புதன், 20 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் கொங்கு நாட்டுப்புலவர்களின் புலமை நோக்கு

 
 சங்க இலக்கியத்தில்  கொங்கு நாட்டுப்புலவர்களின் புலமை நோக்கு

              சங்க இலக்கியமானது நவீன இலக்கியங்களுக்கு முன்னோடியாக திகழக்கூடிய ஒன்றாக விளங்குகிறது. திணை உவமை, உள்ளுறை போன்ற இலக்கிய உத்திகள் பலவற்றையும் தன்னூள் கொண்டது.  சங்க புலவர்களிலே கொங்கு நாட்டு புலவர்கள் தனிச்சிறப்புவாய்ந்தவராக கருதப்படுகின்றனர். மன்னர்களை பாடல்பாடி தங்கள் புலமைத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.   மன்னர்களை புகழ்ந்துபாடுகின்ற நோக்கில் தங்களுக்குள் இருக்கும் புலமை உத்தி திறனை வெளிப்படுத்தி நூணுக்கமான பாடல்களை இயற்றியுள்ளனர்.
புலமை- விளக்கம்


    ஒரு செயலின்போது அதிக ஆர்வமோ செயலால் மிகுந்த ஈடுபாடோ புலமையின் நோக்கமாக உள்ளது. அதிக ஆர்வம் கொண்டு ஒரு செயலினை செய்யும்போது அச்செயலாலும் மிகுந்த புலமைகொண்டு விளங்குதல் புலமை என்று குறிப்பிடுவர். புலமை மிகுந்த சான்றோர்களை புலமையோன் என்று குறிப்பிடுவதும் உண்டு. புலமையோர்களை நோக்கி புகழானது வந்துசேரும் என்று பலரும் கூறியுள்ளனர்.

வருணனைகள்

    வருணனை என்பது புலவன் கூறும் செய்திகளை நேரில் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்தும்படி அழகுற விவரித்து உரைத்தல் புலன்களால் உணர்வனவற்றை அல்லது புலவர்களின் வாயிலாக உணரும் புறக்காட்சிகளை சொற்களில் மொழிப்பெயர்த்து காட்டுவது வருணனை ஆகும்.  இதனை
“ மலைகடனொடு வளருகர் பருவம்
    இருசடர் தோற்றமென் நினையனை புனைந்த”   (தண்டி. பொதுவணியியல் 7-8)
பொது வருணனையில் நாடு நகரம் ஆறு காலம் இயற்கை போன்றவைகளை அடக்கலாம் சிறப்பு வருணைக்கே அடிப்படையாக பொதுவருனணையும் அவற்றை சொல்லுமிடத்து உள்ளுறை உவமம், அமைத்து கூறப்படும் செய்திகளை சிறப்புவருனணைகளாக விளங்குகின்றன.
    “அகவன்மகளே அகவன் மகளே
    மனவுக் கோப்பு அன்னநல் நெலிங்கூந்தல்”    (குறுந். 23)
இப்பாடல் தெய்வத்தை அழைத்து வருணனை கூறுவதாக அமைகின்றது.

கற்பனை


    நாம் பார்த்த ஒரு சாதாரண காட்சிகளை நம் மனதில் வேறுவிதமாகவோ கற்பனை செய்து பார்ப்பது கற்பனை என்று பொருள்படும். மனத்தால் சிந்தித்து தானே அவற்றை வளர்த்தெடுத்து செல்லக்கூடிய ஆற்றலே கற்பனையாக  விளங்குகின்றது. கவியாற்றாலின் அடிப்படையாகவும் கற்பனை அமைகின்றது. இச்செய்தியை
    காயறு குன்றத்துக் கொன்றை போல
    மாமலை விடர்அகம் விளங்க மின்னி
    மாயோளி இருந்த தேஎம் நோக்கி
    வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்
    தொடங்கினவே பொய்யா வானம் (நற் 371)
இப்பாடல் உணர்த்துகின்றது. இதுவரை பொழியாமல் இருந்த மேகங்கள் என் காதலி தங்கியிருந்த இடம் நோக்கி மழைபொழிகிறது. கரிய மேகங்கள் மின்னும்மின்னி மழை பொழிந்ததை காயர மரங்கள் மழையின் சரக்கொண்றை மலர்ந்ததுபோல கற்பனையாக விளங்குகின்றது. இதனை
    யாணர் ஊரன் கானுநன் ஆயின்
    வரையா மையோ அரிதே வரையின்
    வரைப்போல் யானை வாய்மொழி முடியன்
    வரைவேய் புரையம் நல்தோள்
    அளிதோழி தொலைவுற டலவே
இவ்வாறு தலைவி நினைக்கிறாள் . அழகிய அனிகலன்களை அணிந்து விழாவிற்கு சென்றால். புது வருவாயைவுடைய ஊரனாகிய  தலைவன் தலைவியின் இளைய அழகை கண்டான். அவள் அழகில் மயங்கி தலைவியை ஏற்றுக்கொள்வான் என்ற கற்பனை வெளிபடுகின்றது.

உவமைகள்


    அறிந்தப் பொருள்களைக்கொண்டு  அறியாதப்பொருளை ஒப்புமைப்படுத்தி விளக்குவது உவமை எனப்படும். இதனை தொல்காப்பியர்
    வினை பயன் மெய் உரு என்ற நான்கே
    வகைபெற வந்த உவமைத் தோற்றம்
            (தொல்.பொருள். நூ. 200)
என்ற நூற்பாவில் உவமையானது வினைப்பயன் மெய் உரு என்ற நான்குடன் வரும் என எடுத்துகாட்டுகிறார் இதனை
“ உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை”.   தொல் பொருள். 274
என்று உயர்ந்த பொருளுடன் தான் உவமிக்க வேண்டும்  என்று கூறுகிறார்.
சிறப்பே நலனே காதல் வலியோடு
அந்நாள் பண்பும் நிலைக்கலன் மென்ப”
            தொல். பொருள். 275
என்று நான்கு நிலைகலன்களையும் பெற்றுவரும் என்று சுட்டிகாட்டுகிறார்.
    உவமும் பொருளும் ஒத்தல் வேண்டும்
                தொல். பொருள். 279
என்ற நூற்பாவில் உவமையும் உவமிக்கப்படும் பொருளும் ஒத்தவையாக இருத்தல் வேண்டும் என்று கூறுகிறார். சுங்கபாடல்களில் உவமைகள் பல வந்துள்ளன. உவமையானது போல போன்ற பல சொற்கள் உள்ளது. இதில் போல என்ற உவம உறுபுகள் மட்டும் காணலாகின்றது.
    நால்ஊர்க் கோசர் நல்மொழி போல
                    குறுந். 15
போல என்ற உவம உருபுகள் இப்பாடலில் தலைவன் தலைவி காதலை கூறுவதற்கு பயன்படுகின்றது. இச்செய்திகள் சங்ககால பாடல்களில் மிகுதியாக காணப்படுகிறது.
    பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல (குறுந். 29)
தலைவன் மழைநீரை ஒற்றை பச்சை மட்பாண்டம போல  உள்ளவும் தாங்கவியலாத ஆசை வெள்ளத்தில் நீந்திளைப்ப என்று கூறுகின்றான். போல என்ற உவமை உறுபுகள் தலைவன் கூற்றில் பலவாறாக பயன்பட்டுள்ளது. இவ்வாறாக சங்கபாடல்களில் காணமுடிகிறது.

உள்ளுறை

    உள்ளுறை எனும் சொல் உள் உறை எனப் பிரியும் உள்ளுறை எனும் சொல்லுக்கு உள்ளே தங்குதல் என்று பொருள். உள்ளுரை என்பது வெளிப்படையாக தோன்றும்  ஒருபொருளாகவும் உட்பொருளாய் பிரிதொன்றும் தோன்றுவதாகும்.
    புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாய் அமைத்து வெளிப்படையாய் உவமையை மட்டும் கூறுவான் தான் உள்ளுறைத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்துமொழிய என்று உட்பொதித்து கூற இது முற்றுபெற அமைவதே உள்ளுரை உவமம் என்று தமிழண்ணல் கூறுகிறார். இதனை
    முட்டுவேன் கொல் தாக்கு வேன் கொல்
    ஓரேன் யானும் ஓர்பெற்றி மேலிட்டு
    ஆ அல் ஒல் எனக் கூறுவேன் கொல்
    ஆலமரல் அசைவலி அலைப்ப என்
    உயவு நோய் துஞ்சும் ஊர்க்கே
                    குறுந் 28
என்னும் பாடலால் அறியமுடிகின்றது. தலைவி தலைவனை நினைத்து ஊரகம் நிலையினை வெளியே காட்டிகொள்ளாமல் மறைமுகமாக தன் இடல்மேல் உறைக்கும் போக்கினை உள்ளுறையாக கூறுவதை காண முடிகிறது.

இறைச்சி


    இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய மான், ஆடு, மாடு முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிக்கும். எனவே இறைச்சி என்பதற்கு கருப்பொருள் என்று விளக்குவர்
    பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
    மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கோட்குநர்ப் பெறினே
                குறுந் 29
தன் குடடியை அடிவயிற்றில் கொண்டிருக்கும் தாய் குரங்கினைப் போல, தலைவியின் காதலை உட்பினைத்து கூறியதால் இதனை இறைச்சில் பொருளாகப் பெறமுடிகிறது.

இலக்கிய உத்திகள்


    இலக்கியமானது  சீராக அமைவதற்கும் இலக்கியத்தின் பொருளை  அனைவரும் புரிந்து கொள்வதற்கும் இலக்கிய உத்தியானது பண்படுகிறது. இலக்கிய உத்திகள் செய்யுளுக்கு அழகு சேர்ப்பவையாக உள்ளதை அறியமுடிகிறது. ஒரு தலைவன் தன் துறையில் செவ்விய வெளியீட்டிற்குப் பயன் கொள்ளும் ஆற்றலும் ஆக்க முறையும் உத்தியாகிறது. என்று சா. வே. சு கூறுவதை அறியமுடிகிறது.
    மாமலை விடர்அகம் விளங்க மின்னி
    மாயோளி இருந்த தோம் நோக்கி  (நற்- 371)
பெரிய மலைக்குகைகள் விளங்கும் படியாக மின்னி மாமை நிறமுள்ள என் காதலி தங்கியிருந்த இடம் நோக்கிச் சென்று இப்போது மழையைப் பொழியத் தொடங்கிவிட்டன என தலைவன் கூறுகிறான் மலை, மாமை என்ற இரண்டும் இலக்கணமுறைப்படி இலக்கிய உத்திகளை சங்கயிலக்கியத்தில் காணமுடிகிறது.

எதுகை

    தொல்காப்பியர் கூறிய முறைப்படி எதுகையானது சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தியுள்ளனர். எதுகையானது இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது.
    தோல் முதலாத்துப் பொதியில் தோன்றிய
    நால் ஊர்க் கோசர் நல்மொழி போல  குறுந் 15
தொல் நால் என்பதில் உள்ள ல் என்ற இரண்டாமெழுத்து ஒன்றிவருவதனை எதுகை என்னும்  சொல்லால் அழைப்பதை காணமுடிகிறது.

இயைபு

    இயைபு என்பது அடியின் கடைசி எழுத்து ஒன்றி வருவது.
நேற்றிவிளை  உமிழ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்பறம்     குறுந்  39
அதில் ஆர்க்கும் என்பறம் என்ற சொற்களில் ம் என்கிற மகரம் மட்டும் இயைபு என்ற இலக்கிய உத்தியைக் கொண்டதாக அமைந்துள்ளது.

சொல் நயங்கள்

     சொற்கள் மாறி மாறி அமையாமல் ஒரே சீராக  அமைவதனை சொல் நயங்கள் என்னும்  சொல்லால் குறிப்பிடலாம்.
    முறந்தோர் மன்ற  மறவாம் நாமே
    குhல  மாரி மாலை மாமலை   குறுந் 200
முறந்தோர், மன்ற மறவாம் கால மாரி மாமலை மாலை போன்ற  சொற்கள் சொல் நயங்களாக உள்ளதை காண இயலுகின்றது.     சொற்கள் மாறி மாறி அமையாமல் இருப்பதைப்போல பொருளானது ஒரே சீராக அமைவதனை பொருள் நயங்கள் என்று குறிப்பிடலாம்  சங்கயிலக்கியங்களில் பல இவ்வாறாக அமைந்துள்ளது.

முடிவுரை

    சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர்கள் மிகவும் புலமை மிக்கவர்களாக விளங்கினர். தங்கள் பாடல்களில் உவமை, உள்ளுரை இறைச்சி இலக்கிய உத்திகள் சிந்தனை சொல் நயங்கள் பொருள் நயங்கள் போன்றவை பயன்படுத்தியுள்ளனர். கொங்குநாட்டு புலவர்களின் புலமைநோக்கு மிகுதியாக உள்ளதை காணமுடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக