சனி, 24 ஏப்ரல், 2021

அகத்திணை மரபுகள்

 ஆ. இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



   அகத்திணை பற்றிய பேசுகின்ற இலக்கியங்களாக அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பட்டினபாலை, நெடுநல் வாடை என்பன அமைகின்றன. அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, கலித்தொகை என்ற ஐந்து நூல்களும் தோழி பற்றிய செய்தியை விவரமாகவும் விளக்கமாகவும் தருகின்றன. சங்ககால மக்களின் வாழ்க்கையில் அகத்திணை செயற்பாடுகள் மிக முக்கியப் பங்கு வகித்தன. இலக்கியங்கள் என்பது மக்களின் வாழ்க்கை நடைமுறைகளை விளக்குவனவாகும்.  சங்ககால புலவர்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளைக் கூர்ந்து நோக்கியுள்ளனர்.  அக்கால மக்களின் அக உணர்வுகள் அகப்பாடல்களாக இயற்றியுள்ளனர்.  இப்பாடல்கள் அனைத்தும சில அகத்தினை மரபுக்குள் அடங்குகின்றன. அத்தகைய அகத்தனை மரபுகளை இக்கட்டூரையில் காண்போம்

தொல்காப்பியர் கூறும் அகத்திணை 

     தலைவன் தலைவியர் புணர்ந்து பிரிந்து ஒழுகும் அக ஒழுக்கத்திணை கூறும் இயல்தான் அகத்திணையியல் என்கின்றனர்.

               ‘இனிஒத்த அன்பான் ஒருவனும் 

                ஒருத்தியும் கூழப்பெறும் இன்பம்

                யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த 

                இன்புறுவதோர் பொருளாகலின் அதனை

                அகம் என்றார்’

இன்பமும் பொருளும் தலைவனும் தலைவியும் பாலது ஆணையால் அன்று ஒன்று கூடுவர் தலைவனும் தலைவியும் உணரும் அகவுணர்வுகள் பிறருக்குப் புலப்படுத்த இயலாத தன்மைகள் நிகழும். இத்தகைய அகவுணர்வுகள் அகப்பாடல்கலில் வடிக்கும் பொழுது நுண்ணிய அகப்பொருள் மரபகள் கடைப்பிடிக்கப்படும்.

             “மக்கள் நுதலிய அகன்ஐந்திணையும் 

             சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்"1  (தொல்-57)

     இம்மரபின்படி காதல் உணர்வுகள் மனித சமுதாயத்தின் பொதுவான உணர்வுகளாக கூறப்படும்.  தனி மனிதர்களை இனம்காட்டும் பெயர்கள் சுட்டிக் கூறப்படாது. களவு, கற்பு என அகத்திணை இருவகைப்படும் கைக்கிளை, பெருந்திணை என அன்பின ஐந்திணை முப்பிரிவுகளாக நிகழும்.

அகம் பற்றிய பிறச் செய்திகள்

     ஏ.கே. இராமானுஜம் என்னும் அறிஞர் தேர்ந்தெடுத்த சங்க அகப்பாடல்களை “வுhந iவெநசழைச டயனௌஉயிந" என்றும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.  அம்மொழி பெயர்ப்பில் சங்கப் பாடல்களில் உள்ள காதல் நிலைகளை வியந்து போற்றியுள்ளார்.

 டாக்டர்.வ.சுப.மாணிக்கனார்; “தமிழ்க்காதல்" என்னும் நூலில், சங்க அகப்பாடல்கள் அனைத்தும் காதல்நிலை இலக்கியங்களே என்பதனை நிறுவுகின்றார்.

அகநானூறு

     நூலின் பெயரிலேயே ~அகம்’ என்ற சிறப்பினை பெற்றது இந்நூல் மட்டுமே.  அகத்திணை பற்றி நானூறு பாடல்களால் ஆனதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.  அகநானூற்றுப் பாடல்கள் மன்னர்கள், வள்ளல்கள், வரலாற்றுச் செய்திகள், இயற்கை வர்ணனை, உள்ளுறை இறைச்சி, முதலான செய்திகளை விரித்துரைக்க இடந்தந்து நிற்கின்றன.  “நெடுந்தொகை நானூறு, அகப்பாட்டு என்ற வேறு பெயர்கள்" இதற்கு உண்டு. 

கபிலரும் அகத்திணையும்

     கபிலர் புறம் படாது அகம் பாடிய நோக்கம், தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினர், விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப் பாட்டு தமிழினத்ததின் அறிவுச் சின்னம் அகத்திணைப்படைப்பு, தமிழ்மொழியின் தனி வீற்றினை அயல் மொழியான் உணரவேண்டுமேல், அவனுக்கு முதலில் கற்பிக்கப்பட வேண்டியவை பொருள் அகப்பாட்டே என்று அவர் உள்ளிருப்பார்.

புலவர்கள் பாராட்டிய புலவர் கபிலராதலின் வேற்று மொழியிற் பெறலரும் தமிழ்க் கூறுகளை அறியவும் அறிவுறுத்தவும் வல்லார் அவரன்றி யார்?  எனவும் குறிப்பிடுகின்றன.

     “ஆரியவரசன் பிரகத்தத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது" எனக் குறிஞ்சிப் பாட்டுக்குத் துறைக்குறிப்பு எழுதப்பட்டுள்ளது.  “இந்நூல் என் நுதலிற்றோ எனின், தமிழ் நுதலியது" என்று இறையனார் அகப்பொருள் உரையாளர் குறிக்கின்றார்.  “ஒண்தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்னும் திருக்கோவை பாடும்.  ஈண்டெல்லாம் தமிழ் என்னும் சொல் அகத்திணைக்கு மறுபெயராய் நிற்றல் காண்க.

தமிழ் இலக்கியத்தில் அகத்திணை சிறப்பு

     தமிழ் மொழியானது ஒரு தனிச்சிறப்பும், தமிழ் இலக்கியம் என்னும் வளத்துள் அகத்திணையின் முதற்சிறப்பும் விளங்கித் தோன்றும்.

     “தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார் 

          கொள்ளாரிக் குன்று பயன்"4 (பரி –பா.9)

     ~தள்ள வாராக்காதற் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே.  மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்வார்| என்று குன்றம் பிறமொழிகள் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணமும் கணடவையல்ல தமிழ் மொழியோ எனின், இவ்விலக்கணமும் நிறைந்தது தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத அறிவுக் குறையுடையார் காதற்களவைக் குறைகூறுவர் எனவும், தமிழை ஆய்ந்தவர் களவு நெறியை உடன்படுவர் காண் எனவும் மேலைப் பரிபாட்டால் தெளிகின்றோம்.

பாண்டிய நாட்டில் அகத்திணை செய்தி

     பாண்டிநாடு பன்னீராண்டுப் பஞ்சம் நீங்கிச் செழித்த பின், பாண்டியன் தமிழ்ப்புலவர்களைத் தேடிக் அனைவரும் கூட்டிவரச் செய்தான். மேலும் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் வல்ல புலவர்களே நாட்டிற்காணப்பட்டனர், பொருளதிகாரம் வல்ல புலவர்யாரும் காணப்படவில்லை. இச்செய்தி அறிந்த பாண்டியன் “என்னை!  எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே!  பொருளதிகாரம் பெறேம் எனின், இவை பெற்றும் பெற்றிலேம்" எனக் கவன்றான்.

     இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு வரல்லாற்றுக் கதை வருகின்றது.  ஆலவாய்ப் பெருமான் அருளால், அறுபது சூத்திரம் கொண்ட அகப்பொருள் நூலைப் பெற்றான் எனவும், “ இது பொருளதிகாரம்” என்று மகிழ்ந்து உரை வகுப்பித்தான் எனவும் கூறுகின்றன.




அகப்பாடல் இயற்றப்படும் முறை

     அகப்பாடல் இயற்றுவதற்கு, நிலத்தின், காலத்தின் இயற்கை அறிவு வேண்டும்.  மாஞ்செடி பறவை விலங்குகளின் தன்மைக் கல்வி வேண்டும்.  அஃறினை உயிர்களின் இன்பபுணர்வை, மக்களின் இன்பபுணர்வோடு தரஞ்செய்து பர்ரக்கும் சீர்மை வேண்டும்.

     சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பாடற்தொகையும், அகம் பாடினோர் தொகையும், புறத்திணையினும், மும்மடங்கு மிகுந்திருதலை மதிக்குங்கால் சங்கச் சான்றோர் அகம்பாடுவதையே புலமைக்கிடனாகப் போற்றினர் என்று கருத்து வெளிப்படுகிறது.

     டாக்டர் வரதராசனாரும், தனிநாயக அடிகளாரும் சங்க இலக்கியத்தின் இயற்கைப் பகுதிகளைத் திறம்பட ஆராய்ந்துள்ளனர்.  இயற்கையை இயற்கைக்காகவே பாடும்நிலை - அதனைத் தனிப்பொருளாக் கொண்டு கருத்துரைக்கும் துறை-சங்க பாடலில் இருந்ததில்லை என்றும், மக்களின் ஒழுக்கலாற்றிற்கும் சிறப்பாகக் காதலொழுக்கத்திற்கும் பக்கப் பொருளாகப் பாடும் சார்பு நிலையே இயற்கைக்கு அன்றே இலக்கியத்தில் இடமாய் இருந்தது என்றும், அவ்விருவரும் தத்தம் நெறியால் அறுதியிட்டுரைப்பர்.  இவ்வகைக் காரணங்களைக் கூட்டிப் பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பொருள் பெற்றிருக்கும்.

அகத்திணை பகுப்பு

  அகநானூறு, நற்றிணை, குறுற்தொகை என்ற முதன்மூன்று தொகைகளுள், தொகை முறையில் ஒன்று போல்வனவே.  இவற்றுள் அடங்கிய பாட்டுக்களைப் பாடினோரும் பலர்  ஆவர். பாடிய அகத்துறைகளுள் பல ஒத்த அமைப்புடையவை, ஆனால் ஒரு தொகையாகாது.  மூன்று தொகைகள் ஆயதற்குக் காரணம் அடிக்கணக்கே என்பது அறிந்த செய்தி

     பாடினோர் அடிக்கணக்கை மனத்தில் வைத்துப்பாடவில்லை என்பதும், அடியெல்லை வகுத்துக்கொண்ட திறம் தொகுத்தோர்க்கு உரியது என்பதும் நம் நினைவிற்கு வேண்டும்.  கடலால், கறையானால், அயல் நாகரித்தால், தமிழ் மக்கள் பேணாமல் பெரும் பேதைமையால் ஐயகோ!  அழிந்து போன நூல்கள் அளவற்றவையாகும்.

அகத்தினை புனைவு

     அகநானூற்றில் உரிப்பொருளைக் காட்டிலும் முதற்பொருள், கருப்பொருள்களான இயற்கை பலபடப் புனையப்பட்டுள்ளது.  இப்புனைவுகள் நிறம்தீட்டவல்ல ஓவிய வனப்பின் கருத்தை உளங்கொளச் சொல்லுமளவில் அமையாது கண்கொளவும் சொல்ல விரும்பும் புலவன் தக்க புறத்தோற்றம் அமைப்பான்.

     அகம் என்னும் ஒரு பொருள் நுதலிய, ஆசிரியம் என்னும் ஒரு பாவால் ஆகிய 1200 பாடல்களையும் ஒரு தொகையாக்க வேண்டும்;;:  அங்ஙனம் ஆகாது அடிக்கணக்கை அளவாகக் கொண்ட காரணம் என்ன?  எட்டடி வரையிலுள்ள பாடல்களில் உரிப்பொருள் சிறந்தும், பன்னிரண்டடி வரையுள்ள பாடல்களில் முதல், கரு, உரி விரிந்தும் நிற்றலை மேலே விளக்கியுள்ளோம் அவற்றை எடுத்துரைக்கும் வகையில் மூன்று நிலைகளில் கபிலர் பாடல்கள்.        

 “குன்றக் கூகை குழறினும் முன்றிற் 

 பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்

  அஞ்சுமன் அளித்தென் னெஞ்சம் இனியே 

  ஆரிருட் கங்குல் அவர்விரற் 

 சாரல் நீளிடைச் செலவா னாதே”5  (நற் – 353)

           “ஆளில் பெண்டிர் தாளிற் செய்த

           ஙணங்குஙண் பனுவல் போலக் கணங்கொள

            ……………………………………………..

           அஞ்சு சிருவரு நெறி வருத லானே.”6 (அக – 80)    

          “ஆடமைக் குயின்ற அவிர்துரை மருங்கிற்

                         …………………………………………

         நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே”7 (அக – 80)

     இம்மூன்றுப்பாடல்கள் மூலம் முதல், கரு, உரிப்பொருள் விரிந்து வருவதும் புனைவு ஏற்பட்டுள்ளதும் இதன் மூலம் நன்கு அறியப்படலாம்.  திருக்குறட் காமத்துப்பாலில் அகப் பொருளைப் பற்றியச் செய்திகளை திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் இக்குறளில் முதற்பொருள், கருப்பொருள் கொண்டும் சிறிது புணையவும் இடந்தாரா என்பது வெளிப்படையாக உரிப்பொருளே பொருளாகக் காமத்துப்பாலை படைத்துள்ளார்.

            “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

             என்ன பயனும் யுள.”8   (குறள் - 1100)

             “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்

             ஓண்டொடி கண்ணே யுள.”9  (குறள் - 1101)

     அகப்பாட்டின் அடிநீள இயற்கைப் புனைவுக்கு இடமுண்டு என்றும், அடி சுருக்கின் அப்புனைவு சுருங்கிவிடும் என்றும் மொழியாராய்ச்சியால் நாம் தெளிகின்றோம்.

     ஐங்குறு நூற்றுக்கும், கலித்தொகைக்கும் தனித்தனி ஐந்து புலவோர் ஆசிரியர் ஆவர்.  இவ்விரு நூலும் குறிஞ்சித் திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தற்திணை, பாலைத்திணை என ஐவகை உட்பிரிவுகளை திணையடிப்படையால் கொண்டவை.

     உருத்திரசன்மனார் தம் நுண்மதியால் அகநானூற்றுக்கும் ஐவகைத் திணைப்பாங்கு வகுத்துத் தந்துள்ளார்.

அகத்திணைப் பிரிவுகளின் அடிப்படை

1. கைக்கிளை, 2. குறிஞ்சி, 3. முல்லை, 4. மருதம், 5. நெய்தல், 6. பாலை,        7. பெருந்திணை எனப்பட்ட ஏழும் அகத்திணைப் பாகுபாடாம்.

     இவற்றுள் குறிஞ்சி முதல் பாலை இறுதியாகிய இடைநின்ற ஐந்தும் ஐந்திணையென ஒரு கூட்டாக வழங்கப்படும்.

     இப்பிரிவுகளுக்கு அடி நிலைக் காரணம் கைக்கிளையாவது ஒரு தலைகாமம் என்றும், பெருந்திணையாவது ஒவ்வாக்காமம் என்றும் அறிந்தோர் சொல்லுவர்.  இங்ஙனம் காமத் தன்மைகள் அடிப்படை ஆகுமாயின்.  ஐந்திணையை ஒரே பிரிவாகக் கொண்டு, அகத்திணைப் பிரிவுகள் மூன்றெனல் பொருந்துமேயன்றி ஏழெனல் பொருந்தாதுதான்.  மேலும், கைக்கிளை பெருந்திணை என்ற பெயரே ஐந்திணைக்கு வருதல் வேண்டும். ஐந்திணை என எண்ணடையிருத்தல் ஒக்குமா?  ஆதலின் அகப்பிரிவுகட்குக் காமத்தன்மை அடிப்படையாகாது.

     தமிழ் அகத்திணை கூறும் பல்வேறுகாரணக் கூறுகள் தமிழகத்தின் பல்வேறு நிலைக்கூறுகளைச் சார்ந்து எழுந்தவை என ஒரு கோட்பாடு உளது நம் தாயகத்தை பாலை என்று சுட்டிக் காட்டத்தக்க நிலைப்பால் இல்லை என்று (தொல் 947) கூறுகிறார்.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற திணைகளுக்கே இயல்பான நிலைப்பாங்குகள் உள.  இதனால் நானிலம் என்பது உலகிற்கு ஒரு பெயராயிற்று.  பாலைக்கு இயல்நிலம் இன்றேனும், திரிநிலம் உண்டு என்றும்.  காடும் மலையும் கோடைத் தீ வெப்பத்தால் தத்தம் பசுமை இழந்த திரிநிலையே பாலை என்றும் சிலப்பதிகாரம் நன்கு தெளிவுபடுத்தும்.

           “வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

           தானலந் திருகத் தன்மையிற் குன்றி

           முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிர்நது

           நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறத்துப் 

           பாலை யென்பதோர் படிவங்கொள்ளும.;”10    (சிலப் 15, 95-9)

     அகத்திணையிலக்கணம் வகுத்த நூலில் இருபொருளும் விளங்கின என்பதிலும் இன்னோர் வேறுபட்டிலர் எனினும் கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் எழுதிணை என எண்ணுங்கால் குறிஞ்சி முதலாம் சொற்கள் தரும். நிலமில்லாக் கைக்கிளை பெருந்திணைகளோடு எண்ணப்படாதலின் இவற்றுக்கு நிலப்பொருள் செய்தல் ஆகாது.  உரிப்பொருள் கோடலே முறை என்பது தெளிவு.  ஐந்திணையுள் அடங்கிய ஒவ்வொன்றும் தனித்திணையாகக் கருதப்பட்டமைகள் அவையினைப் புலவர்கள் ஐந்திணை மேலும் பாடாது ஆளுக்கு ஒரு திணையாக இலக்கியம் கண்டனர்.

           “மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன் 

           கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய

           பாலையோத லாங்தை பனிமுல்லை பேயனே

           நூலையோ தைங்குறு நூறு.”11 (சிலப் - 65) 

எட்டுத் தொகையுள் ஐங்குநூறும் கலித்தொகையும் பாடினோர் எண்ணிக்கை குறைந்த நூல்கள்.  ஆளுக்கொரு ஆசிரியரான செய்தியை ஐந்திணையையும் ஓராசிரியன் பாடாமுறையை மேலை வெண்பாக்கள் அறிவிக்கும்.

          “பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி

           மருதனிள நாகன் மருதம் - அருஞ்சோழன்

           நல்லுத் திரன்முல்லை நல்லந் துவனெய்தல்

           கல்விவலார் கண்ட கலி.”12 (கலி – 21)

     பெருங்கடுங்கோ பாலைத்திணை (பிரிவு) ஒன்றனையே பாடிப் “பாலை பாடிய” என்ற சிறப்புப் பெற்றவர்.  ஒரு திணைக்குரிய உரிப்பொருளைப் பாடுங்காலும் எல்லாத் துறை மேலும் பாடாது ஒரு துறையளவில் பாடி நின்ற அகப்புலவர் பலர், வெறி பாடிய காமக்கண்ணியார் ஒரு துறை பாடிய சிறப்புப் புலவர்.  மேலும் முதல் கருப்பொருள்களைச் சிறிதும் கூறாதே உரிப்பொருள் மட்டும் கூறும் அகப்பாடல்களும் பல உள்ளன.

            “நோமென் னெஞ்சே நொமென் நெஞசே

             இமைதீயப பன்ன கண்ணீர் தாங்கி

             அமைதற் தமைந்தநங் காதலர்

             அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே.”13 (குறுந் - 4)

உரிப்பொருள் ஒன்றே நுவலும் இவ்வனைய பாக்கள் பாலைத்திணை, குறிஞ்சித்திணையெனச் செவ்விதன் பெயர் பெறுகின்றன.  காரணம் திணைமையாவது உரிப்பொருளே பற்றியது முதலும் கருவுமே அப்பொருட்குத் துணைமையாம். 

முடிவுரை

தமிழர்களின் சிறப்புகளில் ஒன்று அகத்தணை மரபு. அன்பின் ஐந்து திணைகள்,  முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், என்றும், அகத்திணை இயற்றுவதற்கான முறைமைகளையும் அதன் சிறப்புகளையும்;, இக்கட்டூரை வழி அறியமுடிகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக