  பெண்ணிய பார்வை

    சங்க இலக்கியமானது அகம், புறம் என்னும் இரு பிரிவினைக் கொண்டதாக உள்ளது. சங்கஇலக்கியத்தை 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடல் பாடியு;ளளனர்.  நாற்பதிற்;கும் மேற்பட்டவர்கள் பெண்பாற் புலவர்களாக இருந்துள்ளனர். நாற்பது பெண்பாற் புலவர்களும் நூற்று எண்பதிற்கும்;  மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்கள்;. சங்கயிலக்கிய பெண்பாற் புலவர்களின் பாடலில் பெண்ணிய பார்வையை ஆராய்வோம்.
பெண்ணியப் பார்வை
    பெண்ணானவள் பூப்படைவதிலிருந்து முழுமை பெறுகிறாள் என்ற கருத்தானது சங்க இலக்கியத்திலேயே காணப்படுகிறது. கண்ணிப்பெண். குடும்பத்தலைவி, பரத்தை விதவை என்ற  நிலையில் பெண்ணை வைத்துள்ளார்கள். பெண்களைஉடல் ரீதியாக    அனுகிடும் போக்கு உள்ளது.  அவர்களை ஆணின் போக்கிலேயே வைத்துள்ளதை சங்கயிலக்கியத்திலே காணமுடிகிறது.
கற்புநிலை
    பெண்ணின் உடல் தூய்மையையும் மனத்தூய்மையையும் பொருட்படுத்தும் நிலையில் கற்பு என்ற சொல் சங்க இலக்கியத்தில் முன்வைக்கப்படுகிறது. கற்பின்  நிலையை வைத்து பெண்களை மதிப்பீடும் போக்கு, சங்க இலக்கியத்தில் மிகுதியாக காணப்படுகிறது.
    “வேதின வெரிநின்; ஓதிமுது போத்து
    ஆறுசெல் மாக்கள் பள்கொளப் பொருந்தும்
    சுரனே சென்றனர் காதலர் உரன்அழிந்து
    யாங்கு அறிந்தன்று  - இவ் அழுங்கல் ஊரெ” 
                                      (குறுந். 140, பாலை)                  
என்ற பாடல் வரிகளால் அறியலாம்.                       
தலைவியின் காதலர் சுரம் வழியில் நடந்து செல்கிறார். போர் காரணமாகவும், பொருள் தேடுவதன் பொருட்டும், தலைவியை பிரிந்து செல்கிறான். தலைவனுக்காகவும், அவள் வரும் வரை வீட்டில் காத்திருத்தல் கற்பின் அடையாளமாகக் கருதப்பட்டது.
துயரநிலை
    பெண்ணானவள் ஒரு ஆண்மகன் வேறுபெண்ணை நாடிச் சென்றாலும் அவன் மீது கோபம் கொள்ளாமல் அவளின் துயரநிலையையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மனதிலேயே துயரத்தை  கட்டுப்படுத்தும் நிலை இருந்துள்ளது. ஒரு பெண்ணின்  கணவன் பரத்தமை நாடிச்சென்றதை அள்ளுர் நன்;முல்லையார் கூறுவதை,
“பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து
    வதுவை அயர்ந்தனை என்ப அஃதுயாம்
    ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
    சென்றி பெரும் நிற் தகைக்குநர் யாரோ?”  (அகநா. 4, மருதம். ப.21)
பிரிந்துச் சென்ற கணவன் பரத்தை வீட்டிற்கு சென்றதை அறிந்த தலைவி பரத்தை வீட்டிற்கே போ உனக்கும் எனக்கும் என்ன உறவு உன்னைத்; தடுப்பார் யார் என்றகிறாள். பிரிந்துச் சென்ற கணவனை ஏதும் செய்யவியலாமல் தன்னுடைய மனதிலே லைத்து   துயரமடையும் செயலினை இங்கு காணமுடிகிறது. 
பெண்ணின் பிரிவாற்றாமை
    சங்ககால பெண்ணானவள் ஆண்மகனை நினைத்து தவிக்கும் நிலை அதிகமாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை பிரிந்துச்சென்ற கணவனையோ காதலனையோ நினைத்து பிரிவாற்றாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் நிலை மிகுதியாக இருந்துள்ளது. போருக்காக பிரிந்துச் சென்ற கணவனை நினைத்து உண்ணாமலும், தன்னை அழுகுப்படுத்திக் கொள்ளாமலும், உடல்மெலிந்து தலைவனையே நினைத்து உருகும் நிலை சங்ககால பெண்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது, இதனை
“அணிநலம் விதைக்குமார் பசலை அதனால்
    அசுணம் கொல்பவர் கைபோல் நன்னம்
    இன்பமும் துன்பமும் உடைத்தே
    தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே”    (நற். 304. குறிஞ்சி)
போர் காரணமாக தலைவன் பிரிந்து செல்கிறான். அதனை தலைவி கூறுகையில்  என்னைப் பிரிந்தால் நிலமணியின் இடைப்பட்ட பொன்போன்ற என்னுடைய  மாந்தளிர் போன்ற என்தன்மை; கெடும். என்  அழகை  பசலை நோயானது  சிதைக்கும்  அசுணம் என்கிற விலங்கைப் போல இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் நிலையினை  தலைவி பலவாறு எடுத்துரைக்கிறாள். பெண்ணின் இடையானது தலைவனை நினைத்து மெல்லியதாகவும் பசலை தோன்றியதால் உடலானது மெலிதாகவும் குறைந்து விடுகின்றது. தலைவியின்  பிரிவாற்றாமையானது பல செயல்களில் நிகழ்ந்து வருகின்றதை அறியமுடிகிறது.
பெண் வளர்பு நிலை
     சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள்  வீரம் மிகுந்தவர்களாகவும் தனித்தன்மை மிகுந்தவர்களாகவும்  இருந்துள்ளனர். ஆண் புதல்வனை பெற்றது மட்டுமல்லாமல் அவனை வீரம் மிகுந்தவனாக வளர்க்கும் பண்பை பெற்றிருந்தாள்.
    “சிற்றில்நல்தூண் பற்றிநின் என்மகன்
    யாண்டு; உளனோ எனவினவும்  என்மகன்
    யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓதும்
    புலி சேர்ந்து போகிய கல் அளைபோல்
    ஈன்ற வயிறோ இதுவே
    தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”        (புறநா. 86)
என காவற்பெண்டு தன் பாடலில் சுட்டியுள்ளார். எனது சிறிய இல்லத்தின் தூணைப் பிடித்து நின்றபடி உன் மகன்  எங்குள்ளான்?  என ஒரு பெண் கேட்கிறாள். அவன் எங்குள்ளானோ யானறியேன் ? ஆயினும் புலி, இருந்து பின்னர்ப்போகிய மலைக்குகை  போல, அவனைச் சுமந்து பெற்ற வயிறும் இதோ அவன் போர்க்களத்தில்தான்  இருப்பான். என்று கூறுகிறாள்
    புதல்வனை பெற்று அவனை  வீரமகனாக, வளர்ந்தது மட்டுமில்லாமல் அறமுள்ளவனாகவும் சங்ககால பெண் வளர்த்துள்ளாள். அவள் வயிற்றினை குகை என்றும் போர்க்களத்திலே மகன் இருப்பானென்றும்  கூறுகிறாள்.
ஆண்மகனைப் பெற்ற பெண்ணின் இன்பநிலை
    சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவனை துய்ப்பதில் மட்டும் இன்பம் கொள்ளாமல் தன் மகனை பெற்ற காரணத்தினாலும். ஆவள் இன்பம் கொண்டாள் என்பதை சங்ககால  பெண்களின் மனநிலையை பார்க்கும்போது 
    “மீன்  உண் கொக்கின்  தூவி அன்ன
    வால்நரைக் கந்தல் முதியோள்சிறுவன்
    களிறு  எறிந்து  பட்டனன் என்றும் உவகை
    ஈன்ற ஞான்றினும்  பெரிதே கண்ணீர்
    நோன் கழை துயல்வரும் வெதிரத்து
    வான்பெயத்  தாங்கிய சிதரினும் பலவே”   
(திணை-தும்பை: துறை உவகைக்  கலுழ்ச்சி பக். 107-108)
என்ற பாடல் வரிகளால் அறியமுடிகிறது.
மீன் உண்ணும் கொக்கின் வெள்ளை இறகினைப்போல நரைத்த கூந்தலை  உடையவள் மூதாட்டி அவளுடைய மகன் போர்க்களத்தில் ஆண் யானையைக் கொன்று வென்று தானும் மாண்;டனன், அச்செய்தியைக்கேட்டவள். பெற்ற காலந்தினும் விட  பெரு மகிழ்ச்சி கொண்டாள். இன்ப கண்ணீர் உகுத்தாள். அக்கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரின்கண் மழை பெய்தபோது தங்கித் தூங்கித் துளிர்க்கும் நீர்த்துளியினும் மிகுதியாகும்.
       தன் புதல்வன் ஆண்யானையை கொன்றதனால் அவள் பெற்ற மகிழ்ச்சியை விட, பெரும்மகிழ்ச்சி அடைந்ததையும் அவள், கண்ணீரின் மிகுந்த உணாக்கி நிலையினை இங்கு காண இயலுகின்றது.
குடும்ப உறவு
    சங்ககால  பெண்கள்; குடும்பத்தை  கோயிலாக நினைத்தனர்.  குடும்பத்தில் தந்தை நற்றாய், செவிலி, தமர் போன்ற உறவுகள் இணங்கி வாழும் போக்கு காணப்படுகின்றது.  தலைவி செய்கின்ற காதல் செயலினை அறிந்த   தோழியானவள் அச்செயலை பற்றி செவிலித்தாயிடம்  கூறுவாள், அதனை செவிலித்தாய் நற்றாயிடம்  கூறுவாள். அந்த நிலையில் குடும்ப உறவானது பிண்ணிய  நிலையில் உள்ளதனை  அறியமுடிகிறது.

பெண்ணைப் பேசுதல்
    பெண்ணின் செயலைப் பற்றி பெண்ணே பேசியுள்ளாள். சங்ககாலத்தில் ஆண்களுக்காக அச்சம் கொள்ளாமல் அவர்களின் உடல் மொழியினைப்பற்றி அவர்களே  கூறியுள்ளார்கள். உடலைப்பற்றி சங்ககாலப்   பெண்கள்  கூறியுள்ளதாலேயே நவீன காலப்பெண்களும் இப்போக்கினைப் பற்றியும், பெண்களைப்  பற்றியும்; பேசுகின்றனர்.
    “ஆம்பல்குறுநீர் நீர்வேட் பாங்கு இவள்
    இடைமுலைக் கிடந்தும், நடுங்கல் ஆனிர்"   (குறுந். 178 (நெய்தல்)ப.105
பெண்களைப் பற்றியும் அவர்களின் உடலைப்பற்றியும் அவர்களே பேசும் பாங்கினை இங்கு காணப்படுகிறது.
கைம்மை பெண்கள்
    பெண்கள் கணவனை மிகவும்  விரும்புகிறவர்கள்.  அவர்களின் கணவன் போரில் சென்று இறந்துவிட்டால். அப்பெண் கணவன் இறந்த குழியிலேயே அவளும் இறக்க வேண்டும். விரும்பி இச்செயலை செய்தவர்களும் உண்டு. இல்லையெனில் உடல் அர்கையும், ஆடை, அணிகலன், குங்குமம் போன்றவற்றை இழப்பவளாக இப்பெண் காணப்பட்டாள்.
    “பெருங்காட்டுப் பண்ணிய கடுங்கோட்டு யாமம்
    நுமக்கு அரிதாகுகதில்லை: எமக்கு எம்
    பெருந்தொட் கணவன் மாய்ந்தென அரும்புஅற
    வாள் இதழ்  அவிழ்ந்த தாமரை
    நள் இரும் பொய்கையும் நீயும் ஓரற்றே”   (திணை: பொதுவியல், துறை:  ஆனந்தபையுள்)
 கணவன்  இறந்த பின்பு சங்க காலத்தில் வாழ்ந்த  பெண்கள்  கணவனுக்காக மிகவும்; வருத்தமடைகிறாள். நல்ல மணமான நெய்  கலவாத நீர்ச்சோறு, எள்  துவையல், புளி சேர்த்த வேளைக்கீரை ஆகியவற்றை மீண்டும் உண்டும் படுக்கைக் கல்  மேல் படுத்தும், கைம்மை நோன்பிருந்தும்; பெண்கள்   இருந்துள்ளனர். புறங்காட்டில் உருவாக்கப்பட்ட  கரிய முருட்டால் அடுக்கப்பட்ட ஈமப்படுக்கை உமக்கு அரிதாக விளங்கலாம். அந்த ஈமத்தீயே எமக்கு இதழ் மலர்ந்த தாமரையின் தண்ணீர்ப் பொய்கை நீர்போல இன்பம் அளிப்பதாகும்.
    கணவன் இறந்த ஒரு பெண்ணை கைம்மை நோன்பு மேற்கொள்வது  சங்ககாலத்தில் மேலோங்கி இருப்பதை அறிய முடிகின்றது.

முடிவுரை
    சங்ககாலத்தில் பெண்பாற் புலவர்கள் தங்களை ஆண் புலவர்கள் குற்றம்  குறை கூறியிருப்பினும்  அதனை பொருட்படுத்தாமல் தங்கள்; கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் போக்கு  காணப்படுகிறது. பெண்பாற் புலவர்கள் தங்கள் உடல்மொழியினை ; பெண்ணிய  உரிமையோடு   வலியிறுத்தும்   போக்கை மிகுதியாக அறியமுடிகிறது.   

கணிமேதாவியார் இயம்பும் அறங்கள்


கணிமேதாவியார் இயம்பும் அறங்கள்



    ஏலாதியின் ஆசிரியர் கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் 
ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறுநாவற்ப்பூ மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருள்களின் கூட்டுப் பெயராகும் ஏலாதி, அதன் பாடல்கள் ஆறு கருத்துக்களைக் கொண்டு ஒரு அறநெறியை உணர்த்துவதாக அமைந்துள்ளது கணிமேதாவியார் இயம்பும் அறங்கள் பற்றிக்காண்போம்

நல்லவாழ்க்கை வாழ்பவன்

    உலகில் மனித இனம் மற்றவர்களைவிட தாம் சிறந்து விளங்வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாடிலே இயங்கி வருகிறது. செல்லவச்செழிப்புடன் ஒருவன் வாழ்ந்தான் எனில் அவன் செய்யவேன்டியவைகளாக

    உண் நீர்வளம், குளம், கூவர், வழிப்புரை
    தண்ணீரே, அமபலம்,தான் பாற்படுத்தான் - பண்நீர்
    பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வளாய்
    கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து
                            ஏலாதி – 51

     என்ற பாடலில் குளம், கிணறு, முதலான நீர்நிலைகள், வழிப் போக்கர் தங்குவதற்கு வாய்ப்பாக இலைக்குடில்கள், தண்ணீர்ப் பந்தல்கள், அம்பலங்கள்  போன்றவற்றை அமைப்பவன் மிகுந்த செல்வம் பெருகுபவனாகவும், பண்ணோடு கலந்தபாடலையும் ஆடலையும் கேட்டு அனுபவிக்க வாய்ப்புள்ளவனாகவும், தன்மனைவியுடன் ஊடலும் கூடலும் பெற்று இன்புற்றவனாகவும் உள்ளவன் இனிதே வாழ்பவன் என்று உரைக்கிறார்.

இல்லறமும் துறவறமும்

    வாழ்க்கையை அழகாக அகம் என்றும் புறம் என்றும் பகுத்து வாழ்ந்தவன் தமிழன். சுற்றத்தோடு இனைந்து பாசத்தால் கோட்டைகட்டி வாழவே மனிதன் இல்லறமாக வாழ்கிறான். இல்லற வாழ்வின் அனைத்து கடமைகளும் முடிந்த பின் இன்பத்தை துறந்து வாழ்வதே உன்மையான துறவறம் ஆகும். இதனை
   

    மனை வாழ்க்கை, மாதலம், என்று இரண்டும் மாண்ட
    வினை வாழ்க்கை ஆக விழைப, மனை வாழ்க்கை
    பற்றுதல், இன்றி விடுதல், முன் சொல்லும் போல்
    பற்றுதல் பார்த்து இல்தவம்
                    ஏலாதி – 73

    என்ற பாடலடியில் இவ்வாழ்க்கைத் துறவு வாழ்க்கை என்ற இரண்டுமே பெருமைக்குரிய நல் வாழ்க்கையே இல்வாழ்க்கை என்பது பற்றுதல் சார்ந்தது. துறவுவாழக்கை பற்றுதலை விடுவது; வீடு பேற்றின் மேல் பற்றைக் கொள்வது என்று உரைக்கிறார். இதையே

    துன்பமே மீதூரக் கண்டும் துறவுஊள்ளார்
    இன்பமே காமுறுவர், ஏழையார்,இன்பம்
    இசைதொறும், மற்று அதன் இன்னாமை நோக்கி
    பசைதல் பரியாதாம் ஆமல். ( நாலடியார். துறவு 10)

அறிவு இல்லாதவர் இல்வாழ்கை, துன்பம் மிகுதியாகவே காணப்படும் எனினும் துறவை விரும்பமாட்டார்கள். அறிவுடையவர் இன்பம் அடையும்போது அதை சீர்தூக்கி இல்வாழ்கை துறந்து துறவறத்தே விரும்புவார்கள் என இல்லறம், துறவறம் பற்றி நாலடியார் கூறிச்செல்கிறார்.

அரசன்
    கடிவாளம் இல்லாத குதிரை எவ்வாறு செல்லுமோ இதுப்போல கட்டமைப்பு இல்லாமல் மக்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள். வலியவன் எளியவனை வெல்வான். இந்த நிலை மாறி அனைவரும் சமம் என்ற நிலை வேண்டுமெனில் அரசாங்கமும், அரசனும் நிச்சயம் தேவைப்படுகிறான். யார் அரசன் என கணிமேதாவியார் பின்வருமாறு,

    பெய்யான், பொய்மேவான், புலால் உண்ணான் யாவரையும்
    வையான், வழிசீத்து, வால் அடிசில் நையாதே
    ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ்மண் அரசாய்ப்
    பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு
                            ஏலாதி – 44

    பொய் கூறாமலும், பிறர் கூறும் பொய்க்கு உடன்படாமலும், புலால், உண்ணாமலும், யாரையும், வையாமலும், வருவோரை வரவேற்று விருந்து உணவு கொடுத்துப் பகிர்ந்து உண்பவன் கடல் சூழ்ந்த இவ்உலகில் அரசனாகும் பெருமை பெறுவான் என்கிறார்.

     கொல்லான், உடன்படான், கொல்வார்இனம் சேரான்
    புல்லான் பிறர்பால், புலால் மயங்கல் செல்லான்,
    குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், கொல்யானை ஏறி
    ஆடிப் படுப்பான், பின் ஆண்டு அரசு.
                    ஏலாதி 42
பிற உயிர்களைக் கொல்லாமலும் மற்றவர் கொல்வதற்கு உடன்படாமலும் அவருடன் சேராமல் புலால் உணவிற்கு மயங்காமல் மக்களுக்கு உணவு அளிப்பவன் எதிரிகளை கொல்லும் யானை மீது ஏறி மற்றவரை அடிமைப்படுத்தும் அரசன் அரசனுக்கு அரசன் ஆவான்.   
முன்வினை

    உயர்ந்த பண்புடனும் சீர்திருத்திய நாகரீகத்துடன்; வாழவே மனிதன் என்றும் முயல்கிறான். ஒருவன் தன் வாழ்நாள் இலக்காக செல்வம் சேர்ப்பதையும் புகழுடனே வாழவே ஆசைக்கொள்கிறான். அவ்வாறு ஆசை கொள்பவர்களுக்கு கணிமேதாவியார் எச்சரிக்கை வகுத்து செல்கிறார் இதனை,

    பெருமை, புகழ், அறம் பேணாமை சீற்றம்
    அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்
    பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்
    சாபம்போல் சாரும், சலித்து
                    ஏலாதி – 60

    என்ற பாடலடியில் பெருமை, புகழ், அறம், சினவாமை, அரிய நூலறிவு, சால்பு அகிய உயர்குணங்கள் இல்லாத தீயோரைச் சார்ந்தால் இம்மைக்கும், மறுமைக்கும் பாவமும், பழியும், பகையும், இறப்பும், கேடும், அச்சமும் முனிவர் இட்டசாபம் போல வந்தடையும். என்கிறார்.

மனிதனின் தீய அடையாளங்கள்

    மண்ணில் உதிக்கும் எந்த குழந்தையும்  தர்மத்தை அறிந்து உதிப்பதில்லை. அவரவர் வளர்ந்த விதத்திலே நல்லவர்கள், தீயவர்கள் எனும் அடையாளத்தோடு வாழ்கிறார்கள். சந்தர்பமும் சுழ்நிலையும் மட்டுமே ஒருவனை நல்லவன் தீயவன் என்ற அடையாளத்தை தருகிறது. ஒருவனுக்குறிய தீய அடையாளங்களாக

    ஆர்வமே செற்றம், கதமே, அறையுங்கால்
    ஓர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா,
    மானமே …………………….
                            ஏலாதி – 61

    என்ற பாடலில் போரவா, பகை, சினம் ஒரு தலைப்பட்சம், கருமித்தனம், போலி மனம் என்ற ஆறும் மானுட உயிர்க்கு  தீய அடையாளங்கள் என்று கூறுகிறார்

சிறந்த நட்பு

     நட்பு எனும் ஆயுதம்  அனு ஆயுதத்தை விட வலிமைமிக்கது. உணர்வுகளால் நிறைந்த எதிர்பார்ப்பு இல்லா ஒரு உறவு நட்பு. நட்பு   உறவுகளிலிருந்து வேறுப்பட்டது காதலில் இருந்து மாறுப்பட்டது. தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப அது  மாறி ஆக்கம் சேர்க்கிறது.
நல்ல நட்பு  என்பதற்கு,

    சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
    நாக்கு, ஆடு, நாட்டு, அறைபோக்கும், என நாக்காட்ட,
    நட்டர்க்கு இலையின், தமக்கு இயைந்த கூறு உடம்பு
    அடடார்வாய்ப் பட்டது பண்பு                      ஏலாதி – 79
                       

    என்ற பாடலடியில் இறப்பும், கேடும், பகையும், வருத்தமும், மகிழ்ச்சியும், நாவின் வழி வரும் பழியும், நண்பர்களுக்கு வந்து அவர்கள் பாதிக்கப்பட்டால் தாமும் அவற்றால் பாதிக்கப்பட்டது போல் உணர்வதே நல்ல நட்பின் அடையாளம் என்கிறார்.

    சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
    நேர்தல், பிரிவில், கவறலே, ஓதலின்
    அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
    மென் புடையார் வைத்தார் விரித்து
                    ஏலாதி – 68

    நண்பர்கள் இறந்தபோது பிரிவு தாங்காது இறந்தல், நண்பர்களுக்கு வறுமை வந்துள்ளபோது பொருள் கொடுத்து உதவுதல் இனிய சொற்களைக் கூறுதல், நண்பர்களுடன் கூடியிருத்தல், நண்பர்கள் வருத்தும் போது தாமும் வருந்துதல். நண்பர் பிரிய நேரின் கவலைப்படுதல் எனும் ஆறு குணங்களும் நட்பு எனும் அன்புடையார்க்கு உரியவை எனச் சான்றோர் தம் நூல்களில் விரித்துக் கூறியுள்ளனர்

தேவரால் பகழப்படுபவன்

    மற்றவாரால் ஒருவன் புகழப்பட அவன் பல்வேறு நன்மைகளை செய்திடவேண்டும். அவ்வாறு செய்கையிலும் மறந்தும் ஒரு சிறு தவறை செய்தாலும் கூட அவன் துற்றப்படுவான். இந்நிலையில் தேவர்களால் புகழ் மொழிகேட்க கணிமேதவியர்

    “கொலைபுரியான் கொல்லான் புலால்மயங்கான் கூர்ந்த
     அலை புரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்”

    கொலை புரியாதவன். பிறர் கொலை செய்வதை விரும்பாதவன்.  மாமிசத்தை உண்ணாதவன். பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் செய்யாதவன். பிறரிடம் வஞ்சம் கொள்ளாதவன், எந்த சூழ்நிலையிலும் தன் சூழ்நிலையில் மாறாமல்; இருப்பவர்களை   விண்ணவர்களும் போற்றி புகழ்ந்திடுவர் என்று கூறுகிறார்.

பொய்உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்
மெய் உரையான், உள்ளனவும் விட்டுஉரையான் அய்உரையான்
கூந்தல் மயில்அன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம், இவ்வுலகம் விட்டு
                        ( ஏலாதி 33)
பொய் சொல்லாதவனாய், புறம் கூறாதவனாய், பிறர் துன்பம் அடைவதற்கு காரணமானவற்றை கூறாதவனாய், தம் வருமையை மற்றவரிடதில் கூறாதவனாய் எவன் ஒருவன் உள்ளானோ அவன் விண்ணவர்கே வேந்தனாவன் என்கிறார் கணிமேதாவியார்.

    “இண்சொல் அளாவல் இடம் இனிதூண் யாவர்க்கும்
     வன்சொல் களைந்து வரும்பானேல் - மென்சொல்”

    வீட்டுக்கு வரும் விருந்தினரை இன்சொல் கூறுதல். விருந்தினருடன் கலந்துறவாடல். சுவையான உணவு அழித்தல். மனம் கோணாத வண்ணம் உபசரித்தல். அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடுசெய்து தருதல், பணிவு கலந்து சொல் கூறல்.  இத்தகையவனைத் தேவர்கள் விரைந்து வந்து விருந்தினராய் ஏற்றுக் கொள்வர்.

பெண்ணுக்கு அழகு கல்வி

    அன்பு கருனை பாசம் இவற்றின் உறைவிடம் பெண்மை என்றால் அது மிகையல்ல. நம் வரலாற்றில் பெண்கள் அடிமையாகவே அன்று முதல் இன்று வரை பார்க்கப்படுகின்றனர். பெண்களின் வாழ்க்கை ஆணை சார்ந்தே இருந்துள்ளதை இலக்கியம் மூலம்; அறிய முடிகிறது. பெண்கள் என்றாலே அழகுதான் நினைவுக்குவரும் அந்த அளவிற்கு அலங்கார பிரியராக பெண்கள் இருப்பார்கள் என்பதையும், அந்த அலங்காரம் எல்லாம் அழகல்ல என்பதையும் பின்வரும் பாடல் வழி 

    இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
    நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
    கழுத்தின் வனப்பும், பனப்பு அல்ல; எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு
                            ஏலாதி – 74

    ஒரு பெண்ணுக்கு இடையடிகோ, தோளழகோ நடையடிகோ, நாண் அழகோ, கழுத்தின் அழகோ அழகு அல்ல. அவர்கள், எண்ணாகிய கணக்கியலையும், எழுத்தாகிய இலக்கிய இயலையும் கற்றுக் கொண்டிருக்கும் அழகே தலையாது. பெண்ணுக்கு அழகு அவள் கல்வி கற்று சிறந்த அறிவு பெற்று இந்த சமூகத்தை காப்பதே அழகு. என்பதை அறியமுடிகிறது.

     கல்வி என்பது ஒரு மனிதனுக்கு அழியாத செல்வமாகும் ஒருவர் பிறப்பு முதல் இறப்புவரை கூடவே வரக்கூடியது கல்வியே  கல்வி ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பத்தை மேம்படுத்துவதற்கு மட்டும் அல்ல  சமுதாயத்தை மேம்படுத்துவதற்கே பெண்கல்வி அவசியம் என்பதை அன்றே வலியுறுத்திச் சென்றுள்ளார்.

முடிவுரை

    உலகில் உள்ள மக்களின் மனதில் உள்ள தீமைகளை போக்க நினைத்த கணிமேதாவியார் ஏலாதி என்ற மருத்துவ நூலை படைத்தார். பாடல்கள் அனைத்தும் ஆறு அறக்கருத்துகளை கொண்டு இயங்குகிறது. மக்கள், அரசர்கள், துறவரம், ஈகை, நட்பு, பெண், இவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை  மேற்ச்சொல்லிய படி அமைத்துள்ளார். மனிதன் எந்த உயிரையும் கொல்லாதவனாய் இருத்தல் வேண்டும். மனிதன் அறம் பொருள் இன்பம் வீடுபேறு பெறவேண்டும் என்பதையே அனைத்து அறயிலக்கிய புலவர்களின் பாடுபொருளாக அமைந்துள்ளது.

வயலும் வயல் சார்ந்த சூழலும்

வயலும் வயல் சார்ந்த சூழலும்

    மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் மனிதர்கள் வாழ்ந்ததாக நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.  அந்த வரலாற்று முற்காலம் தொடங்கி தமிழர்கள் இயற்கை சார்ந்த சூழலை வாழ்க்கை நெறியாகக் கொண்டனர்.  கால வளர்ச்சியில் மானிடப் பரவலும்இ மனிதப் பெருக்கமும் இயந்திரமயமும்இ தொழில் நுட்பங்களும் இயற்கை கழிவுகளை விதைத்துவிட்டது.  நிலம்இ பொழுதுஇ இயங்கும் இயங்காப் பொருட்கள் எனச் சூழலின் இயக்கமே வாழ்வாக இருந்தமைக்கான தகவல் பண்டைய இலக்கியங்களில் பதிவாகி உள்ளது. பழந்தமிழ் இலக்கியத்தில் வயல் சார்ந்த சூழ்நிலையை காண்போம்.
வேளாண் நிலம்
    வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடைஇ ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் "விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்" என்ற பொருளும் கொண்டதாகும்
    சங்க இலக்கியங்களில் செயற்கை தொடா உயரத்தில் இருந்த தமிழ்ச்சமூகம் விழுமியங்களைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களில் உணவு சேகரிக்கும் வாழ்க்கை நிலையும்இ இவேட்டையாடும் வாழ்க்கை நிலையும்இ காடுகளை எரித்துப் பயிர் செய்யும் வாழ்க்கை நிலையும்இ கால்நடை வளர்ப்பு வாழ்க்கை நிலையும்இ பயிர்த்தொழில் செய்யும் வாழ்க்கை நிலையும் குறிப்பிடப்படுகிறது. மருதத்திணை சார்ந்த அகப்புறப் பாடல்களில் வயலும்இ வயல் சார்ந்த சூழலும்இ விளைபொருட்களும்இ வேளாண் வாழ்வும் விரவிக்கிடக்கின்றன.
           பயிர்த்தொழில் செய்வவற்கு அடிப்படையாக விளங்குவது நிலம்இ சங்க இலக்கியங்களில் நிலத்தைச்சுட்டும் பல பெயர்கள் இடம் பெறகின்றது. நிலம்இ வன்புலமஇ மென்புலம் எனப்பகுத்து கூறப்படுகிறது. மேட்டு நிலம்இ வலிய நிலம்இ முல்லை நிலம் என்கிற பொருள்களில் வன்புலமும்இ பின்புலமும் சுட்டப்பெறுகிறது. இது முல்லை நிலத்தையும்இ குறிஞ்சி நிலத்தையும் குறிக்கிறது.
 நீர் வசதியள்ள நிலம் மென்புலம் ஆகும். நீர் வசதியறறது புன்செய் நிலம் ஆகும். மென்புலம் மருத நிலத்தையும்இ நெய்தல் நிலத்தையும் குறிக்கின்றது. மருத நில வயல்கள் தண்ணடை எனவும் கூறப்படுகிறது.

நிலமும் வளமும்
            மருத நிலம் வளம்மிக்கதாக இருந்தமையை சங்கப்பாடல்கள் வழி அறிய முடிகிறது. கரிகாற்சோழனின் பெருமைகளைப் பாடும் பட்டினப்பாலை
   "காடு கொன்று நாடாக்கி
   குளந்தொட்டு வளம் பெருக்கி
   பிறங்கு நிலை மாடந்துறந்தை போக்கிக்
   கோயிலொடு குடிநிறீஇ"(283 - 286)

எனக் காட்டை அழித்து நாடாக்கியும்இ குளத்தைக் தோண்டி நீரைப் பெருக்கியும் ஊரைப்பெரிதாக்கியும் செய்த வளச் செயல்களைப் பட்டியலிடுகிறது.
 “கழனி மாஅத்து விளைந்துகு  தீம்பழம்
 பழன வாளை கதூஉ மூரன்"  (குறுந்-8)
வயலை அடுத்துள்ள மாமரத்தின் இருந்து கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தைப்  பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுவதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன்....எனத் தொடரும் பாடல்பாடும் புலவர்கள் உவமை சொல்லும்போது இயற்கை சார்ந்த நிலவியல் சூழல்களை அழகாகச் சித்தரிக்கின்றனர்.
“கணைக்கோட்டு வாளைக் கமமஞசூன் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்”  (குறுந்-164)

எனத்திரண்ட கொம்பை உடையவாளை மீனும்இ

“அரிற்பவர்ப் பிரம்பின் விரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்" (குறுந்-91)

எனக்கொடியும்இ கனியும்இ கொண்டை மீனும்இ
“கற்றித் கேளி ராத்திய யுள்ளுர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை றுங்கொடுபெயரும்"  (குறுந்-293)
எனப் பனைமரமும்இ கள்ளும் நுங்கும்இ
"குறுகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெருஉம்" (குறுந்-127)
என்றும் பாடலில் நாரையானது கெண்டை முனை கவர்ந்து கொள்ள அதன் வாயினிறு தப்பிய அம்மீன் நீருள் குதித்திய பின்பு அக்குளத்தில் உள்ள தாமரையின் வெள்ளிய அரும்பைக் கண்டு அஞ்சும் வயல் பக்கம் காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடையவன் என்பதும்இ

“அயிரை பரந்த அந்தன் பழனத்து
ஏற்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்”  (குறுந்-178)

என்றும் பாடலில் அயிரை மீன்கள் நிறைய பெற்ற வயலில் மெல்லியக் கொடியைக் கொண்ட ஆம்பல் மலரைப் பறிப்பர். நீரைக்கண்டு விழைந்தோர்போல என்பதும்இ மருத நிலத்தையும் அதன் வளத்தையும் நீர் நிலையையும்இ நீர் நிலைகளில் வளரும் உயிரினத்தையும் சுட்டி இயற்கை சார்ந்த சூழலாக அமைகிறது.

காவிரிபாயும் மருதவளநாடு
           சங்கப்பாடல்களில் காவிரி ஆற்றின் சிறப்பும் நிலவளமும் இடம் பெறுகிறது. மூவேந்தவரின் சோழனை உயர்ந்தவராய்க் காட்டும் பாடல் (புறம்-35)
"அந்தன் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடு எனப் படுவது நினதே"
என நீர்வளஇ நீர்வளம் பெருக்கத்தையும் நன்செய் வேளாண்மையின் பரவலையும் சுட்டுவதோடுஇ
"வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயலே"
எனப் போர்கள் வெற்றிகூட உழும் கலப்பை நிலத்தில் உழுத ஊன்று காலிடத்து விளைந்த நெல் தந்த வெற்றியாகும்.
நீரை முக்கியமாக கொண்டுள்ள உடம்புகெல்லாம் உணவைக் கொடுத்தவர் ஆவார். உடம்பு உணவை அடிப்படையாகக் கொண்டது. உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்துவர் இவ்வுலகத்தில் உடலையும் உயிரையும் படைத்தவர் ஆவார்.
உழவும் உழவுக் கருவிகளும்
         சங்க இலக்கியங்களில் உழவுத்தொழிலும் உழவர்களும்இ உழவுக் கருவிகளும் இடம் பெறுகிறது.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லன மொழிப் பிறவகை நிகழ்ச்சி” (தொல்.மரபியல்-8)

எனத் தொல்காப்பியர் சுட்டும்இ சங்க கால மனிதர்களை  வீரர்கள் வீரர்களற்றார் எனப்பகுக்கும் மரபு இருக்கிறது வீரர்களே உயர்ந்தோராகக் கருதப்பெற்றனர். போர்களம் புகாதவர்களே ஏர்க்களம் காணத் தலைப்பட்டனர். உழிஞைப் பாடர்லகளில் உழவும்இஉழவு பேணப்படும் முறையும் இடம் பெறுகின்றது.

        நிலத்தின் விளைபொருள்களில் நெல்லே முதன்மையானது. ஒரு பெண்யானை அமரும் இடத்தில் ஏழு ஆண்யானைகள் உண்ணப்போதுமான நெல் விளைந்ததாகவும்இ வீட்டின் முகட்டளவு நெல் வளர்ந்திருந்ததாகவும் சுட்டப்பெறுகிறது. உழர்களைக்குறிக்க உழவர்இ உழத்தியர்இ கடையர்இ கடைசியர் என்றும் சொற்கள் சங்க இலக்கியங்களில் ஆளப்பெருகின்றன. பெரும்பாணாற்றுப்படைஇ மதுரைக்காஞ்சிஇ மலைப்படுகடாம் முதலியவற்றில் மருதநில உழவர்களின் வாழ்க்கைச் சிறப்புகள் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளது.
       உழவர்கள் பயன்படுத்திய கலப்பை நாஞ்சில் எனப்பட்டது. பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில் என்று பெரும்பாணாற்றுப்படை கூறும் நாற்றங்காலில் நாற்று விட்டுஇ வளர்ந்த பின் வயல்களில் நட்டதையும்  களையெடுப்பையும் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது.

“பழனக் காவில் பசு மயிலாலும்
பொய்கை வாயில் புனல் பொருபுதவின்
நெய்தல் மரபின் நிரைகட் செறுவின”; (பதிற்.27.(8.10)

என்பதில் நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்ட அணையிணை பொய்கை வாயில் புனல் பொருபுதவின் குறிப்பாக அமைகிறது. களையெடுத்தல்இ நாற்று நடுதல்இ விளை நிலங்களை காவல் செய்தல் ஆகியன பெண்களாலேயே நடை பெற்றிருக்கின்றன.


முடிவுரை
இயற்கை விவசாயத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது செயற்கை விவசாயம். செயற்கை உரங்கள் நிலத்துக்குப் போதைப் பொருள்கள்.போதை விரைவில் மறைந்துவிடுகிறது. மறுபடியும் போதை வேண்டுமானால்இ குடிகாரன் மீண்டும் குடிக்க வேண்டும். செயற்கை உரமும் இப்படியே விரைவில் வேலைசெய்து அழியும். அதனால்இ ஆண்டுதோறும் நிலத்துக்குச் செயற்கை உரத்தை இட வேண்டும். அடிக்கடி இந்த உரங்களைப் பயன்படுத்துவதால் நிலம் கெட்டுப்போகிறது. பிறகு அது விவசாயத்துக்குப் பயன்படுவதில்லை. செயற்கை விவசாயத்தில் வேதியியல் (ரசாயனம்) முறையில் உணவு பொருள் உற்பத்தி செயப்படுகிறது. ஆனால் தரமான பொருள் உற்பத்தி செய்யமுடியாது.
    சங்க இலக்கியங்களில் பண்டைய வேளாண்மையும்இ இயற்கை சார்ந்த வாழ்வும் காடுதிருத்தி நாடாக்கும் முயற்சியின் பதிவுகளும் காணப்படுகின்றன. மரபு சார்ந்த வேளாண்மை இயற்கைக் கொண்டாடியது.  இயற்கை மனிதனைக் கொண்டாடியது.  மனிதன் உலக இன்பத்தை வாழ்வாக விவரித்து வாழ்கிறான்.

விளம்பிநாகனாரின் கல்விச் சிறப்பு

  
       விளம்பிநாகனாரின்   கல்விச் சிறப்பு

      எக்குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கல்வி கற்றவனாக இருந்தால் பொருள் கொடுத்தாவது அரசன் அவர்களை தம்வசம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கல்வியின் தன்மையை போற்றியவன் தமிழன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக   இலக்கியங்கள் விளங்குகின்றன. தமிழில்  தொல் பழங்காலம் தொட்டு தோன்றிய இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை கல்வியின் சிறப்புகளைப் பதிவு செய்கின்றன. நான்மணிக்கடிகை உணர்த்தும் கல்வியின் சிறப்பை  காண்போம்.
கல்வி 
    கல்வி ஒரு மனிதனுக்கு நிழல் போன்றது. அறியாமையை போக்குவது கல்வி. கல்வி என்னும் சொல்லுக்கு கற்கை, கல்வியறிவு, வித்தை, பயிற்சி, நூல் எனப் பொருள் கூறுகிறது தமிழ் லெக்சிகன் அகராதி.  மற்றவாகளால் கவர்ந்து செல்லமுடியாத ஒரே செல்வம் கல்விச்செல்வம் ஆகும்.
புறநானூற்றில் கல்விச் சிறப்பு
    பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று போற்றப்படுவன சங்க இலக்கியங்கள். பாட்டும் தொகையுமாக விளங்கும் இவ்விலக்கியம் தமிழ் மக்களின் ஒழுக்கலாறுகளை அகம் புறம் எனப் பகுத்துக் கூறுகின்றன. எனவே, இவ்விலக்கியங்களும் அகப்புற பாகுபாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றன. புற இலக்கியங்களில் தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று போற்றப்படுவது புறநானூறு ஆகும். பல்வேறு வகைப்பட்ட மனித இனம் பற்றி கூறும் புறநானூறு, மனித வாழ்வியலுக்குரிய பல்வேறு துறைகள் பற்றியும் பேசுகின்றன. அவற்றுள் சிறப்புமிக்க கல்வி பற்றி அந்நூல்,

“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே;” (புறம், பா. 183)

என்று ஆசிரியருக்குத் தேவையானபோது பொருள்கொடுத்தும், பின்னின்று கற்கும் முறைமையை உணர்ந்து கற்றல் நல்லது என ஆசிரியருக்கு உதவி செய்தும், பணிவிடை செய்தும் கல்வியைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

அற இலக்கியங்களில் கல்விச் சிறப்பு
    உலக அற இலக்கியங்களில் முதன்மையானதாகவும்,  உலகப் பொதுமறையாகவும் விளங்கும் இலக்கியம் திருக்குறள்.  திருக்குறள் கல்வியின் சிறப்புகள் குறித்து நான்கு அதிகாரங்களில் வலியுறுத்துகின்றது. கல்லாதவர்களை விலங்கிற்கும், மரத்திற்கும் ஒப்பிடுகிறது. கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை கீழே உள்ள வரிகளால் சுட்டுகின்றார். கல்வியின் சிறப்பினை உணர்த்தவே திருவள்ளுவர் கல்லாதவர்களின் கண்களைப் புண்களாகக் குறிப்பிடுகிறார்.

“கண்உடையார் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண் உடையார் கல்லாதவர்” (குறள்-395)

என்பன போன்ற குறட்பாக்களை வகுத்துரைத்து கல்வி சிறப்பை இவ்வுலகில் நிலை நாட்டுகின்றார்..
அற இலக்கியங்களில் திருக்குறளுக்கு இணையான நூலாக விளங்கும் நாலடியார்,
“குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல- நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”

    என உடல்தோற்றம், கூந்தல், ஆடை, அபரணம், வண்ணப்பூச்சு இவையெல்லாம் ஒரு பெண்ணிற்குக் அழகைத் தருவதல்ல. கல்வி கற்று எழுதத் தெரியுமானால் அதுவே பெரிய அழகாகும் என நாலடியார்; குறிப்பிடுகிறது.
    ஒருவருக்குப் புற அழகு எப்பொழுதும் ஆக்கத்தைத் தருவதில்லை. மாறாக அழிவினையே தருகின்றன. இதனையே வள்ளுவர்
“புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பி லவர்க்கு” (குறள்.79)

    அழகு, அறிவு, வாய்மை, தூய்மை, மெய்மை, பொய்மை, அனைத்தும் அகத்து உறுப்பாகிய மனத்தோடு தொடர்புடையது. எனவே, மனந்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைகின்றன. புறத்து உறுப்புகள் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது மாறும் தன்மை கொண்டது. அகமே என்றும் மாறாத தன்மைகொண்டது. எது மாறாதத் தன்மை கொண்டதாக இருக்கிறதோ அதுவே, அழகுடையது. எது, தான் மாறாமல் சமூதாயத்தில் மாற்றத்தைத் தருகிறதோ அதுவே, அறிவும், அழகும் உடையது. அந்த வகையில் கல்வி என்றும் மாறாதத் தன்மை கொண்டது. ஆனால் இந்த சமுதாயத்தை மாற்றும் வலிமை கலவிக்கு மட்டுமே உண்டு. அதிலும் குறிப்பாக பெண் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்கள்,

“இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு”

    என்னும் பாடல் வழி ஒரு பெண்ணிற்கு இடையோ, தோளோ, நடையோ, அவளிடம் உண்டாகும் நாணமோ, கழுத்தோ, அழகல்ல. மாறாக அவள் கல்வி பயின்று எழுதும் எழுத்தே அழகுடையதாகும் என்றும்,

“கல்லாதான் கண்ட கழிநுட்பம் கட்டரிதால்
நல்லேயாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணங்கி வெகுண்டு அருகிற் பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுதில்”

என்றும் கல்வியின் சிறப்புகள் குறித்து பல இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன
நம் பண்பாட்டில் கல்வியின் உண்மையான நோக்கம் மாணவர்களின் அறிவைப் பெருக்குவதும், அனுபவத்தைப் பெறுவதற்கும் அவர்களின் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்து எதிர் காலத்தைச் சிறப்புடன் அணுகச் செய்வது ஆகும்.

கல்வியே அடிப்படை

    பலவகையான அறிவு நூல்களைக் கற்றவரிடம் இழந்த பொருளுக்கு இரக்கம் தோன்றாது. ஊக்கத்தோடு முயற்சியைச் செய்பவரிடம் தனக்கு கிட்டாமையால் ஆன முயற்சித் துன்பம் தோன்றாது. எப்போதும் தீமையையே செய்பவருக்கு நல்லச் செயல் தோன்றுவதற்குச் சிறிதும் சாத்தியமில்லை. ஒருவர் கோபத்தோடு இருந்தால் எந்த நன்மைகளும் தோன்றினது என்பதை விளக்கும் நான்மணிக்கடிகையின் பாடலொன்று,

“கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும்”

என்று கூறுகிறது.அறியாமை என்னும் இருளைப் போக்குவது கல்வி
ஒரு சமுதாயம் பின்னடைவைச் சந்திப்பதற்கும், முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கும் காரணம் அறியாமையே. அறியாமை மனிதனை அடிமையாக்குகின்றது. அரசியல், சமூகப், பொருளாதாரத் தளத்தில் ஒரு நாட்டை முடக்குகிறது. மக்களை சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்திற்குக் காரணம் அறியாமையே. மக்கள் தொகை பெருக்கமே இந்தியாவின் வளர்;ச்சிக்குத் தடையாக உள்ளன. அறியாமை பிற்போக்குச் சிந்தனையையே உருவாக்குகின்றன. பிற்போக்குச் சிந்தனை எந்தவிதமான வளர்;ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.

    அறியாமையை அகற்றும் மருந்து என்பது கல்வியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. கல்வி அறியாமையைப் போக்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கின்றது.

“புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை-காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு.”

என்ற பாடல் வரிகள் கல்வி கற்றவர்களின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. ஒருவன் மிகுதியான அறிவு நூல்களைக் கற்பதனால் மிக்க அறியாமையானது குறையும். கல்வி கற்பதால் அறியாமை குறைந்து தேவையற்ற குணங்கள் அகன்று உலகத்தை அறிவான்.  உலகத்தின் இயல்பை அறிந்து கொண்டால், உண்மையான வழியில் செல்வான். கல்வியின் நெறியால் உலகத்தில் புகழை நிலை பெறச் செய்யலாம்.
 
“கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்த்து இவ்வுலகின் கோளுணரும்-கோளுணர்ந்தால்
தத்துவமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ-உப்பால்
உயர்ந்த உலகம் புகும்”

என்று நான்மணிக்கடிகையும்  கூறுகின்றது.

துன்பத்தைப் போக்கும் கல்வி

    கல்வி ஒருவனுக்கு வரும் எல்லா துன்பத்திலிருந்தும் அவனைப் பதுகாக்கின்றது. தண்ணீர் எப்பொழுதும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் இயல்புடையது. கல்விகற்ற சான்றோர்கள்  அந்த தண்ணீரைப் போல தன் நிலையிலிருந்து மாறாமல் தனக்குரிய இயல்புப்படி நடந்துகொள்வர். நன்மையும் தீமையும், செய்வனச் செய்யத்தகாதன, பேசுவனப் பேசக்கூடாதன, பெருக்கவேண்டுவன, நீக்கவேண்டுவன  என அனைத்தையும் அளந்தறியும் அறிவு கல்வியினால் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் சரியாக அறிந்துகொண்டால் ஒருவனுக்கு துன்பங்கள் ஏற்படாது.
    
கல்வியின் பயன்

    இன்றைய காலத்தில் ஒருவனுக்குச் செல்வந்தான் சிறந்த வலிமையுடையதாகப் கருதப்படுகின்றது. கற்ற கல்வி தகுந்த நேரத்துக்குப் பயனாவது போல் வேறு எதுவும் பயனைத் தருவது இல்லை. வறுமை ஒரு மனிதனுக்குத் துன்பமாக அமைகிறது. கையேந்தி இரப்பவர்க்கு இல்லை என்னாது மன உறுதியைப் போன்ற திட்பமானது கல்வியைத் தவிர வேறு இல்லை.

“ ‘ஈ’ என இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
‘ஈயேன்’ என்றல் அதனினும் இழிந்தன்று;
‘கொள்’ எனக் கொடுத்தல் உயாந்தன்று; அதன் எதிர்,
‘கொள்ளேன்’ என்றல் அதனினும் உயர்தன்று;”(புறம், பா.204, 1-4)

    என்ற பாடல் உணர்த்துவது போல, நீ எனக்குத் தருக என்று கேட்பது இழிவு. கேட்ட பின்பு தருபவன் தரமாட்டேன் என்று கூறுவது அதனைக்காட்டிலும் இழிவு. கேளாமலேயே இதைப் பெற்றுக்கொள் என்று கூறுவது உயர்வு. ஆனால் தந்த பொருளை வேண்டாம் என்று மறுத்துக் கூறுவது அதனை விட உயர்ந்தது. மனிதனுக்குரிய இத்தகைய மிகச் சிறந்த பண்புகளை வளர்ப்பது கல்வியே ஆகும். இதே கருத்தைப் பதிவு செய்யும் பாடல் ஒன்று நான்மணிக்கடிகையில் இடம் பெற்றிப்பதை அறியலாம்.

    நீதியை மட்டும் போதிப்பதற்காக எழுந்த இலக்கியங்கள் தவிர்த்த பிற தமிழ் இலக்கியங்களும், ஏதே ஒரு வகையில் வெளிப்படையாகவோ, மறைபொருளாகவோ நீதிக் கருத்துகளை வலியுறுத்துவதை காணலாம். அத்தகைய நூல்களைத் துணையாகக் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பமும் ஏற்படாது என்பதை,
‘எள்ளற் பொருள் திகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருள தறநெறி பன்னூலும்
சேர்தற் பொருள பொருள்”

                          என்ற நான்மணிக்க



டிகை பாடல் மூலம் அறியலாம்.
முடிவுரை
    கல்வி குறித்த குரல்கள் இன்று உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தின் முக்கியத் தேவையாக இருப்பனவற்றுள் முதல் நிலையில் இடம் பெறுவது கல்வியாகும். அத்தயை கல்வியின் சிறப்புகளையும், கல்வி கற்றோர் அடையும் மேன்மையினையும், கல்வியால் ளவிளையும் பயன்கiயும், இலக்கியங்கள் கூறும் கல்வியின் சிறப்புகளையும் கண்டோம்.

அகநானூற்றிலும் நந்திக்கலம்பகத்திலும் அக கோட்பாட்டுப்பொதுமைகள்

ஆ.இராஜ்குமார்
ஆய்வியல் நிறைஞர்
பெரியார் பல்கலைகழகம்
சேலம் 11

 



கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ்குடி. அகம் புறம் என தமிழர் தம் வாழ்வியலை அழகாக வகுத்து வாழ்ந்துள்ளனர். அகம் புறம் என்ற இவ்விரு உணர்ச்சிகளை பாடுப்பொருளாக கொண்டு தமிழ் மொழியில் பல்வேறான இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அகநானூற்றிலும் நந்திக்கலம்பகதிலும் காணப்படும் அக கோட்பாடுகளை இக் கட்டுரையில் காண்போம்.

நந்திக்கலம்பகம்

    தமிழ்மொழியில்  தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். அரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன்  நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்திவர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.
தமிழில் திணைத் கோட்பாடு
    அகம் என்ற சொல்லுக்கு மனம், வீடு, உள்ளிடம், காமஇன்பம், ஆகாயம், உலகம,; எண்ணம், அகப்பொருள், ஆன்மா. மருதம், போன்ற பல பொருள்கள் உள்ளன. மனதில் நிகழும் நிகழ்வு இது இவ்வாறு என்று பிறிடத்தில் கூறப்பெறாமையால் அகத்திணை எனப்படுகிறது.களவு கற்பு என அகத்திணை இருவகைப்படும் கைக்கிளை, பெருந்திணை என  அன்பின் ஐந்திணை முப்பிரிவுகளாக நிகழும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன ஐந்து  திணைகளாகும், ஐந்து திணைகளுக்கு தனித்தனியே நிலங்கள் பகுக்கப்பட்டன.
    தலைமக்களின் காதல் வாழ்க்கை களவு என்று அழைக்கப்படுகிறது. தொல்காப்பியர் களவுக்கு
    “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
    அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
    காமக் கூட்டம் காணும்காலை
    மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
    துறையமை நல்யாழ்துயைமையோர் இயல்பு”
                (தொல் களவியல் நூற் 1)
    காந்தர்வ மனத்துடன ஒத்த மணம் கொண்டது களவு என்று இலக்கணம் வகுக்கிறார்.; இயற்கை புணர்ச்சி, இடந்தலைபாடு, பாங்கி மதியுடன்படுதல், பாங்கற்கூட்டம், பாங்கி கூட்டம் அறத்தொடு நிற்றல,; உடன்போக்கு போன்றவை களவு புணர்ச்சியில் இடம்பெறுவன.
கற்பு வாழ்க்கைக்கு தொல்காப்பியார்,
    கற்பு எனப்படுவது கரணமொடு புணர
    கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
    கொடைக்கு உரி மரபினோர் கொடுப்பகொள்வது”
                    (தொல். கற்பியல் நூற் 1)
கற்பு என்பது கரணத்தோடு (வதுவைச் சடங்கோடு) பொருந்தி தலைவன் கொடுத்தற்குறிய மரபினரிடம் வேண்ட கொடுத்தற்குரிய மரபினையுடையோர் திருமணம் முடித்துக்கொடுப்பது என இலக்கணம் வகுக்கிறார். கற்பு வாழ்க்கையில் பிரிதல், ஊடல், வாயில் வேண்டல் எனும் நிகழ்வு நிகழ்கிறது. ஓதல், தூது, பகை, பரத்தைபிரிவு எனும் நான்கு வகையான பிரிவு சுட்டப்படுகிறது.;, தலைவன் தலைவியிடையே எழும் சிறு பிணக்கு ஊடல் ஆகும். பரத்தை பரிவின் பொருட்டு தலைவன் தலைவியிடம் வாயில் வேண்டல் நிகழ்கிறது.இதன் பொருட்டு நிகழும் நிகழ்வுகள் அகத்துறையாகவும், இதனை கூறுபவர்கள் அகத்தினை கூற்று மாந்தர்களாக சுட்டப்படுகின்றனர். இவையே தமிழின் அகத்திணைக்கோட்பாடுகள் ஆகும்.

கூற்று அடிப்படையில் பொதுமைகள்

    அகநானூற்றில் கூற்று அடிப்படையிலே பாடல்கள் அமைந்துள்ளன இதேப்போல் நந்திக்கலம்பகத்திலும் கூற்று அடிப்படையில் அமைந்துள்ளன இதை,
    ஈட்டு புகழ்நந்தி பாணநீ எங்கையர்தம்
    வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்
    பேய்என்றாள் அன்னை பிறர்நரிஎன் றார்தோழி
    நாய்என்றாள் நீஎன்றேன் நான்.
            (நந்தி.13)
எனும்பாடலில் தலைவி கூற்றாக புகழுடைய நந்தி மன்னன் அனுப்பிய பாணனே, நீ  எமது மங்கையரான பரத்தையர் வீட்டிலிருந்து விடியும்வரை பாடினாய். ஆதைக் கேட்ட என் அன்னை காட்டில் அழும் பேயின் குரல் என்றாள். நான்  மட்டும் நீ பாடிய பாட்டின் ஒலி என்றேன். என்பதிலும்   
    வானுறு மதியை அடைந்ததுன் தட்பம்
        மறிகடல்  புகந்துன் பெருமை
    கானுறு புலியை அடைந்ததுன் சீற்றம்
        கற்பகம் அடைந்ததுன் கொடைகள்
    தேனுறு மலாரள் அரியிடம் புகுந்தள்
        சேந்தழல் அடைந்துன் மேனி
    யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம்
    நந்தியே எந்தை பிரானே            (நந்தி.22)
    நந்தி மன்னவனே, கருணை மிகுந்தவனே, உனது அழகிய முகம் வானில் உள்ள முழுநிலைவைச் சென்றடைந்தது. உனது பெருமை கடல்சூழ்ந்த உலகம் முழுதும் பரவியது. உனது ஒப்பற்ற வீரம் காட்டில் வாழும் புலியைச் சென்றடைந்தது.. உனது கொடைத்தன்மை வறியாது வழங்கும் கற்பகத் தருவை அடைந்தது. இதுவரை உன்னிடத்திருந்த திருமகள் அரியிடம் சேர்ந்துகொண்டாள். உனது வலிமையான உடல் செந்தணலிற் சேர்ந்தது. இந்நிலையில் நானும் எனது வறுமையும் இனி எங்கு போவோம். என்ற தலைவி பாடல் மூலம் அறியமுடிகிறது. மேற்கண்ட தகவல்களின் மூலம் நந்திக்கலம்பகமும் கூற்று அடிப்படையில் அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

துறை அடிப்படையில் பொதுமைகள்

     பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்கள் பெரும்பாலும் துறை அடிப்படியிலே அமைந்துள்ளன.சான்றாக அகநானூற்றில் பகற்குறி, இரவுக்குறி , இடையீடு, வரைவு வேண்டல், அலர், உடன்போக்கு , பிரிவு, செலவு எனும் துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன. இதேப்போல் நந்திகலம்பகத்திலும்,
துயக்குவித் தான்துயில் வாங்குவித் தான்துயில் வித்திவளை
வயக்குவித் தானுள்ளம் வஞ்சனை யால்மலர்க் காவகத்து
முயக்குவித் தான்துகில் வாங்குவித் தான்முனம் நின்றிவளை
முயக்குவித் தான்நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே!
                            (நந்தி.. 63)
தலைவன் இவளைச் சேரும்படி செய்தான். தூக்கத்தைப் போக்கும்படி செய்தான். முன்பொருநாள் தூங்கச்செய்து மயங்குமாறு செய்தான். மலர்ச்சோலையில் இவள் மனதைத் தன்வசமாக்கி வஞ்சனையால் தன்னைக் கூடுமாறு செய்தான். அவன் தந்த ஆடையை வாங்கிக்கொள்ளச் செய்தான். எதிர்நின்று இவளை மயங்கச் செய்தானென நான் உறுதியாகக் கூறுவேன். தோழி அறத்தொடு நிற்கிறாள் என்பதை   நந்திக் கலம்பக பாடல் மூலம் அறியமுடிகிறது.
    தலைவி இவ்வளவு நேரம் சோகமாக இருந்து விட்டு திடிரெண  மகிழ்ச்சியாக இருக்கிறாளே, இதற்கு காரணம் யாது என செவிலித்தாய் தோழியிடம் கேட்க தோழி தேன்நிறைந்த தொண்டை மாலையைப் பார்த்தபின் அதுவே அவளுக்குக்  கைவளையையும், உயிரையும் கொடுத்தது. என்கிறாள் இதை,
நறைகெழு தொண்டையோன் தொண்டை கண்டபின்
இறைகெழு சங்குயிர் இவளுக்கு ஈந்ததே!
                (நந்தி   66)
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. இதேப்போல்  அகநானூற்றில்

‘இன்உயிர் கழிவது ஆயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோய்எனச் செப்பாதிமே’
            (அக-52)
எனும் அகநானூறு பாடலிலும் அறத்தோடு நிற்றல் எனும் துறையில்  அமைந்துள்ளது.
தோழி தலைவியின் துன்பங்களை கண்டிரங்கி, தலைவன் குணங்களைப் பழித்துறைப்பது பல சங்க பாடல்களில் காணமுடிகிறது அதுப்போல் நந்திகலம்பகத்தில்
ஆகிடுக மாமை அணிகெடுக மேனி
        ஆலரிடுக ஆரும் அயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி
        பொருபுணரி சங்கு வளைமென்
நாகிடறு கானல் வளமயிலை ஆளி
        நயபரனும் எங்கள் அளவே
ஏகொடிய னாகஇவை இயையும் வஞ்சி
        இனியுலகில் வாழ்வ துளதோ?
    தலைவியின் பசலை உண்டாகுக உடலழகு கெடுக அயலார் அனைவரும் பழி கூறுக கைவளைகள் கழன்று போகுக ஊரார் புறங்கூறுக. கரையில்  வந்துமோதும் அலையையுடைய கடலில் மென்மையான வெண்சங்கை எடுத்தெறியும் உப்பங்கழிகளைக் கொண்ட மயிலாபுரி ஆள்பவனும் நீதியில் உயர்ந்த தலைவன் எங்களுக்கு மட்டும் கொடியோன்  ஆகுக. இந்நிலைப்பட்ட கொடிபோன்ற தலைவி இனி இவ்வுலகில் வாழ்ந்திருப்பது உன்டோ?. என்று தலைவி நிலை கண்டு தோழி தலைவனை பழித்துரைக்கிறாள். இது இற்பழித்தல் எனும் துறையாகும் மேலும,; இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், பாங்கி மதியுடன்பாடு(  ), பகற்குறி, இரவுக்குறி, வரைவு கடாதல், வரைவு வற்புற்தல், மடலேறுதல், .உடன்போக்கு, பரத்தை பிரிவு ,வாயில் மறுத்தல் எனும் துறைகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

புறச்செய்திகளின் தாக்கம்;

    அகநானூற்றில் மிக அதிகமான புறச்செய்திகள் உவமையாக கூறப்பட்டுள்ளன. பல வரலாற்று செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இதேப்போல் நந்திக்கலம்பகத்திலும் புறச்செய்திகள் அகப்பாடலுக்கு உவமையாக கூறப்பட்டுள்ளன. இதை,   
    “கோட்டை இடித்தகழ் குன்றாக்கிக்
    குன்றகழ் ஆக்கித் தெவ்வர்
    நாட்டை மதிக்கும் காடாக்களிற்
    றான்நந்தி நாட்டினில்”
என்ற பாடலில் கோட்டையை இடித்து அகழியாக்கி அகழியை கோட்டை போல் ஆக்கியவன் நந்திமன்னன். அதுபோன்ற வழியில் தன் மகள் உடன்போக்கு சென்றாளே என செவிலி புலம்புவதாக அமைந்துள்ளது. அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும், ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் அகம் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அகநானூற்றைப்போலவே நந்திக்கலம்பகமும் புறச்செய்திகளை தாங்கிநிற்பதை காணமுடிகிறது.

முடிவுரை

    அகநானூறு சங்கயிலக்கியம், ஆனால் நந்திகலம்பகம் மிக பிற்கால நூல் இரு நுல்களிலும் அககோட்பாடுகள் பொதுமையாகவே இடம்பெற்றுள்ளன. சுட்டி ஒருவர் பெயர் கூறப்பெறார் எனும் விதி மட்டும் மாற்றம் பெற்று, அக மரபை அதிகம் பெற்று அகப்புற கலம்பக இலக்கியமாக நந்திக்கலம்பகம் திகழ்கிறது.



வியாழன், 21 ஜூன், 2018

பாலக்கோடு வட்டார நாட்டுப்புற மருத்துவம்

 
                     பாலக்கோடு   வட்டார நாட்டுப்புற மருத்துவம்


நம் பண்பாட்டைப் போற்றும் எவரும் நம் முன்னோர்களின் பழமையான மருத்துவமுறையைப் போற்றாமல் இருக்கமுடியாது. நாம் ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையாகியும் உடனடி நிவாரணம் கருதியும் மூலிகை மருத்துவத்தைப் புறகணித்ததன் விளைவுதான் இன்றையபுதுமையான நோய்களும் மருந்துகளும் ஏற்படக் காரணமாகும் அதற்கு நாட்டுப்புறமருத்துவம் கொண்டு சரி செய்யும் முறையை இக்கட்டுரையில் காணலாலம்.

பழங்கால மருத்துவம்


உடலில் வலிஇ காயம் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படும் போது அதைதணிக்க முயல்வது ஓவ்வொரு உயிரினத்திற்குமுள்ள பொதுவான இயல்பாகும்.
ஓவ்வொரு உயிரினமும் ஒவ்வொருவிதமான முயற்சியை மேற்கொள்கின்றன உதாரணமாக முத்துச்சிப்பியை எடுத்துக்கொள்வோம் தன் வலியைக் குறைப்பதற்காகசிப்பி மேற்கொள்ளும் ஒரு முயற்சியின் விளைவுதான் முத்தை உற்பத்தி செய்து வளர்ப்பதாகும்.
மற்ற உயிரினங்களிடம் இந்த இயல்பு வெறும் உணர்வுப் பூர்வமாகமட்டுமே காணப்படுகிறது. ஆனால்இ மனிதன் மட்டும்தான் வலிஇ காயம்இ போன்றவற்றைச் சரி செய்யும் அறிவுப்பூர்வமான முயற்சியை மேற்கொள்கிறான்.
உடம்பில் ஏற்பட்டகாயத்தின் வலியைக் குறைக்கவும் அந்தகாயத்தை ஆற்றவும் ஆதிமனிதன் அருகில் கிடந்தபச்சிலையைப் பிடுங்கித் தேய்த்த நாளே மருத்துவத்தின் தொடக்க நாளாகும்.
பின்னர் நாளடைவில் அனுபவப் பூர்வமாக நோய்களைக் கண்டறிந்து அதைப் போக்குவதற்கான பல மூலிகளைத் தெரிந்து கொண்டு நோய்களைப் போக்கியுள்ளான்.
ஒவ்வொருவரும்; காயத்திற்கோஇ விசக்கடிக்கோ இன்னும் பிறநோய்களுக்கான மருத்துவரை நாடமால் வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டோ அல்லது வீட்டிற்கு அருகில் கிடைக்கும் சில செடி கொடிகளைக் கொண்டோ அந்Nhயை நீக்குவர். இதனை கை வைத்தியம் என்கிறனர்.
நாட்டுமருத்துவம் சமையலில்
நாட்டுப்புறமருத்துவத்;தை உற்று நோக்கினால் இயற்கை பொருட்களை மருந்தாக உட்கொள்வதை விட உணவாக உட்கொள்வதைக் காணமுடிகின்றது.
கீரை வகைகள்இ தண்டுகள்இ கசப்புகாய்கறிகள்இ படிமங்கள்இ இஞ்சிஇ மிளகுஇ பூண்டுஇ சுக்கு வெந்தயம் போன்றப் பொருட்களை இயல்பாகவே தினசரி சமையலில் மக்கள் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் நோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன.

கைமருத்துவம்

“பாட்டிஇ
எம்மகனுக்கு சளி பிடிச்சுக்கிட்டு மூக்குல தண்ணியா ஒழுகுது”
“அப்படியா நொச்சி இலையைப் புடுங்கி சட்டியில் போட்டு நல்லா வேக வச்சி நீராவி பிடிக்க சொல்லு சளி ஓடி போயிடும்”
“பாட்டி
பல்லு பயங்கரமா வலிக்குது என்ன செய்ய”
“வெள்ள கொய்யா பழத்தோட இலையை நல்லா மெல்லு பல்லுவலி காணமாபோயிடும்”   
இம்மாதியான பேச்சுகளை உங்கள் வீட்டிலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ கேட்டிருப்பீர்கள் இதைதான் கை வைத்தியம் அல்லது கை மருத்துவம் என்று கூறுவர்.
இம்மருத்துவ முறைகளை முன்னோரிடமிருந்து  தெரிந்து கொண்டவை. வீட்டிற்கு அருகில் கிடைக்கக் கூடியபொருட்களைக் கொண்டு உடனடியாக இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு உரிய நோய்களுக்கு தரப்படுகின்றன.
 கை மருத்துவத்தால் குணமகாத நோய்களுக்கு மருத்துவரையோ பிறமருத்துவ முறைகளையோ நாடுவர். அவ்வகையில் நாட்டுப் புறமக்களால் நடைமுறை வாழ்கையில் பயன்படுத்திவரும் சில மருத்துவ முறைகளை இங்கு காணலாம்.

தலைவலி


ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்குஇ இரண்டு இலவங்கம் சேர்த்து நன்றாக அரைத்து நெற்றியில் பத்தாகப் போட்டால் தலைவலி குணமாகும். வெயிலில் அலைவதால் சிலருக்கு தலையில் நீர்க் கோத்து கடுமையாக தலைவலி ஏற்படும். அப்போது மஞ்சளைத் தணலில் போட்டு கரியாக்கும் போது வெளிவரும் புகையை முகர்ந்தால் நீh ;கோர்வை சரியாகும்.


முடிவளர

    சிலருக்கு திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழும் அவர்கள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி தலையில் தேய்த்து வந்தால் அவ்விடங்களில் முடிவளரும்.


ஜீரணம்

    ஒரு டம்ளர் தண்ணிரில் கரிவேப்பிலைஇ இஞ்சிஇ சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்இநெஞ்சுசளி
    மஞ்சளைத் தணலிட்டு சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும். பின் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்; ஆறும்.
    தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து நெஞ்சில் தடவிவந்தால் சளி குணமாகும்.

பழமொழி உணர்த்தும் மருத்துவம்

    இவைப் போன்று இன்னும் பல மருத்துவ முறைகளை அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படுத்துகினறனர். இம் மருத்துவ முறைகளைப் பழமொழிகளின் வாயிலாகவும் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறும் பழமொழிகள் மக்களால் சாதரணமாக கூறப்படுவதில்லை.
    நோய் உண்டான போதும் கேலியாகப் பேசும் போதும் கூறுகின்றனர் .அவ்வாறான பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்.
    “விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்”   
    சொந்தகாரர்கள் வீட்டிற்கு சென்றால் மூன்று நாட்கள் மட்டுமே தங்க வேண்டும். அதிகநாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது ஒருமருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாகத் தெரிந்துவிடும். இல்லையே மருந்தை மாற்றவேண்டும் என்கிறதுபழமொழி.

    “இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு கொளுத்தவனுக்கு கொள்ளைக் கொடு”
    எள் என்பதால் நல்லசத்துள்ள உணவாகும். உடல் மெலிந்து இருப்பவர்கள் எள் உண்டால் உடல் பெருகும். உடல் பருமனாக இருப்பவர்கள் கொள்ளை உண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து அளவான உடலோடு ஆரோக்கியமாக இருப்பார்கள் என இப்பழமொழி எடுத்துரைக்கிறது.

    பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

   ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்


  அவரைப் பூத்திருக்க சாவோரை கண்டதுண்டோ

  அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாளாம்


  ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

  சனி தோறும் நீராடு


  நோயைக் கட்ட வாயைக் கட்டு


  ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்று நீர் இரண்டும் போக்கும்.

    இதுப் போன்ற பழமொழிகள் அனுபவம்; வாய்ந்த பெரியோர்கள் வாயிலாக வழிவழியாக இன்றும் மக்களின் வழக்கத்தி;ல் நிலைத்து உள்ளது.
    நாட்டுப்புற மக்கள் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டும் வீட்டருகில் வளரும் ஆடு தொடாஇ முடக்கத்தான் கொடிஇ நாயுருவிசெடிஇ வாதனாமரம் இநொச்சிஇ குப்பை மேனி போன்ற எளிதில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டும் வீட்டிலேயே சிக்கனமாக பக்க விளைவு களற்ற மருத்துவத்தைப் பார்த்துக் கை கொள்கின்றனர்.

முடிவுரை


    எண்ணற்ற மருத்துவம் நாட்டுப்புற மக்களிடம் பொதிந்து கிடக்கின்றன. நாட்டுப்புற மக்கள் நோயின் தன்மையையும் அதற்குரிய காரணங்களையும் நோய்குரிய மருந்துகளையும் அறிந்திருந்தனர். எனவே நாட்டுப்புற மருத்துவத்தைப் பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் வாயிலாக மனித இனத்திற்கு தேவையான பல்வேறு மகத்தான அறிவியல் அறிவும்மருத்துவத்தீர்வுகளும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.