சனி, 24 ஏப்ரல், 2021

திருவள்ளுவர் காட்டும் இல்லற மாண்புகள்

    ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி           

                                   


உலகப் பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறளில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் பெற்றுத் திகழ்கிறது. அகம் புறம் என்னும் இரு நிலைகளாகப் பகுத்து மானிட வாழ்வின்; ஒரு பகுயாக திருமணத்தை போற்றுகின்றன.அத்திருமண வாழ்வில்; கணவன் மனைவியின் இல்லற மாண்பை திருக்குறள் பகர்கிறது. பெண்மைக்கு மதிப்பளித்து  மகளிர் பிறரால் கட்டுப்படுத்தப்படுதலின்றி உரிமையுடன் வாழ வேண்டுமென துண்டினார். ஆயினும் இல்லத்தில் தலைமை ஆடவனுக்கே உரியது என அவர் எண்ணினார் என்பது பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தினின்றும் புலனாகிறது. ஆணும், பெண்ணும் பாடலும் இசையும் போல், சுடரும் ஒளியும் போல், மலரும் மணமும் போல், இருவரின் வாழ்வும் ஒன்றுபட்டு ஒருவரையொருவர் நன்கு புரிந்து, அன்பாய் வாழ்வு நடத்துவதுதான் இல்லறம்.  காதலர்கள் இருவரின் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பதனை இக்கட்டுரை ஆராய்கிறது. 

இல்லற மாண்பு

நல்லறம் புரிவதற்கு தான் இல்லறம்  அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றன. (அந்த இல்லறத்தில் நிகழ்ந்த ஒரு காட்சி) திருமணம் புரிந்த புதிய காலை பொழுதில் கணவனின் அன்பு அரவணைப்பிலிருந்து மீண்டும் வந்து சமைக்கத் துவங்குகிறாள்.  இதுவரை பிறந்த வீட்டில் அடுப்படிப் பக்கமே போகாதவள்.  அப்படி ஒரு செல்வச் செழிப்போடு வளர்ந்தவள்;. ;தன் திருமணம் முடிந்துதம் கணவனுக்குப் பிடித்தமான உணவைத் தயார் செய்கிறாள்.இந்நிலையினை

காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தான் அன்போடு உணவை தயார் செய்யும் வேளையில் அப்போது அவள் கட்டியிருந்த பட்டாடை நழுவியபோல மற்றொரு கையால் திருத்தி நின்றாள்.  அச்செயலானது அவளின் மீன் போன்ற கண்ணை கலங்கி நி;ற்கும் சூழலில் கணவன் துணை நிற்க அகமகிழ்ந்து இன்புற்று உணவு சமைத்த நிலையினை  

             “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் 

              கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக்” 

       என்ற அடிகளின் மூலம் இல்லற மாண்பினை தமிழ் இலக்கியம் அனைத்தும் பகிர்கின்றன. 



மனையும் மனைவியும்

மனை என்பது குடும்பத்தை ஒன்றிணைக்கும் குருவிக்கூடு. மனைவி என்பவள் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் பறவை. அப்படியான மனைவியின் மாண்பினை திருவள்ளுவர்  தன் குறளி;ல் 

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்;க்கை 

எனைமாட்சித் தாயினும் இல்.”  

     பறைசாற்றுகின்றார். இக்குறளின் வாயிலாக இல்லறம் நடத்துவதற்குரிய நற்பண்பு இல்லாளிடம் இல்லாமல் போனால் வாழ்க்கையில் எவ்வளவு பொருள் பெற்றிருந்தும் பயனில்லாமல் போகும் என்பதனை பசுமரத்தாணி போல பதிவுசெய்கிறார். மேலும் கணவன் மனைவியின் உறவுநிலையை சங்க பனுவலான குறுந்தொகை,

“செம்புலப் பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”   (குறுந்) 

      என்னும் சங்க இலக்கியப் பாடலின் வாயிலாக தண்ணீரையும் செம்மண்ணையும்; எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல நல்ல மனைவி அமைந்தால் அந்த இ;ல்லம் மிகச் சிறப்பு பெறும்.  எப்பொழுதும் குடும்பத்தின் நன்மைக்காக பாடுபடுபவள் மனைவி.  நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள் சான்றோர்கள்.             

“துர்மயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்

புனதலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்”   (புறம் -334)

     என்ற அடிகளில்; புறம் பகர்கிறது. மேலும் மன்றத்தில் விளையாடி மகிழம் சிறுவர்கள் போடும் மகிழ்ச்சி ஆரவாரமான ஒலிக்குப் பயந்து வைக்கோல் போருக்குள் சென்று பதுங்கிக் கொள்ளும் இப்படிப்பட்ட ஊரில் வாழும் இல்லத்தரசியோ பாடி வரும் பாணர்களை உண்ணச் செய்து அவர்களின் பசியைப் போக்கும் தன்மையினை மனமாட்சி படுத்தும் நிலையில் இயம்புகிறார். 

கற்பின் ஆற்றல்

       பெண்ணானவள் தன் கற்பை இழக்க ஒரு பொழுதும் விரும்பமாட்டாள். தன் கற்பை எப்பொழுதும் பாதுகாக்க விரும்புவாள். அப்படிப் பட்ட பெண்ணின் நிலையை எடுத்துரைப்பதாக

           “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

            மிகைநாடி மிக்க கொளல்.”  (குறள்-504)

     இக்குறட்பாவின் வாயிலாக ஒருவருடைய குணங்களை ஆராய்ந்த பின் அவரின் குற்றங்களை ஆhhய வேண்டும். அவரின் சிறப்பான குணங்களை போற்ற வேண்டும். அவரின் குற்றங்களை ஆராயாமல் அவர் மேல் பழி சுமத்த முடியாது என்று கட்டளைப் பணிகிறார்;.அவைபோல

             “கற்புவழிப் பட்டவள் பரத்தையை ஏத்தினும்

              உள்ளத்து ஊடல் உண்டுஎன மொழிப.”    (தொல்-229)

      கணவன் கருத்துக்கு மாறுகொள்ளாமை என்பது தலைக்கற்புக்கு உரியது என்னுமாறு மனைவியானவள் கற்பு வழிப்பட்டவள் என்பதை தொல்காப்பியரும் தன்; பொருளியலில் பதிவு செய்துள்ளார்.

மக்கட்பேறு

ஒரு பெற்றோருக்கு குழந்தைச்செல்வம் இல்லையெனில் அவர்கள் வாழ்வில் ஆனந்தமே இருக்காது.  சங்ககாலம் முதல் இக்காலம் வரை குழந்தை செல்வத்தினை பற்றி பல இலக்கியங்கள்; பகர்கின்றன ;கூறியுள்ளார்.  மக்கட்பேற்றினைப் பற்றி திருவள்ளுவரும் பல நிலைகளில் கூறியுள்ளார்; என்பதனை மொழிவதாக

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்                                      

நன்கலம் நன்மக்கட் பேறு.”  (குறள்-52)

இக்குறட்பாவின்; வாயிலாக மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கையின் மங்கலம்.  நன்மக்களைப்; பெறுதலே அவ்வாழ்வின் மங்கலம் மனைவி அமைவதும் மங்கலம் பிள்ளை, அணிகலன் என்று வள்ளுவர் தன் குறட்பாவில் சுட்டியுள்ளார்.  ஒரு பெண் குழந்தை பாக்கியம் பெற்ற பின்பே அவள் தாய் என்று  முழுமை அடைகிறாள்.மேலும்

“மகன்  தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

  என்நோற்றான் கொல்எனும் சொல்.”  (குறள்-70)

  இக்குறட்பாவின் வாயிலாக மகனைப் பெற்ற இவனின் தந்தை என்ன தவம் செய்தானோ எனப் பிறர் புகழும்படி மக்கள் உருவாக வேண்டும்.  அதுவே அவர்கள் பெற்றோருக்குச் செய்யும பெரும் கடன் பேருதவி எனக் கூறியுள்ளார்;.  

குடும்ப முன்னேற்றம்

குடும்பம் முன்னேற வேண்டுமானால் பெண் என்பவள் தன் குடும்பத்தை தலைமைத் தாங்கி நடத்த வேண்டும்;.  வீட்டில் விளக்கேற்ற பெண்தேவை என்பார்கள். மனைவியானவள் இன்பம், துன்பம் இரண்டிலும் பங்கு கொள்பவளாவாள்.  குடும்ப முன்னேற்றத்திற்கு தன்னை அர்பணிப்பவளே குடும்பபெண்.  திருக்குறள்;; குடும்ப முன்னேற்றத்தை 

“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்      

                குற்றம் மறைப்பான் உடம்பு.”   (குறள்-1029)                                                  

      என்ற குறளின் மூலமாக குடும்பத்தின் குறைகளை களைபவள் பெண் மட்டுமல்ல ஆணும்தான்;. அப்பொழுது தான் இக்குடும்பம் முன்னேற்றமடையும். அதுவே ஒவ்வொரு ஆண்மகனின் கடமையாகும்.

                 “நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

          இல்லாண்மை ஆக்கிக் கொளல்.”    (குறள்-1026)

என்னும் இக்குறட்பாவின் வழியாக தான் பிறந்த குடும்பத்தை உயர்வாக்கி;க் கொள்வதே ஒருவனுக்கு நல்ல ஆண்மையாகும்

அன்பும் அறனும்

வாழ்க்கை என்பதே அன்பு, அறம் என்னும் இரண்டின் பிணைப்பு ஆகும்.  அன்பொடும் அறனொடும் வாழ்க்கை நடத்துபவர்கள் யாவரும் நன்றாக வாழ்வர்.  அறத்தின் பயனால் விழையும் இன்பமே உண்மை இன்பம். .பிற இன்பங்கள் உடலோடு அழியக்கூடிய புகழில்லாத பொய் இன்பங்கள்.    

                “அன்பும் அறனும் இல்வாழ்க்கை உடைத்தாயி;ன்

        பண்பும் பயனும் அது.”     (குறள்-45)

இக்குறட்பாவின் வாயிலாக இல்வாழ்க்கைக்கு அன்புடைமையே பண்பாகும். அறம் செய்தலே அதன் பயனாகும் என்று திருவள்ளுவர் சுட்டியுள்ளார். 

                  “தானே தினித்தின்பம் கொள்ளத் தகுமா நல் 

          தேனித்தழாள் இன்றி ஒரு சேய்க்கின்பம் ஆனதுண்டோ.”

இல்வாழ்க்கையில் நல்ல அறத்தொடும் வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும்;;. கணவன் மனைவி இடையே உறவு பலப்படும் என்பது குடும்ப விளக்கின் மூலம் பாவேந்தர் பாரதிதாசனும் பறைசாற்றியுள்ளார்.

விருந்தோம்பல்

புதிதாய் வருபவருக்கு உணவளித்து உபசரித்தல் என்னும் கோட்பாடு அக்காலத் தமிழர் முதல் இன்றைய தமிழர் வரை பழக்கத்தில் உள்ளது. விருந்து என்பது உறவினர் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான செயல்;.  அவ்விருந்தோம்பலை பறைச்சாற்றுவதாக 

       “இருந்தோம்பி இல்வால்வது எல்லாம் விருந்தோம்பி

        வேளாண்மை செய்தல் பொருட்டு.”  (குறள்-81)

விருந்தினர்களைப் போற்றிப் பாதுகாப்பது  தன்னுடைய இல்வாழ்கையில் பொருள் போன்றவற்றைப் போற்றிப் பாதுகாப்பதற்கு சமமாகும்.  விருந்து உபசரிப்பவரின் வாழ்க்கையில் எந்நாளும் துன்பம்  வராது. நம்மை நாடி வரும் உறவினர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரிப்பது நம் தமிழரின் மிகப்பெரும் சிறந்த பண்பாகும்.

      “மோப்பக்குழையும் அனிச்சம் முகம் திரிந்து

       நோக்கக் குழையும் விருந்து.”   (குறள்-90)

அனிச்சம் மலரானது மலர்ந்த பின்பே வாடிவிடும் அதுபோல் இல்லாமல் விருந்தினர்களை முக மலர்ச்சியோடு வரவேற்றல வேண்டும். அதுபோல் பகுத்துண்ணும் பண்பும் நம்மிடம் உள்ள உணவையோ பொருளையோ நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.                                             

முடிவுரை

திருவள்ளுவர் கூறியுள்ள இல்லறத்திற்கான  கருத்துக்களை நுண்ணிதின் உணர்ந்து தெளிந்து ஏற்று வாழ்பவர் உலகத்தில் நிலைத்து வாழ்பவராவர்.  அவர்தாம் வானுறையும் தெய்வத்துள் வைத்து வணங்கும் பெருமைக்குரியவர்.  வுள்ளுவர் கூறியிருக்கும் இல்லற உண்மைகள் எந்த விதத்திலும் எந்நாட்டினராலும், எம்மொழியினராலும் ஏற்றுக்கொள்ளும் உண்மைகள்.  இதுப்போன்ற உலகம் போற்றும் உண்மைகள் பொதுவிலே நிறைந்திருக்கின்றன. இல்லற இன்பத்திற்கு வள்ளுவர் காட்டும் வழியைவிட சிறந்தவழி இருக்க முடியாது என்பது தெரிய வருகிறது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக