சனி, 6 ஜூன், 2020

தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல; தகடூர் நாடு தனி நாடு.

தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல; தகடூர் நாடு தனி நாடு.
1) தமிழ் இலக்கியங்களில் எங்குமே தகடூர் பகுதியை கொங்கு நாடு என்று சொல்லவில்லை
2) தகடூர் நாட்டில் கிடைத்த ஒரு கல்வெட்டிலும் கொங்கு நாடு என்று பதிவாகவில்லை. கல்வெட்டில் தகடூர் நாட்டு தகடூர் என்றே இடம் பெற்றுள்ளது
3)  தமிழ் அறிஞர்கள் சொல்லியுள்ளனர் என்று அதிமேதவிகள் சிலர் வாதம் செய்கின்றனர். அவர்கள் யார் என்று பார்த்தால் 13 ம் நூற்றாண்டுக்கு பின்பு பஞ்சம் பிழைக்க வந்தவர்களாக உள்ளனர். சான்றுகள் வைத்தே முடிவு செய்ய வேண்டும். சான்றுகள் இல்லாமல் சொல்வதை ஏற்க இயலாது அது புலவர் இராசுவா இருந்தாலும் அல்லது மயிலை சீனிவேங்கடசாமி நாயகரா இருந்தாலும். கோவை கிழாராக இருந்தாலும் சான்றுகளே முதன்மை.
3) தகடூர் நாட்டின் மீது இவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்தால் மூன்று காரணம் உள்ளது 1) அரசர் அதியமான் புகழ் 2) தமிழ்நாட்டில் அதிக நடுகற்கள் தருமபுரி கிருஷ்ணாகிரி செங்கம் பகுதியில் உள்ளது அதை எப்படியாவது தமது என்று கூறவேண்டும். 3) பஞ்சம் பிழைக்க தஞ்சம்  அடைந்தவர்களை எப்பாடு பட்டாவது தகடூர் நாட்டின் பூர்வக்குடி என்று நிறுவ வேண்டும் எனபதே
தொடர்ச்சியாக தகடூர் நாட்டை கொங்கு நாடு என்பவர்களுக்கு  எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்
#தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல