சனி, 24 ஏப்ரல், 2021

திருக்குறளில் கால்நடை மருத்துவ அறிவியல்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 

 


திருக்குறள் என்பது தமிழில் தோன்றிய ஒரு பொதுமறை நூலாகக் கருதப்படுகிறது. இது காலங்கடந்தும் நாட்டின் எல்லைக் கடந்தும் ஒரு சிறப்பான நூலாகும். பல்வேறு துறை அறிஞர்கள் இந்தக் குறளைப் புதிய புதிய கோணங்களில் ஆய்ந்திருக்கின்றனர். வள்ளுவன் வகுத்த திருக்குறளில் மருத்துவம், அரசு, இறைமாட்சி, பொருளாதாரம், வேளாண்மை போன்ற ஆய்வுகள் ஆய்ந்து வகுக்கப்பட்டுள்ளது. திருக்குறள் கூறும் இவ்வாழ்வியல் நூலில் அகமும், புறமும் வகுத்தளிக்கும் வள்ளுவர் கால்நடைகளின் இயல்பையும் உவமைகளாகப் பயன்படுத்தி இருக்கிறார். எனவே திருக்குறளில் கால்நடை அறிவியல் கூறும் செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம். 

கால்நடை அறிவியல் கூறும் செய்திகள்:

திருக்குறளில் கூறப்படும் கால்நடைகளின் செய்திகளில் நான்கு வகையான மெய்களை வகுத்துக் கூறியுள்ளார். 

மரபியல் (புநநெவiஉள)

உடற்கூறியல் (யுயெவழஅல)

பாங்கியல் (டீநாயஎழைரசள)

உடலியங்கியல் (Phலளழைடழபல) 

மரபியல்:

அறத்துப்பாலில் வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறுவது,

ஷஷபுகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை||.

மாடுகளின் இனப்பண்புகளை கூறும் போது அவற்றின் நடைகளைப் பற்றியும் கூறுவார். இதில் ஆண் இன மாடுகளின் நடையினை ஷஷபீடுநடை|| என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டது. ஏறு ஓட்டும் காளைகளின் நடையினை பெருமிதம் படுத்திக் கூறியுள்ளார். சிங்கம் போன்ற நடையினை உடையது காளை என்றும் பொருள்படும்.

இதன் அடிப்படையில் குறளுக்கு விளக்கமாகச் சொல்லப்படுவது கணவனின் ஆண்மைக்கு புகழ்சேர்க்கும் மனைவியைப் பெறாதவர்கள் தன்னை இகழ்ந்தவர் முன்பு காளைபோல் நிமிர்ந்து நடக்க வேண்டும் என்பதாகும். 

மரபியலில் கூறப்படுவது காளைகளை தேர்வு செய்யப் பல வழிகள் இருப்பினும் முறையாகத் தேர்வு செய்ய காளைகளை வளர்க்கும் ஒருவரால் தான் கண்டுபிடிக்க முடியும். ஒரு மாட்டின் குறைகளை கண்டுபிடிக்க அந்த மாட்டினை எழுப்பி நடக்கச் செய்யும் போது எலும்பு முறிவு, போன்ற ஊனங்கள் இன்றி நலமாகவும், செழுமையாகவும் இருக்கிறதா என்று சொல்லமுடியும்.

ஷஷகொடுவரி வழங்கும் கோடு உயர் நெடுவரை

அரு விடர்ச் சிறு நெறி ஏறலின்||….

புலி பிறப்பில் மிகுந்த வீரத்தையும், வேட்டையாடும் திறனையும் பெற்று எவ்வாறு இருக்கிறதோ அதுபோல் வள்ளுவன் கூறும் சிறப்பான மொழிகள் அனைத்தும் நமக்கு வெற்றியைத் தரும்.

மாட்டை நடையில் பார்

ஆட்டை கொடையில் பார்

என்று பழிமொழியாக அக்காலத்தில் இருந்து பேசப்பட்டு வந்தது.

