செவ்வாய், 2 ஜனவரி, 2018

அவளின் நினைவுகள்

அவளின் நினைவுகள்

நான் அவளை
வானமாக பார்த்தேன்
அவள் என்மீது காதல்மழை பெய்தப்போது...

நான் அவளை
காற்றாக உணர்ந்தேன்
அவள் என்மீது காதல் தென்றல்
வீசியப்போது...

நான் அவளை
பூமியாக பார்த்தேன்
அவள் என் காதலை பூப்போல
தாங்கியப்போது...

நான் அவளை
நீராக பார்த்தேன்
அவள் ஓடையாக மாறி
என் காதல் நினைவுகளை
சுமந்து சென்றப்போது...

நான் அவளை
தீயாக பார்த்தேன்
என் இதயத்தில் காதல் தீபம்
ஏற்றியப்போது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக