புதன், 28 ஏப்ரல், 2021

சிறுபாணாற்றுப்படை சிறப்பிக்கும் ஊரும்; மக்களும்

  ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


தமிழ் இலக்ண மரபில் நிலங்களை ஐந்தாக பிரித்து முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை  என்றனர். நிலம் சார்ந்த இராயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஊர்களின் வளங்களையும்  சிறப்புகளையும்; சிறுபாணாற்றுபடை  வழி நின்று காண்போம்


எயில் பட்டணத்தின் சிறப்பு


ஒய்மாண் நாடு துறைமுக நகரம் ஆகும். இது மதிலோடு பெயர் பெற்ற பட்டினம் என்பதை,


“மணிநீர் வைப்பு மதிலோடு பெயரிய

பணிநீர்ப் படுவின், பட்டினம் படரின்”

(151 – 152)


என்ற சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இதனை மதிற்பட்டினம், சோப்பட்டினம், எயிற்பட்டினம் என்றே தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்தைப் பற்ற எழுதியுள்ள பெரிபுஸ் எனும் அறிஞர் எயிற்பட்டினத்தைச் சேர்ப்பட்டினம் என்றும் துறைமுக நகரம் என்றும் கூறியுள்ளார்.


முதற்குலொத்துங்கனது 35 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று “ ஒய்மானாட்டுப் பட்டின நாட்டுப் பிரமதேயான எயிற்ப்பட்டினம் சபையார் பூமிசுவரர் கோவிலுக்கு ஒரு நந்தவனம் வைக்கவும் வழிபாட்டுக்கும் விளக்குகள் எரிக்கவும் குறிப்பிட்ட ஒரு நிலத்தை விற்றனர்” என்னும் செய்தியைத் தெரிவிக்கிறது.


“கழிசூழ்ந்த ஊர்களையுடைய பட்டினம்” என்ற சிறுபாணன் எயிற்பட்டினத்தைத் துறைமுக நகரம் என்று கூறவில்லை ஆயின், “எயிற்பட்டினத்தில் நுளைமகள் (பரநவர் மகள்) ஆடுப்பெரிக்கக் கடல் வழியே வந்த மணம் மிகுந்த கட்டைகளைப் பயன்படுத்துவான்” என்று கூறியுள்ளான்.


ஓங்கு நிலை ஒட்டகம் துயில்மடித் தன்ன

வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகு”

(சிறு – 155 – 156)


“தரை கொணர்ந்த விரைமாவிற்கு” என்பதற்குத் “திரை கொண்டு வந்த மணத்தையுடைய அகிலாகியவிறகால் எரித்தாள்” என்று நச்சினார்க்கினியர் உரை 

கூறியுள்ளார்.






வேலூரின் சிறப்பு


வேலூர் என்பது சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் இணை;டாவது ஊர் ஆகும். அது எயிற்பட்டினத்தழிலிருந்து கிடங்கிலுக்குச் செல்லும் வழியில் முல்லை நிலத்திற்கு அப்பால் அமைந்ததாக சிறுபாணாற்றுப்படை பதிவு செய்கிறது. இவ்வூரில் உள்ள அகழியில் பூத்திருந்த பூவினை எடுத்து தன் பகைவர்களை எதிர்த்து வெற்றியடைய வேண்டும் என்று நல்லியக்கோடன் முரகளை வணங்கியதாக செய்தி அமைந்து வருகின்றது. அதனை,


“திறல் வேல் நுதியின் பூத்த கேனி

விறல் வேல் வென்றி, வேலூர் எய்தின்

உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை”

சிறு (172 – 174)


என்ற அடிகளால் இதனை அறியலாம். இவ்வூரில் வேட்டுவரும் வாழ்ந்துள்ளனர் “நல்லியக்கோடன் தன் பகைவருக்கு அஞ்சி முரகப் பெருமானை வழிபட்டான். அவ்விடத்தில் ஒரு கேணி இருந்தது. அக்கேணியில் பூத்த மலர் ஒன்றியைப் பறித்துப் பகைவரை வெல்லும்படி முருகன் நல்லியக்கோடனது கனவில் கூறினான். நல்லியக்கோடன் அக்கோணியிலிருந்நு எடுத்த மலர் வேலாக மாறியது. அவன் அதனைக்கொண்டு பகைவரை வென்றான் என்பதும் வேல் தோன்றிய ஊர், வேலூர் என்பது நச்சினார்க்கினியர் கூறும் கருத்தாகும். இச்செய்தி சிறுபாணாற்றுப்படையில், வேட்டுவர் மக்களின் பாழ்வினை அறியலாம்.


வேலூர் மரக்காணத்திற்குத் தென்மேநற்கில் இருக்கின்றது, இஃது “உப்பு வேலூர்” எனப்படுகிறது. வேலூரில் “திருஅக்கீசுவரம்” என்னும் சிவன் கோவிலும், “திருவீற்றிருந்த பெருமானின் கோவிலும்” சமணர் கோவில் ஒன்றும் உள்ளன. இம்மூன்றிலும் சோழர் விசயநகர அரசர் காலத்துக் கல்வெட்டுகள் இருபத்தைந்து உள்ளன என்பதை அறியமுடிகிறது.


சிவன் கோவில் கல்வெட்டு ஒன்று முதலாம் இராசேந்திரன் காலத்தது. இதில் வேலூரை ஒய்மானாட்டு மணிநாட்டு வேலூர் என்று குறித்துள்ளது. சோழர் காலத்தில் அதாவது கி.பி. 10 – 13 ஆம் நூற்றாண்டுகளில் வேலூரை அடுத்து காடுகள் இருந்தன என்றும், அக்காடுகளில் வேட்டையாடப்பட்டது என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.


பவளத்தைக் கோர்த்து வைத்ததுபோல் அவரை பூக்களை மலரச் செய்கின்றது. மயில்களின் கழுத்தைப் போன்று நீல நிறத்தில் காயாம் பூக்கள் மலர்ந்துள்ளன. வளமான கொடியினை உடைய முசுண்டை சிறு சிறு பெட்டிகள் போன்று கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கின்றன. காந்தள் மலர்கள் செழிப்புற்றுக் கைவிரல்கள் போல் பூத்திருக்கின்றது.


கொல்லை நிலத்தில் கிடந்த பாதைகளில் இந்திரகோபப் பூச்சிகள் ஊறித்திரிகின்றது. முல்லைக் கொடிகள் படர்ந்து காணப்படுகிறது முல்லை நில ஒழுகாலாறுகள் நிறைந்து காணப்படுகிறது. அழகிய காட்டிடில் மலையின் பின் சூரியன் மறைந்து அதன் ஒளியும் மங்கிப்போன மாலை வேளையை நோக்கி வேலின் நுனிபோன்று அரும்பியிருக்கும்.


கேணிகளை உடைய வேலினால் வெற்றிமிகும் வேலூரைச் சென்று அடைந்தீர்கள் எனில் அங்கு வாழ்வோர்கள் வருத்தம் கொள்கின்றனர். வெப்பம் மிகுந்த குடிசையில் வாழும் எயினர் குலத்தில் பிறந்த பெண்கள் சமைத்த இனிமை பொருந்திய புளிக்கறி இட்ட சோற்றினை இறைச்சியுடன் பசி நீங்கும் அளவு நிறையப் பெறுவீர்கள் என பரிசில் பெற்றப்பாணன் பரிசு பெறவிறுக்கும் மற்றொரு பாணனிடம் வேலூhர் நிலவும் வறுமைப்பற்றி கூறினார்.


ஆமூரின் சிறப்பு


ஆமூர் என்னும் ஊரானது மருத நிலத்தின் நடுவில் அமைந்திருந்தது. அவ்வூரில் அந்தணர் மிகுதியாய் இருந்தனர், அவ்வூரைச் சுற்றிலும் மதில் இருந்தது. அரிய காவலை உடையது. மதிலைச் சுற்றிலும் அகிழ இருந்தது.


வேலூரிலிருந்து கிடங்கிலை நோக்கிச் செல்லும் வழியில் ஆமூர் இருப்பதாகச் சிறுபாணன் குறித்துள்ளான். ஆயினும் ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர் திண்டிவனம் வட்டத்தில் இல்லை எனினும் வேலூருக்கு வடமேற்கில் ஏற்த்தாழ நான்கரைக்கால் தொலைவில் கொண்டாமூர் என்றும், அதற்கு வடமேற்கில் மூன்றரைக்கல் தொலைவில் ‘சிற்றாமூர்’ என்றும் அதற்கு வடமேற்கில் மூன்று கல் தொலைவில் ‘நல்லாமூர் என்றும் மூன்று ஊர்கள் அமைந்துள்ளன.


நல்லாமூருக்குச் சிறிது வடகிழக்கில் ஆறு கல் தொலைவில் கிடங்கில் அமைந்துள்ளதாகவும், ‘ஆமூர்’ என்னும் பெயருடன் ஊர் இல்லாமையாலும் சிறுபாணன் கூறியுள்ளபடி இந்த நல்லமூரே கிடங்குலக்கு அண்மையில் இருப்பதாலும். அப்பாணன் கூற்றுப்படி வேலூருக்கும் இந்த நல்லா மூருக்கும் இடையில் மருதவளம் காணப்படுதலாலும் இந்த நல்லாமூரே சங்ககால ஆமூராய் இருந்திருக்கும் என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார்.


மணமுல்ல மலர்களை மாலை கட்டினால் போல, நாள்தோறும் மலரும் மரம் காஞ்சி, அக்காஞ்சி மரம் குறகிய அடியினையும் பல கிளைகளையும் உடையது. அம்மரத்தின் பெரிய கொம்பில் பொன் போன்ற நிறமுடைய வாயினையும், நீலமணி போன்ற நிறத்தினையும் உடைய சிச்சிலிப் பறவை (மீன்கொத்திப்பறவை) ஊறி, அருகிலுள்ள நிலைத்தற்கரிய ஆழமான குளத்தில் திரியும் மீன்களைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு நீண்ட நேரம் இருந்தது.


வாய்ப்பு வந்த போது புலால் நாற்றத்தையுடைய கயல்மீனைக் கவ்விச்சென்று. தண்ணீரில் பறவை பாய்ந்த போது அதன் கூர்மையான நகங்கள் குளத்திலிருந்து பசிய தாமரை இலையைக் கிழித்து, வகுப்படுத்தின. முன் தண்டிளையுடைய தாமரையில் முழு நிலாப் போன்ற வெண்தாமரை மலர்கள் மலர்ந்திருந்தன. அதிலுள்ள தேனை உண்ண நீலநிறமுள்ள சிவந்த கண்களையுடைய ஆண்வண்டுகள் கூட்டமாகக் குவிந்திருந்தன அந்தோற்றம் மதியைச் சேர்ந்த கரும்பாம்பினைப் போன்று காட்சியளித்தது. அத்தகைய நீர் வளமுடைய மருத நிலம்.


ஊடலும் கூடலும் நிகழ்கின்ற மருத ஒழுக்கமுடைய அந்நிலத்தில் குளிர்ச்சி பொருந்திய வயல்கள் இருந்தன. அரிய காவலை உடைய பெரிய நகராக ஆமூர் இருந்தது. அதைச்சுற்றிலும் குளிர்ச்சியுடைய நீர்நிலை கொண்ட அகழி இருந்தது செந்தண்மை பூண்ட அந்தணர் சுரங்காத நகரம் ஆமூர். வெற்றிப் பெருமிதததோடு நடக்கும் வலிமை பொருந்திய எருதுகள் பல இருந்தன. அவ்வெருதுகளைக் கொண்ட ஆற்றலுடைய உழவர் பலர் இருந்தனர்.


அவ்வுழவரின் தங்கை, பிடிக்கை போன்ற தலைப்பின்னலை யுடையவள் அப்பின்னல் அலள் முதகை மறைத்திருந்தது. அவள் கையில் வளையல் அணிந்திருந்தாள் அவள் தன் பிள்ளைகளைக் கொண்டு நும் போன்றறோரைத் தடுத்து வீட்டிற்கு அழைத்து, கரிய வயிரம் பாய்ந்த உலக்கைப் பூண் தேயக்குற்றிய அரிசியால் அமைந்த வெண்சோற்றை பிளவுபட்டநண்டு, (பீர்க்கங்காய்) கலவையுடன் (கறியுடன்) தருவாள், அதை நீங்கள் பெறுவீர் என்றாள்.


நல்லியக்கோடனின் ஊர் அருகில் உள்ளது


எரிமறிந் தன்ன நாவின் இலங்குஎயிற்று

கருமறிக் காதின் கவைஅடிப் பேய்மகள்

(196 – 202)


தீப்பிழம்பு சாய்ந்தால் ஒத்த நாவினையும் விளங்குகின்ற பற்களையும், வெள்ளாட்டுக் குட்டிகளைக் காதணியாக அணிந்துள்ள காதுகளையும், பிளவு பெற்ற கால்களையும் உடைய பேய்மகள், நிணத்தை உண்டு சிரித்த தோற்றமளித்தது. போர்க்களத்தில் யானைகள் கிளப்பிய புழுதியை யானைகளின் மதகீர் அருவிகள் அவித்தன அதனால் புழுதியடங்கிய தெருக்களையுடையதாயிருந்தது அவன் திருவிழாக்கள் எடுக்கும் ஊர், அது தூரத்தில் இல்லை அருகில்தான் உள்ளது.


அரண்மனைச் சிறப்பு


பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்

அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்

(203 – 206)


என்ற கிணைப் பொருநர்க்கு ஆயினும், அறிவுடையோர்க்கு ஆயினும் அரிய மறைகளைக் கற்றுணந்த நாவினையுடைய அந்தணர்க்கு ஆயினும் அடையாது திறந்தே இருக்கும் அவன் அரண்மனைக் கதவுகள் அவன் அரண்மனை வாயில் கடவுளர் வீற்றிருக்கும் மேரு மலையின் கண் போன்றது ஏனையோர், புகுதற்கரிய வாயில். அங்கு சென்றால் பாணர்களின் வறுமை தீர வழிபிறக்கும்.


சாண்றோர் ஏத்துக் பண்புகள்


செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்

இண்முகம் உடைமையும் இனியன் ஆதலும்


பிறர் தனக்குச் செய்த உதவியைப் போற்றி அவர்க்கு நண்மை செய்தல், அறிவும் ஒழுக்கமும் இல்லாத மாக்கள் இனம் தனக்கு இன்மை நோக்கினார்க்கு எல்லாக் காலத்தும் இனிய முகமுடையவனாய் இருத்தல் அகமும் புறமும் இனியனாக இருத்தல் ஆகிய பண்புகளை எப்போதும் நெருங்கி இருக்கின்ற சிறப்பினையுடைய அவனை அறிந்தோர் புகழ்வர்.


மறவர் ஏத்தும் மாண்புகள்


தன் வீரத்தைக் கண்டு அஞ்சி வந்தவர்க்கு அருள் செய்வான கொடிய கோபம் அவனிடம் இல்லை மறவர் நின்ற அணியில் புகந்து அதனைக் குலைப்பான். அழிந்த படையில் சென்று பகைவரைப் பொறுத்துக் கொள்வான் இவ்வாறு வாள் வலிமையுடைய மறவர் அவனைப் புகழ்வர்.


அஞ்சினர்க்கு அளித்தலும் வெஞ்சினம் இன்மையும்

……………………………………………………….




அரிவையர் ஏத்தும் குணங்கள்


தன்நெஞ்சு கருதியதைத் தான் முடிந்தலும் தான் விரும்பும் மகளிர் தன்னை விரும்பும் நிலையிலும் மகளிர் வயத்தனால் ஒரு வழிப்படாது, தன் வழிப்படுதலும், மகளிர் நெஞ்சில் நினைப்பதை உணரும் நிலையிலும் உள்ளவன் எனச்செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய அரிவைப் பெண்டிர் புகழ்வர்.


பரிசிலர் பாராட்டும் பண்புகள்


அறியாமையுடையாரிடத்துத் தானும் அறியாமையுடையான் போன்றிருத்தலும், அறிவுடையாரிடத்துத் தனது அறிவு நன்குடைமையைக் காட்டலும், வருவோர்  தகுதியைத் தெளிவாக அறிதலும் சிறப்பில்லாதோருக்குக் கொடேன்  என்று வரைந்து கொள்ளது வந்தோர்க்குத்தக ஈதலும் ஆகிய நிலைகளைப் பாராட்டிப்பரிசில் வாழ்க்கையுடையோர் புகழ்வர்.


“அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்

வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்

(216 – 218)


இருத்தல் சிறப்பு


பல வீண்மீன்களின் நடுவே இருக்கும் முழு மதி போன்று, முத்தமிழ் கற்ற அறிவோரிடையே இனிய மகிழ்ச்சியைத் தரும் கூட்டத்தோடு அமர்ந்து இருக்கிறான் நல்லியக்கோடன்.


“பல்மீன் நடுவண் பாலமதி போல

இன்னகை ஆயமொடு இருந்தோற் குறுஇ”


யாழின் தன்மை – புகழும் முறை


பசிய கண்களையுடைய கருங்குரங்கு பாம்புத்தலையைப் பிடித்தபோது பாம்பு குரங்கின் கையை ஒருபக்கம் இறுக்கியும், ஒருபக்கம் நெகிழ்த்துப் பிடிக்கும். அதுபோன்று யாழின் தண்டில் அமைந்துள்ள வார்க்கட்டு தேவைப்பட்ட இடத்தில் இறுகப் பிணித்தும், நெகிழ வேண்டிய இடத்தில் நெகிழ்ந்தும் இருந்தது. இரண்டு விளிம்பும் சேரத்தைத்து அடிக்கப்பெற்ற ஆணிகளின் தலைப்படுதி, மணிகளை வரிசைப்படுத்தி வைத்தது போன்றிருந்தது.


வயிறு சேர்ந்து ஒழுங்குபட்ட தொழில் வகை அமைந்த பத்தரைக் கொண்டிருந்தது அவ்யாழ். அதில் தேன் ஒழுகின்ற தன்மையையும், அமிழ்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கிய நரம்பிளையும் கொண்டிருந்தது, பாடுகின்ற துறைகளிலெல்லாம் முழவதும் பாடுதற்கமைந்த  பயன் விளங்குகின்ற கூடுதல் இசைகளைக் கொண்டிருந்தது. அவ்யாழ், இசைநூல்கள் கூறுகின்ற மரபில் குரல் குரலாகச் செம்பாலைப் பண்ணைப்பாடி அவனைப் போற்றிப் பாடினர்.


அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தன்முன் ஆகிய முதியோர்க்குப் பல காலுங்குவித்த கையுடையன், என்றும் வீரர் ஏறிதற்கும், மகளிர்க்கும் மலர்ந்த மார்கினன் என்றும் ஏரினையுடைய  உழவர்க்கு, நிழல் தருகின்ற செங்கோலையுடையவன் என்றும், நேரினையுடையவன் என்றும், அவளைப்புகழ்ந்து பேசிப்முடிக்காத அளவிற்கு அளவுக்கு அதிகமான பொருள்களை பரிசாகக்கொடுத்தான். குற்றமற்ற மூங்கியை உரித்தாற் போன்ற மென்மையான, தூய்மையான ஆடையை முதலில் உடுக்கச் செய்வான், இவ்வாறு செய்வது ஒத்த தன்மையை உருவாக்குவதற்கு. பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான். காண்டவ வனத்தை  எரித்த பிளந்த அம்பையுடைய அம்பநாத் தூணியையும். பூந்தொழில் விரிந்து கச்சையையும் அணிந்த மார்பையுடையவன். அவன் எழுதிய நுண்மையயான சமையல் சாந்திரத்தின் அடிப்படையில் அதனின்னு விழுவாமல் செய்த பல்வேறு உணவு வகைகளை உங்களை உண்ணச் செய்வான். ஒளி பொருந்திய வானத்தில் கோள் மீன்கள் சூழ்ந்த, உதய சூரியனை இகழும் தோற்றத்தையுடைய பொன்கலத்தில் நீர் விரும்பும் உணவை, குறையாத விருப்புடன் தானே நின்று ஊட்டுவான்.





முடிவுரை

மனிதர்களுக்கு எப்போதும் இரண்டு நிகழ்வுகளின் மீது பற்று அதிகம். அவைகள் வரலாறு,  எதிர்காலம். மேற்கண்ட செய்திகளின் வழி ஆமூர், எயில்பட்டிணம்,வேலூர் போன்ற ஊர்களி; வளங்கள் அதன் சிறப்புகளையும் உணரமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக