புதன், 28 ஏப்ரல், 2021

இலக்கிய வழி பாணர் வாயிலர்கள்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



தலைவனையும் தலைவியையும் கூட்டுவிக்கும் வாயில்களில் ஒருவராகப் பாணர்கள் குறிக்கப்பெறுகின்றனர் அதனைத் தொல்காப்பியம்,


தோழி தாயே பார்ப்பாண் பாங்கன்

பாணன் பாட்டி இளைஞர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் எனப்    (13)

(தொல் - அகத் 191)


எனக் குறிப்புதன் வழி உணரலாம்.


பாணன் தலைவனையும் தலைவியையும் கூட்டுவித்தலுக்காகத் தூதாகச் சென்றதை,


தண்ணம் துறைவன் தூதொடு வந்த

பயன் தெரியனுவற் பெதீர் பாண    (14)

(நற் - 167, 5, 6)


எனும் நற்றினை அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு தூதாகச் செல்லும் பொழுதெல்லம் பாணனை எதிர்கொள்ளும் தலைவியர் அவனைப் பொய்யானாகவே காண்கின்றனர்.


தலைவி, தலைவன் தீதுற்ற சினத்தால் ஊடல் நீக்க வந்த பாணனை இழிவாகப் பேசுவதை.


ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம் 

கள்வர் போல்வர் நீ யகன்றிசி னோர்க்கே     (15)

(குறுந், 107, 4 – 6)


என்ற குநற்தொகைப் பாடல் காட்டுகின்றது. பாணன் ஊடல் தணிக்கும் வாயிலாச் செயல்பட்டமையால் பொய்கள் பலவற்றைக் கூறவேண்டிய நிலையில் இருந்துள்ளான் ஊடலுக்குக் காரணமாகப் பரத்தன்மை இருந்ததனால் தலைவியர் பாணனைக் கடுமையாகத் திட்டுகின்றனர்


பாணப் பொய்யன பலசூ ளினனே   (16)

(ஜங் - 43)

யாணருர நின் பாண்மகன்

யார் நலஞ் சிதையப் பொய்க்குமோ இனியே    (17)

(ஜங் - 47)


எனப் பாணன், பல சூள்களையும் செய்யக் கூடியவன் தமது பொய்களினால் பல தலைவியர்களின் நலனைச்  


புறம். 68 உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

புறம். 69 புரவலர் இன்னையின் பசியே; அரையது.    (18)


சிதைத்தவன் எனக் கூறப்படுகின்றான். இதனை பல பெண்களை பரத்தையரைக் கூட்டுவிக்கும் வாயில்களாகவும் பாணர்கள் இருந்துள்ளமையை அறியமுடிகிறது. இம்மாற்றம் பாணர்கள் தம் சமூகத் தகுதியை இழந்த பிற்காலத்தில்  நிகழ்ந்திருக்கலாம்.


பாணர்கள் வறுமையர் :¬ -


பாணர்கள் மிகுந்த வறுமை வயப்பட்டவர்களாக இருந்தமையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பாணர்களைச் சுட்டுமிடங்களியெல்லாம் ‘பசியும்’ இணைத்தே சுட்டப்படுகிறது.


பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,    (19)

புறம் (212: 7, 389: 114)


பாணர்கள் “உடும்பினை உரித்தார்ப் போன்ற தோற்றத்திiராய் விலா எறும்புகள் வெளித் தெரிய மிகுந்த  பசியையுடையவராகயும். (புறம் - 68) வியர்வையில் நனைந்து கிழிந்த ஆடையையுடையவராகவும். (புறும் - 69) காட்டப்பபெறுகின்றனர் தமது வறுமையைப் போக்கிக் கொண்டு வரும் பாணன் ஒருவன் வறுமையில் வாடிவரும் பாணன் ஒருவனைப் பேகனிடம்


படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅம் யானைக் கலிமான் பேகன்

எத்துணை ஆயினும் ஈதல் நன்று என  (20)

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே   (21)

(புறம் - 141)


எனக் கூறி ஆற்றுப்படுத்துகிறான் பாணனின் வறுமை வுட்டப்பெறினும் வள்ளல்களைக் கண்டு மீளும் பாணர்கள் செல்வச் செழிப்புடையவர்களாக உள்ளனர். பொன்னால் செய்யப் பெற்ற தாமரைப் பூவும் மாலைகளும் சூடியவர்களாகப் பாணர்கள் காட்டப் பெறுகின்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம் 


பாணர் தாமரை மலையவும்ஈ புலவர்

பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     (22)

(புறம் 12, 41, 361)


பாணர்கள் வறுமை வளமை என்ற இருவித நிலைகளுக்கும் உரியவர்களாக இருந்துள்ளனர். இத்தகைய முரண்பட்ட நிலையின் காரணம் ஆராயத்தக்கது.


பாணர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்குக் கூட்டமாகச் சென்று கவைகளை நிகழ்த்தி வந்தனர். தமது வறுமையைத் தீர்க்கும் பொருட்டு மன்னர்களை நாடி வேற்றிடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் பாணர்கள் தம் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். கலைத் தொழிலைச் செய்த அதே நேரம் வாயில்களாகவும் இருந்துள்ளனர் ஆமலும் மீன் பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.


பாண்மகளின் அண்ணன்மார் நள்ளிரவில் சென்று காவிரி ஆற்றின் மடுவில் லாளை மீனைப் பிடித்துக்கொண்டு மறுநாள் விடியலில் வருவர்.


வல்லேம் அல்லேம் ஆயினும் வ்லே

நின்வயிற் கிளக்குவம் ஆயின் கஞகுல்

துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்

பறை இசை அருவி, முள்ளுர்ப் பொருக,

தெறலளு மரபின் நின் கிளயொடும் பொலிய,    (23)

(புறம் 126 : 5 – 9)


வைகறை வேட்டையில் அகப்பட்ட வரால்மீனின் கொழுத்துண்டத்தினை விற்று விற்று பொருளால் கள்ளுண்டு களித்து, வேட்டைக்குச் செல்வதை மறந்த தன் தணவருக்குப் பாட்டி (பாடின்) அகன்ற ஆம்பல் இலையில் புளியங்கறியுடன் சோற்றினை அளித்தாள் (புறம். 196: 1 – 6) பாண்மகள் சில மீன்களைக் கொடுத்து அவற்றுக்கு ஈடாகப் பல நெற்களைப் பெற்றுச்செல்லும் ஊரக்குத் தலைவனே இனி உன் பாண்மகள் யாருடைய நலனைச் சிதைக்கப் பொய்யுரைப்பாளோ.


ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்

ஆள்லினை மருங்கின் கேண்மைப் பாலே

ஒல்லாது ஒல்லும் என்றாலும், ஒல்லுவது

இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்       (24)

(புறம் 196: 1 – 6)

எனப் பாணர்கள் மீன் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமையைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இவர்கள் மீன் பிடித்தலை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு இருந்துள்ளனர். மருத நிலத்து நீர் நிலைகளிலேயே இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்துள்ளனர் இவர்கள் தங்கி இருந்த இடம் பாண்சேரி எனப்பட்டது.


வெண்யெல் அரிநர் தண்னுமை வெர்இ

கண்மடல் கொண்ட தீம்தேன் இரிய

கள் அரிக்கும் குயம் சிறுசில்

மீன் சீவும் பாண்சேரி,

வாய் மொழித் தழும்பண் ஊணூர் அன்ன    (25)

(புறம், 348 : 1 – 5)


அகல் இரு வானத்து இழிந்து இனிது

குருகு நரல மனை மரத்தான்

மீன் சீவும் பாண்சேரியொடு

மருதம் சான்ற தன்பணை…….          (26)

மதுரை (267 – 270)


எனப் பாண்சேரி பற்றிய குறிப்புகள் சில சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவ்வாரு பாடல்களும் மருத நிலத்து வயலின் வளப்பத்தைச் சுட்டுவதானால் பாணர்களில் சிலர் மருதநில வளர்ச்சியில் ஒரு நிலையான இடத்தில் தங்கி விளைவித்துண்டடையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அதே நேரம் “மீன் சீவும் பாண்சேரி” எனப் பாணர்கள் மீனுடன் மட்டும் அணைக்கப்பட்டுகின்றனர் பிடித்து அவற்றை விற்றும், சமைத்தும் உண்கின்ற தற்காலிகச் சேரிகளாக இவை இருந்திருக்கலாம்.


பாணர்களின் மீன்பிடித்துவாழும் வாழ்வைச் சுட்டும் கா. சிவத்தம்பி (2005 : 205) “இவை இவர்களின் வறுமையையும் எழுச்சிபெறும் பொருளாதார நிலைமைக்கேற்பத் தம்மை இணைத்துக் கொள்ள முடியாமையையும் வெளிப்படுத்துகின்றன” எனலாம். நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பரிசிலாக நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன என்றாலும் உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி விளைவிக்கும் தொழில்லைப் பாணர்கள் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர் அதனாலேயே பசித்த வயிற்றுடன் காணப்படுகின்றனர்.


நெடிய என்னாது வுரம் பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடி

பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை     (27)

(புறம்- 47 : 2 – 5)

எனப் பாணர்கள் ஒர் இடத்தில் தங்கி வாழாத நாடோடி வாழ்க்கை நடத்தியமை காட்டப்படுகின்றது. அதர் பல கடந்து வந்த’ பாணர்களின் (புறம் 138) நாடோடி வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பரிpலாக நிலங்கள் தானமாக அளிப்பட்டுள்ளன இதனை


பசிபடு மருங்குலை கசிவு கைதொழாஅ

காணலென் கொல் என வினவினை வருஉம்

பாண கேண்மதி யானரது நிலையே

புரவுத் தொடுத்து உண்குரவை ஆயினும் இரவு

எவ்வம் கொள்ளை ஆயினும் இணை;டும்

கையுள போலும் கடிதுஅண் மையவே.    (28)


எனும் புறப்பாடல் காட்டுகிறது.


ஆநிரை மீட்டலில் இறந்துபட்ட வீரனின் புகழைப் பாணர்கள் செல்லுமிடங்களைல்லாம் பரப்ப வேண்டும் என்பதையே இப்பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலங்களைக் கைப்பற்றி வாழும்படி பாணருக்கு அறிவுறுத்துவது. இப்பாடலின் நோக்கமன்று இப்பாடல் சீறூர் தலைவர்கipனாலேயே நிலங்கள் பாணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டுள்ளமையைப் பதிவு செய்கின்றது. இதனால், அடுத்த வளர்ச்சியடைந்த நிவப்பகுதியான மருதத்தில் காணப்படும் பாண்சேரி பற்றிய செய்திகள். ஓரிடத்தில் தங்கி வாழும் பாணர் குடியிருப்புகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றன்.


கதைத் தொழிலினை மேற்கொண்டு வள்ளல்களைச் சார்ந்து வாழ்ந்தமையால் பாணர்கள் தமக்கான தனித்தொழிலை உருவாக்கிக் கொள்ளாமல் வறுமை நிலையை அடைந்துள்ளனர். நிலங்களைச் சார்ந்து வாழாத நிலையில் பாணர்களின் மீன் பிடித்தல் தொழில், இடம் பெயரும் காலத்தின் இடையில் நிகழ்ந்ததாகவே எண்ணத்தக்கதாக உள்ளது.


பாணர்கள் தகவல்களையும் கருத்துகளையும் தமிழ்ச் சமூகம் முழடைக்கும் கொண்டுசென்று ஒரு கருத்துக் கட்டமைப்பை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். நிலம் சார்ந்த வாழ்க்கை முறையில் தகவல்களைப் - பல நிலப்கபுதிமரபுகள்; தலைவர்களின் புகழ்கள் பல்வேறு இடங்களுக்கும் கடத்தும் தன்மை இல்லாமல் போகிறது. பாணரது மரபே இத்தகவல் கடத்தலில்தான் நிலைகொண்டிருக்கிறது. அதனால் தான் நிலங்கள் வாழ்வாதாரமாக மாறும் காலத்தில் அவற்றைக் கைப்பற்றி வாழ்வது இரண்டாம் பட்சமானதாகக் கூறலாம். 





மேலும்,


சீநூர் மன்னரைப் பற்றிய பாடல்களில் மட்டுமல்ல

வேந்தர் பற்றிய பாடலிலும் பாணரின் நிலைத்த குடியிருப்பு

பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. கிள்ளவளவன் பற்றிய

பாடலில் பாணர்க்கு அவன் நீங்காத செல்வத்தைச் செய்த

கொடைச் சிறப்பு பாடப்பட்டுள்ளது. (புறம் 34) இந்தப்

பாடல் கூறும் அகலாச் செல்வம் என்பதற்கு நிலத்துடன்

கூடிய நிலைத்த குடியிருப்பு செய்து தருதல் எனப்


பொருள் கொள்ளலாம். பாணரின் இத்தகைய நிலைத்த குடியிருப்பை மதுரைக் காஞ்சி (332 – 342) காட்டும் பெரும் பாணிருக்கை வழி உறுதிப்படுத்தலாம். 

(பெ. மாதையன், 2005 : 98)


பெரும் பாணர் வாழும் இருக்கை   ( 29)

(330)


கலை தாய, உயர் சிமையத்து

மயில் அகவும், மலி பொங்கிரி,

மநதி ஆடஈ மா விசும்பு உகந்து

முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்.     (30)

(342)


எனும் பெ. மாதையன் அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் மாற் உரும் பலவேறு சூழலினால் இத்தகு நிலைத்த குடியிருப்புகளே பாணர் மரபின் தேய்வுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம்.


பாணர் சுற்றமுடையோர் : -


சங்க இலக்கியத்தில் பாணர்கள் தனிநிலையில் காட்டப்பெறாமல் ஒரு குழவினராகவே காட்டப் பெறுகின்றனர். “காரென் ஒக்கல் கடும்பசி இரவல” (புறம் 141 : 6) எனப் பாணன் கட்டப் பெறுகிறான்.


பைதல் சுற்றுத்துப் பசிப்பகை யாகுக்

கோழியோனே கோப்பெருஞ் சோழன்       (31)

(புறம் 212 : 7 – 8)


எனப் பாணன் சுற்றித்திற்கு உதவும் மன்னன் காட்டப்பெறுகிறான். இதே போன்று


பசித்த ஒக்கல் பழங்கண் வீட   (32)

(புறம் 389 : 14)


இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற    (33)

(புறம் 390 : 20)


கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாணன்    (34)

(பெரும் 21, 22)


எனப் பாணன் சுற்றம் காட்டலாம்.


கலைஞர்களாகப் பாணர்கள் இருந்ததனால் குழவாகவே இயங்கவேண்டியிருந்தது, இருந்தாலும் பலவிதமான இசைக்கருவிகளை இசைக்கவும் பாடவும் ஆடலுமான கலைஞர்கள் இக்குழவில்இடம் பெற்றிருந்தனர், அகவன் மகள், ஆடுமகள், ஆடுகளமகள், கண்ணுளர், கலப்பையர், துணைமகள், துணைமகள், இணையர், கோடியர், சென்னியர், துடியர், பாணர், பாடினி, பாண்மகன், பாடுநர், பாடுமகள், பொருநர், வயிரியர், விறலியர் எனும் பல்வேறு கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.


இவர்கனைப் பாணச் சுற்றத்தினராகப் கருதலாம் இவர்கள் அனைவரும் இணைந்தே நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். நிகழ்ந்துக்கலை மரபினால் ஒரு குழவாக இயங்க வேண்டிய தேவை பாணர்களுக்கு இருந்துள்ளது.


பாணர்க்கு உரிய செயல்கள் : - (5)


வாயில் வேண்டலும்1, வாயில் நேர் வித்தலும்2

சேயிழை ஊடல் தீர்த்hலும்3 போயுழி

அவள்நலம் தொலைவுகண்டு அழுங்கலும்4 அவன்வயின்

செல்ல விரும்பலும்5 சென்றுஅவற்கு உணர்த்தும்6        (35)

அகப்பொருள் விளக்கம் (95)









1. தலைவியடம் நெருங்கி வாயில் (தூது) வேண்டுதல்


2. வாயிலை அமைத்துத் தருதல்


3. தலைவியின் ஊடலைத் தீர்த்தல்


4. தலைவியின் நலன் அழிவு கண்டு வருந்துதல்


5. தலைவன்பால் சென்று கூறி வருகிறேன் எனச் சொல்லுதல்

;

6. தலைவியின் நிலையைத் தலைவனிடம் உணர்த்துதல்


7. தலைவி கூறியதைக் கூறியபடி தலைவனிடம் சொல்லுதல்


8. தலைவன் பரத்தையிடம் இருந்து பிரிந்து தலைவியைக் காண வருவதை உணர்த்துதல்


9. தலைவி அணிநலம் பெற்றதை அறியாதவன் போன்று பணிவொடு வினவுதல் ஆகிய செயல்கள் ஒன்பதும் பாணர்க்கு உரியனவாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக