புதன், 28 ஏப்ரல், 2021

நத்ததத்தணார் கூறும் கடையெழு வள்ளல்கள்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 

  அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது  அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை  காணலாம்.


பாரி 


சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்

முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”. 

(புறம் 20)


“பாரி பாரி என்று பல ஏந்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”

(புறம் 107)


“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய

பிறக்கு வெள் அருவி விழும் சாரல்

பிறமம்பின் கோமான் பாரியும்”

(சீறு – 89 - 91)


இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பேகன் 


சிறுபாணாற்றுப்படையில் பேகனின் சிறந்த கொடைச்சிறப்பு கூறப்பட்டுள்ளது.

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்ததீறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 

பெருங்கல் நாடன் போகனும்”

(சிறுபாண் - 85 – 87)


“உடாஅ போராவாருதல் அறி;ந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கே”   

(புறம் 141 : 10 - 11)


“மடத்தகை மாமயில் பணிக்குமென்று அருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக”

(புறம் 145 : 1 – 3)


என்ற பாடலடிகளில் பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அவனது மலைநாடு பருவமழை தவறாது பெய்தலால் வளம் மிக்கது. அப்பேகன் மலைவளம் காணச் சென்றபோது, வளம் நிறைந்த அம்மலைச்சாரலில் மயில் ஒன்று அகவியதைக் கேட்டு அது குளிரால் அகவியதெனக் கருதி, அருள் மிகுதியால் அதன் மீது போர்வையைப் போர்த்தினான். இதனை,


“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்” எனும் பாடல் வரி விளக்குகிறது.


இதில் பேகனின் செங்கோன்மைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது காரணம் பேகனின் ஆட்சி மழை போல, காலம் மாறி பெய்யாது என்றும், அவனின் ஆட்சி என்றும் மாறாமல் இருக்கும் செங்கோல ஆட்சி என்றும் பேகனின் ஆட்சி சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காட்டிலுள்ள மயில் அகவியதைக் கேட்டவுடன் அது குளிரினால் தான் வருந்தியது என்று நினைத்துத் தனது போர்வையை அதற்கு ஈந்தான் பேகன்.


மயில் போர்வையைப் பயன்படுத்தி கொள்ளுமா? கொள்ளாதா? என சிறுpதும் நினையாமல், அருள் உணர்ச்சி பெருகி அஃறினை உயிருக்கு அவன் செய்த செய்கை சான்றோர்கள் கொடை மடம் என்று போற்றிக்கூறுகின்றனர்.




காரி 


“வால் உளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

(சிறுபாண் - 92 - 95)


இப்பாடலில் இவ்வள்ளலைப் பற்றிய செய்தி புதிரையுடன் நாட்டைக் கொடையாகத் தந்தோன் என்றும் கூறுவர்.


“கடல் கொளப் படாது உடலுநர் ஊக்கார்

சுழல்புனை திருந்தடிக் காரி நின்னாடே”

புறம் 122 (அடி 1 – 3)

“மூவருள் ஒருவன் துப்பாகியர் என

ஏத்தினர் தருஉங் கூழே”

(புறம் 122, அடி 5 – 6)


இப்பாடலில் திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன். இவன் தனது குதிரையையும், தன் நாடடையும் அனைவரும் வியக்கும் வண்ணம் இரவலருக்குக் கொடையாக வழங்கினான் என்று சிறுபாணன் கூறுகின்றான்.


மணியையும், தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு, அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர்கேட்டு வியக்குமாறு இரவலர்க்கும் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடையவன் காரி.


உலகத்துச் சான்றோர் வியக்கும்படி கொடை அளித்த காரியின் சிறப்பும், இரவலரிடத்து இனிமையாகப் பேசும் அவனின் குணநலச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.


ஆய்  வேள்ஆய் (அ) ஆய் அண்டிரன் :


பொதிகை மலைச்சாரலில் உள்ள ஆய் குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஆய், இவ்வள்ளலை, வேள்ஆய், ஆய் அண்டிரன் என்றும் வழங்குவர். இவனுடைய கொடைச்சிறப்பையும், வீரச் சிறப்பையும் சங்க கால நல்லிசைப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆய் தனக்கு இறைவன்பால் இருந்த அன்பை.


“………………நிழல்திகழ்

நீல நாகம் நல்கிய கலிங்கம்

ஆலமலர் செல்வற் காமர்ந்தனன் கொடுத்த”

(சிறுபாண் - 98 -100)


இப்பாடலில் ஒளிமிக்க நீல மணியினையும், நாகம் நல்கிய கலிங்கத்தையும் பெற்றிருந்த ஆய், இறைவனிடம் தனக்கிருந்த பேரன்பால் அவற்றை அவ்விறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இதில் ஆய்யின் பற்றற்ற கொடைத்தன்மை சுட்டப்பட்டுள்ளது. ஆய்அண்பிரன் தன்னிடம் வரும் இரவலர்களிடம் ஆர்வமிக்க மொழிகளைப் பேசும் இயல்பினை உடையவன். “ஆல்ஃஅமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த” இவ்வாயின் மூலம் ஆய்யின் சிறந்த கொடைத் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.


அதியமான் 



அதிகன் பெரிய மலையில் மலர்கள் மணம் கமழும் மலைச்சரிவில் அழகுடன் விளங்கும் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து, அமிழ்தின் தன்மையைக் கொண்ட அவ்வினிய கனியைத் தான் உண்டு நீண்ட நாள்வாழ விரும்பாமல் ஒளவைக்கும் கொடுத்து உண்ணச்செய்தான், தன் வாழ்நாளை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற சிறப்பினை சிறுபாணாற்றுப்பரட விளக்குகிறது.


அதியர் குடியில் தோன்றி தன்னுடைய வள்ளல் தன்மையால் சங்க நூல்களில் என்றும் அழியாத இடம் பெற்றவன் அதியமான், அதியமானின் கொடைச் சிறப்பை சிறுபாணாற்றுப்படை,


“கமழ் பூஞசாரல் கவினிய நெல்லி

அமிழ்து வளை நீம் கனி ஒளவைக்கு ஈந்த

(சிறு – 100 – 103)


இவ்வாறு விளக்குகின்றது.


இதில் அதியமானின் களங்கமில்லா கொடைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை உண்டால் நரை, திர, மூப்பு இன்றி நீண்ட நாள் உடலுறுதி பெற்று வாழலாம் எனும் செய்தியைச் சான்றோர் மூலம் அறிந்த அதியமான் அதை தான் உண்ணாமல், எந்நாளும் தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவராகிய ஒளவையிடம் கொடுத்தான். இத்தகைய சிறப்புடைய நெல்லிக்கனியை பெற்ற ஒளவை அதியமானின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து போற்றிப் பாடினர். இதில் புலவர்களின் மீது அதியமான் கொண்டுள்ள மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.


நள்ளி 


கேட்கக் கொடுப்பார் சிலர் கேட்டும் மறுப்பார் பலர், கேட்கும் முன்னரே அவர்தம் குறிப்பறிந்து உள்ளம் குளிரவாரி வழங்குபவன் ஒருவனே அவனே வள்ளல் நள்ளி என்பதைச் சிறுபாணாற்றுப்படையில்,


“நட்ஆடார் உவப்ப நடைப்பரிகாரம்

முட்டாது கொடுத்த”………….

(சிறுபாண் 104 – 105)


தன்னை நாடி வந்த வறியவர்களது குறிப்பறிந்து அவர்கள் கேட்டும் முன்னரே அவர்தம் மனம்மகிழ அவர் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்களை வாரி வழங்கியவன் வள்ளல் பெருந்தகை நள்ளி என்பதை ஆசிரியர் நல்லூர் நத்தத்hனார் கூறியுள்ளார். நள்ளிமலை வளஞ்செறிந்த கண்பீர நாடடைச் சேர்;ந்தவன் நள்ளி. சிறுபாணாற்றுப்படையில் நள்ளியின் ‘அறங்கொடை’ சிறுப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


“முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை

துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு

நளிமழை நாடன் நள்ளியும்”

(சிறுபாண் - 105 -107)


இப்பாடலில் தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அவர்களின் இல்லறத்திற்குத் தேவையான பொருட்களைக் குறிப்பறிந்து வழங்கியவனும் தன்னிடம் பொருள் பெற்றுவிட்டு பின் வேறொருவரிடம் சென்று இரவாதவாறு நிரம்பப் பொருள் கொடுக்கும் இயல்பினை உடையவன் நள்ளி.


தன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது வழக்கிய நள்ளியின் வள்ளல் தன்மையை சான்றோர்கள் அறக்கொடை என்று போற்றுகின்றனர்.


ஓரி 


கொல்லி மலையின் காவலனாய் வீரத்தின் தலைமகனாய் ஈகையின் தவமாய் அவதரித்தவன் வல்வில் ஓரி, வீரத்திற்குச் சான்றோய் ஒரே அம்மைக் கொண்டு ஏழு விலங்குகளை வீழ்த்தியவன் கொல்லியின் அரசன் ஓரி.


வீரத்திற்கு மட்டுமின்றி கருணை ஈரத்திற்கும் வித்தானவன் வள்ளல்  ஓரி, ஓரியின் கருணை, அன்பு, அவனது அம்பென ஏழு பிறவிக்குமான வறுமையை அணடாது விலக்கும் என்பதை நத்தத்தனார்  சிறுபாணாற்றுப்படையில் பின்வருமாறு


“நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த

சிறுபாண் - (108 – 109)


இப்பாடலில் கடையயேழு வள்ளல்களில் ஒருவனான ஓரி பரிசில் பெற வருபவர்களுக்குப் பொன், பொருள் மட்டுமின்றி, நறிய பூக்கள் மிக்க சுரபுனைகளையும், குறும்பொறைகளையும் உடைய நல்ல நாடுகளையே பரிசிலாகக் கொடுத்தான் என்பதைச் சிறுபாணாற்றுப்படையின் வழி அறியலாகிறது.


பூக்கள் நிறைந்த சுரர்ன்னைகளையும், குறிய மலைகளையும் உடைய நல்லநாடுகளைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவன் ஓரி, இதில் ஓரியின் இரக்கக் குணம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்மை நாடி வந்தவர்கள் எந்நாளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக நல்ல நாடுகளையும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான். இதில் ஓரியின் சிறந்த கொடைத் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை

எழுசமம் கடந்த ஏழு உறழ்திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

(சிறுபாண் - 112 – 113)


இப்பாடலில் பேகன் முதலிய தமிழ் வள்ளல்கள் ஏழு பேர் நடத்திய ஈகைத் (கொடை) தன்மையை நல்லியக்கோடனின் வள்ளல் சிறப்பும் கொடைச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.


முடிவுரை

சங்க இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாக பலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் புறப்பாடல்களின் சிறப்புத்தன்மையாக வீரத்தையும், கொடையையும் கூறலாம். அவற்றுள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அரசர்களின், வள்ளல்களின் கொடைச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றன.


அவற்றுள் சிறுபாணாற்றுப்படை கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்பை ; எடுத்துரைக்கின்றன. கடையேழு வள்ளல்கள் உலக மக்களிடம் மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டியுள்ளனர். இவர்களது கொடைத்தன்மையைச் சான்றோர்கள் மடக்கொடை, அறக்கொடை என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். இவர்களுடைய இயல்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவனாக நல்லியக்கோடனைச் சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது.



இலக்கிய வழி பாணர் வாயிலர்கள்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



தலைவனையும் தலைவியையும் கூட்டுவிக்கும் வாயில்களில் ஒருவராகப் பாணர்கள் குறிக்கப்பெறுகின்றனர் அதனைத் தொல்காப்பியம்,


தோழி தாயே பார்ப்பாண் பாங்கன்

பாணன் பாட்டி இளைஞர் விருந்தினர்

கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

யாத்த சிறப்பின் வாயில்கள் எனப்    (13)

(தொல் - அகத் 191)


எனக் குறிப்புதன் வழி உணரலாம்.


பாணன் தலைவனையும் தலைவியையும் கூட்டுவித்தலுக்காகத் தூதாகச் சென்றதை,


தண்ணம் துறைவன் தூதொடு வந்த

பயன் தெரியனுவற் பெதீர் பாண    (14)

(நற் - 167, 5, 6)


எனும் நற்றினை அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இவ்வாறு தூதாகச் செல்லும் பொழுதெல்லம் பாணனை எதிர்கொள்ளும் தலைவியர் அவனைப் பொய்யானாகவே காண்கின்றனர்.


தலைவி, தலைவன் தீதுற்ற சினத்தால் ஊடல் நீக்க வந்த பாணனை இழிவாகப் பேசுவதை.


ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம் 

கள்வர் போல்வர் நீ யகன்றிசி னோர்க்கே     (15)

(குறுந், 107, 4 – 6)


என்ற குநற்தொகைப் பாடல் காட்டுகின்றது. பாணன் ஊடல் தணிக்கும் வாயிலாச் செயல்பட்டமையால் பொய்கள் பலவற்றைக் கூறவேண்டிய நிலையில் இருந்துள்ளான் ஊடலுக்குக் காரணமாகப் பரத்தன்மை இருந்ததனால் தலைவியர் பாணனைக் கடுமையாகத் திட்டுகின்றனர்


பாணப் பொய்யன பலசூ ளினனே   (16)

(ஜங் - 43)

யாணருர நின் பாண்மகன்

யார் நலஞ் சிதையப் பொய்க்குமோ இனியே    (17)

(ஜங் - 47)


எனப் பாணன், பல சூள்களையும் செய்யக் கூடியவன் தமது பொய்களினால் பல தலைவியர்களின் நலனைச்  


புறம். 68 உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

புறம். 69 புரவலர் இன்னையின் பசியே; அரையது.    (18)


சிதைத்தவன் எனக் கூறப்படுகின்றான். இதனை பல பெண்களை பரத்தையரைக் கூட்டுவிக்கும் வாயில்களாகவும் பாணர்கள் இருந்துள்ளமையை அறியமுடிகிறது. இம்மாற்றம் பாணர்கள் தம் சமூகத் தகுதியை இழந்த பிற்காலத்தில்  நிகழ்ந்திருக்கலாம்.


பாணர்கள் வறுமையர் :¬ -


பாணர்கள் மிகுந்த வறுமை வயப்பட்டவர்களாக இருந்தமையைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. பாணர்களைச் சுட்டுமிடங்களியெல்லாம் ‘பசியும்’ இணைத்தே சுட்டப்படுகிறது.


பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,    (19)

புறம் (212: 7, 389: 114)


பாணர்கள் “உடும்பினை உரித்தார்ப் போன்ற தோற்றத்திiராய் விலா எறும்புகள் வெளித் தெரிய மிகுந்த  பசியையுடையவராகயும். (புறம் - 68) வியர்வையில் நனைந்து கிழிந்த ஆடையையுடையவராகவும். (புறும் - 69) காட்டப்பபெறுகின்றனர் தமது வறுமையைப் போக்கிக் கொண்டு வரும் பாணன் ஒருவன் வறுமையில் வாடிவரும் பாணன் ஒருவனைப் பேகனிடம்


படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅம் யானைக் கலிமான் பேகன்

எத்துணை ஆயினும் ஈதல் நன்று என  (20)

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே   (21)

(புறம் - 141)


எனக் கூறி ஆற்றுப்படுத்துகிறான் பாணனின் வறுமை வுட்டப்பெறினும் வள்ளல்களைக் கண்டு மீளும் பாணர்கள் செல்வச் செழிப்புடையவர்களாக உள்ளனர். பொன்னால் செய்யப் பெற்ற தாமரைப் பூவும் மாலைகளும் சூடியவர்களாகப் பாணர்கள் காட்டப் பெறுகின்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம் 


பாணர் தாமரை மலையவும்ஈ புலவர்

பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     (22)

(புறம் 12, 41, 361)


பாணர்கள் வறுமை வளமை என்ற இருவித நிலைகளுக்கும் உரியவர்களாக இருந்துள்ளனர். இத்தகைய முரண்பட்ட நிலையின் காரணம் ஆராயத்தக்கது.


பாணர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்குக் கூட்டமாகச் சென்று கவைகளை நிகழ்த்தி வந்தனர். தமது வறுமையைத் தீர்க்கும் பொருட்டு மன்னர்களை நாடி வேற்றிடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் பாணர்கள் தம் இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். கலைத் தொழிலைச் செய்த அதே நேரம் வாயில்களாகவும் இருந்துள்ளனர் ஆமலும் மீன் பிடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.


பாண்மகளின் அண்ணன்மார் நள்ளிரவில் சென்று காவிரி ஆற்றின் மடுவில் லாளை மீனைப் பிடித்துக்கொண்டு மறுநாள் விடியலில் வருவர்.


வல்லேம் அல்லேம் ஆயினும் வ்லே

நின்வயிற் கிளக்குவம் ஆயின் கஞகுல்

துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்

பறை இசை அருவி, முள்ளுர்ப் பொருக,

தெறலளு மரபின் நின் கிளயொடும் பொலிய,    (23)

(புறம் 126 : 5 – 9)


வைகறை வேட்டையில் அகப்பட்ட வரால்மீனின் கொழுத்துண்டத்தினை விற்று விற்று பொருளால் கள்ளுண்டு களித்து, வேட்டைக்குச் செல்வதை மறந்த தன் தணவருக்குப் பாட்டி (பாடின்) அகன்ற ஆம்பல் இலையில் புளியங்கறியுடன் சோற்றினை அளித்தாள் (புறம். 196: 1 – 6) பாண்மகள் சில மீன்களைக் கொடுத்து அவற்றுக்கு ஈடாகப் பல நெற்களைப் பெற்றுச்செல்லும் ஊரக்குத் தலைவனே இனி உன் பாண்மகள் யாருடைய நலனைச் சிதைக்கப் பொய்யுரைப்பாளோ.


ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்

ஆள்லினை மருங்கின் கேண்மைப் பாலே

ஒல்லாது ஒல்லும் என்றாலும், ஒல்லுவது

இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்       (24)

(புறம் 196: 1 – 6)

எனப் பாணர்கள் மீன் வாழும் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமையைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. இவர்கள் மீன் பிடித்தலை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு இருந்துள்ளனர். மருத நிலத்து நீர் நிலைகளிலேயே இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்துள்ளனர் இவர்கள் தங்கி இருந்த இடம் பாண்சேரி எனப்பட்டது.


வெண்யெல் அரிநர் தண்னுமை வெர்இ

கண்மடல் கொண்ட தீம்தேன் இரிய

கள் அரிக்கும் குயம் சிறுசில்

மீன் சீவும் பாண்சேரி,

வாய் மொழித் தழும்பண் ஊணூர் அன்ன    (25)

(புறம், 348 : 1 – 5)


அகல் இரு வானத்து இழிந்து இனிது

குருகு நரல மனை மரத்தான்

மீன் சீவும் பாண்சேரியொடு

மருதம் சான்ற தன்பணை…….          (26)

மதுரை (267 – 270)


எனப் பாண்சேரி பற்றிய குறிப்புகள் சில சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவ்வாரு பாடல்களும் மருத நிலத்து வயலின் வளப்பத்தைச் சுட்டுவதானால் பாணர்களில் சிலர் மருதநில வளர்ச்சியில் ஒரு நிலையான இடத்தில் தங்கி விளைவித்துண்டடையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அதே நேரம் “மீன் சீவும் பாண்சேரி” எனப் பாணர்கள் மீனுடன் மட்டும் அணைக்கப்பட்டுகின்றனர் பிடித்து அவற்றை விற்றும், சமைத்தும் உண்கின்ற தற்காலிகச் சேரிகளாக இவை இருந்திருக்கலாம்.


பாணர்களின் மீன்பிடித்துவாழும் வாழ்வைச் சுட்டும் கா. சிவத்தம்பி (2005 : 205) “இவை இவர்களின் வறுமையையும் எழுச்சிபெறும் பொருளாதார நிலைமைக்கேற்பத் தம்மை இணைத்துக் கொள்ள முடியாமையையும் வெளிப்படுத்துகின்றன” எனலாம். நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பரிசிலாக நிலங்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளன என்றாலும் உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி விளைவிக்கும் தொழில்லைப் பாணர்கள் மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர் அதனாலேயே பசித்த வயிற்றுடன் காணப்படுகின்றனர்.


நெடிய என்னாது வுரம் பல கடந்து

வடியா நாவின் வல்லாங்குப் பாடி

பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை     (27)

(புறம்- 47 : 2 – 5)

எனப் பாணர்கள் ஒர் இடத்தில் தங்கி வாழாத நாடோடி வாழ்க்கை நடத்தியமை காட்டப்படுகின்றது. அதர் பல கடந்து வந்த’ பாணர்களின் (புறம் 138) நாடோடி வாழ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடோடி நிலையில் வாழ்ந்த பாணர்களுக்கு அவர்களின் கலைக்கான பரிpலாக நிலங்கள் தானமாக அளிப்பட்டுள்ளன இதனை


பசிபடு மருங்குலை கசிவு கைதொழாஅ

காணலென் கொல் என வினவினை வருஉம்

பாண கேண்மதி யானரது நிலையே

புரவுத் தொடுத்து உண்குரவை ஆயினும் இரவு

எவ்வம் கொள்ளை ஆயினும் இணை;டும்

கையுள போலும் கடிதுஅண் மையவே.    (28)


எனும் புறப்பாடல் காட்டுகிறது.


ஆநிரை மீட்டலில் இறந்துபட்ட வீரனின் புகழைப் பாணர்கள் செல்லுமிடங்களைல்லாம் பரப்ப வேண்டும் என்பதையே இப்பாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலங்களைக் கைப்பற்றி வாழும்படி பாணருக்கு அறிவுறுத்துவது. இப்பாடலின் நோக்கமன்று இப்பாடல் சீறூர் தலைவர்கipனாலேயே நிலங்கள் பாணர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்டுள்ளமையைப் பதிவு செய்கின்றது. இதனால், அடுத்த வளர்ச்சியடைந்த நிவப்பகுதியான மருதத்தில் காணப்படும் பாண்சேரி பற்றிய செய்திகள். ஓரிடத்தில் தங்கி வாழும் பாணர் குடியிருப்புகள் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை முன் வைக்கின்றன்.


கதைத் தொழிலினை மேற்கொண்டு வள்ளல்களைச் சார்ந்து வாழ்ந்தமையால் பாணர்கள் தமக்கான தனித்தொழிலை உருவாக்கிக் கொள்ளாமல் வறுமை நிலையை அடைந்துள்ளனர். நிலங்களைச் சார்ந்து வாழாத நிலையில் பாணர்களின் மீன் பிடித்தல் தொழில், இடம் பெயரும் காலத்தின் இடையில் நிகழ்ந்ததாகவே எண்ணத்தக்கதாக உள்ளது.


பாணர்கள் தகவல்களையும் கருத்துகளையும் தமிழ்ச் சமூகம் முழடைக்கும் கொண்டுசென்று ஒரு கருத்துக் கட்டமைப்பை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டிருக்கின்றனர். நிலம் சார்ந்த வாழ்க்கை முறையில் தகவல்களைப் - பல நிலப்கபுதிமரபுகள்; தலைவர்களின் புகழ்கள் பல்வேறு இடங்களுக்கும் கடத்தும் தன்மை இல்லாமல் போகிறது. பாணரது மரபே இத்தகவல் கடத்தலில்தான் நிலைகொண்டிருக்கிறது. அதனால் தான் நிலங்கள் வாழ்வாதாரமாக மாறும் காலத்தில் அவற்றைக் கைப்பற்றி வாழ்வது இரண்டாம் பட்சமானதாகக் கூறலாம். 





மேலும்,


சீநூர் மன்னரைப் பற்றிய பாடல்களில் மட்டுமல்ல

வேந்தர் பற்றிய பாடலிலும் பாணரின் நிலைத்த குடியிருப்பு

பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது. கிள்ளவளவன் பற்றிய

பாடலில் பாணர்க்கு அவன் நீங்காத செல்வத்தைச் செய்த

கொடைச் சிறப்பு பாடப்பட்டுள்ளது. (புறம் 34) இந்தப்

பாடல் கூறும் அகலாச் செல்வம் என்பதற்கு நிலத்துடன்

கூடிய நிலைத்த குடியிருப்பு செய்து தருதல் எனப்


பொருள் கொள்ளலாம். பாணரின் இத்தகைய நிலைத்த குடியிருப்பை மதுரைக் காஞ்சி (332 – 342) காட்டும் பெரும் பாணிருக்கை வழி உறுதிப்படுத்தலாம். 

(பெ. மாதையன், 2005 : 98)


பெரும் பாணர் வாழும் இருக்கை   ( 29)

(330)


கலை தாய, உயர் சிமையத்து

மயில் அகவும், மலி பொங்கிரி,

மநதி ஆடஈ மா விசும்பு உகந்து

முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்.     (30)

(342)


எனும் பெ. மாதையன் அவர்களின் கூற்று சிந்திக்கத்தக்கதாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தின் மாற் உரும் பலவேறு சூழலினால் இத்தகு நிலைத்த குடியிருப்புகளே பாணர் மரபின் தேய்வுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம்.


பாணர் சுற்றமுடையோர் : -


சங்க இலக்கியத்தில் பாணர்கள் தனிநிலையில் காட்டப்பெறாமல் ஒரு குழவினராகவே காட்டப் பெறுகின்றனர். “காரென் ஒக்கல் கடும்பசி இரவல” (புறம் 141 : 6) எனப் பாணன் கட்டப் பெறுகிறான்.


பைதல் சுற்றுத்துப் பசிப்பகை யாகுக்

கோழியோனே கோப்பெருஞ் சோழன்       (31)

(புறம் 212 : 7 – 8)


எனப் பாணன் சுற்றித்திற்கு உதவும் மன்னன் காட்டப்பெறுகிறான். இதே போன்று


பசித்த ஒக்கல் பழங்கண் வீட   (32)

(புறம் 389 : 14)


இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற    (33)

(புறம் 390 : 20)


கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்

புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாணன்    (34)

(பெரும் 21, 22)


எனப் பாணன் சுற்றம் காட்டலாம்.


கலைஞர்களாகப் பாணர்கள் இருந்ததனால் குழவாகவே இயங்கவேண்டியிருந்தது, இருந்தாலும் பலவிதமான இசைக்கருவிகளை இசைக்கவும் பாடவும் ஆடலுமான கலைஞர்கள் இக்குழவில்இடம் பெற்றிருந்தனர், அகவன் மகள், ஆடுமகள், ஆடுகளமகள், கண்ணுளர், கலப்பையர், துணைமகள், துணைமகள், இணையர், கோடியர், சென்னியர், துடியர், பாணர், பாடினி, பாண்மகன், பாடுநர், பாடுமகள், பொருநர், வயிரியர், விறலியர் எனும் பல்வேறு கலைஞர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.


இவர்கனைப் பாணச் சுற்றத்தினராகப் கருதலாம் இவர்கள் அனைவரும் இணைந்தே நிகழ்வுகளை நடத்தியுள்ளனர். நிகழ்ந்துக்கலை மரபினால் ஒரு குழவாக இயங்க வேண்டிய தேவை பாணர்களுக்கு இருந்துள்ளது.


பாணர்க்கு உரிய செயல்கள் : - (5)


வாயில் வேண்டலும்1, வாயில் நேர் வித்தலும்2

சேயிழை ஊடல் தீர்த்hலும்3 போயுழி

அவள்நலம் தொலைவுகண்டு அழுங்கலும்4 அவன்வயின்

செல்ல விரும்பலும்5 சென்றுஅவற்கு உணர்த்தும்6        (35)

அகப்பொருள் விளக்கம் (95)









1. தலைவியடம் நெருங்கி வாயில் (தூது) வேண்டுதல்


2. வாயிலை அமைத்துத் தருதல்


3. தலைவியின் ஊடலைத் தீர்த்தல்


4. தலைவியின் நலன் அழிவு கண்டு வருந்துதல்


5. தலைவன்பால் சென்று கூறி வருகிறேன் எனச் சொல்லுதல்

;

6. தலைவியின் நிலையைத் தலைவனிடம் உணர்த்துதல்


7. தலைவி கூறியதைக் கூறியபடி தலைவனிடம் சொல்லுதல்


8. தலைவன் பரத்தையிடம் இருந்து பிரிந்து தலைவியைக் காண வருவதை உணர்த்துதல்


9. தலைவி அணிநலம் பெற்றதை அறியாதவன் போன்று பணிவொடு வினவுதல் ஆகிய செயல்கள் ஒன்பதும் பாணர்க்கு உரியனவாகும்.



கடையெழு வள்ளல்கள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி



சிறுபாணாற்றுப்படையில் சேர, சோழ, பாண்டிய நாட்டின் வளம் பற்றியும் கூறியுள்ளனர். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும்  காணலாம்.


தமிழர்தம் உயர்தனி வாழ்வியல் நெறியை அறத்தொடு நிற்றல் எனும் கூற்றில் அடக்கிவிடலாம். அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது  அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும்.


வீரத்தோடு கொடைத் தன்மையும் வாய்க்கப்பெற்றவன் உலகைப் படைத்தவனோடு என்றும் ஒப்பிடப்படுவான் என்பதைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. சங்க காலத்தில் அமரில் வென்று சரித்திரம் படைத்த அரர்சகளின் பெயரே நீரின் சுழியைப்போல் காலவெள்ளத்தில் மறைந்து ஓட, உடைமைப்பொருளை உயிர்களின் பாகுபாடு காணாது கொடையென வழங்கியவர்களின் பெயரானது சிகரத்தின் எழுத்தெனமக்களின் மனதில் பதிந்துள்ளது உடைமை மட்டுமின்றி தங்களது இன்னுயிரையும் கொடையென வழங்கிய கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, ஆய், அதியன், பேகன், நள்ளி இவர்களது கொடைத்தன்மை குறித்த செய்திகளை காணலாம்;.


பேகன் : -


சிறுபாணாற்றுப்படையில் பேகனின் சிறந்த கொடைச்சிறப்பு கூறப்பட்டுள்ளது.

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்ததீறல் அணங்கின் ஆவியர் பெருமகன் 

பெருங்கல் நாடன் போகனும்”

(சிறுபாண் - 85 – 87)


“உடாஅ போராவாருதல் அறி;ந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈந்த எங்கே”   

(புறம் 141 : 10 - 11)


“மடத்தகை மாமயில் பணிக்குமென்று அருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

கடாஅ யானைக் கலிமான் பேக”

(புறம் 145 : 1 – 3)


என்ற பாடலடிகளில் பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அவனது மலைநாடு பருவமழை தவறாது பெய்தலால் வளம் மிக்கது. அப்பேகன் மலைவளம் காணச் சென்றபோது, வளம் நிறைந்த அம்மலைச்சாரலில் மயில் ஒன்று அகவியதைக் கேட்டு அது குளிரால் அகவியதெனக் கருதி, அருள் மிகுதியால் அதன் மீது போர்வையைப் போர்த்தினான். இதனை,


“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்” எனும் பாடல் வரி விளக்குகிறது.


இதில் பேகனின் செங்கோன்மைச் சிநப்பு குறிப்பிடப்பட்டுள்ளது காரணம் பேகனின் ஆட்சி மழை போல, காலம் மாறி பெய்யாது என்றும், அவனின் ஆட்சி என்றும் மாறாமல் இருக்கும் செங்கோல ஆட்சி என்றும் பேகனின் ஆட்சி சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காட்டிலுள்ள மயில் அகவியதைக் கேட்டவுடன் அது குளிரினால் தான் வருந்தியது என்று நினைத்துத் தனது போர்வையை அதற்கு ஈந்தான் பேகன்.


மயில் போர்வையைப் பயன்படுத்தி கொள்ளுமா? கொள்ளாதா? என சிறுpதும் நினையாமல், அருள் உணர்ச்சி பெருகி அஃறினை உயிருக்கு அவன் செய்த செய்கை சான்றோர்கள் கொடை மடம் என்று போற்றிக்கூறுகின்றனர்.


பாரி : -


சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்

முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”. 

(புறம் 20)


“பாரி பாரி என்று பல ஏந்தி

ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”

(புறம் 107)


“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய

பிறக்கு வெள் அருவி விழும் சாரல்

பிறமம்பின் கோமான் பாரியும்”

(சீறு – 89 - 91)


இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.


காரி : -


“வால் உளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த

(சிறுபாண் - 92 - 95)


இப்பாடலில் இவ்வள்ளலைப் பற்றிய செய்தி புதிரையுடன் நாட்டைக் கொடையாகத் தந்தோன் என்றும் கூறுவர்.


“கடல் கொளப் படாது உடலுநர் ஊக்கார்

சுழல்புனை திருந்தடிக் காரி நின்னாடே”

புறம் 122 (அடி 1 – 3)


“மூவருள் ஒருவன் துப்பாகியர் என

ஏத்தினர் தருஉங் கூழே”

(புறம் 122, அடி 5 – 6)


இப்பாடலில் திருக்கோவிலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் நாட்டை ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரி என்னும் மன்னன். இவன் தனது குதிரையையும், தன் நாடடையும் அனைவரும் வியக்கும் வண்ணம் இரவலருக்குக் கொடையாக வழங்கினான் என்று சிறுபாணன் கூறுகின்றான்.


மணியையும், தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு, அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர்கேட்டு வியக்குமாறு இரவலர்க்கும் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடையவன் காரி.


உலகத்துச் சான்றோர் வியக்கும்படி கொடை அளித்த காரியின் சிறப்பும், இரவலரிடத்து இனிமையாகப் பேசும் அவனின் குணநலச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.


ஆய் : - வேள்ஆய் (அ) ஆய் அண்டிரன் :


பொதிகை மலைச்சாரலில் உள்ள ஆய் குடியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் ஆய், இவ்வள்ளலை, வேள்ஆய், ஆய் அண்டிரன் என்றும் வழங்குவர். இவனுடைய கொடைச்சிறப்பையும், வீரச் சிறப்பையும் சங்க கால நல்லிசைப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். ஆய் தனக்கு இறைவன்பால் இருந்த அன்பை.


“………………நிழல்திகழ்

நீல நாகம் நல்கிய கலிங்கம்

ஆலமலர் செல்வற் காமர்ந்தனன் கொடுத்த”

(சிறுபாண் - 98 -100)


இப்பாடலில் ஒளிமிக்க நீல மணியினையும், நாகம் நல்கிய கலிங்கத்தையும் பெற்றிருந்த ஆய், இறைவனிடம் தனக்கிருந்த பேரன்பால் அவற்றை அவ்விறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இதில் ஆய்யின் பற்றற்ற கொடைத்தன்மை சுட்டப்பட்டுள்ளது. ஆய்அண்பிரன் தன்னிடம் வரும் இரவலர்களிடம் ஆர்வமிக்க மொழிகளைப் பேசும் இயல்பினை உடையவன். “ஆல்ஃஅமர் செல்வதற்கு அமர்ந்தனன் கொடுத்த” இவ்வாயின் மூலம் ஆய்யின் சிறந்த கொடைத் தன்மையை நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.




அதியமான் : -



அதிகன் பெரிய மலையில் மலர்கள் மணம் கமழும் மலைச்சரிவில் அழகுடன் விளங்கும் கருநெல்லி மரத்தில் கனிந்திருந்த ஒரு இனிய நெல்லிக்கனியைத் தன் உயிரையும் பொருட்படுத்தாது பறித்து, அமிழ்தின் தன்மையைக் கொண்ட அவ்வினிய கனியைத் தான் உண்டு நீண்ட நாள்வாழ விரும்பாமல் ஒளவைக்கும் கொடுத்து உண்ணச்செய்தான், தன் வாழ்நாளை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற சிறப்பினை சிறுபாணாற்றுப்பரட விளக்குகிறது.


அதியர் குடியில் தோன்றி தன்னுடைய வள்ளல் தன்மையால் சங்க நூல்களில் என்றும் அழியாத இடம் பெற்றவன் அதியமான், அதியமானின் கொடைச் சிறப்பை சிறுபாணாற்றுப்படை,


“கமழ் பூஞசாரல் கவினிய நெல்லி

அமிழ்து வளை நீம் கனி ஒளவைக்கு ஈந்த

(சிறு – 100 – 103)


இவ்வாறு விளக்குகின்றது.


இதில் அதியமானின் களங்கமில்லா கொடைச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை உண்டால் நரை, திர, மூப்பு இன்றி நீண்ட நாள் உடலுறுதி பெற்று வாழலாம் எனும் செய்தியைச் சான்றோர் மூலம் அறிந்த அதியமான் அதை தான் உண்ணாமல், எந்நாளும் தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவராகிய ஒளவையிடம் கொடுத்தான். இத்தகைய சிறப்புடைய நெல்லிக்கனியை பெற்ற ஒளவை அதியமானின் கொடைச் சிறப்பைப் புகழ்ந்து போற்றிப் பாடினர். இதில் புலவர்களின் மீது அதியமான் கொண்டுள்ள மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.


நள்ளி : -


கேட்கக் கொடுப்பார் சிலர் கேட்டும் மறுப்பார் பலர், கேட்கும் முன்னரே அவர்தம் குறிப்பறிந்து உள்ளம் குளிரவாரி வழங்குபவன் ஒருவனே அவனே வள்ளல் நள்ளி என்பதைச் சிறுபாணாற்றுப்பi;யில்,


“நட்ஆடார் உவப்ப நடைப்பரிகாரம்

முட்டாது கொடுத்த”………….

(சிறுபாண் 104 – 105)


தன்னை நாடி வந்த வறியவர்களது குறிப்பறிந்து அவர்கள் கேட்டும் முன்னரே அவர்தம் மனம்மகிழ அவர் இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய பொருள்களை வாரி வழங்கியவன் வள்ளல் பெருந்தகை நள்ளி என்பதை ஆசிரியர் நல்லூர் நத்தத்hனார் கூறியுள்ளார். நள்ளிமலை வளஞ்செறிந்த கண்பீர நாடடைச் சேர்;ந்தவன் நள்ளி. சிறுபாணாற்றுப்படையில் நள்ளியின் ‘அறங்கொடை’ சிறுப்பித்துக் கூறப்பட்டுள்ளது.


“முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக்கை

துளிமழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு

நளிமழை நாடன் நள்ளியும்”

(சிறுபாண் - 105 -107)


இப்பாடலில் தன்னை நாடிவரும் இரவலர்களுக்கு அவர்களின் இல்லறத்திற்குத் தேவையான பொருட்களைக் குறிப்பறிந்து வழங்கியவனும் தன்னிடம் பொருள் பெற்றுவிட்டு பின் வேறொருவரிடம் சென்று இரவாதவாறு நிரம்பப் பொருள் கொடுக்கும் இயல்பினை உடையவன் நள்ளி.


தன் வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாது வழக்கிய நள்ளியின் வள்ளல் தன்மையை சான்றோர்கள் அறக்கொடை என்று போற்றுகின்றனர்.


ஓரி : -


கொல்லி மலையின் காவலனாய் வீரத்தின் தலைமகனாய் ஈகையின் தவமாய் அவதரித்தவன் வல்வில் ஓரி, வீரத்திற்குச் சான்றோய் ஒரே அம்மைக் கொண்டு ஏழு விலங்குகளை வீழ்த்தியவன் கொல்லியின் அரசன் ஓரி.


வீரத்திற்கு மட்டுமின்றி கருணை ஈரத்திற்கும் வித்தானவன் வள்ளல்  ஓரி, ஓரியின் கருணை, அன்பு, அவனது அம்பென ஏழு பிறவிக்குமான வறுமையை அணடாது விலக்கும் என்பதை நத்தத்தனார்  சிறுபாணாற்றுப்படையில் பின்வருமாறு


“நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த

சிறுபாண் - (108 – 109)


இப்பாடலில் கடையயேழு வள்ளல்களில் ஒருவனான ஓரி பரிசில் பெற வருபவர்களுக்குப் பொன், பொருள் மட்டுமின்றி, நறிய பூக்கள் மிக்க சுரபுனைகளையும், குறும்பொறைகளையும் உடைய நல்ல நாடுகளையே பரிசிலாகக் கொடுத்தான் என்பதைச் சிறுபாணாற்றுப்படையின் வழி அறியலாகிறது.


பூக்கள் நிறைந்த சுரர்ன்னைகளையும், குறிய மலைகளையும் உடைய நல்லநாடுகளைக் கூத்தாடுபவர்களுக்குக் கொடுத்தவன் ஓரி, இதில் ஓரியின் இரக்கக் குணம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் தன்மை நாடி வந்தவர்கள் எந்நாளும் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காக நல்ல நாடுகளையும் அவர்களுக்குப் பரிசாகக் கொடுக்கின்றான். இதில் ஓரியின் சிறந்த கொடைத் திறம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை

எழுசமம் கடந்த ஏழு உறழ்திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

(சிறுபாண் - 112 – 113)


இப்பாடலில் பேகன் முதலிய தமிழ் வள்ளல்கள் ஏழு பேர் நடத்திய ஈகைத் (கொடை) தன்மையை நல்லியக்கோடனின் வள்ளல் சிறப்பும் கொடைச் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தின் சிறப்புத் தன்மையாக பலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் புறப்பாடல்களின் சிறப்புத்தன்மையாக வீரத்தையும், கொடையையும் கூறலாம். அவற்றுள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அரசர்களின், வள்ளல்களின் கொடைச் சிறப்பை விரிவாக எடுத்துரைக்கின்றன.


அவற்றுள் சிறுபாணாற்றுப்படை கடையேழு வள்ளல்களின் கொடைச் சிறப்பையும் நல்லியக்கோடனின் கொடைச் சிறப்பையும் எடுத்துரைக்கின்றன. கடையேழு வள்ளல்கள் உலக மக்களிடம் மட்டுமன்றி அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டியுள்ளனர். இவர்களது கொடைத்தன்மையைச் சான்றோர்கள் மடக்கொடை, அறக்கொடை என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். இவர்களுடைய இயல்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றவனாக நல்லியக்கோடனைச் சிறுபாணாற்றுப்படை விளக்குகிறது.


நல்லியக்கோடனின் சிறப்புகள் : -


கடையேழு வள்ளல்களுக்குப் பின் தான் ஒருவனே வள்ளன்மையில் அவர்களுக்கும் சமமாக விளங்கிப் பெரும்புகழ் பெற்றவன், பரிசிலர் விரும்பும் பிண்பு நலம் உடையவன், இசை, நாடகம் முதலிய நுண்கலைகளில் ஆர்வம் மிக்கவன், நல்லியக்கோடன் ஒப்புயர்வற்ற பெருவீரனாக விளங்கினான். கடையேழு வள்ளல்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது. நல்லியக்கோடன் கடையேழு வள்ளல்களைப் போல் கொடுக்கும் பண்பினன் என்பதுவும் தெளிவாகிறது.


பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி, ஆகிய கடையேழு வள்ளல்களுக்குப் பின் நல்லி என்பவன் தன்னை நாடி வருபவர்களுக்குக் கொடுத்தளிப்பவனாக இருந்தான்; பல்வேறு இசைக்கருவிகளை உடைய கூத்தரைக்காத்தலில் வல்லவனும் ஆகிய சிறந்த புகழை உடையவன் நல்லியக்கோடன். யானைகளைச் செலுத்துதலால் உண்டாகிய தழும்பு பொருந்திய வீரக்கூடில் அமையும் கால்களையும் பெண் யானைக் கூட்டத்தைப் பலர்க்கும் வழங்கும் மழை போன்ற பெரிய கைகளையும் உடையவன்.


“எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

(சிறுபாண் 111 – 115)


என்ற வரிகள்மூலம் நல்லியக்கோடனின் ஈகைத் திறத்தை அறிந்து கொள்ளலாம். வருகின்ற போரில் பகைவரை வென்ற எழுவினை ஒத்த வலிய தோள்களையுடைய கடையெழு வள்ளல்கள் அக்காலத்தில் சுமந்த ஈகையாகிய நல்ல (பாரம்) பாரத்தை இக்காலத்தில் கடலை எல்லையதகக் கொண்ட உலகமெல்லாம் விளக்கும்படி தான் ஒருவனாகவே தாங்கும் வலிய முயற்சியை உடையவன் நல்லியக்கோடன் என்பது தெளிவாகிறது.


நல்ல பெருமை வாய்ந்த மாவிலங்கையை ஆணட அரசர் பலருள்ளும் குற்றம் இல்லாத வாய்த்த வாளினையும் புலிபோலும் வலியினையும் உடைய ஒவியர் குடியில் பிறந்தவன் நல்லியக்கோடன்.


வள்ளல் தன்மை கொண்டு விளங்குபவர் புகழ் இவ்வுலகில் அடங்காத சிறப்பினை உடையது. உலகம் தன் கொடையால் விளங்குமாறு தான் ஒருவனாகவே நின்று வழங்கினான். மாவிலங்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் பலர். அவர்களுள் மிகச் சிறந்தவன் நல்லியக்கோடன் என்பவன் ஆவான். நல்லியக்கோடன் ஒவியர் குடியில் பிறந்து ஈண்டமையின் ஒவியர் மாநாடு என வழங்கிய பெயரே ஓய்மானாடு என மருவி வழங்கியது எனலாம்.


“நன்மா இலங்கை மன்ன ருள்ளும்

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்

(சிறு – 120 – 124)


இப்பாடலில் பலவகை இசைக் கருவிகளை இசைத்து அந்த இசைக்கு ஏற்ப ஆடும் கூத்தர், பல இயம் - பல்லியம், கோடியர் - கூத்தர், புரவலன் - (காய்வதன்) இதன் 5லம் இசை, நாடகக் கலைகளில் நல்லியக்கோடான் முத்தமிழ்க் காவலனாக விளங்கினான் மழை போலக் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் கையை உடையவன்.


கண்களால் காண்பதற்கு விரும்பிய கோட்பாட்டோடு உயர்ந்த குடியில் பிறந்தவன். அவன் தந்தையினுடைய வானளாவிய மலையின் வளத்தையும் பாடிச்சில நாள்களுக்கு முன் நாங்கள் சென்றிருந்தோம். அப்பொழுது வேண்டியதை வழங்கினான் என்பதைப் பாணர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.


விழிக்காத கண்களை உடையதும் சாய்ந்த காதுகளையுடையதுமான நாய்க் குட்டிகள் கறக்கப் பெறாது பால்முலையைப் பற்றி இழுத்துப் பால் உண்ணுதலைத் தன்பசி மெலிவால் தாங்க இயலாது குரைத்தலைச் செய்யும். பாணனின் வீட்டு அடுக்களையில் ஈரமான புழுதியில் உள் துளையுள்ள காளான் பூத்துக் கிடந்து பொலிவு இல்லாமல் இருக்கிறதாம்.


மேலும் பசியினால் வருந்திய ஒடுங்கிய நுண்ணிய இடையினையும் வளையல் அணிந்த கைகளையும் உடைய துணைகொட்டுவொனுடைய மனைவி தன் கைகளால் குப்பையில் கிடந்த கீரையை உப்பு இல்லாமல் வேக வைத்து அதனை மற்றவர்கள் பார்த்தால் (ஏளனம்) செய்வார்கள் என்று எண்ணி தலைவசாலை மூடி பசியால் வருந்தும் தன் பெரிய சுற்றத்தடன் இருந்து முழவதும் உண்ணும் அறிவு முதலியன அழிவதற்குக் காரணமான பசியினால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்படி மதம் பொலியும் அஞ்சாமையாகிய கொள்கையும் சிறிய கண்கணையும் உடைய யானையோடு பெரிய தேரையும் பரிசாகப் பெற்று நாங்கள் இப்போது அவ்விடத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறோம் என்று பாணன் கூறினான்.


பரிசு பெற்றவரும் பாணன் நல்லியக்கோடனைக் காண்பதற்கு முன் இருந்த தன் வறுமை நிலையைக் கூறி அவனைக் கண்டதும் நீங்கியது என்பதைப் பரிசு பெற விரும்பி வரும் சிறுபாணனுக்குக் கூறுகிறான்;


“கறவாப் பாலமுலை கவர்தல நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் சுட்டில்

………………………..

………………………..

……………………….

சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி

யாமவன நின்றும் வருதும் நீயிரும்

இவண் நயந் திருந்த இருப்பேர் ஒக்கல்

செம்மல் உள்ளமோ செல்குவீராயின்”

(சிறு 131 – 145)


இப்பாடலில் பாணனுக்கு எனப் பரிசு பெற்றவரும் பாணன் மற்றொரு பாணனுக்கு ஆற்றுப்படுத்துகிறது.


மலைநாட்டுத் தலைவனும் புகழ் நிலைத்தற்கு காரணமான குணங்களை, உடையவனுமாகிய நல்லியக்கோடனை நறந்நு அவன் ஊருக்குச் செல்வீராக. அவ்வாறு நீங்கள் சென்றால் அவனுடைய அணை;மனையின் வாசலை அடைவது எளிதாகும் பிறர் எவரும் எளிதில் செல்ல முடியாது. ஆனால் பொருநர்,புலவர், வேதம்ஓதி, பழகிய அந்தணர்களுக்கும் எப்போதும் அடைக்கப்படாதது அவனுடைய வாயில் கதவுகள் என்பதை,


“அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

கடவுள் மால்வரை கண்விடுத்தன்ன

அடைய வாயிலவன் இருங்கடை குறுகி”

(சிறுபாண் 203 – 205)


எனக் குறிப்பிடுகிறார்.


எல்லோருக்கும் கொடுத்தளிக்கும் அந்த வள்ளல் உங்களுக்கு ஆடை வழங்குவான் பின்பு மதுவினை (கள்) அள்ப்பான் நீங்கள் உண்பதற்கு நல்ல உணவு அளிப்பான் அவனே அருகில் இருந்து உங்களுக்குப் பரிமாறுவான்.


உங்கள் பசி குறைந்த பின் மற்ற பகை நாட்டு மன்னர்களிடம் போரினால் பெற்ற பொருள்களை உங்களுக்கு வழங்குவான். அதோடு மட்டும் இல்லாமல் பெரிய அழகிய தேரினை உங்களுக்கு வழங்குவான் என்று ஒரு பாணன் மற்றொரு பாணனை ஆற்றுப்படுத்துகின்றன. நல்லியக்கோடனின் சிறந்த வள்ளன்மைக் குணம் கொண்டவனாகவும், தன்னை நாடி வரக்கூடியவர்களுக்கு கொடுக்கும் கொடை பண்பினை உடையவனாகவும் சிறந்த விளங்கினான் என்பது தெளிவாகிறது.


முடிவுரை

நமது வரலாற்றில் முதல்,இடை, கடையேழு வள்ளல்கள் வாழ்ந்துள்ளனர்: அந்த வகை கடை சங்க காலத்தில் வாழ்ந்த கடையேழு வள்ளல்கள் யார் என்றும், அவர் தம் கொடைத்திறன்குறித்தும் இலக்கிய பதிவுகளின் வழி விரிவாக அறியமுடிகின்றன. பொதுநலனாக வாழ்வதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்கின்றனர்


திங்கள், 26 ஏப்ரல், 2021

வேளான்வேதம் வெளிப்படுத்தும்; யாக்கை நிலையாமை

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி  



யாக்கை என்பது உடம்பு எனப் பொருள்படும். உடம்பானது இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை. இறப்பு என்பது அனைவருக்கும் உரிய ஒன்றுதான்.

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு” 

என்ற குறளில் பிறப்பு, இறப்பு பற்றி கூறியுள்ளார். இவ்வாய்வில் அறிஞர்களின் யாக்கை நிலையாமை கருத்துகளை கான்போம் 

யாக்கை நிலையாமை: 

“மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் நிலைமிசைத்

துஞ்சினர் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்

எஞ்சினார் இவ் உலகத்து இல்”(2)

உயர்ந்த மலைமேல் தெரியும் நிலவைப் போல யானைப் பிடர்மேல் கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து சென்ற கொற்றவர் இறப்பிலிருந்து  தப்புவது இல்லை. மரணத்திலிருந்து தப்பிய மனிதர் உலகத்தில் எவரும் இல்லை.

வாழ்நாளை அளக்கும் அளவுகோலாகச் சூரியன் நாள்தோறும் விடாது உதயமாகிறது. உலகில் பிறந்த யாரும் சாவுக்குத் தப்பி நிலைத்து நிற்பதில்லை. எனவே மரணம் வருமுன் அறங்களைச் செய்தல் வேண்டும்.

“மன்றம் கறங்க மணப் பறை ஆயின

அன்று அவர்க்கு ஆங்கே பிணைப்பறை ஆய் பின்றை

ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்தோம் ஆறே

வலிக்குமாம் -மாண்டார் மனம்”(3)

திருமண நாளில் மண்டபத்தில் மணமுரசு கொட்டப் பெறும் சில சமயம் மணக்கோலம் பிணக்கோலமாகப் பிணமுரசு கொட்ட நேர்தலும் உண்டு. எனவே மாட்சிமைக் கொண்ட அறிவுடையார் இல்லறத்திற்குச் செல்லாமல் துறவறத்திற்குச் செல்வர்.


செத்தாரைச் சாவார் சுமந்து செல்வர்:

; இறப்பின் போது கொட்டப்படும் பறையை ஓரிடத்தில் அடிப்பவர் இடைவெளி விட்டு மறுபடியும் கொட்டுவர். மீண்டும் இடைவெளி விட்டு மூன்றாம் முறை அடித்தால்; அது இறப்பு வீடு என்று பொருள். அவ்வீட்டில் செத்தவரைத் துணியால் மூடி கொள்ளித் தீயை ஒருவர் சுமந்துவரப் பாடையில் வைத்து வருங்காலத்துச் சாக இருப்பார் சுமந்து வருவார். வாழ்க்கை இத்தகையது.

உறவினர் ஒன்றாகத் திரண்டு நின்று கதறி அழ இறந்தவர் பிணம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். இதனைப் பலமுறை பார்த்தும் இல்வாழ்க்கையில் இன்பம் உண்டு என்று நம்பித் திருமணம் செய்துவாழ்க்கையில் வாழ்வார்க்கு அவ் ஆசையை விடு, விடு எனப் பறை டொன், டொன், டொன் என்று அறிவித்துக் கொண்டே இருக்கும்.

“நார்த்தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து

பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர்; பழிக்கில் என்?

தோற்பையுள்நின்று தொழில் அறச்செய்து ஊட்டும்

கூத்தன் புறப்பட்டக்கால்”

உடலாகி தோற்பையில் வாழ்ந்து தொழிலை முற்றுமாகச் செய்து உயிர் ஊட்டிக் கொண்டிருந்த கூத்தனாகிய உயிர் உடம்பை விட்டு பிரிந்தப் பின் அவ்வுடம்பை நாரினால் கட்டி இலுத்தாலென்ன? ஆடை முதலியவற்றை அணிந்து அடக்கம் செய்தாலென்ன? எறிந்துவிட்டால்தான் என்ன? பார்க்கும் பலர் பழித்தாலென்ன?

பெரும் மழை, நீராக ஓடும்போது தோன்றும் குமிழி அடுத்த சில கணங்களில் உடைந்துவிடும். உடலும் இத்தகு நீர்க்குமிழி போன்றதே. உடலின் நிலையாமையை நன்கு அறிந்து பிறவித் தடுமாற்றத்தை நாம் ஒழித்து விடுவோம் என்று உணரும் திண்மை மிக்க அறிஞர்க்கு நிகரானவர் உலகில் யார்? யாரும் இல்லை.

உடம்பு மலைமேல் அங்குமிங்குமாக ஆடுகின்ற மேகம் போலத் தோன்றி நிலை பெறாது மறைந்துவிடும். அத்தகு உடம்பை உலகில் வாழ்வதற்காகப் பெற்றவர் தாம் பெற்ற உடம்பைக் கொண்டு உரியவற்றை ஆற்றுதல் வேண்டும்.


பறவையைப்போல் உயிர் உடல் கூட்டைப் பிரியும்:


“கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் வாளாதே

சேக்கை மரண் ஒழியச் சேண் நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து”

மரத்தில் உள்ள பொந்தில் பிறந்து வாழும் குஞ்சு வளர்ந்து இறக்கை முளைத்து தான் குடியிருந்த முட்டை ஓட்டையும், கூட்டையும் விட்டுவிட்டு எங்கோ பறந்து சென்றுவிடும். அப்பறவையைப் போல ஒரு குடும்பத்தில் அக்குடும்பத்தினரைக் கேளாமல் வந்து பிறந்த சொந்த பந்தத்துடன் வளர்ந்து, ஒரு காலத்தில் அவர்களை விட்டு விட்டு உயிர் பிரிந்து சென்று விடும்.

சற்று நேரத்திற்குமுன் நின்று கொண்டிருந்தான். பிறகு அமர்ந்தான், பின்னர் படுத்தான், கொஞ்ச நேரத்தில் தம் உறவினர் கதறி அழும்படியாக இறந்துப்போனான் என்று உயிர்ப்பற்றி வாழ்க்சை; சொல்லப்படுதலால் காலை வேளை புல்மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிப்போல நிலையாதது வாழ்;க்கை. எனவே இப்போது நம்மால் முடியும் அறப்பணிகளைச் செய்தல் வேண்டும்.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள்அது உணர்வார்ப் பெறின்”

வாளின் கூரியவாய், பொருளை இரண்டாகத் துண்டிப்பது போன்று, நாளின் வரையறை மனித உடலையும் உயிரையும் துண்டிக்கும் என்பதை உணர வேண்டும். பேச்சு அடங்கி, விக்குள் எடுத்து, இறப்பதற்கு முன்னமேயே நற்செயல்கள் பலவற்றையும் செய்துவிட வேண்டும். உலக மக்களின் வாழ்வு நேற்று உயிருடன் இருந்தவன் இன்று இல்லை என்று கூறும்படியான பெருமைக்குரியது இவ்வுலகம்.

“ஒருபொழுதும் வாழ்வது அறிவார் கருதுப

கோடியும் அல்ல பல.”

ஒரு பொழுதளவு கூட உயிருடன் இருப்போம் என்பதை அறியாத உலக மக்கள் பலகோடி எண்ணங்களை எண்ணுவார்கள்.

“குடம்பை தனித்துஒழியப் புற்பறந் தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு.”

முட்டையுள் இருந்து பறவை பறந்து வெளிச்செல்வதற்கு ஒப்பாகும் உடம்பிற்கும் உயிருக்கும் இடையில் உள்ள நட்பு. உறங்குவது போன்றது இறப்பு உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு. உயிருக்கு நிலையான ஓர் உடம்பு கிடைக்காததனால் அவ்வுயிர் ஒவ்வோர் உடம்பினுள்ளும் தங்கி இருக்கும்.

திருவருட்பா யாக்கையின் தன்மையை புழுக்கள் நிறைந்தது. கானல் நீரைப் போன்றது. ஒதிய மரத்தைப் போல் ஒன்றுக்கும் உதவாதது. வைத்திருக்கும் மண்பாண்டம் போல இற்றுப்போன இயல்புடையதாகியும் கண், காது, மூக்கு முதலிய ஒன்பது துவாரங்களின் வழியாக அழுக்குநீர் ஒழுகுவதாக உள்ள உடம்பு வான்வெளியில் வீசி எறிந்த கல் ஆகிவிடும், மலையிலிருந்து விடும் அருவி போலவும், கடுங்காற்றுள்ள இடத்தில் வைத்துள்ள அகல் போலவும், மேகத்தில் தோன்றியுள்ள மின்னல் போலவும், சூறாவளிக் காற்று இடைப்பட்ட மேகம் போலவும், நீரில் எழுத்துப் போலவும் வெறும் மாய்க்கை தோற்றம் எனவும், பறவைக்கூடு பறவை நீங்கியப்பின் கிடைப்பது போல் பயனற்றுக் கிடப்பது எனவும் பொய்யான கனவு எனவும் திருவருட்பா உடம்பின் தன்மையைப் பற்றிக் கூறுவது இங்கு சிந்திக்கத்தக்கது.

மேலும் யாக்கையின் இழிவுப்படுத்தியும் எமன் வருகையைக் காட்டியும் பிறப்பு, இறப்பு தத்துவத்தை விளக்கியும் திருவருட்பாவில் பாடல்கள் பல உள்ளன.

திருவருட்பா மனிதனின் யாக்கையின் நிலையாமையைப் பற்றி மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் விளக்குகிறது. மேலும் திருவருட்பா வாழ்வில் நடக்கும் அன்றாட செயல்களைக் காட்டி யாக்கை நிலையாமையைச் சுட்டுகிறது.

“சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான்

சொல்லிட்ட முடன் அனைத்துத்

துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுதுண்டு

சும்மா இருத்தி என்றால்

காரிட்டதற்குமுன் யார்இட்ட சாபமோ

கண்டிலேன் அம்மம்ம ஓர்

கறங்கெனச் சுழல்கின்றதே.”(9) 

என்ற உள்ள நிலையாமையைத் திருவருட்பா  கூறுகிறது


வாழ்வும் காலமும்:


உயிர் வாழ்க்கை நிலையில்லாதது என்று கூற வந்த திருவருட்பா வாழ்க்கையை இழித்துக் கூறுவதனை

‘……………….. மாய வாழ்க்கையெனும்

காட்டைக் கடந்து நின் உருவைக் கண்கள’ 

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

வாழ்க்கையை நீரில் தோன்றும் குமிழி எனவும், கானல் எனவும், பாலைவனம் எனவும், மத்தில் அகப்பட்ட தயிரெனவும் வஞ்சமெனவும் கூறி வாழ்க்கை நிலையாமையை உணர்த்துகிறது. வாழ்க்கையின் கால அளவினைக் கணக்கிட்டுத் திருவருட்பா கூறுவதனை

“நாழிகையோர் நாளாக நாடினையே நாளை ஒரு

நாழிகையாய் எண்ணி நலந்திலையே”(11)


“வாழ்வுநிலை யன்றியமைப்பில் மாறுகின்றதென்றுரைத்தும்”

என்பவற்றால் அறியலாம்.


இறைவனை அடைய ஒட்டாது தடுப்பவை:


இந்த உயிர் இறைவனையடைய தடை செய்வது ‘தளை’ ஆகும். அவை ஆவணம், கன்மம், மாயை என்னும் மூவகையாகும்.

இதனை சைவ சித்தாந்த ஆராய்ச்சி என்ற நூலில் சச்சிதானந்தனார், “மனம் தனக்கு வேறாக உள்ள உடம்பைத் தன் வடிவாக மாறுபடக் கருதி உடலை நானெனப் பற்றுற்றிருத்தலும் இன்பத் துன்பங்களை விளைவிக்க நல்வினை, தீவினைகளைச் செய்து வருதலும் ………… ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை மலங்கலென்னும் குற்றங்களை மனமுறுவதனால் உயிர் தனிமுதற் பொருளை அறிய வல்லதன்று என்று கூறுகிறார். எனவே மனமே அனைத்து துன்பத்திற்கும் காரணம் எனலாம். அதனால் தான் குறட்பாவும்

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீற பிற.”

என்கிறது.

உள்ளம்:

உடலில் உள்ள உள்ளமானது வெளியே நட்பும் அகத்தே வஞ்சகமும் கொண்டது என்பதனை அறியலாம். மேலும் முக்தி நெறிக்கான அறிவுப் பேற்றில் சிறப்புறாதவன் மனிதன் என்று   உணர்த்துகிறது. உள்ளத்தின் தன்மையை “வஞ்சுமலர்க் கோது அகற்றும் குகேசன்” என்ற அடியின் மூலம் மனஇருளைத் தருகின்ற நெஞ்சம் என்பதனை அருட்பா அருளுவதை உணரலாம். மேலும் உள்ளத்தின் தன்மையை அருட்பாக்கள் விளக்கமாக உணர்த்துகின்றன. 


“பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்

மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி

வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன” (20)


ஆணவம்:


ஆணவம் மனப்பற்றோடு தொடர்புடையவை செய்பவை நல்வினைகளும் தீவினைகளும் என்பதனை 5-வது குறட்பாவிலும், அந்த ஆணவம் நீங்கப் பிறவித் துன்பம் நீங்கும் என்பதனை “இருள் நீங்கி இன்பம் பயக்கும்” என்று 352-வது குறட்பாவிலும் திருவள்ளுவர் கூறுகிறார்.

ஆணவம் மனத்தின் தாக்குதலை 53-வது அருட்பாவிலும் “பிற்படுமோர் பொய்” என்று 21-வது அருட்பாவிலும் உடலை “ஆணவத்தின் கட்டென்கோ” (494) “மாய விளைவின்கோ” (495) என்ற அடிகளாலும் ஆணவத்தின் தன்மை அவ்வாணவம் மனிதனை ஆட்டுவித்துத் துன்பத்தில் அழுத்துகின்ற முறைமை ஆகியவற்றை அருட்பா தெளிவாக உணர்த்துகின்றன.

“…………………………….தீது செயும்

வீணவத்தை யெல்லாம் வினைக்கும் திறல்மூல

ஆணவத்தி னாலே அழிந்தனையே ஆணவத்தில்

நீயார் எனஅறிவாய் நின்னெதிரில் நின்றவரை

நீயார் எனவினவி நீண்டனையே” (21)

என்ற அருட்பாக்களைச் சுட்டலாம்

கன்மம்:

அநாதியே மனத்தைப் பற்றுதல் உயிரின் வினையாய் உயிர்க்குற்றங்களுள் வைத்து எண்ணப்படும். கன்ம மலம், அநாதியே உள்ளது.

அநாதியே உள்ள கன்மம் “மூலகன்மம்” எனப்படுகிறது. அது காரண கன்மம் என்றும் கூறப்படும். கன்மம் காரிய நிலையில் இரு வகைப்படும். அவை நல்வினை (புண்ணியம்) தீவினை (பாவம்) எனப்படும்.

“வகுத்தான் வகுத்த ………………… அரிது”

“ஊழையும் ………………….பவர்”(22)

என்ற குறட்பாக்களின் மூலம் வினையையும் மனிதன் தன் முயற்சியினால் இறையருளைப் பெற்று வெற்றியும் பெற முடியும் என்பதனை உணர முடிகிறது.


மாயை:

மாயை என்றும் உள்ளது. அஃது உருவம் சடம் அற்றது. மாயை ஒரே பொருளாக உள்ளது. இறைவனுக்கும் பரிக்கிரக சக்தியாக உள்ளது. இதனை சிவஞான சித்தியார் தெளிவாக்குகிறார். இதனை குறட்பாக்களும்

“பொருளல்ல வற்றைக் பொருளன் றுணரும்

மருளானாம் மாணப் பிறப்பு” (23)

என்ற குறட்பா மூலம் பிறப்பிற்குக் காரணம் மாயை என்பதனை உணரலாம்;.

திருமூலர் யாக்கை நிலையாமையைக் கூறி மனித சமுதாயத்துக்கு இரங்குகிறார். அழகாகப் போற்றி வளர்க்கும் இவ்வுடம்பு மண்ணாலாகிய பாத்திரம் போன்றது. ஆனால் அம்மண்ணாலாகிய பாத்திரம் மழைநீர் பெய்யின் கரைந்து மண்ணாவது போல வினைக்குக் கொள்கலமாகிய இவ்வுடம்பு முடிவில் மண்ணாய்ப் போகிறது.

வினைக்கு இடமான உடம்பு நாளாவட்டத்தில் தேய்ந்து நீங்கினால் உடனிருந்து மகிழ்ந்த பெண்டிரும் மக்களும் உடன் வரமாட்டார். அப்பொழுது அவருடன் வருவன அவர் செய்த அறத்தின் பயனும் ஞானமேயாகும்.

“பண்டம்பெண் கூரைபழகி விழுந்தக்கால்

உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்

கொண்ட விரதமும் ஞானமும் அல்லது

மண்டி அவருடன் வழிநட வாதே”(24)

என்பது அவர் வாக்கு.

இறுதியில் ஊரில் உள்ள எல்லோரும் கூடி ஒப்பாரி வைத்து இராகத்தோடு பாடிப்பேரை மாற்றிப் பிணம் என்ற புதிய பெயரிட்டுச் சுடுகாட்டில் இட்டுச் சுட்டபின் நீரில் சென்று மூழ்கி இறந்தவரது நினைவுமின்றி வீடு திரும்புவர்.

இறப்பு எதிர்பாராத வகையில் எத்துணை அவசரமாக வருகிறது என்பதைப் பற்றி அவர் கூறுவது இன்று காட்சியில் காணக்கிடக்கின்ற ஒன்றாகும்.

“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்

இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.”(25)

பகல்  முழுதும் நன்றாக இருந்து மனைவியோடு கூடி மகிழ்ந்து உண்டிருந்தவர் நெஞ்சு வலிக்கிறது என்று கூறி மருத்துவர் வருமுன்னர் இறந்து கிடக்கிறார் என்பது போன்ற செய்தி நாள்தோறும் கேட்கக்கூடியதாக உள்ளது.

உடம்பிலுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து இந்திரியங்களும் உடம்பில் ஜீவன் உள்ளவரைதான் தொழில் புரியும் ஜீவன் புரிந்தபின்னர் அவை தொழில் செய்யா. மேலும் சுவாசக் காற்றுகளும் உடம்பைவிட்டுப் பிரிந்துவிடும். அவ்வாறு பிரிந்தபின் அவரது சடலத்தைக் காக்கைக் கொத்தித் தின்றால் என்ன? கண்டவர் பழித்தாலென்ன? போற்றினால்தான் என்ன? உடம்பிலிருந்து ஆட்டிக்கொண்டிருந்த ஜீவன் உடம்பை விட்டு வெளியே புறப்பட்டு விட்;டது. பின் உடம்புக்கு ஏதும் உணர்ச்சி இல்லையே.

இவ்வாறு கூறியது நிலையில்லாத உடம்பில் வாழும்போது நிலையான அறத்தை மேற்கொண்டு செய்துவிட வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே ஆகும்.

"ஆயாகு அறிவு அயர்ந்து அல்லாந்டது அகலிடத்து

மாயா நதியும் மனைச்செறீஇ - ஈயாது

இறுகப் பொதியன்மின் இன்றொரு நாளைக்

குறுக வருமரோ ! கூற்று.”

உலகத்தில் வாழ்வாரோ! உம்மைக் கொல்லுவதற்குக் கூற்றுவன் நெருங்கி வருவான் அது இன்றோ? நாளையோ நடைபெறும் 1. அதனை ஆராய்ந்துப் பார்க்கும் உணர்ச்சியினை மறந்தீர்;! 2. அகன்ற உலகத்தின்கண் சுற்றிச் சுழன்று அழியாத பெரும்பொருளை நமது இல்லிலே சேர்த்து வைப்பீர்! 3. அவற்றைப் பிறருக்கு வழங்காமல் இறுகப் பற்றிக் கொண்டுள்ளீர் ஒழிவீராக. இறத்தல் அனைவருக்கும் நிகழக் கூடியது. ஆக உடம்பை பாதுகாத்தல் என்பது வீணான செயல் என்று நாலடியார் கூறுகிறார்.

“கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே

சேக்கை மரண் ஒழிலச் சேண்நீங்க புன்போல்

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.” (27)

பறவைகள் ஒரு இடத்தில் வெகு நாட்கள் தங்கி இறுதியில் அவ்விடத்தை விட்டு நீங்கிவிடும். அதுப்போல உயிரானது உடம்பில் வெகுநாட்கள் இருந்தாலும் ஒரு நாள் அவ்வுடம்பை விட்டு உயிரானது தனியாகப் பிரித்துச் சென்றுவிடும்.

நாடு, நகரம், வீடு, செல்வம் இதர பொருள்கள் இவை யாவும் நடுவனாகிய எமன் நம் உயிரை பறிக்க வரும்போது நம்மோடு கூட வருமோ? வராது. உடலை விட்டு உயிரானது பிரிந்துப் போன பிறகு அப்பொருள்களால் ஆகக்கூடிய பயன்தான் என்ன? எதுவுமில்லை, எனவே கூத்தாடும் சிவபெருமானின் திருவடிகளைக் குறித்த பாம்பே நீ ஆடுவாயாக. யானைப்படை, காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை ஆகிய நால்வகைப் படைகளும் அணியாக வந்து எமன் வரும்போது துணையாகுமா? இதனை நன்கறிவாய் ஞானம் சிறிதும் இல்லாத நாய்களுக்குப் புத்தி வருமாறு நீ நின்று பாம்பே ஆடுவாயாக.

“மாணிக்கமோ மணிமுடி வாகு வலயம்

மார்பில்தொங்கும் பதக்கங்கண் மற்றும் பணிகள்

ஆனிப்பொன்முத் தாரமம்பொன் அந்த கடகம்

அழிவான பொருளெனநின் நாடாய் பாம்பே”(28)

மாணிக்கத்தால் ஆகிய மணிமுடி தோள்வலயம், மார்பில் தொங்கும் பதக்கங்கள் ஆகிய (ஆணிப்பொன்) முத்துமாலை கையில் அணியும் பொற்கடகம் ஆகிய இவை அனைத்துமே அழியும் பொருள்கள்தான் என்று வலியுறுத்துகிறது.

செம்மையான பொன்னை மலை போன்று குவித்து வைத்திருப்பவர்கள் எமன் வரும்போது அவற்றை வாரிக்கொண்டு செல்வார்களோ மனதை அங்கும் இங்கும் அலையவிடாமல் தலைவனாகிய இறைவன் மேல் வைத்திருப்பவர்கள் என்றும் அழியமாட்டார்கள் என்று பாம்பே நீ ஆடுவாயாக. முக்கனிகள், சர்க்கரை, மோதகம் என மிகுந்த சுவைமிக்க பண்டங்களை முன்பு விரும்பி உண்ட வாயானது உடலை விட்டு உயிர்போன பின்பு மண்ணை விழுங்குவதை உண்மையாகவே காண்கிறோம். பல வண்ணப்பட்டாடைகளும், வாசனைப் பூச்சும், அழகிய வடிவமும், சிறந்த குடையும், ஆலவட்டமும் மற்றும் ஆடம்பரச் சின்னங்கள் பலவும் இயமபுரம் செல்லும்போது கட்டாயமாக கூட வராது. பிள்ளைகள், மனைவி, உறவினர், மருமக்கள் போன்றோர் நாம் இறக்கும்போது அவர்களும் நம்முடன் இறப்பதில்லை. இவ்வுலகங்கள் அனைத்தையும் தந்த இறைவனைத் நினைத்து மகிழ்வோம்

“ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே

உதிரப் புனலினலே உண்டை சேர்த்தே

வாய்த்தருய வனார் பண்ணும் பாண்டம்

வறகோட்டுக்கும் ஆகாது என்று ஆடாய் பாம்பே”(29)

மக்கிப்போன மண்குழியிலிருந்து மண்ணை எடுத்து இரத்தமாகிய நீரால் உண்டை சேர்த்து விவரமாகக் குயவனார் (இறைவன்) உண்டாக்கும் பாத்திரம் (இவ்வுடல்) உடைந்துப்போன ஓட்டுக்குரிய மதிப்பைக்கூடப் பெறாது எனத் தெரிவிக்கின்றுத. இறைவன் என்னும் குயவனால் படைத்த இவ்வுடல் முடிவில் நிலையில்லாமல் அழிந்துவிடும். எனவே வாழும்போதே புண்ணியச் செயல்களை ஆற்ற வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்தாகும்.

“இருவர்மண் சேர்த்திட ஒருவர் பண்ண

ஈரைந்து மாதமாய் வைத்த சூளை

அருமையா யிருப்பினும் அந்தச் சூளை

அரைக்காசுக்கு ஆகாதுஎன்று  ஆடாய் பாம்பே”(30)

இருவர் சேர்த்து மண்பிசைய ஒருவர் பானை செய்து அவரே பத்து மாதம் சூளையில் வைத்து பக்குவமாய் இறக்கி வைத்தாலும் அந்தப் பானையானது இறுதியில் அரைக்காசுக்கும் உதவாதது. இது இப்பாடலின் வெளிப்படையான கருத்தாகும். நீரில் எழும் நீர்க்குமிழியானது நிலைகெட்டு நீராய் கலத்தல்போல் இந்த உடலும் நிலைத்து நிற்காமல் அழிந்து விடும். இது நிச்சயம் என்று இவ்வுலகில் பல உயிர்களையும் படைத்த இறைவனை மிகவும் பற்றிக்கொள்ள வேண்டும்.




முடிவுரை


இவ்வாய்வின் வழி “மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைப் போல மண்ணால் செய்த உடம்பில் உயிர் என்னும் நூலைக் கட்டி திரைக்குள்ளே இருந்து ஆட்டுபவன் (இறைவன்) அவ்வுயிரை இயக்க மறுத்தால், உடலும் கீழே விழும் என்று அறிந்தக் கொள்ளலாம். பத்து நாடிகள்,  ஏழு வாயுக்கள்,   ஏழு தாதுக்கள் இவைகளால் கட்டப்பட்டது இவ்வுடல் என்னும் மரக்கப்பல். அது தடுமாறி விழவும் கூடும். அவ்வாறு இல்லாமல் இசைவாகக் கப்பலை ஒரே வெள்ளத்தில் எந்நாளும் செலுத்துவது எப்படி என்று முடிவு செய்து கொள்ளலாம்.


இலக்கியங்கள் காட்டும் நிலையற்ற உடலியல் கருத்தமைகள்

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


  

இலக்கியங்கள் காலகண்ணாடியாக இருந்து மனிதனின் உள்உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் ஆயுதமாகும், சில செய்திகளை நமது உறவினர்களிடையே, அல்லது மற்றவர்களிடையே நம்மாள் கூறயியலாத நிலையில் தான் இருந்து வருகிறோம், இந்த குறைகளை இலக்கியத்தின் வழி தம் படைப்புகளின் வழி வெளிபடுத்தமுடியும் அவ்வகையில் இலக்கியல் காட்டபட்டுள்ள யாக்கை நிலையாமை கருத்துக்களை இங்கு காண்போம்.

இறப்பும் பிறப்பும்:

“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்

குடதிசைச் சென்ற ஞாயிறு போல

மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்

தணியா மன்னுயிர் தாங்கும் கருத்தொடு

சாவகம் ஆளும் தலைத்தாழ் வேந்தன்

ஆவயிற்று உதித்தனன் ஆங்கவன் தானென்”

கீழ்த்திசையிலே காலையிலே தோன்றி உலகத்தின் இருளைப் போக்கி ஒளிபரப்பிய ஞாயிறானது, மாலையிலே மேலைத் திசையிலே சென்றுவிட்டதைப் போல மணிபல்லவத் தீவிலே தன்னுடைய மனித உடலைக் கைவிட்ட ஆபுத்திரன் மன்னுயிர்களைக் காக்கும் தணியாத கருத்தோடு சாவக நாட்டினை ஆளும் மிக்க முயற்சியை உடைய வேந்தனாகிய பூமிச்சந்திரனது பசுவின் வயிற்றிடத்தே சென்று, மீண்டும் மானிட மகவாகிப் பிறந்தான் எனலாம்.

உயிர்களின் தோற்றத்திற்கு ஏதுவாக, அதனோடும் சேரப்பெற்ற உணர்வுடைய பூதக்கூறும், உடம்பின் அமைவிற்கேதுவாக அதனோடும் கூடிப்பெற்ற உயிரில்லாத உணர்வற்ற பூதக்கூறும், அவ்வப்பூதங்களின் வழியாக அவையவை பிறப்பனவாம். உண்மை நெறியாவது இதுவே. இவற்றின் வேறாகக் கூறப்படும் விகற்பமும், உண்மைப் பொருளும், உலோகயதனின் உணர்வுகளாம். காட்சியளவை அல்லாது வேறு கருத்து முதலியன நிலைப்பெறாமையாற் கொள்வதில்லேம். இம்மையும் இம்மைப் பயனும் ஆகிய எல்லாம் இப்பிறப்புடனேயே கழிவனவாகும். ‘மறுபிறப்பு’ என்ற ஒன்று அமைந்து, வினைப்பயனை அனுபவித்தல் என்று சொல்லுதலும் பொய்யேயாகும்.” இவ்வாறு பூத தத்துவவாதி தன் கொள்கையைச் சொன்னான்.

மாதவியின் தாய் சித்ராபதியின் தூண்டுதலால் உதயகுமாரன் காமம் மீதூரப் பெற்று மணிமேகலையைக் காண அம்பலம் செல்கிறான். மணிமேகலையைக் கண்டு, ‘நங்கையே’ நீ நற்றவம் மேற்கொண்டதற்குரிய காரணம் தான் யாதோ? என்று துணிந்து கேட்கிறான். அதற்கு அவள் பிறத்தலும், முதுமை அடைதலும், நோயுற்று வருந்துதலும், பின் இறத்தலும் உடையது இவ்வுடல். மேலும் இது துன்பங்களுக்கொரு ஒரு கொள்கலமாகவும் உள்ளது. மனித உடம்பின் நிலையாமையை மணிமேகலை உதயகுமாரனுக்கு உணர்த்தித் தன்னை பின்தொடர வேண்டாமென அறிவுரை கூறுகிறார். அத்துடன் யாக்கையின் இத்தன்மையை நன்று உணர்ந்தால்தான் நல்ல தவத்தை மேற்கொண்டதாகக் கூறுகிறாள். அதைக் கீழ்வரும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

“பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்”

மேலும் மணிமேகலை நரைமிக்க ஒரு மூதாட்டியைக் காண்பித்து, உதயகுமாரனுக்கு இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியவற்றையும் அறிவுறுத்துகிறாள். நிலையாமை மிக விரிவாகப் பேசப்படுகின்ற இடங்களில் இது ஒன்றாகும்.


நிலைத்ததும் நிலையாததும்:

நிலையாமை பற்றிப் பல இடங்களில் பல பாத்திரங்கள் வழி விளக்கிச் செல்லும் சாத்தனார் நிலைத்து நிற்பது எதுவென்றும் கூறுகிறார்.

“இளமையும் நில்லாது யாக்கையும் நில்லாது

வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லாது

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்

மிக்க அறமே விழுத்துணையாவது”

நிலையாமைக் கோட்பாட்டை மிகவும் வற்புறுத்துவதாலேயே வாழ்க்கையை மறுத்துரைக்கிறது பௌத்த சமயம் என எண்ண இயலாது. அதை ஒரு எச்சரிக்கையாகக் கொண்டும் அறங்களை மேற்கொண்டும் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஏனென்றால் அவரவர் செய்த வினைக்கு ஏற்ப பிறவிகள் தொடரும். அதனைத்; தவிர்க்க வேண்டுமாயின் நிலையாமையை மனத்தில் பதித்து அறத்தை இடையறாது மேற்கொள்ள வேண்டும்.

வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும் காயமே பொய், உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனாவ் சித்தர்.

“………………………… உடம்பொடு

செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்”

திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர்முரணான மெய்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை.

“உடம்பார் அழியல் உயிரார் அழிவர்”

திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை ‘தந்திரம்’ என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலேயே தொன்றுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை.

“உறுதுணையாவது உயிரும் உடம்பும்”

இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன

“உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்”

கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை - மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள்.

“என்பமைந்த யாக்கை எடுத்துவந்த திங்குநாம்

அன்பமைந் துய்ய அறிமினோ - என்புடலை

முன்னம் இருவர் முதலன்பைப் பேணவிடுத்

தென்ன பயனடைந்தார் எண்”

இங்கே சிறந்த மனித உடம்பில் நாம் பிறந்து வந்தது எவ்வுயிர்க்கும் அன்பு புரிந்து உய்தி பெறவேயாம். தாம் எய்தியிருக்கும் உடம்புகளை விடுத்து அன்பு ஆற்றி முன்னம் இருவர் பெற்ற இன்ப நிலையை உணர்ந்து உய்ய வேண்டும் என்றவாறு, இது அன்பு புரிவதே அரிய பிறவிப் பேறு என்கின்றது.

என்பு அமைந்த யாக்கை என்றது அன்பு அமைய வந்த இந்தப் பிறவியின் அருமை அரிய வந்தது. என்பு இல்லாத புழுபூச்சி முதலிய இழிந்த பிராணிகளாய்ப் பிறந்து கழிந்து படாமல் உயர்ந்த உணர்வு நலம் கனிந்த சிறந்த மனித உருவில் தோன்றியதைச் சிந்தித்து நோக்கின் இத்தோற்றத்தின் ஏற்றமும் ஊற்றமும் உணரலாம். தோன்றிய பயனைத் தோய்ந்து கொள்ள வேண்டும்.

“அன்போடு இயைந்த வழக்கென்ப ஆரூயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு”

அருவமான அரிய உயிர் உருவமான இந்த உடலில் புகுந்து இங்கே வந்தது அன்பு செய்யவேயாம் என்றமையால், அது செய்யாவழி இத்தோற்றம் வெய்யதாய் வீணே இழிந்துப்படும்.

உடம்போடு கூடி அல்லது அன்பு செய்ய முடியாது ஆதலால் அதற்குத் தகுதியான வடிவை அது தாங்க நேர்ந்தது.

மாடு ஆடு முதலிய வேறு உடம்புகளை மருவின் அறிவோடு அன்பு செய்ய இயலாது.ஆதலின் மனித உடம்பை உரிமையாகத் தழுவிக் கொண்டது. தழுவியது பழுதாகாமல் விழுமியது கெழுமியது. உய்தி உறவே உயர் மெய் எய்தியது.

இங்ஙனம் உயர்ந்த பிறப்பை அடைந்து நிற்கின்ற உயிர் தகுந்த அன்பைச் செய்து கொள்ளின் பின்பு வேறே பிறந்துபடாமல் சிறந்த பேரின்ப நிலையை விரைந்து பெற்றுக் கொள்ளுகின்றது. பாலால் பசுவும் மணத்தால் மலரும் மாண்புறுதல் போல் அன்பால் உயிர் மகிமையுறுகின்றது 

என இது உணர்த்தியுள்ளது. அன்பு இல்லாத மனிதன் மணம் அற்ற மலராய்க் குணம்கெட்ட மலட்டுப் பசுவாய் இழிக்கப்படுவான் என்பது பெறப்பட்டது.

“அன்பு உயிரின் சாரம்; அஃது இன்றேல் சக்கை”

என்றது அன்புக்கும் உயிர்க்கும் உள்ள உறவுரிமையை ஊன்றி நோக்கி உணர வந்தது. கரும்புக்குச் சாரமும் கனிக்குச் சுவையும் போல் உயிர்க்கு அன்பு இனிமை சுரந்துள்ளது. அந்தச் சாரங்கள் நிறைந்து நிற்கும் அளவே அவை சிறந்து மதிக்கப்படுகின்றன. சுவைகள் குறைந்த பொழுது அசாரங்களாய் அவலமடைகின்றன. அவ்வாறே அன்பின் உண்மை இன்மைகளால் உயிர்கள் முறையே உயர்வு தாழ்வுகளை பெறுகின்றன.

“என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்”

எலும்பு இல்லாத புழு வெயிலில் எரிந்து துடித்தல்போல் அன்பு இல்லாத உயிர் தரும் தேவதை முன் பரிந்து பதைக்கும் எனத் தேவர் இங்ஙனம் உணர்த்தியிருக்கிறார். அன்பு இன்மை எவ்வளவு பாவம்! எவ்வளவு துன்பம்! எவ்வளவு கேடு! என்பதை இதனால் நன்கு அறிந்துக் கொள்ளலாம்.

பயிர்க்கு நீர்போல் உயிர்க்கு அன்பு உறுதி புரிகின்றது. அன்பின் அளவே உயிர் இன்ப நலநன மருவுகின்றது என்றதனால் அன்பு இல்வழி அது துன்ப நிலையில் சுழன்று உழலும் என்பது தெளிவாய் நின்றது. அன்பு பிறப்பே இன்பப் பிறப்பு அல்லாதது துன்பப் பிறப்பு ஆதலின் அது தொல்லை என நல்லோர் எல்லாராலும் சொல்ல நேர்ந்தது. அன்பு உயிரின் இன்ப ஊற்று. அதனை மருவியுள்ள அளவே மனம் மணம் பெறகின்றது. குணம் பெறுகின்றது. புனிதன் இனியன் புண்ணியன் கண்ணியன் தண்ணளியாளன் என மனிதனை அது மாண்புறுத்தியருள்கின்றது.

“யுள அரளா டழஎநஇ ளுழ அரஉh  அiனெ”

அன்பு எவ்வளவோ அவ்வளவே மனம்” என இத்தாலிய நாட்டுத் தத்துவஞானி ஒருவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அன்பு இல்லையானால் முரடுபட்டு மாட்டு மதியாய் மனம் மடிந்துபோம் என்பது இதனால் முடிந்து நின்றது. அன்பு சீவ அமுதம். அதனை மேவியுள்ள அளவே மனிதன் தேவியல்பமைந்து திவ்விய மகிமை பெறுகின்றான். அன்பை மருவிய அளவுதான் மனம் புனித உருவமாய் இனிது திகழ்கின்றது. அது குறையின் சிறுமையுற்றுச் சீரழிகின்றது. நிறையின் பெருமைப் பெற்றுப் பேரின்பம் நுகர்கின்றது. மனிதனது மாட்சி எல்லாம் அன்பின் அவ்வுண்மையை ஓர்ந்து உரிமை செய்து கொள்ளுக.

 

“என்பு தோல்உடை யார்க்கும் இல்லார்க்கும்தம்

வன்ப கைப்புலன் மாசற மாய்ப்பது என்?

முன்பு பின்பின்றி மூவுல கத்தினும்

அன்பின் அல்லதுஓர் ஆக்கம் உண்டாகுமோ? (43)

தம் புலன்களை அடக்கிக் கடவுளரை நோக்கிக் கடுந்தவங்கள் புரிவதினும் எவ்வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்தவரின் அதனால் எல்லா இன்ப நலங்களும் எளிதே வந்து சேருமே! என மக்களுக்கு இதமான ஓர் ஞான உபதேசமாய் இது இசைந்திருக்கிறது.

அன்பு அல்லது வேறு ஓர் ஆக்கம் இல்லை என்றதனால் அது அவ்வளவு பெரிய பாக்கியம்! என்பதை எளிதின் உணர்ந்து கொள்ளலாம். உயிர்க்கு எவ்வழியும உய்வைத் தருதலால் இத தெய்வத் திரு என நின்றது. பிற உயிர்களுக்கு இரங்கி அருளும் இயல்பினையுடையவர் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் உதவ நேர்கின்றது.

“அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”(44)

என அன்பாளரது பண்பாட்டினைத் தேவர் இவ்வாறு கண் காட்டியுள்ளார். ததீசி முனிவரிடம் இந்திரன் ஒருமுறை வந்து குரையிரந்து நின்றான். தமது உடலிலுள்ள ஓர் எலும்பால் அவனது குறை நீங்கும் என்று தெரிந்ததும் உடனே யோக சித்தியால் தமது இனிய உயிரை நீக்கி முனிவர் உதவி புரிந்தார். அந்தப் பேரன்பாளர் புரிந்த ஆருயிர் உதவியை வியந்து யாவரும் புகழ்ந்தனர்.

“குன்றடையும் அளவுநாம் உயிர் வாழ்வது

அரிது: அதன்முன் குறுகும் கூற்றம்

என்றச்சத் துடன்மனமே மறவாமல்

அறவழியின் எதுவாயே” (45)

கழிந்து போகின்ற நாள்களின் நிலைகளை உளம் தெரிய விளக்கி உறுதி நலநன ஓர்ந்து கொள்ளும்படி இவை உணர்த்தியுள்ளன. முன் செய்த புண்ணியப் பலத்தினால் இந்த அரிய பிறவியை அடைந்து வந்திருக்கிறீர். அங்ஙனம் வந்துள்ள நீர் இங்கே செய்து கொண்ட உய்தி நலம் என்ன? அதனை உணர்ந்து சிந்தித்து விரைந்துப் பயனைப் பெறுக” என இது வேண்டி நின்றது.

“எடுத்த உடம்பழயு முன்னே இவணீ

அடுத்த பயனை அடைக - விடுத்திருந்தால்

பாழாக் கழித்த பழிநாள ணாய்த்துயரில்

ஆழி அழிவை அறி.”(46)

உடல் அழிந்து படுமுன் உயிர்க்கு உரிய பயனை அடைந்து கொள்க: அடையாயேல் பாழான பழியாளனாய் இழிந்து அழிதுயரில் ஆழ்ந்து ஒழிவாய் என்பதாம் இது உயிர்நலம் காண்க என்கின்றது.

எடுத்த உடம்பு என்றது இந்தப் பிறவியில் வினை வயத்தால் மருவி வந்துள்ள மனித தேகத்தை, சரீரம் நிலையில்லாதது அழியும் காலம் அறிய முடியாதது. ஆதலால் அது நல்ல நிலையில் உள்ளப் போதே உயிர்க்கு உறுதிச் செய்துக் கொள்வது உயர் ஞானமாம். அரிய மனித உடம்பை எடுத்து வந்த ஒருவன் அதனால் அடைய உரிய உயர்பயன் யாது? எனின் வேறு ஓர் பிறவியைப் அடையாமையேயாம். பிறவி துன்பமுடையது: பிறவாமை இன்பமானது ஆதலின் அது வெறுக்க நேர்ந்தது. இது வேண்ட நின்றது. எவ்வளவு உயர்ந்த வாழ்வில் பிறந்திருந்தாலும் அல்லல்களும் கவலைகளும் அவலங்களுமே நிறைந்துள்ளமையால் யாண்டும் ஆண்டவனை நோக்கி வேண்டி நிற்கின்றனர். மனிதனுக்கு பூரணமான வயது நூறு. அது முழுவதும் கிடைப்பது அரிது. கோடியில் ஒருவனுக்கும் கூடாத அது ஒரு வேளை கூடினாலும் உறக்கம் முதலியவற்றால் முக்கால் பாகத்திற்கும் மேல் வீணே ஒழிந்து போகும். மனித வாழ்வு எவ்வழியும் துயரங்கள் அடர்ந்த தொல்லைகள் தொடர்ந்திருத்தலால் யாண்டும் எள்ளி இகழ நேர்ந்தது.

“ழுரச னயலள டிநபin றiவா வசழரடிடந hநசந

ழுரச டகைந ளை டிரவ ய ளியn

யுனெ உசரநட னநயவா ளை யடறயலள நெயச

ளுழ கசயடை ய வாiபெ ளை அயn”(47) 

நமது வாழ்நாள் துயரங்களில் தோன்றியது. உயிர் வாழ்வு மிகவும் குறுகியது. கொடிய மரணம் எப்பொழுதும் கை நீட்டியுள்ளது. மனிதநிலை மிகவும் பரிதாபமானது” என மேல்நாட்டுக் கவிஞரும் இவ்வாறு பாடியிருக்கிறார்.


உடல்நிலை:

இஃது இந்த உடம்பினது நிலைமையை உணர்த்துகின்றது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அரிய பொருள்களை உயிர் அடைவதற்கு உரிய துணையாய் உடனின்று உதவி வருகின்றமையால் மனிதனிலையின் பின் இது வைக்கப்பட்டது.

“ஆவிக் கினிய அழகிய ஆலயமாய்

மேவி யிருக்குமிம் மெய்ந்நிலையில் - நாவினால்

சொல்லற் கரிய தொழிலுயர் நுட்பங்கள்

எல்லை யிலகாண் இசைந்து”(48)

உயிர்க்கு அழகிய இனிய கோயிலாய் அமைந்திருக்கின்ற இந்த விழுமிய உடலில் அளவிடலரிய அற்புத நிலைகள் அடங்கி உள்ளன என்பதாம். கடவுட் கூறாகிய ஆன்மாவுக்கு நிலையமாய் நிற்றலின் உடல் ஆலயம் என வந்தது. மேவி இருக்கும் என்றது அரிதாக அமைந்துள்ள அருமை தெரிய என்க. இம்மெய் என்னும் அண்மைச் சுட்டு உரிமை தோன்றவுற்றது. மெய்யான உயிர்க்கு மெய்யாயிருத்தலின் தேகம் மெய் என நின்றது. மெய் - உடல், உண்மை. தொழில் நுட்பங்கள் என்றது நாவில் நீர் ஊறல், உதிரம், உலாவல், நாடி துடித்தல் முதலிய வினை நலன்களையும் உணவையும் நீரையும் உள்ளே கொண்டுபோய்த் தக்க இடங்களில் பிரித்துச் சேர்த்துப் பக்குவப்படுத்திப் பதனுறுத்துத் திறன் அதிசய எந்திரங்கள் எதனினும் மிஞ்சியுள்ளது. உடல் நிலையமான இந்த உடலில் அமைந்துள்ள கருவித் திரள்களின் அருமைப்பாடுகளை உரைகளால் உரைக்க இயலா: தெய்வசிருட்டியின் அற்புத நிலையில் இது தலை சிறந்துள்ளது.

‘அண்ட நிலையை அறிந்தள விடினும்

பிண்டநிலை யறிதல் பெரிதும் அரிதாம்.”(49)

என்பதனால் இவ்வுடம்பின் அமைதியும் அருமையும் உணரலாகும்.

“எண்ணரிய தோற்றத்துள் இம்மா னுடம்பெறுதல்

நண்ணரிய புண்ணியத்தின் நற்பயனே - விண்ணரிய

பேறெல்லாம் பெற்றுப் பெருமையுற வுற்றவிதன்

சீரெல்லை யில்லை தெளி” (50)

அளவிடலரியப் பல பிறவிகளையும் தப்பி இந்த மானுட யாக்கையைப் பெற்றது பெரிய புண்ணியத்தின் பயனாம். அரிய பேறுகள் பல அடையும்படி உயிர்க்கு உறுதியாய் வந்துள்ள இவ்வுடலின் பெருமை உரையிடலரிது என்பதாம்.


உடல்:

ஒரு வீட்டில் பல வாயிற் கதவுகள் வைத்து கதவைப் பூட்டாமலே திறந்து வைத்து இருந்தால் கழுதை, நாய் கூட நுழைந்து விடும். இந்த உடலாகிய ஆகிய வீட்டில் ஐந்து புலன்களாகிய ஐந்து வாசற் கதவுகள் இருக்கின்றன. இந்த ஐந்து புலன்களாகிய கதவுகள் எப்போதும் பூட்டாமல் திறந்தேதான் இருக்கின்றன.

“ஐந்து கதவுகளும் எப்போதும் பூட்டாமல்ஸ

இந்த உடலில் இருப்பதனால் - வந்துவந்து

போகின்றது நல்ல குணம் பொல்லாக் குணங்களெல்லாம்

ஆகிறது சொந்தமெனக் கொண்.”(51)

இதனால் என்ன ஆகிறது? மனிதனிடம் உள்ள சத்தியம், நேர்மை, அகிம்சைப் போன்ற அக்;குணங்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருக்கின்றன. திறந்தே கிடக்கும் வீட்டில் ஒரு நாய் எப்படிப் பார்த்துவிட்டு வெளியே போய்விடும். பாம்பு, பூரான் அப்படிப் போகுமா? குடியிருந்துக் கொண்டு கும்மாளம் போடும். ஐம்புலன்களாகிய கதவுகள் திறந்தே இருப்பதால் பொல்லாதக் குணங்கள் என்னும் தேளும், பாம்பும், பூராணும் உடம்பைச் சொந்த வீடாக்கி குடியிருந்து வருகின்றன.

முடிவுரை:

உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் நிலையுடையது என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோல் நம் உடலை வைத்து பெரிய நன்மைகளை செய்தாலும் நம் உடல் எப்பொழுதும் நிலையில்லாத ஒன்றாகவே உள்ளது. அதனால் உடலின் மேல் அதிக பற்றுக்கொண்டு வாழ வேண்டாம் என்கின்றனர்.


சித்தர்களின் வரலாறு

  

 ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 



‘சித்’ என்ற அடிச் சொல்லிலிருந்து சித்தன் என்ற சொல் பிறக்கும். ‘சித்’ என்பதற்குப் பேரறிவு என்பது பொருள். பேரறிவு பெற்றவர்கள் சித்தர்கள். “சித்தர்கள்” என்றால் அறிவு படைத்தவர்கள் மற்றும் அறிஞர்கள், மேதைகள், விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானிகள் என்று பொருள் சொல்லுவதே பொருத்தமாகும் என்பர். ‘சித்து’ என்னும் சொல்லைக் ‘மிஸ்டிசிஸம்’ எனவும் சித்தர்களைக் ‘மிஸ்டிhக்ஸ்’ எனவும் ஆங்கிலத்தில் கூறுவர்.  


உலகில் சிறந்தவர்கள் உலகியல் நடப்புக்கு மாறானவர்கள், சித்துக்கள் செய்வதில் வல்லவர்கள், அலைபாயும் சித்தத்தை அடக்கியவர்கள் சித்தம் - சித் - சித்தர் எனவும் சித்தம், மனம், புத்தி, அகங்காரம், ஆகிய நான்கும் அந்த கரணங்கள் என்பர். இவற்றுள் மனம் நினைக்கும் புத்தி விசாரிக்கும், அகங்காரம் எழுப்பி வைக்கும், சித்த் முடிவு செய்யும், இவை இனைத்தும் சேர்ந்த தொகுப்பி;னைச் சித்தம் என்பர். இத்தகைய நிலையனைப் பெற்றுவர்கள் சித்தர் ஆவர்.


நன்னெறியில் ஒழுகும் மேலோரைச் சான்றோர் எனவும் பேரறிவாளர் என்றும் இரு பிரிவினராக்குவர். அறவோரும், அந்தணரும் முதல் பிரிவைச் சார்ந்தவர்கள். ரிஷ, முனி, சித்தர் ஆகிய மூவர் இரண்டாம் பிரிவைச் சார்ந்தவர்கள். சித்தத்தின் சலனம் மற்றும் தத்துவங்களின் தோற்றம் சித்தத்தை வென்றவர்கள் சித்தர்கள், இவர்களாது தன்மை.


சீரிலுயரட்; சித்தயார்க்குஞ்

சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி

(சித்தப் ஞானக்கோவை கடுவெளிச் சித்தர் ப – 268

பாடல் - 18)


சித்தி, சிவன் சித்திக்கும் என்பர். இதில் சித்திக்கும் என்பதற்கும் ‘கிடைக்கப்பெறுதல்’ அல்லது ‘அடையப்பெறுதல்’ எனப் பொருளாகிறது. இதனைப் பெறத்தக்கபேறு எனக் கருதப்படுகின்ற எல்லாம் அறிந்த நிலை கைவரப்பெறுதல் சித்தி எனவும் அதனை அடைந்தவர் சித்தர் எனபதும் கருதப்பட்டமை விளங்கும்.


இறைவனைச் சத், சித், ஆனந்தம் எனக் குறிப்பர் ‘சத்’ என்பது உள்ளது. ‘சித்’ என்பது பேரறிவு. ஆனந்தம் என்பது பேரின்பம், பேரறிவுப் பொருளான இறைவனை உணர்த்தும் ‘சித்’ என்ற சொல்லை அடிச் சொல்லாகக் கொண்டு சித்து – சித்தன் எனக் கருதுவர்.


சிவனைச் சித்தனாகக் கொண்டு சமயச் சார்பற்ற நிலையில் பாடிய யோகியர் ‘சித்தர்கள்’ எனக் சுட்டப்படுகின்றன. ‘சித்தி’ என்ற சொல்லுக்குப் பேறு என்று பொருளும் உண்டு. ‘பேறு’ என்பது இறை இணைவுக்குப் பின்பாகிய வாய்ப்பினைக் குறிக்கும். இப்பேற்றை அடைந்தவர் சித்தர்.


நான்கு வகை முத்திகள் சாலோகம், சாம்பம், சாருபம், சாயுச்சியம் இறைவன் உலகில் இருக்கும் பேறு சாலோகம், இறைவன் அருகில் இருக்கும் பேறு சாமீபம் இறைவன் ருபம் அடையும் பேறு சாருபம் இறைவனோடு ஒன்றும் பேறு சாயுச்சியம் முதல் மூன்றும், பதமுத்தி எனப்படும். இறுதியாகிய சாயுச்சியம் ‘சித்தி’ எனப்படும் இதனை அடைந்தவர்கள்  சித்தர்கள் ஆவர் இவர்கள் இறைவனோடு ஒன்றும் பேறு பெற்றவர்கள் என்பது இதனால் விளக்கும் சட்டைமுன்சித்தர்.


ஏகாமல் வாசனையை யறிந்தோன் சித்தன்

- சித்தர் ஞானக்கோவை – பா 156


என்று கூறுவர். இங்கு வாசனை என்பது கர்ம வினையாகும். பிறவி தோறும் தொடர்வது இதன் இயல்பு இதனை எழும்பாமல் தடுப்பவன் ‘ஞானி’ எனவும் ஏறாமலேயே தடுப்பவன் சித்தன் எனவும் கருதப்படுகின்றனர். கர்ம வினையை அடியோடு அழிப்பவன் சித்தன் என்பது இதனால் விளங்கும் கொங்கணர், கருவூரார், சட்டைமுனி இராமதேவர் முதலியோர் விலையைப் பூசிப்பவன் சித்தன் எனவும் குண்டலினியை யோக மார்க்கத்தின் மூலம் மேலே கொண்டு வருபவன் சித்தன் எனவும் விளக்கம் தருகின்றனர்


தமிழகத்தில் சித்தர் மரபு :


தமிழகத்தில் தொன்று தொட்டுச் சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் தொல்காப்பியர்,


“மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன்”.


அறிவினை சித்தராகக் கொள்ள இடம் உண்டு அறிவினை விளக்கும் இளம்பூரணர், வானியலோடு கலந்து  வருங்காலம் உணர்த்தூகின்ற ‘கணியன்’ என்று கூறுகிறார். நச்சினார்க்கினியர், காமம் வெகுளி, மயக்கமில்லாத ஒழுகலாற்றினன் இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைந்த முழுதுணர்யுவடையோன், என்றும் விளக்குகிறார். சித்தர் என்ற சொல்லூக்கு சொல்லுக்கு பொருளாக அமைகிறது. அகத்தியர் ஒர் அறிவர் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

“நிலமிசை வாழ்நிர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கினலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரோடு கொட்கும்

அவிர்சடை முனிவர்”.

புறம்  


என்று இப்புறநானூற்றில் குறிப்படுகிறது இடைக்காடர் கதையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த பூமியில் உள்ள மாந்தர்களின் துயரங்கள் சூரியன் முதலிய கோள்களின் வெப்பத்தை அமைதிப்படுத்திக் காற்றையே உணவாக எடுத்துக் கொண்டனர். சித்தர் எனக் குறிக்கப் பெறுகின்றனர்.


சித்தர்கள் காலம் : -


சித்தர்கள் வாழ்ந்த காலத்தை வரையறை செய்தல் இயவாது தமிழகத்தில் பல பகுதி வெவ்வேறு காலங்களில் பல பகுதிகளில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘சித்தர்காலம்’ கி. பி 14 ஆம் நூhற்றாண்டின் தொடக்க முதல்  கி. பி 16 ஆம் நூற்றாண்டின் இறுதி  வரையான காலத்தை வரையறுக்கின்றனர். இக்கால் கட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் ‘பதினென் சித்தர் என்று குறிப்பிடுகின்றனர்.


பதினென் சித்தர்கள் : -


கி. பி 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சித்தர் பாடல்களில்தான் சித்தர் பதினெண்மர் என்று வரையறுக்கின்றது கருவூரார்.


திட்தாய்ப் பாணம் வைத்துத் தேவி பூசை

சீர்பெற்றார் பதினெட்டுச் சித்தர் தாமே

(கருவூரார் பூசை விதி – பாடல் - 23)


என்ற குறிப்பிடுகிறார். திருமூலம் திருமந்திரத்திலோ, ஒருவற்றான் சித்தர் எனப் போற்றப் பெறும் சைவசமய குரவர் நால்வர் பாடல்களிலோ அவர்களைத் தொடந்து தோன்றிய நூல்களிலோ இல்லை.


பதினென் சித்தர் என்னும் வழக்காறு பிற்காலத்தது என்பது உறுதி. சித்தர் பலர் வாழ்ந்த காலத்தில் இக்கொள்ளை தோன்றியிருக்க வேண்டும் ‘பதினெட்டு’ என்ற நம்பிக்கை காணப்படுகின்றதே கவிர அவர்களைப் பற்றிய பெயர்களை எவரும் சுட்டவில்லை. இதனால் பதினென் சித்ததர் வரிசையில் அடங்குவோர் பற்றிய கருத்து வேறுபாடுகளும் தோன்றலாயின பதினென் சித்தர் வரிசையில் அடங்குவோர் பற்றிய கருத்து வேறுபாடுகளும் தோன்றலாயின. திருமூலர், இராமதேவர்,கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி,கமலமுனி ,போகநாதர், குதம்பைச்சித்தர்,மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி. நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிச் சித்தர், சட்டைமுனி, சுந்தரானந்த, கோரக்கர்





திருமூலர்


பன்னிரு திருமுறைகளுள் பத்தாவது திருமுறையாகத் திகழ்வது திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.  தமிழ் மூவாயிரம் என்றும் இந்நூல் வழங்கப்படுகிறது. இதனை இயற்றியவர் திருமூலர் திருமூலர் திருமந்திரம் எழுதிய இடம் திருவாவடுதுறை. அது இன்றும் சைவ சமயம் செழித்தோங்கும் மடமாக உள்ளது.


திருமூலர் திருவாவடுதுறை என்னும் பகுதியில் காவிரியை நோக்கிக கடந்து சென்று இருந்தார். அங்த பகுதியில் ஆடு மாடுகள் மேய்ப்பவர்   இடையன் மூலன்.  


இடையன் மூலன்  இறந்துவிட்டதால் மாடுகள் கூட்டமாகத் சேர்ந்து கண்ணீர் வடிய அழுந்துக் கொண்டிருந்தது,   அதனைக் கண்ட திருமூலர் பசுக்கூட்டங்களின் துயரத்தைக் போக்குவதற்கு  இடையனின் உடலில் புகந்தார். திருமூலர் உடலைப் ஒரு மரம் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு மீண்டும் வந்து பார்க்கின்றபோது அவருடைய உடல் அங்கே இல்லை மூலன் உடலில் இருந்து   கடும், தவம் செய்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருடத்திற்கு ஒரு பாடல் விதமாக மூவாயிரம் பாடல்கள் இயற்றினார். திருமூலர் உடம்பை புகழ்ந்து பாடுகிறார். “சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். உடம்பு நலமாக இருந்தால் தானே இறைவனைக் காண முடியும் என்பது திருமூலரின் கருத்து சிதம்பரத்தில் சமாதியனார்.

இராமதேவர்


இராமதேவர் இசுலாமியரின் புனித இடமான மெக்காவுக்கு சென்ற போது ஞாண வார்த்தைகளில் இசுலாமியர்கள் வெகுவாகக் கவர்ந்தன. இராமதேவர் அல்லாவின் தூதராக சித்தரிக்கப்பட்டு, இசுலாமிய மதச் சடங்கான் ‘சித்தத்’ நிறைவேற்றப்பட்டு, ‘யாகோபு’ சுன்னக் காண்டம் 600 என்ற இவரது பாடல் தொகுப்பில் அமைந்துள்ளது.


இராமதேவர் கடற்கரையில் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த வந்தார் இவர் சிறந்த அம்மன் பக்தராவார் அம்மனை நாள்தோறும் பக்தியுடன் வழிபடுவதும், இயற்றுவதும் மனித ஒன்றாகத் வாழவேண்டும் தனது வாழ்க்கை நடத்தி வந்தார்.


இராமதேவர் காசிக்கு புனித்பயணம் மேற்கொண்டார். இராமதேவர் கங்கை நதிக்கரையில் சட்டைநாத சுவாமி திருவுருவச் சிலை புதையல்போல் கிடைத்தது. திருவுருவச் சிலை இருக்க வேண்டிய இடம் நாகப்பட்டினம் என்று ஒருகருத்து அசரீரி ஒலி கேட்டது. நாகப்பட்டினம் கொண்டு வந்து சேர்த்தார்.


சட்டைநாதரை, இராமதேவர் மனம் உருகி பிரார்த்தித்ததின் அதன்மூலம் அவருக்குப் பல சித்திகள் கைகூடின ‘ககனகுளிகை சூட்சமம்’ என்பா சூட்ச இரவமணி சூட்சம் மூலம் முதலில் ஆகாயத்தில் பறந்து எசன்ற இராமதேவர். அவரையே அறியாமல் இசுலாமியரின் புனித நகரமான மெக்காவில் இறங்கினார். மெக்க நகர இவுலாமியர்கள் வியந்துவிட்டார்கள்  புதிய தோற்றம் உள்ள இராமதேவரைப் பார்த்து இந்த கூட்டத்தில் யாரோ ஒருத்தார் என்று நினைத்தனர் இராசமணி சூட்சமத்தின் வான்வழிப்பயணம் சைகையில் கூறியுள்ளார். இராமதேவர் இறைத்தூதர் என்று எண்ணித் இசுலாமியிருக்கு தமச் சடங்கான ‘சுன்னத்’ செய்து ‘யாக்கோப்பு’ எனப் பெயரிட்டார். இராமதேவர் இவை அனைத்தும் சட்டைநாதரின் திருவிளையாடல்கள் அவர் விருப்பம்போல் அங்கே தங்கியனார். இறுதி நாட்களில் இவர் நாகப்பட்டினத்தில் தொடர்ந்து சிவவழிபாட்டில் ஈடுபட்டு சமாதியானார்.

தன் வந்திரி


உலகில் முதல் மருத்துவர் தன் வந்திரி  எனலாம் இறைவன் விஷ்ணு பகவானே மனித உயிர்களைக் காப்பற்றக் தன் வந்திரியாக மனித அவதாரம் எடுத்தார் என்கிறார்கள். சித்தர்கள் பதினெட்டுப் பேரும் தன்வந்திரிக்கு உபதேசித்தார்கள் என்றும், மூன்று இலட்சம் கரந்தங்களையும் உபதேசித்தார்கள் என்றும் தன்வந்திரி சூரியன் போல் பிரகாசித்தார் என்று கூறுகிறார் அகத்தியர். இவர் தான் ஆயர் வேதர்ரின் தந்தை இவரிலிருந்து பிறந்தது தான் ஆயர் வேத வைத்தியம். இவர் தமிழ் நாட்டிலுள்ள வைத்திஸ்வரன் கோயிலில் சில காலம் தனது சீடர்களோடு தவம் புரிந்தார் இவர் நூல்கள் இயற்றியுள்ளார். தன் வந்திரி பகவான் இப்போதும் வைத்திஸ்லரன் கோயிலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இடைக்காட்டுச் சித்தர்


இவர் மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்தவர் என்றும் தொண்டைமண்டலத்தில் உள்ள இடையன் மேடு என்ற ஊரில் லாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. எப்பொழுதும்  இடைக்காடர் சிவ சிந்தனையுடனே இருப்பது வழக்கம் ஆடு மேய்க்கும் பொழுதும் இவர் மனமொடுங்கி இவர் நின்ற தோற்றம் கண்டு வான மண்டலத்தில் இருந்து இறங்கி வந்த போகமுனிவர் இடைக்காடருக்கு வைத்திய, வாத, யோக, ஞானங்களைக் கற்றுக் கொடுத்தார். இடைக்காடர் வானசாஸ்திர ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கினார் இவர் எண்ணற்ற நூல்களைப் பாடியுள்ளார்.


வெகுதான்ய வருடத்தில் மழை தாமதமாகப்பெய்யும் பருத்தி விழளச்சல் குறைந்து உப்புவிலை ஏறும் என்று இடைக்காடர் சொன்ன உண்மை இன்றும் பஞ்சாங்கங்களில்  இவரது பாடலாகக் குறிப்பிடுகிறது. இவர் தமது ஜோதிட அறிவால் கொடிய பஞ்சத்தையும் சாதுர்யமாக எதிர்கொண்டு நவக்கிரகங்களையும் இடம் மாற்றம் செய்து வெற்றி கண்டார் என்று வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.

வால்மீகர்


இந்த உலகில் பொய்யாக நடிப்போர் பலர் உண்டு அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ளுவார்கள் தெய்வத்தைக் கண்டோம் எனக் கூறுவார்கள். இவர் மக்கள் படிக்கும் நாலு வேதம் ஆறு சாத்திரம் பதினெட்டுப் புராணங்கள் பாடிவைத்தனார். சித்தர் வால்மீகரும் இராமயணம் எழுதிய வால்மூகி முனிவரும் வேறானவர்கள்;. இவர் இராமாயணம் எழுதியதாகப் ‘போகர் 7000’ என்னும் நூலில் அறியப்படுகிறது. ‘வால்மீகி சூத்திரம்’ என்னும் தலைப்பில் 16 பாடல்கள் இடம்பெறுகிறது. மக்களின் அறிவுரை கூறும் பாடல்களாக உள்ளன.


‘போகர் 7000’ என்ற நூல் வால்மீகி எழுநூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்ந்ததாகவும்.  தமிழில் புலமை மிக்கவர் இவர் நீண்டகாலம் வாழ்ந்த அகத்தூய்மை என்னும் தூய்மையோடு வாழ்ந்தவர் ஆவார் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் சன்னிதானத்தில் ஜீவ சமாதியனார்.

மச்சமுணி


மச்சமுணி காகபுசுண்டரின் சீடராவார் சிவபெருமான் ‘காலஞானத்தை’ உமாதேவியருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கிவிட்டாராம் தொடக்கத்தில் இருந்து கடைசி வரையிலும் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.   இவருடைய சமாதி முரணான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

பதஞ்சலி


பதஞ்சலி இன்று உலகமெங்கும் பிரபலமாகப் பின்பற்றும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக உள்ளது.

நந்திதேவர்


சைவ சமயத்தில் முதல் குரலாகவும் சிவனின் வாகனமாகவும்; திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும் நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள் இளமையும் திட்டமும் வாய்ந்தவராக நந்தி தேவர். 

கொங்கணர்


போகரின் சீடரான இவர் கொங்கண தேசத்தைச் சேர்ந்தவர் வேட்டுவகுலத்தில் பிறந்தவர். இவர் நிஷ்டையிலிருந்த போது மரக்கிளையிலிருந்து பறவை ஒன்று இவர் மீது எச்சமிட அதனால் கண் விழித்துக் கொங்கணவர் கோபமாய் அந்தப் பறவையைப் பார்க் - அது எரிந்து சாம்பலானது.


குதம்பைச் சித்தர்


குதம்பை என்பது பெண்கள் காதில் அணியும் ஒர் அணிகலன் சிலம்பணிந்தவளைக் சிலம்பி என்று பெயரிட்டு அழைப்பது போல். குதம்பை அணிந்தவளைக் குதம்பா என்று அழைப்பது ஊர்ப்புற வழக்கு அங்கனம் குதம்பா என்ற மகடுஉ விளியாக காவடிச் சிந்து இராகத்தில் இவர் பாடியுள்ள கருத்து இதன் காரணமாக இவர் குதம்பைச் சித்தர் என்ற காரணப்பெயர் பெற்றார். வடநாட்டு ஆண் சித்தருள் ஒரு பிரிவினர் குதம்பை என்ற காதணி அணியும் வழக்கமுடையோராய் இருந்துள்ளனர். அந்தவழக்கத்தைப் தென்னாட்டில் வாழ்ந்த இச்சித்தரும் காதில் குதம்பை அணியும் பழக்கமுடையவராகத் திகழ்ந்தனர். சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி, “குதம்பைச் சித்தர் என்றொருவர் பெண்களை இழிவாக எண்ணிப் பின் திருந்தினர்


கைலாயக் கம்பளிச் சட்டைமுனி : -


கைலாயமுனி, சட்டைமுனி, சட்டைநாதர் என சில பெயர்களில் அழைக்கப்படுகின்றது சட்டைமுனிவேறு, சட்டநாதர்வேறு என்ற கருத்தும் உள. போகர்நூலில், சட்டைமுனி என்பவர் சிங்களத் தேசத்து தேவதாசி ஒருவரின் மைந்தன் என்று கூறுகின்றது. பிழைப்புத் தேடித் தமிழகம் போந்து ஒரு பெண்ணை மணம்புரிந்து வாழ்ந்து வந்தார் என்றும். வடநாட்டு ஞானி ஒருவரைச் சந்தித்தபோது அவரால் ஈர்ப்புண்டு மனைவியை நீங்கித் துறவு பூண்டார் என்றும், போகர், கொங்கணர், திருமூலர், அகத்தியர், காகபுசுண்டர், கருவூரார் முதலான சித்தருடன் இவருக்குத் தொடர்புண்டு என்றும் இவர் பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றன இவர் தம்மைப் பற்றி


“கைலாய்ப் பரம்பரையாய் வந்தபேர்க்கு

கடைப்பிள்ளை;;;…….”

என்று பாடியுள்ளார்.

போகநாதர்


  போகர் சர்வ சாஸ்திரங்களையும் கற்று துறை போகியவர் என்பதால் என்று அழைக்கப்பட்டார். இவர் காலாங்கி முனிவரின் தலைச் சீடராவார் காய கல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி கயசித்தி செய்து கொண்டார். உலக மொழிகளை பலவற்றை கற்றிருந்த இவர் யோகா முறைகளை ஆயிரத்து ஏழுநூறு பாடல்களில் உலகமெங்கும் பரவியவர். சீன நாட்டிற்குச் சென்று அங்கே பல சீடர்களை உருவாக்கியிருந்தார். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் பழநி மலை முருகன் சிலையை உருவாக்கியவர் இவர்தான். இவருடைய நூல்கள் எல்லாம் மூலிகைகள் இரகசியம் உள்ளடக்கியது. மனிதர்களுக்கு மூப்பு பிணிவராமல் தடுக்கும் மூலிகைகளை சொல்லிருப்பது இவர் சிறப்பு  பழநி மலையில் - முருகன் சன்னதிக்குக் கீழேயும் - மெக்காவிலும் இவரது ஜீவசமாதி இருக்கிறது என்கிறார்கள்.

கோரக்கர்


கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயிலிய நட்சித்திரத்தில் பிறந்தவர். சேணிய வகுப்பைச் சார்ந்தவர் மச்சமுனியின் சீடராவார் காய கல்பத்தை அறிந்து தேகத்தை வச்சிர காயமாக்கி மகிழ்ந்தார். கற்பதேசத்துடன் இவர் வாழ்ந்து வந்தபோது ஓர் இடையன் பாம்பு கடித்து இறந்துவிட கோரக்கர் அந்த இடையனின் உடலில் புகந்து இடையரானார் இடைச்சியோடு வாழ்ந்தார் அப்போது வேட்கைக்கு வந்த மன்னன் மலைக்குகையிலிருந்து கோரக்கரின் உடலைப் பார்த்து அது செயலற்று இருந்தால் பிணம் என நினைத்து எரித்துவிட்டான். அதனால் கோரக்கர் இடையனின் உடலோடு வாழ்ந்தார். இவர் எதிர் காலத்தில் உலகம் எப்படியிருக்கும் என்பதையும் என்னென்ன ஆட்சிகள் வரும் என்பதையும் மறைமுகமாக இவரது பாடல்களில் குறிபிட்டுள்ளார்


மச்சமுனி


செம்படவர் மரபினைச் சார்ந்த இவர் பிண்ணாகீசரின் சீடர் திராவக முறையில் சிறந்தவர்.

சுந்தரானாந்தர்


சுந்தரானந்தர் 16 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர். கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும் அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார் இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்றும் அறியப்படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதனை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார் இவர் மதுரையில் சமாதியடைந்ததாக என்று அறியப்படுகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி  உள்ளது.

பாம்பாட்டிச் சித்தர்


அந்தணர் குலத்தில் பிறந்தவர் பாம்பாட்டிச்சித்தர் என்பர். கொங்கு நாட்டில் மருத மலையில் தவம் செய்தார். இன்றும் பாம்பாட்டிச் சித்தர் குகை என்று இவர் பெயரில் ஒரு குகை அங்கு உண்டு. இவர் திருக்கோகர்ணத்தில் பிறந்தவர் என்ற கருத்தும் உள்ளது.

 இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு முறை நவரத்தின் பாம்பைப் பிடிக்கச் சென்றபோது சட்டைமுனி அங்குவர அவரிடம் தீட்சைப் பெற்றுச் சமாதியிலிருந்து மீண்டு எழுந்து பல சித்துக்களைச் செய்தார். செத்த பாம்புதனை ஆட்டியதால் இப்பெயர் பெற்றார் என்பர்.


முடிவுரை

தமிழர்களின் சமயமே சித்தர் மரபுதான், சிவபெருமானே முதன்மையான சித்தர் எனும் அளவில் தமிழ் சமூகம்போற்றியுள்ளது. முருகன், அகத்தியர், கணபதி என அனைவரையும் சித்தர்களாகவே தமிழர்கள் போற்றியுள்ளனர். ஆசிவகம் மதமே சித்தர் மதமாக இருந்துள்ளதை தமிழர் வரலாற்றில் அறியமுடிகிறது.