புதன், 20 ஜூன், 2018

சமுதாயவியல் நோக்கில் சங்கப்பெண்பாற் புலவர்களின் பாடல்கள்

 

சமுதாயவியல் நோக்கில் சங்கப்பெண்பாற் புலவர்களின் பாடல்கள்

    சங்க இலக்கியமானது அகம், புறம் எனும் இரு பிரிவினைக்கொண்டதாக உள்ளது. சங்க இலக்கியத்திற்கு நானூறுக்கும் மேற்பட்டோர் பாடல் இயற்றியுள்ளார்கள். ஆண் புலவர்கள் பெண் புலவர்கள் என இருபாலரும் பாடல் இயற்றியுள்ளார்கள். நாற்பதிற்கும் மேற்பட்ட புலவர்கள் பெண் புலவர்களாக காணப்படுகின்றனர். நாற்பது பெண்பாற் புலவர்களும் நூற்று எண்பதற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளனர் அப்பெண்பாற் புலவர்கள் தங்கள் பாடல்களில் சமுதாயவியல் குறித்த செய்திகளை பதிவு செய்துள்;ளதை காணமுடிகிறது.

சமுதாயம்

    சமுதாயம் என்பது மனிதன் கூட்டம்கூட்டமாக சேர்ந்து வாழக்கூடிய ஒரு பகுதியாகும். இயற்கையின் மீது மனிதின்; அதிகாரம் வளர்ந்தது. இவ்விதமாக மனிதனுக்கு வழிபிறந்து விட்டது. அதன்;பின்பு மனிதன் புதியபுதிய பொருள்களை உண்டாக்க ஆரம்பித்துவிட்டான். பொருட்களை அதிகமாக உண்டாக்க பல மணிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. மனிதன் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த நிலையே சமுதாயம் எனப்பட்டது. மனித சமுதாயத்தை “ஏங்கொல்ஸ்” மூன்று பிரிவுகளாக பிரித்தார். காட்டுமிராண்டி அநாகரிக, நாகரிக மனித சமுதாயங்கள் மனித வரலாற்றின் மிகப்பழைய பகுதி காட்டுமிராண்டி சமுதாய வரலாறாகும்.

சமுதாய வளர்ச்சி நிலை

    உணவு சேகரித்தலும். வேட்டையாடுதலும் மனிதனின் செயலின் மூலம்  அதைத்தொடர்ந்து மாறுதல்கள் அந்தந்தச் சூழ்நிலையைப் பொறுத்தது மனிதன்  கால்நடை    பொருளாதாரத்திற்கும், விவசாயப்பொருளாதாரத்திற்கும் தங்களை மாற்றிக்கொண்டான். இவற்றின் முன்னேற்ற நிலையானது. இனக்குழுமுறை சிதைய வழிவகை செய்தது. இவ்விரு வழிகளும் மக்களை நாகரிகத்திற்கு இட்டுச்சென்றுள்ளன.

சமூகத்தில் ஆண்பெண் உறவுநிலை

    தனனுடைய ஒப்புதலுடன் வயதொத்த ஆணும் பெண்ணும் நெருங்கி உறவாடுதலைச் சங்கச் சமுதாயம் உடன்படவில்லை என்று தெரிகின்றது. களவுக்காலத்தில் ஊர்ப்பெண்டிரின் எதிர்பானது  சமுகத்தின் எதிர்ப்;பையே காட்டுகின்றது.
    ஆண் பெண் இருவரின் காதலையும் இருவரும் மணமான பின்பே அறிந்த ஊரார்   அமைதியடைந்தனர்.  சமூகத்தின் ஒப்புதல் ஆண்பெண் இருவருக்கும் மிகவும் இன்றியமையாததாகக் கொள்ளமுடிகிறது.

சங்க இலக்கிய சமூகத்தின் காதல்நிலை

    சங்ககாலத்தில் ஆணும்பெண்ணும் ஒருவரை ஒருவரை விருப்பம் கொண்டவராக இருந்துள்ளனர். ஒரு பெண் தன் தலைவன் மீது  அளவுக்கடந்த காதல் வைத்திருக்கிறாள்.  தலைவனும் தலைவி மீது காதல் கொண்ட நிலையை அறியமுடிகிறது.
    செல்வார் அல்லர் என்றுயான் இகழ்ந்தனனே
    ஒள்வாள் அல்லாள் என்றுஅவர் இகழ்ந்தனளே
    ஆயிடை இருபேர் ஆண்மை செய்தபூசல்
    நல்இராக் கருவி யாங்குஎன்
    அல்லல் நெஞ்சம்  அலமலக்குறுமே-    குறுந். 43
தலைவியானவள் தலைவன் என்மீது பெருங்காதல் கொண்டவராக இருப்பதால் என்னைப் பிரிந்து செல்லமாட்டார். நான்  பிரிவினை நினைத்து சோர்ந்து இருந்தேன். என் துன்பத்தினை அறிந்த என்னுடைய தலைவன் தான் பிரிவதாக சொன்னால் என் தலைவி துன்பமடைவாள்  என எண்ணி என்னிடம் கூறாமலே சென்றுள்ளார். எங்களின் அளவுக்கடந்த காதலால்  இருவரின்  மனமும் அலைமோதுகின்றது  என கூறுகிறாள்

சங்ககாலத்தில் வேளாண் சமுதாயம்

     சங்ககாலம் இயைற்கையோடு இயைந்த வாழ்வையும் இயற்கைப் பொருளாதாரப் பெருக்கத்திற்கு ஏற்ற  வாழ்வையும் அடிப்படையாக கொண்டமைந்த காலமாக இருந்துள்ளது.
    இயற்கையாக விளைந்த  பலா, வள்ளிக்கிழங்கு, தேன், மூங்கில், நெல் போன்றவற்றைப் பயன் படுத்திக் கொண்டவர்கள் வேளாண்மையின் மூலம் திணை, வரகு, கொள், அவரை, நெல், கரும்பு, பயிறுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும் கற்றுக் கொண்டனர். சங்ககாலத்தில் புன்செய் வேளாண்மையும் நன்செய்வேளாண்மையும் திணைச் சமுதாயங்களின் இருவேறு செயற்பாடுகளாய் இருந்துள்ளன. குறிஞ்சி முல்லை ஆகிய இரு திணைகளிலும் புன்செய் வேளாண்மையே அடிப்படியாக உள்ளது. நெய்தல் திணைகளில் நன்செய் வேளான்மையானது சிறப்பிடம் பெற்றுள்ளது.


சங்ககால பாணர் விறலியர் நிலை

    யாழ் என்னும் இசைக்கருவியோடு  பாடல்களையும் பாடும்  கலைஞர் பாணர் எனப் பெயர் பெற்றனர். இடைக்காலத்தில் பாணர் என்ற இப்பிரிவானது தாழ்ந்த சாதியொன்றைக் குறிக்க வழங்கியது. விறலியர் என்பவள் பெண்பாற் கூத்தரும் பாடகரும் ஆவர். இச்சொல் கூத்தர், பொருநர் என்பவற்றின் பெண்பாற் சொல்லாகவே எப்போதும் விளக்கப்பட்டுள்ளது. கூத்தர்கள் புலவர்களின் மனைவியர் என்பதில் ஐயமில்லை. வுpறலியாகள்; அறிவுவாய்ந்த மனைவியராக மட்டுமின்றி உரிமைமிக்க கலைஞர்களாகவும் வாழ்ந்தனரென்றும் அறியமுடிகின்றது.

சங்க கால சமுதாய வீரர்கள் நிலை

     வீரர் என்ற சொல்லானது கிரேக்கத்தில் “அகதோஸ”; என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.   யுpன் அகராதியின் படி நற்பிறப்பையுடைய பெருந்தகவுடைய வீரமான, வலிமைமிக்க தலைவர்களுக்கும் பெருங்குடியினருக்கும் வீரப்பண்பு உரியதாக மொழியப்பட்டதால் நல்ல தகுதியுள்ள தகுதிகளின் அடிப்படையில் வழங்குவது என்ற பொருளைப் பெறுகின்றது.
    வீரனின் நிலையை புலவர்கள் கூறுகையில் குருதிக்கறை படிந்த  கைகளையும், வீரம் கொலைச்செயல்கள் மிகுதியாக புரிபவர்கள் என்று விளக்கமாக மொழியப்பட்டுள்ளன. சிறந்த வலிமையை உறுதிப்படுத்தும் வீரம் மதிப்பு ஆகியவற்றில் வீரர்நிலையானது பாராட்டோடு ஒத்துள்ளது. சங்க காலத்தில் மனிதர்களைக்கொள்வது மட்டுமில்லாமல் விலங்குகளைக் கொள்வதும் வீரம்மிகுந்த செயலாகவே  இருந்துள்ளது.
    வீரர்நிலைச் சமுதாயம் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீரர்களாக இருந்தவர் என்றும் வீரராக அல்லாதவர் என்பன அப்பிரிவுகளாக உள்ளன. இன்னொரு பிரிவாக உயர்குடியினர் உயர்குடி அல்லாதவர் என்பனவாகும்.

குடும்ப சூழ்நிலை

     குடும்பம்  என்ற சமூக நிறுவனதின் உருவாக்கத்தில் பெண்கள் இடம் முதன்மையானது. குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு எனப் பெண்ணின் அன்றாடப் பணிகளைக் குடும்ப அமைப்புச் சுருக்கினாலும் வாரிசுகளை உருவாக்குவது என்பது முக்கியமான பணியாக இருந்துள்ளது. சமுதாயத்தில் குடும்பம் சிறிய  அலகெனினும் கருத்தியல் ரீதியில் ஆதிக்கம் செழுத்தி வரலாற்றுத் தொடச்சியைச் சாத்தியப்பபடுத்துகின்றது. சங்க இலக்கியத்தில் குடும்பம் என்ற சொல் இல்லை. குழு என்ற சொல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது.
      குடும்பம் என்ற சொல் உயர் குடியினர். குடியிருப்பு என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனை இல் ஆகிய இரு சொற்களும் ஒரு நிலையில் குடும்பம் பற்றிய கருத்தாக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையனவாக உள்ளன.
    சங்க இலக்கியம்; குடும்பம் என்ற அமைப்பை மையமாகக் கொண்டுள்ளது. கணவன், மனைவி குழந்தைகள் கொண்ட தனிக்குடும்பம் நடைமுறையிலிருந்தது. சங்ககாலத்தில் பெண்ணின் வீட்டில் திருமணம் நடைப்பெற்றபோதிலும் மணமான பெண் பிறந்தவீட்டில் இல்லை என்பதும் குழந்தைகள் தாயினை சார்ந்தவர்களாக கருதப்படுவது இல்லை என்பதும் பெண்பற்றிய மதிப்பீட்டில் முக்கியமானவை.
 சங்ககாலத்தில் சமுகப் பதிவுகள்.
    சங்ககாலத்தில்  போர் முறையில் ஒர் பெண் தன் குடும்பத்தையே அர்பணிக்கும் நிலையினை சங்கப்பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. சங்ககாலம் போர் நுணக்கங்களை சமூக பதிவுகளாக உருவாக்கியுள்ளன.
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருத லுற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
என்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீ,ப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே   (புறம்    279 
    சங்ககாலத்தில் ஒருபெண் முன்பொருநாள்; நடந்தபோரில் அப்பெண்ணின் கணவனை போருக்கு அனுப்பினாள் பெரிய பசுக் கூட்டத்தைக் காத்த சண்டையில் மாண்டு போயினான். இன்றைய நாளில் போர் முழக்கழைதக் கேட்டவள் தன் குடிப்பெருமையை காக்க எண்ணியவளாய் அறிவு மயங்கி இவளுக்கென வேறு எவருமின்றிதன் குடிகாக்க இருந்த ஒரே மகனின் தலைமுடிக்கு எண்ணெய் தடவி வெள்ளாடை உடுத்தி வேலையும் கையில் தந்து போர்முனை நோக்கிப் புறப்படுக என இவனை அனுப்பி வைக்கின்ற செயலினை காண முடிகின்றது. சங்ககால பெண்கள் தன்வீட்டை காக்க ஒரு பிள்ளை இல்லையே என்று நினைக்காமல் இருந்த ஒரு மகனையும் போருக்கு அனுப்பி விட்டமையை சமூகப்பதிவுகளாக கொள்ள முடிகிறது

சங்ககாலத்தில் போர் முறைகள்

         சங்ககாலத்தில் போர்முறையானது ஒவ்வொரு  வரிசைமுறையாக அமைந்த நிலையினை பலவாறாக  காணலாகின்றது.
குயில்வா யன்ன கூர்முகை யதிரல்
பயிலா தல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்
ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற்
பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க்
கொடுஞ்சிரைக் குரூஉப்பருந் தார்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்தவிக் கருங்கை வாளே.
புறம்  269.
    குயிலின் வாய் போன்ற கூறிய  அரும்புகளையுடைய புனலிக்கொடி எங்கும் பூக்காமல்  ஒரு சில மட்டுமே  பூத்துள்ளன,  மாலைப் பொழுதில் கரிய பெரி பித்தையை அடிகுறச் சூட்டிய புதிய காலத்தின் வெம்மையான கள்ளை ஒன்றுக்கு இருமுறை பருகினாய். அப்போது வெட்சி கொள்கவெனக் கொட்டும் துடியொலி கேட்டது. அப்போது எழுந்த நீ வடித்த கள்ளை ஏந்தி அருந்துமாறு நிற்பவர் வேண்டியும் அதனை வாழ்த்திப் போருக்கு உடன் எழுந்தாய். கரந்தையாரோ மிகப் பலரையும் மறைத்து போர் செய்பவராயும் இருந்தனர். இப்படியிருந்தும் அவரை வென்று ஆநிரைகளை கொண்டு மீண்டாய் என்கிறார். இங்கு வெட்சி கரந்தை போன்ற இரு நிலைகளிலும் சங்ககாலத்தில் போர்முறைகள் நிகழ்ந்து வருகின்றன.

முடிவுரை

    சங்ககாலத்தில் வாழ்ந்த பெண்கவிஞர்கள் அனைவரும் தங்களின் பாடல்களில் சமுதாய நிலையை பாடி சென்றுள்ள நிலையை காணமுடிகின்றது. சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர்கொண்ட காதல்நிலை பற்றியும் போர்நிலை பற்றியும். சங்ககாலத்தில் வாழ்ந்த ஆண் பெண் இருவரின் குடும்ப சூழ்நிலை பற்றியும் சங்ககால பாடல்களில் இவ்வாறாக சுட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக