சனி, 24 ஏப்ரல், 2021

குறள் காட்டும் அரசியல்



ஒரு இனம் நாகரிகத்தை அடைய அம்மக்கள் பேசும் மொழியே முதன்மையான தன்மையுடையது. அம் மொழியானது இலக்கிய வளமையாலே உலக அரங்கில் உன்னதமான இடத்தை அடைகிறது. அவ்வாறான இலக்கியங்களில் நமது திருக்குறளும் ஒன்றுதான். திருக்குறள் உலகவாழ்வியல் நூலாகயிருந்தாலும் பல நுற்றாண்டுகளுக்கு முன்தோன்றியவருக்கு மட்டுமில்லாமல் இருபத்தொரம் நுற்றாண்டினர்க்கும் இன்னும் பலநுற்றாண்டுகளுக்கு பிறகு வரும் மனித சமுதாயத்திற்க்கு வழிகாட்டும் ஒரு சமுதாய நூலாக திருக்குறள் விளங்குகிறது. காலத்தால் கடற்கரை பாதசுவடு போலஅழிந்த நூல்கள் பல. உலகம் உள்ளவரை பொற்றபடும் ஒரேநூல் நம் திருக்குறள். அப்பெரும் புகழ் கொண்ட நூல் பகரும் அரசியல் நிலையை ஆய்வதே இக் கட்டுரை..

மன்னன்

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பது முதுமொழி.ஒர் நாட்டை ஆளும் அரசன் மக்களுக்காக சுதந்திரமான முடிவு எடுத்து செயல்படுத்துபவனாக இருக்க வேண்டும். மற்றவர்க்கு கட்டுபட்டு முடிவு எடுத்தால் அது தவறாக தான் முடியும். இன்றும் ஓர் நாட்டை ஆட்சி செய்ய நல்ல நம்பிக்கையான படை, சகோதரத்துவம் கொண்ட மக்கள், நாட்டின் வருவாய், நல்லயோசனை கூற அமைச்சர்கள், கோட்டை என இருத்தல் வேண்டும் அப்போது தான் நல்லமுறையில் ஆட்சி செய்ய என்பதனை,

           “படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரன் ஆறும்

            உடையான் அரசருள் ஏறு.’’    381

இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே உலகதாசன் தன் குறட்பாவில் உணர்த்தியுள்ளார் ஓர் அரசன் என்பவன் படை, குடி, பொருள், அமைச்சர்கள், நல்;ல நட்பு கோட்டை என இவ்வாறும் உடையவன் அரசருள் சிங்கம் போன்றவன் என்கிறார். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால் நாடு என்னாகும் என்பது முதுமொழி. நாட்டைக்காக்கும் அரசன்;; அன்பு, ஈகை, நேர்மை, வீரம், பாதுகாத்தல், கொடை என அனைத்து திறமையும் பெற்றிருந்தல் தான் நாட்டிற்கு நற்பெயர் கிடைக்கும். இதுவரை வரலாற்றில் அழிய இடம் பெற்ற அரசர்கள் அனைவருமே இவ்வாறே இருந்துள்ளனர்.

           “கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்

            உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி.” 390

என்ற அடிகளின் மூலம் வள்ளுவர் கொடுக்கும்; தன்மையும,; அன்பும், நேர்மை, குடிகாத்தல் இந்நான்கும் உள்ள மன்னன்.எவனோ அவனே பிற  மன்னர்க்கெல்லாம் மணிமகுட ஓளி  விசுபவனாய் திகழ்வான் என இயம்புகிறார்.

தந்திரம்

நம்மால் கடைசி நேரத்தில் கூட வெற்றிப்பெற முடியும்; என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. இந்த உலகையே வென்றவன் மாவீரன் அலெக்சாண்டர். பராசீகத்தின் மீது படையெடுத்தபோது இரவில் போர் செய்வது அரச தர்மம் இல்லை என்றான். ஆனால் இந்தியாவின் மீது படையெடுத்தபோது போரசை வெல்ல முடியாமல் இரவிலும் போர் செய்தான். போரசின் யானைப்படையை இரவில் தீய பந்தம் காட்டிதான் வென்றான். தோற்கும் தருவாயில் இருந்த அலெக்சாண்டரை வெற்றியின் மகன் என அகில மக்கள் போற்ற அந்த தீய பந்தங்களே காரணம். வாழ்க்கையில் யார் வேண்டுமானாலும் ஒரு செயலை செய்ய முயற்ச்சி செய்யலாம். ஆனால் எவன் ஒருவன் தந்திரமாக செயல்படுகிறானோ அவனே வெற்றிப்பெறுவான். அன்றையக் காலத்தில் போர் களத்தில் யுக்தியை பயன்படுத்துவர் அது இன்றும் தொடர்கிறது.

நாhட்டை காக்கும் அரசன் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்குமோ என்பர் பாமரமக்கள். அதுப்போல அவசர காலத்திலும், போர் காலத்திலும் இடம், காலம், தன்மை அறிந்து செயல்படவேண்டும்.

            “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

             வேந்தர்க்கு வேண்டும் பொழுது.”      481

காக்கை கூட கோட்டானை பகலில் வென்றவிடும். அது போலவே அரசனும் காலமறிந்து போர் தொடுக்க வேண்டும். என்கிறார் மேலும்

             “ஊக்கம்உடையான் ஒடுக்கம் பொருதகர்

             தூக்கற்குப் பேரும் தகைத்து.”        486

ஊக்கம் உடையவன் ஒதுங்கியிருப்பது சண்டைக்கெடா பின் வாங்குவது போன்றதாகும். முதலை நீரில் உள்ளவரை அதை வெல்ல முடியாது. சிங்கத்தை அதன் குகையில் வெல்ல முடியாது. எனவே அரசும் இடம், காலம், தன்மை அறிந்து தந்திரமாக செயல்படவேண்டும். என்பதiயே பல இலக்கிய வாய்மொழி மூலம் காண முடிகிறது.

அமைச்சர்கள்

அரசியலில் அமைச்சர்கள் மிக முக்கியமானவர்கள். ஏன் எனில் அரசனால் அனைத்து துறையும் கண்காணிக்க முடியது. என்ற காரணத்திற்க்காக மட்டும்தான் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். நல்ல நூல் அறிவும், பகைவரை திட்டம் தீட்டி அழிக்கும் , யுக்தியும் அரசனுக்கு விசுவாசமாக இருப்பவனே அமைச்சன்.பல அரசர்கள் அடையாளம் காணப்படாமல் அமைச்சர்களே அரசனாக இருப்பர். வரலாற்றில் சொந்த அரசனைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர்கள் பலர். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் அதுப்போல் இல்லாமல் அமைச்சன் நூல் அறிவும் , இயற்கை அறிவையும் கொன்டு யதர்த்தமாக செயல்பட வேண்டும்;. அப்போதுதான் தனக்கும் தன் அரசுக்கும் நற்ப்பெயற் கிடைக்கும். திருவள்ளுவர்

               

“சேயற்கை அறிந்துக் கடைத்தும் உலகத்து

                 இயற்கை அறிந்து செயல்.”  திருக்குறள்(637)

நூல் சொல்லும் முறைகளை அறிந்திருப்பினும் உலகை இயல்பை அறிந்து அதன்படி செய்யவெண்டும். அவரே சிறந்த அமைச்சர் என்கிறார். மேலும்

                 “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

                  பொருத்தலும் வல்லது அமைச்சு.”   திருக்குறள்(633).

பகைவரை பிரித்தல் . நல்ல நண்பரை சேர்த்தல், பிரிந்த நல்ல நண்பரை மீண்டும் சேர்த்தல் இவற்றில் வல்லவனே அமைச்ன் என்கிறார்.

அரச இலக்கணம்

அரசு ஒரு சார்பு இல்லாமல் நடுநிலையாக இருத்தல் வேண்டும். தம்மவர்களுக்காக எல்லா சட்டத்தையும் மாற்றவும் அரசு தயாராக உள்ளது. இன்று நண்பர்களக்காக கொலை செய்பவர் பலர். எது நீதி எது அநீதி என்று அறியமல் ஒன்றன் பின்னால் நிற்பவர் பலர்.அனைத்து இடத்திலும் ஒரு சார்பு நிலைத்தான் மேலோங்கி உள்ளது. இதுவெல்லாம் ஓரு அரசுக்கு இலக்கணம் அல்ல. வில்லிபாரதத்தில் மிக உருக்கமான கதாப்பாத்திரம் கர்ணன் துரியன் செய்த அனைத்து செயலுக்கும் உடன் இருந்தான் முடிவு பழிதான் வந்தது. எவ்விடத்திலும் எந்த சூழ்நிலையிலும் ஒரு சார்பு இல்லாமல் தராசு முள் போல சரியாக இருந்தால் நேர்மை பிறக்கும். புவியில் வாழும் எந்த மனிதனாக இருந்தாலும் சொல் நேர்மையாக இருந்தால் செயல் நேர்மையாக இருக்கும். பேச்சு நேர்மையாக இருந்தால் மனக்கருத்தும் நேர்மையாக இருக்கும்.இவ்வாறு இருப்பதுதான் அரச இலக்கணம் கூறியுள்ளார் திருவள்ளுவர்

                  “சமன்செய்து சீர்துக்கும் கோல்போல் அமைந்தொருபால்

                   கோடாமை சான்றேர்க்கு அணி.” 118

இக்குறளில் ஒருவர் ஒரு சார்பு இல்லாமல் தராசு முள் போல நேர்மையாக இருந்தால் வேண்டும் என்கிறார்.இது அரசன் முதல் அனைவருக்கும் பொருந்தும்.

அரண்

ஒரு அரசன் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள வலிமையான மதில்களைக் கொண்ட கோட்டையே காரணம.; ஒரு அரசனின் வலிமை அவன் கோட்டை மதில்களே காட்டும். எதிரிகள் கண்டு அஞ்சும்படி மிக பெரியதாக சிறு மலைப்போல அமைத்தனர். வரலாற்றில் வேலூர் கோட்டை, துங்கபத்திரா கோட்டை, போன்றவை கோட்டைக்கு சான்றாக உள்ளது. முதலை தண்ணீரில் உள்ளவரை மற்ற எந்த உயிரினத்தாலும் வெல்ல முடியாது தண்ணீர் தான் முதலையின் கோட்டை. சிங்கத்தை காட்டில் அதன் குகையில் வெல்ல முடியாது. காடும் குகையும் சிங்கத்தின கோட்டை. சிங்கத்தையும், முதலையையும் சமவெளிப்பகுதியில் எளிதில் வேட்டையாடிவிடலாம். திருவள்ளுவர் அரண்(கோட்டை) பற்றி  

             “ஆற்று பவர்க்கும் அரண்பொருள்;: அஞ்சித்தன்

              போற்று பவர்க்கும் பொருள்.”    திருக்குறள்(741)

படையெடுத்து போர் செய்வார்க்கும் கோட்டை மதில் வேண்டும், பகைவர்க்கு அஞ்சி தற்காப்பவர்க்கும் கோட்டை மதில் வேண்டும் கூறுகிறார்.

படை

ஒரு நாட்டில் எத்தனை கோடி மக்கள் வேண்டுமனாலும் இருக்கலாம்.அவர்களின் அடையாளம் பலம் தம் நாட்டின் எல்லையைக் காப்பதில் தான் உள்ளது. மற்ற எல்லா நாடுகளும் ஒரு நாட்டை பார்த்து பயப்படுவது அந்த நாட்டின் படையைக் கண்டுதான். ஒரு அரசனுக்கு விசுவாசமான படை வீரர்கள் தேவை. அவர்கள் நாட்டுக்காக தம் உயிரையும் தர தயராக இருக்க வேண்டும். இன்று கடற்படை, தரைப்படை, விமானப்படை என்ற முப்படை உள்ளது.

                “உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்

                 வெறுக்கையுள் எல்லாம் தலை.” 761

அஞ்சாது பகையை வெல்லும் தேர்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை எனும் நான்கும் அரசனுடைய முதன்மையான செல்வமாக வள்ளுவர் கூறுகிறார்;.

ஒற்றன்

ஒரு அரசாங்கம் மிகச்சரியாக கட்டமைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் படை, மக்கள் பலம், கோட்டை, அமைச்சன் மட்டும் இருந்;தால் போதாது. ஒற்றர்களும் வேணடும். ஒற்றன் மூலமாக எதிரியின் பலம் மட்டுமல்லாமல் தம் பலத்தையும,; ஆற்றலையும் அறியமுடியும். ஓரு அரசனுக்கு அரசநூல்கள் மட்டுமல்லாமல் கல்வி அறிந்த ஒற்றனும் தேவை. ஒரு ஒற்றன் கூறியத்தகவல் சரியா என்று மற்றொரு ஒற்றனைக்கொண்டு சரிப்பார்க்க வேண்டும். சில நேரங்களில் நம் எதிரியுடன் சேர்ந்து நமக்கே குழித்தோண்;டலாம். இது போன்ற நிகழ்வுகள் வரலாற்றில் பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. முன்னால் பிரதமர் இந்திராகாந்தியைக் கொன்றது கூட பாதுகாப்பு வீரர்கள்தான். ஒற்றன் என்பவன் எந்த தருணத்திலும் தகவலை கசியவிடக்கூடாது. தன் உயிரே போகும் நிலை வந்தாலும் சொல்லக்கூடாது அவன்தான் உண்மையான விசுவாசி. ஒற்றன் என்பவன் தாம் கண்டகாட்சியை பல முறை அலசி ஆராய்ந்து தெளிந்த உண்மையை உரைக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்;;;;.; திருவள்ளுவர்

                “ஒற்றுஒற்று உணராமை ஆள்க: உடன்முவர்

                சோல்தொக்க தேறப் படும்”       589

ஒற்றர்களை தனித்து கையாளுதல் வேண்டும். முன்றொற்றர்களை உளவறியச் செய்து ஒப்பிட்டு ஒத்திருக்குமாயின் செய்தி உண்மையென அறிக என்றும்.

               “ஓற்றும் உரைசான்று நுலும் இவைஇரண்டும்

               தேற்றென்க மன்னவன் கண்.” 581

ஒற்றனையும், அரச நுல்களையும் தன் இரு கண்களாக அரசன் அறிந்து கொள்ள வேண்டும்;. ஒற்றன் என்பவன் துறவியைப் போலும், ஒழுக்காதர் போலும் வேடமிட்டு எங்கும் சென்று ஆராய்ந்தறிந்து அவற்றை எத்துன்பத்திலும் எவரிடத்திலும் கூறக்கூடாது. மறைவாக நடப்பவற்றை அவற்றில் சந்தேகம் இன்றி ஆராய்பவனாக இருத்தல் வேண்டும் . மேலும் ஒற்றன் முழுமாக எங்கும் நடப்பதை ஆராய்ந்து அறிந்தால் மூலமாக மன்னன் வெற்றிபெற முடியும் என்று திருவள்ளுவர் ஒற்றன் பற்றி கூறுகிறார்.

முடிவுரை

வேந்தன் நல்ல அமைச்சன், நம்பிக்கையான படைவீரர்கள், ஒற்றன் கோட்டை போன்ற கூறுகளைக் கொண்டது தான் அரசியல். ஒரு மனிதன் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிவு செய்யவே முயல்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். கடற்கரை மணல் போல ஆண்ட மன்னர்கள் பலர்;. சில மன்னர்களே வரலாறு படைத்து நின்றுள்ளனர். திருவள்ளுவர் கூறும்; அரசியல் எக்காலத்திற்கும் எந்த நாட்டினர்க்கும் பொருந்தக்கூடியது. புதியதாக ஒர் அரசு அமையவும் வழிக்காட்டுகிறது. திருவள்ளுவர் கூறும்; அரசியலும் இன்றைய அரசியலும் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும் நம் அரசியல் எந்த அளவில் உள்ளது என்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக