புதன், 20 ஜூன், 2018

பழமொழிகளின் நடை அழகு



.இராஜ்குமார்
ஆய்வில் நிறைஞர்
தமிழ்த்துறை
பெரியார் பல்கலைகழகம் சேலம் 11
arajkumartamil88@gmail.com
பழமொழிகளின் நடை அழகு

தமிழில் கிடைக்கக்கூடிய இலக்கண நூல்களில் காலத்தில் முந்திய நூல் தொல்காப்பியம் ஆகும் அந்நூலில் செய்யுளிலியலில் இலக்கியம் படைக்கும் உத்திகளைப்பற்றி, விதிகளைப்பற்றியும் கூறுகிறது. பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்கள் இலக்கியம் படைக்கும் உத்திகளைப்பற்றி, விதிகளைப்பற்றியும்   கூறுகிறது. செய்யுள் நடையில் ஆய்வின் முன்னையோர்களாக நம்முடைய பழந்தமிழ் இலக்கணங்களைச் சுட்டுவதில் தவறில்லை. மேலை நாட்டுத் திறனாய்வு நெறிகளுள் நடையியல் ஆய்வு இன்று சிறப்புடன் திகழ்கின்றது. உல்மன், சேபிக், என்க்விஸ்ட் சுபிட்சர் போன்றோர் இத்தகைய நெறிகளைப் புலப்படுத்தினர். இலக்கியத்தைப்போலவே பழமொழிகளில் காணப்படும் நடையழகை இவ்வியலை ஆராய்வோம்.
நடையின் இலக்கணம்
நடை என்பது ஆசிரியரின் தன்மையை வெளிப்படுத்துவது.
நடை என்பது சொல்லோவியம் (ளவலநை ளை வாந அநவெயட piஉவரசந ழக வாந அயn றாழ றசவைந ) என்னும் குணத்தை அறியும் கலை  (phலளழைபழெஅள ழக வாந iனெ) என்று கூறுவர்.
                இலக்கியத்தின் இன்றியமையாதப் பகுதியாக விளங்குவது நடையாகும்.  படைப்பாளியின் எண்ணங்களையும் அவர் மனதில் எழும் உணர்வுகளும் உரிய சொற்களால் வடித்து கொடுக்கும் காலத் திறமையை நடை என்று கூறலாம். கம்பனின் காவியம் அனைவராலும் போற்றப்படுவதற்கு காரணம் கம்பனின் நடையழகே காரணமாக உள்ளது.  இலக்கியப் படைப்பாளிகளை இனம் கண்டுகொள்வதற்கு அவர்களது மொழிநடை பெரிதும் பயன்படுகிறது. தமிழ், வடமொழி இலக்கண நூலாரும், இலக்கியத் திறனாய்வாளரும் நடையின் இலக்கணம் குறித்துக் கூறுகின்றனர்.
சிறந்த நடையை அளந்து அறிவதற்குரிய அடிப்படைகள்      
ஜே.மில்ட்டன் முர்ரே என்பவர், “நடை என்பதனை மூவகையாக எடுத்துக்கொள்கிறார். ஒன்று நடை என்பது ஒருவருக்கே உரிய தனித்த வெளியீட்டு முறைமை: இரண்டாவது, வெளியீட்டு முறையில் பயன்படுத்தும் கலைத்திறன்; மூன்றாவது, இலக்கியகலையில் செய்து முடிக்கும் மகத்தான சாதனை. இம் மூன்றும் இலக்கிய நடையை அளந்து அறிவதற்கு பயன்படுகிறதைபோலவே பழமொழி நடையை அறிவதற்கும் பயன்படுகிறது”. 
வெண்பா பாட்டியல்
தமிழிலக்கணத்தில் (செய்யுளியலில்) கூறப்பட்ட இலக்கணங்களுள் சிலவும் பிறவும் நடையின் இலக்கணத்திற்குப் பொருந்தி விளங்குவதை நாம் காண முடிகிறது.
எடுத்த பொருளினோ டோசைனிதாய்
அடுத்தவை இகஞ்சொல்லாய் அணியும் தொடுத்த
தொடையும் விளங்க அவை துதிப்பச் சொல்லின்
இடமுடைய மாமதுர யாப்பு”.
என்று வச்சணந்திமாலை கூறும் இலக்கணத்தில் ஓசை, பொருள், அலங்காரம், தொடை, செய்யுள் அழகுகின் நடைக்கு இன்றியமையாத இயல்புகள் அமைகின்றனர்.

நடை பொருள்

உரையாசிரியர் இளம்பூரணர்,
ஆசிரிய நடைத்தே வஞ்சிஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
     எனும் செய்யுளியல் நூற்பாவில்நடையென்றது அப்பாக்கள் இயலும் திறம்என்றே பொருள் எழுதுவது உளங்கொளத்தக்கது. எனவேஎல்லாவகைத் திறன்களும் பொருந்தி நடக்கும் இயல்பினையே நடையெனலாம”;. என்றுநடை என்னும் சொல்லுக்கு . தமிழ்ப்பாவை இவ்வாறு விளக்கம் தருகிறார்.”
நடை என்னும் சொற்பொருளை  என்பது      இலத்தின் சொல்லின்  வழியாக பிறந்திருக்க வேண்டும் என்பர். முதலில் ஆசிரியரின் எழுத்து முறையை குறித்தது என்றும் அதன் பிறகுதான் ஆசிரியரின் கனவைத் தனித்துவ வெளிப்பாட்டைக் குறிக்கும் வகையில் அமைந்ததென்றும் கூறுவர், தனிமனித ஆளுமையைக் குறிப்பதாக பிரெஞ்சு மொழியில்  முதன் முதலாகக் கி;;பி.1330 ல் பயன்படுத்தப் பெற்றிருப்பதைக்காண முடிகிறது.
நடை நலம்
ஒரு கவிஞனின் படைப்பில் ஏதேனும் ஒன்றை மட்டும் பிரித்து இதுதான் நடைச்சிறப்பு என்று நாம் தனியாகவும் எடுத்துரைக்க இயலாது. இத்தகைய  உத்திகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் இழைந்தும் விளங்கினால்தான் செய்யுள் நடை நலம்  பெறுகிறது.
நடை சொல்லாட்சி
தமிழில்நடைஎன்பதற்குஇயக்கம்என்ற அடிப்படை ஒருமைப்பாடுடைய பல்வேறு பொருள்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று எழுதுகின்ற மொழியின் இயல்பைச் சுட்டுவதாகும். சென்னை பல்கலைக் கழகத் தமிழ்ப்பேரகராதிபாஸையின் போக்குஎன்று கூறுகிறது. நட என்பதே எல்லாச் சொற்களுக்கும் பகுதியாக விளங்குகிறது. சொல்லடை, வாக்கியநடை, செய்யுள்நடை, நூல் நடை என்ற வழக்காறுகளில் இச்சொல் ஆகுபெயர் பொருளிலேயே வருகிறது என்பர்.
தொல்காப்பியரும், பிறரும்நடைஎன்னும் சொல்லாட்சியைப் பல்வேறு இடங்களில் எடுத்தாண்டுள்ளனர் தொல்காப்பியரும், பிறரும் ஆண்டுள்ள ஆட்சியையும், வள்ளுவர்  சொல்லின் நடை என்று கூறுவதையும்  கிழே காணலாம்.
உரைவகை நடையே நான்கென மொழிப
ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலியென மொழிப
நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகி
 வரும் இலக்கண, இலக்கியத்தில் நடை மொழியின் நடையைக்காணலாம்”.
நடைநயம் உணர்ந்த சான்றோர்
இலக்கியத்தை சூழ்ந்து பயின்றவர்கள் அதன் சொல் நோக்கையும், பொருள்  நோக்கையும் தொடை நோக்கையும், நடை நோக்கையும், கண்டு மகிழ்தனர் என்பதைப் பின்வரும் பாடலாலும் அறிய முடிகிறது பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எனப்படும் அழகிய மணவாளதாசன் பாடல்களை
சொல் நோக்கும் பொருள் நோக்கும்
தொடை நோக்கும் நடை நோக்கும்
எந்நோக்கும் காண இலக்கியம் ஆவது
எனும் பாடலால் பாராட்டிப் பாடினார்.
நடை வேறுபாடு
ஆசிரியர்(யுரவாழச), காலம்(யுபந);, நோக்கம்(Pரசிழளந);, கருத்து(வாநஅந) , இடம்(புநழபசயில);, மக்கள்(யுரனநைnஉந) முதலியவற்றால் நடையின் தன்மை வேறுபாடும். “திருவாசகத்திற்கு உருகாதவர்கள் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்பது திருவாசகத்தின் புகழ் இந்நூல் புகழ்வதற்கு காரணம் நடையழகேயாகும். ஒரு இலக்கியமானது ஆசிரியரின் மனநிலைக்கு ஏற்பவும் காலம், கருத்து, இடம், நோக்கம் ஆகியவற்றிற்கு ஏற்ப நடை வேறுபடுகிறதை காணமுடிகிறது.
செய்யுள்
யாப்பிலக்கணம் ஒன்றே செய்யுளையும், உரைநடையையும் வேறுபடுத்துகிறது. பாடலுக்கு உறுப்பாக எழுத்து, அசை, சீர்,  தளை, அடி, தொடை என்பனவற்றைக் குறிப்பிடுவர்.
இந்த உறுப்புகளை ஏற்ற கவிஞர்கள் தாம் கருதிய பொருள் பொலிவுற, அணிநலம் திகழ அழைக்கப் பெறுவதே யாப்பு அல்லது செய்யுள் என்று கூறுவர் பழமொழிகளில் இடம் பெறும் மோனை, எதுகை, இயைபு ஆராயப்படுகிறது.


இரு சொற்களில் அமைந்த பழமொழிகள்
                பழமொழிகள் மனிதனின் அனுபவமொழி என்கிறோம். மனிதன் தான் பட்ட அனுபவத்தை இரண்டே சொற்களில் பழமொழியாக வடித்துள்ளனர்.
எல்லாம் நன்மைக்கே
உலகம் பலவிதம்
நாடகமே உலகம்
எம்மதமும் சம்மதம்
                மேற்கண்ட பழமொழிகள் மனிதனின் அனுபவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், இலக்கண நடைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது.
மூன்று சொற்களில் பழமொழிகள்
                பட்டதை எல்லாம்  எடுத்துச் சொல்ல பட்டப்படிப்பு தேவையில்லை என்பது பாமரர் வாக்கு அதுப்போலவே, மனிதன் தன்னுடைய எண்ணத்தை மூன்றே சொற்களில் பழமொழிகளாக வடித்துள்ளான் இதனை
ஆசை வெட்கம் அறியாதது.
சுத்தம் சோறு போடும்.
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.
துறவிக்கு வேந்தன் துரும்பு’.
என்ற பழமொழிகள் மூலம் அறியமுடிகிறது.
நான்கு சொற்களில் பழமொழிகள்
வாழ்வது ஒருமுறைதான் வாழ்;தட்டும் வையகம் என வாழ்பவன் மனிதன். மற்றவர்களுக்கு அறிவுரையை பழமொழி வாயிலாக நான்கே சொற்களில் மனிதன் பின்வருமாறு கூறுகின்றனர்.
 அடக்கம் ஆயிரம் பொன்பெறும்.
 அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும்.
 பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’.
                உலக யதார்த்ததை இரண்டு, மூன்று, நான்கு சொற்களில் சொல்வதை காணலாம்.   
வாக்கிய அமைப்பு
                 சொல் நிலையில் மட்டுமல்லாமல் வாக்கிய நிலையிலும் ஒரே மாதிரியான வாக்கியங்களைக் கொண்டு வாழும் பழமொழிகள் 
அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்"
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்
பாடிக்கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்"
கூழ் ஆனாலும் குனிந்துக்குடி
கந்தையாயினும் கசக்கிக் கட்டு"
போன்ற பழமொழிகள் இரண்டு வாக்கியங்களைக் கொண்டவை. ஆனால் ஒரே மாதிரியான வடிவத்தைக் (முற்றுவினை பெயர்த்தொடர், நிபந்தனையச்சம் ) கொண்டு உள்ளமைக் காணத்தக்கது. இவற்றைப் போன்றே மூன்றுவாக்கியங்களைக் கொண்டுள்ள சில பழமொழிகளும் காணக்கிடக்கின்றன.
அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பான்;
ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்"
இவ்வாறு ஒரே வகையான இலக்கியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதைகளும் உள்ளன.
யாயும் ஞாயும் யாரா கியரோ"
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" போன்ற பாடல்கள் இத்தகைய நிலையில் உருவாக்கப்பட்டவை தாம்.
எதுகை
ஒரு செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு தொடுப்பது எதுகைத்தொடை எனப்படும். தொல்காப்பியம்அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும்  என்றும் யாப்பெருங்கலக் காரிகைஇரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகைஎன்றும் கூறுகின்றன.
அவரை விதைச்சா
 துவரையா முளைக்கும்
ஆடி கறக்கிற மாட்டை ஆடி கறக்கனும்
 பாடி  கறக்கிற மாட்டை பாடி கறக்கனும்”;
பரணியில் பிறந்தவன்
 தரணி ஆள்வான்
புலிக்கு பிறந்தது
 எலி ஆயிறுமா
கொன்றால் பாவம்
 தின்றால் போச்சி
கல்லானாலும் கணவன்
 புல்லானாலும் புருசன்
விட்ட குறையோ
 தொட்ட குறையோ

இவ்வாறு பழமொழிகளில்  எதுகை அமைந்துள்ள பாங்கினை அறியமுடிகிறது.

மோனை

ஒரு செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்தாக வருமாறு தொடுப்பது மோனைத்தொடை எனப்படும். மோனை பற்றி தொல்காப்பியம்அடிதோறும் தளை எழுத்து ஒப்பது மோனைஎன்றும் யாப்பெருங்கலம்அடிமோனைத் தொடை எழுவாய் எழுத்து ஒன்றின் மோனைஎன்றும் கூறுகிறது.
பாவம்  ஓர் பக்கம்
பழி ஒரு பக்கமா
திருடனோட சேந்தா
 திருட்டு புத்திதான் வரும்
ஊள்ளுர் பொண்ணும்
ஊரோர கொல்லையும் உறவுக்கு ஆகாது
கூத்தாடி கிழக்கு பார்பான்
கூலிக்காரன் மேற்க பார்ப்பான்
வல்லு வல்லுனு கொலச்சா வாய்க்கு கேடு
வருசம் ஒரு புள்ள பெத்தா உடம்புக்கு கேடு
ஆடு மேய்க்கிறவனை கட்டினாலும் கட்டலாம்
ஆக்கி தின்றவனை கட்டிக்க கூடாது

இவ்வமைப்பு முறையில் பழமொழிகளில் மோனை இடம் பெறுவதை காணலாம்.
இயைபு
ஒரு செய்யுளில் ஒவ்வொரு அடியின் கடைசி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சொல்லோ ஒன்றிவருமாறு தொடுப்பது இயைபுத்தொடை எனப்படும.; இதை தொல்காப்பியம்இறுவாய் ஒப்பின் அஃது இயைபென மொழிப”(தொல்.1344) என்ற நூற்பா மூலமும், யாப்பெருங்களக் காரிகை இறுவாய் ஒத்தல் இயைபெனப்படுமே என்றும் கூறுகிறது.
 பாவம்  ஓர் பக்கம்
 பழி ஒரு பக்கம்”;
ஆக்க சலிச்சி அடுப்பு பால்லாச்சி
 குத்த சலிச்சி கொள்ள பால்லாச்சி
மாடு இல்லாதவன் மணவாளனாம்
 பொண்ணு இல்லாதவன் புண்ணியவானாம்
கூலிக்காரன்கிட்ட கூலிக்கு போககூடாது
 ஆள்காரன்கிட்ட ஆளுக்கு போககூடாது
கூத்தாடடி கிழக்கு பார்பான்
 கூலிக்காரன் மேற்க பார்ப்பான்”;
வல்லு வல்லுனு கொலச்சா வாய்க்கு கேடு
 வருசம் ஒரு புள்ள பெத்தா உடம்புக்கு கேடு
மாடு மேய்காம கெட்டது
 பயிர் பாக்காம கெட்டது
கல்லிக்கு புள்ள சாக்கு
 கவுண்டனுக்க ஊர் சாக்கு

பழமொழிகளில் இவ்வாறு இயைபு முறையும் அமைந்துள்ளது.
பழமொழிகளில் உவமை நயம்

                தொல்காப்பியர் உவமைக்கு விதி கூறியள்ளார். உவமையானது தொழில், பயன்பாடு, வடிவம், நிறம், எனும் நான்கின் அடிப்படையாய் பிறக்கும் என்கிறார். வினை பயன், மெய், உரு, என்ற நான்கே வகை பெற வந்த உவமைத்தோற்றம்”12  என்கிறார் தொல்காப்பியர் 
                ஒரு பாடல் இனிமையாக இருக்க இசை, பாடுபவரின் குரல், பாடல் வரிகள் அழகாக இருக்கவேண்டும் அதுபோலவே பழமொழிகள் படிக்காத பாமரமக்கள் கூட ஊவமையாக உவமை நயத்துடன்  பயன்படுத்துகின்றனர்.
எல்லாராலும் எல்லா நேரத்திலும் எல்லா வேலையும் செய்து முடிக்க முடியாது. எப்படிபட்டவராலும் ஒரு சில வேலைகளை செய்ய  முடியாது. அப்படிபட்ட சுழ்நிலையில் நேரம்தான் வீன் என்பதை வெளக்கெண்ணெய்க்குதான் கேடு பிள்ளை பிளைக்கிறதல்ல என்று உவமையாக சொல்லப்படுகிறது.
காதலர்கள் எல்லை மீறியபோது ஒரு சில நேரத்தில் தவறு நிகழ்கிறது. அந்த நேரத்தில் எல்லா தவற்றையும் ஆண் மீதே பழிபோடும் போது மற்றவர்களால் ஊசி இடம் தராமல் நூல் நுழையாது என்றும் உவமையாக கூறுகிறார்கள்.
அவசரக்காரர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர் அவர்களுக்குஅறுப்பதற்கு முன்பே ஆட்டு புடுக்கை எனதுன்னான்எனும் பழமொழி உவமையாக கூறபடுகிறது. மேலும் உவமையாக கூறப்படுகிற பழமொழிகள்
ஆக்க சலிச்சி அடுப்பு பால்லாச்சி
 குத்த சலிச்சி கொள்ள பால்லாச்சி
அக்காளுக்கு அரிசியாம்
தங்கச்சிக்கு தவிடாம”;
மாடு இல்லாதவன் மணவாளனாம்
பொண்ணு இல்லாதவன் புண்ணியவானாம்.”
போன்ற உவமைகளை பழமொழிகளில் காணமுடிகிறது.
கவிதையும் பழமொழியும்
                பழமொழிகள் சிறந்த உண்மைகளையும் செம்மையான அனுபவங்களையும் உள்ளடக்கி நிற்பதுடன் சிறப்பான வடிவ அமைப்பையும் கொண்டு விளங்குவன. இதே நிலையைத்தான் கவிதைகளிலும் காண்கிறோம். பழமொழி நாட்டு மக்களால் உருவாக்கப்படுவது. கவிதை, நயம் செறிந்த கவிதைப் பெருமக்களால் உருவாக்கப் பெறுவது. எனினும் கவிதைகளில் காணப்படும் எல்லாக் கூறுகளும் உத்திகளும் இதிலும் காணப்படுகின்றன.
                ஓரடிக் கவிதைகளைப் போல இவையும் சிறந்த அமைப்பைக் கொண்டு விளங்குகின்றன. கவிதைகளைப் பற்றிப் பேசும் அரிஸ்டாட்டில், எமர்சன் போன்றவர்கள்ஓரடியில் காணப்படும் சில சொல்லாக்கங்களும் சிறந்த கவிதைகளேஎனக்கூறிய போந்தனர் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்ட பழமொழிகளும் சிறந்த கவிதைப் பண்புகளைப் பெற்று விளங்குகின்றன என்றால் அதுமிகையாகாது.
தொகுப்புரை
                 மக்களின் உள்ளங்களில் இருந்து வெளியாகும் பழமொழிகள் யாப்பிலக்கண அடிப்படையில் மோனை, எதுகை, இயைபு முறையில் அமைத்து இயல்பாக வாழ்கையோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.                 பழமொழிகளின் நடை இலக்கணத்தையும், தமிழ் இலக்கண நூல்கள் தரும் இலக்கணங்களையும் கண்டோம், செய்யுள் இயற்ற தேவையான  மோனை, எதுகை, இயைபு சிறப்புகளை பழமொழியுடன் ஒப்புமைபடுத்தி இனம் கண்டோம்.                                         தமிழ் மொழியின் இலக்கிய நடையும் பழமொழியின் நடையும் ஆராயப்பட்டுள்ளது. இளங்கோவின் நடையும், கம்பனின் நடையும் பழமொழியோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
                 பழமொழி  நடையழகு எனும் இவ்வியலில் நடையின் இலக்கணம், நடை அளந்து அறிவதற்குரிய அடிப்படைத் தகுதிகள்  நடைப்பொருள் நடை நலம், நடை சொல்லாச்சி, நடை வேறுபாடு, போன்ற செய்திகளை காணமுடிகிறது.
                பழமொழியின் உவமை சிறப்புகள் நிறைந்தவையாக உள்ளதை அறிய முடிகிறது. சான்றாக இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் பழமொழியே கூறலாம். இதுப்போல் பல பழமொழியின் மொழியின் உவமை சிறப்புகளையும் 
                பழமொழியில் காணப்படும் உவமைகளை அடுக்கி உவமையின் சிறப்புகளையும் கவிதையும் பழமொழியும் எவ்வாறு ஒத்து போகிறது என்பதையும் இக்கட்டூரையில் காணமுடிகிறது. 

பயன்பட்ட நூல்கள்
1)            சுந்தரமூர்த்தி. .   -               நடையியல் இலக்கியம்
                நியூ சென்சுரி புக்ஹவுஸ்
                இரண்டாம் பதிப்பு 2013
                சென்னை 6000098
2)            பழமொழி நானூறு                 -            முன்றுறை அரையனார்
                 புலியூர்கேசிகன்
 முதல் பதிப்பு 2013
                ஜெயபாலன் பதிப்பகம்
                சென்னை.
1)            வதா இராமசுப்பிhமணியம்- தொல்காப்பியம்(பொருளதிகாரம்)
முதற்பதிப்பு மார்ச்2008
இரண்டாம் பதிப்பு, ஜனவரி 2012
பூம்புகார் பதிப்பகம்
127. பிரகாசம் சாலை பிராட்வே , சென்னை 600018






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக