சனி, 24 ஏப்ரல், 2021

தமிழின் அகத்தினை மரபுகள்

ஆ.இராஜ்குமார்  ஆய்வியல் நிறைஞர்.   தருமபுரி 


மக்கள் அனைவருக்கும் பொதுவாக பிடித்த ஒன்று என்றால் அது காதல் தான், அகம் தான். பழந்தமிழரும் அளவுகடந்த மகிழ்ச்சியோடு அக வாழ்க்கையை அழகாக வாழ்ந்துள்ளதை சங்கயிலக்கியம் வாயிலாக அறியமுடிகிறது. அகவிலக்கியத்தைப் படைத்தது தமிழினம் பெற்றிருந்த தனி மனக்கூறு அது, அது நாம் காணுதற்கு உரியது.  தமிழ்ச் சமுதாயம் அகத்திணைக்குத் தளமிட்டது. அவ்வகையில் தமிழரின் அகத்தினை மரபுகளை காண்போம்.   

காதல் நினைப்புகள்:

      தலைவனது பிரிவுகளால் தோழி தலைவியை ஆற்றுவாள், சிலபோது தலைவியும் தானே ஆற்றியிருப்பாள்.  புpரிந்த பேரன்பன் அயல்நாட்டில் நெடுநாள் தங்கிவிட்டான்.  தங்கினாலோ, ஆண்டு அவன் கண்முன படும் இன்பக் காட்சிகள் வீட்டை நிளையும்பழ அவனைத் தூண்டும்.  தூண்டும் என்பது தலைவி தோழியரின் நம்பிக்கை.  இந்நம்பிக்கை இயற்கையானது, காதலை நினைப்பிக்கும் என்ற கருத்து, மரபாகத் தமிழினம் முழுவதும் ஒடிவருதலின் தொல்காப்பியர்,

           “அன்புறு தகுந இறைச்சியுட் சுட்டலும்

           வன்புறை யாகும் வருந்திய பொழுதே”   (தொல்.1176)

ஏன்று ஒரு நூற்பா வடிவில்யாத்க் காட்டினார்.  இயற்கையுள் புலனின்பம் காணும் இனவுள்ளத்தை இலக்கணப்படுத்தினார்.  தோழி ஆற்றுவித்தல்.  தலைவி ஆற்றுவித்தல் என்பது படக்கூறல் என்னும் துறைகள்மேல் எழுந்த நூற்றுக்கு மேலான பாடல்களில் நாம் காண்பது என்ன?  ஆண்யானை தன் மனைவியாகிய பிடியின் நாவறட்சயைக் காண்கிறது யாமரத்தைத் தன் கொம்பாற் குத்திப பட்டையை எடுக்கின்றது அதுவோ நீர்ப்பசையற்ற பட்டையை என் செய்ய வல்லது களிறு?  புpடியின் வருத்தத்தைத் தீர்க்க முழயவில்லையே என்று தானும் வருந்துகின்றது.  புhலைநிலத்தில் இந்த ஆண் யானையின் அன்பைக் காணும் நம் காதலர் என் வருத்தத்தைத் தீர்க்க வேண்டும் என்று எண்ணமாட்டாரா?

           “மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்

           உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது

           வேண்ணார் கொண்டு கைசுவைத் தணணாந்து

           அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்

           அத்த நீளிடை அழப்பிரிந்தோரே” (குநற். 307)p

          “கார்பெயல் செய்த காமர் காலை,

          மடப்பிணை தழீஇய மாவெருத் திரலை

          கண்வர் வரிநிழல் வதியும் 

          தண்படு காணமும் தவிர்ந்தனம் செலவே”   (நற். 256)

என்ற பாடலின் வரிமூலம் ஒரு தலைவனின் முடிவு, காதலன் பிரிவதை முன்னுணர்ந்த தலைவி என்னையும் உடன் கூட்டிக்கொண்டு செல்லுக என்றாள்.  சேல்லும் வழியில, கிளிக்காதலியே, காடு, உண்டு, தண்மையில்லை ஆறு உண்டு, நீரில்லை மரம் உண்டு நிழலில்லை.  அன்ன வெங்கானத் திடையே நீவரலமா?  என்று நயமாக மறுத்தான் தலைவன்.

          “அணையரும் வெம்மைய காடெனக் கூறுவீர்

          கணைகழி கல்லாத கல்பிறங் காரிடைப் 

          பணையெருந் தொழிலேற்றின் பின்னர்ப்

          பிணையுங் காணிரோ?  பிரியுமோ அவையே”  (கலி. 20)

     நல்லது அக்கடுங்காட்டின் கண், ஐய, ஒருகாளை நிற்கவும் அதனைப் பிரியாதே ஒரு பசு நிற்கவும் கண்டதில்லையா?  காடு வெம்மை என்பதற்காக அவை பிரிந்து நிற்கின்றனவா?  ஏன இணைபிரியா நிலையை நினைவூட்டுகின்றாள்.  இயற்கையிலிருந்து காதற் காட்சியை எடுத்து மொழிகின்றாள் தலைவி.

     குணவன் வருவேன் வருவேன் என்று குறித்த பருவத்து வந்தானல்லன்.  அவன் தாழ்த்து வருவதற்காகப் பருவம் தாழ்த்து வருமா?  பருவவரவுகண்டு மனமகிழ்ந்தாள் மனைவி.  இதோ விடியற்காலை வருவார்.  இல்லை, இல்லை அதோ பகற்காலத்து வந்து விடுவார்.  இல்லை, இல்லை: என இவ்வாறு அவள் பேதையுள்ளம் ஏங்கியேங்கி அமைதியடைந்தது “யாண்டு உளர் கொல்லோ.  தோழி, ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே”  என்று தோழியிடம் புலம்பினாள்.

          “புன்புறப் பெடையொடு பயிரி இன்பறவு

           இமைக்கண் ஏதாகின்று” (குறுந். 285)

     அகத்து எழும் பால்வேட்கையைப் புறத்தே கணவலனுக்குங் கூடக் காட்டாது ஒளித்துக் கொள்ளும் நிறையுடையது பெண் பிறவி என்பர்.  புறத்துப் புலனாகாது ஒடு:க்கிக் கொண்டாலும், காதற் கலவைகளைக் கண்ணுறும் போது, இளைய உள்ளத்தைக் காமத்தீ கதுவவே செய்யும்.  இது நிறையுடைப் பெண்ணிற்கும் விலக்கன்று.  தலைவியின் வீட்டில் புறாக்கள் வளர்கின்றன.  பாரிப்பருவம் வந்ததும், ஆண்புறா இன்பக்குரல் எழுப்புகின்றது இன்னொலி கேட்ட பெண்புறா விரைந்தோழ வந்து அருகணைகின்றது.  குறித்த தட்டின் பத்தைப் புறா அடையக் காண்கின்றாள் வீட்டுத் தலைவி, தனித்துத் திரிந்த இவை நொடிப் பொழுதில் என்னாயின, என்ன இன்பம் பெற்றுவிட்டன.  ஏன்று வியந்து விம்மி ஏங்குகின்றாள்.  புறாக்கூடல் புறாக்கூடல் அவளின் நிறை நெஞ்சைப் பொத்துவிட்டது.  பொருறீட்டச் செல்லும் கணவன் போகும் வழியில் ஆண்புறாக்களின் அழைப்புக் குரல்களைக் கேட்பான் அவை பெண்புறாக்களை விழைந்து பயிருகின்றன என்று உணர்வான் அப்போது என்னை நினைவான், வேற்றூரில் தங்கான், விரைந்து மீள்வான் என்று ஒருதலைவி சொல்லிக் கொள்கின்றாள் (குறுந். 79) புறாவின் புணர்குரல் கேட்டின், தமிழினத்தின் இருபாலர்களும் காதற் கலக்கம் கொள்வார்கள் என்று இப்பாடல்களால் நாம் அறியலாம்.

இடந்தலைப்பாடு:

     தற்செயலாக ஒருநாள் கண்ட இருவர உள்ளம் புணர்ந்தனர்.  காதலராயினர் அடங்கிய வேட்கை பெருகிற்று,  முதல்நாள் கண்டவிடத்தே இன்றும் காணலாம் என்ற நம்பிக்கையோடு தலைவன் தானே அவ்விடம் செல்கின்றான்.  ஆராக் காதலுடைய தலைவியும் அவனுக்கு முன்னரே வந்து நிற்கின்றாள்.  ஆவள் காதற் பெருக்கை உணர்ந்த தலைவன், “ஆடலும் தொடுத்தலும் செய்யாது தனித்து நிற்கும் நீ யாரோ, உனக்கு என் வணக்கம், கண்டவர் கண்ணைப் பறிக்கும் அழகியே!  கடல் வாழ் தெய்வமோ நீ?”

           “யாரை யோநிற் றொழுதனம் வினவுதும்

           குண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் 

           பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ”

                                     (நற். 155)      

என்றப் பாடல் வரிகளின் மூலம் இடந்தலைப்பாடு பற்றி விவரிக்கிறது.  இதன்மூலம் அன்புக் காமம் ஆகாது.  காதலர்கள் புணர்வு விருப்பமின்றியும் கண்டு கொள்வார் காணும்போதே புணர்வு மேற்கொள்ளார் என்பது உயர்ந்த காதலாகும்.

பாங்கற் கூட்டம்:

     இடந்தலைப் பாட்டின் பின்னர், நண்பன் தலைவனைக் காண்கின்றான்:  முகச்சோர்வைக் கண்டு இரவெல்லாம் உறக்கமில்லையா என்று பொதுப்படக் கேட்கின்றான்.  காமத்தைப் பற்றி வெளிப்படையாக உரையாடல் ஆண் நண்பர்களின் மனக்கூறு உறக்கவில்லையோ என்ற வினாவுக்கு ஒரு குறச்சிறுமியின் தண்ணீர் நெஞ்சுரத்தை அவித்துவிட்டது.

          “சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்

            நீரோ ரன்ன சாயல்

            தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.”  (குறுந். 280)                      

இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளாக அன்பன் கருதுவான்.  போர்க்களம் புக்குப் புண்படாத நாளெல்லாம் புறங்கொடுத்த நாளாக மறவன் கருதுவான்.  அகம் புகுந்தவளின் மெல்லிய ஆகத்தை மேவாத நாளெல்லாம் வாழ்நாளாகக் காதலன் கருதுவான்.

தோழியிற் புணர்ச்சி:

     சங்க இலக்கியத்து 882 களவுப் பாடல்கள் உள.  இவற்றுள் 40 பாடல்களே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் என்ற மூன்று வகைக்கும் உரியன.  எஞ்சிய 842 பாடல் 95 விழுக்காடு – தோழியிற்புணர்ச்சி என்னும் ஒரு வகைக்கே காதலர்களின் களவொழுக்கம் நீளாது என்பதும் ஐந்திணை இலக்கியப் படைப்புக்குத் தோழி என்னும் ஆள் (பாத்திரம்) இன்றியமையாதவள் என்பதும்.

தோறியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம் தோழியின் தொடர்புக்குப் பின நிகழும் காதற் செய்திகள் அளவில.  ஆவற்றையெல்லாம் இங்குக்கூறப் புகுதல் மிகையும் குறையுமாம், வேண்டுமளவே விளம்புவல்.

     காதலியைத் தற்செயலாக எவ்வளவு நாள் காண முடியும் பாங்கன் எவ்வளவு உதவி செய்வான்?  நினைத்த இடமெல்லாம் சுற்றித்திரியும போக்குரிமை ஆடவர்க்குத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உண்டு.  அன்ன உரிமை குலமகளிர்க்கும் கமரியர்க்கும் இல்லை.

           “யாயே கண்ணினும் கடுங்கா தலளே

           ஏந்தையும் நிலனுறப் பொறா அன் சீறடி சிவப்ப

           எவனில குறுமகள் இயங்கதி என்னும்” (அக. 12)

          “காப்பும் பூட்டிசின் கடையும் போகலை

          பேதை யல்லை மேதையங் குறுமகள்” (அக. 7)

     இரவும் பகலும் தாய் தந்தையின் கடுங்காப்புக்கு இல்லக் குமரியரை உள்ளாக்குவது தமிழ் நாகரிகம் “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” எனச் சிப்பதிகாரமும், “கன்னிக் காவலும் கடியிற் காவலும் விலைமகளிர்க்கு இல்லை” என மணிமேகலைக் காப்பியமும் மொழிதல் காண்க.  ஒருகால் பெற்றோர் இசைவு பெற்று வெளிச் செல்லினும் விடாது தோழியும் உடன செல்வாள்.

                   “யாமே பிரிவின் றியைந்த துவரா நட்பின்

           இருதலைப்புள்ளின் ஒருயி ரம்மே” (அகம். 1

     இதன் மூலம் தோழியிற் புணர்ச்சி நிலையினை பல்வேறு வகையில் எடுத்தியம்புகின்றன. அகமனத்தைக் காண்பதற்கு ஒருவழி போதென்று தோழிக்கு எழுவழி கூறுவர் தொல்காப்பியர்.  அவையான:

1. புதிய மணம், 2. புதியகாளை, 3. புதிய ஒழுக்கம், 4. உணவில் மனம் செல்லாமை, 5. சேயலை மறைத்தல், 6. தனியே செல்லல்,  7. தனியே இருத்தல.  போன்றவையாகும்.

முடிவுரை:


     மேலே கூறப்பட்டச் செய்திகள் மூலம் அகத்திணை என்பது ஒரு மனிதனின் உள்ளத்தில் எழும்பும் எண்ணங்கள் செயல்பாடுகள் அன்புக் காதல் காமம் போன்றச் செயல்பாடுகளை விவரித்து விளக்கமாக கூறுகின்றன.  மேலும் அகத்திணை ஒழுக்கம், அன்பின் ஐந்திணைக்குரிய ஒழுக்கம், களவு நெறிபாடு, தலைவன், தலைவி, தோழி இவர்களுக்கான நிலைப்பாடுகள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் அகத்திணைச் செய்தி.  தோல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைப் பற்றிய கூறுகள்.  போன்றவற்றின் மூலம் அகத்திணையின் நிலைப்பாடுகள் நமக்கு இன்றியமையாததாக இருக்கின்றன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக