சனி, 24 ஏப்ரல், 2021

இலக்கியங்களில் மனித இளமையும் நிலையாமை வாதங்களும்

   ஆ. இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


அழகை அக அழகு, புறஅழகு என இரண்டாகப் பகுப்பர்.  உள்ளமானது நல்ல எண்ணங்கள் மிகுந்து அழகாக மிளிர்ந்தால் மட்டுமே புற அழகு என்பது வெளிப்படும்.  இதனை ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ 

என்னும் பழமொழியால் அறியமுடிகிறது. இக்கட்டூரை வழி இளமை நிலையாமை கருத்துகளை காண்போம்


 

நெஞ்சே! இளமையை நீ நெஞ்யென்று நினைத்தனை.  உன்னைப் பெற்ற தாயின் இளமை எவ்வளவு நாள் இருந்தது, இந்த உடலானது இளமையைக் கொடுத்தது என்றால் முதியோர்களுக்கு உன்னைப் போல் வாரி கைகொடுத்து அழைத்துச் செல்வதைக் கண்டிலையோ! அத்தகைய மேனி உடையவரும் கையில் கோல் ஊன்றிக் கொண்டு நடை தளர்ந்து நின்றலைக் கண்டிலையோ! இளம் புதல்வர்கள் முன்னே செல்ல மூத்தோர் பின்னே மெல்ல நடந்து செல்வதைக் கண்டிலையோ! ஊடலின் பெருமையழிந்து தேகம் உலர்ந்து, கண்ணும் உள்ளொடுங்கித தளர்ந்து, வாய் உலர்ந்து கைகள் வற்றிச் சோர்ந்து நிற்பவரைக் கண்லையோ! ‘உடல் தளர்ந்து மெலிந்தும் இக்கிழவன் இறவாமல் உள்ளனனே’ என்று சிலர் உரைத்தலைக் கேட்டிலையோ!

உடலில் பெருநோய் கண்டு குறுகி வருந்துதலைக் கண்ட நெஞ்சே! கோடிய வினையின் வயத்தால் சூலைநோய் கண்டு துன்புறுதலைக் கண்டிலையோ! வுhதம், பித்தம், சீதம் என்னுமாறு நோய்கண்டு வாடுபவரைக் கண்டிலையோ! ஐக, கால், கண், மூட்டு, தேகம் முதலாக பல வகைகளில் பிணிகண்டு வாடும் மனிதர்கலைள கண்டிலையோ! ஆதலால் இளமை என்பது ஒரு பொருளாக எண்ணப்பட வேண்டாம்.

 

சமண, பௌத்த சமயங்கள் பொருள் நிலையாமையை விட யாக்கை நிலையாமையே அதிகமாக வலியுறுத்துகின்றன.  காப்பியங்கள் பெரும்பாலும் சமண பௌத்த சமயங்களையே தழுவி எழுதப்பட்டதாகும்.  மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களும் மனித உடலின் நிலையாமை பற்றிக் கூறுகின்றன.

‘வினையின் வந்தது வினைக்கு விளைவாயது

புனைவன் நீங்கிற் புலால் புறத்திடுவது’ (26)

 எனும் மணிமேகலை வரிகள் மனித உடலின் இழிநிலையைப் பேசுகிறது.

மக்கள் பிறந்து வளர்ந்து பிணி நோய்க்கு ஆளான பின் இறப்பர் என்பது மனித இனத்தின் இயல்பு என்பதை அனைவரும் உணர்வர். இளமை நிலையாமை ஆகியவற்றை நம் நெஞ்சை விட்டு நீங்கா வண்ணம் நிலைத்த உவமைக் கொண்டு சிந்தாமணி முனிவர் விளக்குகிறார். இளமை, இன்பம், பொருள், வளமை ஆகிய நிலைத்து நிற்பன அல்ல என்று வளையாபதியும் நிலையாமையை உணர்த்துகிறர்.

‘மன்னும் நீர் மொக்குள் ஒக்கும்

மானுடர் இளமை இன்பம்

மின்னின் ஒத்த இறக்கம் செல்வம்

வெயில் உறு பணியின் நீங்கும்’ (27)

 எனும் அடிகளால் காணலாம்.   இளமை, இன்பம், பொருள், வளமை ஆகியன நிலைத்து நிற்பன அல்ல என்று வளையாபதியும் நிலையாமையை வலியுறுத்துகின்றன.

‘இளமையும் நிலையாவால், இன்பமும் நின்ற அல்ல

வளவையும் அஃதே போல், வைகலும் துன்ப வெள்ளம்

உள என நிலையாதே, செல்கதிக்கு என்றும்

விளை நிலம் உழுவார் போல் வித்து நீர் செய்து கெண்மீன்’ (28)

எனும் நான்கடிகளில் இளமை, இன்பம், வளமை ஆகியவை நம்மிடம் உள்ளன.  அதை விட்டு இப்போதே அறவழியைக் கடைபிடித்து பயன் அடைவீர்களாக என்று உணர்த்துகிறது.

குண்டலகேசியில்   நிலையாமையைப் பற்றிப் பேசுகின்றது. இதனை

‘பாளையும் தண்மை செத்தும்

புhலனாம் தன்மை செத்தும்

பாளையும் தன்மை செத்தும்

காமுறும் இளமை செத்தும்’ (29)

எனும் அடிகளால் அறிய முடிகின்றது.  நிலையாமையை அறிந்து நல்லறம் செய்தல் வேண்டும்.

 

இளமைப் பருவத்தில் தரித்திரம் வந்தடைந்தால் அது மிகத் துன்பமாகும்.  ஆளவிற்கு அதிகமான இனிமையானவையும் துன்பம தரக் கூடியவையேயாகும்.  குhலமல்லாத காலத்தில் மலர்ந்த நல்ல மலரும்.  அதைப் போலக் கணவனில்லாத பெண்ணிடத்துள்ள அழகும் துன்பம் தரக்கூடியது ஆகும்.

நீரினிடத்தே உருவாகின்ற குமிழியைப் போல் வாலிப பவரும் விரைவில் அழிந்துவிடக் கூடியதாகும்.  பூரணமான ஐசுவரியங்களெல்லாம் அந்த நீரினிடத்தே (காற்றினால்) சுருட்டப்படுகின்ற பெரிய அலைகளைப் போல நிலையற்றனவாகும்.

பூரணமான இரத்தின ஆபரணத்துக்கு அதனை அழகு செய்வதற்காக வேறோர் ஆபரணம் எக்காலத்திலும தேவையில்லை.  அழகுக்கு அழகு செய்பவர்கள் யார்? இருக்கிறார்கள் (யாருமில்லை அவ்வாறே) கல்வியறிவுடையோர்க்கு அக்கல்வியறிவாகிய அழகே ஆபரணமாகுமேயல்லாமல் அவர்களுக்கு வேறோர் ஆபரணம் தேவையில்லை. (ஒருவர், தமக்கு இளம் பவருத்திலேயே) மரணம் இல்லாமல் தம் ஆயட்காலத்தினது எல்லையிருக்கிறது என்பதைக் கண்டறிவாரேயானால் இப்போது வாலிப பருவத்திலிருக்கிறோம்.  வயோதிக பருவத்தில் நோன்பிருந்து தவம் புரிவோம் என்று கூறி எனவே இளமை என்றுமே நிலையற்றது ஆகும்.

‘மன் வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு

வினைவேறு பட்டவர் பால் மேவும்’ (30)

அன்னத்தை ஒத்த அழகிய நடையையுடைய நங்கையே! ஆறத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்யும் அற்பர்களிடம் மனம் வேறொன்றாகவும், பேச்சு இன்னொன்றாகவும் இருக்கும்.  எனவே இளமையானது இல்லை.

விழிகளுக்கு அழகாகிய சபைக்கு அறிஞனே இரத்தினமாவான்: ஆகாயத்துக்குக் கதிரவனே அழகிய இரத்தினமாவான். அழகுடையனவும் நறுமணமுள்ள சந்தனம் பூசப் பெற்ற பெண்ணும் இரத்தினமாவான் இளமை நிலையற்றது.

‘பெண்ணுதவும் காலைப் பிதாவிரும்பும் வித்தையே 

ஏண்ணில் தனம் விரும்பும் ஈன்றதாய் - நண்ணிடையில்

கூரியநல் சுற்றம் குலம்விரும்பும் காந்தனது

பேரழகு தான்விரும்பும் பெண்’ (31)

பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை மணமகனது கல்வியறிவை விரும்புவான். பெண்ணைப் பெற்ற தாயோ கணக்கில்லாத செல்வத்தை விரும்புவான்.  இவ்விருவருக்குமிடையே பொருந்திய மிகுதியான நல்ல உறவினர்கள் குலச்சிறப்பை விரும்புவார்.  மணப்பெண்ணோ கணவனுடைய மிகுதியான எழில் நலத்தை விரும்புவாள்.  இவை எதுவும் நிலையானதல்ல.

தொகுதியான கூந்தலையுடைய பெண்களின் அழகு நலம் அனைத்தும் அப்பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்த அந்தக் கணத்திலேயே போய்விடும்.  நூல்களைக் கற்று இறையருளை விரும்பிய சான்றோர்களது மேன்மை அனைத்தும் அந்த அருளுக்குப் புறம்பான சிற்றின்பத்தை (இறைவனிடம் தமக்குக் கொடுக்குமாறு) கேட்ட அந்தக் கணத்திலேயே அழிந்துவிடும்.

அழகு, இளமை ஆகிய அனைத்தும் ஒரே மாதிரி எல்லோரிடத்திலும் இடம் பெற்றிராமையைக் கண்டிருந்தும் இப்படி ஏற்றத்தாழ்வோடு காணப்படுவதற்குக் காரணம் அவரவர் பழவினைப் பயனே என்று உணராமல், தான் மறுபிறவியில் உய்வு பெறுவதற்குரிய ஷஒப்பற்ற நெறி ஒன்றிலேயும் பொருந்தியிராதவனின் வாழ்க்கை’ உடம்பெடுத்து வந்து நின்று (அந்த உடம்பால் வரும் பயனைக் கொள்ளாமல் வெறுமனே) அழிந்துப் போகும தன்மையையே உடையதாயிருக்கும்.

ஆண்களுடைய தலை முடியின் அழகும் அழகல்ல, மடிக்கப்பட்ட ஆடையின் கரையழகும் (பெண்கள் பூசுகின்ற) மஞ்சன் பூச்சின் அழகும் உண்மையான அழகும் அழகல்ல.  மனதளவில் நாம் நல்லவராக இருக்கிறோம் என்னும் பெருமித உணர்வோடு நடுவு நிலையில் நிற்பதைத் தருவதால் கல்வியாகிய அழகே உண்மை அழகாகும்.

வெளியலங்காரங்களை விட உள்ளத் தூய்மையே சிறந்த அழகு என்று பெரியோர் உரைப்பார்.  உள்ளத் தூய்மையைக் கல்வி அளிப்பதால் அந்தக் கல்விதான் அழகு.

கல்வியானது இப்பிறவிக்குரிய நன்மையெல்லாம் தரும் கொடுத்தாலும் தன் அளவில் மிகுமேயல்லாமல் குறைவுபடாது, கற்றோரைப் புகழ்;பெறச் செய்யும்.

 

“படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாடம் - நடை தனக்குக் 

கோடா மொழிவனப்புக் கோற்(கு) அதுவே சேவகர்க்கு

வாடாத வன்கண் வனப்பு” (32) 

சைனியத்திற்குச் சௌந்தர்யமாவது யானைப் படையாகும். முங்கையர் தம் இருப்புக்கு அது மெல்லிய தாயிருப்பதே எழிலாகும்.  ஊயர்ந்த ஆசாரத்திற்கு முன்னுக்குப் பின்னாய் மாறிப் பேசதா. வார்த்தைகளே அழகாகும்.  செங்கோல் அரசாட்சிக்கும் (மன்னவன்) அப்படி மாறிப் பேசாதிருத்தலே கவினாகும்.  வீரர்களுக்கு மெருகாவது தளராத தைரியமேயாகும்.  எனவே இவையெல்லாம் நிலையற்றதாகும்.

ஒருவன் தனக்குள்ள இளமைப் பருவத்தை ஒரு நாள் முதுமைப் பருவம் ஆகும்.  அச்சத்திற்குக் காரணமான துன்பம் இல்லாச் செய்தியைக் கேட்பது இனிதாகும். பெரிய மென்மையான மூங்கில் போன்ற தோள்களையும் தளிர் போன்ற மென்மையும் உடைய மகளிரை நஞ்சு (விசம்) என எண்ணுதல் இனிதாகும்.

இளம்வயதிலேயே படிக்காது இருப்பது குற்றம், போதிய வருவாயும் செல்வமும் இல்லாத போது வாரி வழங்குதல் குற்றம்.  உறவினர்களும் நண்பர்களும் பக்கத்தில் இல்லாதபோது பிறர் மீது சீற்ற் கொள்ளுதல் குற்றம் உள்ளன்பு இல்லாதார் வீட்டில் உணவு உண்ணுதல் குற்றம்.

இயற்கையில் மலரும் மலர்கள் வாடுவதும் தோன்றும் பொருள்கள் அழிதலும் இவ்வுலகியற்கையாகும்.  மனித வாழ்க்கையும் அத்தன்மையாகும்.  நுpலம், நீர் போன்றவை தோன்றி மறையும்.  செல்வமும் இளமையும் அழிந்துவிடும்.


சூரியன் நாளாகிய வாளைக் கொண்டு மனித ஆயுளை அறுக்கிறான் என்று உணர்ந்த இளமை கழியும் முன்னர் நம்மால் முடிந்த அறங்களைச் செய்தல் வேண்டும். இந்த ஞாலத்தின் வாழ்வு விரைந்து கழிந்து மறைந்து போவது ஆதலால் உயிர் போகும்முன் அந்த இடத்திற்கு உயர்ந்த கருவூலத்தை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இல்லையேல் அடைய நேர்ந்திடும். மனிதனுக்குப் பூரணமான வயது நூறு.  அது முழுவதும் ஒரு மனிதனுக்குக் கிடைப்பதில்லை.  கோடியில் ஒருவனுக்கும் கூடாது அது ஒருவேளை கூடினாலும் உறக்கம் முதலியவற்றால் முக்கால் பாகத்திற்கு மேல் வீணே ஒழிந்துப் போகும் மீதம் எஞ்சியுள்ள மிக கொஞ்சமும் அதுவும் துன்ப மயம் என ஒரு மனிதன் அஞ்சி இருப்பான்.


மனித உடம்பை எடுத்து வந்த ஒருவன் அதனால் அடையும் உயர்பயன் எதுவும் இல்லை.  வேறு ஒர் பிறவியும் அடைய முடியாது.  ஆகவே இந்த இளமையும் அதேப் போல் தான் என்று நிலையானது இல்லை. உள்ளப் பண்பில்லாத அழகு இரையற்ற தூண்டில் முள்போல் வறிதே இழிந்துப் படுகின்றது என ‘எமர்சன்’ என்னும் அமெரிக்கப் பெரும்புலவர் கூறியுள்ளார்.  புறத்தோற்றம் எவ்வளவு சிறந்திருந்தாலும் அகத்தே நல்ல இயல்பு இல்லை ஆயின் உலகம் அதனை மதியாது.

இளமையும் எழிலும் ஒரு நிலையெ மருவி மிளர்கின்ற இந்த அதிசய அமைதி உலகம் முழுவதையும் எளிதே வசம் செய்துள்ளது.  பகைமை மூண்டு போர் முகத்தில் நேர்ந்து நெடிது போராடிய சூரனும் ஒரு முறை குமரனது எழிலை நோக்கி உள்ளம உருகினான்.  அழகில் மயங்கிய அவன் இகலையும் மறந்து புகலடைய விழைந்து புகழ்ந்து போற்றினான். இளைமையில் நான் எப்படி இருந்தேன்.  இப்போது இப்படி ஆனேன் என்று ஒரு மனிதன் முதமையில் இளமையை நினைத்து இரங்கி ஏங்குகின்றமையால் இதன் விழுமிய நிலைமை புலனாகும்.

இளமை, இன்பம், நிலையான பயனைத் தருவதில்லை.  இன்பத்தைக் கல்வி அறிவில்லாதவர்கள் அறிவுடையவர்கள் இளமை, இன்பம் ஆகியவற்றை விரும்பமாட்டார்கள் அவர்கள் அறச் செயலைச் செய்வதையே தன் பயனாகக் கொள்ளுவர் என்பதை நாலடியாhரின் பாடல்கள் வழி அறிய முடிகின்றது.


கானல் நீரை உண்மையான நீர் என்று எண்ணி மான்கள் அதன் அருகில் சென்று ஏமாறுவது போல் உலகில் வாழும் மக்கள் நம் உடலும், இளமையையும் நிலையானது என நம்பி ஏமாறுகிறார்கள். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போதும் வாழும் போதும் நல்ல அறங்களைச் செய்தல் வேண்டும்.  சுற்றத்தைப் போற்றாத மனைவியின் அழகும், தந்தையை இழந்த மகளின் அழகும் அந்தணர் வீட்டிலிருந்து புலால் உண்ணுதலும் பயனளிக்காத மந்திரங்களைச் சொல்லுதலும் இன்னாதவையாகும்.

சேர்ந்த செல்வத்தைக் கொண்டு உண்டு அனுபவிக்காது இருத்தலும் அன்பு காட்டாப் பகைவனிடம் பழக்கம் வைத்தலும், பார்வை இல்லாத ஒருவன் முன்தோன்றும் அழகுடையனவும் கல்வி அறிவில்லாதவன் கணக்கு வழக்கும் இன்னாதவை.

சான்றோர்களைப் பழித்தலும், உரிமையுடன பழகிய நல்லோர் உறவைக் களைதலும், வறியர் அழகுடன் இருத்தலும் இளமையிலேயே முதுமை அடைதலும் இன்னாதவை.  இளமை சிறந்தது நோயற்ற இளமை இவையெல்லாம்  நிலையானதல்ல.

சொத்துக்களின் உரிமை பிறர் வசமாகிவிடுவதால் தம் சொந்த விருப்பத்தால் தானமளிப்பதும் முடியாது.  இளமையானது தூரமாக நீங்கிவிட்டதால் காதல் மனைவியரும் பொருட்படுத்துவது இல்லை. இப்படிப்பட்ட முதுமைப்பருவம் என்றுமே நிலையற்றதாகும்.

ஒரு பக்கம் ஆடை தைத்தவுடன் மறுபக்கம்  வாழ்க்கை எனப்படும் அழகிய ஆடையை அணிந்துள்ள நீ தைத்த உடலாகிய ஆடை பயனின்றி அழிகிறதே வாழ்நாள் வீணாகாமல் பார்த்து நடந்துக்கொள்ள வேண்டும். அறச்செயல் புரிந்து வாழ்க்கையைப் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

அறிவு, புகழ், குடிப்பெருமை, வலிமை, தவம், செல்வம், ஊழ், அழகு ஆகிய எட்டுவகை ஆணவமும் யாருக்கும் போகும் உயிருக்குப் பாதுகாப்புத் தராது. மெய்யறிவு பெற்ற ஞானிகளோ இளமையைக் குறித்து கவலைப்படமாட்டார்கள். ஆனால் பேராசைக் கொண்டவர்கள் மட்டும் இளமை என்றும் நிலையானது என்று நம்புகின்றனர். இளமை நிலையானது இல்லை என்று அவர்கள் தெரியாமல் வாழ்கின்றனர்.

புற அழகுக்கு உதவக்கூடிய ஆடை, ஆபரணங்கள் என ஆயிரம் இருந்தாலும், அக அழகென்றாலே நல்ல சிந்தனையும், கற்ற கல்வியுமே இக்கல்வியழகைப் பற்றி நாலடியார் குறிப்பிடுகிறது.

 

“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு” (33)

தலைமுடியின் அழகும், அழகாக வளைத்து உட்படுத்தப்பட்ட சேலையின் கரையழகும், மஞ்சள் பூச்சு அழகும் அழகல்ல. உள்ளத்தில் நல்லவராய் இருக்கின்றோம் என்ற நினைவைத் தருவதும், சிந்திக்கும் திறனை வளர்ப்பதுமான கல்வியின் அழகே சிறந்த அழகு.

எக்குறையும் இல்லாத நேர்மையான ஒழுக்க நெறியைக் கொண்ட மறுப்பிறப்புக்கே கல்வியே அழகு தரக்கூடிய அணிகலன் என்பதை

“கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் கல்வியும் மூன்றும்

மறுமைக்கு அணிகலம் கல்வியிம் மூன்றும்

குறியுடையோர் கண்ணே உள” (34)

என்னும் திரிகடுகம் பாடல் புலப்படுத்துகிறது. 

அழகு அழகு என்று பித்தம் பிடித்தவன் போல் பேசுகிறாள். எதை அழகு என்று கூறுகிறாய் மேல் தோலா வாழைப் பழத்தை உரித்துக் காட்டுகிறேன். உள்ளே வழவழப்புதான். அங்கங்கே ஓட்டைகள், துளைகள், இந்த உடம்பு அதன் மீது போர்த்திய போர்வை, அதைத்தான் நீ அழகு என்று கூறுகிறாய் எதை அழகு என்கிறாய் இந்த அழகு நிலையில்லாதது ஆகும்.

வெறி ஆடும் களத்திற்குச் செம்மறி ஆட்டை அந்த நெறி கெட்ட பூசாரி, கயிறு கட்டி இழுத்துச் செல்கிறான். கையில் பசுந்தழை காட்டி, இழுத்துச் செல்கிறான். அதன் பசியை மூட்டி விடுகிறான். பூசாரியை ஆடு நம்புகிறது. எதுவும் சிந்திக்காமல் அவன் பின் செல்கிறது. வாலிபப் பிள்ளைகள்! இவர்களுக்கு யார் என்ன சொல்ல முடியும் மயக்கம் அவர்கள் காட்டுவது இல்லை தயக்கம் விரும்புகின்றனர் மகளிர் மயக்கம். அவர்கள் கதை முடிவு நாம் ஏன் சொல்ல வேண்டும் அதனை மயக்குகிறாள் ஒரு மாது, அழிகிறான் இந்தச் சாது, இது இவன் வாழ்க்கைக்கு ஒத்து போகாது.

இந்த உடம்பினைத் தவிர்த்து வேறு கேள்விகளில் அவர்கள் தடம் புரள்வதில்லை. அவர்கள் நோக்கம் என்ன ஏன் இப்படிக் கேட்கிறார்கள் அவன் உலகுக்குச் சுமை, ஏன் இப்படி இழுபறியாக இருக்கிறான்   இளமை நில்லாது. முதுமை விலை போகாது. யாரும் மதிக்க மாட்டார்கள். இது இயற்கையின் நியதியாகும்.

மெய்யறிவு, நல்லகாட்சி, நல்ல ஒழுக்கம் என்னும் மூன்றையும் பெற்று தன் முயற்சியால் குற்றம் நீங்கப் பெறாமல் இருந்தால், அவன் உடம்பு மெருகு போடப்பட்ட பொன் நகையைப் போலவும், தேயும் அகில் கட்டையைப் போலவும் நாள் ஆக ஆக நலிவுற்று அழிந்து போகும்.

பொய் நூல்களாகிய மற்ற எந்த நூல்களைக் கற்பதாலும், கேட்பதாலும் என்ன பயன் மெய்ந்நூலாகிய இந்த அறநெறிச் சாரத்தைக் கற்றும் கேட்டும் அறிந்தவர்கள் உயிருக்கு உறுதியைத் தரும் அடிப்படையை அறிந்து வீடுபேற்றினை அடைவார்கள்.

“ஆற்றாமை ஊரஅறிவு இன்றியாது என்றும்

தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி

மனையின் அகன்றுபோய் மாபெருங் காட்டில்

நனையில் உடம்பு இருதல் நன்று” (35)

ஒருவன் துன்ப மிகுதியால் அறிவிழந்து ஏதும் தெரியாதவனாக இருக்கிறான் என்று இகழப்படும் நிலையில் வீட்டிலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பதைவிட காட்டிற்குச் சென்று தன் உடம்பை அழியச் செய்வது மேலானது என்றார்.

அருளால் அறம் வளரும். முயற்சியினால் செல்வம் பெருகும். செல்வத்தால் செல்வம் மேலும் வளரும். மயக்கத்தால் ஏற்படும் சிற்றின்பத்தால் ஆசைகள் வளரும். அவ்வாறான ஆசை, இளமை போன்றவை எல்லாம் நிலையானது இல்லை.

உயிர் என்னும் விதையை விதைத்து உடல் என்னும் பயிரை விளைவித்து எமன் உண்ணப் போகும் வாழ்வை நிலையானது என்று நம்பி தீமையை விதையாக விதைத்து  நல்லொழுக்கத்தை நீக்;கிவிட்டு நடப்பதால் ஏற்படும் பலன் எதுவும் இல்லை. ஆனால் குற்றங்களை நீக்கிவிட்டு மறுமை இன்பத்துக்கான அறச்செயல்களைச் செய்வோமானால் எமனும் நெருங்க முடியாத வீடுபேற்றை அடையலாம்.

உப்பு இல்லாத தின்பண்டத்தை உப்புக் குன்றின்மேல் அமர்ந்து உண்டாலும், அது சுவைக்காது. அவ்வாறே உடம்பும், இளமையும் இருந்தாலும் நன்மை செய்யாதபோது அவற்றால் ஒரு பயனும் இல்லை.

“மடப்பதூஉம் மக்கள் பெருவதுஉம் பெண்பால்

முடிப்பதூஉம் எல்லாரும் செல்வர் - படைத்தனால்

இட்டு உண்டு இல்வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே

நிற்பாரே பெண்டிர்என் பார்” (36)

இளமைப் பருவம் அடைவதும், பிள்ளைகளைப் பெறுவதும், நகைகளை அணிவதும் எல்லாப் பெண்களுமே செய்வர். இந்த அலங்காரம் என்று நிலையானது என நம்பி ஏமாந்துப் போகிறார்கள். ஏனெனில் இவையெதும் நிலையானதல்ல.

உயிரானது கழன்று ஆடுவதற்குக் காரணமாகிய தோற்றத்தையுடைய பிறவியினால் உடல் ஓயும் வரை ஓடியாடி வேலைகள் செய்து உயிர் நீங்கிய பின்னே வேறு ஓர் உருவத்தை அடைவதால், உயிரானது அரங்கில் நாடகம் முடியும் வரையிலும் ஆடி மறைகின்ற கூத்தாடியைப் போன்றதாகும்.

உயிர்கள் இவ்வுலகில் பிறப்பதும் அவ்வுயிர்கள் இன்பம் அனுபவிப்பதும் எமன் உயிர்களைக் கவர்ந்து செல்வதுமாகிய அனைத்து செயல்களுமே மாயம் ஆகும். அதனால் நாம் உயிரோடு இருக்கும் போதே நல்ல அறங்களைச் செய்தல் வேண்டும்.

தனது செல்வத்தின் அளவையும் வாழ்நாளின் அளவையும் தெளிவாக ஆராய்ந்து அறியாதவர் அற்ப இல்லற இன்பங்களில் மூழ்கித் திளைத்து கடமைகள் முடிந்த பின்பும் பூந்தேனை விட்டு முள்ளித்தேனை உண்பவர்க்கு நிகரானது.

நண்பரை செல்வந்தராக்கி எதிரிகளை அழித்து கூர்மையான பற்களையும் பட்டாடை உடுத்திய அழகிய உடுக்கைப் போன்ற இடையையும் உடைய மடந்தையர் மீது தீராப் பாசம் கொண்டு இல்லறம் நடத்திய பின்பு துறவறத்தை ஏற்காத உடம்பால் எந்தப் பயனும் இல்லை.

எண்ண இயலாத அளவு செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும் மன்னரைத் தன் வசமாக்கக் கூடிய திறமையும் அரசரால் தன் புலமைக்காகப் புகழப்படுவதும் நிலையானதல்ல.

மேன்மையானவர்களுடைய செல்வங்கள் விலைமகளது அழகு நலத்;தை ஒத்தனவாகும். மற்றச் சாதாரணமானவர்களது செல்வங்களோ (அவற்றை உரிமையாகக் கொண்டோருக்கு  மட்டும் உபயோகமாவதால்) நற்குலப்பெண்ணின் அழகு நலத்தைப் போன்றனவாகும். அற்பர்களது செல்வமோ தாலியை இழந்த விதவையர்கும பெண்ணழகைப் போல் எவருக்கும் உபயோகமாவதில்லை.

(ஒருவர் தமக்கு இளம் பருவத்திலேயே) மரணம் இல்லாமல் தம் ஆயுட்காலத்து எல்லையிருக்கிறது.  இப்போது வாலிப பருவத்திலிருக்கிறோம். வயோதிக  பருவத்தில் நோன்பிலிருந்து தவம் புரிப்போம்” என்று கூறி உள்ளத்திற கவலையின்றி வெறுமனே நித்திரையிற் கிடப்பதும் சரியானதேயாகும். ஆனால், அப்படி ஆயுட்காலத்தின் எல்லையைக் காண்பவர்கள் மிகக்குறைவு. ஆயுட்கால எல்லையைக் கண்டறிந்த சில சித்தர்கள் கூட வயோதிகம் வரும்வரை காலந்தாழ்த்தாமல் தவமாற்றுவர்.

முடிவுரை

வாழ்க்கையில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் எந்தப் பொருளும் நம்மோடு உடன் வராது, என்பதையும், எப்போதும் இளமை போன்ற எதன்மீதும் பற்று இல்லாமல் அற நிலையில் வாழ்க்கையை மேம்படுத்திச் செல்வதே சிறந்த வாழ்க்கையாகும்  மூப்பானது எப்பொழுதும் வரும் போகும் ஆனால் காலம் வரையிலும் அறத்தை வழிநடத்தி வாழ்வதே சிறந்ததாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக