சனி, 24 ஏப்ரல், 2021

கிரேக்க சீன செம்மொழியின் செவ்வியல் பார்வை

  ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி          

 


உலகில் பல  நாடுகள் இருந்தாலும், வரலாற்றில் இந்தியாவைப்போலவே கிரக்க நாடும், சீன நாடும் நீடித்த வளர்ச்சி பெற்றிருந்தவைகளாகவே நிரலப்பெற்றுள்ளன. செம்மொழி தகுதி பெற்ற மொழிகள் உலகில் பல உள்ளன. அவற்றின் தன்மையினையும் செம்மொழிக்கானத் தகுதியினை பெற்ற  கிரேக்கம் சீனமொழி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இலக்கியம்  

இலக்கியம் குறித்து பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளனர் மொழியானது ஒலி; வரி வடிவங்களைக் கொண்டு இயங்கும் தன்மையது. ஹட்சன் என்பவர் ‘வாழ்க்கையி;ல் மனிதர்கள் கண்டவை அவர்கள் கண்டு அனுபவித்தவை நம் எல்லோர்க்கும் உடனடியாகக் கவர்ச்சி ஊட்டுபவை’ இவையே இலக்கியமாகும் என்கிறார்.

ச.வே சுப்பிரமணியம் இலக்கியம் என்ற சொல்லை இலக்குூ இயம் என்று பிரிப்பதாக இருந்தால் இலக்கு என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது. குறிக்கோள்களையும் கொள்கைகளையும் இயம்புவது அல்லது  விளக்குவது இலக்;கியம் என்று கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்சன் மற்றும் ச.வே சுப்பிரமணியம் ஆகியோரது கருத்துக்களிலிருந்து இலக்கியத்திற்கு மொழி என்னும் கருவி அமையும் என்னும் வரையரையைப் பெற முடிகிறது.  

இலக்கிய படைப்பு வகைகள்

இலக்கியத்தின் வகைகளை அறிஞர்கள் பல்வேறு வகைகளாக பிரிக்கின்றனர். தன் சொந்த அனுபவம் பற்;றி எழுந்த இ;;வ்;விலக்கியம் இசைப்பாட்டாகவும் தியானக் கவிதையாகவும் கையறு நிலையாகவும்  தன் சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் கட்டுரையாகவும் விளக்கமாகவும் கலை இலக்கியத் திறனாய்வாகவும் அமையும். 

பொதுவாக மனிதனுக்கு அமைந்த பொதுவான வாழ்க்கை பற்றிய இலக்கியம் இயற்கை பற்றி எழுந்த இலக்கியம் இலக்கியப் படைப்புக்கு உரிய முல ஊற்றினைச் செய்யவல்ல வல்லமைக்கு மனிதனின் அடிப்படை உணர்வுகள் காரணமாக அமையட்டும். 

இலக்கியம் பற்றியும் கலை பற்றியும் எழுந்த இலக்கியம் இலக்கிய வகைகள் உருவாவதற்கு கற்பனை ஆற்றலும் பரிவ நோக்கமும் நாம் இவற்றைக் கற்பதற்கு முனையும்போது நம் உணர்வினை அசைத்து உள்ளத்தை நெகிழ்வித்து உண்மைக் கலைப் பயனைப் பெறச் செய்கின்றன.

கிரேக்க மொழி இலக்கியங்கள் 

                   கிரேக்க இலக்கிய வரலாற்றை அறிநர்கள் நான்கு காலப்பகுதிகளாகப்  பகுக்கின்றனர் .அவை 

1;. தெ;hல்பழங்காலம் ‘கி.மு ஒன்பது முதல் கி.மு நான்காம் நூற்றாண்டு 

2; .செவ்வியல் காலம் ‘கி;.மு ஐந்து முதல் கி;.மு நான்காம் நூற்றாண்டு 

3;. ஹெலனிய காலம் ‘கி;.மு நான்கு முதல் கி.மு ஒன்றாம் நூற்றாண்டு’

4 .தற்காலம் ‘கி.மு முதல் நூற்றாண்டு முதல் இன்று வரை’என்பனவாகும்.

; இங்குக் குறிப்பிட்ட நூற்றாண்டுகளினூடாகத்தான் உலகத்திற்கு வழிகாட்டியாக அமைந்த காப்பியங்கள் தன்னுணர்ச்சிப் பாடல்கள் நாடகங்கள் வரலாறு தத்துவம் பேச்சு கலையியல் திறனாய்வுகள் போன்றவை தோன்றின.

கிரேக்க இலக்கியத்தின் தொடக்க நிலையில் உலகப் புகழ் பெற்ற இலியட் ஒடிசி முதலிய காப்பியங்கள் தோன்றின. கிரேக்க நாட்டில்  கிரேக்க நாட்டில் வீரநிலைக் காலப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகக் கிரெக்க காப்பியங்கள் திகழ்கின்றன.

ஹேலன் என்ற பேரழகியின் பொருட்டு டிராய் நகர மன்னனான பாரிஸ் மற்றும் வீரர்களான ஹெக்டர் அக்கிலஸ்  முதலியோருடன் அகாமெம்னன் போன்ற வீரர்கள் பல்லாண்டுகள் நடத்திய போரும் அக்கிலஸின் வஞ்சினமுமே இலியட் காப்பியமாகும்.

இலியட்டுடன் இணைத்துக் ஒடிசி காப்பியத்திலும் போர் நிகழ்ச்சிகள் பேரிடம் பெறுகின்றன.அக்கிலஸின் படைத்தலைவன் ஒடிசியஸ் டிராய் நகரத்தைக் தந்திரத்தாலும்ய போரினாலும் வெல்லுதலே ஒடிசி காப்பியத்தின் மையக் கதை இம்மையக்கதையின் வழியாக ஹோமர் கிரேக்க நாட்டின் வீரப்பண்பாடு உயர்ந்த பழக்க வழக்கங்கள் முதலியவற்றை அழகுணர்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.  விருந்தோம்பல் நட்பு பயணங்கள் மானவுணர்ச்சியும் அதன் காரணமாக வஞ்சினம் சொல்லுதலும் புகழ் வேட்கை முதலிய சொல்லுதலும் ஹோமர் விளக்கியுள்ள கிரேக்கர்களின் பண்பாடு பண்டைய சங்க இலக்கியங்களில் காணப்படும்தமிழர்களின் பண்பாடு ஒப்புமையுடைடையனவாக இருக்கின்ற வாய்ப்பு வியப்பினைத் தருகின்றன.

ஹோமரைத்தவிர  பிற கவிஞர்கள் பலரும்இக்காலகட்டத்தில் வாழ்ந்து வளம் பெறச்செய்தனர்.  ஹோமருக்குப்பின் கிரேக்க இலக்கிய வரலாற்றி;ன் பொற்காலம் என்று கருதத்தக்க செவ்வியல் காலகட்டம் தோன்றுகிறது.  இக்காலப் பகுதியில் தன்னுணர்ச்சிப் பாடலகள் துன்பியல் நாடகங்கள் குழப்பாடல்கள் பேச்சுக்கலை நூல்கள் தத்துவ நூல்கள் முதலிய தோன்றின. 

கிரேக்க இலக்கிய வரலாறு அந்நாட்டின் அரசியல் சமுக குறுகளை இணைந்து மாற்றங்களைச் சந்தித்தது  காப்பிய இலக்கிய வகை செல்வாக்கிழந்து தனி நிலைப்பாடல்கள் மிகுதியாகத் தோன்றின.   இவற்றில் காலினஸ் பிண்டா சாப்போ முதலிய கவிஞர்களின் பணி குறிப்பிடத்தக்கது. இவர்கள் மனித வாழ்க்கையை உற்று நோக்கி அதன் அழகையும் அவலத்தையும்  நன்கு சித்தரித்தனர். துன்னுணர்ச்சிக் கவிதையின் சிகரத்தை எட்டிய சாப்போவின் கவிதைகள் குறிப்புப் பொருண்மையும் உணர்ச்சி நிறைந்தவை. கிரேக்க இலக்கியத்தின் தலையாய பகுதியாகிய துன்பியல் நாடகங்கள் இலக்கியங்களுக்குத் தலைமை ஏற்றவை வழிகாட்டிகளாக அமைந்தவை. கிரேக்க நாடக ஆசிரியர்களுள் அரிஸ்டோபெனிஸ் இன்பியல் நாடகங்கள் படைத்தார்.  எனினும் துன்பியல் நாடகங்களே இன்றளவும் கிரேக்க இலக்கியத்தை உலகிற்கு அடையாளம் காட்டுபவை. ஆசைலஸ் கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் முன்னோடி என்று சொல்கிறார்.  

கிரேக்க துன்பியல் நாடகங்கள் தவிர்க்க இயலாதவாறு நன்மையின் வீழ்ச்சியையும் தீமையின் வெற்றியையும்  இலட்சிய மனிதனின் வாய்ப்புகளையும் யதார்த்த மனிதனின் இயல்புகளையும் துன்பியல் நாடகங்கள் முழு வீச்சுடன் காட்டின.  துன்பியல் நாடகங்களின் அமைப்பு அவற்றின் இயல்புகள் பயன்கள் போன்றவற்றைக் குறித்து உலகின் முதல் திறனாய்வாளர் எனப்படும் அரிஸ்டாட்டில் தமது கவிதையியல் நூலில் மிக விரிவாக பேசுகிறார்.  கிரேக்கச் செவ்வியல் இலக்கியம் வரலாறு தத்துவம்        வானியல் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வளர்ச்சியடைந்திருந்தது. அற இலக்கியங்கள் என்ற அடிப்படையிலும் கிரேக்க இலக்கியம் உலகிற்கு வழங்கிய கொடை குறிப்பிடத்தக்கது.; ஹேசியெட் எனும் புலவர் படைத்த வேலையும் நாளும் என்ற இன்றளவும் பேசப்படுகிறது. அறசெயல்களின் நிலைபேறுடைமையையும் உழைப்பின் சிறப்பையும் இந்நூல் பல பட விதந்தோதுகிறது. இவ்வாறு கிரேக்க இலக்கியம் தலைமை சான்றதாகவும் உலகிற்கு வழிகாட்டியாகவும் இன்றளவும் திகழ்கிறது.  



சீன மொழி இலக்கியங்கள்            

     கன்புசியஸ் என்ற தத்துவக் கொடையை உலகிற்கு வழங்கிய பெருமைபெற்றது சீனமொழி. சீன இலக்கியத்தின் காலம் கி.மு பத்தாயிரம் ஆண்டுகட்குக் குறையாது என்ற கருத்து வரலாற்றில் நிலவுகிறது.   எனினும் இலக்கியத் தொடக்கம் கி.மு ஆறாம் நூற்றாண்டினை ஒட்டிய காலத்தில் அமைகின்றது. 

மக்கள் பண்பாட்டு மரபில் நிலவி வந்த இலக்கியங்களின் தொகுப்பாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் வெளிவந்ந ஐம்பேரிலக்கியம் என்ற நூல் சீனாவின் முதல் இலக்கியப்படைப்பு என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகின்றார்                             இதில் மாற்றங்களின் நூல் சரித்திரப் பிரமாண இலக்கியம் செய்யுள் இலக்கியம் இளவேனியும் பின்பனியும் முதலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. 

இதே காலகட்டத்தில் தோன்றிய லாவோத்ஸே என்ற புலவர் இயுற்றிய டாவோ தெ கிங் என்ற நூல் சீன மக்களுக்கு வழிகாட்டியது. தாவோவில் வரும் உபதேசங்கள் உலக வாழ்வில் முழ்கியிருந்த மக்களை அவர்கள் போக்கிலே சென்று கரையேற உதவியகயுள்ளது.   

‘’அறிந்தவன் பேசுவதில்லை

பேசுவோன் அறிந்தவனில்லை’’

‘’பிறரை அறிந்தவன் படிப்பாளி

தன்னை அறிந்தவனே ஞானி’’

கலங்கிய தண்ணீரை யாரால் தெளியவைக்க முடியும் ஆனால் அது அசையாமலிருக்கும்படி வைத்திருந்தால் தானாகவே மெல்ல மெல்ல தெளிந்துவிடும்.

சாந்தியைப் பெற யாரால் முயற்சி செய்ய முடியும். ஆனால் காலம் செல்லட்டும் மெல்ல மெல்லச் சாந்தி ஏற்படும்.                              வித்தியமான தருமத்தை அறிவதே மெய்ஞ்ஞானம் போன்றவை லாவோத்ஸேவின் சில உபதேசங்கள் ஆகும்.




    கன்புஷஸ்

கன்புஷஸ் கண்முன்புள்ள வாழ்க்கையைத் தவிர காணாத விஷயங்களில் கருத்தை செலுத்திக் கற்பனை செய்யவில்லை. வாழவுக்கு அடிப்படையான ; விசுவாசம் மரியாதை நிதானம் கற்பு பலாத்காரத்தை அழித்து அன்பு கொள்ளுதல் முதலிய ஒழுக்கங்களையும் அரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலையுமே அவர் முக்கியமாகக் கொண்டார். அவர் எந்த மதத்தையும் உண்டாக்கவில்லை ஆனால் அவருடைய உபதேசங்களை ஜனங்கள் பின்பற்றி அவையெல்லாம் சேர்ந்து ஒரு சமயமாகிவிட்டது. மக்களின் ஒழுக்கமே வாழ்க்கை முறையே கடவுளின் நிதியென்று அவர் கருதினார். பிள்ளைகள் பெற்றோர் காலமான பிறகும் அவரை வணங்கிப் போற்றுதலும் சகோதரர்கள் உள்ளன்புடன ;ஒத்து வாழ்தலையும் வற்புறுத்தினார்;. 

இருபத்திரண்டு வயதிலேயே அவர் உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டார். பின்னர் அவர் ஐம்பதாவது வயதில் அரசாங்கத்தில் உத்தியோகம் பெற்று நீதி இலாகா மந்திரியாகித் தன் தத்துவங்களையெல்லாம் செயல் முறைக்குக் கொண்டு வந்தார். அரசர்களுக்கும் அவர் குமாரர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார். ஆவர் உபதேசங்கள் நூல்வடிவாகச் சென்று வைக்கப்பட்டிருந்தன. அவருடைய நன்மொழிகள் லாவோத்ஸேயின் உபதேசங்களைப் போல் அறிவாளரிடம் மட்டும் தங்கியிராமல் நாடெங்கும் பரவியிருக்கின்றன. குற்றமற்ற சீலர்களாக மக்கள் வாழ வேண்டுமென்பதே அவர் கொள்கை அவரது உபதேசங்கள் சமுகத்தின் அடித்தட்டு மக்களையும் சென்றடைந்திருந்தது.

    முடிவுரை

செம்மொழி இலக்கியங்களின் தகுதிகளையும் அம்மொழி வளர்ச்சி அடைந்துள்ள விதத்தினையும் அவற்றுள் கிரேக்கம் சீனமொழியினைக் குறித்து ஆய்வு செய்த மொழிநூலறிஞர்களின் கருத்துப் பரிந்துரையின் படி இக்கட்டுரையில்   முலம் சுருக்கமான முறையில் செய்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக