புதன், 20 ஜூன், 2018

இலக்கியங்களில் சைவ வைணவ கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

இலக்கியங்களில் சைவ வைணவ கடவுள் வாழ்த்துப் பாடல்கள்

    தமிழ் இலக்கியங்களில் கடவுளை வணங்குதல் என்பது ஆதிகாலத்திலிருந்தே இருந்த  ஒன்று. ஆதிகால மனிதன் முதலில் இயற்கையை கடவுளாக வழிபட்டான். இயற்கையினால் ஐம்பூதங்களால் ஏற்பட்ட துன்பங்களைப் பார்த்து அச்சம் கொண்ட மனிதர்கள் பயத்தின் காரணமாக இவற்றை வழிபடத் தொடங்கி, காலம் செல்ல செல்ல தெய்வம் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு உருவம்  தந்து இன்றுவரை வழிபட்டுக் கொண்டு வருகின்றான்;. இவ்வாறு வழிபடும்போதுதான் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் கிருத்துவம், இசுலாம் என்ற பல்வேறு சமயங்கள் தோன்றி வளர்ந்தன. இச்சமயங்களுள் ஒன்றுதான் சைவமும் வைணவமும் . இதன் தோற்றம் இச் சமயக்கடவுளர்கள் யார் என இப்பாடல்கள்  என்ன கூறுகிறது என்பதைப் பற்றி ஆய்வதே இக்கட்டூரையின் நோக்கமாகும்.

கடவுள் பற்றி தொல்காப்பியம் கூறுவது


    தொல்காப்பியர் நிலப்பகுதியைக் குறிப்பிடுகிறார். இந்நிலத்தோடு மக்கள் வழிபடும் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,   (தொல். பொருள். நூற் 5) 
என்ற தொல்காப்பிய ந}ற்பா வழி அறியமுடிகிறது. இங்கு தொல்காப்பியர்; மாயோன், சேயோன், வேந்தன், வருணன், என்று நான்கு கடவுளைப்பற்றி குறிப்பிடுகிறார். மாயோன் என்பது திருமாலையும், சேயோன் என்பது முருகனையும், வேந்தன் என்பது இந்திரைனயும், வருணன் என்பது மழைக்கடவுளையும் குறித்து நிற்கின்றன.

கடவுள் வாழ்த்து விளக்கம்

    கடவுளை வாழ்த்தி பாடுவது கடவுள் வாழ்த்தாகும்.  கடவுள் எனும் சொல்லிற்கு இறைவன் என்று பொருள் கூறுகிறது வாழ்வியற் களஞ்சியம். கடவுள் வாழ்த்தினை காப்பு என்றும் அழைக்கின்றனர்.   கடவுள்வாழ்த்து   பாடுவதன் நோக்கம் ஒரு செயலை செய்யத் தொடங்கும் முன் கடவுளை வணங்கிவிட்டு தொடங்கினால் அச்செயல் நன்மை பயக்கும்  என்பது நம்பிக்கை. அதனால் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பாடப்படுகிறது. ஒரு விவசாயி ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தான் விதை விதைப்பான். அப்பொழுது அவ்விதையை மண்ணில் விதைப்பதற்கு முன்பு  பசுவினுடைய சாணத்தை எடுத்து அதில் பிள்ளையார் செய்து வயலில் வணங்குவான் எதற்காக என்றால் தான் விதைக்கும் விதையில் விளைச்சல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக. தான்.   எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் முதலில் கடவுளை வணங்கிவிட்ட செயலை  தொடங்குவார்கள்,  ஒரு கவிஞன்  ஒரு நூலை எழுதும் பொழுது நூலாசிரியன் முதலில் தான் இயற்றும் நூல் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் முதலில் கடவுள் வாழ்த்துப் பாடலை பாடுகிறான்.
    கடவுள் வாழ்த்து என்பது புறத்திணைகளுள்  ஒன்றான பாடாண் திணையின் துறைகளுள் ஒன்றாகும். அரசனால் வணங்கப் படுகின்ற கடவுளருள் ஒருவரை உயர்த்திக் கூறுவது கடவுள் வாழ்த்து. இதை
“காவல் கண்ணிய கழலோன் கைதொழரும்
மூவரில் ஒருவனை இடுத்துரைத்தன்று”      (புறப் பொருள் வெண்பாமாலை. 213
என்ற செய்தி புறப்பொருள் வெண்பாமாலை மூலம் அறியமுடிகிறது. அரசன் வணங்கும் கடவுள்களில் ஒருவரை உயாத்திக்கூறுவது கடவுள் வாழ்த்தின் தன்மையாகும். 

சைவ வைணவ சமய தோற்றம்

    காலம்தோறும் சமுதாயம் மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு சமயங்கள்தான் காரணம் என்கிறார். சா.வே.சு. கி.பி 250 வரை எல்லா சமயமும் பொது நிலையில்தான் இருந்தது. பின்பு காலப்போக்கில் கி.பி 300 க்குப் பின்பு  களப்பிரர் காலத்தில் சமணம், பௌத்தம் தமிழகத்தில் நுழைந்தது.  பல்லவர் காலத்தில் சமண பௌத்தம் அழிக்கப்பட்டு சைவ வைணவம் உச்ச நிலையை அடைந்தது. சான்றோர்கள் பல மடங்களை நிறுவி சமயத்தை வளர்த்தனர்.
சைவ சமய கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
    இலக்கியத்தில் சைவ சயமக் கடவுள்களான சிவப்பெருமான், முருகன், கணபதி போன்றவர்களை கொண்டு கடவுள் வாழ்த்து பாடல்கள்  பாடப்படுகிறது.
    “ஐந்து கரத்தனை யானை முகத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நுந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
    புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”    திருமந்திரம்
என்ற பாடலில் திருமூலர் துதிக்கையோடு ஐந்து கரங்களையுடையவன், இளம்பிறை சந்திரன் போல் தந்தத்தை உடையவன் சிவனின் மகனே உம் திருவடிகளை வணங்குகிறேன் என்று பாடித் தொடங்குவதை திருமந்திரத்தின் வழி அறிய முடிகிறது. இங்கு கணபதியை வணங்குவது தெளிவாகிறது.
       கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
     தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
     மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
     நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
     கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
     வேலும் உண்டு, அத் தோலா தோற்கே;
     ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே
     செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
     இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
     எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
       முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,
     மூவா அமரரும் முனிவரும் பிறரும்
     யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
     வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
     யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
      தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.
(அகம். பாரதம் பாடிய பெருந்தேவனார்.
என்ற அகநானூற்று கடவுள் வாழ்த்து பாடல் மூலம் சிவனின் தோற்றமாக சிவந்த வானம் போன்ற நிறத்தையுடையவன் பிறைப்போன்ற வெண்மையான பற்களைக்கொண்டவன், கிளைத்து எரியும் தீயைப்போல் முறுக்கிய  சடையையும் இளம்பிறை சூடிய தலையையும் உடையவன் என்றும், அறிய முடியாத பழமையோன், தோள் ஆடை போர்த்தியவன், கொன்றை மலர்களை அணிந்தவன் நெற்றிக்கண்ணையுடையவன்,  கையில் மழுப்பையுடையவன் சூலப்படையையும் உடையவன் காளையை வாகனமாக கொண்டவன். உடம்பில் பாதியை உமைக்கு தந்த சிவனின் குற்றமில்லாத திருவடிகளை வணங்குகிறேன்  என்று வணங்குவதை காணமுடிகிறது.
பன்னிருகைவேல்வாங்கப் பதினொருவர்
படைதாங்கப பத்துத திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும்
         கடலேழு நாடி யாடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை
 யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
 தன்னிருதாள் தருமொருவன
;         குற்றாலக் குறவஞ்சித் தமிழ்தந்தானே.
(திருகு;குற்றால குறவஞ்சி)
என்ற பாடலில் பன்னிரு கைகளையுடைவன்,  வேலினை வாங்க பதினொருவரும் படையைத்தாங்க பத்துதிசைகளையும், ஒன்ப வீரர்களும் புகழ் எட்டு மலைகளையும் ஏழு கடல்களையும் நாடி ஆடிப் பொன்முனி ஆற்றினை ஏந்தி அச்சத்தை என்னிடம் இருத்தி நீக்க தோள்கள் பன்னீரண்டும் கொண்டவனான முருகபெருமான் குற்றாலக் குறவஞ்சி எனும் தமிழைத் தந்துள்ளதாக என்று கவிராயர் இப்பாடலில் முருக பெருமானுடைய கைகளில் இருந்து படைகள் திசைகள் எல்லாவற்றையும் புகழ்ந்து பாடியுள்ளார்.

வைணவ கடவுள் வாழ்த்துப்பாடல்கள்

     வைணவக் கடவுளாக திருமால் போற்றப்படுகிறார். அடுத்து திருமாலின் அனைத்து அவதாரங்களும் புகழப்படுகிறது.  கடவுள் வாழ்த்தில் அவதார செயல்கள் பெரிதும் போற்றப்படுகிது.
'மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன்' - என்ப-
தீது அற விளங்கிய திகிரியோனே.”
                      (நற்றினை.  பாரதம் பாடிய பெருந்தேவனார்.)
பெரிய நிலம் தன்னுடைய சிறந்த அடிகளாகவும் தூய நீரை உடைய சங்கு ஒலிக்கின்ற கடலானது ஆடையாகவும,; ஆகாயம் உடலாகவும், திசை கைகளாக திங்களும், ஞாயிரும் ஆகிய இரண்டும். இரண்டு கண்களாகவும் கொண்டு அமைந்துள்ள எல்லா உயிர்களிடத்திலும் தான் பொருந்தி இருப்பது மட்டுமில்லாமல் நிலம் முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னில் அடக்கிய வேதம் ஓதுவோர் கூறும் முதற் கடவுள் மாயோனை சான்றோர் கூறுகின்றனர். அதனால்  நாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோம் என்று .இப்பாடலில் திருமாலுடைய பாதம் ஆடை உடல கண், எல்லாவற்றையும் இயற்கையோடு ஒப்புமை படுத்தி வாழ்த்தி வணங்கியுள்ளார் பெருந்தேவனார்.
    வெள்ளியங் கிரியை மீதே வேரொருவரும் எடுத்த வீரக்
    கள்ள வன்புயம் நால் வெந்துங் கானகமா மவுலி பத்தும்
    துள்ளி அம்புவிமேல் வீழ ஒருகணை தொடுத்து விட்ட
    வள்ளல் அம்புமே அன்ன மலரடி வணக்கஞ் செய்வோம்.
                (உத்தரா. குண்டம்)
    கயிலாய மலையை வேரோடு பேயர்த்து எடுத்த  வீரம் கொண்டு சீதையைத் தூக்கிச் சென்ற கள்ள உள்ளம் உடைய இராவணின் வலிமை மிக்க தோள்கள் செலுத்திய இராமனது தாமரை மலர் போன்ற திருவடிகளை தொழுவொம் என்று இப்பாடல் இராமனின் செயலை கூறி வணங்குவதாக அமைந்துள்ளது.

முடிவுரை

    கடவுள் வாழ்த்துப் பாடல் என்பது ஒன்றனைத் தொடங்குவதற்கு முன்பு மங்கலமாக விளங்க வேண்டும் என கடவுளை வணங்கி பின்பு இச்செயல் செய்வது வழக்கம். அவ்வாறு  இலக்கிய நூல்களிலும் முதலில் கடவுளை வணங்கி பாடல் பாடப்படுகிறது. சைவம் வைணவம் சார்ந்த பாடல்கள் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சைவ- வைணவ சமயமானது கி.மு 2000 ஆண்டிலேயே தோன்றியிருக்கிறது. சிவபெருமானை சைவ சமயக் கடவுளாக முதலில் வைத்துப் போற்றப்படுகிறது. பின்பு விநாயகர், முருகன், போன்றவர்கள் போற்றப்படுகின்றார்கள். சிவபெருமான், முருகன், கணபதி போனN;றாரின்; தோற்றம் மீவியலாக வெளிப்படுகிறது. வைணவக் கடவுளாக திருமால் முதலில் வைத்து போற்றப்படுகிறான். பின்பு திருமாலின் அவதாரமாகிய இராமன், பலராமன் போன்றவர்களும் பாடப்படுகின்றனர்.  இவ்வாறாக சைவம் வைணவம் அகிய இரு சமயங்களிடையே காணும் கடவுள் வாழ்த்துப் பாடலின் தனித்திறன், சிறப்பு வேறுபாடுகள் ஆகியன இக்கட்டூரையின் மூலம் அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக