சனி, 24 ஏப்ரல், 2021

வன்னியர் வாழ்வியல் சடங்குகள்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி   



  தமிழின மக்கள் எப்பொழுதும் தம் பண்பாட்டோடு இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பண்பாடு மிகவும் பழமைவாய்ந்தது. நாட்டுப்புற அடிப்படையில்  இவர்களின் வாழ்க்கைமுறைகளும் சடங்குமுறைகளும் இயற்கை முறையில் ஒன்றோடொன்று இணைந்ததாக உள்ளது.

சடங்குமுறைகள்

தமிழின மக்களின் சடங்குமுறைகளைப் பார்த்தல் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு வகையான சடங்குமுறைகளைக்  கையாளுகின்றனர்.


பிறப்புச்சடங்கு, பூப்புச்சடங்கு, திருமணச்சடங்கு, வேளாண் சடங்கு, இறப்புச்சடங்கு போன்ற சடங்குமுறைகளின் மூலம் அவர்களின் பண்பாடுகளை அறிய முடிகின்றது. பல்வேறு சடங்குகளிலும் வெவ்வேறான வேறுபாடுகள்  இருப்பதைக் காண முடிகின்றது.


பிறப்புச்சடங்கு

குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே தாய் வயிற்றில் இருக்கும்பொழுதே தாய்க்கு பலவகையான சடங்குமுறைகள் நிகழ்த்தப்பட்டுகிறது


தாய்மை அடைந்து ஏழு மாதம் ஆன பின்பு அப்பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்துவரவேண்டும் என்பதற்காக கணவன் வீட்டில் உள்ளவர்கள் பெண் வீட்டிற்கு செல்வார்கள்.


பெண்ணை அலங்காரம் செய்து புத்தாடை அணிவித்து தலை நிறைய பூ வைத்து கை நிறைய வளையல் அணிவித்து, எல்லோரும் சந்தனம் பூசுவார்கள்.


சந்தனம் பூசுவதனால் அப்பெண் மனம் குளிர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை  பூவை தலையைச் சுற்றி பின்னே போடுவார்கள். அப்பெண் மீது கண்படும் கரைந்து போகும் என்பது அவர்கள் நம்பிக்கையாக உள்ளது.


சடங்குகள்  முடிந்தபின்பு  அப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். குழந்தை பிறந்ததும் ஏழு நாட்களுக்குப் பிறகு மருத்தவமனையிலிருந்து தலைக்கு குளிக்க வைத்து வீட்டிற்கு அழைத்து வருவர்.


குழந்தைக்கு ஆரத்தி எடுப்பார்கள். குழந்தைக்கு ஒரு காலில் கருப்பு கயிரைக் கட்டிவிடுவார்கள். கால்களில் வசம்பு பொட்டை வைப்பார்கள். ஒரு காலின் பாதத்தில் அப்பொட்டை இடுவார்கள் அதேபோல்  உள்ளங்கையிலும்  பொட்டு இடுவார்கள் இது போன்ற சடங்குகள் தமிழின மக்களிடையேயும் பின்பற்றபடுகிறது.


பூப்புச்சடங்குகள்

வன்னியர்களிடேயே பூப்புச்சடங்குகளும் நிகழ்த்தப்பட்டு வருகிறது பெண் பூப்படைந்தவுடன் அவளை வீட்டின் உள்ளே வைக்க மாட்டார்கள்.


பூப்படைந்தது தெரிந்தவுடன் பெண்ணை வெளியே உட்காரவைத்து வாழைப்பழம், பசுவின் சிறுநீர்,;  நல்லெண்ணய் மூன்று சொட்டு கொடுப்பார்கள்.


தாய்மாமனை வரவழைத்து தென்னை ஒலை மட்டுமல்லாது வேறுசில ஒலைகளையும்   தைத்து கூடாரம் போல் அமைப்பர்.


அப் பெண்ணை அக் கூடாரத்தில் அமரச்செய்து அரிவாள் எலும்மிச்சைபழம்  போன்ற பொருட்களைக்  கொடுப்பார்கள். அவள் பயன்படுத்திய ஆடைகளை உடுத்த விட மாட்டார்கள்.


வண்ணானுக்கு தகவல் அனுப்பி அவனை வரவழைத்து  ஆடையைக் கொடுப்பார்கள். அந்தப் பெண்ணை ஏழுநாள் அல்லது பதினொரு நாள்  வெளியே வைப்பார்.


விழா எடுத்தல்

ஏழு அல்லது பதினொரு நாள் முடிந்தபின்பு அப்பெண்ணை அலங்கரித்து மாமன் சீர்வரிசையோடு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்த்துவர். மாலை, புது புடவை போன்ற சீர்வரிசைகளைத் தாய்மாமன் வீட்டார் மட்டுமே செய்வார்கள்.


விழா நடக்கின்ற இடத்திற்குப் பெண்ணை அழைத்துச்சென்று சந்தனம் வைப்பார்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து சடங்குமுறைகளைச் செய்பவர்கள் சடங்கு செய்த பெண்கள் அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுத்து அனுப்புவது இவர்களது வழக்கம்.


திருமணச்சடங்கு

ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதாக நிச்சயித்து இருந்தால், மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டார் இருவரும் முதலில் பேசிக் கொள்வார்கள்.


நிச்சயதார்த்தம் செய்ய உறவினர்கள்; அனைவரையும் அழைத்து மாப்பிள்ளைக்கு பெண் வீட்டாரும் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டாரும் புத்தாடை தங்க மோதிரம் எடுத்துகொடுப்பார்கள்.


இருவரும் அம்மோதிரத்தை உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும் மாற்றிக்கொள்வர்.


திருமணம் நடத்துதல்


திருமணம் நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்பே அத்தை வீட்டாரும் மாமன் வீட்டாரும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்துச் சென்று நலங்கு வைப்பார்கள். திருமணத்திற்கு மூன்று  அல்லது நாள் முன்பிருந்து நலங்கு வைக்கப்படும்.


அப்போது புத்தாடையினையும் எடுத்துக் கொடுத்து பலகார வகைகளையும் செய்து சாப்பிட வைத்த பின்பே அனுப்புவார்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்தினம் இரவு பெண் அழைப்பு நடைபெறும்.


பெண் வீட்டார் பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு வருவார்கள். பந்தலுக்குள் வரும்பொழுது பெண்ணிடம் ஒரு பாத்திரத்தில் விளக்கைக் கொடுத்து அதனை ஏற்றி அணையாமல்; மணவறைக்கு எடுத்துச் செல்ல சொல்வார்கள். திருமணத்தன்று விடியகாலை பெண்ணையும் மாப்பிள்ளையும் அதிகாலையிலே எழுப்பி மணநலங்கு வைப்பார்கள்.

திருமணத்தில் அவரவர் தாய்மாமன் நெற்றியில் பட்டம் கட்டுவார்கள். பெண், மாப்பிள்ளை இருவரின் கையிலும் பிராமணர் உப்பை வைப்பர், பால் ஊற்றுவார்கள்,; இதை தாரை வார்த்தல் என்பர் பெண்ணையும் மாப்பிள்ளையும் அக்கினியைச் சுற்றி வலம் வரச்செய்வார்கள். பெண்ணின் காலில் மெட்டி என்கிற அணிகலனை மாப்பிள்ளை அணிவிப்பான்.


பெண்ணை வெளியே அழைத்துச் சென்று அருந்ததி தெரிகிறதா எனக் கேட்பார்கள். பெண்ணையும் மாப்பிள்ளையையும் பெண் வீட்டிற்;கு அழைத்துச்சென்று பால், பழம் கொடுப்பார்கள்.


மூன்று நாட்கள் பெண் வீட்டிலேயே மாப்பிள்ளை பெண் இருவரும் இருப்பார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் விருந்து வைத்து மணமக்களை அனுப்பி வைப்பார்கள்.


மூன்று மாதத்திற்கு பிறகு பெண்ணிற்கு தாலி மாற்றும்  சடங்கு  நடைபெறும். கட்டிய தாலியை அவிழ்த்து வேறு மாற்றுவர்.


வேளாண் சடங்குகள்

வேளாண் செய்யும் மக்களிடையே பல்வேறான சடங்குமுறைகள் காணப்படுகின்றன. நெல் விதைத்தல் போன்ற வேளாண் பயிர்களைச் செய்யும்பொழுது சில சடங்குகள் செய்யப்படும்.


நெல் விதைக்கும் பொழுது மண்ணில் ஒரு பிள்ளையார் செய்து அதன்மீது அருகம்பில்லை செருகி வைப்பார்கள். விநாயகருக்கு மஞ்சள் குங்குமம்  பூ வைப்பார்கள்.


அரிசியையும் சர்க்கரையையும் கலந்து அனைவருக்கும் கொடுப்பார்கள் பின்பு நெல்லினை விதைப்பார்கள்.


கேழ்வரகு, கம்பு, நெல் போன்ற பயிர்கள் மேலே; நோக்கி வளர்வதால் அதனை மேல்நோக்கு இருக்கின்ற தினங்களில்  நடுவார்கள்.


கிழங்கு, கடலை, மஞ்சள் போன்ற பயிர்கள்  மண்ணுக்கு அடியில் வளர்வதால் கிழ்நோக்கு தினத்தன்று நடுவார்கள்.


எள் போன்;ற பயிரினை அறுவடை செய்யும் பொழுது ஒரு எலும்பிச்சையை நான்காக அறுத்து குங்குமம் பூசி நான்கு மூளைகளுக்கும் போடுவார்கள்.


அறுவடை செய்த பின்பு ஓரிடத்தில் சாணைப் போடுவார்கள். அங்கே கத்தி, எழும்புத் துண்டு, கரித்துண்டு, வேப்பிலை போன்றவற்றை  வைப்பார்கள். இதனை இவர்கள் சடங்குமுறைகளாக வைத்துள்ளார்கள்


இறப்புச்சடங்கு

ஒருவர் இறந்த செய்தியினை இறந்தவரின் உறவினர்களுக்கு கதவல் சொல்லி அனுப்புவர் உறவினர்கள் வந்தபிறகு இறந்தவரை கிழக்கு மேற்காக படுக்க வைப்பர் கைகளில் உள்ள இரண்டு பெருவிரல் காலின் பெருவிரல் இரண்டையும் சோர்த்துக் கட்டுவார்கள். தேங்காய், ஊதுபத்தி,போன்றவை வைத்து பூசை செய்வார்கள். காலின் அடியில் ஒருபடி நெல் வைப்பார்கள். வெற்றிலை அரைத்து வாயில்போட்டு வாய்கட்டு கட்டுவார்கள்.


இறந்த ஒருவரின் உடலைப் புதைக்கும் பொழுதும், எரிக்கும் பொழுதும் பல சடங்குகளைச் செய்கின்றனர்.


பிணத்தைப் புதைக்கும் முன்பு உறவினர்களில் பங்காளிகளை மட்டும் அழைத்து அவர்கள் மீது  தண்ணீர் ஊற்றி   மாலையினைப் போட்டு பிணத்தினைச் சுற்றிவரச் சொல்வார்கள்.


பிணத்தின் மீது மஞ்சள் பூசி தண்ணீரால் பிணத்தைக் குளிப்பாட்டி நெற்றியில் ஒரு ரூபாயை வைப்பார்கள்.


பிணத்தை எடுத்துச்செல்லும் பொழுது பெண்கள் சுடுகாட்டிற்குச்  செல்லகூடாது என்று அவர்களை அழைத்துச்செல்ல மாட்டார்கள்.


பிணத்தைக் குழியிலிட்டு உப்பைக் கொட்டுவார்கள்.  பிணத்தின் ஆடைகளையும் அக்குழியில்  போட்டு புதைத்து விடுவார்கள். புதைத்த பின்பு குழியின் மேல் மூன்று கல்லை வைத்து பூஜை செய்வார்கள்.


அதன்பின் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். மூன்று நாள் அல்லது பதினொரு நாளைக்கு  நீர்நிலைக்குச் சென்று இறந்தவரின் மகன் முடிநீக்கி கொள்வார். எள், சோறு படையலிட்டு நீரில் வாலை இலையை வைத்து கரைப்பார். விளக்கை வைத்து அனுப்பிவிடுவர். அது அணையாமல் செல்லும் சடங்கு முறைகளை நிகழ்த்துவர்.


முடிவுரை


இவ்வகையான சடங்குமுறைகள் வெவ்வேறு இனங்களில் வெவ்வேறாக நடந்துவந்தாலும் வன்னியர் இனத்தில் மேற்கணடவாறு   நடைபெறுகின்றது. வன்னியர் உட் பிரிவுக்குள் திருமணச்சடங்கும். பிறப்புச்சடங்கும், பூப்புச்சடங்கும் பல மாறுதல்களுடன் காணப்படுகின்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக