வியாழன், 21 ஜூன், 2018

தருமபுரி வேடியப்பன் வழிப்பாடு

 

தருமபுரி  வேடியப்பன் வழிப்பாடு 

 
  இன்றை நவீன உலகத்தின் நாகரீக வளர்ச்சிகளுக்கு வித்திட்டது நாட்டு புறம். உண்மையான பண்பாடு மற்றும் கலாச்சாரங்களின் பிற்ப்பிடம் கிராமங்கள்தான்  நாட்டாரின் வாழ்வியலைப் பற்றி எடுத்துறைக்கும் ஒரு  துறையே நாட்டுப்புறவியல். காலம் காலமாக நம்பிக்கைகளும் சடங்குகளும்இ நீங்காமல் இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.
 நாட்டாரின் நம்பிக்கைகள்; வழிபடும் தெய்வத்ததை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. அவ்வகையில் சிறுதெய்வம் முக்கிய இடத்தை பெறுகிறது. சிறுதெய்வ வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கிராமங்களில் காணப்படுகின்றன.

வழிபாடு விளக்கம்

    வழிபாடு என்பதிலிருந்து பிறந்ததே “வழிபாடு” என்னும் சொல் வணங்குதல் வழியில் செல்லுதல் பின்பற்றுதல் நெறிப்படுத்துதல் பூசனை முறை என்று அகராதிகள் பொருள் தருகின்றன. வழிபாடு என்றும் இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வழிபாடு’ என்றும் உள்ளத்தின் கதவுகளை இறைவனுக்காகத் திறந்து  வைப்பதே வழிபாடு என்றும் கூறுவர் தழிழறிஞர் - க.ப.அறவாணன்.
கோவில் அமைந்துள்ள இடம்

    தருமபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் 20 கிலோமீடட்ர் தொலைவில் இருமத்தூர் உள்ளது. இங்கு தெண்பெணணையாறு ஒடுகிறது. அங்குதான் வேடியப்பன்  கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முதலில் கற்கள் வைத்து  பூசை செய்தார்கள் .
தற்போதுதான் கோவில் கட்டி  குடழுழக்கு விழா நட்த்தினார்கள். அங்கு சென்று வழிப்பட  முடியாத காரணத்தால் கீழ்ழரிக்கல் கிராமத்தில் 6 அடி உயரம் கொண்ட நான்கு கற்கள் வைத்து சிலை முன்பு இரண்டு வேல் வைத்து வழிப்படுகிறார்கள்;
காவேரிப்பட்டிணம் அருகில் நெடுகல் எனும் ஊரில் மிகப்பழமையான வேடியப்பன் கோவில் உள்ளது. அதேப்போல் காரிமங்கலம் அருகில் ஜகதோப் எனும் ஊரிலும் வேடியப்பன் எனும் கோவில் உள்ளது.
தருமபுரி பகுதியிலுள்ள வேடியப்பன் கோவில்கள் நடுகல் வழிபாட்டை சார்ந்தது. முற்காலத்தில் மரத்தடியில் வீரன் உருவம் பொறிக்கபட்டு வெட்டவெளியாக கோவில்கள் இருந்தன.

வேடியப்பன் வரலாறு    :

    செஞ்சியிலிருந்து தருமபுரி பகுதியில் குடியேறிய வன்னியர்களே இத்திருவிழாவைக் கொண்டாகிறார்கள்.
    செஞ்சியிலிருந்து 11 குடும்பங்கள் தருமபுரிக்கு குடிபெயர்ந்தார்கள் அதில் 10 குடும்பங்கள் பங்காளிஇ ஒரு வீட்டார்இ சம்மந்தி வீட்டார் ஆவார். வேடியப்பன் என்னும்  சொல்  சிவனுடைய வேடர் அவதாரத்தை குறிப்பதாகும்;. ஒரு நாள் அர்சுணன் தவம் செய்வதற்காக காட்டுக்கு செல்கிறான்.
அவ்விடத்தில் முகசுரன் என்னும் ஒரு அசுரனை துரியோதன் பாண்டவர்களை அழிக்கும்மாறு ஏவி விடுகறார்.  அப்போது அர்சுணன் தவம் புரிந்து கொண்டு இருந்தார். ஆவர் தவம் கலைந்து விடக்கூடாது என்று நினைத்து சிவபெருமான் வேடம் அவதாரம் எடுத்து அந்த அசுரனனைக் கொள்கிறார் மீண்டும்; அந்த முகசுரன் என்பவன் பன்றி அவதாரம் எடுக்கிறார். ஐயப்பனை அண்ணன் என்றும் வேடியப்பனை தம்பி என்றும் சிலர்குறிப்பிடுகிறார்கள்.
    வரலாற்று அறிஞர்கள் வேடியப்பன் உருவத்தை நடுகல்  என்று அழைக்கின்றனர். வீரன் போர் செய்வதைப்போல் கற்கல் பல காணப்படுகிறது. வேடியப்பனை குலதெய்வமாக மக்கள் வணங்குகின்றனர். இக்கோவில்களில் ஒரே இடத்தில் பல நடுகல் காணப்படுகிறது.

பூசை செய்தல்

    முதலில்  புற்றுக்கு ஆடு வெட்டி பூஜை செய்வார்கள் அதன் பிறகு தினமும் ஒரு கால பூஜை செய்யப்படுகிறது கோயில் கட்டிய பிறகு தற்போது பூஜைஇ ஒவ்வொரு  வெள்ளிக் கிழமைகளில் 12 மணியளவில் பூசை செய்கிறார்கள்.
    சில இடங்களில் வேடியப்பன்இ வீரபத்திரன் எனும் இரு வேறு வழிபாடும் நிகழ்கிறது. இவ்வழிபாட்டில் தலையில் தேங்காய் உடைக்கப்படுகிறது.
    வேடியப்பன் வாழிபாட்டின் போது பாத்திரத்தில் பஞ்சி சுடுவார்கள். பக்தர்கள் அதை கையால் எடுத்து வைப்பார்கள். பயபக்தியோடு இருப்பவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படுவது இல்லை. இத் திருவிழாவே உச்சகட்டமாக கருதப்படுகிறது.

பூசை பொருள்கள்

    தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களே பூசைக்குப் பயன்படுத்த படுகிறது. தேங்காய்இ பழம் பூ குங்குமம் சாம்பிராணி கற்பூரம் ஊதுபத்தி வெற்றிலைபாக்கு போன்றவைகள் பூஜைக்குரிய  பொருள்களாகும்.

திருவிழாக்கள்

    விழா என்னும் சொல் விழைவு என்ற சொல்லின் அடியாகத் தோன்றியது பழங்காலத்தில் தமிழர்கள் தைத்திங்களை  ஆண்டின் தொடக்கமாகக் கொண்டதால். வேடிப்பன் கோவில் தைப்பூசம் அன்றுதான் திருவழா கொண்டாப்படுகிறது.
    பங்காளிகள் சேர்ந்து ஐந்து ஆண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை விழா எடுக்கின்றனர். முப்பூசை செய்யப்படுகிறது.
    ஒவ்வெரு வருடமும் ஆடிஇ அல்லது ஆவணி மாதங்களில் திருவிழாக்கள் நிகழ்த்தபடுகிறது.

முப்பூசை


    ஆடுஇ கோழிஇ பன்றி எனும் மூன்றையும் பலியிடுவர்  சிறுதெய்வ வழிபாடுகளில் பெரும்பாண்மையாக முப்பூசை நடத்தப்படுகிறது.

காணிக்கைக் செலுத்துதல்

    பொங்கலிட்டுஇ கிடாய்வெட்டிஇ கோழி அறுத்துஇ பன்றி குத்தி  பலியிட்டுஇ வழிபாடு செய்கிறார்கள். குடும்பத்திலுள்ளவர்கள் தெவய்த்தின் காலடியில் குறிப்பிட்ட தொகையை    காணியாக வைக்கின்றனர்
பொங்கல் வைத்;து சாமிகும்மிடும் போது வெறறிலைப் பாக்கில் பணம் வைத்து கொடுப்பார்கள் இதை “காணிக்கைப் பணம்” என்று கூறுவார்க்ள்

முடிநீக்கல்


    குல தெய்வம் என்பதால் குழந்தை பிறந்த சில மாதம் கழித்து குழந்தைக்கு முடிநீக்கம் செய்யப்படுகிறது. மேலும் காது குத்தல் போன்ற சடங்குகளும் செய்யப்படுகிறது. தம் குலத்தைக் காப்பதாக மக்கள்ள நம்புகின்றனர். இன்றளவும் இவர்கள் வேடிஇ வேடியப்பன்இ முத்துவேடி என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பதைக் காணமுடிகிறது.

கரகவழிப்பாடு

    வேடியப்பனுக்குக் கரகமும் இருக்கின்றன. வெள்ளிகரகம் மூன்று உள்ளது. மேல் நிலையாக்கத்தின் முதல்படி இதுவாகும். கரகம் எடுத்து பூசை செய்து தலையில் வைத்து நடனம் ஆடுகின்றனர். கரகத்திற்கு ஆடு பலியிட்டு இரத்தம் தெளி போடப்படுகிறது.

நம்பிக்ககைள்:

தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் முதலில் மொட்டை அடித்து கிடாய் வெட்டி காது குத்துகிறேன் என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் தெய்வத்திற்கு வேள் அடித்து வைக்கிறேன் என்று வேண்டுவர் இது ஒரு நம்பிக்கை ஆகும்

நவகிரகங்ளை ஒன்பது முறை சுற்றினால் தோசம் போய்விடும் என்பது  நம்பிக்கை.
குழந்தைகள் நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் சென்றால்   சாமிக்குக் கிடாய் வெட்டி பொங்களிடுவர்;

முறத்தில்  மஞ்சள் துணியால்  கல் வைத்து கட்டினால் குழந்தை பிறக்கும் என்பது  நம்பிக்கை

அரசு மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது  நம்பிக்கை

வேப்ப மரம் அரச மரத்தைச் சுற்றினால் திருமணம்  நடக்கும் என்பது நம்பிக்கை.

தன்னுடைய முந்தானைச்  சேலையைக் கிழித்து அதில் வளையல் வைத்து கட்டினால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இரண்டு சேவல்கள் சண்டையிடும்  அதை முடுக்கினால் தமக்கு

ஓற்றை தலைவலி வந்து விடும் என்பது நம்பிக்கை.

தெய்வததிற்கு படையல் இடும் முன்  எதையும் முன்னரே உண்ணக்கூடாது. அவ்வாறு உண்டால்  சாமி கண்ணைகுத்துவிடும் என்பது நம்பிக்கை.

ஒரு நல்ல காரியத்திற்குச் செல்லும் போது பூனையோ அல்லது விதவை பெண்ணோ எதிரே  வரக்கூடாது வந்தால்  அக்காரியம் விளங்காது என்று நம்பிக்ககை.

முடிவுரை


    குல தெய்வமாகஇ சிறு தெய்வமாக வணங்கப்பட்டு வருகிற வேடியப்பன் வழிப்பாட்டை சிலர் சைவசமயத்துடன் இணைத்தும்இ சிலர் வைணவ சமயத்துடன் இனைத்தும் கதை கட்டுகின்றனர். சிறு தெய்வத்தைத் தம் அறியாமையால் அல்லது பெரு தெய்வ பற்றால் இவ்வாறு கதை கூறுகின்றனர். வேடியப்பன் கோவில்களில் நவகண்டம்இ சுதை சிலைகளும் காணப்படுகிறது. வட தமிழ் நாடு முழுவதும் வேடியப்பன் கோவில்களில் இவை காணப்படுகின்றன. அங்கெல்லாம் பலியிடுவதையும் காணமுடிகிறது.
வேடியப்பன் வழிபாடு என்பது முன்னோர் வழிபாடாகக் கருதப்படுகிறது. வேடியப்பன் கோவில் அமைப்பு வரலாறுகள்இ பூசைசெய்தல் பூசைப்பொருள்கள் திருவிழாக்கள் காணிக்கைக் செலுத்துதல் நம்பிக்கைள் போன்றவற்றைக் காணமுடிகிறது.

7 கருத்துகள்:

  1. வேடியப்பன் சமேத முத்துவேடியம்மன் ஆலயம் கரடிஅள்ளி ஊராட்சி பாலிட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது

    பதிலளிநீக்கு
  2. காரிமங்கலம் அடுத்த சப்பானிப்பட்டி அருகில் கரடிஅள்ளி ஊராட்சி பாலிட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது

    பதிலளிநீக்கு
  3. வாழ்க வளமுடன். கடவுள் தோற்றம் என்ற முதல் பத்தியை தவிர்த்து இருக்கலாம். இது நமக்கு இன்று உள்ள வெள்ளையன் சொல்லி கொடுத்த பொய்... நம் முன்னோர் பயத்தில் செய்திருப்பார் என்பது, (அவர்கள் நமக்கு விட்டு சென்றுள்ள பொக்கிஷங்களை பார்த்தால்) பொய். இதை, இங்கு நீங்கள் சொல்லுவதை எல்லாரும் பின்பற்றுவர்... தவறாகிவிட கூடாது. மன்னிக்கவும். வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. ஒரு நல்ல காரியத்திற்குச் , அவருக்கு வேண்டியதைசெல்லும் போது பூனையோ அல்லது விதவை பெண்ணோ எதிரே வரக்கூடாது வந்தால் அக்காரியம் விளங்காது என்று நம்பிக்ககை.


    பூனை சோக முகம் கொண்டது. பார்த்தால் நாமும் சோகம் ஆவோம். அந்த மனநிலைக்காக சொன்னது

    விதவை வந்தால் அவர் அவசரமாக ஏதாவது உதவி கேட்க வருவார். அதனால் அவ்வாறு வந்தால், நாம் கிளம்பினால், நின்று வேண்டியதை பண்ணிவிட்டு செல்ல வேண்டும்...

    நாம் தவறாக பழகி விட்டு முன்னோரை குறை சொல்ல கூடாது

    பதிலளிநீக்கு