புதன், 28 ஏப்ரல், 2021

சங்ககால சிறுபாணர்கள் வாழ்வியல்

  ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி  



சிறிய யாழினை (வாசிப்பவர் பாணர்) உடையவர் சிறுபாணர் என்று அழைக்கப்படுகின்றனர்.


“இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ

-(சிறுபா – (35) )- 1


இவ்வரியின் மூலம் சிறிய யாழைக் கையில் வைத்து யாழ் இசைக்கும் பாணர்யின் சிறுபாணர்கள் என சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடுவதைக் காணலாம்.


பாணர்களின் இசைக்கருவிகள் : -


பெரிய யாழ், சிறியயாழ் மற்றும் யாழினைத் தவிர தாடாரி, முழவு, ஆகுளி, பாண்டில், கொம்பு, நெடுவாங்கியம், தூம்பு, சூழல், தட்டை, எல்லரி, பதலை, பறை, துடி ஆகிய இசைக்கருவிகளையும் பாணர்கள் பெற்றிருந்தனர்.


இந்த இசைகருவிகளை நிகழ்த்து கலையில் ஈடுபட்ட பாணர்களே கைக்கொண்டிருந்தனர். கலைகளை நிகழ்த்தும் போது அவ்விசைக் கருவிகளை அவர்கள் இசைத்துள்ளனர்.


இந்த இசைக்கருவிகளை எவ்வாறு இசைத்தார்கள் என்பதையும் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.


பெரு – (11, 19)  - 2


     சிறு – 30    - 3


பாணர்களின் வகைகள் : -


பாணர்கள் மூன்று பிரிவினராக பிரிக்கப்படுகின்றனர் இசைக்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என குறிப்பிடுவர். வாய்ப்பாட்டுப் பாடி இசையை வளர்த்தவர்கள் யாழ்ப்பாணர்கள் என்றும், யாழின் மூலமாக இசையைப் பாதுகாத்தவர்கள் இசைப்பாணர்கள் என்றும், (மண்டை எனப்படும் திருவோடு கையில் ஏந்தி இசையை வளர்த்தவர்கள் மண்டைப்பாணர் எனவும் குறிப்பிடுகின்றனர்.


பாணனின் நிலை : -


பொன்னால் செய்யப்பட்ட நீண்ட கம்பியைப் போன்று குற்றம் தீர்ந்த நரம்பிலிருந்து இனிய ஓசையை எழுப்பும் சிறிய யாழை தனது இடப்புறமாக வைத்துக் கொண்டுள்ளான பாலையில் இசைக்கும் பண்ணாகிய நைவளம் எனப்படும். நட்டபாடை பண்ணைப் பாடி இசைக்கும் முறையறிந்து இசைத்தான். அவனது இசைகேட்டுப் பரிசு வழங்கக் கூடிய வள்ளல்கள் எவரும் அப்பாலை லழியில் இன்மையால் வறுமை தீராத வருத்தம் அடைந்தான்.


பரிசு கொடுப்பவரைத் தேடி வழி நடதந்து வந்த வருத்தம் அவனுது இசையால் தீர நிறைந்த அறிவுடைய இரவலனாக அவன் விளஙிகினான். அத்தகைய வறுமைப் பாணனை வளம் பெற்று வந்த பாணன் ஆற்றுப்படுத்துவதாகச் சிறுபாணாற்றுப்படை பாடுகிறது. வளம் பெற்று வந்த பாணன் நல்லியக்கோடனின் ஒய்மான் நாட்டின் வளத்தையும் சிறப்பையும் சேரபாண்டிய சோழ நாடுகளோடு ஒப்பிட்டுப் பேசுகிறாள். மூவேந்தர் ஆளும் அம்மூன்று நாடுகளை விடவும் வளமிக்கது நல்லியக்கோடனின் நாடு என்றாள் பாணன்.





பாணர் பாடினியர் காலம் : -


பல்வேறு சமூகங்களிலும் தொடக்க நிலைக் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் பாணர்கள் கருதப்பபடுகின்றனர். சடங்குகளில் இருந்து பிரிந்த கலைஇலக்கிய வளர்ச்சியின் முதல் நிலையாக அமைந்த இக்காலத்தைப் பாணர்தம் பெயராலேயே ‘பாணர் - பாடினியர்காலம்’ என்று கூறுவர்.


இப்பாணர் பாடினியர் மரபுக் கலைஞர்களாவர் இவர்கள் வழிவழியே வந்த கலையறிவால் மக்களை மகிழ்வித்து வந்தனர். இவர்கள் வாய்வழியே பாடும் மரபைப் பெற்றிருந்தன் அப்பாடல்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்படாமல் பாடுபவர் உணர்ச்சிக்கு ஏற்ப அமைந்துள்ளன.


பாணர் - பாடினியர் காலம் என்பது தொல் பழங்கால மக்கள் சமுதாயத்தில் முதன் முதல் இலக்கியம் தோன்றிய காலகட்டமாகும் அக்காலத்தில் பாணனே மூதறிஞனாகக் கருதப்பெற்றான். அவனுக்குச் சமுதாயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளது பாணா. ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தாள் எங்கு (அ) எந்த இடத்தில் இன்ப நிகழ்ச்சிகள் நடந்தாலும். (அ) துன்ப நிகழ்ச்சிகள் நடந்தாலும் இங்கு இவன் முன்னின்று அவற்றை நடத்தி வைத்தான். அச்சமயங்களில் அவன் உணர்ச்சித் துடிப்புடன் வீரர்களின் அரும்பெருஞ் செயல்களைப் போற்றிப் பாடினான். அப்பொழுது தான் பாடும் பாடலுக்குகேற்ப தாளமிட்டு ஆடினான். அவ்வாறு அவன் ஆடலோடு பாடலையும் சேர்த்துப் பாடிய பொழுது அவனைச் சார்ந்த ஆடவர்களும் மகளிரும் அவனோடு சேர்ந்து ஆடிப் பாடிப் பார்வையாளரை மகிழ்வித்தனர் எனலாம். பாணர்களைப் பற்றிய குறிப்புகள் பல காணப்பெறுகின்றன. பாணர்கள் ஒரு நிலையான வாழ்க்கை முறையைக் கொண்டிராமல் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான்.


பாண்கடன் சமூகக் கடமை : -


பொதுமக்களை மகிழ்வித்தல் பாணர்களின் பணியாக இருந்துள்ளது. பாணர்கள் கலைத்தொழிலையே தமது முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தனர். அதனால் பாணர்கள் பிறரைச் சார்ந்த வாழ்ந்தனர் பாணர்கள் அரசரைப் புகழ்வதோடு தொழில் செயல்பவர்களையும் தமது பாடலால் மகிழ்வித்தனர். இதன் மூலம் தொழில் செய்பவருக்குத் தொழிலில் சலிப்பு ஏற்படாமல் இருக்கவும் உற்பத்தி பெருகவும் பாணர்கள் உதவினர். 


குறிப்பாக அரசுர்களையும் நிலவுடைமையாளர்பளையும் வணிகர்களையும் சார்ந்திருந்தனர். பெரும்பாலும் இனக்குழத் தலைவர்களின் வீரத்தையும் கொடைத்தன்மையையும் புகழ்ந்துபாடினர். அடிக்கடி ஏற்பட்ட போர் நிகழ்வால் போரைப்பற்றியும் வீரத்தைப் பற்றியும் பாட வேண்டியதேவை மிகுதியாயிருந்தது.


அரசனது ஆட்சியும் சீரானமுறையில் இருந்தது தனது ஆட்சி நிலைநிறுத்தத்திற்கும் காரணமான பாணர் கூட்டத்தினர் அரசனால் பாதுக்கப்பெற்றுள்ளனர். அவ்வாறு பாணர்களைப் பாதுகாத்தல் அரசனின் தலைவனின் கடமையாகக் கருதப் பெற்றதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.


ஆண்கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய

ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!        (4)

புறம் - (201 : 14, 15)


பாரி மகளிரை இளங்கோவேளிடம் அழைத்துச் சென்ற கபிலர், அவனுடைய புகழைப்பாடும் போது இவ்வாறு கூறுகிறார். ஆண்மக்கள் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்தவன் என்பதனால் நீ பாண்கடன் ஆற்றுகின்றாய் என்ற கருத்து, பாணர்களைக் காப்பது சமூகக் கடமையாகக் கொள்ளப்பட்டமையைக் காட்டுகின்றது.


இதே போல் மற்றொரு பாடல், “பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்”


“பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!     (5)

புறம் (203 : 11)


என்ற பாணர்களைத் தாங்குவதை ஒரு கடமையாகச் சுட்டுகின்றன.


பொன்னால் செய்த தாமரைப் புpவை வெள்ளிய நூலியே கோத்துத் தலையிலே அழகாகக் சூடி இருக்கின்ற பாணர் சுற்றம் நின் நாள் மகிழ் இருக்கையைச் சூழ்வதாக, பாணர் போன பின்னர் உனது மார்பகம் மகளிரைத் தழுவட்டும்.


பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை

பாண் முற்று ஒழ்ந்த பின்றை, மகளிர்

தோள் முற்றுக, நின் சாந்துபலர் அகலம்! ஆங்க   (6)

(புறம் : 29 : 5 )


எனப் பகையரசரின்பட்டத்து யானையின் முகப்படாமில் இருந்த பொன்னை எடுத்து. பாணர்களது தலையணியாகப் பொற்றாமரைச் செங்தளித்தவனே.


ஒன்னார் யானை ஒடைப்பொன் கொண்டு,

பாணர் சென்னி பொலியத் தைஇ,

வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்,

ஒடாப் பூட்கை உரவோன் மருன!      (7)

(புறம் 126 – 1 – 4)


எனப் இலவமரம் வளர்ந்துள்ள மன்றத்தில் கவடற்ற உள்ளமுடைய பாணர் நினைத்ததெல்லாம் பேசி மகிழ்ந்து சோற்றை உண்யர் பாணர்களுக்கு அழியாத செல்வங்கள் பல அளித்த வளவன் வாழ்க.


இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்,

கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்று,

அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு

அகலாச் செல்வம் முழவதும் செய்தோன்,

எய்கோன் வளவன் வாழ்க! என்று, நின்          (8)

(புறம், 34: 12 – 16)


எனப் அரசர்கள் பாணர்களுக்கு உதவுவதால் புகழ்ப்பெறுகின்றனர் இவற்றால் பாணர்களுக்குப் பொருள் வழங்குதல் அரசர்களின் உயர்ந்த செயல்களில் ஒன்றாகக் கருதப்பெற்றமையை உணரலாம்.


இசைவளர்ச்சியும் பாண்மன்மையும் : -


சங்க காலத்தில் தோல் துளை, நரம்புக்கருவிகள் வழக்கில் இருந்தன. இக்கருவிகளின் வளர்ச்சி இசையின் வளர்;ச்சி நிலையைத் தொவிப்பனவாகும்.


இசைக் கருவிகளில் முதலில் தோன்றியவை தோல் கருவிகள்

பின்னர்த் தோன்றிய துளைக் கருவிகள் அதன் பின்னரே

நரம்புக் கருவிகள் தோன்றின சங்க இலக்கியங்களில்

மிகவும் வளர்ச்சி பெற்ற யாழ் வகைகள் பல சொல்லப்பட்டிருக்கின்றன

(நா. வானமலை 1990 : 83, 84)


என்பர் சங்க காலத்தில் காணப்பட்ட நரம்புக் கருவிகளின் வளர்ச்சி, செவ்வியல் தன்மை பெற்ற இசை மரபு இருந்தமையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். எனினும் பாணர்கள் தொடக்க காலத் தலைமை வடிவமான இனக்குழு நிலையில் வாழ்ந்தமையால் அவர் தமது கலையைச் செவ்வியல் தன்மையதாகக் கருத இயலவில்லை.


பாணர் தம் கலை நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரிடம் மட்டுமே இருந்தன. பாணர்கள் பழமை வாய்ந்த குடிகளில் ஒன்றாக இருந்தனை.


துடியன் பாணன் பறையன் கடம்பெண்

றிந்நான் கலந்து குடியுமில்லை      (9)

(புறம், 335: 7 – 8)


என்ற பாடல் சுட்டுகின்றது. பாணர்கள் ஒரு தனிக்குடியாக இருந்ததனால் அவர்களிடம் இசையினைத் தனியே பயிற்றுவிக்கின்ற முறைகள் இருந்திருக்க முடியாது. பாணர் குடியின் இளையவர்கள் தமது குடியனருக்குப் பணியாளாக இருந்து உதவுவதன் மூலம் இசைப் பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும். இதனை


பாணர்களின் கலையான பாடுதல், அவிநயத்தல், உணர்ச்சி

யுடன் பேசுதல் ஆகியவை முதியவர்களிடமிருந்து வாய்

வழியாகக் கற்றப்பெற்றன இத்தகு கற்றலின் உட்கூறுகளான

விதிமுறை, உட்கருத்து, மரபுவழி, உள்ளடக்கம் போன்றவை

(க. கைலாசபதி, 2002 – 133)


எனக் கூறுவர்.


இசைப் பயிற்சி ஒரு வகையான கல்வியாக அளிக்கப் பெறாமல், தொழிலறிவாகவே அளிக்கப்பெற்றது. எழுதிப் படித்து அறிதல், ஆசிரியர் கற்பிக்கக் கற்றுக் கொள்ளுதல் என்ற நிலையிலன்றிக் கேள்விக் கல்வியாக, பரம்பரை வழியே கற்றலாகப் பாணரின் இசைக் கலை இருந்துள்ளது.


பாணர் தம் பாடல்கள் வழிவழியாகப் பாடப்பட்டவையாகும் முன்னோர்களின் பாடல்கள் பாடல் நிகழ்த்தப்படும் இடம் சூழலுக்கு ஏற்ப இட்டுக்கட்டும் அடிகளே பாடப்படும் இடத்தில் உள்ள மன்னன் தலைவனை அப்பாடலில் பொருத்தியுள்ளன. இப்படிப் புதியதாக இணைப்பவை ஒரு வாய்பாட்டில் (கழசஅரடய) இயங்கியுள்ளன. சங்க இலக்கியங்களில் வெளிப்படும் இட்டுக்கட்டும் வாய்ப்பாட்டினை அடையாளப்படுத்தி விரிவாக ஆராய இடமுள்ளது.


அரசனுக்கு முன்னர்ப் பாணர் குழப்பாடலையும் ஆடலையும் நிகழ்த்தியமையைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன என்றாலும், அப்பாடல்களில் இருந்த நிகழ்த்துகலை மரபைத் தெளிவாக அறியமுடியவில்லை. பாணர் ஒரியைப் பாடிய புறநானூற்றுப் பாடல் (152: 13 – 22) பண்பாட்லின் வழிவழி வரும் தன்மையை, போக்கை அடையாளப்படுத்துகிறது.


பாடுவல், விறலி ஒர் வண்ணம் நீகும்

மண் முழா அமைமின் பண்யாழ் நிறுமின்

கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்

எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்              (10)

(புறம் 152 : 13 – 22)


எனும் அப்பாடல் விறலியை அழைத்து, பலவிதமான இசைக்கருவிகளையும் இசைக்கச் சொல்லி மதலை மாக்கோலை கையிலே எடுத்துக்கொண்டு, தான் (பாணர்களின்) தலைவனாக இருப்பதனாலே இருபத்தொடு பாடல் துறைகளையும் முறையாகப் பாடி முடிந்து இறுதியில் கோவேயென்று அவன் பெயர் கூறிய காலத்து, அந்த இடத்தில் அது தன் பொய் அதனால் (ஒரி) நாணினான் என்கிறது.


பாணர் தலைவன் பாடிய பாடல்கள் வழிவழி பாடிய பாடல்கள் அவற்றைக் கேட்கும் மன்னன். கலைஞர்களின் நிகழ்த்து கலை மரபில் பாணர்கள் எல்லா இடங்களிலும் ஒரே தன்மையில் பாடியதை இப்பாடல் தெரிலிக்கின்றது.


பாணர்களின் பாடல்கள் நிகழ்த்துவோனின் சொந்தப்பமைப்பாக அன்றிசத் தமது முன்னோர்களின் படைப்பாக இருந்தமையை அறியமுடிகிறது பாண் பர்ல்களின் தன்மையை வெளிப்படுத்தும் சி. எம். பௌரா செண்பகம் ராமசாமி 39).


ஒரு பாணன் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் பழம்

பாடல்களைப் பாடவல்லவன் என்றுதான் அவன் குறிக்கப்

படுவானே தவிர அவனை ஒரு படைப்பாசிரியன் என்று

அக்காலச் சமுதாயம் கருதவில்லை


என்கிறார். இதனாலேயே பாணர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்தி அறியும்படிப் புலவர்கள் வலியுறுத்துகின்றனர். தமது முன்னோர்களின் பாடல்களைப் பாடுதல் என்கிற நிலையில் பாண்பாடல்கள் வாய்மொழித் தன்மை பெற்றுக்காணப்பட்டன.


திரும்பத் திரும்ப வரும் சொற்களினாலும் ஒலிள் குறிப்புகளினாலும் பாடல்கள் நினைவுக்குக் கொண்டு வரப்பட்டுப் பாடப்பெற்றுள்ளன. இதனால் வாய்மொழித் தன்மையுடனேயே பாண்பாடல்கள் இருந்துள்ளன.


பண்பாடல்களின் குறிப்பிடத் தகுந்த தன்மை அவை எழுதி

வாசிக்கப் பிறந்தவை அல்ல; பாடவும் கேட்கவும் பிறந்தவை

யாகும் அவை முன்னிருப்பவரை அடிக்கடி விளித்துச்

சொல்லும் பெரும் பாலும் பெயரையும் வினையையும் மூன்று

முறை நான்குமறை கூறுவது அவற்றின் இயல்பு

(தொ. பரமசிவன், 38)


எனப் பாண்பாடலின் தன்மையைத் தொ. பரமசிவன் கட்டுகின்றார் திரும்ப கூறும் சொற்களைக் கொண்டு பொது விதி ஒன்றைத் தமிழவன் கூறுகின்றார்(தமிழவன், (53 -71)


1. திரும்ப திரும்ப வரலில், வரும் சொல் விளியாக வருதல்

2. திரும்ப வரலில், சொல் பொருளற்ற ஒசைக்குதவும் சொல்லாக வருதல்.

3. விளியாகவோ ஒசைக்குதவும் சொல்லாகவோ அன்றி வேறு விதமான சொல்லாக இருத்தல்

4. திரம்ப வரலில் வரும் சொல் அடிக்கொரு முறையோ, நான்கு அடிக்கொரு முறையோ, ஐந்து அடிக்கொரு முறையே அமைதல்

இந்த வாய்மொழிப் பாடல் மரபுகள் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணப்பெறுகின்றன. வாய்மொழி பாடலுக்குரியதான இந்த அலகுகள் பாண் பர்ல்களிலும் அமைந்திருக்கலாம். சங்க இலக்கியங்களில் காணப்படும் வாய்மொழித் தன்மைகள் குறித்துப் பலர் ஆராய்ந்துள்ளனர். அவர்களில் சி. எம். பௌரா, ஜேஆர், மார் போன்றோரின் கருத்துகளை அரணாகக் கொண்டு, சங்க இவக்கியம் வாய்மொழித் தன்மையை மிகுதியாகக் கொண்டிருக்கிறது என விளக்கிய க. கைலாவபதியின் ஆய்வு முதன்மையானதாகத் திகழ்கிறது.


சங்க இலக்கியத்தில் காணப்பெறும் வாய்மொழித் தன்மைகள் பாண்பாடல் மரபுகளால் உருவானவையாக இருக்கலாம். வாய்மொழிப் பாடல் வடிவங்கள் பாணர்களுக்கு மட்டும் உரிமையுடையன அல்ல பாணர்கள் மட்டுமே வாய்மொழிப் பாடல்களைத் தொழில்முறையில் பாடியுள்ளனர். பிறர் எவரும் தொழில் முறையாகப் பாடததால் இப்பாடல்கள் பாண்பாடல்களாகக் குறிக்குப் பெறுகின்றன.


பாண்பாடலும் இலக்கிச் செழுமையும் : -


சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறப் பாடல் விடிவம் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினாலும் அடிப்படையில் அவை நன்கு மெருகூட்டப்பட்ட இலக்கிய வடிவங்களாகவே காணப்படுகின்றன அகம் புறம் என்னும் இருபெரிய விதிகளுடன் தெளிவான வரையறைகளுக்குள் சங்க இலக்கியம் இயங்குகின்றது. சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தும் இவ்விலக்கிய மரபுகளில் நாட்டுப்புறப்பாடல் தன்மையும் காணப்படுவது சங்க இலக்கியத்தின் பரந்த காலத்திட்டத்தின் வெளிப்பாடே எனலாம். சங்க இலக்கியம் 450 ஆண்டு கால எல்லையைக் கொண்டது என்ற கருத்தின் அடிப்படையில் இல்வேறுப்பட்ட கவிதை நிலைகளைப் புரிந்து கொள்ளலாம்; எஸ் வையாபுரிப்பிள்ளை.


முதசங்க இலக்கியம் பிற்சங்க இலக்கியம் என்று இரண்டு

கூறுகளாக இந்த (சங்க) இலக்கியங்களைப் பகுத்துக்கொளவது

நலம் இவற்றுள் முற்சங்க இலக்கியங்கள்; நற்றினை

குறுந்தொகை ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு

(வையாபுரிப்பிள்ளை, 5)


என்று சங்க இலக்கியங்களைப் பிரித்துக்கொள்கிறார். இது ஒரு காலத்தை நிர்ணயித்து அதற்கு முன் பின்னாகப் பிரிக்கப்படுவதன்று இலக்கியப் பரிணாமத்தின் அடிப்படையிலும் கையாலும் கருத்துக்களின் அடிப்படையிலுமே பிரிக்கப்படுகிறது. எளிமையான வடிவத்திலிருந்து சிக்கலான வடிவம் தோன்றுவதே இயற்கை சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக் கரதப்படும் கலித்தொகை, திருமுருகாற்றுப்படை பரிபாடல் ஆகியன நெடும்பாடல் வடிவின. இவை சிக்கலுக்குரிய கவிதை வடிவத்தையுடையவை என்பதைப் பரிபாடல் கலித்தொகையின் செய்யுள் உறுப்புகளாலும் அறியலாம்.


முற்சங்க இலக்கியங்களிலேயே வாய்மொழித் தாக்கங்கள் மிகுதியாக இருப்பதனை அறிய முடிகிறது. அதே நேரத்தில் இவவிலக்கியங்களில் செழுமையான தமிழும் இன்மையும் அழகும் நிரம்பிய கவித்துவழும் காணப்பொறுகின்றன. இந்தக் கவித்துவம் புதிதாக உருவாகின்ற இலக்கியங்களில் இடம்பெறமுடியாது.


சங்க இலக்கியங்களுக்கு முன்பும் தமிழில் இலக்கியவளம் இருந்தமையை இவை காட்டுகின்றன. இச்சொழுமைக்கு அடிப்படையாக மறைந்து போன தமிழ் நூல்களும் இருந்திருக்கலாம்.


பாணர் இசைக்கருவியுடையோர் : -


சங்க இலக்கியங்களில் தடாரி, முழவு, பறை, துடி, ஆகுளி, எல்லரி, hதலை, ஆகிய தோற்கருவிகளும் குழல், கொம்பு, தூம்பு, நெடுவாக்கியம் ஆகிய துளைக்கருவிகளும் சீறியாழ், பேரியாழ் எனும் நரம்புக் கருவிகளும் காணப்பெறுகின்றன. இசை இசைக்கருவி நிகழ்த்து கலையில் ஈடுபட்ட பாணர்களே கைக்கொண்டிருந்தனர்  கலைகளை நிகழ்த்தும் போது அவ்விசைக் கருவிகளை அவர்கள் இசைத்துள்ளனர்.


இந்த இசைக்கருவிகளை எவ்வாறு இசைத்தார்கள் என்பதையும் சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.         (11)

(பொரு, 11, 19 : சிறு, 30)


கைக்சடுடு இருந்த என் கண் அகன் தடாரி

இருசீர்ப்பாணிக்கு ஏற்ப       (12)

(பொரு, 70, 71)


எனத் தடாரிப்பறையில் இரண்டு விதமான இசைகள் இசைக்கப்பட்டமையையும் முழவன் ஓசைக்குப் பண்ணோசை இயைந்து போலதையும் இந்த இசைகளுக்கு ஏற்ப விறலியர் ஆடுவதையும் பெரும்பாணாற்றுப்படை  (109, 110) காட்டுகின்றது.


இசைக் கருவிகளுடன் இணைந்த பாண்பாடல் பற்றிய செய்திகள் பாண்பாடல்கள் நிகழ்த்துகலைகளாக இசைக்கப்பட்டமையைக் காட்டுகின்றன. இப்பாடல் மரபே புலவர்களிடமிருந்து பாண்மரபினரை வேறுபடுத்தும் கூறாகக் காணப்படுகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக