வியாழன், 5 நவம்பர், 2020

காதல் தோல்வியில் இருந்து விடுபடும் வழிகள்

 காதல் தோல்வியில் இருந்து விடுபடும் வழிகள். 

காதல் தோல்வியில் இருந்து விடுபடும்  வழிகளை காட்டுவதே முதல் நோக்கம்.

ஆரம்பத்தில் எல்லா காதலுமே மகிழ்ச்சியாக ஆராம்பிக்கும் ஆனால் முடிவோ ரணமாக இருக்கும்.

முதல் பார்வையில் இருந்து மறுபடியும் பார்க்க மாட்டார்களா என்ற ஏக்கமாகட்டும், முதல் பேச்சு மறுபடியும் எப்போது பேசுவார்கள், பேசினால் என்னவெல்லாம் பேசலாம் என்று மனம் சதுராடியதாகட்டும், 

தமக்கு பிடித்த விடயங்கள் பிடிக்காத விடையங்களை அறிந்து பின் குடும்ப உறுப்பினர்கள் பற்றி அறிந்து மெல்ல மெல்ல பேசிய நினைவுகள் பேச பயந்த நினைவுகள், அதற்கு அடுத்த கட்டமாக யாருக்கும் தெரியாமல் வெளியே சந்திப்பு, இன்னும் சில செயல்கள் எல்லாமே செய்யும் போது நல்லாதான் இருக்கும். அப்போது தெரியாது பிற்காலத்தில் நம்மை அணு அணுவாக சிதைக்கபோவது  இந்த நினைவுகள் தான் என்று.

காதல் தோல்வி எதனால் ஏற்படுகிறது.

 காதல் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களே முக்கியமாக உள்ளது 

1)   புரிதல் இல்லாமல் இருப்பது 

 2) அதிக அன்பு காட்டினால் அதை எரிச்சலாக உணருதல் 

3) முன்னுரிமை தராமல் போதல்

சில செயல்களை வெறுப்பாக உணருதல் 

4) திருமண அவசரம்

திருமணம் தள்ளி போட விரும்புதல் 

5) பெற்றவர்களின் பிடிவாதம் 

6) சாதி மதம்

7) இருவரில் ஒருவர் உறுதியாக இல்லாமல் இருப்பது 

8) காதல் வேறு திருமணம் வேறு என நினைத்தல்  பொருள் செல்வம் இல்லாதது 

9) ஒரு திடமான முடிவு இல்லாததால்

10)  தைரியம் இல்லாமை 

11)  உடன் வர மறுத்தல்

12)  மற்றவர் பேச்சை கேட்டு மாறுதல்

13) அதிக சந்தேகம்

என பல்வேறு காரணங்களை கூறலாம். காதல் தோல்வியில் இருந்து விடுபடும் வழிகள் 

1)  சகித்துக்கொள்ளதான் வேண்டும், இதும் கடந்து போகும் என்று உணரவேண்டும்..

2)யாதர்த்த உலகில் பயணிக்க வேண்டும்.  இது போனால் இன்னும் தகுதியான ஒன்று கிடைக்கும் என நம்ப வேண்டும்.

 3) நம்மால் முடியாத காரியங்களை இறைவனிடம் ஒப்படைத்து அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.

4)   முதலில் அந்த நினைவுகளில் மனசு இருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வேறு சில வேலைகளில் மனசை ஈடுபடுத்த வேண்டும்.

5) கஸ்டபட்டு மறக்க நினைக்காதீர்கள் அது முடியாது வலி அதிகமாக இருக்கும்.

6) அவர்களை தொடர்பு கொள்ளவோ தேடவோ செய்யாதீர்கள்.

7) மீண்டும் வருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.

8) அவர்கள் சார்ந்த  எந்த பொருட்களை பயன்படுத்த கூடாது. முடிந்தால் தூக்கி வெளிய வீசுங்கள் இல்லை என்றால் மூட்டை கட்டி எங்காவது ஒரு இடத்தில் வைத்துவிடுங்கள்.

9) உங்கள் வலியை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள் உங்களுக்கு அது வலி மற்றவர்களுக்கு நகைச்சுவை தான் அல்லது கதைதான்.

10)  அடுத்து என்ன என்று மட்டும் யோசிங்கள்.

11)  நல்ல புத்தகங்களை படியுங்கள். 

12) நகைச்சுவை காட்சிகளை பாருங்கள்.

13)  வாட்சப் முகநூல் வழி சோக பாடல்களை பதிவேற்றாதீர்கள்.

15)  உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பாசமாக இருங்கள்.

16)  ஒரே இடத்தில் வேலை செய்வதாக இருந்தால் வேலையை மாற்றிக்கொள்ளுங்கள்.

17) இறைவன் கன்னன் _ ராதை காதலே ஒன்று சேரவில்லை உணருங்கள்.

18)  நீங்கள் மட்டுமல்ல இந்த உலகில் 99%  பேர் காதல் தோல்வியை சந்தித்தவர்கள்தான்.

19)  வரலாற்றில் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் தோல்வி இருந்துள்ளது.

20)  இறைவனை முழுவதுமாக நம்புங்கள்.

21)  திருமணம் வாழவில் பிரியாமல் இப்போதே பிரிந்ததற்கு நன்றி கூறுங்கள் தலைக்கு வந்தது தலைபாகையோட போச்சு என்று நினைத்து கடந்து செல்லுங்கள். 

22)  உங்கள் உயிரை விடும் அளவுக்கு இங்கு யாரும் நல்லவர்கள் இல்லை. நல்லவர்களாக இருந்துயிருந்தால் உங்களை நடுத்தெருவில் விட்டு இருக்கமாட்டார்கள் என்பதை மனதில் பதியுங்கள்.

23) காதல் ஒன்றும் புனிதம் இல்லை காதல் ஒன்றும் கடவுள் இல்லை அது சாதரண உணர்வு. கொஞ்சகாலம் சென்றால் அது வேறு ஒருவர்மீது வரும் இது உலக உண்மை உணருங்கள். 

24) காதல் தோல்விக்காக அழும் ஆளவிற்கு  நேரத்தை செலவிடுவதற்கு உங்கள் பொருளாதாரத்தை கண்திறந்து பாருங்கள்.  உங்களிடம் பொருளாதாரம் உள்ளதா நீங்கள் எந்த அளவில் உள்ளீர்கள் என்று யோசியுங்கள். 

25) எல்லாம் நம்மைக்கே என்று நினைத்து கடந்து செல்லுங்கள். 

26)  எத்தனைபேர் அறிவுரை கூறினாலும் நீங்களாகவே தான் மாற  வேண்டும். கடந்து செல்ல வேண்டும்.

மேற்கண்ட செயல்களை செய்து காதல் தோல்வியில் இருந்து விடுபடுங்கள்.

 நன்றி ஆ இராஜ்குமார்.

 

சனி, 6 ஜூன், 2020

தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல; தகடூர் நாடு தனி நாடு.

தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல; தகடூர் நாடு தனி நாடு.
1) தமிழ் இலக்கியங்களில் எங்குமே தகடூர் பகுதியை கொங்கு நாடு என்று சொல்லவில்லை
2) தகடூர் நாட்டில் கிடைத்த ஒரு கல்வெட்டிலும் கொங்கு நாடு என்று பதிவாகவில்லை. கல்வெட்டில் தகடூர் நாட்டு தகடூர் என்றே இடம் பெற்றுள்ளது
3)  தமிழ் அறிஞர்கள் சொல்லியுள்ளனர் என்று அதிமேதவிகள் சிலர் வாதம் செய்கின்றனர். அவர்கள் யார் என்று பார்த்தால் 13 ம் நூற்றாண்டுக்கு பின்பு பஞ்சம் பிழைக்க வந்தவர்களாக உள்ளனர். சான்றுகள் வைத்தே முடிவு செய்ய வேண்டும். சான்றுகள் இல்லாமல் சொல்வதை ஏற்க இயலாது அது புலவர் இராசுவா இருந்தாலும் அல்லது மயிலை சீனிவேங்கடசாமி நாயகரா இருந்தாலும். கோவை கிழாராக இருந்தாலும் சான்றுகளே முதன்மை.
3) தகடூர் நாட்டின் மீது இவர்களுக்கு என்ன தேவை என்று பார்த்தால் மூன்று காரணம் உள்ளது 1) அரசர் அதியமான் புகழ் 2) தமிழ்நாட்டில் அதிக நடுகற்கள் தருமபுரி கிருஷ்ணாகிரி செங்கம் பகுதியில் உள்ளது அதை எப்படியாவது தமது என்று கூறவேண்டும். 3) பஞ்சம் பிழைக்க தஞ்சம்  அடைந்தவர்களை எப்பாடு பட்டாவது தகடூர் நாட்டின் பூர்வக்குடி என்று நிறுவ வேண்டும் எனபதே
தொடர்ச்சியாக தகடூர் நாட்டை கொங்கு நாடு என்பவர்களுக்கு  எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்
#தகடூர் நாடு கொங்கு நாடு அல்ல