மாட்டை நடக்க வைத்து பார்க்க வேண்டும். அதே போல் ஆட்டின் தொடையை தொட்டுப் பார்த்து உடல் அமைப்பினை தெரிந்துக் கொள்வார்கள்.

வாழ்வியல்:

 ஆனினம் கலித்த அதர் பல கடந்து,

மானினம் கலித்த மலை பின் ஓழிய

மீனினம் கலித்த துறை பல நீத்தி,

உள்ளா வந்த வள் உயிர்ச் சிறப்பின்.

என்று வள்ளுவன் ஒவ்வொரு இனத்தையும் அதன் வாழ்விடத்தையும் மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார். 

உடற்கூறியல்:

யானை என்பது பருத்த உடல் அமைப்பினையும், பெரியக் கொம்புகளையும் உடையது. புலி யானையோடு ஒப்பிடும் போது சிறியது. ஆனால் புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் யானையை வேட்டையாகக் கொன்றுவிடும். இதனை வள்ளுவர்.

 பரியது கடாங்கோட்டது ஆயினும் யானை 

வெருஉம் புலிதாக் குறின்||.

என்ற குறள் மூலம் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் யானையின் உடல் அமைப்பு, கூர்மையான கொம்பு, புலி மிகவும் ஊக்கமுடையது. புலியின் வேட்டைக்கு யானை அஞ்சும் அளவிற்கு உடையது. 

பாங்கியல்:

 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருநகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து||.

இதில் ஆட்டுக்குட்டி முதலில் பின்னோக்கிச் சென்று பிறகு வேகமாக விரைந்து வந்து பகையைத் தாக்கும் என்று வள்ளுவர் இந்தக் குறளின் மூலம் விளக்கியுள்ளார். 

எருதுகளின் பாங்கியல்:

பண்டைக் காலத்தில் இருந்து எருதுகளையும், குதிரைகளையும் வண்டி இழுப்பதற்க்கும் உழவுத் தொழில் செய்வதற்கும் பயன்படுத்தினர். சில இடத்தில் விடாமுயற்சியுடன் இழுப்பதற்கு எருதுகளே காரணமாகும்.

ஷஷஎடுத்தெடுத்து உழுதாலும் எருதாகுமா?||

என்ற பழமொழிச் செய்திகளில் கூறப்படுகிறது. எனவே காளை என்பது கடின வேலைக்கும் இழுவை சக்தியை தாங்குவதற்க்கும் காளை பயன்படுகிறது. 

குதிரைகளின் இயல்பு:

உதைத்தல், கடித்தல் போன்ற விரும்பதகாத பாங்கினைக் கொண்டது. குதிரை மீது சவாரி செய்யும் போது கொஞ்சம் ஏமாந்தாலும் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடும் இயல்பைக் கொண்டது. 

இதனை வள்ளுவர் தீ நட்பு எனும் அதிகாரத்தில்

 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் 

தமரின் தன்னிமை தலை||.

கால்நடை உடலியங்கியல்:

கூகை (கோட்டான்) என்று பொருள் உண்டு. கோட்டானுக்கு பகலில் கண் தெரியாது. ஆனால் இரவில் பளிச்சென்று தெரியும். எனவே பகல் நேரத்தில் கோட்டானை காக்கை எளிதில் வென்று விடும். ஆனால் இறவில் கோட்டானுக்கு போட்டியிட முடியாது என்று வள்ளுவர் கூறியுள்ளார். 

 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது||.

கால்நடை மருத்துவம்:

தமிழ் நாட்டில் உழவர்கள் ஆடு, மாடு முதலிய கால்நடைகளைத் தொன்று தொட்டு வளர்த்துப் பேணி வருகின்றனர். பால்லாண்டுகளாகக் கால்நடைகளைப் பேணிப் பெற்ற அனுபவத்தால் கால்நடைகளைப் பராமரிக்கும் முறைகளையும், கால்நடை நோய்களையும் அவைகளைக் குணப்படுத்தும் முறைகளையும் கால்நடைகளின் அங்க அடையாளங்களையும் தெரிந்துள்ளனர். 

உண்மைகளைக் கற்றறிந்தவர்கள் ஷஷவாகடங்கள்|| என்று நூல்களில் எழுதிவைத்துள்ளனர். இத்தகைய வாகடங்கள் பல காலப்போக்கில் அழிந்துபோயின. புல நாட்டுப்புறங்களில் வழிமுறையாகக் கால்நடை மருத்துவர்களாக இருந்து வருபவர்களிடம் உள்ளன, மற்றும் தஞ்சை சரஸ்வதிமகால் நூல்நிலையத்திலு;, சென்னை அரசாங்கக் கீழ்நாட்டு ஏட்டுப்பிரதி நூல்நிலையத்திலும் உள்ளன.

முதலை:

முதலை என்பது தண்ணீரில் வாழக் கூடியது. அது தண்ணீரில் இருக்கும் போது இதனை யாரும் வெல்ல முடியாது. ஆனால் தண்ணீரை விட்டு வெளியே வந்தால் மற்றவை முதலையை வென்றுவிடும். இதுவே முதலையின் இயல்பு எனவும் கூறியுள்ளார். 

 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற||…

கவரிமா: 

மயிர் இழந்தால் இறந்துவிடும் என்கிற அறிவியல் மெய்ம்மையை கவரிமாவின் கோட்பாட்டை.

 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின்||…

என்ற குறளின் மூலம் புலப்படுத்தி இருக்கிறார். ஆனால் இது உண்மை என அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. கவரிமாவா…… கவரிமானா?..... கவரிமாவுக்கு மானம் உண்டா? இல்லையாயின் மயிர் இழந்தால் உயிர் இழப்பதற்க்கு என்ன காரணம். ஒரு முடி இழந்தாலே உயிர் போகுமா அல்லது முடிதிரள் இழந்தால் உயிர் போகுமா என்பது அனைவரிடமும் கேள்விகளாக எழுகிறது. 

கவரியும் கவரிமாவும்:

கவரிமா என்று வள்ளுவர் குறிப்பிடுவது ஷகவரி| என்னும் விலங்கு உள்ளதா என்பதை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வே;ணடும். தொல்காப்பியர் மரபியலில் விலங்குகளின் ஆண்பெயர்களையும், பெண்பாற் பெயற்களையும் இளமைப் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் இடத்தில்,

 கவரியும் கராகமும் நிகரவற்றுள்ளே16

புல்வாய்ப் புலிஉழை மரையே கவரி17

பன்றி புல்வாய் உழையே கவரி18

என்ற கவரி என்னும் சொல்லுக்கு மூன்று இடங்களில் சூட்டியுள்ளார். சங்க நூல்களில் கிடைத்திருப்பது. 

 நரத்தை நறும்புல் மேய்ந்த கவிரி19

கவிர்ததை சிலம்பிற் துஞ்சுஞ் கவிரி20

என்னும் நூற்பாக்கள் பதிற்றுப்பத்திலும் புறநானூற்றிலும் கவிரி என்றச் சொல்லுக்கு விளக்கம் தந்துள்ளனர். 

சீவகசிந்தாமணி என்னும் நூல் கவிரி என்றச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இதில்

 வெள் கிம்மயிர்க் கவரிமா விரியும்||

என்ற வரியில் ஷகாவரிமா| என்றச் சொல்லைக் காணமுடிகிறது. ஷகவரி| என்றச் சொல்லுக்கு ஷகாவரிமா| என்றுப் பொருள் தருகிறது. தமிழ் அகராதியில் கரிமா, புலமா, கைமா என்று கூறுவதுபோல் வள்ளுவரும் இதனை ஷகவரிமா| என்று சொல்லியிருக்கலாம். 

கவரிமாவும் மானமும்:

கவரிக்கும் மானத்திற்கும் என்ன தொடர்பு? திருக்குறலில் ஷஷகவரிமாவைப் போன்ற மானமுடையார்|| என்றும் ஷஒரு மயிர் போகின் மானம் நீக்கின் உயிர் வாழாது| என்று கூறியுள்ளார். 

ஆனால் பரிமேலழகர் ஷஷதமையிர்த் திரளின் ஒரு மயிர் நீங்கிலும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர்|| என்று கூறியுள்ளார். இதே போன்று பல நூல்களில் கவரியின் மானத்தைப் பற்றி பல இலக்கிய ஆய்வாரள்கள் கூறியுள்ளார். 

ஷஷமானம் என்றால் ஷமதிப்பு|, கௌரவம்| என்று பொருள்படும். மனம் இருப்பவர்களுக்குத்தான் மானம் இருக்க முடியும். விலங்குகளுக்கு ஐந்தறிவு, உணர்வுகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆணையும், பெண்ணையும் குறிப்பாகக் காட்டும் சொற்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் என்றும் இன்னொரு வகையிலும் கூறலாம். இவை ஐந்துக்கும் ஷபுலன் அறிவு| என்றும். அடுத்து ஆறாவதாகச் சொல்லப்படுவது ஷகரண அறிவு| என்றும் சொல்லப்படுகிறது. 

 மாவும் மாக்களும் ஐ அறிவினவே||

என்கிறார் தொல்காப்பியர் இதில் ஐந்து அறிவுக் கொண்ட கூற்றே கவரி விலங்காகச் சொல்லப்படுகிறார். 

கவரியின் முடியைக் கொண்டு சாமரம் செய்து பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 

 வரப்பு அறு மணியும் பொன்னும்

ஆரமும், கவரி வாலும்

குரப்பு அனைநிரப்பும் மன்னர்||.

என்ற பாடல் மூலம் கவரியின் வால்முடி வயல்களுக்கு வரப்புகளாகிய கரைகளை உழவர்கள் கட்டி முடிக்கப் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. 

இதுமட்டும் அல்லாமல் கவரிமானின் முடியை கூரைகள் வேய்ந்தனர் சவரி செய்யவும், சாமரங்கள் செய்யவும், கூரை வேய்ந்தனர். வரப்புக் கட்டவும், என முடி பயன்படுத்தப்பட்டது. 

கவரியின் பிற பண்புகள்:

கவரிமாவின் முடி வெண்சாமரங்கள் செய்யவும், வெண்மயிரினால் குரம்பை வேய்ந்திடவும் பயன்பட்டன. இதில் இருந்து கவரியின் முடி வெண்மையாக இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. 

  கவரியின் பால்திற வால்புடை பெயர்வன கடிதில்

பவள மால்வரை அருவியைப் பொருவன பாராய்||

என்ற அடிகள் மூலம் கவரியின் வால் அடர்ந்த வெண்மை நிறமாக இருந்துள்ளது என அறிய முடிகிறது. இந்த கவரிமா தனியாக இருப்பதில்லை கூட்டகூட்டமாக வாழும் என்று உணரப்படுகிறது. 

 குவளைப் பைஞ்சுனை பருகி அயல

பரந்திலங்கு அருவியொடு||

என்ற புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து அடிகள் கவரிமாவின் நீர்விரும்பும் தன்மையை பொருந்தி இருக்கிறது. நீரில் நின்றும் புரளவும் விரும்பும் என்று கலைக்களஞ்சியம் கூறியுள்ளது. 

முடிவுரை:

ஏறு போல் பீடுநடை என்பதன் மூலம் கால்நடை மரபியல் கூறும் கருத்தையும் திருக்குறள் விளக்குகிறது. யானை, புலி ஆகியவற்றின் தோற்றத்தைச் சொல்வதன் மூலம் கால்நடை உடலியங்கியல், பாங்கியல், ஆடு, மாடு, காக்கை, மான் ஆகியவற்றின் இயல்புகளையம் குறிப்பிடுவதன் மூலம் கால்நடை பாங்கியல் பற்றி குறளில் காண்கிறோம். முதலை, முடி இழந்தால் கவரிமா இறந்துவிடும் ஆகிய கால்நடை செய்திகளையும் திருக்குறளில் அறிந்து கொள்வதன் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் நுட்பங்களையும் விளக்குகின்ற நூலாக திருக்குறள் இருக்கிறது என்பது இக்கட்டுரையில் தெளிவாகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக