புதன், 28 ஏப்ரல், 2021

தமிழரின் மரபில் அகத்தினை வாயிலர் மரபுகள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


தமிழ்மொழியின் சிறப்புகளில் முதன்மையானதாக சுட்டபடுவது இல்வாழ்க்கை எனும் அகத்திணை மரபு, சங்க இலக்கியத்தில் 1800 பாடல்களுக்கு மேல் அகத்திணை தான், தலைவன் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டபின், தலைவியை சாமளிக்கும் நிகழ்வே வாயில். இங்கு வாயில்களின் இலக்கணங்களை காண்போம்.

வாயில் இலக்கணமாக தொல்காப்பியர்,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

பாணன் பாடினி இளையர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்களென்ப.” ஆகிய 12 பேரும் வாயில்கள் என்று சொல்லுவார்.  அகவொழுக்கம் நிகழ்தற்கு வாயில்கள் போன்று விளங்குவதால் வாயில்கள் எனப்பட்டனர்.

“எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்

புல்லிய மகிழ்ச்சி பொருளவென்ப”

மேற்சொன்ன 12 வாயில்களும் தலைவனும் தலைவியும் இன்பமாக வாழும் வாழ்க்கைக்கு உதவுவர்.  புதல்வனும் தலைவனுக்கு வாயிலாவதைக் காட்டும் பாடலும் பழந்தமிழில் உள்ளது. 

வாயில் மறுத்தல் துறை

வாயில் மறுத்தலின் துறையாக தொல்காப்பியர் நான்கினை சுட்டுகிறார். அவை 

1. வாயில் வேண்டல்

2. வாயில் மறுத்தல்

3. வாயில் நேர்வித்தல் 

4. வாயில் நேர்தல் எனும் நான்கும் அகத்துiறைகளை உள்ளடக்கியது.

பரத்தையிற் பிரிவு  பற்றி கூறும் நம்பியகப் பொருள்,

“வாயில் வேண்டல் வாயில் மறுத்தல் 

வாயில் வேண்டல் வாயில் நேர்தல்என் 

றாய பரத்தையின் அகற்சிசால் வகைத்தே”

என நான்கு வகையை பற்றி கூறுகின்றது.  எனவே இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என அறியலாம்.

வாயில் மறுக்கும் சூழல்

வாயில் மறுக்கும் சூழலில் பெரிதும் பங்கு கொள்பவர்கள் தோழியே, அவள் தலைவன் தலைவி இருவரின் களவு கற்பு ஆகிய இரு காலகட்டத்திலும் உடனிருந்து தலைவனின் தீய செயலை இடித்துரைக்கக் கொண்டே இருப்பாள்.  துலைவியின் நலத்தில் பெரிதும் அக்கறை கொண்டவளாய், தலைவனை உரிமையயோடு கண்டித்தாள்.  துலைவன் பரத்தை வீட்டிற்குச் சென்று தங்கிப் பின்னர் தலைவியை காண வரும்போது அவன் உள்ளுர அஞ்சினான்.  இதனால் வீட்டினுள் புக அஞ்சினான்.  ஆகத்தினுள் புகுவதற்குத் தலைவன் பாணனை முதலில் வாயில் வேண்டும் பொருட்டு அனுப்பினான்.

சில சமயம் தலைவனே வாயில் வேண்டுவது பொல பாடல்களும் உள்ளன.  அப்படி வாயில் வேண்டும் போது தலைவியின் சார்பாகத் தோழி வாயில் மறுப்பாள்.

வாயில் மறுத்தலில் தோழி

களவுக் காலத்தில் தோழி பெரும்பான்மையான சந்தர்பங்களில் தலைவன் தலைவியைக் காண வரும்போது திருமணம் செய்து கொண்டு இந்த ஊர் தூற்றுவதை நீக்கிப் பின் தலைவியை அழைத்து செல்லுமாறு கூறுவாள்.  கற்புக் காலத்தில் தலைவன் குறிப்பறிந்து வாயில் மறுப்பதுண்டு தலைவனுக்கு தலைவி வாயில் மறுப்பதும் உண்டு.  தலைவன் தலைவியை இணைத்து வைப்பது தோழி நோக்கமாக இருந்தது.  களவுக் காலத்தில் தலைவன் தலைவியிடம் கொண்ட அன்பு கற்புக் காலத்தில் குறைகிறது.  இதனை உரைத்தும் தோழி வாயில் மறுக்கிறாள்.

தலைவனின் கொடுமை கூறல்

“பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி

மடத்தகு கிழமையுடைமையும்

அன்பலை கொடிய என்றலு முரியன்” (தொல்)

என்ற தொல்காப்பிய நூற்பாவில் பரத்தையொழுக்கத்தைப் போக்குதல்  வேண்டியும் தலைவன் கூறியதை உண்மை என கொள்ளும் மடைமைக் கணம்; கொண்ட தலைவிக்குத் தன் தோழி தலைவனனின் கொடுமையை எடுத்துக் கூறுவாள் எனக்கிறார்;.

தலைவன் தான் பரத்தையிடம் இருந்து வந்ததை தலைவியிடம் மறுக்கிறான்.  தலைவியும் தன் பேதமையால் அதனை அறியாது கற்பு வாழ்வின் தொடக்கத்தில் தலைவன் கூறுவதை நம்பிவிடுகிறாள்.  பின் தலைவன் பரத்தையோடு புனலாடியதை தோழி பார்த்து தலைவியிடம் கூற தலைவி தலைவனுடன் ஊடல் கொள்கிறான்.

தலைவியின் இல்லற மாண்பு

தலைமகன் தலைவியை பிரிந்து பரத்தையுடன் தங்கி வரும்போது அவனுக்கு தோழி தலைவியின் இல்லறமாண்புகளையெல்லாம் அவனிடம் எடுத்துக் கூறி அதாவது அந்தணர், சான்றோர், அருந்தவத்தோர், அரசர் முதலானாரே வழிபடுக என கணவன் கற்பித்தவற்றால் அவளும் அதன்படியே வழிபடுகின்றாள்.  இல்லத்தில் இருப்பவர்களுக்கும், உறவினர்களாக வருபவர்களுக்கும் விருந்தோம்பல் செய்வதும் இரவலர்க்கு பொன் முதலான கொடுத்தும் அறச்செயல்களுடன் இருக்கும் தலைவியை விடுத்து பரத்தையை நாடிச் செல்கின்றாலே என தோழி கடிந்துரைக்கிறாள்.

வாயில் மறுத்தலுக்கான காரணங்கள்

1. அலராதல்

2. புனலாடல் 

3. பரத்தமை ஒழுக்கம்

4. நலனழிதல் 

5. ஈன்;றணிமை

6. முதுமை  

7. சூழ் வாய்த்தமை

ஆகிய காரணங்களை கூறி வாயில் மறுக்கின்றனர்.

சங்க கால வாயில்கள்

சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களின் அகத்திணைச் சார்ந்த பாடல்களில் தலைமக்களின் வாழ்வியல் சூழலை மையமிட்ட சில உவமைகள் காணக்கிடக்கின்றன. 

அது தலைமக்களது களவு, கற்பு  ஆகிய இரு நிலைகளில் ஏற்படும் நிகழ்வுகளை மையமிட்டதாக அமைந்துள்ளன.  அவை

1. பொது நிலை உவமை 

2. பிரிவு வழி உவமை

பரத்தையர் பிரிவால் தலைவி ஊகடல் கொண்டிருப்பதை அறிந்த தலைவன் அவளது நிலையை அறிய தூதுவரை அனுப்புகிறான்.  தலைவனுகாக வாயில் வேண்டி வந்தோரிடம் கடுகைப் போன்ற சிறிய பூக்களை உடைய ஞாழல் மரம் மருத மரத்தின் மலர்களோடு சேர்ந்து நீர்த்துறையை அழகு செய்தது அதுபோல் தலைவனும் பலரும் காணுமாறு நீராடு துறையில் பரத்தையருடன் சேர்ந்து ஆடினான் என்பதைத் தலைவி நயம்படக்கூறி வாயில் மறுப்பதைக் கூறியுள்ளனர்.

“ஐயயவி யன்ன சிறுவீ ஞாழல்

செய்வீ மருதின் செம்மலோடு தாஅய்த்

துறையணிந் தன்றவ ருரே”

என்ற பாடல் வரிகள் மூலம் குறிப்பிடப்படுகின்றன.

சங்க காலத்தில் தலைவன், தலைவியை விட்டு பிரிந்து சென்று பரத்தையுடன் இருப்பான் இந்த நிலையினை வெளிப்படையாக கூறாமல் கருப்பொருள்களில் மூலம் கூறுவர்.

தலைவன் தலைவி காதல் வாழ்க்கையை உள்ளுறை உவமம் மூலம் அமைத்துக் கூறப்படும். 

“உள்ளுறை தெய்வம் ஒழிந்தனை நிலன எனத்

கொள்ளும் என்ப குறியறிந்தோரே”  (தொ.அ. 993)

என்ற நூற்பாவில் மூலம் உள்ளுறை உவமம் கருப்பொருளில் தெய்வம் நீங்கலாக ஏனைய பொருள்களில் வரும் என புலனாகிறது.

“உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் 

புள்ளொடும் விலங்கோடும் பிறவோடும் புலப்படும்”   (ந.அ.ஒ.238) 

“மாலை வெண்காழ் காவலர் வீச 

நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் 

புள்பல நாடன் மடமகள் 

நலங்கிளர் பணைத்தோள் விலக்கின செலவே”  (ஐங்குறு. 421)

என்ற பாடலின் மூலம் தடி வீழ்ந்த ஒலியை குறுமுயல் இரியல் போனாற் போன்று தலைவியைப் பிரிவால் வருத்தப்பாடுவாள் என்பது உள்ளுறையாக இதில் அமைந்துள்ளது..  சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் அளவுக்கதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.

பரத்தையர் ஒழுக்கம் நிலவிய காலத்தில் அதை வெறுத்துப் பாடிய மன்னர்களும் இருந்தனர்.

“தீதில் நெஞ்சத்து காதல் கொள்ளாய்

புல்லிருங் கூந்தல் மகளி;ர் 

ஓல்லா முயக்கிடைக் குழைக என்தாரே”

எனும் பாடல் வரிகளின் மூலம் நலங்கிள்ளி என்னும் சோழ மன்னன் கூறும் வஞ்சினப்பாட்டில் பரத்தையர் உறவை இழிவானது  என்று சுட்டுகிறான்.  நெஞ்சில் அன்பில்லாமல்  தழுவும் பரத்தையைத் தொழுது இழிவு என்று கருதியிருக்கிறார்.

ஓளவையின் தனிமனித அறம்

சங்க காலத்திலேயே ஒரு தனிமனிதனின் என்பவன் எவ்வாறு வாழவேண்டும் அவன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கூறுகள் யாவற்றையும் ஒரே வரியில் ஒளவைப் பிராட்டியால் கூறப்பட்டுள்ளது.

‘சீர்மை  மறவேல்’ அனைத்துவிதச் சிறப்புகளையும் தரும் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் மறத்தல் கூடாது.  ஓளவையாரின் ஒழுக்கம் என்பது ‘ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாடே’ ஆகும்.  ஆதனை மறுத்து பரத்தையரை நாடிச் செல்வதால் ஒழுக்கத்திற்கு உரிய நிலைப்பாட்டில் இருந்து மனிதன் தவறு புரியும் நிலையான தீயநிலைக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்வதாகும் என்கிறார்.  இது தனிமனித அறத்தின் ஓழுக்க நிலையினை எடுத்துரைக்கிறது.

முடிவுரை

தமிழர்களின் அக வாழ்க்கை முறை பெரும் பிரமிப்பை ஏற்படுத்தவல்லது, தலைவன் திருமனத்திற்கு பிறகு பரத்தை பெண்களை நாடிச்செல்கின்றான், மீண்டுவரும்போது தலைவி வாயில் மறுக்கிறாள். தலைவன், தலைவியிடையே ஏற்படும் சிறு ஊடல்களின் வெளிப்பாடாகவே வாயில் மறுத்தல், நிகழ்வுகள் நடைப்பெறுகிறது. இங்கு தலைவன், தலைவியிடையே காணப்படும் கோபம், வருத்தம், கலந்த அன்பினை காணமுடிகிறது. 

 

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக