பெண்பாற் புலவர்களின் பாடல்களில் பெண்ணிய பார்வை

சங்க இலக்கியமானது அகம், புறம் என்னும் இரு பிரிவினைக் கொண்டதாக உள்ளது. சங்கஇலக்கியத்தை 400க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடல் பாடியு;ளளனர். நாற்பதிற்;கும் மேற்பட்டவர்கள் பெண்பாற் புலவர்களாக இருந்துள்ளனர். நாற்பது பெண்பாற் புலவர்களும் நூற்று எண்பதிற்கும்; மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்கள்;. சங்கயிலக்கிய பெண்பாற் புலவர்களின் பாடலில் பெண்ணிய பார்வையை ஆராய்வோம்.
பெண்ணியப் பார்வை
பெண்ணானவள் பூப்படைவதிலிருந்து முழுமை பெறுகிறாள் என்ற கருத்தானது சங்க இலக்கியத்திலேயே காணப்படுகிறது. கண்ணிப்பெண். குடும்பத்தலைவி, பரத்தை விதவை என்ற நிலையில் பெண்ணை வைத்துள்ளார்கள். பெண்களைஉடல் ரீதியாக அனுகிடும் போக்கு உள்ளது. அவர்களை ஆணின் போக்கிலேயே வைத்துள்ளதை சங்கயிலக்கியத்திலே காணமுடிகிறது.
கற்புநிலை
பெண்ணின் உடல் தூய்மையையும் மனத்தூய்மையையும் பொருட்படுத்தும் நிலையில் கற்பு என்ற சொல் சங்க இலக்கியத்தில் முன்வைக்கப்படுகிறது. கற்பின் நிலையை வைத்து பெண்களை மதிப்பீடும் போக்கு, சங்க இலக்கியத்தில் மிகுதியாக காணப்படுகிறது.
“வேதின வெரிநின்; ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் பள்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரன்அழிந்து
யாங்கு அறிந்தன்று - இவ் அழுங்கல் ஊரெ”
(குறுந். 140, பாலை)
என்ற பாடல் வரிகளால் அறியலாம்.
தலைவியின் காதலர் சுரம் வழியில் நடந்து செல்கிறார். போர் காரணமாகவும், பொருள் தேடுவதன் பொருட்டும், தலைவியை பிரிந்து செல்கிறான். தலைவனுக்காகவும், அவள் வரும் வரை வீட்டில் காத்திருத்தல் கற்பின் அடையாளமாகக் கருதப்பட்டது.
துயரநிலை
பெண்ணானவள் ஒரு ஆண்மகன் வேறுபெண்ணை நாடிச் சென்றாலும் அவன் மீது கோபம் கொள்ளாமல் அவளின் துயரநிலையையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மனதிலேயே துயரத்தை கட்டுப்படுத்தும் நிலை இருந்துள்ளது. ஒரு பெண்ணின் கணவன் பரத்தமை நாடிச்சென்றதை அள்ளுர் நன்;முல்லையார் கூறுவதை,
“பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து
வதுவை அயர்ந்தனை என்ப அஃதுயாம்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றி பெரும் நிற் தகைக்குநர் யாரோ?” (அகநா. 4, மருதம். ப.21)
பிரிந்துச் சென்ற கணவன் பரத்தை வீட்டிற்கு சென்றதை அறிந்த தலைவி பரத்தை வீட்டிற்கே போ உனக்கும் எனக்கும் என்ன உறவு உன்னைத்; தடுப்பார் யார் என்றகிறாள். பிரிந்துச் சென்ற கணவனை ஏதும் செய்யவியலாமல் தன்னுடைய மனதிலே லைத்து துயரமடையும் செயலினை இங்கு காணமுடிகிறது.
பெண்ணின் பிரிவாற்றாமை
சங்ககால பெண்ணானவள் ஆண்மகனை நினைத்து தவிக்கும் நிலை அதிகமாகவே காணப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னை பிரிந்துச்சென்ற கணவனையோ காதலனையோ நினைத்து பிரிவாற்றாமல் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் நிலை மிகுதியாக இருந்துள்ளது. போருக்காக பிரிந்துச் சென்ற கணவனை நினைத்து உண்ணாமலும், தன்னை அழுகுப்படுத்திக் கொள்ளாமலும், உடல்மெலிந்து தலைவனையே நினைத்து உருகும் நிலை சங்ககால பெண்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது, இதனை
“அணிநலம் விதைக்குமார் பசலை அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல் நன்னம்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே” (நற். 304. குறிஞ்சி)
போர் காரணமாக தலைவன் பிரிந்து செல்கிறான். அதனை தலைவி கூறுகையில் என்னைப் பிரிந்தால் நிலமணியின் இடைப்பட்ட பொன்போன்ற என்னுடைய மாந்தளிர் போன்ற என்தன்மை; கெடும். என் அழகை பசலை நோயானது சிதைக்கும் அசுணம் என்கிற விலங்கைப் போல இன்பமும் துன்பமும் மாறிமாறி வரும் நிலையினை தலைவி பலவாறு எடுத்துரைக்கிறாள். பெண்ணின் இடையானது தலைவனை நினைத்து மெல்லியதாகவும் பசலை தோன்றியதால் உடலானது மெலிதாகவும் குறைந்து விடுகின்றது. தலைவியின் பிரிவாற்றாமையானது பல செயல்களில் நிகழ்ந்து வருகின்றதை அறியமுடிகிறது.
பெண் வளர்பு நிலை
சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் வீரம் மிகுந்தவர்களாகவும் தனித்தன்மை மிகுந்தவர்களாகவும் இருந்துள்ளனர். ஆண் புதல்வனை பெற்றது மட்டுமல்லாமல் அவனை வீரம் மிகுந்தவனாக வளர்க்கும் பண்பை பெற்றிருந்தாள்.
“சிற்றில்நல்தூண் பற்றிநின் என்மகன்
யாண்டு; உளனோ எனவினவும் என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓதும்
புலி சேர்ந்து போகிய கல் அளைபோல்
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” (புறநா. 86)
என காவற்பெண்டு தன் பாடலில் சுட்டியுள்ளார். எனது சிறிய இல்லத்தின் தூணைப் பிடித்து நின்றபடி உன் மகன் எங்குள்ளான்? என ஒரு பெண் கேட்கிறாள். அவன் எங்குள்ளானோ யானறியேன் ? ஆயினும் புலி, இருந்து பின்னர்ப்போகிய மலைக்குகை போல, அவனைச் சுமந்து பெற்ற வயிறும் இதோ அவன் போர்க்களத்தில்தான் இருப்பான். என்று கூறுகிறாள்
புதல்வனை பெற்று அவனை வீரமகனாக, வளர்ந்தது மட்டுமில்லாமல் அறமுள்ளவனாகவும் சங்ககால பெண் வளர்த்துள்ளாள். அவள் வயிற்றினை குகை என்றும் போர்க்களத்திலே மகன் இருப்பானென்றும் கூறுகிறாள்.
ஆண்மகனைப் பெற்ற பெண்ணின் இன்பநிலை
சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவனை துய்ப்பதில் மட்டும் இன்பம் கொள்ளாமல் தன் மகனை பெற்ற காரணத்தினாலும். ஆவள் இன்பம் கொண்டாள் என்பதை சங்ககால பெண்களின் மனநிலையை பார்க்கும்போது
“மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கந்தல் முதியோள்சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்றும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தாங்கிய சிதரினும் பலவே”
(திணை-தும்பை: துறை உவகைக் கலுழ்ச்சி பக். 107-108)
என்ற பாடல் வரிகளால் அறியமுடிகிறது.
மீன் உண்ணும் கொக்கின் வெள்ளை இறகினைப்போல நரைத்த கூந்தலை உடையவள் மூதாட்டி அவளுடைய மகன் போர்க்களத்தில் ஆண் யானையைக் கொன்று வென்று தானும் மாண்;டனன், அச்செய்தியைக்கேட்டவள். பெற்ற காலந்தினும் விட பெரு மகிழ்ச்சி கொண்டாள். இன்ப கண்ணீர் உகுத்தாள். அக்கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரின்கண் மழை பெய்தபோது தங்கித் தூங்கித் துளிர்க்கும் நீர்த்துளியினும் மிகுதியாகும்.
தன் புதல்வன் ஆண்யானையை கொன்றதனால் அவள் பெற்ற மகிழ்ச்சியை விட, பெரும்மகிழ்ச்சி அடைந்ததையும் அவள், கண்ணீரின் மிகுந்த உணாக்கி நிலையினை இங்கு காண இயலுகின்றது.
குடும்ப உறவு
சங்ககால பெண்கள்; குடும்பத்தை கோயிலாக நினைத்தனர். குடும்பத்தில் தந்தை நற்றாய், செவிலி, தமர் போன்ற உறவுகள் இணங்கி வாழும் போக்கு காணப்படுகின்றது. தலைவி செய்கின்ற காதல் செயலினை அறிந்த தோழியானவள் அச்செயலை பற்றி செவிலித்தாயிடம் கூறுவாள், அதனை செவிலித்தாய் நற்றாயிடம் கூறுவாள். அந்த நிலையில் குடும்ப உறவானது பிண்ணிய நிலையில் உள்ளதனை அறியமுடிகிறது.
பெண்ணைப் பேசுதல்
பெண்ணின் செயலைப் பற்றி பெண்ணே பேசியுள்ளாள். சங்ககாலத்தில் ஆண்களுக்காக அச்சம் கொள்ளாமல் அவர்களின் உடல் மொழியினைப்பற்றி அவர்களே கூறியுள்ளார்கள். உடலைப்பற்றி சங்ககாலப் பெண்கள் கூறியுள்ளதாலேயே நவீன காலப்பெண்களும் இப்போக்கினைப் பற்றியும், பெண்களைப் பற்றியும்; பேசுகின்றனர்.
“ஆம்பல்குறுநீர் நீர்வேட் பாங்கு இவள்
இடைமுலைக் கிடந்தும், நடுங்கல் ஆனிர்" (குறுந். 178 (நெய்தல்)ப.105
பெண்களைப் பற்றியும் அவர்களின் உடலைப்பற்றியும் அவர்களே பேசும் பாங்கினை இங்கு காணப்படுகிறது.
கைம்மை பெண்கள்
பெண்கள் கணவனை மிகவும் விரும்புகிறவர்கள். அவர்களின் கணவன் போரில் சென்று இறந்துவிட்டால். அப்பெண் கணவன் இறந்த குழியிலேயே அவளும் இறக்க வேண்டும். விரும்பி இச்செயலை செய்தவர்களும் உண்டு. இல்லையெனில் உடல் அர்கையும், ஆடை, அணிகலன், குங்குமம் போன்றவற்றை இழப்பவளாக இப்பெண் காணப்பட்டாள்.
“பெருங்காட்டுப் பண்ணிய கடுங்கோட்டு யாமம்
நுமக்கு அரிதாகுகதில்லை: எமக்கு எம்
பெருந்தொட் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வாள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் நீயும் ஓரற்றே” (திணை: பொதுவியல், துறை: ஆனந்தபையுள்)
கணவன் இறந்த பின்பு சங்க காலத்தில் வாழ்ந்த பெண்கள் கணவனுக்காக மிகவும்; வருத்தமடைகிறாள். நல்ல மணமான நெய் கலவாத நீர்ச்சோறு, எள் துவையல், புளி சேர்த்த வேளைக்கீரை ஆகியவற்றை மீண்டும் உண்டும் படுக்கைக் கல் மேல் படுத்தும், கைம்மை நோன்பிருந்தும்; பெண்கள் இருந்துள்ளனர். புறங்காட்டில் உருவாக்கப்பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட ஈமப்படுக்கை உமக்கு அரிதாக விளங்கலாம். அந்த ஈமத்தீயே எமக்கு இதழ் மலர்ந்த தாமரையின் தண்ணீர்ப் பொய்கை நீர்போல இன்பம் அளிப்பதாகும்.
கணவன் இறந்த ஒரு பெண்ணை கைம்மை நோன்பு மேற்கொள்வது சங்ககாலத்தில் மேலோங்கி இருப்பதை அறிய முடிகின்றது.
முடிவுரை
சங்ககாலத்தில் பெண்பாற் புலவர்கள் தங்களை ஆண் புலவர்கள் குற்றம் குறை கூறியிருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் தங்கள்; கருத்துக்களை வெளிப்படையாக வெளிப்படுத்தும் போக்கு காணப்படுகிறது. பெண்பாற் புலவர்கள் தங்கள் உடல்மொழியினை ; பெண்ணிய உரிமையோடு வலியிறுத்தும் போக்கை மிகுதியாக அறியமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக