வியாழன், 4 ஜனவரி, 2018

ஐ.ஏ.எஸ். தமிழ்ப் பாடம்

ஐ.ஏ.எஸ். தமிழ்ப் பாடம்

 


..எஸ். தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன. தமிழில் தேடுபவர்களுக்காக இது :-)
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.. ப்ளீஸ்.  
தமிழ் முதல் தாள்
UPSC Tamil optional syllabus
Tamil I paper
பிரிவு-A
பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு
முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும்.
சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ்பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர், வினை, பெயரடை, வினையடை, கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள் ஆகியவற்றின் போக்கு பற்றிய வரலாற்று நோக்கிலான ஆய்வு.
பிறமொழிகளிலிருந்து தமிழ் கடன் பெற்ற சொற்கள், தமிழில் வழங்கும் சமூக மற்றும் வட்டாரக் கிளை மொழிகள் - பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்குமான வேறுபாடு.

பகுதி : 2 தமிழிலக்கிய வரலாறு
தொல்காபியம் - சங்க இலக்கியம் - அகம், புறம் எனும் பாகுபாடு - சங்க இலக்கியத்தின் சமயப் பொதுமைப் போக்கு - அற இலக்கியங்களின் வளர்ச்சி - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.

பகுதி : 3
பக்தி இலக்கியம் (ஆழ்வார்களும் நாயன்மார்களும்) - ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவம் - சிற்றிலக்கிய வடிவங்கள் : தூது, உலா, பரணி, குறவஞ்சி.
இக்கால் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சிக்கான சமூகக் காரணிகள் : நாவல், சிறுகதை, புதுக்கவிதை - புதுமைப் படைப்புகளின் ஆக்கத்தில் வேறுபட்ட அரசியல் கருத்தாக்கங்களின் தாக்கம்.

பிரிவு - B
பகுதி : 1 தமிழியலின் அண்மைக்கால போக்குகள் :
திறனாய்வு அணுகுமுறைகள் : சமூகவியல், உளவியல், வரலாற்றியல் மற்றும் அறிவியல் - திறனாய்வின் பயன்பாடு - பல்வகை இலக்கிய உத்திகள் : உள்ளுறை, இறைச்சி, தொன்மம், ஒட்டுருவகம், அங்கதம், மெய்ப்பாடு, படிமம், குறியீடு, இருண்மை - ஒப்பிலக்கிய கருத்தாக்கம் - ஒப்பிலக்கிய கொள்கை.
பகுதி : 2
தமிழில் நாட்டுப்புற இலக்கியங்கள் : கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் - சமூகவியல் பார்வையில் நாட்டார் வழக்காற்றியல் - மொழிபெயர்ப்பின் பயன்கள்மொழி பெயர்க்கப்பட்டுள்ள தமிழ் இலக்கியங்கள் - தமிழ் இதழியல் வளர்ச்சி.
பகுதி : 3 தமிழர்களின் பண்பாட்டு வரலாறு
காதல், போர் பற்றிய கருத்தாக்கம் -அறக்கோட்பாடுகள்தொல்தமிழர் தம் போரியல் அறநெறி முறைகள் - பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள், சடங்குகள், ஐந்திணைகள் காட்டும் வழிபாட்டு முறைகள் - சங்க மருவிய கால இலக்கியங்களில் புலப்படும் பண்பாட்டு மாற்றங்கள் - இடைக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டுக் கலப்புகள் (சமணம் மற்றும் பௌத்தம்). காலந்தோறும் கலை மற்றும் கட்டட நுட்பங்களில் ஏற்பட்ட வளர்ச்சி (பல்லவர், பிற்கால சோழர்கள், நாயக்கர் காலம்). பல்வேறு அரசியல், சமூக, சமய பண்பாட்டு இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் - இக்கால தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு மாற்றத்தில் வெகுசன ஊடகங்கள் பெறும் பங்கு.
தமிழ் இரண்டாம் தாள்
UPSC Tamil optional syllabus
Paper-II
பிரிவு - A
பகுதி 1 : முற்கால இலக்கியம்
1) குறுந்தொகை (பாடல்கள் :1-25)
2) புறநானூறு (பாடல்கள் :182-200)
3) திருக்குறள் பொருட்பால் : அரசியலும், அமைச்சியலும் (இறைமாச்சியிலிருந்து அவையஞ்சாமை வரை)
பகுதி:2 காப்பிய காலம்
1) சிலப்பதிகாரம் : மதுரை காண்டம்
2) கம்பராமயணம் : கும்பகர்ண வதைப் படலம்
பகுதி 3: பக்தி இலக்கியம்
1) திருவாசகம் : நீத்தல் விண்ணப்பம்
2) திருப்பாவை முழுவதும்
பிரிவு : B
நவீன இலக்கியம்
பகுதி :1 கவிதை
1) பாரதியார் : கண்ணன்பாட்டு
2) பாரதிதாசன் : குடும்பவிளக்கு
3) நா. காமராசன் : கறுப்பு மலர்கள்
உரைநடை
1) மு. வரதராசன் : அறமும் அரசியலும்
2) சி. என். அண்ணாதுரை : ! தாழ்ந்த தமிழகமே.
பகுதி :2 புதினம், சிறுகதை மற்றும் நாடகம்
1) அகிலன் : சித்திரப்பாவை
2) ஜெயகாந்தன் : குருபீடம்
3) சோ : யாருக்கும் வெட்கமில்லை
பகுதி 3: நாட்டுபுற இலக்கியங்கள்
1) முத்துப்பட்டன் கதை - பதிப்பித்தவர் . வானமாமலை (மதுரை காமராஜர் பல்கலை வெளியீடு)
2) மலையருவி - பதிப்பித்தவர் கி. வா. ஜெகநாதன் (தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக